privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை - பா.ஜ.க பாசிசம்

மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்

-

ங்கத்து பார்ப்பனரான பிரணாப் முகர்ஜி, மராட்டிய பேஷ்வா பார்ப்பனர்களின் கோரிக்கையை ஏற்று ஏழைகளின் உணவான மாட்டுக்கறியை தடை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.

மாட்டிறைச்சி அரசியல்
மாட்டிறைச்சி அரசியல் – மோடிக்கு போட்ட ஓட்டு மாட்டுக்கு கொடுத்த வாழ்வு. மக்களுக்கு?

மராட்டியத்தில் பசுக்களை கொல்வதற்கு தடை விதிக்கும் சட்டம் 1976-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதில் எருதுகள் மற்றும் காளைகள் மட்டும் இறைச்சிக்கென்று சான்றிதழ் தரப்பட்டு அனுமதிக்கப்பட்டது. கருப்பு நிறத்திலான எருமை மாடுகள் அதில் எருதோ பசுவோ இச்சட்டத்தில் வராது. அவாளின் புனிதம் என்பது வெள்ளைநிற பசுவுக்கு மட்டும்தான்.

1995-ம் ஆண்டில் பா.ஜ.க-சிவசேனை ஆட்சியின் போது வெள்ளை நிற காளை, எருதுகளையும் தடை செய்யுமாறு மசோதா நிறைவேற்றினார்கள். அப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்ட மசோதாவுக்கு இப்போதுதான் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்து மக்கள் வயிற்றில் மண்ணள்ளி போட்டிருக்கிறார்.

இனி மராட்டியத்தில் எருமை இறைச்சி மட்டும்தான் கிடைக்கும். மற்ற மாட்டிறைச்சி கிடைக்காது. “இப்புதிய சட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழைப்பார்கள், பிற இறைச்சி விலைகள் உயரும்” என்று மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவின் வணிக தலைநகரமென்று அழைக்கப்படும் மும்பையை தூக்கி நிறுத்தும் கடுமுழைப்பாளிகளுக்கு இனி மாட்டுக்கறி கிடையாது.

பொதுவில் இந்தியாவில் எருமை இறைச்சி அதிகமாக உண்ணப்படுவதில்லை. நாட்டின் ஒட்டு மொத்த மாட்டிறைச்சியில் உள்நாட்டு நுகர்வில் 25 சதவீதம்தான் எருமை இறைச்சி. ஏற்றுமதியில் எருமை இறைச்சிதான் முதலிடம். உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்த பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் இந்தியாதான். இத்தகைய சூழலில் மாட்டிறைச்சி தடை சட்டம் ஏற்படுத்தும் பொருளாதார விளைவுகளைக் கூட பா.ஜ.க.விற்கு முதுகு சொறியும் அறிவாளிகள் பேசமாட்டார்கள்.

எதிர்கால இந்திய நாடாளுமன்றம் - பா.ஜ.க.வின் கனவுத் திட்டம்.
எதிர்கால இந்திய நாடாளுமன்றம் – பா.ஜ.க.வின் கனவுத் திட்டம்.

ஆர்.எஸ்.எஸ் எனும் நச்சும்பாம்பை அளித்த நாக்பூர் நகரம்தான் தற்போதைய மராட்டிய பா.ஜ.க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸையும் அளித்திருக்கிறது. ஷாகா சென்று பேஷ்வா பெருமையை கற்றுக் கொண்டவர் பின்னர் ஏ.பி.வி.பி, பா.ஜ.க என பரிணாம வளர்ச்சியில் முதல்வராகியிருக்கிறார். பசுக்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற கனவு நிதர்சனமாயிருப்பதாக டிவிட்டரில் பூரித்திருக்கிறார்.

“1996-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதா குறித்து பிறகு வந்த எந்த அரசாங்கங்களும் கவலைப்படவில்லை. நாங்கள்தான் தேர்தல் வாக்குறுதியில் சொன்னவாறு இதைச் சட்டமாக்கியிருக்கிறோம்” என்கிறார் பா.ஜ.க.வின் மும்பை பாராளுமன்ற உறுப்பினர் கீர்த்தி சோமையா. மாட்டுக்கறி தடையில் ஆரம்பித்து இனி கோமியத்தை தேசிய டானிக்காக மாற்றுவதைக் கூட இந்த சோமையாக்கள் செய்யலாம்.

இனி தடையை மீறி மாட்டுக்கறி விற்றால் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இந்த குற்றத்திற்கு பிணை வழங்கக் கூடாது என்றும் சட்டத்தை திருத்தியிருக்கிறார்கள். 1976 சட்டத்தில் சிறை ஆறு மாதங்களாகவும், அபராதம் ரூ 1000 ஆகவும் இருந்தது. இரண்டும் தற்போது பத்து மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

மாட்டுக்கறி தடை
பல மாநிலங்களில் மாட்டுக்கறி தடைச் சட்டமிருந்தாலும், விவசாயத்திற்கு பயன்படாத மாடுகளை வெட்டலாம் என்று அனுமதி அளித்து வருகிறார்கள்.

பார்ப்பனியத்தின் இந்த பசு புனிதம் என்பது ஏதோ உயிர் குறித்த கருணை அல்ல. மாட்டுக்கறியை அதிகம் உண்ணும் தாழ்த்தப்பட்ட மக்களையும், மாட்டுக்கறி வர்த்தகத்தில் அதிகம் இருக்கும் முசுலீம் மக்களையும் குறிவைத்து தாக்குவதற்கே இந்த சட்டத்தினை கையிலெடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் மனிதர்கள் மீதான கொலைவெறியே பசுப்புனித போர்வையில் வருகிறது.

பல மாநிலங்களில் மாட்டுக்கறி தடைச் சட்டமிருந்தாலும், விவசாயத்திற்கு பயன்படாத மாடுகளை வெட்டலாம் என்று அனுமதி அளித்து வருகிறார்கள். தற்போது அதையும் ஒழித்திருப்பதால் மராட்டியத்தில் தொடங்கியிருக்கும் பார்ப்பனிய வைரஸ் நாடு முழுவதும் பரவ வாய்ப்பிருக்கிறது.

