privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபெரியார் திடல் : அம்மா ஆதரவுடன் பார்ப்பனிய தாக்குதல்

பெரியார் திடல் : அம்மா ஆதரவுடன் பார்ப்பனிய தாக்குதல்

-

மோடி ஆட்சி அமைத்த பிறகு அதிகரித்து வரும் பார்ப்பன தாக்குதல்களின் ஒரு பகுதியாக புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பவிருந்த தாலி பற்றிய விவாதத்தை டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு மூலமும், மிரட்டல்கள் மூலமும் தடுத்து நிறுத்தியிருந்தனர் இந்துத்துவ ரவுடிகள். இந்தச் சூழலில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று, பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்வு மற்றும் மாட்டுக்கறி விருந்து நடத்தத் திட்டமிட்டிருந்தது திராவிடர் கழகம்.

பெரியார் திடல் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்வு மற்றும் மாட்டுக்கறி விருந்து.

ஏப்ரல் 13 அன்று இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது சென்னை மாநகர காவல் துறை. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றது திராவிடர் கழகம். விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன் வேப்பேரி உதவி ஆணையரின் ஆணைக்குத் தடை விதித்து திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் விழாவுக்கு அனுமதி கொடுத்ததோடு, காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஆணை பிறப்பித்தார்.

பெரியார் திடல் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி
ஏப்ரல் 14 அன்று அதிகாலை 7 மணிக்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி ஆரம்பமானது.

நீதிமன்ற அனுமதியின்படி சென்னை பெரியார் திடலில் ஏப்ரல் 14 அன்று அதிகாலை 7 மணிக்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி ஆரம்பமானது. 21 பெண்கள் தங்களின் கழுத்தில் பெண்ணடிமைச் சின்னமாகத் தொங்கிக் கொண்டிருந்த தாலியைக் கத்தரித்து அகற்றினார்கள். பெரியாரின் பிரச்சாரம் இன்னமும் வீரியமாக தமிழ் நாட்டில் நிலைகொண்டுள்ளது என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது.

பெரியார் திடல் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி
பெரியாரின் பிரச்சாரம் இன்னமும் வீரியமாக தமிழ் நாட்டில் நிலைகொண்டுள்ளது.

இந்து மதவெறியர்களால் காவல்துறை, நீதிமன்றம் என அலைக்கழிக்கப்பட்டு போராடிப் பெற்ற இந்த நிகழ்ச்சியை, அதிகாலையிலேயே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு போட்டு தடுக்க முயற்சி நடந்தது. இந்த முறை இந்துமதவெறி அமைப்புகளுக்குப் பதிலாக, ‘நானொரு பாப்பாத்தி’  என்று அறிவித்துக் கொண்ட ‘மக்களின் முதல்வர்’ ஜெயாவின் பினாமி அரசே இந்த நிகழ்ச்சிக்குத் தடை கோரியது.

பெரியார் திடல் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி
‘மக்களின் முதல்வர்’ ஜெயாவின் பினாமி அரசே இந்த நிகழ்ச்சிக்குத் தடை கோரியது.

வேப்பேரி காவல்துறை உதவி ஆணையர் சார்பில் நீதிபதிகள் எஸ்.கே. அக்னி ஹோத்திரி, திரு எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் காலை 8 மணிக்கே மேல் முறையீடு செய்தனர். பொதுமக்களின் நலன் சார்ந்த எத்தனையோ வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்யாமல் மாதக்கணக்கில் இழுத்தடிக்கும் அரசு இதற்கு இவ்வளவு அவசரம் காட்டியதில் இருந்தே அதன் பார்ப்பன பாசத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

ps18
பெரியார் திடல் வாயிலில் செஞ்சட்டையுடன் பு.மா.இ.மு தோழர்கள்

 

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக சுமார் 50 தோழர்கள் பெரியார் திடலின் முகப்பில் இருந்து உள்ளரங்கம் வரை நிகழ்ச்சி முடியும் வரை பாதுகாப்பாக அணிவகுத்து நின்றனர்

நீதிபதிகள் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே பெரியார் திடலுக்குள் நுழைந்த காவல்துறை, நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கேட்டது. ‘தடையாணையைக் கொண்டுவரும் வரை நிகழ்ச்சியை நிறுத்த முடியா’தென மறுத்து, தாலி அகற்றும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டது, திராவிடர் கழகம். எல்லாம் முடிந்தபின்னர் அக்னி ஹோத்திரி, வேணுகோபால் அமர்வு நிகழ்ச்சிக்குத் தடை விதித்தது. இவ்வாறு முகத்தில் கரியைப் பூசிக்கொண்ட ஜெயா அரசின் காவல்துறை, இதற்கு பழி தீர்க்க வன்மம் கொண்டிருந்தது.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
நிகழ்ச்சியில் இந்து மதவெறிக் கும்பல் புகுந்து இடையூறு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் தி.க இளைஞர்கள் தயாராகவே இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, தாலி புனிதமானது என்ற மூடத்தனத்தை தகர்த்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இந்து மதவெறிக் கும்பல் புகுந்து இடையூறு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் தி.க இளைஞர்கள் தயாராகவே இருந்தனர்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
இந்துவெறி அமைப்பின் புரசைவாக்கம் பகுதி குண்டர்கள் சிலர் நோட்டம் பார்க்க வந்தனர்; சிவப்புச் சட்டைகளைக் கண்டபின் அங்கு வராமல் ஓட்டம் பிடித்தனர்.

இந்துவெறிக் கும்பலை எதிர்கொள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக சுமார் 50 தோழர்கள் பெரியார் திடலின் முகப்பில் இருந்து உள்ளரங்கம் வரை நிகழ்ச்சி முடியும் வரை பாதுகாப்பாக அணிவகுத்து நின்றனர். சந்தேகத்துக்கிடமான நபர்கள், தோழர்களால் தடுக்கப்பட்டனர். முற்பகலில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில் பெரியார் திடல் அமைந்திருக்கும் ஈ.வெ.கி.சம்பத் சாலையில், இந்துவெறி அமைப்பின் புரசைவாக்கம் பகுதி குண்டர்கள் சிலர் நோட்டம் பார்க்க வந்தனர்; சிவப்புச் சட்டைகளைக் கண்டபின் அங்கு வராமல் ஓட்டம் பிடித்தனர்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
சிவசேனா குண்டர்களை ஏவிவிட்ட காவல்துறை, அக்கும்பல் பெரியார் திடலை முற்றுகையிட போதுமான அளவு ஒத்துழைப்பு தந்தது.

பிற்பகலில், தி.க உள்ளிட்ட திராவிட இயக்கத்தினரும், பு.மா.இ.மு. தோழர்களும் கலைந்து சென்ற பின்னர், சுமார் 3 மணியளவில் சிவசேனா குண்டர்களை ஏவிவிட்ட காவல்துறை, அக்கும்பல் பெரியார் திடலை முற்றுகையிட போதுமான அளவு ஒத்துழைப்பு தந்தது. சாணிப்பால், சுத்தியல், பெரியார், வீரமணி ஆகியோரின் படங்களோடு வந்த 15 பேர் கும்பலை பெரியார் திடலில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை வர அனுமதித்தது, காவல்துறை.

‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று கூக்குரல் போட்ட அக்கும்பல் பெரியாரை ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி முன்னேறியது. தங்களின் கோரிக்கைக்காக முற்றுகைப் போராட்டம் நடத்தும் முற்போக்காளர்களையும், புரட்சியாளர்களையும், ஊர்வலம் தொடங்கும் முன்பே கைது செய்வதை வழக்கமாக்க் கொண்டுள்ள, காவல்துறை சிவசேனா குண்டர்களை 100 மீட்டர் தொலைவு வரை அனுமதித்த்தில் இருந்தே அவர்களின் இந்து மதவெறி சார்பு தெளிவாகத் தெரிந்தது.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
சிவசேனைக் கும்பல் வருவதை அறிந்து கொதித்துப் போன தி.க. தொண்டர்கள், திடலுக்கு வெளியே வந்து சிவசேனையினரை நோக்கிப் பாய்ந்து தாக்கத் தொடங்கினர்.

சிவசேனைக் கும்பல் வருவதை அறிந்து கொதித்துப் போன தி.க. தொண்டர்கள், திடலுக்கு வெளியே வந்து சிவசேனையினரை நோக்கிப் பாய்ந்து தாக்கத் தொடங்கினர். சிவசேனா கும்பல் திருப்பித் தாக்கியது. தி.க தொண்டர்கள், கையில் கிடைத்தவற்றைக் கொண்டு 4 சிவசேனா தொண்டர்களை சாத்தத் தொடங்கவே அந்த ‘வீரர்’களின் ‘பாரத் மாதா கீ ஜெய்’ கோஷம், ‘அய்யோ..அடிக்கிறான்..கொல்றான்’ என மாறி, தப்பித்து ஓட்டம் பிடித்தனர். இச்சமயத்தில் சிவசேனையினரைப் பாதுகாத்து நின்ற போலீசு, கருப்புச் சட்டை அணிந்தவர்களைக் குறிவைத்துத் தாக்கியது. சுற்றி வளைத்து தி.க.வினர் 5 பேரின் மண்டையைக் குறிபார்த்து பூண் போட்ட தடியால் மிகக் கடுமையாகத் தாக்கியது. இதில் தி.க பொதுச்செயலாளர் ஒரத்த நாடு குணசேகரன், மற்றும் இளவரசு, சுரேஷ் உள்ளிட்ட 4 தொண்டர்கள் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய தொண்டர்களையும் தடியடி நடத்தி விரட்டி விட்டு சிவசேனையினர் 15 பேரைக் கைது செய்துள்ளனர்.

