privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்திருச்சி கலெக்டருக்கு வகுப்பு எடுத்த ஆட்டோ தோழர்கள்

திருச்சி கலெக்டருக்கு வகுப்பு எடுத்த ஆட்டோ தோழர்கள்

-

அடாவடித்தனத்துடனும், அராஜகவாதிகளாவும் செயல்படும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்!

எதிர்கொண்டு போராடும் திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்!

டந்த 5.12.14 முதல் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து, ‘உடனடியாக மீட்டர் போட்டு ஆட்டோவை இயக்க வேண்டும்’ என தடாலடியாக அறிவிப்பு வெளியிட்டு அமுல்படுத்துமாறு நிர்பந்தித்தனர், அதிகாரிகள்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்இத்தகைய அவசரகதியிலான முடிவுகளுக்கெதிராக திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைப்பு சங்கம் ) சார்பாக பிரச்சார இயக்கம் முன்னெடுத்தோம். மக்களிடம் உண்மை நிலையை விளக்குவது, அனைத்து ஓட்டுனர்களை ஒருங்கிணைப்பது பிற சங்கங்களை ஒருங்கிணைக்க முயற்சி எடுப்பது என முடிவு செய்து வேலை நிறுத்தம், RTO அலுவலக முற்றுகை என நடத்தினோம். இதனைத் தொடர்ந்து 15 நாட்களாக அதிகாரிகள் தமது நடவடிக்கையை நிறுத்தி வைத்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்ஆனால் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்காமலும், சங்கங்களை அழைத்து பேசாமலும் 15 நாட்கள் வன வாசத்திற்க்கு பின் திடீரென தினசரிகளில் 48 மணி நேரம் கெடுவிதித்து அறிக்கை வெளியிடுகிறார், போலீஸ் கமிஷ்னர். ‘மீண்டும் பழைய உத்தரவின் படி மீட்டர் போட்டு வண்டி ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் முதல் நாள் அபராதம் ரூ 100 , இரண்டாவது நாள் ரூ 500, மூன்றாம் நாள் ஆட்டோக்கள் பறிமுதல், பர்மீட் ரத்து செய்யப்படும்’ என அறிவித்து நடவடிக்கையில் இறங்கினர். (நல்ல வேளை நான்காவது நாள் ஆட்டோ டிரைவருக்கு தூக்குத் தண்டனை தரப்படும் என அறிவிக்கவில்லை)

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்சும்மா இருக்கையிலேயே நம்ம ஊர் போலீசுகாரர்களுக்கு கை அறிப்பெடுக்கும். இப்படி ஒரு அறிவிப்பு வந்ததும் தெருவுக்குத் தெரு வண்டியை மடக்கி மாமூல் வேட்டையில் இறங்கினர்.

இந்த சூழலில் சங்கங்கள் எல்லாம் வாயை மூடி மௌனம் காத்துக் கிடந்தனர். சி.ஐ.டி.யு.வினர், ‘இனியும் அதிகாரிகளை எதிர்க்கொள்ள முடியாது’ எனக் கருதி தமது கிளையில் மீட்டர் போட்டு ஒட்ட வேண்டும் என அறிவிப்பு செய்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்ஆனால் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கமோ இதனை எதிர் கொண்டு அடுத்த சுற்று போராட்டத்திற்கு ஆயுத்தம் ஆனது. திருச்சி முழுவதும் உள்ள அனைத்து ஸ்டாண்டுகள், சங்கங்கள் உள்பட அனைவருக்கும் அறிவிப்பு கொடுதது ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். ஏ.ஐ.டி.யு.சி, விடுதலை சிறுத்தைகள், திமுக, அதிமுக , சி.ஐ.டி.யு வினர் சங்கத்தை சேர்ந்த கிளைகளில் உள்ளோர் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமது குமுறலையும், ஆலோசனைகளையும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து 22.12.2014 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்நாம் அணி திரட்ட திட்டமிட்ட நாளில் மாவட் ஆட்சியர் அணியினரும் தமது பங்குக்கு அணிதிரட்டினார். ஸ்டாண்டு இல்லாத, உதிரியாக ஓட்டும் டிரைவர்களை அழைத்து பேசி கலெக்டர் கொடியசைத்து மீட்டர் ஆட்டோவை துவக்கி வைப்பது போல ஒரு காட்சியை ஏற்படுத்த அதே நாளில் முடிவு செய்திருந்தனர். அவர்கள் அணியைச் சேர்ந்த 25 நபர்கள் ஒருபுறம் நின்றனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்நமது தலைமையிலான அணிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று ஆட்சியர் அலுவலகம் உள்ளே வரை சென்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்கொடியசைத்து அவர்கள் ஆட்டோக்களை அவசரமாக அனுப்பிய ஆட்சியர் நமது தரப்பினை அழைத்து பேச முடிவு செய்து கூப்பிட்டனர். பிற சங்க பிரதிநிதிகள் உள்பட 10 நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