பெரும்பான்மை மக்களின் மலிவான மாட்டிறைச்சியை தடை செய்வதால் ஆடு, கோழி, போன்ற மற்ற இறைச்சிகளின் விலை உயரும். இதனால் ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கமும் கூட கணிசமாக பாதிக்கப்படுவார்கள். மாட்டிறைச்சி மூலம் மலிவாக கிடைக்கும் புரதச் சத்து இன்றி நமது குழந்தைகள் வாடிப்போவார்கள். ஆட்டிறைச்சி விலையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் மாட்டிறைச்சி இனி இல்லை என்றால் அதன் விளைவுகள் எண்ணிப்பார்க்க முடியாதது.

இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக மாட்டிறைச்சி வணிகர் சங்கத்தை சேர்ந்த ஆரிஃப் சவுத்திரி தெரிவித்திருக்கிறார். ஆனால் மோடி அரசின் உத்தரவுகளை தீர்ப்புகளாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பது அரிது.

மாட்டிறைச்சி தடையின் விளைவுகள்
பெரும்பான்மை மக்களின் மலிவான மாட்டிறைச்சியை தடை செய்வதால் ஆடு, கோழி, போன்ற மற்ற இறைச்சிகளின் விலை உயரும். இதனால் ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கமும் கூட கணிசமாக பாதிக்கப்படுவார்கள். மாட்டிறைச்சி மூலம் மலிவாக கிடைக்கும் புரதச் சத்து இன்றி நமது குழந்தைகள் வாடிப்போவார்கள்.

மாட்டிறைச்சி தடையால் விற்பவர்கள், உண்பவர்களுக்கு மட்டுமில்லை விவசாயிகளுக்கும் பேரிடி காத்திருக்கிறது என்கிறார் ஆரிஃப் சவுத்திரி. இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் மராட்டிய மாநிலத்தில்தான் இருக்கிறார்கள். மடிவற்றிய, வயதான, உழைக்க பயன்படாத மாடுகளை இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளும் விற்று வருகிறார்கள். இனி இந்த மாடுகளை விற்கக் கூடாது என்றால் ஏழை விவசாயி என்ன செய்வார்?

மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுகிறது என்ற காரணத்தால்தான் விவசாயிகள் மாட்டிறைச்சி உண்பதில்லை. அதே போன்று விவசாயத்திற்கு பயன்படாது போகும் மாடுகளை வைத்து பராமரிப்பதும் அவர்களால் சாத்தியமில்லை. இனி மராட்டிய மாநிலத்தில், மும்பை அல்லது பூனா, நாக்பூர் நகரங்களில் கைவிடப்பட்ட மாடுகள் இலட்சக்கணக்கில் சுற்றுவது உறுதி. ஜீவ காருண்யம் பேசும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் வேண்டுமானால் இம்மாடுகளை வீட்டில் வைத்து பராமரிக்க தயாரா?

அப்படி பராமரிக்க வேண்டும் என்று சட்டமாக்கினால் இந்தியாவில் அதிகம் மாடுகளை கொல்வது ஆர்.எஸ்.எஸ் கூட்டமாகத்தான் இருக்கும். “அரசு அறிக்கை ஒன்றின்படி மராட்டிய மாநிலத்திற்கு தேவைப்படும் கால்நடை தீவனத்தில் 61 சதவீதம் பற்றாக்குறை இருக்கும் போது இந்த சட்டம் வருகிறது. இதனால் வயதான மாடுகள் கொல்லப்படுவது தடுக்கப்படும் போது ஆரோக்கியமாக இருக்கும் மாடுகளுக்கு கிடைக்கும் தீவனம் குறையும், மாடுகளோடு விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்” என சாங்லியில் மாட்டிறைச்சி கடை வைத்திருக்கும் ராஜேந்திர தாண்டே கூறுகிறார். “இல்லை, இனி ஒரு மாட்டை பராமரிக்க மாதத்திற்கு ரூ 5,000 அளிக்கப்படும்” என்று மோடி கூறத் தயாரா? அப்படி அறிவித்தால் இந்தியா ஒரே நாளில் திவாலாகிவிடும்.

ஆர்.எஸ்.எஸ் கூட்டம்
அப்படி பராமரிக்க வேண்டும் என்று சட்டமாக்கினால் இந்தியாவில் அதிகம் மாடுகளை கொல்வது ஆர்.எஸ்.எஸ் கூட்டமாகத்தான் இருக்கும்.

“முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் கருணையே இல்லாமல் மாடுகள் கொல்லப்பட்டு அதுதான் பிங்க் புரட்சியாக கொண்டு வரப்பட்டது” என்று தேர்தலின் போது மோடி சாடினார். ஆனால் இந்த கேடி ஆட்சியில்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி முன்னைவிட அதிகமாகியிருக்கிறது. மாட்டுக்கறி என்றால் முசுலீம்கள் கொல்வார்கள், அவர்களே உண்பார்கள் போன்ற தவறான பொதுப்புத்திக்கு மாறாக இந்துக்கள்தான் அதிகம் உண்பது கண்கூடு. ஆனால் பஞ்சம சூத்திரர்களை இவர்கள் இந்துக்களாக ஏற்பதில்லை என்றால், சிறுபான்மையான பார்ப்பன ‘மேல்சாதி’ இந்தக்களுக்காக என்ன எழவுக்கு மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும்?

ஷோபா டே
“மாட்டுக்கறி உண்பவர்களின் உரிமைக்காக தான் ஐந்து வருடம் சிறை செல்லத் தயார்” என்கிறார் எழுத்தாளர் ஷோபா டே

நாய்களுக்காக கண்ணீர் விடும் மேனகா காந்தி போன்ற ராயல் சீமாட்டிகள், “மாட்டிறைச்சி விற்பனையால் வரும் பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுகிறது” என்று அறிக்கையே விடுகிறார்கள். முந்தைய நாளில் மணக்க மணக்க கறி சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் காலையில் போகும் மலத்தைத் தாண்டி என்னய்யா இதில் பயங்கரவாதம் இருக்கிறது?

“மும்பையில் இருக்கும் மல்டி கசின் உணவங்களில் இனி மாட்டிறைச்சி இல்லை என்றால் மேற்குலக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார் ஓட்ட சங்க தலைவர். ஒரு வேளை இந்த மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் விலக்கு கொடுப்பார்களோ என்னமோ?

காங்கிரசுக் கட்சி இந்த சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருக்கிறது. என்ன இருந்தாலும் இவர்கள்தானே இந்துமதவெறியர்களின் மூதாதையர்களை உற்பத்தி செய்தவர்கள். இந்தச் சட்டம் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தாமல் வெளிப்படையாக அமல்படுத்த வேண்டும் என்கிறது கதர் வேட்டி கும்பல்.

