privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகொலைகார அமித் ஷா விடுதலை !

கொலைகார அமித் ஷா விடுதலை !

-

amit_shah
ஒரு கொலைகாரனின் மனதை இன்னொரு கொலைகாரன்தான் புரிந்து கொள்வான்

ள்ளிக் குழந்தைகளை சுட்டுக் கொன்ற பாக் தாலிபான்களை உலகமே கண்டித்தது. ஆனால் பேருந்தில் பயணம் சென்ற அப்பாவி சொராபுதீன் ஷேக்கை கொலை செய்த பாஜக கும்பல்தான் இங்கே நாட்டை ஆள்கிறது.

‘பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்த சொராபுதீன், குஜராத்தின் முக்கிய பாஜக தலைவர்களை கொலை செய்ய திட்டமிருந்தார்’ என்று குஜராத் போலிஸ் திட்டமிட்டபடி ஒரு பொய்க்கதையை அதுவும் எந்த ஆதாரமோ, தடயங்களோ இல்லாமல் அவிழ்த்து விட்டிருந்தது.

மோடியின் போலிஸ் சொன்னால் ஊர் உலகம் அப்படியே நம்ப வேண்டும், நம்புவார்கள் என்பதால் அப்படி தெனாவெட்டாக அடித்து விட்டிருந்தார்கள். பிறகு பல்வேறு ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் இந்த போலி என்கவுண்டர் கொலை வெளிச்சத்திற்கு வந்து சிபிஐ வழக்கு போட்டது.

2005-ல் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை எனும் மிருகங்கள் சொராபுதீனை இப்படி நயவஞ்சமாக கொன்றதை நேரில் பார்த்தவர் துளசி பிராஜபதி. ‘இவர் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிவிட்டார்’ என்று கதை கட்டி 2006-ல் அவரை சுட்டுக் கொன்றார்கள் இந்த பாவிகள்.

இந்த இரு வழக்குகளிலும் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு உண்டென சிபிஐ குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து அவர் 2010-ல் கைது செய்யப்பட்டு அமைச்சரவையிலிருந்து விலகினார். ஆனால் ஒரு கொலைகாரனின் மனதை இன்னொரு கொலைகாரன்தான் புரிந்து கொள்வான் என்பதற்கிணங்க மோடி அவரை விடுவிக்கும் வேலைகளை விட்டுவிடவில்லை.

2012-ல் மும்பைக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில் அமித் ஷா மற்றும் 18 காவல் துறை அதிகாரிகள் மீது சிபிஐ 2013-ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் இந்த கொலை தொடர்பாக அமித் ஷா பேசியிருந்த தொலைபேசி தகவல்களையும் தாக்கல் செய்திருந்தது. இருந்தும் என்ன பயன்? பேய் ஆண்டால் பிசாசுதானே நீதி வழங்கும்?

இறுதியில் இவ்வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி எம்.பி.கோசாவி, ‘அமித் ஷா குற்றவாளி என்பதற்கான சிபிஐயின் அனுமானங்களை ஏற்க முடியாது’ என்று அவரை விடுவித்திருக்கிறார். அனுமானங்களை விடுங்கள், நேரடி ஆதாரங்களையே தாக்கல் செய்திருந்தாலும் இந்த கோசாவி அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. பாஜக ஆட்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே மோடிக்கு அஞ்சி நடுங்கும் போது சிபிஐ டம்மி பீசுகளெல்லாம் எம்மாத்திரம்?

சிபிஐ விலைக்கு வாங்கப்பட்டுவிட்டதாக கூறியிருக்கும் சொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன் ஷேக், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக கூறியிருக்கிறார். உயரோ, உச்சமோ எல்லா நீதிமன்றங்களும் பாஜக கொலைகாரர்களின் பாக்கெட்டில் என்றாகிவிட்ட நிலையில் அவரது நீதிக்கான போராட்டத்திற்கு யார் இருக்கிறார்கள்?

இந்த வழக்கில் வேண்டுமென்றே கொலைகாரன் அமித் ஷாவை விடுவிக்கும் முயற்சியை சிபிஐ ஆரம்பத்திலிருந்தே செய்து வந்திருக்கிறது. இதில் காங்கிரஸ், பாஜக ஆட்சி எனும் பேதமில்லை. அதிகார வர்க்கம், போலிஸ் முழுவதும் இந்துமதவெறியின் பிடியிலிருக்கும் போது பாஜக எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதுவே நடந்திருக்கும்.

AmitShah-Uddhav
மும்பை கொலைகாரர்களுடன் குஜராத் கொலைகாரன்

முதலில் அமித் ஷாவை முக்கிய குற்றவாளி என்று கூறிய சிபிஐ பின்னர் அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் என பத்தோடு பதினொன்றாக மடை மாற்றியது. கடைசி இரண்டு நாள் விவாதங்களில் சிபிஐ சார்பில் இளநிலையில் உள்ள சாதா வழக்கறிஞரே பதினைந்து நிமிடங்களில் வண்டு முருகன் பாத்திரத்தை ஏற்று முடித்து வைத்தார். ஒரு கொலைகாரனை எவ்வளவு சாதாரணமாக விடுதலை செய்கிறார்கள் பாருங்கள்!

சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை குறித்து பல்வேறு விவரங்கள், உண்மைகள் அனைத்தும் ஊடகங்களில் வெளிந்திருக்கின்றன. இது போக உ.பி முசாபர் நகர் கலவரத்தில் அமித் ஷா எப்படி தலைமை ஏற்று நடத்தினார், அவரது வெறிப்பேச்சிற்காக தேர்தல் கமிஷனே கொஞ்ச காலம் செல்லமாக கண்டித்தது இவை அனைத்தும் சமீபத்திய வரலாறு.

ஆனால் என்ன? குஜராத்தில் இருந்த அமித் ஷாவை உ.பிக்கு அனுப்பி தற்போது டெல்லியில் பாஜக தலைவராகவே மாற்றிவிட்டார் மோடி. இப்போது நீதிமன்றங்கள், சிபிஐயை வளைத்து வழக்கிலிருந்தும் விடுவித்திருக்கிறார்கள்.

ஆக இந்தியாவில் ஒரு அப்பாவி முசுலீமை கேட்பார் கேள்வியின்றி கொலை செய்யலாம், கொன்றவர்கள் எதிர்ப்பாரின்றி நாடாளலாம், எவரும் கேட்க முடியாது என்றால் இங்கே இருப்பது ஜனநாயகமா இல்லை மதவெறியின் காட்டுமிராண்டித் தனமா?

தமது உறவுகளை இழந்து வாடும் ஒரு இசுலாமிய இளைஞனுக்கு இந்த நாட்டின் நீதி அமைப்புகள் நீதி வழங்கவில்லை என்றால் அவன் தனது இயலாமையை போக்கிக் கொள்ள என்ன செய்வான்?

பதில் தெரிந்தவர்கள் குற்ற உணர்வு கொள்ளுங்கள், குற்ற உணர்வு கொண்டவர்கள் இந்து மதவெறி பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு அணி திரளுங்கள்!