privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்சங்கர மட பயங்கரம் – 4000 கோடி கருப்பு பணம்

சங்கர மட பயங்கரம் – 4000 கோடி கருப்பு பணம்

-

கருப்பு பணம் வாங்கி சிவந்த கை!
கருப்பு பணம் வாங்கி சிவந்த கை!

டந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நீலகண்டாச்சாரி சுவாமிகள் என்பவர் பெங்களூரு விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 2011 – 2012-ம் ஆண்டில் தானும் தனக்கு வேண்டியவர்கள் எட்டு பேருமாக சேர்ந்து ஜெனிசிஸ் என்கிற நிதி அலோசனை நிறுவனத்திற்கு சுமார் 3,994 கோடிகள் அளவுக்கு நன்கொடை வசூலிக்க உதவியதாகவும், இதற்கான கழிவுத் தொகை இரண்டு சதவீதம் வர வேண்டியிருப்பதாகவும், அந்த தொகையை ஜெனிசிஸ் தர மறுத்து மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த ஜெனிசிஸ்? எதற்கான நன்கொடை வசூல் இது? – நீலகண்டாச்சாரியின் புகார் மனு மேலும் சில விளக்கங்களை அளிக்கிறது.

தங்களை காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தர்கள் என்று குறிப்பிடும் நீலகண்டாச்சாரி, தனக்கும் மடத்தில் உள்ள சிரீதரன் என்பவருக்கும் நல்ல உறவு இருந்தது என்கிறார். சிரீதரன் என்பவர் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியால் மடத்தின் சார்பாக 10,000 கோடி வரை நன்கொடை வசூலிக்க அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரீதரனை ஜெனிசிஸ் நிறுவனத்திற்கு அறிமுகம் செய்து வைக்கும் நீலகண்டாச்சாரியும் அவரது எட்டு நண்பர்களும், மடத்திற்காக ஜெனிசிஸ் நிறுவனம் நன்கொடை வசூலித்துக் கொடுப்பது அதிலிருந்து இரண்டு சதவீதத்தை கழிவாக தமக்குக் கொடுப்பது என்று பேசி வைத்திருக்கிறார்கள்.

தற்போது ஜெனிசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சரஸ்வதி, அவரது கணவர் கிரிஷ்ணப்பா, இத்தம்பதியினரின் மகள்களான சௌமியா, ஷில்பா, மேகனா மற்றும் மருமகன் சுதாகர் ஆகியோரின் மீது கிரிமினல் சதி புரிந்தது, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிந்திருக்கிறார் நீலகண்டாச்சாரி. மேலும் இவர்கள் சங்கரமடத்திற்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை தம்மிடமிருந்து மறைத்துள்ளதாகவும், சங்கர மடத்தைப் பயன்படுத்தி கருப்புப் பண சுழற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் குற்றச்சாட்டில் பதிந்துள்ளார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட விஜயநகர காவல் நிலையம், ஜெகத்து குருவே விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் விசாரணைக்காக கர்நாடக மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு புகாரை அனுப்பி வைத்தது. புகாரின் மேல் விசாரணையைத் துவங்கிய குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஜெனிசிஸ் சார்பில் சில ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மடத்தின் சார்பாக சிரீதரன் என்பவரை நன்கொடையைப் பெற்றுக் கொள்ள அதிகாரம் கொண்டவராக நியமித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2012-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி ஜெனிசிஸ் சார்பில் மடத்திற்கு அனுப்பட்ட கடிதம் ஒன்றில் மடத்திற்கு உட்பட்ட ஐந்து அறக்கட்டளைகளுக்கு ஜெனிசிஸ் சார்பாக ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் மற்றும் சிட்டி யூனியன் வங்கிக் கணக்குகளின் வழியே 3,992 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மடத்தின் சார்பாக இக்கடிதத்திற்கு பதிலளித்துள்ள சிரீதரன், இந்த தொகையைப் பெற்றுக் கொண்டதை உறுதிப் படுத்தி அளித்த கடிதமும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்துள்ளது.

இந்த விவரங்களோடு மடத்தின் கணக்குத் தணிக்கை அலுவலரை அணுகிய குற்றப் புலனாய்வுத் துறை, மடத்திற்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் கிடைத்த நன்கொடை மற்றும் நிதி விவரங்களை கேட்டிருக்கிறது. மடத்தின் சார்பாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் வெறும் பதினைந்து கோடிகளுக்கு மட்டுமே முறையான கணக்குகள் உள்ளன. ஜெனிசிஸ் நிறுவனத் தரப்பின் படி, அவர்கள் தமக்கு மடத்திடம் இருந்து கிடைத்திருக்க வேண்டிய 2.5 சதவீத கழிவுத் தொகையே இன்னமும் வர வேண்டியுள்ளது என்பது தான்.