முசுலீம்களை தனிமைப்படுத்தி ஒடுக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் அயோக்கியத்தனத்தினை அம்பலப்படுத்துகிறது பண்டைய இந்திய வரலாறு. இந்திய விவசாயிகளின் மாடுகள் மீதான உறவை கணக்கில் கொண்டே இங்கே பாபர், ஹுமாயூன், அக்பர் போன்ற முகலாய மன்னர்கள் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கின்றனர். கடைசியாக மைசூரின் ஹைதர் அலி, 1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்கு தலைமை தாங்கிய முகலாய மன்னர் பகதூர் ஷா காலம் வரை இந்த நல்லிணக்கம் சாதாரணமாகவே நிலவியிருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆர்ய சமாஜத்தினை நிறுவிய தயானந்த சரஸ்வதி இதை இந்துத்துவ அரசியலாக்கினார். ‘பசுவதை என்பது இந்துத்துவத்தின் மீதான தாக்குதல்’ என்று அப்போதுதான் திசை திருப்பினார்கள். அதே இந்துத்துவம் தான் அக்காலத்தில் பஞ்சம சூத்திர மற்றும் பெண்கள் மீது சொல்லொணாத் துயங்களை நிகழ்த்தியிருக்கிறது. ‘முசுலீம்கள் மாட்டின் தலையை வெட்டி கோவிலின் முன் போட்டார்கள்’ என்று கடந்த நூற்றாண்டில் எண்ணிறந்த கலவரங்களை இந்துமதவெறியர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்படித்தான் இங்கே சட்டப்படியே பசுவதை தடையை புனிதமாக்கினார்கள். குஜராத்தில் மாடுவெட்டினால் ஏழு ஆண்டு சிறை தண்டனை. பொது இடங்களில் இறைச்சி விற்பனை கிடையாது.

எனினும் மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமூக வலைத்தளமான டிவிட்டரில் மாட்டுக்கறி தடையை எதிர்க்கும் ஹேஷ் டேக் முன்னிலையில் இருக்கிறது.

“மாட்டுக்கறி உண்பவர்களின் உரிமைக்காக தான் ஐந்து வருடம் சிறை செல்லத் தயார்” என்கிறார் எழுத்தாளர் ஷோபா டே. பாலிவுட் நட்சத்திரங்களான ஃபர்ஹான் அக்தர், அயுஷுமான் குரானா, ரிச்சா சாதா, வீர் தாஸ், ரன்வீர் ஷோரி முதலியோர் இச்சட்டத்தை மனித உரிமைகள் மீதான மீறல் என்று கண்டித்திருக்கின்றனர்.

மும்பை வாழ் தமிழ் மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். கோயம்பேடு கருவாடு விற்பனை தொடர்பாக “தி இந்து” எடுத்த அடக்குமுறைக்கு எதிராக வினவு எடுத்த ஆவணப்படத்தில் இது குறித்த விரிவான பார்வை இடம் பெற்றிருக்கிறது.

பார்ப்பனியத்தின் உணவுத் தீண்டாமையை அகற்றுவோம். பா.ஜ.கவின் பல்லைப் பிடுங்குவோம்!

தொடர்புடைய செய்திகள்:

  1. Bharatha Nesan நண்பர்களே, இறைவன் கொடுத்த உயிரை வதைக்க யாருக்கும் உரிமை இல்லை, 5 அறிவுள்ள அதற்கும் நமக்கு உள்ள அத்தனை உணர்ச்சிகளும் உள்ளன. அதேபோல், இறைச்சிக்காகவும் எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருந்தால் மண்வளம் செழிக்கும், மனிதவளம் மேம்பாடு அடையும், எல்லா உயிர்களும் இன்புற்று வாழும். ……………………………………………

    http://www.dinamalar.com/user_comments.asp?uid=10106&name=Bharatha%20Nesan

    • // எல்லா உயிர்களும் இன்புற்று வாழும். ……………………………………………//

      அப்படியா… இங்கு எங்கே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கிறார்கள்.. 5 அறிவுள்ள மிருகமாக இருந்தாலும் நமக்குள்ள அனைத்து உணர்ச்சிகளும் அதற்க்கும் உண்டு என கூறுகிறீர்கள் நல்லது, 6 அறிவுள்ள தலித் சமுகத்தை சேர்ந்த மனிதனுக்கும் மற்ற மனிதர்களை போல் மானமும்,ரோஷமும் இருக்கத் தானே செய்யும். அதை ஏன் இந்த கேடுகெட்ட சங் பரிவார அமைப்புகள் இது வரை கண்டுக் கொள்ளவேயில்லை? தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால் முதலில் பூண்டோடு தடை செய்து ஒழிக்க பட வேண்டியது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி கும்பல்களை தான். இதை செய்தாலே போதும் இந்தியா புண்ணிய பூமி ஆகி விடும்.

      கோ மாதாவின் மீது கொண்ட கரிசனத்தால்,பசு மாட்டு இறைச்சிக்கு தடை போட நினைக்கும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தலித் சமுகத்தை சேர்ந்த மக்கள் எவ்வித அடிப்படை உரிமைகளும் இல்லாமல் அவல நிலையில் வாழ்வதை மட்டும் இன்னும் பரிசீலிக்காமல் இருப்பது ஏன்? தன் சக மனிதனின் அவல நிலையை போக்க துப்பில்லை இதில் மாட்டை காப்பதற்கு வந்து விட்டார்கள். 5 அறிவுள்ள பசு மாட்டை விட 6 அறிவுள்ள மனிதன் அவ்வளவு தாழ்வாகவா போய் விட்டான். இந்த நாட்டில் வாழும் மக்கள் எந்த உணவை உண்ண வேண்டும் என தீர்மானிக்க இந்த அற்ப காவிக் கூட்டத்திற்கு என்ன உரிமை இருக்கிறது? எந்த மதத்தை பின்பற்ற வேண்டும், என்ன பண்பாட்டை மேற்கொள்ள வேண்டும், எதை உண்ண வேண்டும், எதை உண்ணக் கூடாது என்பதையெல்லாம் தீர்மானிக்க இவர்கள் யார்? மொத்தமுள்ள மகாராட்டிர மக்களிடமும் கருத்து கேட்டு விட்டு தான் இந்த சட்டத்தை அவர்கள் நடை முறை படுத்துகிறார்களா?

