privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நியூட்ரினோவுக்கு ஆதரவாக போலிசு - போலிகள் கூட்டணி

நியூட்ரினோவுக்கு ஆதரவாக போலிசு – போலிகள் கூட்டணி

-

நியுட்ரினோ திட்டத்தை விரட்டியடிப்போம்பொட்டிப்புரம் கிராம சுற்றுவட்டாரங்களில் மின்னும் நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு சுவரெழுத்துக்கள் இவை.

பொட்டிப்புரத்தை ‘போர்க்களமாக்குவோம்’ என்ற வார்த்தை ‘தீவிரவாதமாக ‘ இருக்குதாம்! இதை ஒழிப்பதற்காக எழுத்துகளை அழிக்கிறார்களாம்! அதுவும் எப்படி?

இப்படத்திலுள்ள வீட்டு உரிமையாளரிடம் சென்று, “உனக்கு பட்டா, பத்திரம் இருக்கிறதா?எடு பார்ப்போம்?” என்று மிரட்டியுள்ளது போலீசு.!

பயந்துபோன அந்த அப்பாவி விவசாயியிடம் “ஒழுங்காக மேலே உள்ள எழுத்துகளை அழித்துவிடு. இல்லையென்றால் வீட்டை காலிபண்ண வேண்டியதிருக்கும்” என்று போலீசு மிரட்டியுள்ளது.

சிரித்த முகத்துடன் நம்மை எழுத அனுமதித்த விவசாயி பீதியுடன் அதை அழித்திருக்கிறார். இப்படி மக்களை பீதியூட்டிதான் ‘தீவிரவாத’த்தை ஒழித்திருக்கிறது போலீசு!

நியுட்ரினோ திட்டத்தை விரட்டியடிப்போம்
விவிமு சுவரெழுத்து அழிக்கப்பட்ட சுவர்

ஆனால் நியுட்ரினோ பற்றி அந்த விவசாயிக்கு இருக்கும் அச்சத்தை ஒழிக்க முடியாது என்ற உண்மை, அந்த ‘அறிவாளி’ போலீசுக்கு தெரியாது!

மக்களிடம் உள்ள அந்த மனஉணர்வு தான் போராடும் எங்களின் பலம்!

வீடுவீடாக சென்று பிரசுரம் கொடுத்து கிராம மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் எங்கள் பணி தொடர்கிறது.

சமீபத்தில் போடி நகரில் ‘நியூட்ரினோ எதிர்ப்பு கூட்டியக்கம்’ தொடங்கியிருப்பது இதற்கு மேலும் வலுவூட்டியிருக்கிறது

theni-anti-neutrino-campaign-1
நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது பயங்கரவாதமென்று சுவரெழுத்தை அழிக்கிறது போலீசு!

“நியூட்ரினோ திட்டத்தை விரட்டியடிப்போம் !” என்ற முழக்கத்துடன் விவசாயிகள் விடுதலை முன்னணியின் சுவரெழுத்து பிரச்சாரம் இவ்வட்டார கிராமங்கள் முழுவதும் நடந்து வருகிறது. தோழர்கள் கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று பிரசுரம் கொடுத்து ஆதரவு திரட்டி வருகின்றனர். போகும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவு பெருகிவருகிறது.

இவ்வளவு நடந்துவிட்டால்தான் நமது போலீசுக்கு மூக்கு வியர்த்துவிடுமே. 10/03/2015 அன்று இராசிங்காபுரம் முதல் பொட்டிபுரம் வரை எழுதிய சுவரெழுத்துக்களை அந்தந்த வீட்டு உரிமையாளர்களை கூப்பிட்டு மிரட்டி அவர்களை வைத்தே அழிக்க வைத்துள்ளது போடி நகர போலிசு.

நியுட்ரினோ திட்டத்தை விரட்டியடிப்போம்இனறுவரை தமிழக அரசின் சுற்று சூழல்துறையின் அனுமதி பெறாமலே நடந்துவரும் நியூட்ரினோ திட்டத்தை பாதுகாக்கத்தான் போடிநகர் போலிசு பாடுபட்டு வருகிறது.

இன்னொரு பக்கம் போடி நகரில் அனைத்து வர்த்தகர்கள் சங்கம் மற்றும் சில அமைப்புகள் இணைந்து நாளை நியூட்ரினோவுக்கு எதிராக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையறிந்த சி.பி.ஐ (எம்) கட்சியினர் போடிநகர் முழுவதும் கடைகடையாக சென்று அறிவியல் இயக்கம் தயாரித்த அய்.என்.ஓ (INO) விளக்க புத்தகத்தை இலவசமாக கொடுத்து ஆதரவு திரட்டியுள்ளனர்.

அதாவது, போலீசு விட்ட வேலையை ‘தோழர்கள்’ செய்துள்ளனர்.

போலிகளும் -போலீசும் கூட்டு! நல்ல கூட்டணிதான். திரு வெங்கடேஸ்வரன் இவர்களின் கடந்த கால ‘தோழர்’ என்பதால் அந்த தோழமை உணர்வோடு ஐ.என்.ஓ.-வின் பிரச்சார காண்ட்ராக்ட் வேலையை இவர்களுக்கு வாங்கி கொடுத்து இருப்பாரோ என்று சந்தேகம் நமக்கு வருகிறது..

காண்ட்ராக்ட் என்றால் கொட்டேசன் இருக்கும்.!திட்ட மதிப்பீடும் இருக்கும்.! ஏலமும் நடந்திருக்கும்! போட்டியாளர்களை வீழ்த்த உள்குத்து வேலைகளும் நடந்திருக்கும்.

இதிலெல்லாம் நம் ‘தோழர்கள்’ அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது நமக்கும் தெரியும். நாரதர்களின் வேலை தொடரட்டும். …அப்பதான நம்ம வேலைக்கு ஒரு வீரியம் இருக்கும்!

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கம்பம்

  1. 1. Do you have any idea what neutrinos are?
    2. Do you have any knowledge whether neutrinos are radioactive hazards?
    3. What hazards do neutrino labs cause in the environment?
    Idhukkellaam badhil sollitu edhirppu kodi pidinga vinavu..

  2. மனிதன்,

    //இனறுவரை தமிழக அரசின் சுற்று சூழல்துறையின் அனுமதி பெறாமலே நடந்துவரும் நியூட்ரினோ திட்டத்தை//

    வினவிற்க்கு தான் ஒன்னும் தெரியவில்லை. தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். தமிழக அரசின் சுற்று சூழல்துறையின் அனுமதிப் பெறவில்லையாமாமே. அனுமதி வாங்காமலே அப்படி என்ன அறிவியல் ஆராய்ச்சி பண்றாங்க.

    • நியுற்றிநோ திட்டத்துக்கு எதிராக வைகோ தொடுத்த வழக்கில் தமிழகஅரசு “மாநில மாசுகட்டுப்பாட்டு துறையின் அனுமதி கேட்டு இன்றுவரை விண்ணப்பிக்கவே இல்லை” என்று பதில் அளித்துள்ளது.ஆங்கிலத்தில் தொடங்கி,பிறகு தமிழிலும் கேள்விகேட்கும் அளவு ஆற்றலுள்ள உங்களுக்கு இது தெரியாமல் போய்விட்டதே மனிதன்! நியுற்றினோ தெரியவில்லையா என்று நீங்கள் கேட்கிறீர்கள்.அவர்களோ அணு ஆராய்ச்சி, அணுக்கழிவு மேலாண்மை என்று அனுமதி வாங்கி இருக்கிறார்கள்.என்ன செய்யலாம் சொல்லுங்கள்?

Leave a Reply to manidhan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க