privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககொள்ளைக்காரி ஜெயா விடுதலை - ஏன் ?

கொள்ளைக்காரி ஜெயா விடுதலை – ஏன் ?

-

jaya-acquited-cartoon

ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என்று அழைக்கப்படும், திருட்டு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பளித்து விட்டார் குமாரசாமி. சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் சற்று நம்பிக்கை ஊட்டப்பெற்றிருந்த திமுகவினரும் பிற எதிர்க்கட்சிகளும் இந்த தீர்ப்பினால் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அசைக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதால், தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமே அமையவே முடியாது என்று கருதிய பலருக்கும் இது அதிர்ச்சிதான்.

ஆனால், 18 ஆண்டு காலம் நடைபெற்ற இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் அனுபவம் என்ன? குன்ஹாவின் தீர்ப்பையும், கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அரிதான சில தீர்ப்புகளையும் தவிர்த்து, மற்றெல்லா சந்தர்ப்பங்களிலும் போயஸ் தோட்டத்தின் செக்யூரிட்டியாகவே நீதித்துறை, குறிப்பாக உச்ச நீதிமன்றம் இருந்து வந்திருக்கின்றது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் எடுபிடியாகவே உச்ச நீதிமன்றம் நடந்து கொண்டு வருவதையும், நீதித்துறையே பார்ப்பனக் கும்பலுக்கும் பார்ப்பன பாசிசத்துக்கும் ஆதரவாக செயல்பட்டு வருவதையும் நாம் தொடர்ந்து அம்பலப் படுத்தி வந்திருக்கின்றோம்.

18 ஆண்டுகாலம் இந்த வழக்கை இழுப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு செய்த உதவிகள் எண்ணிலடங்காதவை. நியாயமான முறையில் ஒரு விசாரணை நடத்தினால், ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் நீதிபதிகளாகவே இருப்பர்.

ஜெயலலிதா வழக்கில் மட்டுமல்ல, சங்கராச்சாரியில் தொடங்கி, மோடி, அத்வானி, அமித் ஷா உள்ளிட்ட எல்லா பார்ப்பன பாசிசக் கொலையாளிகளையும், முஸ்லிம்களை நரவேட்டையாடிய போலீசு அதிகாரிகளையும், தலித் படுகொலைக் குற்றவாளிகளையும் நீதிமன்றங்கள் அடுத்தடுத்து விடுதலை செய்கின்றன. சல்மான் கான் போன்ற பணக்காரப் பொறுக்கிகளுக்குத்தான் கருணை காட்டுகின்றன.

இதுதான் நீதித்துறையின் யோக்கியதை என்று பல சந்தர்ப்பங்களில் அம்பலமாகியிருந்த போதிலும், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நீதித்துறையின் பார்ப்பன பாசிச ஆதரவு அப்பட்டமாகத் தெரிந்த போதிலும், ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட முடியும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கத்தான் செய்தது. உண்மையில் அது அவர்களது விருப்பம். அதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. தங்களது அந்த விருப்பத்தை நீதிமன்றத்தின் மீதான மூடநம்பிக்கையாக அவர்கள் மாற்றிக் கொள்கிறார்கள். மக்களுக்கும் அத்தகைய நம்பிக்கையை ஊட்டுகிறார்கள்.

கருணாநிதியும் மற்ற எதிர்க்கட்சிகளும் இதைத்தான் செய்து வருகின்றனர். குன்ஹாவின் தீர்ப்பு வந்தால், “நீதி வென்றது” என்று குதூகலிப்பது, தத்துவின் தீரப்பு வரும்போது, “இந்த நாட்டில் நீதி இருக்கிறதா?” என்று புலம்புவது, மறுபடியும் பவானி சிங் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வந்தவுடன் “நீதி இன்னும் சாகவில்லை” என்று ஆறுதல் கொள்வது – இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது எதிர்க்கட்சிகளின் அரசியல்.

நீதிமன்றத்தின் மூலம் மிகவும் அரிதான சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கலாம். அரிதான சில வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவதும் நடக்கலாம். குன்ஹாவின் தீர்ப்பைப் போன்றவை அத்தகைய விதிவிலக்குகளே. விதிவிலக்காக இப்படி நீதி கிடைக்கும் தருணங்களில் அதற்காக நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் நீதி மன்றத்தின் மூலம் இந்த மக்கள் விரோதிகளைத் தண்டித்து விட முடியும் என்ற மயக்கத்துக்கு நாம் ஆளாகி விடக்கூடாது. நீதித்துறையே குற்றவாளிகளின் கூடாரமாகவும், தீர்ப்பு என்பது விலைப்பேசி விற்கப்படும் பொருளாகவும் மாறி வெகு காலமாகிவிட்டது.அங்கே மக்களுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது.

