privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு - உச்சநீதிமன்ற விவாதம்

அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு – உச்சநீதிமன்ற விவாதம்

-

43 ஆண்டுகளுக்கு முன்பு “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” என இயற்றப்பட்ட தமிழக அரசின் சட்டம் செல்லும் என 1972-ல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி பார்ப்பனர்கள் வாரிசுரிமைப்படி அர்ச்சகர் பணி நியமனம் கேட்பது ஒழிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவு இன்றளவும் செல்லாக்காசாக இருக்கிறது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக இன்றளவும் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2006–ல் தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் 1972 தீர்ப்பை வைத்தே முடக்கி தடை உத்தரவு பிறப்பித்தது. பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் சார்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், 2009 முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது.

கடந்த வாரம் முதல் அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை நடந்து வருகிறது. விரைவி்ல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.

அர்ச்சகர் வழக்கு உச்சநீதிமன்றத்தில்
அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை விரைவி்ல் முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு தெரிவிக்கும் மதுரை சிவாச்சாரியர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் பராசரன் தன் சொந்த வழக்காக இன்று வரை நடத்தி வருகிறார்.

“சிவாச்சாரியார்கள் இல்லை என்றால் கோவிலுக்கு போவதை நிறுத்தி விடுவேன். கருவறையில் பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டு விடும். தெய்வீக சக்தியை இழந்து விடும்.கோவிலின் புனிதம் கெட்டு விடும்.

காலம் காலமாக பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை, மரபுகளை மாற்றக்கூடாது. இவை இந்து மதத்தின் ஆணி வேர். இவையெல்லாம் பார்ப்பனர்களின் மத உரிமை, அதில் அரசு தலையிடக்கூடாது. 1972 –ல் அர்ச்சகர் நியமனத்தில் ஆகமத்தை பின்பற்றுவோம் என, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் வாக்குறுதி அளித்தார். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என அவசரச் சட்டம் இயற்றியதுடன், அது காலாவதியான பின்பும் அரசாணை மூலம் நிற வேற்ற முயலுகிறார்கள். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார் பராசரன்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் (கோப்புப் படம்)

1972 சேசம்மாள் தீர்ப்பில் உள்ள ஆகமம் பற்றிய கட்டுக்கதைகளை ஆதாரமாக வைத்து இன்றும் ஆணித்தரமாக வாதிடுகிறார், பராசரன். உச்ச நீிதிமன்றமும் அதை நிராகரிக்காமல் கரிசனத்தோடு கேட்கிறது.

அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஙர் பி.பி. ராவ் “எதிர்காலத்தில் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்றே வழக்கு தொடுக்க முடியாது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நாங்கள் பணியமர்த்தினால் இவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்! அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், செல்லா நிலையாகும். அர்ச்சகர் பணி நியமனம் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இட ஒதுக்கீடு அடிப்படையில் அதற்கு உரிய தகுதி உள்ள மாணவர்களை பொதுக் கோவிலில் நியமிப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமை ஆகும்.

1972–ல் சேசம்மாள் வழக்கு தீர்ப்பின்படி கருவறையில் தீணடாமையை ஒழிக்க வாரிசுரிமை அரச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டது. பிற சாதியினரை அர்ச்சகராக நியமித்தால் சிவாச்சாரியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

தாங்கள் தனி வகையறா என்றால் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிரூபிக்கட்டும். சைவக் கோவில்களுக்கு உரிய பாடத்திட்டம் பயிற்சி, தகுதி, வைணவக் கோவில்களுக்கு உரிய பாடத்திட்டம், பயிற்சி, தகுதி இதில் சாதி பாகுபாடு இல்லை.

அரசு வேலை வாய்ப்பில் சாதி, மத, இன வேறுபாடும் இல்லை. அரசியலமைப்பு சட்டம் சரத்து 16-ன்படி அனைவருக்கும் சமவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அர்ச்சகராக வேண்டும். பிறர் வருவதை தடுப்பது’ என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்துக்கள் அனைவரும் சமம், அனைத்து சாதியினரும் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதை ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வும் உறுதி செய்தது. இதன் மூலம் ஆலயத்தீண்டாமை ஒழிக்கப்பட்டது. அது போல் கருவறைத் தீண்டாமையை ஒழிக்க அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணியமர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளது” என வாதிட்டார். இன்றும் தொடர்ந்து வாதிட உள்ளார்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் போராட்டம்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் (கோப்புப் படம்)

அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அரங்கநாதன், சடகோபன் சார்பில் மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வேஸ், மற்றும் வழக்கறிஞர் கோவலின் பூங்குன்றன் ஆகியோர் வாதிட உள்ளனர்.

மாணவர்கள் தரப்பில் ”பார்ப்பனரை தவிர பிற சாதியினர் சாமியை தொட்டால் கருவறை தீட்டாகிவிடும் என்பது கட்டுக்கதை. பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தையும் வருமானத்தையும் நிலைநாட்டிக் கொள்ளவே பிற சாதியினர் அர்ச்சகராவதை எதிர்க்கின்றனர். தீட்டுப்பட்டுவிடும் என்பது அரசியலமைப்பு சட்டப்படி தீண்டாமை குறற்ம்.

