privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி - புதிய கலாச்சாரம் வெளியீடு

மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு

-

puthiya-kalacharam-may-2015மாட்டுக்கறி பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் – மே 2015 வெளியீடு

அன்பார்ந்த நண்பர்களே,

புதிய கலாச்சாரம் சார்பில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 2015 மே நாள் முதல் மாதம் ஒரு வெளியீடு கொண்டுவர இருக்கிறோம். மோடி தலைமையில் பா.ஜ.க கும்பல் ஆட்சி அமைத்த பின், ஒருபுறம் நாட்டு மக்களின் வாழ்வை நாசமாக்கும் பொருளாதாரக் கொள்கைகள் ஏகாதிபத்திய விசுவாசத்துடன் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் இந்துமதவெறி நிகழ்ச்சி நிரலும் திணிக்கப்படுகிறது.

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள், கல்வித் துறை பார்ப்பன மயமாக்கம், ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அரசு விருதுகள்.. என்று நீளும் இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு மாட்டுக்கறி மீதான தடை.

இந்தியாவின் உழைக்கும் மக்கள் குறிப்பாக நகர்ப்புறத் தொழிலாளிகள் உண்ணும் மாட்டுக்கறியை மராட்டியத்தில் தடை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே குஜராத்தில் இருக்கும் இத்தடைச்சட்டம் இனி இந்தியாவெங்கும் கொண்டு வரப்படலாம்.

இதன்படி, இனி நாம் எதை உண்பது என்பதை இனி பார்ப்பனக் கூட்டம் கும்பல்தான் முடிவு செய்யுமா என்பதே நம் முன் உள்ள கேள்வி. புனிதப்பசு என்ற பார்ப்பன – ஆதிக்க சாதிக்கருத்தியலின் அடிப்படையில்தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்ற போதிலும், அதனை மறைத்துக் கொண்டு விவசாயிகளின் நன்மைக்காக என்று விளக்கம் சொல்கிறது பா.ஜ.க. மாட்டுக்கறி உண்டால், வெட்டினால், விற்றால், வாங்கினால் சிறைத் தண்டனை என்று மிரட்டுகிறது.

பார்ப்பனியத்திற்கும், தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தில் மாட்டுக்கறி ஒரு முக்கியமான ஆயுதம். சாதி ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடாகவும் அது இருக்கிறது. அவ்வகையில், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான கருத்தியல் ஆயுதமாக இந்நூல் பயன்பட வேண்டுமென விழைகிறோம்.

நன்றி!

தோழமையுடன்,
புதிய கலாச்சாரம்.

பொருளடக்கம்

  1. மாட்டுக்கறி தடைச்சட்டம் வலக்கரத்தில் கோமியம் இடக்கரத்தில் ஹாம்பர்கர்
  2. பண்டைய இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடுவது இயல்பாக இருந்தது! வரலாற்று அறிஞர் டி.என்.ஜா நேர்காணல்
  3. இந்தியாவில் மாடுகள் : புனிதமா… பொருளாதாரமா?
  4. கோசாலை – காப்பகமா, காட்சிக்கூடமா?
  5. மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை பா.ஜ.க பாசிசம்
  6. சிறுகதை கொழுப்பு – சா. செல்வராசு
  7. குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பயங்கரவாதிகளாம்!
  8. தமிழ் மக்களின் உணவு புலால்
  9. விரைவில் பிரியாணிக்குத் தடை மோடி அரசு அடக்குமுறை
  10. யாகத்திற்கு பசுவை வெட்டலாம் மகா பெரியவாள் வாக்குமூலம்
  11. பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!
  12. ஆவின்றி அமையாது உலகு நாம் அறிந்திராத மாட்டின் பயன்பாடுகள்
  13. மாட்டுக்கறி தின்பவர்கள் மாவோயிஸ்டுகளாம்!
  14. கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர்!
  15. மாமி-மாட்டுக்கறி-நக்கீரன் : பார்ப்பன கும்பலின் தீண்டாமை வெறி!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

  1. பேஷ் பேஷ் நன்னா மாட்டு கறி விருந்து போங்கோ…லேட்டா வந்தாலும் கறி விருந்தோட கலாச்சாரம்.