சிரீதரனும் விசாரணையில் தனது தரப்பை முன்வைத்துள்ளார். தான் ஜெனிசிஸ் நிறுவனத்தோடு சங்கர மடம் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தவிற பிற விவரங்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை என்றுள்ளார். 2011-12 காலகட்டத்தில் சந்திரசேகர் குரு என்பவரின் தலைமையில் சங்கர மடத்திற்குச் சென்றதாகவும், அப்போது மடத்தின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து நடந்த விவாதங்களில் தான் பங்கேற்கவில்லை, தன்னை அறைக்கு வெளியே செல்லுமாறு ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக் கொண்டதாகவும் பதிவு செய்துள்ளார்.

இந்த அளவில் தற்போது விவகாரம் விசாரணையில் உள்ளது. பெங்களூரு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை மடத்தின் குறிப்பிட்ட ஐந்து அறக்கட்டளைகளின் மூலம் கருப்புப் பண சுழற்சி நடந்திருக்கிறது என்ற கோணத்தில் மேல் விசாரணை செய்து வருகிறது.

என்னது காஞ்சி சங்கர மடத்தில் கருப்பு பணமா என்று யாராவது அதிர்ச்சி அடைய முடியுமா? லோககுரு கம்பெனிக்கு ஒரு கிரிமினல் கூட்டத்தை ஜமுக்காளத்தைப் போட்டு வடித்து எடுத்தாலும் உலகில் வேறெங்கும் கண்டு பிடிக்க முடியாது என்பதைத்தான் யாராவது மறுக்க முடியுமா?

கருப்புபணத்தின் லோககுரு கூட இருப்பது சு சாமி மற்றும் விசுவ இந்து பரிஷத் அசோக் சிங்கால்!
கருப்புபணத்தின் லோககுரு கூட இருப்பது சு சாமி மற்றும் விசுவ இந்து பரிஷத் அசோக் சிங்கால்!

உள்ளே நடந்த ஊழல் விவகாரங்களை சுட்டிக்காட்டிய ஒரே ‘பாவ’த்துக்காக சங்கர ராமனை சாட்சாத் அந்த ’பகவானின்’ சந்நிதியில் ’பகவானின் கண்’ முன்னே போட்டுத் தள்ளியதாகட்டும், சாட்சிகளை காசு கொடுத்து பிறழ் சாட்சிகளாக மாற்றிய சாமர்த்தியமாகட்டும், நீதிபதியிடமே டீலிங் பேசிய திமிராகட்டும் – ஜெகத்து குரு உலகத்து ஜெகத்தின் கிரிமினல்கள் அனைவருக்குமே ஆதி குரு என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

கும்பகோண மடத்தை சங்கர மடமாக மாற்ற வரலாற்றையே போர்ஜரி செய்து மாற்றியதாகட்டும், பெரும் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கட்டைப் பஞ்சாயத்து தரகனாக செயல்படுவதாகட்டும் இந்த கும்பலை மிஞ்சிய திருட்டு கும்பலை பார்ப்பது கடினம்.

ஆனால், இந்த மொத்த விவகாரமும் பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகையைத் தவிற வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. இந்த மோசடியை மறைப்பதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமல்ல, சூத்திர பத்திரிகைகளும் கூட வெட்கமின்றி அணிவகுக்கின்றன. அது போல தேசிய, பிராந்திய என்ற வேறுபாடுமில்லை.

இதே காலகட்டத்தில் 2ஜி வழக்கில் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கனிமொழியின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பற்றி தேசிய ஊடகத்திலிருந்து பா.திருமாவேலனின் விகடன் பத்திரிகை வரை மாய்ந்து மாய்ந்து எழுதினார்கள். ஊழலுக்கு எதிரான இந்த போர்முரசு சங்கராச்சாரி (அ) சுப்புனி குறித்து வெம்பிய முரசாக ஏன் போங்காட்டம் ஆட வேண்டும்?

சங்கர மடம் காசு கொடுத்து தான் இந்த மௌனத்தை விலைக்கு வாங்கியிருக்க வேண்டும் என்பதில்லை, பார்ப்பன நலன் என்று வந்தால் யாரும் சொல்லாமலே பொத்திக் கொள்ளும் வாய்கள் தான் இவை.

சாராயம் காய்ச்சி விற்பதெல்லாம் ’ராயப்பன்களின்’ வேலையாக பதிவாகியிருக்கும் பொதுபுத்தியின் முன் சோ ராமசாமி சாராயக் கம்பெனியின் தலைமைப் பதவியில் இருந்தார் என்கிற செய்தி நுழைவதில்லை.