      சீர்திருத்தம் செய்ய வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்க, அதை எல்லாம் விட்டு மாடிறைச்சியை கையில் எடுத்திருப்பது இந்த நாட்டின் அரசியல் நிலை எந்த அளவிற்கு கேவலமும் அசிங்கமும், பிற்போக்கு தானகலும் நிறைந்ததாக இருக்கிறது நன்கு உணர முடிகிறது. மோடியை அரசியலில் இருந்து தடை செய்து பழையபடியே அவரை டி விற்க அனுப்பினாலே போதும் நாடு நன்றாகி விடும்.

    • //இறைவன் கொடுத்த உயிரை வதைக்க யாருக்கும் உரிமை இல்லை, 5 அறிவுள்ள அதற்கும் நமக்கு உள்ள அத்தனை உணர்ச்சிகளும் உள்ளன. அதேபோல், இறைச்சிக்காகவும் எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருந்தால் மண்வளம் செழிக்கும், மனிதவளம் மேம்பாடு அடையும், எல்லா உயிர்களும் இன்புற்று வாழும். ……………………………………………//

      திரு. திருமலைகிரி உங்கள் மனிதாபிமான உணர்வு கண்டு புல்லரித்துப்போனேன். உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா என்பது உங்களுக்கு தெரியுமா? ஏன் உங்களைப்போன்ற அறிவுள்ள மனிதாபிமான போராளிகள் தினமலம் போன்ற பத்திரிகைகளுடன் சேர்ந்து அதற்க்கு எதிராக போராட கூடாது? போரடமாட்டீர்கள் ஏனெனில் உங்கள் நயவஞ்சக எண்ணமெல்லாம் பிட்படுத்தப்பட்டவர்கள் மற்றும் இஸ்லாமிய கிருத்துவ மக்களின் அடுத்த தலைமுறையை போஷக்கின்மைக்கு உட்படுத்தி அவர்களை உங்கள் அடுத்த தலைமுறைக்கு அடிமைகளாக்கும் எண்ணமே. இது 21 ஆம் நூற்றாண்டு என்பதை மறந்து விடாதீர்கள். 17 ஆம் நூற்றண்டைப்போல் உங்களிடம் ஏமாந்து போவதர்த்கு.

    • http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)

      பலி கொடுத்தல் அல்லது காவு கொடுத்தல் ஒரு சமயச் சடங்கு ஆகும். பலி கொடுத்தல் கடவுளை நோக்கி வரம் வேண்டி கடவுளை மகிழ்ச்சி செய்வதற்காக விலங்குகளை உயிர்ப் பலி கொடுப்பதைக் குறிக்கும். யாகம், பூசை போன்ற சடங்குகளோடு இது இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. பெரிய கோயில்களில் பலி கொடுத்தல் வழக்கத்தில் இல்லை, ஆனால் பல கோயில்களில் ஆடு, கோழி போன்ற விலங்குகளைப் பலி கொடுக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

      பலி கொடுத்தல் வேத காலத்தில் ஒரு முக்கிய சடங்காக இருந்தது. பெளத்த சமண சமயங்களின் எழுச்சியும், அவை முன்னிறுத்திய அறக் கோட்பாடுகளும் பலி கொடுத்தலை இந்து சமயத்தின் ஓரத்தில் தள்ளி விட்டது.

      பலி கொடுத்தல் தத்துவம்[தொகு]
      பலி கொடுத்தல் நம்மில் உறையும் விலங்குக் குணங்களைஅழியச் செய்வதன் மூலம் இறைநெருக்கத்தை எட்டுதலாகும். ஆயினும் இதை மக்கள் வேறொரு வடிவம் கொடுத்துப் பின்பற்றி வருகின்றனர். தாம் செய்த பாவத்தை மன்னிக்க வேண்டி வேறொரு உயிரைப் பலியிடுதல் ஆகமம் சாராத வீரசைவ மரபில் எழுந்த கடைப்பிடிப்பு என வாதிப்பாரும் உளர்.

      http://www.theguardian.com/world/video/2014/nov/29/hindu-festival-animal-sacrifice-goes-ahead-despite-protest-video

      https://www.google.co.in/search?q=animal+sacrifice+in+hindu&biw=1366&bih=677&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=5kL5VJmrAoWOuASL8oLoBg&sqi=2&ved=0CCgQsAQ

  2. அடே மனிதா,
    உனது(அனைத்து மனிதரும்) பெற்றோரெ நீண்ட நாட்கள் உயிரோடு இருந்தால் அவர்களை நீயே கொண்று விடுவாய்.
    இதை உன் பெற்றோர்கள், நீ பிறந்தபோதே உணர்ந்திருபார்களானால்,உண்ணை அப்போதே கறி சமைத்து சாப்பிட்டு இருப்பார்கள்.
    அப்படி இருக்கும் போது கிழ மாடுகளை யார் பராமறிப்பார்கள்.
    கோசாலா என்று அரசாங்க பணத்தை செலவிட்டு கொள்ளையடிக்கவா? முயற்ச்சிக்கின்றீர்கள்.

  3. பழைய எம்.ஆர்.ராதா பட டயலாக் ஞாபகம் வருகிறது.

    எஸ்.எஸ்.ஆர். சொல்வார், தாங்கள் ஜீவகாருண்ய சங்கத்தை சேர்ந்தவர்கள், உயிர்களை வதைக்க மாட்டோம், புலால் உண்ண மாட்டோம் என்பார்.

    எம்.ஆர்.ராதா கேட்பார், அப்போ மூட்டை பூச்சி, கொசு கடிச்சா நீங்க என்ன பண்ணுவீங்க?

