privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்பொதுப் போக்குவரத்தை தனியார் மயமாக்க மோடி அரசு சதி

பொதுப் போக்குவரத்தை தனியார் மயமாக்க மோடி அரசு சதி

-

மோடி அரசின் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா 2015: நாட்டின் பொதுப் போக்குவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரை வார்க்கும் சதித்திட்டம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

கார்ப்பரேட் கம்பெனிகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் எடுபிடியான மோடி அரசு, சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா (2015)-ஐ பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கிறது. பொதுப்போக்குவரத்தில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டை முழுவதையும் நீக்கி, மாற்றி கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு விடுவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். மக்கள் குறைந்த பட்சம் சாலையில் நடமாடுவதற்கான உரிமையையும் போக்குவரத்து உரிமையையும் பறிக்கும் இந்த சட்டத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்வதும் இந்த மசோதாவை முறியடிக்க உடனடியாக வீதியில் இறங்கி போராடுவதும் அவசர அவசியக் கடமையாக உள்ளது.

ஓட்டுனர்களை ஒழித்துக் கட்டும் சட்டம் :

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்
தற்போது வைத்துள்ள ஓட்டுனர் உரிமங்களை எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் காலாவதியாகிவிடும்.

இந்த சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா,  கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஓட்டுனர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை ஒழித்துக் கட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

  • கார், லாரி, மினிடோர், டெம்போ, டாக்ஸி போன்ற வாகனங்களின் ஓட்டுனர்கள் மட்டுமல்ல, இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் வரை எல்லோரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.
  • புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற இருப்பவர்களுக்கு 9 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும். அதன் பின்னர் 3 மாதங்கள் சோதனை காலம். அதன் பிறகுதான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
  • சாலை விதிகளை மீறினால், அதற்கான தண்டனைகள் கடுமையானவை. எடுத்துக்காட்டாக:
  1. ஒருமுறை சாலைவிதியை மீறியதாக குற்றஞ்சாட்டப் பட்டவர் தனது சொந்த செலவில் இரண்டு தமிழ் செய்தித் தாள்கள், ஒரு ஆங்கில செய்தித்தாளில், “நான் தவறு செய்தவன்” என்று சொந்த செலவில் விளம்பரம் செய்ய வேண்டும்.
  2. சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தினால், அந்த ஓட்டுனர் ரூ 50,000 அபராதம் கட்ட வேண்டும். ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
  3. இவைமட்டுமல்ல, சாதாரண தவறுகளுக்கு கூட தண்டனைத் தொகை தற்போதைய தொகையைவிட 10 முதல் 50 மடங்கு அதிகம்.
  • தற்போது வைத்துள்ள ஓட்டுனர் உரிமங்களை எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் காலாவதியாகிவிடும்.
  • ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை இனி அரசு நடத்தாது. இதனை கண்காணிப்பதையும் ஆர்.டி.ஓ. செய்ய மாட்டார். அதாவது ஆர்.டி.ஓ. அலுவலகமே இனி இருக்காது. எப்படி?
  • இச்சட்டப்படி, ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி என்பது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இருக்க வேண்டும். அங்கு மருத்துவ சோதனைகள், பணிமனை (ஒர்க் சாப்) போன்றவை இருக்க வேண்டும். பயிற்சியும் அங்கேதான் தரவேண்டும். இவ்வளவு பெரிய அளவில் யார் நடத்துவது என சிந்திக்கிறீர்களா. ஆமாம், தற்போது இருக்கும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை மூடிவிட வேண்டியதுதான். ஏனென்றால், வாகன தயாரிப்பு நிறுவனங்களே (கார்ப்பரேட் கம்பெனிகள்) இந்த ஓட்டுனர் பயிற்சியை அளிக்கும்.
  • ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மட்டுமல்ல ஓட்டுனர் உரிமத்தையும் அவர்கள் தான் வழங்குவார்கள்.

திருடன் கையில் சாவி!

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்
வாகனங்கள் ஓடும் தகுதியுடைனவாக இருக்கின்றதா என சோதித்து (எப்.சி. – Fitness Certificate)-ஐ கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள்

வாகனங்கள் ஓடும் தகுதியுடைனவாக இருக்கின்றதா என சோதிப்பது (எப்.சி. – Fitness Certificate) தற்போது ஆர்.டி.ஓ. அலுலகங்கள் மூலம் நடத்தப்படுகிறது. இனி இதுவும் ஒழிக்கப்படும். அதனை கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள். தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனகங்ளுக்கு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி. பார்ப்பது என்ற தற்போதைய நடைமுறையை மாற்றி 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, வாகனங்களுக்கான பதிவையும் (Registration) இனி கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள். இந்தக் கட்டுப்பாடுகள் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த இரண்டு கட்டுப்பாடுகள் மூலம் ஒரு வண்டியை தகுதியற்ற வண்டி என்று சொல்லி புதிய வண்டிகளை வாங்க நிர்ப்பந்திக்க முடியும்.

உதிரி பாகங்கள் விற்பனையிலும் கார்ப்பரேட் ஆதிக்கம்!

ஓடும் நிலையில் உள்ள வண்டிகள் என்பதற்கான வரையறையும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர், தான் வைத்துள்ள வண்டிகள் ஓடும் நிலையில் இருக்க வேண்டும் என்றால் ஒரிஜினல் உதிரி பாகங்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது. இதன் மூலம், ஒரு கம்பெனி தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்ட முடியும். மேலும், உதிரி பாகங்கள் விற்கும் கடைகளையும் ஒழித்துக் கட்ட முடியும்.

போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தம்
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் – லட்சக்கணக்கான சிறு முதலாளிகள் பங்கு பெரும் வாகனங்கள் பழுது நீக்கும் தொழிலை (சர்வீஸ் ஒர்க்) முற்றிலும் ஒழித்துக் கட்டுவது இதன் நோக்கம்.

வாகனங்களில் பழுது நீக்கும் வேலையான (சர்வீஸ் ஒர்க்) என்பது தனியொரு தொழில் அல்ல. பெயின்டிங், வெல்டிங், ரப்பிங், பாலிசிங், கிரீசிங் என்று நூற்றுக்கணக்கான வேலைகளை உள்ளடக்கியது. முக்கியமாக பழைய பாகங்களை புதுப்பித்து பயன்படுத்துவது என்பது மிகப்பெரும் அளவில் நடக்கிறது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய சர்வீஸ் தொழிலை தற்போது வாகன உரிமையாளர்கள் என்ற வகையில் நமது விருப்பப்படி உள்ளூர் பட்டறைகளில், சாலை ஓரக் கடைகளில் செய்து வருகிறோம். இந்தச் சட்டப்படி இனி உள்ளூர் கடைகளில் சர்வீஸ் செய்யக் கூடாது. மாறாக, சர்வீஸ் சென்டர்கள் என்று ஒவ்வொரு வாகன தயாரிப்பு – விற்பனை நிலையங்கள் வைத்திருக்கும் இடத்தில் தான் செய்ய வேண்டும்.

மொத்தத்தில், நாட்டில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் – லட்சக்கணக்கான சிறு முதலாளிகள் பங்கு பெரும் வாகனங்கள் பழுது நீக்கும் தொழிலை (சர்வீஸ் ஒர்க்) முற்றிலும் ஒழித்துக் கட்டுவதுதான் இதன் நோக்கமாக உள்ளது.

ஆணையங்களின் வழியே கார்ப்பரேட்டுகளில் அதிகாரம்!!

தற்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நாடு முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேருந்துகள் நாள் தோறும் மக்களை சுமந்து செல்கின்றன. இனி இந்த வண்டிகளின் பர்மிட் காலம் முடிந்தவுடன் அந்த பேருந்துகளுக்கு மறு பர்மிட் வழங்கப்படாது. அதாவது, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இனி இயங்காது. அவை முற்றிலும் ஒழிக்கப்படும்.

இந்த பர்மிட்களை இனி அரசின் மூலம் வழங்குவதும் நிறுத்தப்படும். இதற்கென தனியாக ஒரு ஆணையம் தேசிய அளவில் அமைக்கப்பட இருக்கிறது. அந்த ஆணையத்தின் பெயர், நேசனல் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி (National Transport Authority). இந்த ஆணையம் எல்லா வழித்தடங் களையும் ஏலத்தில் விடும். இந்த ஏலத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளும் பங்கேற்கலாம்.