நாட்டு நடப்புகள் அனைத்தும் தெரிந்தவர் என ஆட்சியர் பற்றி கருதியிருந்தோம். ஆனால் அடிப்படையான விசயங்கள் கூட தெரியவில்லை என்பதை அவர் பேச்சில் உணர முடிந்தது.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“7000 ஆட்டோ டிரைவர் குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இதனை அனைத்து சங்க பிரநிதிகள், அதிகாரிகள் கொண்ட கமிட்டி அமைத்து பேசாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது என்ன நியாயம்” என்ற நமது கேள்விக்கு?

“இது பற்றி எனது காதுக்கு செய்தி வரவில்லை” என்கிறார்!

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்“அங்கீகாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான கால்டாக்ஸிகள் இயங்குகின்றன. இவற்றால் ஆட்டோக்களும் பாதிக்கப்படுகின்றன. ஏன் அவர்களை ஒழுங்குபடுத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை” எனக் கேட்டதற்கு

“என்ன ? கால்டாக்ஸிக்கு அங்கீகாரம் இல்லையா?” என கீழ் நிலை அதிகாரியை பார்த்து கேட்கிறார்!

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“ஆமாம் மேடம்” என அவர் அடக்கமாக உண்மையை உளறியதும், “சரி நடவடிக்கை எடுக்கிறேன்” என்கிறார்!

“தனியார் கம்பெனிகள் கொழுத்த லாபத்தில் தரமில்லாத மீட்டரை விற்கின்றனர். அதற்கு பதிலாக அரசே G.S.M மீட்டர் தரவேண்டும்” என்ற கோரிக்கைபற்றி பேசிய போது!

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“அது என்ன G.S.M மீட்டர். அப்படி ஏதும் இல்லையே” என கீழ் அதிகாரியை பார்த்து பேச,

“இல்லம்மா இருக்கு ஆனா அது சென்னைக்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என சமாளித்தார் ஆட்சியரின் கீழ் நிலை அதிகாரி.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“போலீஸார் அபராதம் என்ற பெயரில் வளைத்து வளைத்து படிக்கின்றனர். இது முறையல்ல” என்றதும் உடனே போலீஸ் கமிஷனருக்கு போன் போட்டார். ஆனால், ‘அவர் திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் உள்ளதால் டவர் கிடைக்கவில்லை வந்ததும் பேசுகிறேன்’ என்றார் ( அண்ணல் மலையை விட்டு இறஙகிவரும் வரை 7,000 ஆட்டோக்கள் மாமுல் கட்டியே ஆக வேண்டும் மறைமுகமாக அறிவித்தார்).