  4. இந்திய நாடு என்பது பல்வேறு உணவு கலாச்சாரம் கொண்ட நாடு.சில பேர் பன்றி கறி உண்பர்.சில பேர் ஆடு ,கோழி ,அது போலவே மாடு..அசைவ உணவை உண்ணாத மக்கள் கூட இருக்கின்றார்கள்.இந்து மதம் மாடு உண்பது தவறு என்று கூறுகின்றது.ஆனால் புத்த மதமோ ஒரு படி மேலே சென்று எந்த உயிரையும் கொல்வது பாவம் என்று சொல்லுகின்றது.அப்புடி இருக்கையில் ஆடு கூட புனிதம் தான்.இந்த நாட்டில் இந்து மதத்திற்கு என்ன உரிமை இருகின்றதோ,அதே உரிமை புத்த மதத்திற்கும் உண்டு.அப்போ புத்த மக்களின் உரிமைகளை ,உணர்வுகளை மதிக்காமல் நாம் ஆடு ,கோழி ,மீன் போன்ற உணவுகளை உண்பதும் தவறு தானே?..ஆடு வதை தடை சட்டம் கொண்டு வந்தால் தமிழ்நாடு இந்துகள் ஏற்று கொள்ளுவார்காளா?.பிராமணர் சைவம்.ஆனால் இங்கு தேவர் அசைவம்.பிராமணர் உணர்வை மதிக்க வேண்டும் என்று இங்கு ஒரு தேவர் ஆடு உண்பதை நிறுத்துவாரா?..இங்கு நாம் பௌத்த புனிதத்தையோ,பிராமண புனிதத்தையோ கடை பிடிக்க முடியுமா?..ஆனால் தலித் மக்களின் உணவு முறைகளில் மட்டும் இங்கு புனிதம் கடை பிடிக்க படுகின்றது.நம்முடைய நாடு எப்படி அடிமை பட்டு போனது என்று இதை போன்ற செயல்களில் தான் தெரிகின்றது.இங்கு வாழும் பெருபான்மையான தலித் மக்களை பகைத்து கொண்டும் ,சிறுபான்மை மக்களை பகைத்து கொண்டும் வாழும் அரசு எப்படி நிலைக்க முடியும்.?..ஒரு நாடு அடிமை படுவதும் ,வளர்ச்சி பாதையில் செல்வதும் அந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்கள் கையில் தான் உள்ளது..மாடு புனிதமா? மனிதன் புனிதமா? என்பதை புரியாமல் நாம் ஒற்றுமை இல்லாமல் தான் இங்கு வாழ்ந்து கொண்டு இருகின்றோம் .நமக்கு ஒரு உணவு பிடிக்க வில்லை என்றால் நாம் சாப்பிடாமல் இருக்கலாம்.என்ற சின்ன லாஜிக் கூட புரியாமல் தான் நாம் வீழ்ந்து கொண்டு இருகின்றோம்….தூங்கறவனை எழுப்பலாம்?ஆனால் நடிக்கிறவனை?….

  5. //Bharatha Nesan நண்பர்களே, இறைவன் கொடுத்த உயிரை வதைக்க யாருக்கும் உரிமை இல்லை, 5 அறிவுள்ள அதற்கும் நமக்கு உள்ள அத்தனை உணர்ச்சிகளும் உள்ளன. அதேபோல், இறைச்சிக்காகவும் எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருந்தால் மண்வளம் செழிக்கும், மனிதவளம் மேம்பாடு அடையும், எல்லா உயிர்களும் இன்புற்று வாழும். ……………………………………………// . பெரிய கருணாமூர்த்தி மாதிரி.. இந்த வேசம் கொஞ்சம் கூட பொருத்தமா இல்லையே. அப்படி கொடுமை படுத்துவதை பற்றி கவலைப்பட்டால் கன்றூக்கு பாயும் பாலில் சிறீது தினமலம் பாப்பன குண்டுக்கும் பாயட்டும் என்றல்லவா வகை செய்திருக்க வேண்டும். விவசாயத்துக்கு மாட்டை கொடுமைப்படுத்தாதே என்றல்லவா சட்டம் போட்டிருக்க வேண்டும். சாப்பிடறவன் மலிவான மாமிசத்துக்கு சாப்பிடுறான், விக்கிறவன் பராமரிக்க பிரயோசனமற்ற வயசான மாட்ட விக்கிறான், செத்து போற மாடு இருந்து சிரமப்படுவதற்கு போய்ச் செரலாம்னு போது. இதுல நெய் கொழுப்பு வடியும் பாப்பாரா ______ எங்க அரிக்குது.

    • மனிதனே உயிரியல் ரீதியாக ஒரு விலங்கு தான். சைவ நரிகளின் காரிய சாமர்த்தியத்திற்க்கு அசைவ மனிதர்கள் என்றும் இரைகளே. உண்ணும் பொருளால் குணம் உருவாகுவதில்லை. உள்ளே எண்ணும் எண்ணத்தால் தான் குணம் வருகிறது. சாட்சி- சு.சாமி

    • ஹிட்லர் சைவம். அவர் லட்சகணக்கான யூதர்களை கொன்றார். அவரை மிருகமாக்கியது அவரது உணவா? இல்லை அவர் வளர்ந்த சூழ்நிலையா?

    • //அசைவ உணவு மனிதனை மிருகமாக்கும்// மனுசனை சாதி பாத்து கேவலமா தீண்டாமை பேணூம் மிருகம் சொல்லது இத. உணவுத் தீண்டாமை கடைபிடிக்கும் விலங்கு சொல்லுது இத. சைவம் அசைவம் எல்லாம் நம்ம வசதிக்கு பேர் வைச்சிகிறதுதான். அடிப்படையில் உள்ள போனா உணவு வெளிய வந்தா ஆயி/வாந்தி அவ்வளவுதான். இவர் லாஜிக் படி சைவம் சாப்பிடுற ஆன, காட்டுருமை, மானு, மயிலு எல்லாம் மனுசங்க.

  6. ஜீவகாருண்யம் பார்க்கும் குண்டாந்தடிகளே, ஏற்கனவே இருக்குற மாடுகளுக்கு சரியா தீனியா கொடுக்க முடியல,தண்ணி குடுக்க முடியல. எனது அக்கா வீட்டில்(சங்ககிரி) போன ஆண்டு அடிச்ச வெயிலால் கெணத்துல தண்ணி வத்தி போச்சி ஆழ்த்துளைக் கிணறு கூட வத்தி போச்சி.இருக்குற தென்னை மரம் எல்லாம் செத்து பொச்சு. பக்கத்து ஊட்டுக்காரன்கிட்ட தண்ணிய குடுடான்னு(குடுங்கன்னு தான் கேட்டோம்) கேட்டா உனக்கு குடுத்துட்ட நான் என்ன பன்னுவேன்கிறான்.நியாயமான பேச்சு. அப்புறம் என்ன பண்ணுவாங்க. ரெண்டு சிந்துமாட்ட வித்துபுட்டாங்க. ஒரேயொரு எருமைமாட்ட மட்டும் வெச்சுகிட்டாங்க.அந்த சிந்து மாடுகள்(இந்துக்களின் தெய்வம்) என்ன ஆச்சுன்னு அவிங்க கண்டுகிட்ட மாதிரி தெரியல.