அந்த வகையில், நம்மூர் அரசு பேருந்து, தனியார் பேருந்துகளை ஒழித்துக் கட்டி பன்னாட்டுக் கம்பெனிகளின் பேருந்துகள் மட்டும்தான் ஓடப்போகின்றன. இது மட்டுமல்ல, அதிக விலைக்கு ஏலம் எடுக்கும் கம்பெனிக்குதான் ரூட் பர்மிட் வழங்கப்படும். அந்தக் கம்பெனி அந்த வழித்தடத்தில் செல்வதற்கான பேருந்து கட்டணத்தை தாமே தீர்மானித்துக் கொள்ளும்!

அதனால், இலாபம் தரும் வழித்தடங்களில் (ரூட்களில்) மட்டும்தான் பேருந்துகளை இனி பார்க்கமுடியும். கிராமங்களுக்கான பேருந்துகள் ஒழிக்கப்படும்!

கார்ப்பரேட்டுகளின் சர்வாதிகாரம் – சட்டபூர்வ பாசிசம்!

விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதிகப்படியான மக்களால் மேற்கொள்ளப்படும் தொழில்களில் ஒன்றான ஆட்டோ மொபைல் தொழில், போக்குவரத்துத் தொழில் அதனை சார்ந்த சிறு, குறு முதலாளிகள், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஒழிக்கப்பட இருக்கிறது. மற்றொருபுறம், மக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நடமாடும் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது. இது இந்த துறையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது.

நில அபகரிப்புச் சட்டம், தொழிலாளர் துறை திருத்தச் சட்டம், சிறு–குறுந்தொழில்களை ஒழிக்கும் பல சட்டங்கள், இரயில்வே தனியார்மயம், பொதுத்துறைகள் தனியார்மயம், கனிம வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க இருந்த தடைகள் எல்லாம் நீக்கம், பி.எப். தனியார்மயம், இன்சூரன்ஸ் முழுவதும் தனியார்மயமாக்கம், வங்கிகள் தனியார்மயம் என்று ஒட்டுமொத்த நாடே கார்ப்பரேட் கம்பெனிகளின் பேயாட்சிக்கான களமாக மாற்றப்பட்டு வருகிறது. பெயரளவிலான ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, பாசிசத்தை சட்டபூர்வமாக அரங்கேற்றுகிறது மோடி அரசு.

தேச வளர்ச்சி என்று கூறி மக்கள் மீதான பல்வேறு ஒடுக்குமுறைகளை தட்டிக்கேட்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் பறிக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல், பண ஆதாயம், பொது நலம், இலாப நோக்கம், வறுமை, பேரழிவு, சுற்றுச்சூழல் சீர்க்கேடு, ஏழைகள், பணி நிரந்தரம், மருத்துவ உதவி, சிறு தொழில்கள், தேச முன்னேற்றம், அச்சுறுத்தல், நாட்டுப் பற்று, சட்ட மீறல், தேச வளர்ச்சிக்கு எதிரான குற்றம் என எல்லாவற்றிற்கான வரையறைகளையும் மாற்றி இந்தியாவை ஒரு திறந்தவெளி சிறைச்சலையாக மாற்றி வருகிறது மோடி அரசு. அதன் ஒரு பகுதிதான் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா 2015.

இதற்கு காரணம் என்ன?

ஜனநாயகம் என்ற பெயரில் இதுகாறும் கடைப்பிடித்து வந்த ஏட்டளவிலான உரிமைகளை ஏன் ஒழிக்கிறார்கள்?

இந்த நாட்டின் கார்ப்பரேட் முதலாளிகள் தேச முன்னேற்றத்தை கொண்டுவருவோம் என்று 1947 முதல் கூறி வந்தனர். ஆனால், இவர்கள் மேற்கொண்ட எந்த சீர்த்திருத்தங்களும் தேசத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லவில்லை. மாறாக, மீள முடியாத கடும் நெருக்கடிக்கு கொண்டு சென்றுள்ளது.

1992–ல் கொண்டுவரப்பட்ட தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகளை அமுல்படுத்தியதன் விளைவாக, இன்று நாடே திவாலாகும் நிலையை எட்டிவிட்டது. நாட்டில் அநீதிகள் பெருகி, ஏற்கனவே சொல்லப்பட்ட கடமைகள், உரிமைகள், நியாயங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன. மொத்தத்தில், இந்த நாட்டை ஆளும் வர்க்கங்கள், மக்களுக்கு வாழ்வளித்து காக்க இலாயக்கற்றதாகிவிட்டன. இந்த அரசும் அதன் கட்டுமான உறுப்புகளும் செயலிழந்துவிட்டன.

மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களில் சர்வாதிகாரம் நேரடியாக ஆதிக்கம் புரிய வேகமாக வந்து கொண்டிருக்கிறது. போலி ஜனநாயகக் கட்டமைப்புகள் இடிந்து நொறுங்கி விழுந்து கொண்டிருக்கின்றன.

மக்களுக்கு உதவாத செயலிழந்துபோன இந்த சட்டம், நீதியை நம்பிக்கொண்டிருப்பதைக் கைவிட்டு உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவிக் கொள்வது ஒன்றே தீர்வு.

எங்கள் ஊரில் மணல் கொள்ளை அடிக்கக் கூடாது, எங்கள் ஊரில் சிப்காட்டுக்கு நிலம் எடுக்கக் கூடாது, எங்கள் ஊரில் மீத்தேன் எடுக்கக் கூடாது, காட்டு யானைகள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று நாடெங்கும் மக்கள் போர்க்கோலம் பூண்டு முன்னேறி வருகிறார்கள். எந்த ஓட்டுக் கட்சியையும் நம்புவதற்கு இனியும் மக்கள் தயாராக இல்லை.

பாலியல் குற்றவாளிகளை வீதியிலேயே தண்டிக்கும் முன்னுதாரணமிக்க போராட்டங்கள் ஆங்காங்கே தொடங்கிவிட்டன. பல்வேறு இடங்களில் எமது தோழமை அமைப்புகளின் தலைமையில் மக்கள் போராடி வருகின்றனர். இந்த திசையில் மக்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவோம்! சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை முறியடிப்போம்!

உழைக்கும் மக்களே!

  • இச்சட்டப்படி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது,, வாகனங்களுக்கு எப்.சி. பார்ப்பது, வாகனங்களுக்கான சர்வீஸ் – உதிரி பாகங்கள் விற்பனை – இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே!
  • அரசு மற்றும் தனியார் பேருந்துகளை ஒழித்துக்கட்டி எல்லா வழித்தடங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்படும்!
  • போக்குவரத்துக் கட்டணத்தை அவைதான் தீர்மானிக்கும்!
  • ஆட்டோ, டெம்போ, லாரி, பேருந்து ஓட்டுனர்கள், உதிரி பாகங்கள் விற்கும் கடைகள், ஒர்க் சாப்கள், சிறு வாகன உரிமையாளர்கள் என பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பிடுங்குவதுதான் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா!
  • கார்ப்பரேட் கம்பெனிகளின் பேயாட்சிக்கு வழிவகுக்கும் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதாவை முறியடிப்போம்!
  • ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்!
  • மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

30-04-2015 அன்று நாடெங்கும் போக்குவரத்து துறை சார்ந்த தொழிலாளர்கள் நடத்த இருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிப் பெறச் செய்வோம்!

modi-makes-transport-corporate-property-poster

[நோட்டீசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784

ஆட்டோ, லாரி, பேருந்து படங்கள் – இணையத்திலிருந்து

  1. //சாலை விதிகளை மீறினால், அதற்கான தண்டனைகள் கடுமையானவை.