பெரியார் திடலைத் தாக்கும் நோக்கத்தோடு வந்த அக்கும்பல் விட்டுவிட்டுச் சென்ற ஆட்டோவில் இருந்து வெங்காய வெடிகள் (தடை செய்யப்பட்டவை) கைப்பற்றப்பட்டன.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
பெரியாரின் தொண்டர்களிடம், அரசு பற்றி இருந்து வந்த பிரேமையை வேப்பேரி போலீசின் குண்டாந்தடி கலைத்து விட்டது.

இதன் பின்னரும் பாசிஸ்டுகள் தாக்க மீண்டும் வரக்கூடும் என்ற தகவல் பரவியதை அடுத்து தி.க., தந்தை பெரியார் தி.க, தி.வி.க, பு.மா.இ.மு அமைப்புகளின் தொண்டர்கள் மாலை 7 வரை பெரியார் திடலில் குழுமி நின்று எதிர்கொள்ளச் சரியான தயாரிப்போடு இருந்தனர். ஆனால் தயாரிப்பினைப் பயன்படுத்த வாய்ப்பினை வழங்காமல், பாசிஸ்டுகள் அப்பகுதிக்கே வராமல் இருந்து விட்டனர். கூடியவிரைவில் இதைச் செய்யும் வாய்ப்பு வரும். பாசிஸ்டுகளின் ‘அய்யோ’ ‘அம்மா’ கதறலின் ஒலி காற்றில் நிறைந்திருக்கும்.

போலீசும் சிவசேனை கும்பலும் திட்டமிட்டு நடத்தியுள்ள இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்துவெறிக் கும்பலுக்கு பதிலாக அரசே மேல் முறையீடு செய்துள்ளதன் மூலம், ‘மக்கள்’ முதல்வரின் பினாமி அரசு இன்னொரு பா.ஜ.க.தான் என்பது அம்பலமாகியுள்ளது. இதனைக் கூட அறுதியிட்டு சொல்லத் துணிவில்லாமல், தி.க தலைவரோ, ‘இந்தத் தடை விதிப்பு, சில பேரை அம்பலப்படுத்தியிருக்கிறது. சில பேருடைய உருவத்தை வெளியில் காட்டியிருக்கிறது’ என்று அடக்கி வாசிக்கிறார். ஆனால் பெரியாரின் தொண்டர்களிடம், அரசு பற்றி இருந்து வந்த பிரேமையை வேப்பேரி போலீசின் குண்டாந்தடி கலைத்து விட்டது.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
சட்ட வரம்புக்குள்ளேயே பாசிஸ்டுகளை ஜெயித்துவிட முடியும் என வீரமணி பலமுறை சொன்னாலும் களத்தில் இறங்கினால்தான் இந்தக் காலிகளை அடித்து விரட்ட முடியும் என்று அனுபவத்தில் தி.க தொண்டர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

‘நாங்கள் தடையை மீறவில்லை. தடை போட்டது சரியா? இல்லையா? என்று சட்டப்படி பரிகாரம் தேடுவோம்’ என்று சட்ட வரம்புக்குள்ளேயே பாசிஸ்டுகளை ஜெயித்துவிட முடியும் என வீரமணி பலமுறை சொன்னாலும் களத்தில் இறங்கினால்தான் இந்தக் காலிகளை அடித்து விரட்ட முடியும் என்று அனுபவத்தில் தி.க தொண்டர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். அவர்களது, இந்த வீரம் செறிந்த தாக்குதலைப் பாராட்டுகிறோம்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
“பெரியார் திடல் தனியார் இடமானாலும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அது பொது இடம். இதனால் இதற்கு காவல்துறை அனுமதி கட்டாயம் தேவை” – நீதிமன்றம்.

‘தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படும்’ என்பது அண்ணாதுரை காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகின்ற வசனம். ஆனால் பெரியாரின் இயக்கத்தின் மீது இந்து மதவெறியர்கள் நேரடி தாக்குதல் நடத்திய பின்னரும், தி.மு.க எனும் துப்பாக்கிக் குழலில் இருந்து சத்தம் ஏதும் இல்லை. இதனை சுட்டிக்காட்டி ‘தி.மு.கவை அழைத்து அவர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தலாமே’ என்று வினவியபோது தி.க தலைவர் ஒருவர், ‘அதெல்லாம் சும்மா. இன்னைக்கு நடந்த நிகழ்ச்சிக்கு கூட அவங்க வரலை. அவங்களுக்கு கொள்கையாவது ஒண்ணாவது’ என்று ஆத்திரத்துடன் பதில் தந்தார்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
பெரியாரின் இயக்கத்தின் மீது இந்து மதவெறியர்கள் நேரடி தாக்குதல் நடத்திய பின்னரும், தி.மு.க எனும் துப்பாக்கிக் குழலில் இருந்து சத்தம் ஏதும் இல்லை.

விழாவுக்கு தடைபோடும் நீதி மன்றம், தாலியின் புனிதத்தையோ, மாட்டுக்கறி விருந்தையோ பற்றி விவாதிப்பதை கவனமாகத் தவிர்த்து விட்டு, “பெரியார் திடல் தனியார் இடமானாலும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அது பொது இடம். இதனால் இதற்கு காவல்துறை அனுமதி கட்டாயம் தேவை” என்றும் வாதிட்டுள்ளது. இதை முன்னுதாரணமாக்கி இனிமேல் அரங்கக் கூட்டம் மட்டுமல்ல, முற்போக்குத் திருமணம் செய்யக் கூட காவல் நிலையம் அலைய வைக்கும் சதி இதில் உள்ளது. இதனை எதிர்த்து முறியடித்தாக வேண்டும்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
தி.க.வின் நிகழ்ச்சியைக் கண்டித்து அரசு பேருந்துகளை இந்து வெறியர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர்.

தி.க.வின் நிகழ்ச்சியைக் கண்டித்து அரசுப் பேருந்துகளை இந்து வெறியர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர். வீரமணியின் வீடு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தி.க தலைமை அலுவலகம் மீது தாக்கும் நோக்கில் தடை செய்யப்பட்ட வெடிகளைக் கொண்டு வந்துள்ளனர். இச்செயல்களில் ஈடுபட்ட சிவசேனா உள்ளிட்ட இந்துமதவெறி அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டும். இத்தாக்குதலில் ஈடுபட்ட சிவசேனா குண்டர்களை, குண்டர் தடைச் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்.

பெரியார் திடல் மீது பார்ப்பன தாக்குதல்
எதிரியும் அரசும் சட்டத்தை மதிக்காதபோது நாம் மட்டும் ஏன் சட்டத்தை மதித்துக் கொண்டும் அதனால் உதை வாங்கிக் கொண்டும் இருக்க வேண்டும்?

மாறாக, காவல்துறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த திராவிடர் கழகத்தினரை கைது செய்திருக்கிறது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை பார்க்கச் சென்றவர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பிணையில் வராத பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். திராவிடர் விடுதலை கழகம் நடத்தும் நிகழ்ச்சிக்கான அனுமதி கடிதத்தில் நிகழ்ச்சியில் அசைவ உணவு பரிமாறக் கூடாது என்று நிபந்தனை போட்டிருக்கிறது காவல்துறை. பார்ப்பனத் தாய் ஜெயாவின் ஆட்சியில் மாட்டுக் கறிக்கு மட்டுமில்லை அசைவ உணவுக்கே மறைமுக தடை அமலுக்கு வருகிறது.

ஏறி வந்து தாக்கத் தொடங்கி விட்டது, இந்து வெறி பாசிசம். இனிமேலுமாவது, ‘சட்டப்படியே எதிர்கொள்வோம்’ என்ற மயக்கத்தில் இருந்து பெரியார் தொண்டர்கள் விடுபட வேண்டும். எதிரியும் அரசும் சட்டத்தை மதிக்காதபோது நாம் மட்டும் ஏன் சட்டத்தை மதித்துக் கொண்டும் அதனால் உதை வாங்கிக் கொண்டும் இருக்க வேண்டும்? டஜன் கணக்கிலான பாசிச அமைப்புகள் ஒத்த நோக்கோடு செயல்படும்போது, நமது பொது எதிரியை எதிர்த்து முறியடிக்க பெரியார் தொண்டர்களும், முற்போக்காளர்களும், புரட்சிகர சக்திகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்.

தோழமையுடன்,

அ.முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

  1. “பாசிஸ்டுகளின் ‘அய்யோ’ ‘அம்மா’ கதறலின் ஒலி காற்றில் நிறைந்திருக்கும்.”
    அருமை! காவிகளின் கலக்கம் காற்றில் நிறைந்திருப்பதுதான் பெரியாருக்குச் செய்யும் தொண்டு, அவரது பார்ப்பன எதிர்ப்புப் பணிக்கான பங்களிப்பு.
    உறக்கம் களைந்து எழுந்திருக்கும் வீரமணி அவர்கள் மீண்டும் உறங்கிவிடவோ மயங்கிக் கிரந்கிவிடவோ கூடாது.

    தி.க., பு.மா.இ.மு., தி.வி.க., த.பெ.தி.க. … உண்மையாகவே பிரச்சனைகளைக் கடந்து, தமக்கிடையேயான விரிசல்கள் / விமர்சனங்களை ஒதுக்கிவைத்துவிட்டு காவிகளை உதைத்து விரட்டக் கூட்டுச் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி!