    பேசாம இந்த ஜீவகாருண்யம் பேசுறவங்க உங்க செல்பேசி எண்ணை குடுங்க அல்லது நல்ல தெகிரியமான குண்டாந்தடிகள் நேர்ல வாங்க கூட்டிகிட்டு போறேன்.. அவிங்கள உங்ககிட்ட பேச சொல்றேன். நல்ல படிச்ச அறிவாளியா இருக்கீங்க. ஏதாவது நல்ல ஐடியா குடுங்க.அதுக்கு முன்னாடி நல்ல விசாரிச்சுகிங்க சங்ககிரி செழிப்பான இடமா இல்லை காஞ்சு போன இடமான்னு.

    அப்புறம் இந்த கெடப்பாரைகளுக்கு அவர்களுடைய தெய்வத்தை பாதுகாக்க என்னால் முடிந்த சில ஆலோசனைகள்,

    1. ஒவ்வொரு மாட்டின் வயிற்றில் GPRS சிஸ்டம் பொறுத்த ஏற்பாடு செய்யலாம். இதனால் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நாட்டின் வளர்ச்சி பெருகும்.

    2. ஏதாவது சிஸ்டம் சரியாக வேலை செய்யவில்லையெனில் அல்லது சாணி போடும் பொது வெளியே வந்து விட்டால் சம்மந்தப்பட்ட மாட்டுகாரர்களுக்கு தகுந்த தண்டனைகளை கொடுக்கலாம்.நமது நாட்டின் புனிதமான தெய்வத்தை பராமரிக்காமல் வேறு என்ன வேலை நமக்கு?

    3.மாட்டிற்கு நல்ல டாடா கோக்கு கம்பெனி தயாரிக்கும் வாட்டரை விவசாயிகள் கொடுக்க வேண்டும்.இதன் மூலம் ஆங்காங்கே புதிய கம்பனிகள் திறக்கப்படும்.வேலைவாய்ப்புகள் பெருகும்.நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும்.

    4.நாட்டின் புனித நீராக பசுவின் ஒண்ணுக்கை அறிவிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மாட்டு ஒண்ணுக்கை தினமும் கண்டிப்பாக ஒவ்வொருவரும் குடிக்க வேண்டும். அதை கண்காணிக்க கேமரா செட்டுகளை வீடு தோறும் பொறுத்த வேண்டும். இதை ஆவின் பால் போல பாக்கெட் செய்து சப்ளை செய்யலாம்.இதனால் வேலை வாய்ப்பு பெருகும்.நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். அப்படி மீறினால் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். வெள்ளைகார துறைகளுக்கு மட்டும் விலக்கு.

    5. மாட்டின் சாணியை அனைத்து வீடுகளிலும் பூச வேண்டும். நடுத்தர வர்க்கத்தினர் டைல்சு ஒட்டியிருகிரேனே எப்படி பூசுவது என்று கேட்டால், நமது கரசேவகர்களை விட்டு அதை பெயர்த்து எடுக்க சொல்லலாம். மீறினால் மனுவில் சொன்னபடி தண்டனை வழங்கலாம்.

    6.எல்லோரும் மாட்டை தொட்டு பராமரிக்க முடியுமா.எல்லோரும் கருவறைக்குள் நுழையத்தான் முடியுமா.இதற்க்கு நமது இந்து தர்மந்தான் இடம் குடுக்குமா. தலித் மக்கள் 1௦ மீட்டர் தள்ளி நின்று தான் பசுவையே பார்க்க வேண்டும். கிட்ட வுட்டா தான வெட்டி சாப்புடுவ.

    7.ஹிந்துக்களை தவிர பசுவை யாரும் தொடக் கூடாது. பாய்கள் தொட்டால் அவர்களை பன்றிகரியை சாப்பிட சொல்லி தண்டிக்கலாம்.

    இதெல்லாம் உள்நாட்டு சமாசாரந்தான். வெளிநாடுகளுக்கு கூட ஆலோசனைகளை சொல்லலாம். உண்மையில் இதிலுள்ள நலன்களை பார்த்து அனைத்து நாடுகளும் மெல்ல மெல்ல இந்து தேசங்களாக மாறும்.கடைசியில் இராம பூமியை விட பரந்த பூமியை நாம் படைக்கலாம்.

    நண்பர்களே இந்த பாரத புண்ணிய பூமியில் பிறந்த ஒரே காரணத்திற்காக என்னால முடிஞ்ச ஆலோசனைகளை அள்ளி விட்டு இருக்கிறேன். நண்பர்கள் அவர்களால் முடிந்த அளவிற்கு ஆலோசனைகளை அள்ளி விடலாம்.

    நன்றி.

  7. எங்க அப்படியே கோழிக்கு ஜீவகாருண்யம் பாத்து K.F.C-ய தடை பண்ணுங்க பாப்போம்

  8. நீங்கள் ஏன் முஸ்லிம் நாடுகள் மற்றும் முஸ்லிம் மக்கள் பன்றி இறைச்சி உண்பதை ஆதரித்து பதிவு போட கூடாது?? அதுவும் மிக சிறந்த சுவையுள்ள உணவு. பன்றி உன்ணுங்கள். நலமாக வாழுங்கள். பாவம் அந்த நாட்டு மக்கள் பன்றியின் சுவை அறியாமலே வாழ்கிறார்கள். அவர்களுக்கு அந்த சுவையை உணர்த்த போராட்டம் நடத்துங்கள்.

    • இந்தோனேசியா, மலேசியா போன்ற முஸ்லீம் மக்கள் பேரும்பான்மையாக வாழும் நாட்டிலிருந்து தான் சுற்றுபுற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது; பிடித்தவன் சாபிட்டு போறானே உமக்கு என்ன எரிச்சல்.

      • Mohamed நான் ஏன் எரிச்சல்ப்பட போகிறேன்???? உங்களுக்கு இந்தியாவில் மாடு தடை பண்ணுவது எவ்வாறு பெரிய விடயாமோ அதேபோல் எனக்கு சவூதி அரேபியாவில் பன்றி தின்பதும் பெரிய விடாயமாகும்!!!! பன்றி உண்பீர் நலமாக வாழ்வீர்

  9. பலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்!

    ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார்.

    அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து “உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?” என்று கேட்டார் விவேகானந்தர்.