  2. பசுவை இந்துக்களின் [பார்ப்பனர்களின்] கடவுள்/தாயாக வைத்துக்கொள்வோம்; ஆனால் எருதையும்/எருமையையும் உண்பதற்கு ஏன் தடை செய்ய வேண்டும் ? முஸ்லிம்கள் மட்டுமல்லாது; தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட இந்துக்களில் பெரும் பிரிவினர் – ப்ரோடீன் அதிகமாகவும் / குறைந்தவிலையில் கிடைப்பதால் உண்கின்றனர். அதே போல் ராஜஸ்தானிலும் ஒட்டக இறைச்சியை தடை செய்து விட்டனர். இதன் மூலம் முஸ்லிம்களின்/தாழ்த்தப் பட்டவர்களின் ஜனத்தொகையை கட்டுப்படுத்தி விடலாம் என தப்புக்கணக்குப் போடுகின்றனர்!

  3. இதற்கு பதிலாக எல்லொரும் பன்னி கறி மற்றும் நாய் கறி உண்ணலாமே!!

    • நல்ல விஷயம்.நீங்களே ஆரம்பிச்சு வைக்கலாமே!
      ஆனா நாய்-பைரவர்.பன்றி-விஷ்ணு(வராக அவதாரம்)
      ஒன்னும் பிரச்னை வராதே பாஸ்?

  4. நீண்ட இடைவெளிக்கு பின் புகா தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வர வாழ்த்துக்கள்

  5. அடுத்து பால் குறிப்பாக பசும்பால் குடிக்க தடை வரலாம்.புனிதமான பசுவின் பாலை நாம் குடித்து விட்டு பசுதனை இழிவு படுத்தலாமா ? அதுவும் பசியோடு நின்றுகொண்டிருக்கும் கன்று பார்த்துக்கொண்டிருக்கும் போழ்தே பால் கரப்பதா? கோகுல கருமைந்தனே வந்தாலும் பால் கிட்டாது அவருக்கு! வாழ்க, வளர்க வல்லரசாகத் துடிக்கும் இந்தியாவின் முழுமுயற்சிகள் !

  6. Today”s Dinamani(3-5-2015-Weekly Supplement-Kondaattam)carried a news item stating that the vultures feasting on the dead cattle are becoming endangered species.The reason being they got eliminated due to poisoning when they ate the dead cattle injected with a medicine containing Diclofenag.The traces of this chemical was found in the intestine of the dead cattle.At the end of the news item,Dinamani,instead of advising cattle owners not to inject the harmful substance to their cattle,advised its readers not to consume beef.Even though Dinamani mentioned about the likely contamination of milk,it has not advised its readers not to consume milk,curd etc or refrain from using Komiyam(cow”s urine)or Panchakavyam(all bi-products from cow including its excreta).

  7. Diclofenac is a painkiller drug which is harmless to the cow is harmful to the vultures.This drug has been banned in India in 2006.According to a study undertaken in UK,the cow”s milk was found to be having the residue of diclofenac-www.dailymail.co.uk/sciencetech/article-2012050/The-Cocktail-20 chemicals-glass-milk.html

    • This is serious. Sooriyan, Why they are using pain killers on cows?
      I was told that chickens are given harmone injections so that they grow to full size in 21 days instead of 42 days. Because of this, people who eat chicken nowadays are getting lots of harmone related issues, girls attending pubetry at the age of 8 or 9; Men having problems in Sperm count, This is getting scary. Due to the greed of one people, entire community is getting affected.

      Very Very strict laws and regulatory measures needed to be taken immediately.

  8. Sir we can discuss plenty of other matters in புதியகலாச்சாரம்,

    AT present plenty of problems are there

    (i) Land act

    (ii) Farmer suicide

    (iii) J.J. case

    (iv) DMK and ADMK spoil the people (Free tvs, fan, vote for cost)

    I am not told dont discuss மாட்டுக்கறி

    But entire book discuss only this matter.

    Than how people will see you?

