privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழக தொழிலாளிகளைக் கொன்ற ஆந்திர அரசு பயங்கரவாதிகள்

தமிழக தொழிலாளிகளைக் கொன்ற ஆந்திர அரசு பயங்கரவாதிகள்

-

தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர போலிசால் போலி என்கவுன்டரில் படுகொலை !

செம்மரம் வெட்டும் தொழிலாளிகள் கொலை
இறந்த உடல்கள் ஒவ்வொன்றின் அருகேயும் காய்ந்த செம்மர கட்டைகள் எங்கிருந்தோ கொண்டுவந்து போடப்பட்டுள்ளன.

ந்திர மாநில திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித்தொழிலாளர்கள் ஆந்திர போலிசால் கொடுரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு அப்பட்டமான சட்டவிரோத போலி மோதல் படுகொலையாகும். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆந்திர அதிகார வர்கத்தின் இந்தக் காட்டுமிராண்டிச்செயலை வன்மையாக கண்டிக்கிறது. இச்செயலில் ஈடுபட்ட காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். கொல்லப்பட்ட கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

“ஆந்திர மாநிலம் ஸ்ரீவாரிமெட்டு, சேஷாசலம் வனப்பகுதியில் 07-04-2015 அன்று 100-க்கும் மேற்பட்டவர்கள் செம்மரக்கட்டைகளை வெட்டினார்கள். அவர்களை கைது செய்ய முயன்ற ஆந்திர சிறப்புப்படை போலீசார் மீது கற்களை வீசி, தாக்குதல் நடத்தினார்கள். தற்காப்புக்காகச் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர். தப்பி ஓடியவர்களைத் தேடிவருகிறோம்” என ஆந்திர போலீசார் கூறுகின்றனர்.

கொல்லப்பட்ட அனைவரும் தமிழர்கள். இவர்களில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேட்டகிரி, கண்ணமங்கலம், நந்தியம்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 8 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

ஆந்திர போலீசாரின் மேற்கண்ட செயல் திட்டமிட்ட படுகொலை. சம்பவத்தில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் அனைவர் மீதும் கொலைவழக்குப் பதிவு செய்வதுடன், அனைவரும் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். உயர் அதிகாரிகள் உத்திரவு இன்றி இது நடந்திருக்க முடியாது.

ஆந்திரா என்கவுண்டர் போலீஸ்
படம் : ஓவியர் முகிலன்

இது போலி மோதல் படுகொலை தான். திட்டமிட்டு இந்தப் படுகொலை நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் தடயங்களும் உள்ளன.

  • சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரது மார்பிலும் குண்டு துளைக்கப்பட்டுள்ளது.
  • இறந்த உடல்கள் அனைத்தும் மல்லாந்த நிலையில் உள்ளன.
  • சம்பவ இடத்தில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு செம்மரங்கள் இல்லை.
  • இறந்த உடல்கள் ஒவ்வொன்றின் அருகேயும் காய்ந்த செம்மரக் கட்டைகள் எங்கிருந்தோ கொண்டுவந்து போடப்பட்டுள்ளன.
  • கொல்லப்பட்டவர்களின் காலணிகள் அருகிலேயே கிடக்கின்றன. தப்பி ஓடிய 80-க்கும் மேற்பட்டவர்களின் செருப்புகள் எங்கே?
  • ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புபடையினர் 1500 அடி வரை சுடக் கூடிய எஸ்.எல்.ஆர். ரைபிள் பயன்படுத்தி உள்ளனர். கல் எறிபவர்களால் அவ்வளவு தூரம் வீச முடியாது.

சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் 06-04-2015 திங்கள்கிழமை மதியமே ஆந்திர போலிசாரால் கைது செய்யப்பட்டவர்கள் என்று தப்பி வந்த சேகர் என்ற தொழிலாளி கூறியுள்ளார்.

ஆந்திரா என்கவுண்டர் போலீஸ்
படம் : ஓவியர் முகிலன்

செம்மரக்கட்டைகளைக் கடத்துவது யார்? வாழ வழியின்றி வறுமையில் வாடும் கூலித் தொழிலாளிகளை பண ஆசைகாட்டி அழைத்துச் செய்லும் புரோக்கர்கள் யார்? சென்னைத் துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஜப்பான் என செம்மரக்கட்டைகள் எப்படி செல்கிறது?. எத்தைனை அரசியல்வாதிகள், எத்தனை அதிகாரிகள், எத்தனை கடத்தல் மாஃபியாக்கள் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என அனைத்து விபரங்களும் மாநில, மத்திய அரசுகளுக்கு நன்கு தெரியும்.

குடிமக்களைப் பாதுகாக்க வக்கற்ற அரசாங்கம் வயிற்றுப் பிழைப்புக்காக மரம் வெட்டச் சென்ற கூலித் தொழிலாளிகளைச் சுட்டு படுகொலை செய்தது கோழைத்தனமானது; குரூரமானது.

அனைவரும் நாடு முழுவதும், எல்லை கடந்து அரச பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும்.

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

702/5, ஜங்சன்ரோடு, விருத்தாசலம், கடலூர்மாவட்டம்.
கைபேசி 9443260164
நாள் 8-4-15

20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை!
ஆந்திர அரசின் பச்சைப் படுகொலை!!