    “நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்” என்று பதில் சொன்னார்.

    “மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் – இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது?” என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

    “பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!”

    “பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக்கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே” என்று மடக்கினார் விவேகானந்தர்.

    “ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே” என்றார் பிரச்சாரகர்.

    அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் “ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்?” என்று சொன்னார்.

    “விடுதலை” தலையங்கம் 21-1-2012

  10. இந்தியாவிலிருந்து மாட்டுக் கறி ஏற்றுமதி பண்ணும் முன்னணி நிறுவனங்களின் பெயர் பட்டியலைப் பார்ப்போம்.

    1) Al-Kabeer Exports Pvt. Ltd.
    Its owner name: Mr. Shatish &Mr. Atul Sabharwal
    Add: 92, Jolly makers, Chembur Mumbai 400021

    2) Arabian Exports Pvt.Ltd.
    Owner’s name: Mr.Sunil Kapoor
    Add: Russian Mansions, Overseas, Mumbai 400001

    3) M.K.R Frozen Food Exports Pvt. Ltd.
    Owner’s name Mr. Madan Abott.
    Add : MG road, Janpath, New Delhi 110001

    4) P.M.L Industries Pvt. Ltd.
    Owner’s name: Mr. A.S Bindra
    Add : S.C.O 62-63 Sector -34-A, Chandigarh 160022

    வளைகுடா வியாபாரத்தை கணக்கில் கொண்டு அராபிய பெயர்களை நரித்தனமாக இந்த மேல் சாதியினர் தங்கள் கம்பெனிகளுக்கு வைத்து காசுபார்க்கிறார்களே.
    இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இன்னும் மலிவான விலையில், போட்டியோ சிரமமோ இன்றி அவர்களால் மாடுகளை கொள்முதல் செய்ய இயலும்.

    சரிதானா?

    1967 காலகட்டத்தில், பசுவதையை முழுமையாக அமல்படுத்தலாமா என்பது குறித்து முடிவு செய்ய, ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கர், வெண்மைப் புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பூரி சங்கராச்சாரியார் ஆகியோர் உறுப்பினர்களை கொண்ட ஒரு கமிட்டி மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

    பார்கவா எனும் புகழ்பெற்ற உயிரியல் விஞ்ஞானியிடம் கோல்வால்க்கர், “எப்படி மாமிசமும், பாலும் உற்பத்தி ஆகின்றன?” என்று கேட்க, “இரண்டும் ஒரே இடத்தில் இருந்துதான், ஒரே முறையிலேயே உற்பத்தி ஆகின்றன.” என்று பார்கவா சொல்ல,

    “பிறகு மாமிசத்தைப் புசிக்கிற நீங்கள் ஏன் பாலை மட்டும் சாப்பிடக்கூடாது?” என்று கோல்வால்க்கர் கேட்க,

    பார்கவா சூடு குறையாமல், “பாலை மட்டும் அருந்தும் நீங்கள் ஏன் மாமிசம் சாப்பிடக்கூடாது?” என்று திருப்பிக்கேட்டார்.

    பசுக்களைக் கொல்லும் வயதை இருபத்தி ஐந்து என்று சில அரசுகள் ஏற்றி சட்டமியற்றிய பொழுது, பதினைந்து வயதோடு ஒரு மாட்டின் பயன்பாடு நின்றுவிடும் பொழுது இப்படிச் சட்டம் போடுவது முழுத்தடைக்குச் சமமானது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.

    ஆனால், மிர்சாபூர் மோட்டி குரேஷி கசாப் வழக்கில், (2005) நவீன தொழில்நுட்பம் பசுக்களின் வயதை அதிகப்படுத்தி விட்டது என்றும், பசு பால் கொடுப்பது நின்று போனாலும் அதன் சாணம், கோமியம் கோஹினூர் வைரத்தைப் போல விலை மதிக்க முடியாதது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லகோட்டி அடங்கிய பெஞ்ச் கருத்து தெரிவித்தது.

    பசு என்பது புனிதமான அம்சமாக இந்துக்களால் பார்க்கப்படுகிறது என்பது இதற்கு வைக்கப்படுகிற வாதம். ரிக் வேதத்தில் பசுவை புனிதமாகக் கருத வேண்டும் என்று சொல்லும் பாடல்கள் உண்டு. அதே சமயம் வேதகாலத்தில் பசு, எருமைகளைக் கூட்டம் கூட்டமாகப் பலியிடுவதும், உண்பதும் இயல்பாக நடந்த ஒன்று.

    அம்பேத்கரின் வரிகளில்:

    “ரிக்வேத கால ஆரியர்கள் பசுவை உணவுக்காகக் கொன்றார்கள் என்பதும், எக்கச் சக்க பீப் உண்டார்கள் என்பதும் ரிக் வேதத்திலேயே தெளிவாக இருக்கிறது.

    ரிக் வேதத்தில் இந்திரன் சொல்கிறார், ‘அவர்கள் பதினைந்து கூட்டல் இருபது காளைகளை உண்ண சமைக்கிறார்கள்’ (X. 86.14). ரிக் வேதம் (X.91.14) அக்னிக்குக் குதிரைகள், எருமைகள், காளைகள், பசுக்கள் பலியிடப்பட்டன என்று சொல்கிறது.

    சதப்த பிராமணத்தில் வரும் பாடலே பசுவை புனிதமாக ரிக் வேதத்தில் குறித்தது. ஆனாலும், பலரும் பீப் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. ஆரியர்களின் மகாரிஷியான யக்ஞவல்கியரும் பீப் சாப்பிடுபவராக இருந்தபடியால், அவரிடம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபொழுது, ” நான் அம்மாமிசத்தை உண்கிற ஒருவனாக இருக்கிறேன். அதுவும் இளசாக இருந்தால் கட்டாயம் உண்பேன்.” என்கிறார்.

    சரி! அம்பேத்கர்தான் பொய் சொல்கிறார் என்று ஒரு போடு போடலாம் என்று பார்த்தால், விவேகானந்தரும் கவிழ்த்து விட்டார்.

    அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்: “பழைய சடங்குகளின்படி பீப் சாப்பிடாத இந்து நல்ல இந்துவே கிடையாது என்று கருதப்பட்டது. சமயங்களில் அவன் ஒரு பெரிய மாட்டையே பலி கொடுத்து அதைச் சாப்பிட வேண்டி இருந்தது.” என்கிறார்.