“இலவச மீட்டர் எங்கேயும் வழங்கவில்லை” என அறிவித்தவர் (அம்மா 110 விதி அறிவிப்பை தடாலடியாக மறந்துவிட்டாரா, அல்லது அம்மா பேச்சு வெறும் சும்மா வெத்துவேட்டு என கருதினாரோ என தெரியவில்லை) “வங்கிகளில் கடன் ஏற்பாடு செய்கிறேன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“எந்த வங்கியும் கடன் தருவதில்லை. உங்கள் உத்தரவை யாரும் பின்பற்றி நடைமுறை படுத்தவில்லை” என்றதும் உடனே IOB வங்கி மாவட்ட அதிகாரிக்கு போன் செய்து, “உடனே நிபந்தனை இல்லாமல் கடன் கொடுங்க. இல்லாவிட்டால் போஸ்டர் அடிச்சு ஒட்டுவாங்க” என கூறி அவரை சம்மதிக்க வைத்தார்.

“உங்க மற்ற கோரிக்கைகளை அரசிடம் பேசுகிறேன். அனைத்து சங்கங்களையும் கூப்பிட்டு பேசி இறுதி முடிவு எடுக்கிறோம்” என்ற வாக்குறுதியின் பெயரில் முற்றுகை விலக்கி கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை சுவரொட்டியாக தயாரித்து அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டபட்டுள்ளது. மீண்டும் அமைதியாக நாட்கள் நகர்கின்றன!

இந்த கலவரங்களுக்கு மத்தியில் சி.ஐ.டி.யு வினர் சங்கங்கள் சேர்ந்து நிர்வாகிகள் 4 நபர்கள் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து அன்றைய செய்திகளில் அவர்களும் இடம் பிடித்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

மீட்டர் ஆட்டோ இயங்க தடையாக உள்ள பிரச்சினைகள்

  1. 25 ஆண்டுகாலமாக மீட்டர் போடும முறை நடை முறையில் இல்லை
  2. பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் அறிவிப்பாக வெளியிடுவதும். அதன் பின் உள்ள பிரச்சினைகளை சரி செய்யாமல் கிடப்பில் போடுவதுமாக இருந்துள்ளனர்.
  3. இதனால் ஆட்டோ தொழிலை பல்வேறு பிரச்சினைகளும், சிரமங்களும் சூழ்ந்துள்ளன.
  4. ஆண்டுக்கு ஒரு முறை F.C எடுக்கும் முறை அமுலில் உள்ளது இதற்கு செலவு குறைந்தது ரூ 5000 ஆகும்.
  5. இன்சூரன்ஸ் ரூ 800 ஆக இருந்தது இன்று ஆண்டுக்கு ரூ 4,000 ஆக உயர்ந்துள்ளது.(பல லட்சம் கோடி இன்சூரன்ஸ் தொகை கேள்வி கேட்பாரின்றி உள்ளது. இதில் பல பன்னாட்டு நிறுவனங்கள் புகுந்து சுருட்ட துவங்கி விட்டனர்.) இந்தத் தொகையை கட்டமுடியாமல் ஆட்டோ ஓட்டுனர்கள் தவித்து வருகின்றனர்.
  6. படிப்பறிவு இல்லாதவர்கள் தான் ஆட்டோ தொழில்களில் வந்து சேர்கின்றனர். தமது அனுபவம் மூலம் கற்று தேர்கின்றனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் உள்ளவர்களை திடீர் என மத்திய அரசு 8-ம் வகுப்பு படித்தால் தான் பேட்ஜ் வாங்க முடியும் என சட்டம் இயற்றி பிழைப்பை கெடுத்து உள்ளது. இனிமேல் எப்படி இவர்கள் படித்து சான்றிதழ் பெற முடியும்.
  7. நமது ஆட்டோ சம்மந்தமான ஆவணங்களை வங்கி, மற்றும் பைனாஸ்சியரிடம் அடமானம் வைக்கப்பட்டு தான் கடன் பெற முடிகிறது. இவை முடியும் வரை ஆவணம் பெற முடியாது. இது போன்ற சூழலில் முறையாக ஆவணங்களோடு ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இயங்குவதில்லை.
  8. மக்கள் அன்றாட தேவைகளுக்கே படாதபாடு படும் சுழலில் ஆட்டோவில் பயணம் செய்வது அரிதாக உள்ளது.
  9. நாள் ஒன்றுக்கு 5,6 சவாரி கிடைத்தால் அது பெரிய விசயமாகும். இது போன்ற சூழலில் மீட்டர் போட்டு அரசே கட்டணத்தை நிர்ணயத்து இயக்கக் கோரும் போது இப்போது உள்ள வருமானத்தில் பாதி தான் ஈட்ட முடியும். அதுவும் சின்ன சிறிய நகரங்களுக்கு இந்த மீட்டர் கட்டணத்தை பொருத்தினால் மேலும் அதிக பாதிப்பு ஏற்படும்.