இந்த இலட்சணத்தில் சுவிஸ் வங்கியின் பாதுகாப்பறையில் இருக்கும் பல பல பலான கோடி கோடி பணத்தை ஸ்கார்பியோ காரில் பறந்து சென்று மோடி மீட்டு வருவார் என காமிக்ஸ் கதை காட்டிய கனவான்களை நினைத்துப் பாருங்கள்! ஸ்கார்பியோ கார் தயாராகும் பெங்களூருவிலேயே 4000 கோடியை ஆட்டையைப் போட்டு விட்டு ஒன்னும் தெரியாத அம்பி மாதிரி சங்கரமடத்தில் நெய் பொங்கலை மொக்கி விட்டு ஒரு பெருச்சாளி இருக்கிறதே? அது குறித்து தமிழிசை தவிலோசை போல பேசுவாரா? இல கணேசனோ, பொன்னாரோ பொங்கி எழுவார்களா?

அவ்வளவு ஏன், சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது கூட ஜெயேந்திரனுக்கு பார்டிகார்டாகவும், பிரச்சார பீரங்கியாகவும் பேசிய கூட்டமல்லவா இது!

சமூகத்தை ஏற்றத்தாழ்வுடன் கூடிய படிநிலை அமைப்பாக நிலைநிறுத்திய பார்ப்பனியம் தன்னளவிலேயே குற்றத் தன்மையுடையது தான் – அப்படியிருக்க நடைமுறையில் அதன் இருப்பை உத்திரவாதப்படுத்தும் சங்கர மடம் இந்தக் குற்றத்தை மட்டுமல்ல, இதற்கு மேல் பஞ்சமா பாதகங்களையும் செய்யாவிட்டால்தான் அதிசயம்!

இந்தக் குற்றக் கும்பலையும், அதன் பகிரங்கமான சங்கர மட கம்பெனி ஆபிசையும் இழுத்து மூடுவது எப்போது?

–    தமிழரசன்

மேலும் படிக்க:

Kanchi Mutt had confirmed receipt of funds, claims firm

Firm ‘laundered’ crores in donations to mutt

  1. விசாரணனை நிலுவையில் இருக்கும் போது அவசரபட்டு கருத்து சொல்வது சரியாக இருக்காது, பொருத்திருந்து பார்போம்..

  2. அத்வைத ஆராய்ச்சி பண்ணச் சொன்னா, அஜால் குஜால்ல ஆரம்பிச்சு பீரோ புல்லிங் வரைக்கும் எல்லாம் பண்றா! இபிகோல சொல்லி இருக்கிற ஒரு குத்ததையும் விட்டு வைக்க மாட்டா போல!

    இந்த பணத்தின் ரிஷி மூலம் என்ன என்று பார்க்கவேண்டும், 2G விவகாரத்தில் ராஜா போலவும், அம்மா விவகாரத்தில் இளவரசி போலவும், சங்கர மடம் வெறும் கமிஷன் ஏஜென்டாக செயல்பட்டிருக்க வாய்ப்புண்டு என்ற ரீதியில் யாரும் விவாதிக்காமல் இருக்க கர்த்தர் அருள் புரிவாராக!

    பார்ப்பனீயம் என்பது செயல் அடிப்படையில் நிர்ணயமாவது என்றால், இந்த விவகாரத்தில் சங்கர மடத்துக்கு ஆதரவாக வாய்மூடி இருக்கும் பத்திரிகைகள் எல்லாம் பார்ப்பன பத்திரிகைகள் தானே! எனில், சூத்திரப் பத்திரிகைகள் வாய் திறக்கவில்லை என்று சொல்வதற்கு பொருள் உண்டோ?

    • //சூத்திரப் பத்திரிகைகள் வாய் திறக்கவில்லை என்று சொல்வதற்கு பொருள் உண்டோ?//

      நீங்கள் சொல்வது போல சமூகத்தைப் படிநிலை அமைப்பாக பாவிக்கும் கண்ணோட்டமும் அதை நிலைநாட்டும் செயல்களும் கலாச்சார மேலாதிக்க நடவடிக்கைகளும் தான் பார்ப்பனியம்.

      அம்பேத்கர் சொன்னது போல் சூத்திரர்களில் மேல் நிலைக்குச் சென்று இந்த சமூக அமைப்பில் தங்களுக்கான அந்தஸ்தைப் பெற முயல்பவர்கள் கருப்புப் பார்ப்பனர்களாக மாறி விடுகிறார்கள்.