செம்மரக்கடத்தல் போட்டியில் சந்திரபாபு நாயுடு கும்பல் நடத்திய நரவேட்டை

மத்திய – மாநில அரசுகளே

  • டி.ஐ.ஜி காந்தாராவ் உள்ளிட்ட கொலைகார போலீசை கொலை வழக்கில் கைது செய்!
  • நடுநிலையாளர்கள், ஜனநாயக சக்திகளைக் கொண்டு விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டி!

உழைக்கும் மக்களே!

  • பெருகிவரும் அரசின் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!
  • இயற்கை வளங்களை பாதுகாக்க மக்கள் அதிகார மன்றங்களை நிறுவுவோம்

இவண்

விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

  1. மக்களைக்கொல்லும் மத்திய மாநில அரசுகள் மாவோயிஸ்டுகளைக் குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை எனபதயே இந்த சம்பவம் அநீரூபிக்கிறது அரசின் துப்பாக்கிகளே ஆளும் வர்க்கத்தை நோக்கி திரும்பும் காலம் வெகு விரைவில் வரும்…

  2. சென்னை வேளச்சேரியில் கூட வடமாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழக போலீசார் இப்படித்தான் சுட்டுகொன்றனர். அப்போது வடமாநிலதொழிலாளர்களுக்கு எதிராக பேசிய தமிழ் இனவாதிகள் இந்த பிரச்சனையை கையில் எடுத்து குளிர்காய நினைக்கிறார்கள்.

  3. ஆந்திரா அரசு செய்தது சரியான வேலை தான்…. இது பல ஆண்டுகளாக நடந்துவந்துள்ள கடத்தல். இன்று இவர்கள் கடத்தாமல் இருக்கலாம்… ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா காட்டு பகுதிக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன??? இது போல ஒரு இருபது பேரை சுட்டால் தான் மற்றவனுக்கும் புத்தி வரும்… ஆந்திராவில் ஏற்கனவே நக்சலைட் பிரச்சனை, இது போன்ற ஆட்களை வளர விட்டால் அது அந்த சிறிய மாநில வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்…. வினவு அறிவுக்கே இவ்வளவு அலசினா… போலீஸ்காரன் எவ்வளவு அலசி சுட்டு இருப்பான்… சும்மா கப்பி தனமா போராடாம, போயீ வேலை மயிர பாரு…. அரசாங்கத்த ஆட்ட எவனாலும் முடியாது..

    • அவர்கள் திருடவேயில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். திருடினாச் சுடுவேன்னு தெனாவெட்டா சொல்றியே… இந்தோ இன்னிக்கு 7000 கோடி ரூபாயை லவட்டிக்கிட்டான்னு சத்யம் ராஜூவுக்கு கோர்ட் தண்டனை குடுக்குதாம். அவனைச் சுட இந்த டுபாக்கூர் போலீஸ் ரெடியா?! மாட்டீங்களே !! அப்போ மட்டும் உங்க நீதி நேர்மை வெங்காயமெல்லாம் எங்கே போகுது ? மரம் வெட்டி பல நூறு கோடி சம்பாதிக்கிறவன்கிட்டே தலையை சொறிஞ்சு வாலாட்டிகிட்டே அவன் போடுற எச்சிப் பணத்துக்கு அலையுற போலீஸ் நாயுக்கு சப்போரட் பண்ற, மத்தவங்க உயிரை மயிரா நினைக்கிற இந்த வெட்டி ‘இந்தியனை’யும் சேத்து சுடனும்.

    • அன்புள்ள இந்தியனுக்கு,

      உங்களை செருப்பால் அடித்தால், உங்களை போன்ற கருத்து எழுததுபவர்களுக்கு புத்தி வரும் என்று, ஆந்திர அரசு போல், வினவு வாசகர் யாராவது செய்தால் என்ன ஆகும். I limit the options for reactions.

      • மாதவ்…
        “இந்தியனை”ப் பற்றி கவனம் கொள்ளவேண்டாம்…
        இந்தியன் என்றாலே ஏர்வாடி கேசுகள்!

      • மாதவ்,

        கருத்துக்களை நாகரிகமாக தெரிவிக்கவும்.
        உஙகள் கோவம் புரிகிரது.
        ஆனாலும் இது தவறு.

  4. கூலித் தொழிலாளருக்குக் காட்டில் அந்த நேரத்தில் கூட்டமாக என்ன வேலை? காடடை அழிப்பதும் மரங்களை வெட்டிக் கடத்துவதும் வெறும் திருட்டா ? குற்றவாளிகளைக் காப்பாற்ற இயக்கங்கள் , மனித உரிமை என்ற போர்வை. கொலைகாரர், கொள்ளையர்,இயற்கை வளங்களைத் திருடுவோர் பின்னால் செல்லும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும், இலஞ்சத்தில் திளைக்கும் அரசு அலுவலர் , அவர்களைக் காக்க ஊழியர் சங்கங்கள், வாக்குகளைத் தவிர எதையுமே கருதாத கட்டசிகள். தமிழநாட்டின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. மானமற்ற தமிழனாய் தலைகுனிந்து சிறுமைப் படுவோம்.