trichy-auto-drivers-protest-15

இவை எதைப் பற்றியும் நம்ம ஊர் அதிகாரிகள் கவலைப்படவில்லை. தனது மேலதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே அமுல்படுத்த வேண்டும் என்ற சிகப்பு நாடா முறையையே பின்பற்றுகின்றனர். ஜனநாயக பூர்வமாக விவாதித்து, நல்லது, கெட்டதை பேசி தீர்த்து முழுமையாக அமுல்படுத்துவது என்பது இவர்கள் அகராதியில் கிடையாது. எனவே புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராடுவதை தவிர வேறு வழியில்லை என்ற நோக்கத்தில் அடுத்தகட்ட போராட்டத்திற்க்கு ஆ.ஓ.பா.ச தயாராகி வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

செய்தி:
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்,
(இணைப்பு) – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி)
திருச்சி.

பேச: 9791692512.

  1. அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களையும் அழைத்து பேசி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட சென்னையில் எந்த ஆட்டோ ஓட்டுனரும் மீட்டர் போடுவது இல்லை. அவர்கள் கறாராக மீட்டர் போடாமல்தான் காசு கேட்கிறார்கள்.இப்படி இருந்தால் எவன் ஆட்டோவில் போவான்.இவர்கள் ஒழுங்காக மீட்டர் போட்டாலே சரியான வருமானம் வரும்.அதை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் இந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இல்லை.ஆட்டோவில் பயனம் செய்ய ஆகும் செலவை விட கால் டாக்சியில் போனால் அதன் செலவு குறைவாக உள்ளது,. பயனமும் நிறைவாக உள்ளது. அவர்கள் யாரும் மீட்டர் போடாமல் ஓட்டுவதும் இல்லை மீட்டருக்கு மேலே கேட்பதும் இல்லை.

    • What about premium trains imposed by government to the general public. You idiots will not open your mouth, but always ready to beat ‘poor’ auto drivers. Will you be the driver for one week on the road then you can decide who are wrong.

  2. Fully biased article and a skewed reasoning.

    We have not used the meter for so many years and so will no use it right now.
    We can get only 5 or 6 trips.

    Have you ever written anything about how rude most of them are. Have you heard how they handle anyone who says something against them, their riding skills, how much they charge for even a short ride of 1 or 2 kms.

    Agree that they do not require an educational filter

  3. திருச்சிப் போராட்டம் தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள் படும் துயரங்கள் தீராமல் இருப்பதற்கு அவர்கள் இதுவரை சார்ந்துள்ள சங்கங்களின் போக்கே காரணம். சங்கத்தில் இருப்பது போலீசைச் சரிக்கட்ட அல்ல, சட்டவிரோதமான போலீசின் அடாவடித்தனத்தை எதிர்கொள்ளவே என்பதை ஆட்டோத்தோழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். கச்சா எண்ணெய் விலையை வைத்துச் சூதாடும் சர்வதேச அரசியலில் இந்திய அரசின் பங்கை ஆட்டோ ஓட்டும் ஒவ்வொரு தொழிலாளியும் தெளிவாகப் புரிந்துகொண்டே ஆக வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்க்க முடியும். எதிர்காலத்தில் இதே தொழிலைத் தொடரவேண்டுமென்றால் ஒரு ஆட்டோத் தொழிலாளிக்கு இதுதான் நிபந்தனை.

Leave a Reply to S. Muralidharan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க