  2. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள்/முற்போக்காளர்கள் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று மேடைக்கு மேடை பேசுகிறார்களே தவிர அந்த குரல் களத்தில் எதிரொலிப்பதில்லை. வீரமணி உறவாடும் தலைவர்களில் திருமாவளவன் மட்டுமே சிவசேனை குண்டர்களின் அத்துமீறலுக்கு எதிராக விரிவான அறிக்கை கொடுத்துள்ளார். எனினும் அது வெற்று அறிக்கை தான். உண்மையான நட்பு/உறவு என்பது களத்திலே பிரச்சினையின் போது ஒன்றுபட்டு நிற்பது தான். பு.மா.இ.மு முன்வந்தது போல இதர முற்போக்கு அமைப்புகளிலிருந்தும் கணிசமான பேர் வந்திருந்தால் இந்துத்துவ கும்பலுக்கு மேலும் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இனி மேலாவது ஒரு ஒற்றுமை இங்கு சாத்தியப்படுமா?

    • சுகதேவ் ,

      திடீர் என்று பணமுதலை ,”கல்வி கடவுள்” வீரமணியின் விருந்துக்கு,தாலியருப்புக்கு புரட்சியாளர்கள் சென்று பாதுகாப்பு கொடுத்ததே தேவையில்லாத ஒன்று. நான்கு பேர் உள்ள சிவசேனாவுக்கு தி.க வால் சரியான பதிலடி கொடுக்க முடியவில்லை என்றால் அப்புறம் என்னத்துக்கு இவிங்க பெரியாரின் கொள்கைகளை பரப்புகின்றேன் என்ற பெயரில் சீன் போடனும் ? உச்ச நீதி மன்ற தீச்சதர்களுக்கு எதிரான சிதம்பரம் கோவில் வழக்குகளில் புரட்சியாளர்களை தனிமை படுத்திவிட்டு ஓடியவர்கள் தானே இந்த தி.க வீரமணி கும்பல் ? ம க இக வின் கருவரை நுழைவு போராட்டங்களை எல்லாம் சிறுமை படுத்தி தவறு என்றவர்கள் தானே இந்த தி.க வீரமணி கும்பல் ? திருமாவளவனின் அறிக்கையை வெற்று அறிக்கை என்ரு கூறும் உங்களுக்கு மேலே நான் கூறிய கருத்துகள் எல்லாம் தெரியாமலா இருக்கும் ?

      • Change :

        விருந்துக்கு,தாலியருப்புக்கு -> மாட்டுகறி விருந்துக்கு ,தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்வுக்கு

        • தாலி ‘அறுப்புக்கும்’, தாலி ‘அகற்றுக்கும்’ இடையேயுள்ள வேறுபாட்டை அண்ணன் தமிழ் விளக்கினார் என்றால் மிகவும் நல்லது. இக்காலத்திலும் கணவன் இறந்த பின்பு, ஈமச்சடங்குகளின் போது, பெண்ணின் சம்மதமின்றி தமிழ்நாட்டில் தாலியை இழுத்து அறுக்கிறார்களோ என்னவோ எனக்குத் தெரியாது ஆனால். இலங்கையில் யாரும் இறந்தவரின் மனைவியின் தாலியை இழுத்து அறுப்பதில்லை, தனது கணவன் இறந்த பின்பு, பிணம் சுடுகாட்டுக்கு போகுமுன்பு மட்டும் தான், மனைவி தனது தாலியைத் தானே அகற்றி, அவனது நெஞ்சில் வைப்பது வழக்கம். தமிழில் தாலி அகற்றுவது என்றால், அதன் கருத்து, கணவன் இறந்த பின்னர் தாலியைக் கழுத்திலிருந்து அகற்றுவது தான். ஆகவே தாலியை அறுப்பதற்கும், அகற்றுவதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. தமிழர் பண்பாட்டின்படி, இரண்டுமே ஒரு பெண்ணின் கணவன் இறந்த பிறகு மட்டும் செய்யப்படுவது தானே தவிர மேடைகளில் நடத்தப்படுவதல்ல. உண்மையில் திராவிடர் கழகத்தினரின் இந்தக் கேலிக்கூத்துக்கு முற்போக்கு பற்றி பீற்றிக் கொள்ளும் பு.மா. இ, ம தோழர்களும் வால் பிடிப்பது தான் வேடிக்கை. இதில் என்ன புரட்சி இருக்கிறதென்று கடவுளுக்குத் தான் தெரியும். 🙂

      • நண்பர் தமிழ்,

        சில்லறை விசயங்களுக்காக நம்மிடையே பிளவு பட்டுக் கிடப்பது சரியல்ல. முடிந்த வரை இணைந்து இயங்குவது அவசரத் தேவை. புரிதலுக்கு நன்றி.

        • pk , ஒருவேலை நான் சுகதேவ் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்த விடையம் சில்லறைதனமானது என்றால் அவரிடம் இருந்து fringe elements என்ற அர்சனை எனக்கு ஏன் வந்து உள்ளது என்பதை உங்கள் கருத்தில் கொள்ளுங்கள். காரணம் இந்த விடயம் ,நான் கேட்கும் கேள்விகள் முக்கியமானது ,விவாதத்துக்கு உரியது ,திருத்தல்வாதிகளுக்கு எதிரானது.

          • நண்பர் தமிழ்,

            நான் உங்கள் பின்னூட்டத்தை சில்லறைத்தனமானது என்று கூறவில்லை. நாட்டில் நாம் எதிர் கொண்டிருக்கும் அபாயங்களை ஒப்பிடும் போது நமக்குள் இருக்கும் வித்தியாசங்கள் அற்பமானவையே என்பது தான் எனது கருத்து.

            களத்தில் பங்கெடுத்துக்கொண்டே நட்பு சக்திகளுக்கிடையே விமர்சனத்தை பகிர்ந்து கொள்வது தான் சரி. அவர்கள் வரவில்லை நாம் ஏன் போக வேண்டும் என்று பிரிந்து கிடப்பதால் நம்மால் எதை சாதிக்க முடியும். இதனால் யாருக்கு லாபம் என்பதையும் யோசியுங்கள்.

            • PK,

              முதலில் இந்த நிகழ்விற்கு புரட்சியாலர்களுக்கு முறையான அழைப்பு விடுக்க பட்டு உள்ளதா ? அப்படியே அழைப்பு விடுக்க பட்டு இருந்தாலும் பாதுகாப்பு அளிக்கச்சொல்லி அவர்கள் புரட்சியாலர்களிடம் ஏதாவது உதவி கேட்டார்களா ? அவர்கள்[ திக ]மாறிமாறி DMK மற்றும் ADMK விற்கு தேர்தல் நேரங்களில் ஆதரவு அளித்தவர்கள் தானே ? மேலும் DMK மற்றும் ADMKவும் மாறிமாறி ஹிந்துத்துவாவுடன் தேர்தலில் கை குளுக்கியவர்கள் தானே ? இந்த நிலையில் திக பெரியாரிய கொள்கையில் எந்த அளவிற்கு அனுக்கமாக ,நெருக்கமாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா ?

              அம்பேத்தகர் பிறந்தநாள் அன்று புரட்சியாளர்கள் சாதி/மத வெறிக்கு எதிராக எழுச்சியான சுயமான போரட்டங்களை நடத்துவது என்ற நிலைப்பாட்டை விடுத்து , திக விற்கு காலால் படையாக அவதாரம் எடுத்தது ஏன் ?

              //களத்தில் பங்கெடுத்துக்கொண்டே நட்பு சக்திகளுக்கிடையே விமர்சனத்தை பகிர்ந்து கொள்வது தான் சரி. அவர்கள் வரவில்லை நாம் ஏன் போக வேண்டும் என்று பிரிந்து கிடப்பதால் நம்மால் எதை சாதிக்க முடியும். இதனால் யாருக்கு லாபம் என்பதையும் யோசியுங்கள்.//

      • நல்ல வேளை இது போன்ற fringe elements ஒரு அமைப்பின் முடிவெடுக்கும் இடத்திலோ அல்லது குறைந்தபட்சம் கட்சியிலோ இல்லை என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.

        • சுகதேவ் ,எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் , கேள்வி கேட்பவரை fringe elements என்று திட்டும் போது உங்களுக்கு உள்ள திமிர் பதில் சொல்வதிலும் இருக்க வேண்டும் அல்லவா ? சரி என்ன வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள் அதனை பற்றிய கவலை எமக்கு சிறிதும் இல்லை. அதே நேரத்தில் எனது கேள்விகளுக்கு சுகதேவ் பதில் அளிக்கவில்லையே என்ற வருத்தம் மட்டுமே எமக்கு மிஞ்சுகின்றது . பெரியாரின் கொள்கைகளை விட்டுவிட்டு பண வெறியில் ,கல்வி தரகு வேலை செய்கின்ற திக வீரமணி கும்பலுடன் இணைத்து ஹிந்து மத பாசிசத்துக்கு எதிராக போராடுவது தவறு இல்லை என்பதற்கு சரியான உதாரணத்தை நமது மார்சிய வரலாற்று தோழர்களிடம் இருந்து கொடுங்கள் பாப்போம் .

        • நண்பர் சுக்தேவ்,

          உங்களின் இந்த பின்னூட்டத்தை ஏட்டிக்குப்போட்டியாக எழுதியிருக்கிறீர்கள். இது நட்புசக்திகளுக்கிடையே ஆரோக்கியமானதல்ல. பரிசீலிக்கவும். நன்றி.