    எடுத்துக்காட்டாக:

    சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தினால், அந்த ஓட்டுனர் ரூ 50,000 அபராதம் கட்ட வேண்டும். ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். // இதெல்லாம் கடுமையானவையா.. உயிர் போனவன் குடும்பத்துக்கு தெரியும் அதன் வலி. உயிருக்கே மதிப்பில்லாம, சும்மா ஒரமா போகிரவன இடித்து கொன்றால் நம்ம ஊர்ல இப்போ என்ன தன்டனை இருக்கு.. இதில் ஒரான்டு சிறை என்றால் ‘கடுமையான’ தண்டனையாம். உங்க கட்டுரைய குப்பைல போடுங்க

    • சிவா,

      ஒரு நல்ல சரத்தை வைத்துக்கொண்ட நூறு கொடூரங்களை சட்டமாக்க முனைவது சரியா.

      உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்திற்கு ஒட்டுநர் தான் காரணம் என்றால் அவருக்கு இங்கே குறிப்பிட்ட தண்டனையை விட கூடுதலாகவே கொடுக்கலாம். இதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டங்களிலிலேயே வழியிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

      தற்போது அரசுப் பேருந்து ஒட்டுநர்கள் தகுந்த உறக்கமின்றி இருநாட்கள் அல்லது மூன்று நாட்கள் கூட தொடரந்து வண்டியோட்டும்படி நிர்பந்திக்கப் படுகிறார்கள். இது விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். அவர்களுக்கு மனவுளைச்சலை ஏற்படும் விதத்தில் அதிகாரிகள் நடந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இதுவும் ஒட்டுநர்கள் நிம்மதியாக வேலைசெய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கெல்லாம் அதிகாரிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறதா.

      • @Siva&pk
        Are you sure that only govt bus drivers are compelled to drive the buses continuously for two or three days?I hired a call taxi for going to the airport.After seeing off my daughter at about 10 pm,I dialed the driver.No answer for repeated calls.Then I went in search of the driver in the huge parking lot.Luckily,I could trace him.He was having sound sleep.When I found fault with him,he apologized stating that he was on the wheel for two days continuously.This call taxi service is well-known in Chennai.I think you have not read recent incident happened with a equally well-known omni-bus.The vehicle was driven rashly and in the midnight,when one passenger experienced severe jolts,she peeped into the driver”s cabin and was shocked to see that the driver”s one hand is in steering and another in an half empty liquor bottle.She screamed in horror and all passengers forced the driver to stop the bus.The bus company sent alternative driver within an hour.Some questions.That bus company was resourceful and that is why it could sent the alternative driver within an hour.But why it has stopped posting two drivers in a long distance bus as was practiced earlier?Most of the omni-buses coming from Madurai,Trichy and other southern cities/towns heading for Chennai are driven at break-neck speed so as to reach Chennai in 5/4 hours.If you are a person who do not get sleep while travelling in omni-buses will find your travel a nightmare.Our friends who think privatization as the only solution should ponder over the above two incidents.

        • சூரியன் அவர்களுக்கு,

          தனியார் துறையைப்பற்றி சுட்டிக்காட்டியதற்கு நன்றி. எனக்கும் இவற்றைப்பற்றி தெரியும். ஆனால் எப்படியே அதைப்பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல் விட்டுவிட்டேன். எப்படி இது நடந்திருக்கும் என்று யோசிக்கும் போது ஒன்று தோன்றுகிறது. அரசு போக்குவரத்துத் துறையில் பணிப்பாதுகாப்பு ஒரளவுக்கு இருக்கிறது. சங்கமும் இருக்கிறது. அதாவது இங்கே யாரோ சொல்வது போல Organized ஆக இருக்கிறது. அப்படியிருந்தும் அவர்களாலேயே இது போன்ற சுரண்டல்களுக்கு மறுப்பு கூறமுடியவில்லை. தனியார் துறையில் உள்ள தொழிலாளர்களைப் பற்றி சொல்லவும் வேண்டியதில்லை என்ற உள்ளுணர்வு காரணமாக இருக்கலாம். சொல்லாமல் சொல்வதை தவிர்த்துக்கொண்டு ஒரு வார்த்தையையாவது கூறுவதே சிறந்தது என்பதை நினைவில் கொள்வேன்.

  2. இவ்வளவு கொடுமைகளைக்கொண்ட சட்டமா. ரத்தம் கொதிக்கிறது.

    இதன் விளைவுகள் என்ன.

    இந்த சட்டம் கோரும் அதிகப்படியான செலவினங்களால், விளிம்பு நிலை மக்கள் பெரியளவில் பட்டினி, நோய், என்கவுண்டர், போராட்டங்களில் துப்பாக்கிச்சூடு, போன்ற பல்வேறு வழிகளில் கொல்லப்படுவர். தற்போது அடிப்படை வசதிகளைக் கொண்ட மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு புதிய அளவில் சுரண்டலுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுவர். வசதி படைத்தவர்கள் மேலும் தங்கள் வசதியைப் பெறுக்கிக் கொண்டு இன்னும் அதிக பலத்துடன் சுரண்டல் பயங்கரத்தில் ஈடுபடமுடியும்.

    இந்த சட்டத்தை எப்பாடுபட்டேனும் தடுக்க வேண்டும்.

    • @pk,I endorse your view.If you take a study in Chennai among two-wheeler users,most of the lower middle class people/workers with low income use the local brand moped TVS or Bajaj M80.If they are compelled to go to the authorized service center and not to local mechanic,they have to leave the vehicle at least for one/two days in that center.They may not be able to repair the existing spare parts.They will be forced to replace the faulty spare part.India is not yet ready for “use and throw”in automobile spare parts.Now only,Indians are used to “use and throw”in ball-pens and toys.At least,few readers would have read about SPARROW LAUNDRY-SPA FOR SHOES &BAGS where your used leather bags/shoes are collected at your door steps and delivered back after repair.

    • @pk,It is not the case with marginal people alone who cannot afford to spend more to get the services.When I was working as a Branch Manager in a nationalized bank,some of my current account customers closed their accounts with our branch.When I asked the reasons,they told me that they were gong to open accounts with a private bank and some of them in a foreign bank.They were attracted by the sophisticated services as advertised by these banks.After 6 months,these customers came back to me.They told me that they could not afford to bear the service charges levied by these banks especially for occasional return of cheques.Small business men were frankly informed by that foreign bank that the overdraft limits of 3 to 5 lakhs were uneconomical for their bank.Some of them told that there is no personal touch and they were treated just as a “current account number”They have narrated their experiences in non-resolving of their grievances.When they dialed the Customer Service Numbers given by these banks,they had to repeat their sad stories to different Customer Service Officers over phone daily with no solution.Customer Service Officers in nationalized banks are more responsive.

  3. இங்கு நடப்பது மக்கள் ஆட்சி இல்லை ஜர்மணியில் ஹிட்லர் நடத்திய ஃபாஸிச ஆட்சி போன்றது என்பதை பா.ஜ.க மக்களுக்கு வெளிப்படையக அறிவிப்பதற்காக இந்த மாதிரியான சட்டங்களை அமல் படுதி இந்திய மக்களுக்கு உணர்த்துவதாக நான் கருதுகிறேன்.

    ஹிட்லரின் ஃபாஸிசத்தை வீழ்த்த லெனின்,ஸ்டலின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஒன்றினைந்தது.

    அது போல் மோடி தலைமையில் இந்தியவில் நடந்துவரும் பாஸிச அட்சியை வீழ்த்த இந்திய பாட்டாளி வர்கமான நாம் ஒன்றினைய வேண்டிய அவசியத்தை உணர்துகின்றது இந்த மக்கள் விரோத சட்டங்கள்.

  4. பொருளாதார விஷயத்தில் அரசு சரியான திசையில் செல்ல முயல்கிறது. செய்தது போதாது என்பதால் முயல்கிறது என்கிறேன். இப்போது இந்தியாதான் ‘ஃபாஸ்டஸ்ட் க்ரோயிங் மேஜர் எகானமி ஆன் த பிளானட்’. ஈஸ் ஆப் டூயிங் பிஸ்னஸ் பற்றி முதல் முறையாக ஒரு பிரதமர் பேசுகிறார். அபரிமிதமான வளர்ச்சி வர இருக்கிறது.

    சாலை விபத்துகளைக் குறைக்க சீர்திருத்தங்கள் தேவைதான். இப்போது மட்டும் என்ன, இருப்பதிலேயே லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுவது ஆர்.டி.ஓ.வில்தானே? அதனால் தான் அந்த அமைப்புக்கு மரண அடி கொடுக்கிறார்கள். ரெகுலேட்டரி அதாரிடிகள் இதுவரையில் ஏற்பட்டிருக்கும் துறைகள் சிறப்பாக செயல்படுகின்றன. போக்குவரத்திலும் வருவது வரவேற்புக்குரியது.