    • Sir,Vinavu is discussing all matters listed by you.Ban on beef eating is also an important matter.The problem is not only preventing poor people from having cheap source of protein,but also the ban is affecting the livelihood of lakhs of people.Let us read two letters written by “The Hindu”readers today(4-5-2015)-T.Anandraj writes from Chennai,”We are a nation that has double standards.On the one hand,the govt bans the sale of beef and on the other,it washes its hands of farmers”problems.Cattle are a part and parcel of agriculture and have a life.Therefore,the govt must think of a scheme to ensure their upkeep.When the govt is not bothered about farmer distress,how can we expect it to extend some courtesy to a beast?”
      Amina Omer,also from Chennai writes thus,”Laws and rules only appear to be increasing the suffering of the poor.Having to look after their cattle will only aggravate the sorrow plight of the farmer.Also,beef was most often consumed by the poor as it is the cheapest meat when compared to mutton.One hopes that the govt does a beef ban rethink.”

      • Sir can you give link of “Vinavu is discussing all matters listed by you”

        I want to tell if you discuss only “மாட்டுக்கறி” people may not interested, even they wont buy the book also.

        If you want reach audience dont discuss one matter.

        You please imagine how many people follow against god, very limited only.

        If people see eat மாட்டுக்கறி means, they will reject the book.

  9. பல்வேறு அண்டப்புளுகுகளை கூறி, படிப்பவரை மதிமயன்க செய்து , கடைசியில் மதவாதத்தில் முடிப்பதுதான் பார்ப்பன யுக்தி! பிள்ளைக்கறி கேட்ட இவர்களது சாமி, பன்றிக்கறியும் சாப்பிட்ட கதை இவர்கள் எழுதியதுதானே! நாகரிக சமூதாயம் மலரும் இக்காலத்தில், உடல்னலம்பேண சுத்தமும், சுகாதாரமும் கொண்ட எந்த கறியையும் சாப்பிடலாமே! இதில் மதத்தை கலப்பது சுயனலமே!

  10. கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியை தூக்கி மனையிஉல் வை – என்பது தான் பார்ப்பன அர்சியல் யுக்தி ! மாட்டுக்கறியோ, பன்றிக்கறியோ அன்றி வெறும் மரக்கரியானாலும் சரி, எல்லாம் ஒரு திசைதிருப்பும் நாடகமேயாகும்! குஜராத்தில் மதுவிலக்கு, ஆனால் அஙகு கள்ளச்சாராயம் கடலென ஓடவில்லையா? தடைசெய்யப்பட்ட எந்த விடயமும் அழிந்து விடுவதில்லை! வீருகொண்டு எழும்பிவிடும்! ஆனால் இவர்கள் திறைமறைவில் கொள்ளையடிப்பது, மக்கள் சுதந்திரத்தை மிதிப்பது உணரப்படாமல் போகிறதல்லவா? இந்திரா ஏழ்மையை ஒழிப்போம் என்று வெற்று கோஷமிட்டு எமெர்ஜென்சியை திணித்தார்! காவிகள் மாட்டுகறி, கோழிக்கறி என்று பார்பனரல்லாதாரின் பொருளாதாரத்தில் கைவைக்கிரார்கள்! சந்தடி சாக்கில் ,நாடுநடப்புகளை மறைத்துவிடலாமல்லவா? காலம் தவ்றி பெய்த, பெரு மழையால் வடக்கே உள்ள, கடும் வறட்சியால் தென்னகத்து விவசாயியும் கைபிசைந்து நிற்க, விவசாய-தினக்கூலி மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குகிறது அரசு! குதிரை பந்தயத்தை, கோவில் யானைகள் சித்திரவதைகளை கண்டுகொள்ளாத அரசு, மாட்டுக்கறியில் மூக்கை நுழைப்பது ஏன்?

    • // குஜராத்தில் மதுவிலக்கு, ஆனால் அஙகு கள்ளச்சாராயம் கடலென ஓடவில்லையா? தடைசெய்யப்பட்ட எந்த விடயமும் அழிந்து விடுவதில்லை//

      கண்டிப்பாக! ஆனால் இளைஞர்கள் கைக்கு எளிதாக கிடைக்காது. பள்ளி மாணவர்களும் அடிமையாக இருக்கும் நிலையை காண்பது அரிதாக இருக்கும்

  11. கிழவியை தூக்கி மனையில் (அரியணையில்) உட்கார வைக்க தானே தம்ழகத்தின் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயலிழந்து காத்து கொண்டிருக்கிறது. 🙂

Leave a Reply to ஆனந்த் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க