எனவே, அதிமுக என்ற கொள்ளைக் கும்பலின் தலைவி, தமிழ்ச் சமூகத்தையே ஊழல்படுத்தி, தமிழ் மக்களை சுயமரியாதையும் சொரணையும் இல்லாத கையேந்திகளாக மாற்றி, அவர்களுடைய வாக்குகளை விலைபேசி வாங்க முடிகிறதே, இந்த நிலைமையை மாற்றுவதெப்படி என்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் திரளின் வலிமை கொண்டே, இந்தக் கொள்ளைக் கூட்டத்தை விரட்டியடிப்பதும், இந்தக் கொள்ளைக்காரியைத் தண்டிப்பதும் எப்படி- என்ற கோணத்தில்தான் நாம் சிந்திக்க வேண்டும்.

இந்த மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி என்பது, இந்த அரசுக் கட்டமைவின் தோல்விக்கு ஒரு சான்று. இந்தக் கட்டமைவுக்கு வெளியே, மக்கள் அதிகாரத்துக்கான அமைப்புகளைக் கட்டியமைப்பதும், அவற்றின் மூலம் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பதும்தான் இதற்குத் தீர்வு.

kovai-admk-alattal-1
இதய தெய்வம் மாளிகை(கோவை அதிமுக தலைமையகம்) முன்பு சாலையை மறித்து ஆட்டம் போடும் கொள்ளைக்காரி கட்சியின் அடிமைகள்
கோவை அ.தி.மு.க கொண்டாட்டம்
இதய தெய்வம் மாளிகையிலிருந்து வெளியே வந்த செ ம வேலுசாமி முன்னாள் மேயர் ஊடகங்களுக்கு 500 ரூபாய் கட்டு ஒன்றை கொடுத்ததையும் அதை அவர்கள் நடு ரோட்டில் நின்று கொடுத்ததை நேரடியாக பார்க்க முடிந்தது. ஊடகங்கள், நீதித்துறை எல்லாவற்றுக்கும் விலை உண்டு.! (வேலுசாமி காரின் பின்னாடி அமர்ந்திருக்கிறார்)
kovai-admk-alattal-2
கோவை செ.ம.வேலுசாமி ஊடகங்களுக்கு நேர்காணல் – கவருக்கு முந்தைய காட்சி!

புகைப்படங்கள்: பு.மா.இமு, கோவை.

 

  1. அதிமுக வழக்கிற்குக் கொடுத்த பணத்தை விடக் கூடுதலாகக் கொடுக்க திமுக விடமோ, பாஜக விடமோ, காங்கிரசிடமோ
    பணம் இல்லையா , விந்தையாக இருக்கிறது

  2. ப ஜ க மற்றும் காங்கிரசு கவனிக்கப்பட்டிருக்கும் ! தி மு க பணம்நாளைக்கு தங்கு தேவைப்படலாம் என சேமிக்கப்பட்டிருக்கும்! ஆக,நீ தேவன் மயங்கவில்லை, சோரம்போய்விட்டார் போல!

    • சோ(ரம்)?
      சரிதான்!
      நான் எப்படியாவது படிச்சி பெரிய ஜட்ஜ் வேலைக்கு போய்
      கொள்ளை கொள்ளையாய் சம்பாரிக்கணும்….

  3. இந்த தீர்ப்பை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகை செய்திகளின் அடிப்படையில், சட்டத்தின் பார்வையில் சுருட்டப்பட்ட தொகை எவ்வளவு என்பதில் குழப்பம் உள்ளது என்றும் அதானால் அபராதத் தொகை குறைகப்படலாமே தவிர குற்றமும், ஜெயில் தண்டனையும் உறுதியாகும் என்றுதான் எதிர்பார்த்தேன். கீழ் கோர்ட்டில் ஜெ, லாலு ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனை, ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது போன்றவை நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்தின. இப்போது மொத்தமும் கவிழ்ந்துவிட்டது.

    இது தொடர்பாக் பத்திரிகைகளை மேய்ந்ததில் இன்னொரு கொடுமை கண்ணில் பட்டது. தீர்ப்பு குறித்து கருத்து கணிப்பாக தி இந்து தமிழ் நாளிதழ் இப்படி கேட்கிறது. அடப்பாவிகளா. இதெல்லாமாடா இந்த தீர்ப்புக்கு காரணம்.

    // சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூலம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி குறித்து எழும் கருத்துகளில் முதன்மை வகிப்பது…

    – விடாப்பிடி சட்டப் போராட்டத்தின் வெற்றி
    – பொய்வழக்குக்குக் கிடைத்த தோல்வி
    – தொண்டர்களின் விசுவாசமான பிரார்த்தனை
    //

  4. நல்ல கட்டுரை தோழர். தொடர்ந்து நீங்கள் கூறி வருவதுதான் நடக்கிறது.

  5. ஆகையால் மக்களே உங்களிடம் (பகல்/இரவு) கொள்ளை அடிக்கலாம்..
    கொள்ளை அடித்த பணத்துக்கு வருமான வரி கட்டிவிட்டால், (அ) நீதி மன்றம்
    கொள்ளை பணத்துக்கு வெள்ளை அடித்து தரும்….

  6. என்டா , ஜெயிலில் இருக்கிரவன் எல்லம் கேனயஙளா? டிரந்து விடு ஜெயில.

  7. இது நீதி துறையின் தீர்ப்பு இல்லை.குமாரசாமி என்ற ஒற்றை மனிதனின் ஆசாபாசம்.

  8. நான் முன்பே சொன்னது….
    அவாள் செய்தால் தப்பில்லேடா…
    அபிஸ்டுங்களா…அவாள்ளாம் தெயிவத்தோட குழந்தைங்கடா…
    சூத்திரன் கொலை செய்தால் தலை வாங்கவேணும்…
    அவாள் செய்தால்….மசிரை புடுங்கினால் போதுமாம் அம்பி!

    • //மசிரை புடுங்கினால் போதுமாம் அம்பி!//நீதி மன்றம்தான் ஒரு மசுரையும் புடுங்களியே ராமதாஸ்

  9. வினவு ,

    தீர்ப்பை வாசித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி , “சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை”. என்றார்.

    என் வாதம் என்னவென்றால் ,அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த பவானிசிங் அவர்களின் வாதங்களை ஏற்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் அன்பழகன் தொடுத்த வழக்கில் தெளிவாக 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு கூறிய போதிலும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி அவர்கள் தன் தீர்ப்பில் குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை என்று கூறுவது technically தவறு உடையது.

  10. vinavu,

    வருவாய்க்கு அதிகமாக ஜெயாவிற்கு ரூ.2,82,36,812 மதிப்புடைய சொத்துக்களே உள்ளன. வருவாய்க்கு அதிகமான சொத்துக்களின் சதவீதம் 8.12%. இது ஒப்பிடுகையில் மிகச்சிறிய தொகையே” என்று ஆவணங்களை ஆய்வு செய்ததில் கோர்ட் முடிவுக்கு வந்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு முதலமைச்சர் தன் 5 ஆண்டு கால ஆட்சியில் கிட்டதட்ட 3 கோடி அளவுக்கு தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நீதி மன்றத்தை பொறுத்த வரையில் தவறு இல்லை என்று பச்சையாக சட்டங்களுக்கு எதிராக பேசுகின்றார் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி. அதற்கு ஆதாரமாக உச்ச நீதி மன்ற தீர்புகளை கீழ்கண்டவாறு சுட்டிக்காட்டுகின்றார்.

    [1]””கிருஷ்ணாநந்த் அக்னிஹோத்ரியின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது, வருவாய்க்கு மீறி 10% வரை அதிக சொத்துகள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்ய உரிமையுடையவர்களே என்று அறிவுறுத்தியிருந்ததை கர்நாடக உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் போது சுட்டிக் காட்டியது.””

    [2]ஆந்திர மாநில அரசு தனது சுற்றறிக்கை ஒன்றில் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என்று தெரிவித்திருந்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    வருவாய்க்கு மீறி 10% வரை அதிக சொத்துகள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்ய உரிமையுடையவர்களே என்று சுப்ரீம் கோர்ட் கூறுவதற்கு என்ன சட்ட அங்கிகாரம் உள்ளது.? மேலும் ஆந்திர மாநில அரசு தனது சுற்றறிக்கை ஒன்றில் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என்று கூறுவது தமிழ் நாட்டுக்கு எப்படி பொருந்தும் அல்லது கர்நாடகா உயர் நீதிமன்றம் ஆந்திர அரசின் சுற்றறிக்கைக்கு கட்டுப்ட்டதா ?