    • அடுத்த வேளை சோத்து வழியில்லாம மரம் வெட்டப் போறான். அவனைக் கொன்னுட்டு என்ன பெரிய தலைகுனிவு நாடகம் உங்களுக்கு!! கூலிப்படையை வைத்து ஆளுக்கு 10 ஆயிரம் கொடுத்து ஒருத்தரைக் கொல்றாங்கன்னு வையுங்க. சட்டம் கூலிப்படை ஆட்களை மட்டும் பிடித்து தண்டித்துவிட்டு அக்கடான்னு நிக்காது. அவங்களை கொல்லச் சொல்லி ஏவி விட்டவனைத் தேடிப்பிடித்து தண்டிக்கும். உங்களுக்கு என்னாடான்னா வயித்துப் பிழைப்புக்கு அன்னிக்கு காசு வேணும்னு மரம் வெட்டினவன்லாம் பாவியாத் தெரியுது. அதுக்கெல்லாம் அவங்களை கொல்வீங்களா.. ஆந்திராவில செம்மரம் வெட்டியே பலநூறு கோடிகள் சம்பாதிச்ச சில பேர்க்குத்தான் இவங்க எல்லாம் மரம் வெட்டினாங்க. அவங்களையெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாது. ஏன் இவங்களை சுட்டுக் கொன்ன இதே போலீஸூக்கே நல்லா தெரியும் அந்த மரம் வெட்டி கோடீஸ்வரங்களைப் பத்தி. ஆனா பாவம் இந்த மாதிரி ஆளுங்க என்னமோ தமிழ்நாட்டுல மட்டும் இருக்கிற மாதிரி நீங்க பேசுறீங்க.

    • பாசு, அப்படி பார்த்தா, நம்ம ஊரில் இருந்து மணலை/கிரானைட் கல்லை வெளி மாநிலம்/ நாடுகளுக்கு கடத்தும் ஆட்களை சுட நீங்கள் போராடவில்லையே.

    • காடுகளை அளித்து காட்டேஜுக்கள் கட்டினார்கள். மலைகளை அறுத்து பாக்சைடு எடுத்தார்கள், கடல் கரையை நோண்டி தாது மணலை எடுத்தார்கள், ஆற்றைக் கெடுத்து மணலை கொள்ளையடித்தார்கள், மலையை நோண்டி கிரனைட் கற்கள் எடுத்தார்கள் , பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து விற்றார்கள்…. இதையெல்லாம் சட்டபூர்வமாகவே செய்தார்கள் இந்த நாட்டையாளும் அதிகார சதிகார குண்டாந்தடி கொள்ளைக் கூட்டங்கள். இவர்களுக்கெல்லாம் செஞ்சோற்று அடிமைகளாய் இருந்து விட்டு வயிற்று பாட்டுக்கு மரம் வெட்ட சென்ற அந்த தொழிலாளிகளை கொலை செய்தது இந்த போலிசு சொறி நாய்கள்.

      செம்மரக் கட்டைகள் டன் கணக்கை வெட்டப்பட்டு இந்தியக் கடற்கரையிலிருந்து கப்பல்கள் மூலமே சீனா ஜப்பான் போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்படியெனில் இவ்வளவு நாட்களும் எப்படி எந்த பிரச்சினைகளும் இன்றி இந்த கொள்ளை நடைபெறுகிறது. அதிகார வர்க்கத்தின் ஆதரவு இல்லாமல் நடைபெற கிஞ்சித்தும் வாய்ப்பே இல்லை.

      இந்த படுபாதக செயல்களால் நாடு முழுவதும் விசிறியடிக்கப்பட்டவர்கள் தாம் மேம்பாலம் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், விவசாயம் செய்ய முடியாமால் தற்கொலை செய்து கொண்டும், செம்மரம் வெட்டி போலி மோதல் கொலைகளாகியும் பலியாகி கொண்டு இருக்கிறார்கள்.

      இந்த போலி மோதல் கொலைகள் மூலம் பரபரப்பை உண்டாக்கி விட்டு அதன் மூலம் குளிர் காண நினைக்கிறது அதிகார வர்க்கங்கள்.

      ————–
      இங்கே இந்த கொலைகளை ஆதரித்து பேசும் திமிர் பிடித்த வர்க்கங்கள் அந்த சுரண்டல்கள் மூலம் ஆதாயம் அடைபவர்களே.

  5. நிலம் வைத்திருந்தான் ரியல் எஸ்ட்டேட் முதலாளி பிடிங்கி கொண்டான்

    நிலத்தை உழுவதற்கு ட்ரக்டர் வைத்திருந்தான் பேங்காரன் பிடிங்கி கொண்டான்

    மனைவியின் தாலி உள்பட மார்வாடி பிடிங்கி கொண்டான்

    இருந்த ஒத்த வீட்டையும் கந்துவட்டிகாரன் பிடிங்கி கொண்டான்

    தமிழகத்தில் விவசாயிகள் வாழ வழிஇல்லை ஏன்று தன் குடும்பத்தின் பசியைப் போக்க பிழைப்பை தேடி ஆந்திர மாநிலத்தை நோக்கி ஓடினான் தொழிலாளி

    தமிழக அரசு உழைப்பையும்,உடைமைகளையும் பறித்துக் கொண்டு பட்டினியை பரிசாகக் கொடுத்தது

    ஆந்திராவிற்க்கு பிழைபுக்காக போன தொழிலாளிகளிடம் பறிப்பதற்கு ஒன்றும் இல்லை ஏன்று 20பேர் உயிரை பறித்துக் கொண்டு மரணத்தை பரிசாக கொடுத்தது ஆந்திர அரசு.

  6. அந்த 20 தொழிலாளர்களும் தெரிந்தே இந்த தவறை செய்திருந்தாலும் அவர்களை சுட்டு கொள்ள இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் அவ்வாறு இருகிறதா? பெரும்பான்மை தமிழர்களே!!! இனியாவது திருப்பதி கோவிலுக்கு சென்று ஆந்திராகாரனின் காலடியில் பணத்தை கொட்டுவதை நிறுத்துங்கள்.