      • நண்பர் தமிழ்,

        துவக்கத்தில் /விருந்துக்கு,தாலியருப்புக்கு/ என்று இந்தியன் எழுதுவதைப் போல எழுதியிருக்கிறீர்கள். கண்டிக்கிறேன். பிறகு சரியான பதங்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள். பரவாயில்லை.

        எதிரணியில் நான்கு பேர் இருக்கிறார்களா இல்லை நான்காயிரமா என்பது கேள்வியில்லை. நம்மிடம் உள்ள ஒற்றுமையை களத்தில் காட்டியிருப்பது மிகச்சிறப்பானது.

        களத்தில் நின்ற மற்றும் ஒருங்கிணைத்த தோழர்களுக்கு நன்றிகள். திக தோழர்களும் அடிபட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றிகள்.

        • இதையே,இந்த நிகழ்வையே புரட்சியாளர்கள் நிகழ்த்தி இருந்தால் ,

          பார்பன பண்பாட்டை அடித்து நொறுக்கும் மாட்டுகறி விருந்து மற்றும் ஹிந்துத்துவாவுக்கு எதிராக பெண்களின் தாலியறுப்பு போர்

          என்று பொருள் வரும்படியாக தான் பெயர் வைத்து இருப்பார்கள் PK . திக மாதிரி பயந்து பயந்து மொக்கையாக “தாலி அகற்றும் நிகழ்வு மற்றும் மாட்டுக்கறி விருந்து” என்று பெயர்வைக்க மாட்டார்கள் . மே தினமன்று இத்தகைய போராட்டத்தை புரட்சியாளர்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன். அதில் கலந்து கொள்ள ஆவலுடன் இருகின்றேன் .

  3. அண்ணா “திராவிட” முன்னேற்ற கழகம் பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்கிறது.
    “திராவிட” முன்னேற்ற கழகம் பார்ப்பனியத்தை மெளனமாக வேடிக்கை பார்க்கிறது.
    பெரியார் பார்ப்பனியத்தை பந்தாடுகிறார்.

    தி.க., பு.மா.இ.மு., தி.வி.க., த.பெ.தி.க. … மகஇக ஆகிய இயக்கங்கள் வேறுபாடுகளை மறந்து,
    இந்த நிகழ்விற்காக ஒன்று கூடியது மிகச்சிறப்பு.

    நேற்று பெரியார் திடலில் இருக்க முடியாது கண்டு வருத்தமே.

    // டஜன் கணக்கிலான பாசிச அமைப்புகள் ஒத்த நோக்கோடு செயல்படும்போது, நமது பொது எதிரியை எதிர்த்து முறியடிக்க பெரியார் தொண்டர்களும், முற்போக்காளர்களும், புரட்சிகர சக்திகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்.

    // முழுமையாக உடன்படுகிறேன். பலர் இணைந்துதான் பாசிச நச்சை முறியடிக்க முடியும்.

    அனைத்து இயக்கங்களும் இணைந்து கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பெரியார் என்ற மனிதன் தமிழர்களின் வழிகாட்டியாக விளங்குகிறார். அவரை கைத்தடியாக பயன்படுத்தி மதவெறி நச்சுப்பாம்பை அடித்து நொறுக்கத்தான் வேண்டும்.

  4. தாலி கட்டிக்காமலேயே எம் ஜி யாருக்காக உடஙட்டை ஏறுவேன் என்று சொன்ன அம்மா அரசுக்கு தாலி அகற்றுவதில் என்ன கஸ்டமோ தெரியல ஒரு வேளை அம்மா தன்னை ஊழல் வழக்கிலிருந்து விடுதலை செய்தால் தானும் மோடிக்காக உடன்கட்டை ஏறுவதாக சொல்லி இருக்கலாம் அதனால இந்த கூத்து நடந்ததோ என்னமோ தெரியல …

  5. ////திராவிட கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தினால் நேற்று முன்தினம் இரவில் இருந்தே, சென்னை வேப்பேரி பெரியார் திடல் உள்ள ஈ.வி.கே.சம்பத் சாலையில் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டனர். நேற்று காலையிலும் அந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணியில் இருந்தனர். தாலி அகற்றும் போராட்டம் அமைதியாக பெரியார் திடல் வளாகத்தில் நடந்து முடிந்தது. ஆனால் தாலி அகற்றும் போராட்டம் நடத்தியதை கண்டிக்கும் வகையில் இந்து அமைப்பினர் வேப்பேரி பகுதிக்கு வந்து கண்டன போராட்டம் நடத்த முற்பட்டபடி இருந்தனர். வந்தவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தபடி இருந்தனர். இதற்கிடையில் மாலை 3.30 மணி அளவில் சிவசேனா தொண்டர்கள் 4 பேர் ஒரு ஆட்டோவில் கோஷம் போட்டபடி ஈ.வி.கே.சம்பத் சாலையில் வந்தனர். அவர்கள் பெரியார் திடல் வாசல் பகுதியில் சிறிது நேரம் ஆட்டோவில் இருந்தபடியே ஜெய் காளி, ஓம் காளி என்று கோஷம் போட்டபடி நின்றனர். உடனே பெரியார் திடலுக்குள் திரண்டு இருந்த திராவிட கழக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தபடி வாசலுக்கு வந்தனர். சிவசேனா தொண்டர்களை விரட்டினார்கள். அவர்கள் ஆட்டோவை கமிஷனர் அலுவலகம் எதிரில் வந்து நிறுத்தினார்கள். திராவிட கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தினால் நேற்று முன்தினம் இரவில் இருந்தே, சென்னை வேப்பேரி பெரியார் திடல் உள்ள ஈ.வி.கே.சம்பத் சாலையில் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டனர். நேற்று காலையிலும் அந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணியில் இருந்தனர். தாலி அகற்றும் போராட்டம் அமைதியாக பெரியார் திடல் வளாகத்தில் நடந்து முடிந்தது. ஆனால் தாலி அகற்றும் போராட்டம் நடத்தியதை கண்டிக்கும் வகையில் இந்து அமைப்பினர் வேப்பேரி பகுதிக்கு வந்து கண்டன போராட்டம் நடத்த முற்பட்டபடி இருந்தனர். வந்தவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தபடி இருந்தனர். இதற்கிடையில் மாலை 3.30 மணி அளவில் சிவசேனா தொண்டர்கள் 4 பேர் ஒரு ஆட்டோவில் கோஷம் போட்டபடி ஈ.வி.கே.சம்பத் சாலையில் வந்தனர். அவர்கள் பெரியார் திடல் வாசல் பகுதியில் சிறிது நேரம் ஆட்டோவில் இருந்தபடியே ஜெய் காளி, ஓம் காளி என்று கோஷம் போட்டபடி நின்றனர். உடனே பெரியார் திடலுக்குள் திரண்டு இருந்த திராவிட கழக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தபடி வாசலுக்கு வந்தனர். சிவசேனா தொண்டர்களை விரட்டினார்கள். அவர்கள் ஆட்டோவை கமிஷனர் அலுவலகம் எதிரில் வந்து நிறுத்தினார்கள்.

    //// One India இணைய தளத்தில் இருந்து… ஹாஹா செமத்தியா வாங்கி இருக்காங்கசிவசேனை தொண்டர்கள் (குண்டர்களா?), ஒருவேளை கோமியம் குடிக்காமல் வந்து இருப்பாங்க போல.

  6. //21 பெண்கள் தங்களின் கழுத்தில் பெண்ணடிமைச் சின்னமாகத் தொங்கிக் கொண்டிருந்த தாலியைக் கத்தரித்து அகற்றினார்கள்.//

    இந்த 21 பெண்களும் ஏப்ரல் 12 வரை அடிமை வாழ்கை; தாலியை கழட்டியவுடன் சுதந்திரம்/மரியாதை. இந்த சுலபமான முறை பாரதியாருக்கு தெரியாமல் போனதே!!!
    தாலி தான் அடிமை சின்னம் — யாருக்கு? பெண்களுக்கு என்றால்….ஆண்கள் அவர்களை மரியாதையுடன் நடத்தினாலும், அடிமைகள் தனா?
    தாலி தான் அடிமை சின்னம் என்றால் அதை முக்கியம் என எண்ணி கட்டும் ஆண்கள்?? அடிமையின் குழந்தைகளின் தகப்பன்?
    மனைவியை மரியாதையின்றி நடத்தும் ஆண்கள் எவ்வளவு? என்னை கேட்டல் மனைவிக்கு பயப்படும் / மிக அதிக மரியாதை அளிக்கும் ஆண்களை விட மிகவும் கம்மியாக இருப்பார்கள்.

    உண்மையிலேயே தாலியை கழட்ட வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே? விழா என்கிற பெயரில் கேலி கூத்து எதற்கு?

    தி.க. விளம்பரத்திற்காக நடத்தும் ஒரு அர்த்தமில்லா ஆர்ப்பாட்டம்!
    வீரமணி தலைமையில் தாங்கள் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள இதைப்போல் விளம்பரங்கள் அவசியம்.

    தி. க. கூட ஒரு குடும்பக்கட்சி ஆகி விட்டதோ? வீரமணியின் பிள்ளை தானே அடுத்த தலைவர்?
    இவர்கள் எப்போதும் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிப்பவர்கள்; இப்போது என்ன ஆகி விட்டது? ஏன் முந்தைய தலைவியிடம் பிணக்கு? (அழகிரி சொன்ன வார்த்தைகளில் இது மிக சரியானது)

      • தமிழ்,

        இது ஒருத்தரின் தனிப்பட்ட விருப்பு / நம்பிக்கை சார்ந்த விஷயம்.
        நாம் குறிக்கிட வேண்டாம்.