    அக்பர், 1586-ல் ஒரு பிர்மான் போட்டு பசுவதையைத் தடை செய்திருக்கிறார். ஹைதர் அலி ஆட்சியிலும் பசுவதைத் தடை செய்யப்பட்டே இருந்திருக்கிறது. பசுவைக்கொன்றால் கைகளை வெட்டுகிற அளவுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 1857 புரட்சியின் பொழுது இந்துக்களின் நம்பிக்கைகளை மதித்துப் பசுவதையைத் தடை செய்வதாகப் பகதூர் ஷா அறிவித்தார்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஆரிய சமாஜ இயக்கம், பசுவதைக்கு எதிராக குரலெழுப்பி, அதனையே முக்கிய அரசியலாக மாற்றியது.

    காந்தி எந்த வகையிலும் பசுவதையைச் சட்ட ரீதியாகவோ, கட்டாயத்தின் பெயரிலயோ தடை செய்வதை எதிர்த்தார்.

    சட்ட ரீதியான தடை இன்னமும் பசுவதையை அதிகப்படுத்தவே செய்யும் என்று அவர் கருதினார்.

  11. பார்ப்பனர்களால்,உயர் சாதியினரால் வழி நடத்தபட்டாலும் BJP RSS நடத்தும் கலவரங்களில் FIELDWORKER நீங்க சொல்ற மாட்டுக்கறி உண்ணும் தாழ்த்தப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட
    ஏழைகள் தானே.ஒட்டு போட்ட பாவத்திற்கு கொஞ்ச??? நாள்
    அனுபவிக்கட்டும்.

  12. வாசகர்களுக்கு,

    எருமை பசு ஆடு பன்றி கழுதை குதிரை ஒட்டகம் லாமா போன்ற கால்நடைகள் நமது துணைவர்கள். பால் இறைச்சி சாணம் தோல் கம்பளி போன்று பல வழிகளில் அவற்றால் நாம் பயனடைகிறோம்.

    நமது உணவு உற்பத்தியில் சாணம் மற்றும் அது சார்ந்த எருவின் பங்கு முதன்மையானது. இன்று விவசாயத்தை ரசாயன உரங்களற்ற இயற்கையான ஒன்றாக மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எருவின் பயனை முடிந்த வரை அதிகரிப்பது நலம். இதற்கு கால்நடைகள் நீண்ட காலத்திற்கு காப்பாற்றப்படுவது நல்லது. எருமை பசு பன்றி போன்ற கால்நடைகள் நமது உணவுக் கழிவுகளை (கஞ்சி, காய்கணி கழிவுகள் முதலியவை) உண்டு நமக்கு சாணமாக தரக்கூடியவை.

    நகரங்களின் உணவுக் கழிவுகள் வீதியின் கால்வாய்களில் தான் கொட்டப்படுகிறது. (இதன் தீங்குகளைப் பற்றி தனியாக விளக்க வேண்டும்.) பதிலாக ஒவ்வொரு வீதியிலும், பகுதியிலும் கால்நடை வளர்ப்பு மையங்கள் நடத்தப்படவேண்டும். இறைச்சி உணவுக்கழிவுகள் பன்றிகளுக்கும் மற்றவை எருமை பசு போன்றவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் காலி இடங்கள் இதற்காகவும் கால்நடைகளுக்கு தீவனம் வளர்க்கவும் பயன்படுத்தப்படவேண்டும்.

    இந்த மையங்களில் வளர்க்கப்படும் ஆண் பெண் கால்நடைகள் அதன் கடைசி மூச்சு வரை காப்பாற்ற படுவது நலம். (தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக சில மிகவும் வயதான விலங்குகளை அதன் கடைசி மூச்சிற்கு முன்னதாகக்கூட கசாப்பு செய்து விடலாம்) இதனால் நமக்கு சாணம் என்ற உயரிய எருவின் தேவை தொடர்ந்து பூர்த்தி செய்யப்படும். இந்த சாணம் வயலில் பயன்படுவதற்கு முன்பு எரிவாயு தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த எரிவாயு அப்பகுதியின் பொது உணவகத்தை நடத்த உதவும்.

    இந்த மையங்களில் இறந்த மாடுகளின் இறைச்சியை விருப்பமுள்ளவர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஜீவகாருண்யத்தினால் இறைச்சியை உண்ணாமல் இருப்பவர்கள் இந்த இறைச்சியை ஏற்றுக் கொள்வது நலம். மற்றவர்களும் இந்த ஜீவகாருண்யத்தை ஏற்றுக்கொள்வதை இது ஏதுவாக்கும். இதன் மூலம் இந்த விலங்குகளின் இனிய வாழ்க்கையை உத்திரவாதப்படுத்த முடியும். அதுவும் இதற்கென்று எந்த சட்டங்களும் தேவையில்லாமலேயே.

    நாம் இயற்கையில் அதாவது புதர் மறைவில் மலம் கழித்ததை நிறுத்தியதிலிருந்து நமது கழிவுகளும் மறுசுழற்சியில்லாமல் நமது வீடுகளுக்கடியில் மாட்டிக்கொண்டிருக்கிறது. இது கால்நடைகளுக்கு பச்சைத் தீவனம் வளர்க்க பயன்படுத்தவேண்டும். இதன் மூலம் கால்நடைகளின் தீவனத்தை உறுதிப்படுத்த முடியும்.

    இது போன்ற பாரிய மாற்றங்கள் பொதுநல பொதுவுடமை சமூகத்தில் தான் சாத்தியம் என்பதும் புரிந்து கொள்வது கடினமானதல்ல.

    இந்த பொது மையங்களுக்கும் கூடுதலாக எருமை பசு பன்றிகள் அவற்றிற்கு நீண்ட ஆயுட்காலம் அளிக்கும் விதத்தில் வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்படலாம். மற்ற விலங்குகள் அதாவது ஆடுகள் கோழிகள் போன்றவை பொதுவிலோ, தனியாகவோ முடிந்தவரை இயற்கையாக வளர்க்கப்பட்டு கிட்டத்தட்ட இப்போது உள்ளதைப் போலவே பயன்படுத்தப்படலாம்.

    மேலேயுள்ள ஒன்றுமே புதியதில்லை. எல்லாமே இயற்கையில் முன்னர் இருந்த சமநிலைதான். சிந்திப்போம். செயல்படுவோம். நம்மையும் நம் துணைவர்களையும் காத்துக்கொள்வோம்.

Leave a Reply to maha பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க