    தமிழ்நாட்டில் சென்னையில் ஏற்கனவே ஒரு திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையம் என்கிற பெயரில் தி.நகரில் ஒரு கோவிலை கட்டி உண்டியல் வைத்து இங்கிருக்கும் மக்களிடம் பிச்சை எடுப்பது போதாதென்று, இப்பொழுது, மதுரை மற்றும் கன்யாகுமரியிலும் அதே போன்று திருப்பதி தகவல் மையம் என்கிற பெயரில் கடை விரித்து “Plaster Of paris”இல் ஏழுமலையானை காட்டி பிச்சை எடுக்க போகிறார்களாம். ஆகவே, தமிழர்களே இனியும் நீங்கள் திருப்பதி என்கிற வார்த்தையை கேட்டதும் புல்லரித்துப் பொய் ஏமாந்து அவர்களின் collection மோசடிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக இருங்கள். இறந்துப் போன 20 அப்பாவி தொழிலாளர்களின் எதிரான அரசு பயங்கர வாதத்தை எதிர்த்து போராடுவோமாக…

    • சகோதரி,

      சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மனிதர்கள். 20 மாண்புமிகு உயிர்கள். இதில் வடநாட்டான் என்ன? தென்னாட்டான் என்ன? யாதும் ஊரே , யாவரும் கேளிர் !!. இதில் உண்மையை மட்டும் அறிந்து அது மேலும் நடவாமலிருக்க ஆசைப்படுதல் மனித மாண்பு. அது விடுத்து மதவாதம் பேசுதலும், இன வாதம் பேசுதலும் வக்கிரம் ஆகும்.

      அன்புடன்,
      சின்னபையன்

      • சகோதரனே…..

        இனவாதம்….

        அண்ணே … எங்க இனத்துக்காக நாங்க தானே குரல் கொடுக்க முடியும். 20 மாண்புமிகு உயிர்கள்னு சொல்லிடீங்க. இந்த போலி மோதல் படுகொலை தொடர்பாக எந்த கன்னடனாவது, மலையாளியாவது இத கண்டிச்சு பேசுனானா. ஆந்திர அரசுக்கு எதிரா கண்டனம் தெரிவிக்க வேண்டாம்,இறந்து போனவர்களுக்காக ஒரு சின்ன இரங்கல் அறிக்கையாவது வாசித்தார்களா? ஒரு வேளை அந்த 20 பேரும் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருந்திருந்தா இந்நேரம் இந்த போலி மோதல் படுகொலை நடந்திருக்குமா? பிரச்சனைன்னு வரும்போது இன ரீதியான துடிப்பு, கலக்கம் தான் மொதல்ல வரும். மாண்புமிகு மனிதன், பாட்டாளி வர்கத்திற்க்கு ஏற்ப்பட்ட கொடுரம் என்பதெல்லாம் அப்புறம் தான்.

        மதவாதம்

        யாரும் இங்க மதத்த கொற சொல்ல வரல. திருப்பதி வெங்கடாசலபதி பெயரால ஆந்திரா காரன் ஊரு ஊரா போய் செய்யற சுரண்டல(உண்டியல் வச்சு பிச்சை எடுக்குற) தான் இங்க காரி துப்புறோம். திருப்பதி கோவிலுக்கு வர வருமானத வச்சு வயிறு வளக்றது பத்தாதுன்னு இந்த மேத்தீனி வேற. இதே வடக்க காசி விஸ்வநாதர் கோயில் இருக்கு. திருப்பதிக்கு வர அதே கூட்டம் தான் அங்கேயும் வருதுன்னு கேள்வி பட்டேன் , அவங்க இது மாதிரி கேடுகெட்ட, பிச்சைகார தனமான வேலைய செய்றாங்களா!!! நாட்டில் இருக்கும் வேறு எந்த வழிபாட்டு தலமாவது இந்த காரியத்த செய்றாங்களா. ஆகவே, தகவல் மையம் என்கிற பெயரில் plaster of paris இல் பெருமாளை காட்டி அதற்க்கு 3 கால பூஜை, ஏகாதசி, தெலுங்கு ஆண்டு பிறப்பு போன்ற அனைத்தும் விசேஷங்களிலும் கல்லாக்கட்டி, மாதம் 3 கோடி,5 கோடி என்று மக்களை முட்டாளாக்கும் மோசடியை இந்த இடத்தில் கூறுவது தான் நியாயமானதாகும்.

        • //இந்த போலி மோதல் படுகொலை தொடர்பாக எந்த கன்னடனாவது, மலையாளியாவது இத கண்டிச்சு பேசுனானா. ஆந்திர அரசுக்கு எதிரா கண்டனம் தெரிவிக்க வேண்டாம்,இறந்து போனவர்களுக்காக ஒரு சின்ன இரங்கல் அறிக்கையாவது வாசித்தார்களா? // Rebecca marry proves her foolishness. The case filed in court is by a Telugu Andra person. And Incidents similar to this happened to Andra kannda people there never caused uproar there. It is their political awareness.