        • உமாசங்கர் , மு.நாட்ராயன்,

          தெரிகின்றது அல்லவா ? தாலியை அணிவதும் ,கழற்றி எறிவதும் தனிநபர் சார்ந்த விடயம் என்று. அதன் பின்னும் என்ன மயிற்றுக்கு சிவசேனா குண்டர்கள் 21 பெண்கள் தாலியை கழற்றி எறிந்த போது கோசம் போட்டு குறுக்கீடு செய்தார்கள் ? சிவசேனா குண்டர்களின் அம்மா ,அக்கா ,ஆயா தாலியை ஒருவேலை யாராவது வலுக்கட்டயமாக கழற்றி இருந்தால் கூட சிவசேனா குண்டர்கள் கோசம் போட்டு குறுக்கீடு செய்வதில் நியாயம் இருக்கிறது. பெரியார் கொள்கையை சார்ந்து 21 பெண்கள் தாலியை கழற்றி எறிவது உம்மை எப்படி சிறுமை படுத்துகின்றது ? உம் சுதந்திரத்தை அந்த பெண்களின் செயல் எப்படி பாதிக்கின்றது. ________

          //இது ஒருத்தரின் தனிப்பட்ட விருப்பு / நம்பிக்கை சார்ந்த விஷயம்.
          நாம் குறிக்கிட வேண்டாம்.//

          • தமிழ்,

            //தெரிகின்றது அல்லவா ? தாலியை அணிவதும் ,கழற்றி எறிவதும் தனிநபர் சார்ந்த விடயம் என்று. //
            பிறகு எதற்கு இந்த “விழா”?
            எதற்கு இந்த “தாலி — அடிமை சின்னம்” என்கிற அர்த்தமில்லா / கண்டனத்துக்குரிய பிரகடனம்?
            யார் இந்த விரசத்தை தொடங்கியது? மக்களுக்கு ஏன் தி.க. வின் உள்நோக்கம் புரியவில்லை?

            நாகரீகமான முறையில் கருத்துக்களை தெரிவிக்கவும். இல்லையேல் உங்கள் கருத்துக்கள் ஒதுக்கி தள்ளப்படும்

            வினவு — என் விண்ணப்பம்: கொச்சையான / வன்முறையை தூண்டும் வாசகங்களை ஒரு போதும் அனுமதிக்க வேண்டாம்.

            • சிவசேனாவின் கொலை வெறிக்கு ஜல்ரா அடிக்கும் உமா சங்கர் ,

              மகளிர் தினத்துக்காக புதிய தலைமுறை நடத்தவிருந்த நிகழ்சி தாலி பெண்ணடிமை சின்னமா ,இல்லையா என்பது . இரு கருத்து உடையவர்களும் அந்த நிகழ்சியில் கலந்து கொண்டு தம் கருத்துகளை நிகழ்சியின் போது அளித்தனர்.அதனை என்ன மயித்துக்கு வன்முறை கொண்டு வெடிகுண்டு வீசி மக்களின் கருத்துரிமைக்கு எதிராக உமது இந்துத்துவா பீடைகள் ,புறம்போக்குகள் தடை செய்தனர்? தாலி பெண்ணடிமை சின்னமா ,இல்லையா? என்று விவாதிப்பது கூட உமக்கு தவறாக படுவதன் மாயம் என்ன ? விவாதிப்பது உடலின் எந்த பாகத்தில் வளிகின்றது உமக்கு ?

              அதன் தொடர்சியாக 21 பெண்கள் தாலியை கழற்றி எறிந்து தமது உரிமையை நிலைநாட்டியுள்ளனர். தாலி வேண்டாம் என்று அவர்களுக்கு போராடுவதற்கு , குரல் கொடுப்பத்ற்கு சுதந்திரம் இருப்பது போது உனக்கும் சுதந்திரம் இருக்கிறது எனவே வழக்கமாக காதலர் தினத்தன்று நாய்களுக்கு தாலி கட்டி இந்துத்துவா வெறியர்கள் கொண்டாடுவிர்கள் அல்லவா அதனை செய்து விட்டு போவது தானே ? தாலியை கட்டிகொள்வதும்,கழற்றி எறிவதும் பெண்களின் உரிமை. தாலியை கட்டிகொள்ளாம் அல்லது கழற்றி எறியலாம் என்று பிரச்சாரம் செய்வதற்கும் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு . [திக உட்பட ]. அப்படி இருக்கும் போது சிவசேனா நாதரிகளின் தாலி அகற்று நிகழ்விற்கு எதிரான வன்முறையை என்ன மயித்துக்கு முராயனுக்கு லைக் போட்டு ஆத்ரிகின்றாய் ?

            • காதலர் தினத்தன்று நாய்களுக்கு தாலிகட்டி திருமணம் செய்வது என்ற பார்பன-தத்துவ ,ஹிந்து-பண்பாட்டு மரபுடன் மும்முரமாக விழா எடுக்கும் இந்துத்துவா புறம்போக்குகளின் போக்கு, தமிழ் பெண்களை இழிவு செய்வதால் அனைத்து பெண்களுமே தாலியை தவிப்பதே அவர்களின் மரியாதையை காப்பாத்தும்.

        • வாசகர்களுக்கு,

          தாலி என்பது தனிப்பட்டவர்களின் விருப்பமாக மட்டும் இருந்தால் இவ்வளவு நீண்ட கால விவாதமும் தேவையிருந்திருக்காது.

          இது கண்டிப்பாக தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்பாக இல்லை.

          ஒரு ஆண் இதை மூடநம்பிக்கையாக நினைத்து அதை ஏற்றுக்கொள்ளாத போது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்களா. அவரை பெண்வீட்டார் ஏற்றுக் கொள்வார்களா. ஒரு பெண் இதை மூடநம்பிக்கையாக நினைத்து அதை ஏற்றுக்கொள்ளாத போது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்களா. அவரை ஆண் வீட்டார் ஏற்றுக் கொள்வார்களா. காதலனும் காதலியும் பேசி தாலியை தவிர்ப்பதாக முடிவெடுத்தால் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்களா. பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளும் போது உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் நம்மை நிம்மதியாக விடுகிறார்களா. இது எதுவுமே இல்லை எனும் போது இது தனிப்பட்டவர்களின் விருப்பம் என்ற பித்தலாட்டம் எதற்கு.

          தொடர்ச்சியான எதிர்ப்பு இயக்கங்களின் மூலம் தான் அருவருப்புகளை அடிமைத்தளைகளைக் களைய முடியும்.

  7. இந்த நிகழ்ச்சியில் மூக்கறுபட்டது தி.க. மட்டுமல்லாது வினவுவும் கூட. தமிழர்கள் தாலி அகற்றும் போராட்டமாம். அப்படியானால் கிருத்துவர்களும் முஸ்லீம்களும் தமிழர்கள் இல்லையா? முஸ்லீம் பெண்கள் உடல் முழுவதும் அணிந்து கொள்ளும் பர்தாவையும் அகற்ற வேண்டும் அல்லது அதனை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று போராட ஏன் புத்தி வரவில்லை. அவர்களும் தமிழர்கள் என்றுதானே நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியானால் இதனையும் சேர்த்து இந்த போராட்டத்தை நடத்தி இருக்கலாமே. ஒருவேளை பெட்ரோ டாலர் வராமல் போய் விடும் என்ற பயமா! அல்லது நமது வீட்டில் குண்டு வெடிக்கும் என்ற அச்சமா! ____________
    இதே வீரமணிதான் பல திருமணங்களில் தாலியை எடுத்து கொடுத்து கட்ட சொல்லியுள்ளார். இதனை யாரும் மறுக்க முடியாது. அப்போது எங்கே போனது தாலி என்பது அடிமையின் சின்னம் என்பது! முதலில் அடிமையாக்கி பிறகு தாலியை அகற்றி தூய்மை படுத்துகிறார்கள் போலும்!! வெள்ளையர்கள்தான் அதாவது கிருத்துவர்கள்தான் இவர்கள் செய்வதுபோல் மணமக்களை உறுதி மொழி எடுக்க சொல்லி “திருமணம்” முடிப்பார்கள். தமிழர்களின் திருமணம் இது போல் எங்கு எப்போது நடந்தது!! எங்கே இருக்கிறது இலக்கிய சான்று. சிலப்பதிகாரத்தில் இது போன்ற திருமண சான்று உள்ளதா !! கிருத்துவர்களையும் முஸ்லீம்களையும் திருப்திபடுத்த தமிழர்களை அவமானப்படுத்தும் இந்த செயலுக்கு வக்காலத்து வேறு!!!!