1972–ல் பரம்பரை வாரிசுரிமைப்படி பார்பப்னர்கள் மட்டுமே அர்ச்சகர் என்பதை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் போடப்பட்டது. அச்சட்டம் செல்லும் எனக் கூறியதை ஒதுக்கி விட்டு, அதில் கூறப்பட்டுள்ள ஆகமம் தொடர்பான கருத்துக்களை, ஆன்மிகம் தொடர்பான விபரங்களை திரித்தும், பிரித்தும், பித்தலாட்டமாக நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றனர். 43 வருடங்களுக்கும் பிறகும் எங்களைத் தவிர யாரும் அர்ச்சகராகக் கூடாது என எதிர்க்கின்றனர். அர்ச்சகர்களுக்கு உரிய தகுதி அனைத்தும் பெற்று உரிய சான்றிதழ் பெற்றும் பிறப்பில் பிராமணர் இல்லை என்பதற்காக பணி நியமனம் கூடாது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

"இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது" - அர்ச்சகர் மாணவர்கள்
“இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது” – அர்ச்சகர் மாணவர்கள்

அனைத்து பொதுக்கோவில்களிலும் உரிய தகுதியுடையவர்களை அர்ச்சகராக நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. பிறப்பால், தனி வகையறா என எதிர்க்க முடியாது. இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது” என வாதிட உள்ளோம்.

  • தகவல்:
    மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், புது தில்லி
  1. வாழ்த்துக்கள். வழக்கில் வெற்றி பெற திருமால் அருள் புரியட்டும்.

  2. திருமாலும்,சிவனும் பக்தர்களுக்குள் பாகுபாடு பார்த்தாக புராணக்கதைகளில் கூட இல்லை! ஆனால் இந்த பார்பன இனவெறியாளர்கள் அனுமதிப்பார்களா? அதிகாரம் அவர்களிடம் குவிந்துள்ளதே! மமதையும் அதற்கேற்றாற்போல கூடியிருக்குமே! வெஙடேசனார் ததாஸ்து சொன்னால் சரிதான்!

  3. அயொத்தி உயர்னீதி மன்றத்தில் வினோதமான தீர்ப்பை கூறி, இந்தியநீதித்துறை தனது ராமபக்தியை உலகறியச்செய்தது! உச்சனீதிமன்றமும் தனது இந்துத்வா பக்தியை பறைசாற்றநல்ல வாய்ப்பு ! சு.சாமி அதற்கான முயற்சியில் ஏற்கெனவே இறஙியிருப்பாரே!

  4. இந்தியாவை ஆகமவிதிகள் தான் ஆள வேண்டும் என்கிறது பார்ப்பனக் கூட்டம்.அரசியல் சட்டம்தான் ஆள வேண்டும் என்று சொல்கிறோம் ஜனநாயகத்தை வேண்டும் பெரும்பான்மை மக்களாகிய நாம்.உச்ச நீதிமன்றமானது உச்சிக்குடுமி மன்றமாக இருப்பதால் அவாள் சொல்வதைக் காதைத் தீட்டிக்கொண்டு கேட்கிறது.அரசியல் சட்டமே அவாளிடம் அந்தர் பல்டி அடித்துக் கொண்டிருக்கிறது.ஆர்.எஸ்.எஸ்.மோடி ஆட்சியில் ஆகமமே அரசியல் சட்டம் என்று ஆகிவிட்டால்,அந்த சட்டத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும்?ஆகமத்தைக் குழியில் போட்டு கூடவே சு.சாமியையும் இணைத்துப் புதைக்க வேண்டியது தான்.

  5. உண்மையில் இந்த வழக்கில் இவர்கள் வெற்றியடைய வேண்டுமென்பது தான் என்னுடைய கனவாக இருந்தாலும் கூட, சிதம்பரம் கோயில் வழக்கில் இந்திய நீதித்துறை நடந்து கொண்ட முறையைப் பார்த்த பின்பு பார்ப்பனர்களுக்கெதிரான எந்த வழக்கிலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் வெற்றியடைவார்கள் என்று நான் நம்பவில்லை.

    தமிழர்களின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாகிய சிதம்பரத்தை, அதிலும் பெரும்பான்மை சைவத் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலே சைவத்தின் மெக்காவாகிய தில்லைச் சிதம்பரத்தை, எவ்வாறு இந்திய நீதித்துறை, சட்டபூர்வமாக ஒரு பார்ப்பனக் குழுவின் தனிப்பட்ட சொத்தாக மாற்றியது என்பதையும், அதை ‘ஞே’ என்று எருமை மாதிரி தமிழ்நாட்டுத் தமிழர்கள் பார்த்துக் கொண்டிருந்த விதத்தையும், அந்த விடயத்தில் சுப்பிரமணியம் சுவாமி போன்ற தமிழெதிரிகளின் கொட்டத்தையும் பார்த்த பின்பு இந்த வழக்கில் இந்த தமிழ் அர்ச்சக மாணவர்கள் வெற்றி பெறுவார்கள் போல் தெரியவில்லை. எதிர்க்க வேண்டிய, அவற்றை எல்லாம் எதிர்த்துப் போராட்டம் நடத்தாமல் தமிழர்கள் தமிழர்களாக ஒன்றுபடுவதையும், தமிழர்களின் தாலியையும், எதிர்த்துப் போராட்டம் நடத்தும் திராவிட வீரர்களின் திராவிட மாயையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கட்டுண்டு கிடக்கும் வரை தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுடன் முண்டி, தமிழர்கள் ஒருபோதும் வெல்லப் போவதில்லை.

  6. ஆகம விதிப்படி கோவில்களில் பூஜை செய்வதற்கான பயிற்சி வகுப்புக்களில் அனுமதிக்கப்படுவோர் பிறப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படாமல் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க்கப்பட வேண்டும். இறைவனை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபடும் கோயில்களில் சிரத்தையுடன் பூஜைகள் நடைபெற்றால்தான் வழிபடும் பக்தர்களுக்கும் உரிய பலன் கிடைக்கும்.

Leave a Reply to செங்கதிர்செல்வன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க