    • 100 likes : //இனியாவது திருப்பதி கோவிலுக்கு சென்று ஆந்திராகாரனின் காலடியில் பணத்தை கொட்டுவதை நிறுத்துங்கள்.//

  7. ஆதம்பாக்கம், அடையார், அயனாவரம், சூளைமேடு, கோபால் புரம், கோட்டூர் புரம், மடிப்பாக்கம், மடிப்பாக்கம்(N), படூர், முகபேறு வெஸ்ட், மைலாப்பூர், நங்கநல்லூர்(N), நங்கநல்லூர், பள்ளிக்கரணை, , பெருங்குடி, ஷெனாய் நகர், டீ.நகர்., தாம்பரம் வெஸ்ட், தாம்பரம் ஈஸ்ட், வளசரவாக்க்ம், பெரும்பாக்கம், போரூர், பம்மல்

    போன்ற இடங்களில் உள்ள கெரிடேஜ் கடைகள் ஏன், நாம் தமிழர் இயக்கத்தால் தாக்கப் படவில்லை, பெட்டி வாங்கி விட்டார்களோ?

    • ஹெரிடேஜ் பால் கடைகளை [டீலர் ] கூருகின்றிர்கள் என்று நினைக்கின்றேன். ஹெரிடேஜ் பால் கடைகள் [டீலர்] ஆந்திர அரசை சார்ந்ததா ? அப்படியே ஆந்திர அரசை சேர்ந்ததாக ஹெரிடேஜ் இருந்தாலும் டீலர்கள் தமிழ் நாட்டை சேர்ந்த சிறு வணிகர்கள் தானே ? பிரச்சனை ஆந்திர ,தமிழ் மக்களுக்கு இடையில் இல்லை என்பதை உணருங்கள். பிரச்சனைக்கு தீர்வு அரசு பயங்கர வாதத்தை எதிர்த்து மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, இரு மாநில மக்களும் நேருக்கு நேர் நின்று போராடுவதில் இல்லை என்பதை உணருங்கள். நீங்கள் cpm கட்சியை சேர்ந்தவரா மாதவ் ?

    • தாக்கபட்டு தகர்க்கபடுவது ஆந்திர அரசு பேருந்துகள் ,ஆந்திர வங்கிகள் என்னும் போது அதில் மாதவ் அவர்களுக்கு என்ன பிரச்சனை ?

      • அரசின் சொத்துக்கள், தனி நபர் சொத்துக்கள் என்று தனி தனியாக எதுவுமே கிடையாது. மேலும் அரசின் பணம் எல்லாமே, ஏழைகளின் பணமே. ஆந்திர அரசின் சொத்துக்களை மறு சீரமைக்க ஆகும் செலவினால், ஏழைகளுக்கான சில திட்டங்களை கை விடுவார்கள்.

        அரசாங்கம் இதனால் ஏற்படும் பாதிப்பை காகிதத்தில் தொடைத்துப் போட்டு விட்டு போய்விடும். ஆனால், தனியார் நிறுவனங்களை கை வைத்து பாருங்கள், நீங்கள் எதிர்பார்ப்பது எல்லாமே நடக்கும்.

        மேலும் கெரிடெஜ், ஆந்திர முதல்வரின் குடும்ப நிறுவனம். சிறு வணிகர்கள் பல்பொருள் அங்காடிகளை நடத்துவது இல்லை.

        இன்றைய இந்தியாவை நடத்துவது தனியார் நிறுவனங்களே, போராட்‌டங்கள் அவர்களை நோக்கி இருப்பதே இன்றைய தேவை, மற்றவை எல்லாமே கண்துடைப்பு நாடகங்களே.

        பின்குறிப்பு: நான் கட்சிகளை நம்பாத தனி நபர்

    • ஹெரிடேஜ் பால் ஆந்திராவின் கொள்ளையன் சந்திரபாபு நாயுடுவின் கம்பெனியாக இருக்கும் நிலையில் , ஆந்திராவில் இருந்து அவை லாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டு வரும் நிலையிலேயே தாக்கபட்டு அழிக்கபட வேண்டும். ஆனால் சென்னை கடைகளில்[ ஹெரிடேஜ் பால் கடைகளை [டீலர் ]] நாம் சேதாரம் ஏற்படுத்தினோம் என்றால் முதலுக்கு ஏற்படும் சேதாரத்துக்கு தண்டம் கட்டவேண்டியது நமது தமிழ் நாட்டு சிறு வியாபாரிகள் தானே ?எனவே சென்னை உள் நுழையும் எல்லையிலேயே ஹெரிடேஜ் பால் லாரியோடு அழிக்கப்படவேண்டும்.

      • உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடே. நான் பால் வியாபாரம் செய்யும் நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து இந்த கருத்தை சொல்லவில்லை. கெரிடேஜ் நிறுவனம், பல்பொருள் அங்காடிகளை நடத்திவருகிறது அதைப் பற்றி கூறினேன்.

    • ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, சென்னை மயிலாப்பூர், ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சந்திரபாபு நாயுடுவின் குடும் பத்தினருக்கு சொந்தமாக உள்ள ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட் மீது நேற்று இருவர் தாக்குதல் நடத்தியதால் கடை சேதமடைந்தது.

      சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் சிக்னல் அருகே ராயப் பேட்டை நெடுஞ்சாலையில் ஹெரி டேஜ் என்ற பெயரில் சூப்பர் மார்க் கெட் உள்ளது. இது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்த மானது. நேற்று காலை இந்த கடைக்குள் புகுந்த 2 பேர், உருட்டுக் கட்டைகளால் கண்ணாடி களை அடித்து உடைத்து, அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்தனர். சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற் பட்டது. கடை மேலாளர் கொடுத்த தக வலின்பேரில் விரைந்து வந்த மயிலாப்பூர் போலீஸார், தாக்குத லில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். அவர்கள் தமிழர் எழுச்சிப் படையை சேர்ந்த குமரவேல், கண்ணன்.
      Courtesy tamil.thehindu.com

      • Both Kumaravel and Kannan should be given severe punishment.
        This hate / provoking crime should never be encouraged.
        Violence can’t be an answer or a way to react.
        Shame on தமிழர் எழுச்சிப் படை!!