    • மு.நாட்ராயன் அவர்களே,

      நன்றாக சொன்னீர்கள்
      எப்படி “LIKE” போடுவது என்று எனக்கு தெரியவில்லை

  8. இந்த இடத்தில் நீதிமன்றத்தின் முதல் நீதிபதியின் அனுமதிதான் தவறானது. அவர் ஏன் இது போன்ற தற்குறி கூட்டத்தின் சட்டத்திற்கு முரணான செயலுக்கு அனுமதி கொடுத்தார் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாது காலை பத்து மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கையில் உடனடியாக மாற்றி ஏழு மணிக்கே நிகழ்ச்சியை நடத்தியதன் நோக்கம் என்ன? அரசு மேல் முறையீடு செயவது தெரிந்ததும் இவர்களின் நிகழ்ச்சிகள் தடை செய்யப்படலாம் என்பது தெரிந்ததும் முன் கூட்டியே நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்கள். தமிழர்கள் கூட்டமாக வந்து இந்த நிகழ்ச்சியை தடுத்திருப்பார்கள் என்ற அச்சம்தான் காரணம். அப்படி இருந்தும் சிவசேனை போன்ற தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து இவர்களை பயமுறித்தி உள்ளது பாராட்டுதலுக்குரியது. இது முதல் அடிதான் இனிதான் இருக்கிறது அடுத்த அடி!! தமிழர்களா அல்லது அரபியர்களா அல்லது பெட்ரோ டாலரா அல்லது அமெரிக்க டாலரா என்று பார்த்து விடுவோம்!!

  9. // அப்படி இருந்தும் சிவசேனை போன்ற தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து இவர்களை பயமுறித்தி உள்ளது பாராட்டுதலுக்குரியது//

    மு.நாட்ராயன் சிவசேனை தமிழ் அமைப்பென்றால் அதில் கிருஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் அங்கத்துவ உறுப்பினர்களாக உள்ளார்களா?? சிவசேனை தமிழர் அமைப்பா அல்லது ஹிந்துத்துவா அமைப்பா?? சந்தில் சிந்துபடுவதேன்பது இதுதானோ??

    • தமிழ் நாட்டில் உள்ள சிவசேனை அமைப்பில் முற்றிலும் தமிழர்கள்தான் உள்ளார்கள். அதாவது சுத்த தமிழர்கள். கிருத்துவ மற்றும் இஸ்லாமிய போலிகள் அல்ல . மும்பையில் உள்ள சிவசேனை அமைப்பிலும் மும்பை தமிழர்கள் பலர் உள்ளனர். அதாவது சுத்த தமிழர்கள்.

      • ///இந்த நிகழ்ச்சியில் மூக்கறுபட்டது தி.க. மட்டுமல்லாது வினவுவும் கூட. தமிழர்கள் தாலி அகற்றும் போராட்டமாம். அப்படியானால் கிருத்துவர்களும் முஸ்லீம்களும் தமிழர்கள் இல்லையா? ///

        இந்த கேள்வியை இங்கே கேட்டது நான் அல்ல நீங்கள் என்பதை மனதில் நிறுத்துங்கள். ஒரு பட்சொந்தி போல் நேரத்திட்கேட்பாட்போல் நிறம் மாறாதீர்கள்.

  10. ///சிவசேனை தமிழர் அமைப்பா அல்லது ஹிந்துத்துவா அமைப்பா?? சந்தில் சிந்துபடுவதேன்பது இதுதானோ??///கிருஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் அங்கத்துவ உறுப்பினர்களாக உள்ளார்களா//
    தமிழர்களுக்காகத்தான் இந்த தாலி அகற்றும் போராட்டமாம். இது ஒரு மூடநம்பிக்கை என்ற காரணத்தாலும் அடிமையின் சின்னம் என்பதாலும் இந்த தாலி அகற்றும் போராட்டமாம். முஸ்லீம்களும் கிருத்துவர்களும் தமிழர்கள் என்றால் பர்தா அகற்றும் போராட்டத்தையும் பாதிரிகள் அணியும் பாவடையை அகற்றும் போராட்டமும் ஏன் இணைக்கப்படவில்லை. இவர்களும் தமிழர்கள்தானே!! ஏன் இந்த நயவஞ்சகம்.
    தாலி அகற்றப்பட்டவுடன் இந்த பெண்களுக்கு எந்த வித மாற்றம் உருவானது என்று யாரும் சொல்லவில்லை. சுதந்திரமான உரிமை கிடைத்ததா இல்லையா என்பதை சொல்லவேண்டும். அப்படி உரிமை இப்போதுதான் கிடைத்தது என்றால் இதற்கு முன் இவர்களின் கணவர் ஏன் அந்த உரிமையை இவர்களுக்கு கொடுக்க வில்லை.

  11. ///தமிழர்களுக்காகத்தான் இந்த தாலி அகற்றும் போராட்டமாம். இது ஒரு மூடநம்பிக்கை என்ற காரணத்தாலும் அடிமையின் சின்னம் என்பதாலும் இந்த தாலி அகற்றும் போராட்டமாம். முஸ்லீம்களும் கிருத்துவர்களும் தமிழர்கள் என்றால் பர்தா அகற்றும் போராட்டத்தையும் பாதிரிகள் அணியும் பாவடையை அகற்றும் போராட்டமும் ஏன் இணைக்கப்படவில்லை. இவர்களும் தமிழர்கள்தானே!! ஏன் இந்த நயவஞ்சகம்.
    தாலி அகற்றப்பட்டவுடன் இந்த பெண்களுக்கு எந்த வித மாற்றம் உருவானது என்று யாரும் சொல்லவில்லை. சுதந்திரமான உரிமை கிடைத்ததா இல்லையா என்பதை சொல்லவேண்டும். அப்படி உரிமை இப்போதுதான் கிடைத்தது என்றால் இதற்கு முன் இவர்களின் கணவர் ஏன் அந்த உரிமையை இவர்களுக்கு கொடுக்க வில்லை.////

    நான் கேட்ட கேவிக்கு பதிலளிக்காமல் எதோ உளறுவது போல் உள்ளது உங்கள் மறுமொழி. சிவசேனை கட்சியை எப்படி அதாவது எந்த வரையறைக்குள் உட்படுத்தி தமிழர்கள் என கூறினீர்கள் என்பதுதான் எனது கேள்வி. அதற்கு நீங்கள் மறுமொழி இட்டபின்தான் உங்களின் மேற்கண்ட வினாக்களுக்கு பதிலளிக்க முடியும்.

  12. Mu. Natrayan and Umashankar

    1. If this applies to Christians and Muslims it will be termed as “HURTING THE SENTIMENS OF MINORITIES.”

    2. DK, DMK can only insist Hindus to keep their childrens’names in Tamil (against Sanskrit). They cannot say Muhammad an Joseph are non-Tamil names, so don’t keep it.

    3. If THALI symbolizes slavery, what does wedding rings (for Christians) and Purdahs (for Muslims) symbolize? Empowerment of women, I suppose.

    4. All women associated with DK and DMK persons also removed their Thalis, I suppose.

  13. சில மாதங்களுக்கு முன் விஜய் டி.வி.யில் பெண்களுக்கு ‘பர்தா தேவையா’ என்ற விவாதம் ஒளிபரப்பபடும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதனை கண்ட இஸ்லாமியர்கள் விஜய் டி.வி. அலுவலகத்திற்கு சென்று கடும் கண்டனம் தெரிவித்தனர். அச்சுறுத்தல் விடுத்தனர். இதனால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவில்லை. ஒளிபரப்பி இருந்தால் இந்நேரம் விஜய் டி.வி. அலுவலகம் குண்டுகளால் துளைக்கபப்ட்டிருக்கும். இதற்கு ஏன் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை!!!! இதுவும் கருத்து உரிமைதானே!!!_______________

    • நிச்சயமாக அது கருத்துறிமைதான் அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு தேவை இல்லை. ஒளிபரப்பினால் குண்டுகளால் துளைக்கப்பட்டிருக்கும் என்பது தான் இங்கே சந்தேகத்துக்குரியதாக பார்க்கப்படுகிறது. எதை வைத்து நீங்கள் இஸ்லாமியர்கள் ஆயுதத்தால் பதிலளிப்பார்கள் என முடுவு செய்தீர்கள் என்பதை கொஞ்சம் அறியத்தாருங்கள். அண்மையில் கூட ஹிந்துத்துவா வெறியர்கள் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது ஆயுத தாக்குதல் நடத்தியது உலகறிந்தது.

    • மு.நாட்ராயன், தெரிகின்றது அல்லவா கருத்துரிமைக்கு எதிராக எவர் எந்த வடிவில் போராடினாலும் தவறு என்று ? ‘பர்தா தேவையா இல்லையா’ விடயத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விஜய் டி.வியின் கருத்துரிமைக்கு எதிராக வெறும் கண்டன குரல் எழுப்பியதே தவறு என்கின்றபோது [தவறு என்பதை முட்ராயனும் ஏற்கிறார், நானும் ஏற்கிறேன் ] , தாலி அடிமை தனமா இல்லையா ? என்ற புதிய தலைமுறை நிகழ்ச்சிக்கு எதிராக ஹிந்துத்துவா திவிரவாதிகள் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில் குமாரை தாக்கியதும் , பின்பு அடுத்த நாள் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை ஹிந்துத்துவா புதிய தலைமுறை மீது வெடிவேலு-திவிரவாதிகள் விசியதும் மாபெரும் குற்றம் அல்லவா நெட்டு, கழன்ற நட்ராயன் ? TNTJ இஸ்லாமிய அடிப்படைவாதிகளாவது வாங்க பொது மேடையில் எந்த கருத்தை[நபிகள் ,பர்தா உட்பட] வேண்டுமானாலும் விவாதிப்போம் ,அதனை ஒலி-ஒளி பதிவு செய்வோம் என்று நெஞ்சை நிமிர்த்தி சாவால் விடுகிறார்கள் . ஆனால் ஹிந்துத்துவா திவிரவாதிகளான நீங்க எவ்வளவு பெரிய கோழையாக இருக்கிங்க முட்ராயன் ! ஹிந்துத்துவா திவிரவாதிகளான நீங்க எடுத்தவுடனே வன்முறையில் இறங்கி அடிதடி ,வெடிகுண்டு என்று பேசும் பக்குவம்/அறிவு இன்றி ,மாற்று கருத்துடையவர்கள் பேசுவதை கேட்கும் திறன் கூட இன்றி, அறிவற்ற கைநாட்டு ,கழிசடை இழிசெயல்பாட்டாளர்களாக ஆகிட்டிங்களே முட்ராயன் !