    வெனிசுவேலாவில் இடதுசாரி முழக்கம் எழுப்பினார்கள். என்ன ஆச்சு? ஒரு ரொட்டித்துண்டுக்கு மக்கள் அடித்துப் பிடித்து ஓடுவது பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

    மற்றபடி ரயில்வே துறையில் (சரியான) சீர்திருத்தங்களை முன்வைத்திருப்பது பிபேக் தேபராய் தலைமையிலான கமிட்டி. அவர் பா ஜ க அல்லவே. நடுநிலையான எவரும் வரவேற்க வேண்டிய சீர்திருத்தங்களை அந்தக் கமிட்டி தெரிவித்திருக்கிறது. செயல்படுத்துகிறார்களா பார்ப்போம்.

    • //வெனிசுவேலாவில் இடதுசாரி முழக்கம் எழுப்பினார்கள். என்ன ஆச்சு? ஒரு ரொட்டித்துண்டுக்கு மக்கள் அடித்துப் பிடித்து ஓடுவது பார்க்க பரிதாபமாக இருக்கிறது.//

      சரி, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஹைதி மற்றும் பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் இடதுசாரி முழக்கம் இல்லையே அப்புறம் ஏன் அங்கெல்லாம் கொடிய பஞ்சம் தலை விரித்து நர்த்தனம் ஆடுகின்றது.

      //சாலை விபத்துகளைக் குறைக்க சீர்திருத்தங்கள் தேவைதான். இப்போது மட்டும் என்ன, இருப்பதிலேயே லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுவது ஆர்.டி.ஓ.வில்தானே? அதனால் தான் அந்த அமைப்புக்கு மரண அடி கொடுக்கிறார்கள்.//

      இந்த அல்பத் தனமான வாதத்திற்கு, உமா சங்கருக்கு கூறிய பதிலை கண்டுக்கொள்ளவும். உமா சங்கருக்கு எழுதிய பின்னூட்டம் உங்களுக்கும் சேர்த்து தான்

  5. அண்ணன் அனானி இந்தியாவுல 110 கோடி பேரு இருக்கானுக நல்லா வேலை செய்வாங்க அதுலயும் இளைங்கர்கள் அதிகமா இருக்காங்க அவிங்கள எல்லாம் ஒரு ரேட் போட்டு வித்துருங்க அடிமையா இன்னும் அதிகமான பொருளாதாரம் கிடைக்கும், நல்ல பொருளாதாரக்கொள்கை விளங்கிடுமுனே நாடு…

  6. //ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை இனி அரசு நடத்தாது. இதனை கண்காணிப்பதையும் ஆர்.டி.ஓ. செய்ய மாட்டார். அதாவது ஆர்.டி.ஓ. அலுவலகமே இனி இருக்காது. எப்படி?//
    RTO – முழுக்க ஊழல்…அதனால் இது நல்ல அம்சம். தனியாரிடம் ஒப்படைப்பது எலோருக்கும் நல்லது.
    இதனால் productivity அதிகரிக்கும்.

    //இச்சட்டப்படி, ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி என்பது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இருக்க வேண்டும். அங்கு மருத்துவ சோதனைகள், பணிமனை (ஒர்க் சாப்) போன்றவை இருக்க வேண்டும். பயிற்சியும் அங்கேதான் தரவேண்டும். இவ்வளவு பெரிய அளவில் யார் நடத்துவது என சிந்திக்கிறீர்களா. ஆமாம், தற்போது இருக்கும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை மூடிவிட வேண்டியதுதான். ஏனென்றால், வாகன தயாரிப்பு நிறுவனங்களே (கார்ப்பரேட் கம்பெனிகள்) இந்த ஓட்டுனர் பயிற்சியை அளிக்கும்.//

    இதுவும் நல்லதே; விபத்துகள் குறையும்

    //வாகனங்களுக்கான பதிவையும் (Registration) இனி கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள். //

    நாம் இதை வரவேற்க வேண்டும். RTO இடமிருந்து விடுதலை…

    //ஒரிஜினல் உதிரி பாகங்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது//
    இதை சரியாக முழுமையுடன் ஆராய வேண்டும். வினவு நுனி புல் மேய்கிறது
    ஒரிஜினல் உதிரி பாகங்கள் சில முக்கிய பாகங்களுக்கு அவசியம். எல்லாம் என்றால் கஷ்டம் தான்

    //இந்தச் சட்டப்படி இனி உள்ளூர் கடைகளில் சர்வீஸ் செய்யக் கூடாது. மாறாக, சர்வீஸ் சென்டர்கள் என்று ஒவ்வொரு வாகன தயாரிப்பு – விற்பனை நிலையங்கள் வைத்திருக்கும் இடத்தில் தான் செய்ய வேண்டும்.//

    இதுவும் ஒரு நல்ல விஷயம் தான்; இதனால் தரமான சேவை கிடைக்கும்
    நமக்கு திறமையான நம்பிக்கையானவர்கள் வண்டிகளை கையாள வேண்டும்.

    • உமா சங்கர்………..

      //RTO – முழுக்க ஊழல்…அதனால் இது நல்ல அம்சம். தனியாரிடம் ஒப்படைப்பது எலோருக்கும் நல்லது.
      இதனால் productivity அதிகரிக்கும்.//

      இதை தான் நானும் சொல்கிறேன், இன்று நீதிபதிகளே 10க்கு 9 பேர் கிரிமினல்களாக, ஊழல் பேர்வழிகளாக தான் இருக்கிறார்களாம் எனும்பொழுது பேசாமல் நீதி மன்றத்தை தனியார் மயமாக்கினால் மிக நன்றாக இருக்கும். அதே போல் தான் ராணுவத்திலும் ஊழல் மலிந்து கிடக்கிறது அதையும் தனியார் மயமாக்கி டாட்டா, அம்பானி போன்ற கரையான்களுக்கு பங்குப் போட்டு கொடுத்து விட்டால் நல்லது. மொத்தத்தில் பாராளுமன்றம் என்கிற பன்றித் தொழுவமே ஊழல் பன்றிகளால் நாறி நாற்றம் எடுக்கிறது ஆக இந்தப் பாராளுமன்றத்தை எப்படி தனியார் மயமாக்கலாம் என்று ஒரு யோசனை கூறினால் இன்னும் நல்லது.

      //இதுவும் நல்லதே; விபத்துகள் குறையும்//

      அட அறிவிலிகளா!!!! நாட்டில் விபத்துக்கள் குறையே வேண்டுமானால், சாலை வசதியை மேம்படுத்த வேண்டும், குண்டு குழி, மேடு பள்ளம் இல்லாமல் சீரான தரமான சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். மேலும், ரோட்டை அகலப் படுத்தி கனரக வாகனம், இலகு ரக வாகனம் என்று தனி தனியாக செல்வதற்கு பாதை அமைத்து ஒழுங்குப் படுத்தி தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக விபத்துக்கள் பெரும்பாலும் நடப்பதற்கு முக்கிய காரணமே மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்குவதால் தான். அதை தடுக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மொத்த இந்தியாவிற்கும் மது விலக்கை அமல் படுத்த வேண்டும். இதை செய்தாலே சாலை விபத்துக்கள் பெரும் அளவில் தவிர்க்கப் பட்டு விடும். மொத்தத்தில் விபத்துக்களை குறைக்க வேண்டுமானால், பொதுப் போக்கு வரத்தை ஆதிக்கப் படுத்தி, முடிந்த அளவிற்கு மக்களை தனியார் வாகனத்தை நோக்கி ஓட விடமால் செய்தாலே போதுமானது. மோடி ஒரு நாணயமான மனிதராக இருந்திருந்தால் இதைத் தான் செய்திருப்பார். என்ன செய்வது நம் நேரம், ஒரு கேவலமான தரகனுக்கு இந்த நாடு வாக்கப் பட வேண்டும் என்று தலை எழுத்து.