  8. //**
    1. சம்பவ இடத்தில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு செம்மரங்கள் இல்லை.
    2. இறந்த உடல்கள் ஒவ்வொன்றின் அருகேயும் காய்ந்த செம்மரக் கட்டைகள் எங்கிருந்தோ கொண்டுவந்து போடப்பட்டுள்ளன. **//

    Dr. V.S. ராமச்சந்திரன் தனது Phantoms in the Brain என்னும் நூலில் LEFT HEMISPHERE பற்றி எழுதியுள்ளார். என்னே ஒரு நுண்மாண் நுழைபுலம் !!

    வாழ்க James Bond. !! வளர்க துப்பறியும் திறன் !!

  9. ஆந்திர அரசுக்கும், அவர்களை சார்ந்த போலி அதிகார வர்க்கத்திற்கும் சப்போர்ட் செய்யும் நல்லவர்களே மக்களின் வரிபணத்தை சுரண்டி பிழைக்கும் அரசியல்வாதிகளை என்கவுண்டர் செய்திருந்தால் மிகவும் சந்தோச பட்டிருப்பேன். பிழைக்க வழியில்லாமல் நாடோடியாக செல்லும் தொழிலாளர்களை கொன்று குவிக்கும் அதிகார வர்க்கத்திற்கு துணை போகும் உங்களை போன்ற துரோகிகளை மன்னிக்கவே முடியாது

  10. பைத்தியக்காரத்தனமாக எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு மறு பதிப்பு வெளியிட்டால் நீங்கள் எல்லாம் நினைப்பது நடக்காது… ஆந்திரா அரசு செய்தது மிகச் சரியான் செயல்…. இது மற்ற மாநில அரசாங்கமும் பின் பற்ற வேண்டிய விஷயம்….. தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். இது ராமலிங்க ராஜுவிற்க்கும் பொருந்தும்… ஏழைகளை மட்டும் யாரும் சுடுவதில்லை… சென்னையில் சுடப்பட்ட வெங்கடேச பண்ணையார் ஜில்லா பணக்காரன், அவனை போலீஸ் சுடவில்லை???? சும்மா பிலக்கா பசங்களாட்டம் ஏதாவது உளர கூடாது….

    • இந்தியன்….நமது வரிப் பணத்தை
      சுவிஸ் வங்கியில் பதுக்கி உள்ள,உமது
      அத்தை சோனியா குடும்பம்/பங்காளி தி.மு.கா
      சக்களத்தி பச்சை புடவை…
      இவைகளையெல்லாம் என் கவுன்டர் செய்யலாமா?

    • இந்தியன் அவர்களே,

      12000 கோடி சுருட்டிய ராமலிங்க ராஜுக்கு இத்தனை வருடம் கழித்து 7 வருட சிறை தண்டனை.
      நூற்றுக்கணக்கான அப்பாவிகளை கொன்ற அஜ்மல் கசாபிற்கு பத்து வருடங்கள் கழித்து தூக்கு.

      மரம் வெட்டிய கூலித்தொழிலாளிகளுக்கு துப்பாக்கியால் சுட்டு கொலை.

      அவர்கள் மரம் வெட்டியது தவறென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே.
      மேலும் அவர்கள் கொல்லப்பட்ட இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை செம்மரங்களே இல்லை. பின் அவர்களை சுற்றி செம்மரங்கள் வைத்து போட்டோ பிடித்திருக்கிறார்கள்?

      பஸ்ஸில் போனவர்களை தேடிப்பிடித்து கொண்டு போய் கொன்றிருக்கிறார்கள்.

      ஆந்திர போலீஸ் செய்வதை வக்காலத்து வாங்க வேண்டாம்.

    • அண்ணன் இந்தியன் அவசரப்படாமல் சற்று யோசித்து பாருங்கள் கொல்லப்படவன் எல்லறும் தொலிளாரகள் இது திட்டமிடப்பட்ட சதி, எப்பிடினா கொல்லப்பட்டவன் தமிழன் கொன்னது போலிஸ் கொல்லப்ப்ட்ட தமிழர்களை ஊயிரோடு பிடித்து இருந்தால் மரம் வெட்ட சொன்ன முதலாளி யாருனு தெரிஞ்சு இருக்கும் இல்லையா இதை செய்யமா மரம் வெட்டுன கூலி தொழிலாளிகளை பிடிச்சு வச்சு சித்திரவதை பன்னி கொன்னுறுக்காகன்னா யெந்த முதலையை காப்பற்ற செய்யப்பட்டதோ என்பதை சின்ன குழைந்தை கூட தெரிந்து கொள்ளும் ,எப்பிடி சுட்டுருக்காக எப்பிடி அவர்கள் எல்லாம் விழுந்து கிடக்கிறாரக்ல் செம்மரக்கட்டைகள் எல்லாம் செட்டப் செய்து போடப்பட்டவை என்று சொல்லுகிற கட்டுரையை ப்டித்தாலே தெரிகிறது, வினவு சொல்லுகிறது என்பதற்க்காக கண்ணை மூடிக்கொண்டு எதையும் எதிர்க்காதீர் அன்ரே….