      //சில மாதங்களுக்கு முன் விஜய் டி.வி.யில் பெண்களுக்கு ‘பர்தா தேவையா’ என்ற விவாதம் ஒளிபரப்பபடும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதனை கண்ட இஸ்லாமியர்கள் விஜய் டி.வி. அலுவலகத்திற்கு சென்று கடும் கண்டனம் தெரிவித்தனர். அச்சுறுத்தல் விடுத்தனர்.//

  14. தி.கவினர் நடத்திய தாலி அகற்றும் போராட்டம் மிகவும் வருத்தமளிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது. அந்த நிகழ்விற்கு வந்திருந்த பெண்கள் தாலியை கழற்றியது மனதிற்கு நெருடலாகவும் வருத்தமாகவும் இருந்தது. எங்கள் கத்தோலிக்க சமயத்திலும் தாலி என்பது திருமணமான பெண்களுக்கு முக்கிய அடையாளமாக இருக்கிறது. இதில் மூட நம்பிக்கை, ஆணாதிக்கம் என்பதெல்லாம் ஏதும் கிடையாது. தாலி என்றால் என்னவென்றே தெரியாத மேற்கு உலக நாடுகளிலும் ஆணாதிக்கம், பெண்ணடிமைத் தனம் போன்றவைகள் இருக்கத் தான் செய்கின்றன. கம்யுனிஸ்டுகளின் போராட்டங்கள் உருப்படாமல் போவதற்கு இது போன்ற அதிகப் பிரசங்கித் தனமான செயல்ப்பாடுகளும் ஒரு முக்கிய காரணம். ஆகவே தாலியை அறுத்து போடுவதில் புரட்சிகரமான செயல்ப்பாடு என்று ஏதும் கிடையாது . இப்படியெல்லாம் செய்வது எதிர்க்காலத்தில் ஒரு மன நிலை பிறழ்ந்த சமுதாயத்தை தான் உருவாக்குமே தவிர, வேறொரு பயனும் இருக்காது.

    • தாலி அகற்றும் போராட்டம் என்பதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள்

      1. பெண்கள் மட்டும் திருமண குறியீட்டை ஏற்று கொள்ள வேண்டும் என்கின்ற ஆணாதிக்கத்தை எதிர்கிறது
      2. தாலி பாக்கியம் என்கின்ற பெயரில் ஆண்களின் தவறுகளை பெண்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்கின்ற பொது புத்தியை எதிர்கிறது
      3. சடங்கு என்கின்ற பெயரிலும் , தாலி வடிவமைப்பு என்கின்ற வகையிலும் உள்ள சாதியை எதிகிறது .

      //ன்னவென்றே தெரியாத மேற்கு உலக நாடுகளிலும் ஆணாதிக்கம், பெண்ணடிமைத் தனம் போன்றவைகள் இருக்கத் தான் செய்கின்றன//

      பிறர் செய்யும் அதே தவறை நாமும் செய்ய வேண்டியது இல்லையே

  15. ///இஸ்லாமிய அடிப்படைவாதிகளாவது வாங்க பொது மேடையில் எந்த கருத்தை[நபிகள் ,பர்தா உட்பட] வேண்டுமானாலும் விவாதிப்போம் ,அதனை ஒலி-ஒளி பதிவு செய்வோம் என்று நெஞ்சை நிமிர்த்தி சாவால் விடுகிறார்கள்///
    அய்யோ பாவம் இவர். சமீபத்தில் பாரீசில் நபிகளைப்பற்றி கார்டூன் வெளியிட்ட ஒரு பத்திரிக்கையை இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தகர்த்தனர். மேலும் அதன் ஆசிரியர் குழுவைச்சேர்ந்த 12 பேரையும் சுட்டு கொன்றார்கள். இதனை கண்ட உலகமே அதிர்ச்சியடைந்தது. நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுபவர்களானால் அந்த பத்திரிகை அலுவலகம் தாக்கப்படுவதற்கு முன் இதனை அந்த பத்திரிக்கைக்கு உணர்த்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. வெறும் கோழைகள்!!!

    • முட்ராயன் ,

      தெரிகிறது அல்லவா உமக்கு ? பாரிஸ் பத்திரிக்கை மீது பத்திரிக்கை சுதந்திரத்துக்கு,கருத்துரிமைக்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தவறு என்று உமக்கு தெரியும் போது , தமிழ்நாட்டில் இது போன்றே புதிய தலைமுறைக்கு எதிராகவும் , .திக விற்கு எதிராகவும் ஹிந்து வெடிவேலு திவரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் தவறு என்று உன் மந்த புத்திக்கு தெரியாமல் போனது ஏன் ?

      நாங்கள் சார்லி அல்ல !

      https://www.vinavu.com/2015/02/03/we-are-not-charlie/

      இந்த சார்லி ஹெப்டோ படுகொலை பற்றிய விவாதத்தில் இஸ்லாமிய திவிரவாதிகளுக்கு எதிரான என் கருத்துகளை வேண்டுமானால் இந்த இணைய இணைப்பில் நீர் படிக்கலாமே முட்ராயன் ? அதனை விடுத்து குறங்கு போன்று த்கருத்துகளில் தாவிக்கொண்டு இருப்பது ஏனோ ?

      //அய்யோ பாவம் இவர். சமீபத்தில் பாரீசில் நபிகளைப்பற்றி கார்டூன் வெளியிட்ட ஒரு பத்திரிக்கையை இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தகர்த்தனர். மேலும் அதன் ஆசிரியர் குழுவைச்சேர்ந்த 12 பேரையும் சுட்டு கொன்றார்கள். இதனை கண்ட உலகமே அதிர்ச்சியடைந்தது. நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுபவர்களானால் அந்த பத்திரிகை அலுவலகம் தாக்கப்படுவதற்கு முன் இதனை அந்த பத்திரிக்கைக்கு உணர்த்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. வெறும் கோழைகள்!!!//

  16. தாலி கட்டுவது சம்பந்தமாக பழைய தமிழ் இலக்கியங்களிலும் சங்க இலக்கியங்களிலும் எந்த குறிப்பும் இல்லை என்று வாதிடுவார்கள். திருக்குறளில் புலால் (அசைவம்) சாப்பிடகூடாது என்றும் மது அருந்தக்கூடாது என்றும் கடுமையாக வலியுருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோழைகள் பசுவை கொன்று அன்று விருந்து வைப்போம் என்று அறிவித்திருந்தனர். அத்துடன் மதுவும்தான். எந்த சங்க இலக்கியங்களில் இது போன்ற கருத்துக்கள் உள்ளன என்று கூறவேண்டும். அதே போல் பர்தா அணிவதை எந்த தமிழ் இலக்கியம் வலியுறுத்தி உள்ளது? சில பழக்கவழக்கங்கள் எழுதப்படாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. காலங்காலமாக இது நடந்து வருகிறது. இதனை கொச்சைப்படுத்துவது சரியல்ல.
    கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றும் பரப்புபவன் அயோக்கியன் என்று ஈ.வே.ரா.வின் சிலைக்கு அடியில் எழுதபட்டிருக்கும். கேட்டால் “கடவுள்” என்ற வார்த்தை அனைத்து மத கடவுள்களையும் குறிக்கும் என்கின்றார்கள். ஆனால் தாலி அகற்றுவதில் மட்டும் தமிழர்கள் மனம் புண்படியாக எழுதி மற்றமத நம்பிக்கைகளை சேர்க்கவில்லை. ஏன்?

  17. தாலி அகற்றும் போராட்டம் தேவையில்லாதது தான்.
    நாட்டில் எவ்வளவோ முக்கிய பிரச்சினைகள் இருக்க, இந்த போராட்டம் தேவையே இல்லை.
    விருப்பப்பட்டவர்கள் அணிந்து கொள்ளட்டும். விருப்பமில்லாதவர்கள் அணிய வேண்டாம். இது தாலிக்கு மட்டுமல்ல, பர்தாவுக்கும் பொருந்தும்.

    • கற்றது கையளவு அவர்களின் ஜனநாயக உணர்வு பல் இளிகின்றதே ! மகளிர் தினத்தன்று புதியதலைமுறை நடத்தவிருந்த தாலியை பற்றிய விவாதம் ஜனனாயகத்துக்கு உட்பட்டது தானே ? அதில் இருகருத்து உடையவர்களும் கலந்து கொண்ட நிலையில் வன்முறை மூலம் வெடிகுண்டு வீசி அந்த தொலைகாட்சி நிகழ்சியை தடை செய்த ஹிந்துத்துவா தீவிரவாதிகளை தட்டி கேட்க மனம் இல்லாமல் அதன் தொடர்சியாக ,எதிர் வினையாக திக நடத்திய தாலி அகற்றும் நிகழ்வை மட்டும் தேவையற்றது என்று கற்றது கையளவு கூறுவதன் பின்னணி என்னவோ ?21 பெண்கள் தாலியை அகற்றியதன் மூலம் கற்றது கையளவுக்கு ஏற்பட்ட களங்கம் என்னவோ ?