      /இந்தச் சட்டப்படி இனி உள்ளூர் கடைகளில் சர்வீஸ் செய்யக் கூடாது. மாறாக, சர்வீஸ் சென்டர்கள் என்று ஒவ்வொரு வாகன தயாரிப்பு – விற்பனை நிலையங்கள் வைத்திருக்கும் இடத்தில் தான் செய்ய வேண்டும்.//

      இதுவும் ஒரு நல்ல விஷயம் தான்; இதனால் தரமான சேவை கிடைக்கும்
      நமக்கு திறமையான நம்பிக்கையானவர்கள் வண்டிகளை கையாள வேண்டும்.//

      உள்ளூர் கடைகளில் இருப்பவர்களுக்கு திறமைக் குறைவு என்று எந்த அலக்கீட்டில் கூறுகிறீர்கள். என் அனுபவத்தில் நான் கூறுகிறேன், Authorised Sevice centre களை காட்டிலும் உள்ளூர் மெக்கானிக்குகள் எவ்வளவோ திறமையானவர்கள். சர்வீஸ் மையங்களை காட்டிலும் குறைந்து விலையில் மிகத் தரமாக நேர்மையாக வேலையை செய்து முடிப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

      யார் எவ்வளவு தான் கூறினாலும் நாம் எதையும் ஏற்றுக் கொள்ள கூடாது என்கிற கொள்கை முடிவோடு தான் இங்கு வந்திருக்கிறோம். மோடி போன்ற ஏகாதிபத்திய எச்ச்சகலைக்கு சோம்பு தூக்குவதென்று ஆனப் பிற்ப்பாடு எதைக் கூறி என்ன. மோடி ஆடாவிட்டாலும் மோடியின் தொங்கு சதைகள் நன்றாகவே இங்கு ஆடிக் கொண்டிருக்கின்றன.

      • //RTO – முழுக்க ஊழல்…அதனால் இது நல்ல அம்சம். தனியாரிடம் ஒப்படைப்பது எலோருக்கும் நல்லது. இதனால் productivity அதிகரிக்கும்.//

        தனியார் மயம் என்றால் என்ன மாடல் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

        பாஸ்போர்ட் வழங்கும் மையங்களை ‘தனியாரிடம்’ ஒப்படைத்த பின் சேவையின் தரம் மற்றும்
        வேகம் மிக மிக அதரிகத்துவிட்டது. டி.சி.எஸ் நிறுவனம் தான் இப்ப பாஸ்போர்ட் விண்ணபங்களை
        உள் வாங்கி, பிராஸஸ் செய்கின்றனர். கடைசி கட்டத்தில் சரிபார்க்க அரசு அலுவலர்கள் சிலர் மட்டும் உள்ளனர். out sourcing முறை வெற்றிகரமாக செயல்படுவதை சென்னையில் பார்க்கலாம்.
        முன்பு பாஸ்போர்ட் எடுக்க சாஸ்திரி பவனில் பட்ட அவதியை ஒப்பிடவும்.

        இதே பாணியில் ஆர்.டி.ஓ பணிகளை தனியார்மயமாக்கினால் சேவை தரம் உயர்ந்து, கம்ப்ளைண்டுகள் மிக குறையலாம்.

        • பாஸ்போர்ட் துறையில் தனியார் பங்கிருப்பதினால் வேகம் சேவை முன்னேறியுள்ளதாக கூறுகிறீர்கள். என்னுடைய அனுபவம் வேறு: நான் பாஸ்போர்ட் விண்ணப்பித்து, ஆவணங்கள் சரிபார்ப்புக்காக தாம்பரத்தில் இருந்த அலுவலகத்திக்கு சென்றபோது நின்றிருந்த கூட்டத்தில், ” இவங்க எல்லா அப்ளிகேசனையும் ஓகே பண்ண மாட்டங்க சார். எல்லா டாகுமேண்டும் சரியா இருந்தாலும் ஒன்னு ரெண்டை ரிஜக்ட் பண்ணிருவாங்க” என்று ஒருத்தர் சொன்னார். நான் நம்பவில்லை. ஆனால், என்னுடைய அப்ளிகேசனை அவர்கள் ரிஜக்ட் செய்தபோது நம்பாமல் இருக்க முடியவில்லை. எந்த திருத்தமும் இல்லாமல். அதே தகவல்களுடன் மறுமுறை சென்றபோது ஏற்றுக்கொண்டார்கள். இதற்கென்ன சொல்கிறீர்கள்?

          தனியார்களுக்கும் டார்கெட் உண்டு. எப்படி IT துறையில், ஒரு பிராஜக்டில் நான்கு பேர் வேலை செய்து, நான்கு பேருமே சமமாக பங்களித்திருந்தாலும், ஓரிருவரை, ‘மேலும் முன்னேற்றம் வேண்டும்’ என்னும் வரையறைக்குள் கொண்டு வருகிறார்களோ அதைப் போன்று.

          ஒருவர் மிகச்சரியாக சொன்னார்: காங்கிரஸ் மெல்ல கொன்ற விஷம். பிஜேபி யோ உடனடி விஷம்.

          இந்த அரசு மக்கள் நலன் சார்ந்த அரசாக இல்லை. தனியார்களுக்கு சேவை செய்ய துடிக்கிறது.

      • Rebecca Mary,
        Again, learn to use decent / civilized language. You have every right to comment others’ opinion but with appropriate diplomatic language.

      • //
        இதை தான் நானும் சொல்கிறேன், இன்று நீதிபதிகளே 10க்கு 9 பேர் கிரிமினல்களாக, ஊழல் பேர்வழிகளாக தான் இருக்கிறார்களாம் எனும்பொழுது பேசாமல் நீதி மன்றத்தை தனியார் மயமாக்கினால் மிக நன்றாக இருக்கும். அதே போல் தான் ராணுவத்திலும் ஊழல் மலிந்து கிடக்கிறது அதையும் தனியார் மயமாக்கி டாட்டா, அம்பானி போன்ற கரையான்களுக்கு பங்குப் போட்டு கொடுத்து விட்டால் நல்லது. மொத்தத்தில் பாராளுமன்றம் என்கிற பன்றித் தொழுவமே ஊழல் பன்றிகளால் நாறி நாற்றம் எடுக்கிறது ஆக இந்தப் பாராளுமன்றத்தை எப்படி தனியார் மயமாக்கலாம் என்று ஒரு யோசனை கூறினால் இன்னும் நல்லது.

        //

        You are confusing governance with business. And thinking that is a valid argument ..

        What is told here is Govt has to do governance and let business has to business.
        Govt cannot spend time on profit making businsess and Govt machine is not designed for that.

    • @Umashankar,I do not know about your experience in the “authorized”service centers.If you leave your car for service,you will get a call within few hours stating that such on such spare parts are to be replaced and invariably these will be major and costly parts.I agree that these major parts are to be replaced for our safety.But,after the service,you will find that the costly parts are replaced and you get a bill for a fat sum.But alas, you will find that lot of minor faults listed by you left unattended.You can yourself buy original parts and give to a private mechanic.Due to your regular patronage,he will attend all minor faults listed by you to your satisfaction.I know one of my Directors changed a brand of his car after its first service in the “authorized”service center after bad service.He was very furious with the center for delayed service.When the center asked him to take delivery,he went there at the appointed time.The car was brought for delivery.He was shocked to see that black car was covered with lot of dust and the center has not bothered even to clean the car after the client arrived for taking delivery.
      It is now your turn to prove that Vinavu has not done a deep reading of the New Act stipulating only original parts in vehicles.

      • Sooriyan,

        Our country’s economy is immature; it will probably take a couple of centuries before we see any sign of maturity.
        I am not against service centers owned by small businessmen. But we need to differentiate through legal / ethical means. Once I lived in an apartment just across a road-side mechanic garage. They occupied half the street with the cars to be serviced and their quality and ethics are always questionable.
        I will quote one example: road-side welding shops (usually gates are welded there). Do you think that’s correct? They annoy thousands of people passing the street and not to mention the neighbors’ troubles. Now, if a Govt comes with strict rules about welding in unauthorized places, it will be termed as Anti-labor. How it’s justified?
        So, we need to strike an appropriate balance; bring in strict guidelines with safety. Effective supervision is a must and violators should be penalized heavily.

        Another example: road-side shops occupy platforms/curbs and having their shops illegally (like Usman Road, Pondy Bazaar in T Nagar, Chennai). People need to walk on the streets increasing chances of accidents.