  11. இந்தியன். அவர்களே உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இது போல் சம்பவம்நடந்திருந்தால் அப்போதும் இப்படித்தான் பேசுவிங்களா? சுடவேன்டும் என்றால் அவ்வர்கலை கடத்தலில் ஈடுபடுத்திய முதலாலி. அரசியல் பொறுக்கி. கடத்திவந்து கப்பலில் வெளினாடுகலுக்கு ஏற்றுமதி செய்யும் அதிகாரிகள் தான் குற்றவாளி . கூலிக்காக மரம் வெட்டுபவர்களை பார்த்து ஏளனம் செய்யும்நீ முதல் குற்றவாளி

  12. இந்தியன் அவர்களே கண்டிப்பாகநீங்கள் தமிழன் அல்ல. இந்த விவாதத்தில் வராதீர்கள்.

  13. மக்கள் பயங்கரவாதம் ஒன்றே இது போன்ற அரச பயங்கரவாதத்துக்கு தீர்வு.

  14. வீரப்பனையும் அவனது சகாக்களையும்
    புரட்சித் தலைவியின் தொண்டரடிப் பொடி
    விஜயகுமார்+கூட்டுப் படை…இதைவிட
    கொடுமையான முறையில் கொன்றதை
    நாம் நினைவில் கொள்வோம்

  15. I think this cases deserves CBI investigation for the following reasons:

    1. Kantha Rao (DIG) sought permission to fire against red sanders few days before the incident. What made him do that?
    2. In general after one or two are shot, others are likely to surrender. Why not in this case?
    3. There are 2 groups that opened fire; it doesn’t look like self-defense
    4. How many are arrested (I think no one)? Again it’s suspicious.
    5. How come no Policeman got injured when they were forced to open fire?
    6. How come no wood-cutter surviving with or without injury?

    Police / Govt / Authorities are trying to protect / cover up something by staging this.

    Lesson learnt: Never work for any Gunda / Dada / illegal gang even though their wages are higher.

    Instead of wasting time in chanting “பார்ப்பனியம்”, PDF or Ma.Ka.I.Ka should educate the labor force.

  16. ஆந்திர அரசு பயங்கரவாதத்தால் , தமிழக தொழிலாளர்கள் கொல்லபட்டதற்கு எதிர்வினையாக ஆந்திரா அரசு சார்ந்த பேருந்துகள் , மத்திய அரசின் ஆந்திரா வங்கி தகர்க்கப்படுவது தவறே இல்லை. அதே நேரத்தில் உயிர் சேதம் ஏற்படக்கூடாது. இந்த கொடுரத்தை செய்தது ஆந்திர அரசு பயங்கரவாதம் என்ற நிலையில், ஆந்திர அரசு சார்ந்த நிறுவனங்களை தகர்த்து நமது எதிர்ப்பை தெரிவிப்போம் .

    • Tamizh,
      This is ridiculous. What does Andhra Bank have to do with this? The fault is on Andhra Police and Politicians. You got to take it up diplomatically. Never ever think of violence for any retaliation.

      Remember: What TN wood cutters did is illegal; they deserve to be punished as per law.
      AP police should have arrested and booked them along with their bosses.

      But what they got is unpardonable. You take someone’s life for chopping tree(s), that too they are not real beneficiaries of the produce. This is atrocious.

  17. சந்திரபாபு நாயுடுவுக்கு என்ன தன்டனை?
    குரூரமாக கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கு
    தலைக்கு ரூபாய்: 3 லட்சம்….
    இதைத்தான் இந்திய கோர்ட்டுகள் விரும்புகிறது…
    ஆகவே, நாம் ஒன்று செய்யலாம்:
    சந்திரபாபு நாயுடுவின் தலையை வெட்டி வீழ்த்துவோம்..
    அவனுடைய மனைவிக்கு ரூபாய்: 30 லட்சம் தருவோம்..
    கோர்ட்டும் நம்மை புகழும்..
    .சாவகாசமாக,நீதி விசாரனை,
    சமோசா சாப்பிடுவது..பிறகு பார்க்கலாம்…

    • ராமதாஸ்,

      //சந்திரபாபு நாயுடுவின் தலையை வெட்டி வீழ்த்துவோம்..
      அவனுடைய மனைவிக்கு ரூபாய்: 30 லட்சம் தருவோம்..//

      இதைப்போன்று வன்முறையை தூண்டும் கருத்துக்களை பரப்ப வேண்டாம்
      நாகரீகமாக நேர்மையான முறையில் உங்கள் யோசனைகளை எழுதவும்
      நமக்கும் தீவிரவாதிகளுக்ககும் வித்தியாசம் வேண்டும்

  18. உமா சங்கர்.
    ..அப்படீன்னா..
    உள்ளூர் கோர்ட்டில் கேஸ் போடுங்க..
    இன்னும் 40 வருடத்துக்கு ஒரு ம.ரு.ம்…
    ஆகப் போகதில்லை!

    • ராமதாஸ்,

      உங்கள் எண்ணம் தவறு
      நீதி கிடைக்க நேரம் ஆகலாம். அதற்காக வன்முறை கூடாது
      20 பேர் மரணம் 200 ஆகி விட கூடாது.