      பார்ப்பனிய விழுமியங்களை வரித்துக் கொள்ளும் இந்த ஊடக புரோக்கர்களை சூத்திர பத்திரிகைகள் என்பதற்கு பதில் பார்ப்பனிய அடிவருடிகள் என்றே கூட சொல்லலாம்.

      • அப்போ:
        1) பிராமன சாதி வெறி பார்ப்பனீயம்
        2) அதையே பிராமனர் அல்லாதோர் செய்தால் அடிவருடித்தனம்

        பார்ப்பனீயம் என்பதற்க்கு என்ன விளக்கம் என்று கேட்டால் வசதிக்கேற்ப விளக்கம் கொடுப்பது ‘முற்போக்கு’வாதிகளின் போக்காகி விட்டது….

        எவன் செய்தாலும் அது பார்ப்பனீயம் தான் (என்ன சாதி என்றாலும்)…

        பிராமன சாதியில் பிறந்தவன் செய்தால் பார்ப்பனீயம் மத்தவன் செய்தால் அடிவருடித்தனம் என்று சொல்ல்வதே அடிப்படையில் பார்ப்பனீயம் தான்…

        இத்தகைய நவீன ‘பார்பனீயர்கள்’ முற்போக்குவாதிகளாகப் பார்க்கப்படுவதால்
        ‘பழைய’ பார்ப்பனீயர்களுடன் சேர்ந்து இவர்களும் தம் பங்கிற்கு பிற்போக்குத்தனத்திற்கு வித்திடுகிறார்கள் (இக்கட்டுரை ஆரசிரியர் உட்பட)…

        தன் கு__ நாத்தம் நாற பக்கத்தில் இருப்பவன் கு__க்கு சந்தனம் தடவுவதைப்போன்ற செயல் இது…

  3. TO WATCH: Jayant Sinha, son of Yashwant Sinha (former Finance Minister):

    http://pando.com/2014/11/09/pierre-omidyars-man-in-india-is-named-to-modis-cabinet/

    Pierre Omidyar’s man [ Jayant Sinha ] in India is named to Modi’s cabinet

    BY MARK AMES
    ON NOVEMBER 9, 2014

    … Sinha has for years been pushing India to open its e-commerce markets to foreign investment — which would directly benefit Omidyar, who is still chairman of eBay. After Sinha moved from Omidyar Network to campaigning for Modi in February of this year, Modi suddenly began to parrot Sinha’s and Silicon Valley’s wish-list on opening up India’s e-commerce to Silicon Valley. In early June, weeks after Modi and Sinha’s election victories, the new Modi government invited representatives from eBay, as well as Amazon and Google, to help rewrite India’s e-commerce laws.

  4. செத்துப்போன பெரிய சங்கராச்சாரியைப் பற்றி அண்ணாதுரை எழுதிய இந்தக் கட்டுரையை வினவு வாசகர்கள் அறியத் தரவும்

    http://www.annavinpadaippugal.info/katturaigal/sankarachari_pathavi_tharkolai.html

    சில துளிகள் இங்கே:

    இல்லறவாசிகள், நியாயமான செலவு போக, மீந்த பணத்தை விஷம் எனக் கருதவேண்டுமென்கிறார் வேத விற்பன்னர் [சங்கராச்சாரி]; வெகு நன்று. நாம் இல்லறவாசிகள், இன்னின்னவற்றையே நியாயமான செலவாகக் கொள்ளல் வேண்டும் என்றுங்குறிப்பிடத் தயார்! விஷம், அவர்களிடம் கூடாது என்று விளம்பத் தயார். ஆனால் ஸ்வாமிகாள்! தங்கள் விஷம் என்ன? தங்களுக்கு உலகமே மாயை என்ற தத்துவாசிரியருக்கு, துறவுக்கு மடம் ஏன், சொத்து சுகம் எதுக்கு, பணம் பரிவாரம் ஆகுமா? விஷமென்று எந்தப் பணத்தைக் குறிப்பிடுகிறீரோ, அதனைத் தாங்கள் பருகியபடியே தானே இருக்கிறீர்? மற்றவர்களாவது, ஓரளவுக்கேனம் உழைத்து, தமது திறமையையும் காட்டிப்பொருள் ஈட்டுகின்றனர். தாங்கள் உழைப்பதுண்டா? உடலில் உழைப்பு தரும் ஓய்ச்சல் என்ற அனுபவம் தங்கட்குத் தெரியுமா? உழைத்தும பயனில்லை என்ற நிலையில் உண்டாகும் சலிப்பு என்ற அனுபவம் தங்களுக்குண்டா? பசியை நீரறிவீரா! பஞ்சத்தில் அடிபட்டதுண்டா? இல்லையே! உழைக்காமல், ஊரார் உழைப்பில் உபாதானம் பெறுகிறீர். தங்களின் வாழ்க்கையின் வசீகரம், தங்கள் திறமையால் கித்ததுமல்ல! பிறரின் மடத்தனத்தால், தங்கட்குக் கிடைப்பது. இத்தகைய வாழ்விலே இருப்பது நியாயமா? பிறருக்கு நீதி புகட்டும் பெரியோய், உமது வாழ்க்கையின் நியாயம் யாது என்றுரைக்க முடியுமா – என்று சங்கராச்சாரியாரை நாம் உறைகூவி அழைத்துக் கேட்கிறோம். அவரோ, அவரது அதிகாரம் பெற்ற வேறு யாரேனுமோ கூறட்டும் கேட்போம்.