        • Uma Shankar,
          If your two wheeler got punctured then do you rush to company show room or near by puncture shop? If your car had some problem then ???

          • Nanthan,

            This happens all the time; I prefer to call a service center to send their technician to fix.
            We are supposed to have a center everywhere in the country so that a break-down vehicle can be attended as soon as possible.

        • Instead of abolishing roadside mechanics and welding shops,the Govt should take steps to accommodate those shops in commercial places.Thereby,inconvenience in a residential locality can be minimized.Roadside shops are not peculiar in Chennai alone.There are roadside shops in Delhi and Mumbai.People (especially ladies)miss those roadside shops in Pondy Bazaar selling garments,shoes and other fancy items.The shop keepers are not happy to do business in cramped shops allotted to them in the hawkers” plaza.Nor their customers.Even when these shopkeepers were in that road,there was space for pedestrians to pass through.When the Govt is not in a position to provide employment to every one,at least they should not take steps to make these self employed people to lose their livelihood.Please remember that loss of livelihood motivates these people to indulge in anti-social activities.

          • Road side shops are part of our culture. No need to abolish them.
            May be they should ensure that the shops do not encroach too much of the walking space of the public.

            • Regarding welding shops, care should be taken not to hinder the public. Safety equipments should be made compulsory for welding workers and also safety to the public should also be taken care of.

              • Any road side shop will attract customers with vehicles; where will they park? Parked vehicles occupy the road increasing chances of accidents.
                It’s like saying jump into a lake without getting wet.

                You shouldn’t have welding shops on the road……it’s a rule. When workers wear safety gear, it will protect them. What about public? Drivers can get into accidents just like that..

  7. மே தின வாழ்த்துக்கள் :

    பொது துறையில் தம் உழைப்பை பங்களிக்கும் தோழர்களை பற்றிய பின்னுட்டம் இது. பொது துறை நிறுவனங்களையும் அதன் ஊழியர்களையும் நொட்டை சொல்லும் தலைகள் இதனை படிக்கவும்.

    கடந்த ஞாயிறு முதல் புதன் நேற்று வரை தென்மாவட்டங்களில் தான் பயணித்துக்கொண்டு இருந்தேன். பல்வேறு மாநில ,மத்திய அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்யும் வேலைஇருந்தது. பயணத்தின் முடிவில் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக தனியார் மையம் ஆக்குவதால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்தேன். பயணத்தின் இறுதி கட்டமாக RailWay Mail Service [ RMS ] பற்றிய முழுமையான map கிடைத்தது. நெல்லை அதிவிரைவு ரயிலில் வேலை செய்யும் மூன்று தோழர்கள் செய்கின்ற வேலையை அவதானித்தேன். ஒரு ரயில் பெட்டியின் பாதி RMSக்கு ஒதுக்கபட்டு இருந்தது. அஞ்சல் மூட்டைகளை ஒவ்வொரு ஊரிலும் இரயிலுக்குள் ஏற்றுவதும் ,இரயிலில் இருந்து இறக்குவதும் அவர்கள் வேலை. மதுரை போன்ற ஊர்களில் ஏற்றபடும் அஞ்சல் மூட்டைகள் மலைபோல குவியும். அவற்றை உள்ளே இழுத்து போடுவது ,மதுரையில் இறக்க வேண்டிய அஞ்சல் மூட்டைகளை இறக்க வேண்டியதை எல்லாம் ரயில் நிற்கும் 5 முதல் 10 நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டும். உடல் உழைப்பையும் ,மூளையின் விரைவான செயல்பாட்டையும் கோரும் வேலையது. சரி வேலை முடித்தாயிற்று ரயில் பிரயாணத்தின் போது ஓய்வெடுக்கலாம் என்று எல்லாம் இருக்க முடியாது அந்த RMS தொழிலாள-தோழர்களால். ஒவ்வொரு ஊரிலும் ஏற்றபடும் அஞ்சல் மூட்டைகளை எல்லாம்இறக்க வேண்டிய ஊர் வாரியாக சாதாரண தபால் மூட்டைகள் , reg ,speed போஸ்ட்,air mail மூட்டைகள் என்று பிரித்து வைத்தாக வேண்டும்.அவற்றுக்கு தனிதனியான கணக்கை பதிவு செய்தாக வேண்டும். 70% மூடைகளில் சென்று சேரவேண்டிய இடம் தெளிவாகவே இருக்கும். மீதம் உள்ள 30% முட்டைகளில் அஞ்சல் நிலைய சீலை கொண்டு தான் destination கண்டுபிடிக்க படவேண்டியிருக்கும். மேலும் சில அஞ்சல் மூட்டைகளில் destination தெளிவில்லாமல் கையால் எழுதபட்டு இருக்கும். அவற்றையும் என்ன ஊருக்கான மூட்டைகள் என்று கண்டு பிடிக்க வேண்டும்.

    அஞ்சல் மூட்டைகளின் எண்ணிக்கை ஏற்றி,இறக்க படவேண்டிய ஊர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் எடுத்துகொண்டால் இந்த வேலை மிகவும் மூளையின் நினைவகத்தை , உடல் உழைப்பையும் எடுத்துக்கொள்ளும். நெல்லையில் இருந்து சென்னைக்கு சராசரியாக 12 மணி நேர பயணம் இருக்கும். 3 RMS தோழர்களுக்கும் அந்த 12 மணி நேரத்தில் தூக்கம் ,ஓய்வு என்பது சிறிதும் கிடையாது. அடுத்த நாள் அதாவது சென்னைக்கு வந்தடைந்த உடன் காலையில் இருந்து அடுத்த நாள் மீண்டும் பயணம் தொடங்குவது வரையில் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். சென்னை RMS அல்லது போஸ்ட் ஆபீஸ்சில் தங்கி ஓய்வெடுத்து அடுத்த நாள் வேலைக்கு ஆயத்தம் ஆவார்கள். ஓய்வு இடங்கள் ஒன்றும் சிறப்பானதாக இருக்காது.சராசரியான வசதிகளை விட குறைந்த வசதியுடையதாகவே இருக்கும்.மாதத்துக்கு 8 முறை அவர்கள் நெல்லையில் இருந்து சென்னைக்கு ,சென்னையில் இருந்து நெல்லைக்கு என்று அவர்கள் வேலை நிமித்தமாக பயணிக்க வேண்டியிருக்கும். RMS இரயில் பெட்டிகளில் இப்படி தான் தொழிளால-தோழர்கள் இந்தியா முழுவதும் வேலைசெய்து நமது அஞ்சல்களை அனுப்பிக்கொண்டு இருகின்றார்கள்.

    இவர்கள் போன்ற கோடிக்கணக்கான எமது அனைத்து தரபட்ட தொழிலார்களுக்கும் எமது மே தின வாழ்த்துகளும் மனமார்ந்த நன்றிகளும் !

    தென்மாவட்ட பயணங்கள் தக்க கட்டுரைகளின் பின்னுட்டங்களில் தொடரும் ……

    • ஆர்.எம்.எஸ். எல்லாம் அனக்கிரானிஸம்ஸ் (காலத்துக்கு ஒவ்வாதவை) அன்பரே. தனியார் கொரியரைத்தான் முக்கிய தபால்களுக்குப் பயன்படுத்துகிறோம். இரவு 10 மணிவரை கூட அனுப்ப முடியும், ஆன்லைன் டிராக்கிங் என்பது போலப் பல வசதிகள். (அரசு அஞ்சல்துறையை நம்ப முடியாது என்பது வேறு). இந்தக் காலத்தில் ஆர்.எம்.எஸ். சேவையை அரசு நிறுத்திவிடலாம், தந்தியை நிறுத்தியது போல.

      • @Anani,We have changed 4 courier service companies for our office within 2 years.We are a financial services company.Some courier boys just leave the courier documents in the letter boxes at the addressees” apartments.Some courier boys ask the elderly addressee his mobile number.When that elderly person could not answer rapidly, these boys refuse to deliver the document and dart back.Most of these companies refuse to give PODs at the end of the month.Some courier boys just scribble,”no such addressee”even without visiting.We had occasions in recovery of costs for missing documents.Reputed courier companies are not showing interest in domestic courier.They prefer foreign courier business since the charges are more.You cannot beat the “speed post”service especially for delivery of passports.