      இதை உன்னிப்பாக கவனித்தால் தவறு நம் (இந்த சமுதாயம்) மீது உள்ளது என்று புலப்படும்.
      நாம் (மக்கள்) பணம் வாங்கி கொண்டு வாக்கு தவறான மக்களுக்கு வோட்டு போட்டு ரௌடிகளை சட்டமன்றத்திற்கு அனுப்பியது நம் குற்றம்.
      ஒரு கட்சி மரம் வெட்டுவதையே தொழிலாக பாவித்து சாதனை போல் மார் தட்டி கொள்கிறது.
      நாமும் அதை பார்த்து ஒன்றும் செய்வதில்லை.
      வினவை எடுத்து கொள்ளுங்கள்: ஒரு குடும்பம் ஒரு மாநிலத்தையே கொள்ளை அடித்தாலும் ஒரு போதும் விமரிசனம் செய்யாது. ஒரே ஒரு மாநிலத்தில் செயல் படும் தி.மு.க. நாட்டில் 2வது பணக்கார கட்சி. பணம் எப்படி வந்தது நாம் யாரும் கேட்க மாட்டோம். மதுரையில் 20 வருடங்கள் முன்பு ஸ்கூட்டரில் சுற்றி வந்தவரிடம் இன்று ஆயிரம் கோடிகள்….
      தினகரன் அலுவலகத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இன்று வரை குற்றவாளிகளை பிடிக்க யாரும் முயற்சி செய்யவில்லை என்றே சொல்லலாம்.
      தமிழ் நாட்டு ஊழலால் தினம் பலர் மரணம் அடைகின்றனர்; என்ன வழி? எப்படி இதை தடுப்பது?

      • உமாசங்கர்,

        ரொம்ப தெளிவாக ஜெயலலிதா ஒன்றுமே செய்யாதது போல இருட்டடிப்பு செய்கிறீர்கள்.
        சோ வின் டெக்னிக் இது தான். ஊழல் என்றால் திமுக என்ற ஒரு கட்சியை மட்டும் முன்னிலைப்படுத்தி அதிமுக, பாஜக கட்சிகளை உஜாலா வெண்மையாக கருத வைக்க செய்யும் முயற்சி இது.
        நடத்துங்க, நடத்துங்க…

        • கற்றது கையளவு,
          நீங்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்

          ஜெயலலிதா ஒன்றும் உத்தமர் கிடையாது
          அவர்கள் கட்சி காரர்கள் / மன்னார்குடி கும்பலும் அடித்த கொள்ளை நினைவில் உள்ளது

          ஆனாலும் இப்போது நாம் ஒப்பிட வேண்டியது: இரயிலில் கரி திருடனையும் என்ஜின் கொள்ளையரும்.

          இதனால் கரி திருட்டை நான் நியாயப்படுத்தவில்லை. பொது மக்கள் நஷ்டம் குறைவு. அவ்வளவு தான்.

          நம் அரசியலில் திருடனையும் நேர்மயனவரையும் ஒப்பிட வேண்டிய காலம் வரும் வரை காத்திருப்போம்.

      • /வினவை எடுத்து கொள்ளுங்கள்: ஒரு குடும்பம் ஒரு மாநிலத்தையே கொள்ளை அடித்தாலும் ஒரு போதும் விமரிசனம் செய்யாது. ஒரே ஒரு மாநிலத்தில் செயல் படும் தி.மு.க. நாட்டில் 2வது பணக்கார கட்சி.//

        உண்மையிலும் உண்மை. என்ன இருந்தாலும் அந்த குடும்பத் தலைவர் பார்பனர் இல்லையே. ஆக அரசியலை வைத்து பஞ்சமா பாதகங்கள் செஞ்சாலும் விட்டு தள்ளு போனால் போகிறது ..மேலும் இந்த கமெண்ட்க்கு நா 20 likes போட்றன்

  19. உமா சங்கர்…உங்களது குறியீடு
    வேடிக்கையானது..அண்டை மாநில
    அரசியல்வாதிகள் 10 பைசா கூட திருடாத
    பக்தகேடிகள்…
    நல்லது…இன்னும் 1000 ஆண்டுகள்
    ஆனாலும்.நீங்கள் நினைத்ததை சாதிக்கமுடியாத
    தேசம் இது:
    வடை இந்திய அரசியல்+கேரள பஜனை கோழ்டிகளால் வாழ்விழந்த தமிழ் இனம்…
    முடிஞ்சால்..டீக்கடை மோடிக்கும் ஒரு கடுதாசி எழுதிப் போடுங்கள்..தமிழ் சமுதாயம் உங்களை
    ஜாபகம் வைத்துக் கொள்ளும்!

    • ராமதாஸ்,

      நம் நாட்டின் வயது: 68 தான் ஆகிறது.
      சில மாநிலங்களில் நிலைமை நம்மை விட மிக மோசம்
      பல வருடங்களுக்கு முன் உலகில் நிறைய நாடுகள் இதைப்போல் இருந்தன.
      சில சீக்கிரம் பாடம் கற்றன; நமக்கு நேரம் பிடிக்கிறது. பல பிரச்சனைகள்; குழப்பங்கள் உள்ள நாடு இது.

  20. அருமையான பதிவு தோழர்களே…. பள்ளி பாட புத்தகத்தின் மூலமும் , கெளதம் மேனன் படத்தின் மூலமும் மட்டும் காவல் துறை குறித்த புரிதலையும் , சமூக அறிவையும் பெற்றுக் கொண்டு அறச்சீற்றம் கொள்ளும் குஷால் தலைமுறையின் சில அபத்தமான பின்னூட்டங்களையும் இந்த பதிவில் பார்க்க முடிந்தது.

Leave a Reply to ramadoss kothandaraman seethapathi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க