  5. இது போன்ற அஜாகுஜா வேலைகள் எல்லா பணக்கார கோவில்கள் ,டிரஸ்டுகளிளும் உண்டு! ஒரு சில மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன! லஞசம், பணம் புழங்கும் இடத்தில் பார்ப்பான் நிச்சயம் இருப்பான்(பங்கு போட)! அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே!

  6. பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகை பார்ப்பனப் பத்திரிக்கையா சூத்திரப் பத்திரிக்கையா… பெங்களூர் டெக்கான் ஹெரால்டு மேற்படி இரு வகைப்பாட்டில் ஏதோ ஒன்று என்றால் ஹைதராபாத்திலும், விசாகப்பட்டனத்திலும் வரும் டெக்கான் ஹெரால்ட் என்னவகைப் பத்திரிக்கை ஐயா?

  7. சங்கர மடத்திற்குச் செல்லும் பணம் எதுவும் கருப்பு பணம் கிடையாது.திருப்பதி உண்டியலில் போடுகிற பணத்தை கருப்பு பணம் என்று சொல்வீரோ.பணத்தைக் கொடுக்கிறவர் கையில் இருக்கிறவரை அது கருப்புப் பணம்.சங்கர மடம் வந்துவிட்டல் அது வெள்ளைப் பணம்.ரகு ராம் ராஜனிடம் கேளும் அவர் இதை ஒப்புக் கொள்வார்.சூத்திரர்களால் நடத்தப்படுவதால் அது சூத்திரப் பத்திரிகை.ஜகத்குருவை இல்லையென்று சொல்லச் சொல்ல முடியுமா?அவர் பிராமணன் இல்லை என்று,தினத்தந்தி சூத்திரன் இலையென்று.போங்காணும்.

  8. ஏண்டா அபிஸ்க்ட்டுகளா லோகத்துல எவண்டா “துட்டு” சம்பாரிக்கலை?
    மடத்தைப் பற்றிநோண்டுவதை விடுடா,…இல்லாட்டி அந்த ” ஈஸ்வரன்:உஙளோட கண்ணைநோண்டி
    சஙரநேத்ராலாயாவில் ஐஸ் பெட்டியில் வச்சிடுவான்..சமர்த்தா ஒதுஙிப் போஙோ

  9. ரு.500, 1000 ஐ தடை செய்யும் முன் அம்பானிகள், அதானிகள் , பி ஜேபி எம்பி , அமைச்சர்கள் எல்லோரையும் கூட்டி முன்கூட்டியே அழைத்து ரகசிய விபரம் சொல்லி அவர்களுடைய கள்ள , கருப்பு பணத்தை வெள்ளியாக்கி விட்ட பிறகுதான் திடீரென்று மோடியின் திருவாய் மலர்ந்தது.பொதுமக்கள் இன்றும் அல்லாடிக்கொண்டுள்ளனர் இந்த நவீன துளக்கின் ஆட்சியில் .

    • சரியாக சொன்னீர்கள் SM பாஷா ! எஸ் முகமது பின் துக்ளக் கம் back இன் தி நேம் of மோடி ஜீ!

      ஐநூறு ஆயிரம் ஒழிப்பு நடவடிக்கையை எடுத்தவரின் அளவுக்கு இந்திய வரலாற்றில் இந்தியாவை ஆண்ட மன்னர்களை திரும்பிப்பார்கின்றேன்…. துக்ளக் அவர்களை தவிர வேறு யாரோமே மோடிக்கு இணையாக கிடைக்க மாட்டேன் என்கின்றார்கள்…. முகமது பின் துக்ளக் கம் back இன் தி நேம் of மோடி ஜீ!

    • நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன ? யூகத்தின் அடிப்படையில் பேச வேண்டாம்.

Leave a Reply to Kavignar Thanigai பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க