      • பொதுத்துறை [அஞ்சல் துறை] பற்றிய விவாதத்தில், அனானி பதில் அளிக்க வேண்டிய விடயங்கள் நிரம்ப இருக்கின்ற போதிலும் அவர் கண்டும் காணாது செல்வது வியப்பையும் ,வருத்தத்தையும் அளிக்கின்றது. வெற்று அவதூறுகளுடன் RMS ,Postal பற்றி பேசிவிட்டு சென்று உள்ளார். உரிய விளக்கம் கொடுத்தாலும் மவுன குருவாக குத்துகல் போன்று நடந்து கொள்கின்றார்

      • அனானி,

        RMS என்பது Anachronism என்றால் மற்ற தனியார் கூரியர்கள் எல்லோரும் பார்சலை ஒரு முனையில் Digitize செய்து மறுமுனையில் Materialize செய்து விநியோகிக்கிறார்களா. அவர்களும் ரயில், வேன் போன்ற வழிகளில் தானே அனுப்புகிறார்கள். இரவு பத்து மணிக்குக்கூட அவர்கள் சேவை செய்வார்கள் என்றால் அது எப்படி சாத்தியமாகிறது. வேலையாட்களை 12-16 மணிநேரம் வேலை செய்யவைத்து தானே. இதனால் பலனடைவது யார். பாதிப்பது யார்.

        Organized sector ல் யூனியன் வைக்க முடியும் என்கிறீர்கள். அது ஒரளவுக்கு உன்மைதான் என்றாலும், எந்த அளவுக்கு உன்மை. டீலர்ஷிப் சர்வீஸ் சென்டர்களில் எங்கேனும் யூனியன் இருக்கிறது என்று காட்டமுடியுமா. இபபோது தொழிற்சாலைகளில் பலவற்றில் யூனியன் வைக்கமுடியாத நிலை இருப்பது தெரியாதா. IT sector Organizeடா இல்லையா. அங்கே யூனியனின் நிலை எப்படியிருக்கிறது. அரசு போக்குவரத்து நிறுவனங்களில் கூட தொழிலாளர்களுக்கு பல கட்சி யூனியன்கள் இருப்பதால் ஆளும் கட்சி சார்பற்ற தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஆளாவதை தடுக்கமுடியவில்லை என்பதை அறிவீர்களா.

    • அனானி,

      தனியார் கொரியர்கள் அது எதுவாயினும் பார்சல்களை “மட்டுமே” அனுப்புவதற்கு உகந்தவை என்ற அடிப்படை உண்மையை கூற விரும்புகின்றேன். வக்கில் நோட்டிஸ் , நீதிமன்ற ஆணைகள் போன்ற முக்கியமானவற்றை பதிவஞ்சல் மூலம் மட்டுமே நாம் அனுப்பும் ,பெற்றுகொள்ளும் பின்ண்ணணி என்னவென்று தேடி தெரிந்து கொள்ளவும். காலை 8மணி முதல் மாலை 5 மணி வரையிலான அஞ்சலக சேவை மிகவும் சிறப்பானதே ! கையில் stamp இருந்தால் 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானால் நாம் அஞ்சல் செய்யலாமே !பதிவு தபால் ,விரைவு தபால் ஆகியவற்றுக்கு ஆன்லைன் டிராக்கிங் வசதியுள்ளதை இங்கு கேள்வி எழுப்புவோர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

      ஆர்.எம்.எஸ். சேவை என்பது அஞ்சல் துறை இரயில்வே துறைக்கு பணம் செலுத்தி பெற்று உள்ள ஒரு சேவை. உதாரணத்துக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணிக்க 50 சீட்டுகள் உள்ளபெட்டி என்றால் ஒரு சீட்டின் விலை Rs 200 என்றால் ஒருமுறை பயணத்துக்கு 50 * 200 = Rs 10,000 ரயில்வேவுக்கு செலுத்தி ஆர்.எம்.எஸ் இச் சேவையை பெறுகின்றது. தென் தமிழக மாவட்ட அஞ்சல்கள் சென்னையை வந்தடைய இதனைவிட ஒரு feasible ஆன வழி வேறு ஏதும் இல்லை.

      RMS சேவையில் என்ன மாற்றங்கள் தேவை என்று சிந்திக்கும் போது RMS ரயில் பெட்டிகளில் உள்ள சீட்டுகள்[நடுவில் உள்ள 10 சீட்டுகளை தவிர்த்து ] கழற்றபடுமாயின் அந்த RMS ரயில் பெட்டியின் கொள்ளளவு அதிகரிக்கும் ,மேலும் தொழிலாளர்-தோழர்களுக்கு வேலை செய்ய வசதியாகவும் இருக்கும்.

    • அனானி,

      ஆர்.எம்.எஸ் சேவை காலத்துக்கு ஒவ்வாதவை என்று கூருகின்றிர்கள் என்றால் அதற்கு மாற்று என்னவென்று கூறுவதும் உங்கள் கடமையாகின்றது. மேலும் ஆர்.எம்.எஸ் சேவை ஏன் காலத்துக்கு ஒவ்வாததாக ஆகியுள்ளது என்பதையும் விளக்கவேண்டிய கட்டாயத்தில் நீங்கள் உள்ளீர்கள். மேலும் ஆர்.எம்.எஸ் சேவை ஏன் சாத்தியம் அற்றது என்று விளக்கவேண்டிய தேவையும் உங்களை சார்ந்ததே ! professional courier போன்றவர்கள் காலையில் 10 மணி முதல் மாலை 7மணி வரையில் தான் பார்சலை [ அஞ்சல்கள் அல்ல என்பதை கவனிக்கவும் ] பெற்றுகொள்கின்றார்கள். அரசு அஞ்சல்துறையை நம்ப முடியாது என்று நீங்கள் அவதூரு செய்யும் போது அதனை விளக்கமாக கூறவேண்டிய கடமையும் தங்களுக்கு உள்ளது !

    • தனியார் கொரியரைத்தான் முக்கிய தபால்களுக்குப் பயன்படுத்துகிறோம் என்று அனானி சொல்வது உண்மையா ?

      Dear Readers please read the below from Professional Courier in their Terms and Conditions :

      Terms & Conditions

      You are requested to read the following points carefully before booking the consignment;

      You may carefully note that Your consignment must not contain any letter of communication which will infringe the INDIAN POSTAL ACT. 1983. Cheques, Drafts, Files, Stationery, Documents, Negotiable instruments, Banking papers, L.Cs and such other documents are not barred from being sent through courier service. We accept envelopes/parcels in good faith that they do not contain anything, which will infringe the Law. However the consignment should not contain any paper or documents which cannot be reconstructed in case of laws.

      //தனியார் கொரியரைத்தான் முக்கிய தபால்களுக்குப் பயன்படுத்துகிறோம்.//

  8. புரடிக்டிவிட்டி [Productivity ]பேசும் பெருந்தலைகளுக்கு :

    பொது துறை நிறுவனங்களை தனியார் மையம் ஆக்கினால் Productivity அதிகரிக்கும் என்று எவ்வித அறிவியல் கண்ணோடமும் இன்றி பேசும் தனியார் மைய வாதத்தில் மூழ்கி திளைக்கும் முதாலாளித்துவ பெரிசாளிகள் கவனிக்க வேண்டிய விடயம் இது . கடந்த சில மாதங்களாக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுக படுத்தியுள்ளது. அதற்கு ஒவ்வொரு மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்துக்கும் target யை மண்டல அதிகாரிகள் fix செய்து இருந்தார்கள். எமது தென்மாவட்ட பயணத்தில் நான் பெற்ற புள்ளிவிவரங்கள் என்னை மிகவும் மகிழ்சியில் ஆழ்த்தியது. ஆமாம் திருநெல்வேலி ,தூத்துகுடி ஆகிய மாவட்ட தலைமை அஞ்சல் தங்களுக்கு கொடுக்க பட்ட இலக்கையும் மிஞ்சி முறையே 132%,147% என்ற அளவுகளில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை நிறைவேற்றி இருந்தது. சீனியர் சூப்பரடெண் டாப் போஸ்டல் [SSPo]அதிகாரிகளிடம் எனது மகிழ்ச்சியை வெளிகாட்டிக்கொள்ளாமல் இது எப்படி சாத்தியம் ஆயிற்று என்றேன் ? அவர்கள் அளித்த பதில் எம்மை மிகவும் அதிக மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அஞ்சல் துறை அலுவலர்கள் பள்ளிகூடம் வாரியாக சென்று இருகின்றார்கள். அந்த திட்டத்தின் பயன்களை பற்றி மாணவிகளிடம் பேசி இருகின்றார்கள் . பின்பு என்ன நடந்து இருக்கும் ? மாணவிகள் பெற்றோர்களை நச்சரித்து , 9.2% வட்டியுடன் இந்த திட்டத்தில் சேர்ந்து உள்ளார்கள். கடைசி இரு நாட்களில் மட்டும் 40% முதல் 50% வரையில் அவர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள் அந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்கள்.