  18. பார்ப்பனிய, பாசிச பொது எதிரியை வீழ்த்த பெரியார் இயக்கங்கள் உள்ளிட்ட முற்போக்கு சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்தை நிச்சயம் வரவேற்கிறேன்..

  19. பெரும்பான்மை உழைக்கும் மக்களை சூத்திரர்கள் என பார்ப்பனியம் வகைபடுத்தி வைத்துள்ளது.சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என அதற்கு அர்த்தம்.இந்த இழிவை ஏற்றுக்கொள்ளும் போது புண்படாத மனம் தாலியை அகற்றினால் மட்டும் புண்படுவது என்பது கேலிக்கூத்தானது .தாலியை அணிவதும் அகற்றுவதும் அவரவர் விருப்பம் எனில் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சூத்திரன் பட்டம் அனைவராலும் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டமா? திறந்த மார்பில் நெலியும் பூணூலைக் காணும் போது நினைவுக்கு வருவது சூத்திர இழிவு தானே? அதற்காக பூணூலை அகற்றும் போராட்டம் அல்லவா நடத்தப்பட வேண்டும்? .இந்துமத அசிங்கத்தை பேச மறுத்து பர்தாவுக்கு தாவும் நரிகளே முதலில் எங்கள் வம்சத்தையே துவம்சம் செய்த மடிசாரையும்,பஞ்சகட்சத்தையும் அல்லவா முதலில் ஒழிக்கப் போராடவேண்டும்.நீண்டகாலமாக தீர்க்கபடாத கணக்கல்லவா இது?

  20. //பெரும்பான்மை உழைக்கும் மக்களை சூத்திரர்கள் என பார்ப்பனியம் வகைபடுத்தி வைத்துள்ளது.சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என அதற்கு அர்த்தம்//

    இது முழுக்க தவறானது

    நான் வாசித்தது: சூத்திரம் என்றால் Formula / தொழில் நுட்ப விளக்கம் / தொழில் அறிவு
    சூத்திரன் என்றால் சூத்திரம் அறிந்தவன். அதாவது தொழில் நுட்ப அறிவு படைத்தவன் என்று பொருள்
    இதன் படி நமது நாட்டில் பலர் சூத்திரர்கள்; இதில் தாழ்வு/இழிவு ஒன்றும் இல்லை.

    //திறந்த மார்பில் நெலியும் பூணூலைக் காணும் போது நினைவுக்கு வருவது சூத்திர இழிவு தானே? //
    அர்த்தமில்ல வாதம் / விதண்டா வாதம்
    யாரோ ஒருவர் பூனல் அணிந்தால், நமக்கு என்ன?
    இதனால் வேறு ஒருவருக்கு இழிவோ / பழியோ ஒரு போதும் கிடையாது
    இது அரசியல் வியாபாரம் செய்யும் / செய்த பிரிவினை வாத சக்திகளின் இழிவு பிரச்சாரம்

  21. Uma Shankar,

    சூத்திரர்கள் யார் ?
    சூத்திரர்கள் 7 வகையாக பார்ப்பனிய மனுதர்மம் சொல்கிறது .
    1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் .
    2) யுத்தத்தில் கைதியாக பிடிபட்டவன் .
    3) பிராமணிடத்தில் பக்தியால் ஊழியஞ் செய்பவன் .
    4) விபாச்சரி மகன் .
    5) விலைக்கு வாங்கப்பட்டவன் .
    6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன் .
    7) தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்பவன் .
    – (மனுஸ்மிரிதி .அத்.8 சு .415).

    • So below categories say it is not by birth and one’s status can change because of activities

      1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் .
      2) யுத்தத்தில் கைதியாக பிடிபட்டவன் .
      3) பிராமணிடத்தில் பக்தியால் ஊழியஞ் செய்பவன் .

      These are because of some one else powerful

      5) விலைக்கு வாங்கப்பட்டவன் .
      6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன் .

      these are by birth

      4) விபாச்சரி மகன் .
      7) தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்பவன் .

      • Raman do not be abstract the issue. நாட்டின் பூர்வகுடி மக்கள் ,தொல்குடி மக்கள், ஈரான் போன்ற பகுதியில் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இருந்து வந்தேறிகளான ஆரிய-பார்பனர்களால் ஒடுக்கப்பட்டு அவர்கள் மீது ஏற்றிவைக்கபட்ட அவ பெயர்தான் சூத்திரர் என்பது. அத்தகைய ஆக்கிரிமிப்பு நிகழ்வு இந்திய வரலாற்றில் தொடர்ந்து நடந்துகொண்டு தான் உள்ளது. இன்றும் சத்தீஷ்கரின் தண்டகாருண்யா காடு, மலை பகுதிகள் மீது, அதன் பூர்வ குடி ஆதிவாசி-தோல்குடி மக்கள் மீது, பார்பனியர்களின் அதிகாரத்துக்கு கட்டுபட்ட அரசுபடைகள்-சத்திரியர்கள் அந்த மக்கள் மீது செய்து கொண்டு உள்ள மாபெரும் மனித உரிமை மீறல்கள் , பூர்வகுடி பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துதல் , அவர்கள் பாரம்பரிய விவசாய நிலங்களை பறித்தல், அவர்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து துரத்துதல் ஆகிய வன்முறைசெயல்கள் மனுதர்மத்தின் அடிப்படையில் தான் நடந்து கொண்டு உள்ளது. இத்தகைய அரசு படைகளின் வெரிசெயலுக்கு காரணம் அந்த பூர்வகுடி மக்களின் ,தொல்குடி மக்களின் காலடியில் உள்ள பல இலச்சம் கோடி மதிப்பிலான கனிமங்களை கொள்ளையடித்து வய்சியர் என்னும் மனுவின் ஒரு பிரிவான கார்புரேட்டுகளுக்கு அந்த கனிமங்களை கொள்ளையடிக்கும் உரிமையை கொடுக்கும் நயவஞ்சக செயலே காரணம் ஆகும் .

      • இவ்வளவு எளிமையாக பார்பனிய சதியை வகைப் படுத்த முடியாது.
        1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் .
        2) யுத்தத்தில் கைதியாக பிடிபட்டவன் .
        இந்த இருவகைகளில் சூத்திரன் ஆக்கப்பட்ட பார்பனர் யாரையாவது காட்ட முடியுமா

      • ராமன் அவர்களே, யுத்தம் என்றால் என்ன என்பதையும் பார்க்க வேண்டும் (பார்பனர்கள் அகராதியில்).
        மொத்தாதில் பார்பனர்களால் அடிமை படுத்தபட்டவன்.

  22. இந்த விளக்கங்கள் திருப்த்தியாக இல்லை
    நான் மனு ஸ்ம்ரிதி ஸ்லோகங்களையும் அதன் தமிழாக்கமும் தேடிகொண்டிரிக்கிறேன்.
    அதை படித்தப்பின் தான் சொல்ல முடியும்
    நண்பர்களே, புத்தகமோ / link URL இருந்தால் சொல்லவும்….

    • இப்படித்தான் உமா , கொடுக்கப்பட்டு உள்ள ஆதரங்களை கூட படிக்காமல் விட்டால் போதுமென்று ஒடிப்போயிடனும் . ஓகே உமா better luck next time .

    • நிஜத்தில் நீங்கள் என்ன லூசா உமா சங்கர் ? உப்புமா சங்கர் கொடுத்து உள்ள pdf இணைப்பில் பக்கம் 56ல் , chapter VIII ல் ஸ்லோகன் 415ஐ தேடி படிக்கக்கூட திறன் அற்றவரா நீங்கள். அது சரி சூத்திரன் மற்றும் சூத்திரம் ஆகிய செற்க்ளுக்கான தொடர்பை எங்கு இருந்து படித்திர்கள் என்பதையாவது இங்கு வந்து உளறலாமே ! மன்னிக்கவும் கூறலாமே உமா !

      http://sanskritdocuments.org/all_pdf/manusmriti.pdf

      Again go and reach the page 56 and find the chapter 8 and read the slogan 415 here in this link. Best wishes for your search.

  23. கொடுக்க பட்டு உள்ள விளக்கங்கள் திருத்தியாக இல்லையென்றால் அதனை என் அப்படி என்று விளக்குவது உமாவின் வேலைதானே ? அதனை விட்டு விவாதத்தில் இருந்து விலகக்கூடாது அல்லவா ?

  24. I would be more than happy to participate in the debate if it’s done with decency. Readers are more than welcome to judge my thoughts. People should learn to put forth their thoughts without hurting others / personal criticism.

    The material presented here is not at all convincing. I can’t accept what’s given is true. Hence I’m not able to comment; I’m looking for original content with translation. I will have to read it first before opening my mouth.

    I will give an example:
    I am reading “Artha Saasthiram” by Chanakkiyar; it consists of original slokas with illustrations. It’s different from what I see on some websites.

    • உமா , நான் கொடுத்த தொடர்பில் இருக்கும் சூத்திரர்கள் என்பதற்கு விளக்கம் உங்களுக்கு பிடிபடாவிட்டால் போகின்றது. அது சரி உமா , சூத்திரர்கள் என்பதற்கு விளக்கம் சூத்திரங்கள் என்று எடுத்து விட்டிர்கள் அல்லவா ? அதனை எங்கு படித்திர்கள் என்றாவது கூறமுடியுமா ?

  25. Good question Uppuma…..
    I am still trying to find the source; since I am thousands of miles away at the moment, I am not able to access some of the materials I read.
    Sorry……I will provide proof as soon as I find it.
    Thanks!!

Leave a Reply to பெரிய.சரவணன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க