    தென்மாவட்ட பயணங்கள் தக்க கட்டுரைகளின் பின்னுட்டங்களில் தொடரும் …..

    • It’s one of the rare situations I agree with Tamil; among many Govt units, I find Postal employees much better. We have many complaints of this department in northern states though.
      But remember, courier company employees work harder with much less wages.

      • முதலில் ICF ல் productivity இல்லை என்பது , மேட்ரோ கோச் செய்யவில்லை என்பது ,விளக்கியபின் விலகி ஓடுவது , இப்போது போஸ்டல் பற்றிய மூக்குரிஞ்சல் …., போங்க உமா இப்படியே பயணத்தை தொடருங்கள்

    • இட்லி சுடுவது ,கூடத்திற்கு ஆள் சேர்ப்பது எல்லாம் ப்ரோடுச்டிவ்ட்டியில் சேர்த்தி இல்லை .
      அதை உகாண்டாவில் கூட பண்ண முடியும் .

      புதிய தொழில் நுடபதொடு போட்டி போட்டு புதிய பொருள் படைக்கும் திறன் என்பதன் களமே வேறு

      • தத்துவ மேதை இராமனின் வாக்குமூலம் . மிக சிறப்பாக இருக்கின்றது . வாழ்த்துக்கள் இராமன் .இப்படியே தொடருங்கள். ஆமாம் உங்கள் உகண்டா அனுபவம் எப்படி இருந்தது ? உங்கள் நண்பர் இடியமின் கொடுத்த மனித மாமிசவிருந்து எப்படி இருந்தது இராமன் ?

  9. இதனைப் படிக்கும் போது, இந்த தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் சுய பொருளாதாரம் என்று ஒன்று இனி இருக்காது எனப் புரிந்து கொள்ள முடிகிறது. சொந்தத் தொழில் என்று உள்ளூர் அளவில் ஒரு தொழிலைக் கூட விட்டுவைக்கமாட்டார் மோடி என புரிகிறது. யாரும் சுதந்திரமாக ஒரு தொழில் நடத்த முடியாது. மேலும், உழைக்கும் மக்கள் என்ற வகையில் நாம் ஏதாவது ஒரு தொழில் முயற்சி எடுத்தால் கூட சட்டம் போட்டு அதனை ஒழிக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. பாசிசம் சட்டபூர்வமாகக் கொண்டுவரப்படுகிறது என்ற கட்டுரையாளரின் கூற்று சரியாக உள்ளது.
    ஒரு கையேந்தி வண்டி வைக்கக் கூட முடியாது. ஏனெனில், உணவுத் தரக் கட்டுப்பாடு சட்டப்படி அது சட்டவிரோதமாக்கப்பட்டுவிடுகிறது.
    நேற்று சத்தியம் டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தனக்கு பல ஆண்டுகளாக இன்கிரிமிண்ட் வரவில்லை என்று ஒரு தொழிலாளி டிவியில் பங்கேற்கும் வழக்கறிஞரைக் கேட்கிறார். அதற்கு வழக்கறிஞர் சொன்ன பதில், இன்கிரிமெண்ட் தரவேண்டும் என்று சட்டம் கூறவில்லை, முதலாளிகளாக தருவதுதான் என்கிறார். இதன் மூலம், இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பல நூற்றுக்கணக்கான மக்கள் சட்டம் என்ற சட்டகத்திற்குள் சிக்க வைக்கப்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதனால், இந்தியாவில் சட்டபூர்வமாக பாசிசத்தை நிலைநாட்டத் துடிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சட்டத்தையும் அதன் சூட்சுமங்களையும் அம்பலத்தி தொழிலாளர்களை அணிதிரட்டும் நமது கடமை மேலும் முக்கியத்துவமுடையதாக இருப்பதை உணரமுடிகிறது.

    • அன்ஆர்கனைஸ்டு தொழில்கள் ஆர்கனைஸ்டு முறைக்கு மாறுவதை உண்மையில் இடதுசாரிகள் வரவேற்க வேண்டும். அப்போதுதான் தொழிற்சங்கம் அமைக்க முடியும், உரிய சம்பளம் + சலுகைகளைப் பெற முடியும். தெருவுக்குத் தெரு இருக்கும் ஒர்க்ஷாப்புகள் உண்மையில் ஸ்வெட்ஷாப் என அழைக்கப்பட வேண்டிய உழைப்புச் சுரண்டல் பட்டறைகளே. சிறுவர்களைப் பணியமர்த்துகிறார்கள்; முதலாளியை எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிட முடியாது! ஸ்பேனரால் அடித்துத் துரத்திவிடுவார்கள். பணிப் பாதுகாப்பு, 8 மணி நேர வேலை, சம்பளத்துடன் விடுப்பு நாட்கள் என்பதெல்லாம் ஆர்கனைஸ்டு கம்பெனிகள் நடத்தும் சர்வீஸ் சென்டர்களில்தான் சாத்தியம். எனவே இதை வரவேற்போம்.

      • @Anani,Any Govt cannot give employment to all educated unemployed.When these educated/uneducated youth undertake self-employment,how can you curtail their business/activity?I think you have not visited any mechanic shop recently.No head mechanic beat the boys under him with a spanner nowadays.You are referring to mechanics in short stories.If any one beat like that,he will be taken to task by the parents of those boys.On the other hand,the employees in a courier service company are treated very badly and paid poor salary.

    • @Raghu-Hosur,I endorse your view.Small/petty shopkeepers will be abolished by allowing multi-brand retail giants like Wallmart.Small farmers/marginal farmers were already abolished in some States by introducing corporate farming.They will be deprived of their lands by the new Land Aquisition Act. Roadside mechanics and retail spare parts dealers will be abolished by the new Transport Act.Poorly paid workers will be deprived of their TVS mopeds/Bajaj M80s since they cannot afford to go to authorized service centers.Acche Din Aagayee.

      • Modi is giving a taste of socialism.

        Govt will take land for the common good
        People need licesne to work

        Arent you guys suppose to celebrate it

        //,Any Govt cannot give employment to all educated unemployed.When these educated/uneducated youth undertake self-employment,how can you curtail their business/activity//

        Cuba is doing it 🙂

        • We are talking about India and about the disaster that may befall on the self-employed people due to the acts proposed.While criticizing the Indian Govt policy,I have not praised the system obtained in Cuba.What the Act sought to introduce are for the benefit of few corporates and it is not socialism as stated by Raman.Let him get cured of his phobia before participating in the debates.

          • How does it matter? Your solution is supposed apply to all countries!

            Road side shop owners who work for their profit will not be allowed in communist country ..
            Cuba has only govt Auto workshop. Every body is govt employees

  10. In this “biggest democratic country in the world” (?) the responsibility of governing the state will soon be out sourced,contrary to the present practice of de-facto governance of indirect means. Hail modimastan governance (?)

  11. வினவு எல்லாமே கனவு அல்லது கற்பனை போன்று உள்ளது. புரச்சிகர இயக்கங்கள் மீதான கற்றது கையளவின் அவதூறுகள் , தென்றலின் சாட்டையடி பதில்கள், வினவின் விளக்கங்கள் என்று நேற்று வினவில் பார்த்தது போன்று உள்ளது. இன்று காலை கண் விழித்து வினவை பார்த்தால் அனைத்தும் கற்பனையோ அல்லது கனவோ என்று என்ன தோன்றுகின்றது .

Leave a Reply to அனானி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க