  11. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிந்தால் நம் மேல் தான் விழும். இது தெரியாதா திரு கருணாநீதி அவர்களுக்கு ? நாம் ஒழுங்கா? அடுத்தவர் மேல கேஸ் கொடுக்கும் முன் யோசிக்க வேண்டாமா? தோ வருகிறதே 2G கேஸ்? ஜெயா மேடம் தேடி கொண்டு பழி வாங்க வில்லை. ஆனால் தன் வினை தன்னை சுடும் நாளும் வரும். அப்போ தெரியும். நேராக மோத முடியவில்லை கேஸ் கொடுக்கிறார்களாம் கேஸ் .

  12. தீர்ப்பு இப்படிதான் இருக்கும் என்று எதிர்பார்த ஒன்றுதான்.

    முன் ஜாமீன் தருவதில் குற்வாளிகளை விடவும் நீதிபாதி தத்து அதிகமாக காட்டிய அக்கரை.

    நாடே ஏதிர்த நிலம் அபகரிக்கும் மசோதவை மத்திய அரசு கொண்டுவருவதர்க்கு அதிமுக வரிஞ்சிகட்டினு அதருவு தெரிவித்தது.

    கருப்பு பணம் மீட்பர் மோடியின் நிதி அமைச்சர் அருன்ஜட்லீ கொள்லைகாரி ஜெயலலிதாவை போயஸ் தோட்டதிற்க்கு சென்று சந்திதது.

    அதிமுக வானரங்கள் தீர்ப்பு தேதி அறிவித்த பின்பும் வாளை சுருட்டி கொண்டு இருந்தது.

    இவை எல்லாம் கணித்து பார்கும்போதே தெல்ல தெலிவாக தெரிந்தது தீர்ப்பு ஏர்கனவே எழுதப்பட்டு விட்டது என்று.

    ஒரு அய்யோகியதனமான தீர்ப்பை தந்துவிட்டு நீதிமன்றத்தயை விர்சிக்க கூடது என்பது அதைவிட அய்யோக்கியதனம்.

    ——————————————————————-
    இந்த தீர்ப்பை கண்டு மீகுந்த அதிர்ச்சி அடைவதாக பா.ஜ.க வின் தமிழ் மநிலைவர் தமிழிசை சொல்கிறார்!

    இந்த தீர்ப்பு மக்களுக்கதன் அதிச்சியாக இருக்கவேண்டும் உங்களுக்கு ஏன் அதிர்ச்சியாக உள்ளது இந்த தீர்ப்பு இப்படிதான் இருக்கும் என்று உங்கள் தலைமை உங்களுக்கு சொல்லவில்லையா?

    தமிழிசை இந்த தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக சொல்கிறார்
    எஜ்.ராஜ கொள்ளைகாரி விடுதலைக்கு வழ்து தெரிவித்துள்ளார் பா.ஜ.க.தலைமை தமிழிசையிடம் சொல்லாத தீர்ப்பின் ரகசியத்தை எஜ்.ராஜவிடம் சொல்லி இருக்கொமோ!
    ——————————————————————-
    தீர்ப்பு வந்த நிமிடத்தில் இருந்து கேப்டனை எந்த டிவியிலும் அலேகனம்.

    கலைஞர் தீர்ப்பு பற்றி வெளிப்படையாக கருத்து சொல்ல தயங்கிறார் .

    இவளவுதான் தீர்ப்புக்கு ஏதிர் கட்ச்சிகளின் ஏதிர்ப்பு.

  13. Aana Oona paarpanar paarpanar enru solli our kootam.. Avanga paatukku irunthuttu pottume.. Summa sambanthamr illatha our kootrai uruvaakki our aaniyum pudunga mudiyathu.. Narendra Modi paarpaner enru neengale avar pakkathil orunthu valarntharpola solreengale.. Ippadi illatha vishayatha ootha solli evlo panam kuduthanga.. Illa unga pizhaippe intha kevalamaana velayapanni thaana..?

  14. நிறைய பேரு அதிமுக காரன் உட்ப்பட அம்மாவுக்கு தண்டனை கிடைக்குமுனுதான் நினைச்சாங்க எனது நண்பர் ஓட்டல் வச்சுகிறவர் தீர்ப்பன்னிக்கு கடைய மூடலாமுனு முடிவு பண்ணிருந்தாரு அவரு கிட்ட எனது குறைந்த சட்ட அறிவை பயன்படுத்தி அய்யா அம்மாவ கண்டிப்பா விடுதலை பன்னிறுவாக போல இருக்குது தண்டனை குடுக்குறதா இருந்தா குற்றம் சாட்டப்ப்ட்டவக எல்லாரையும் கோர்ட்டுல ஆஜர் ஆகும்படி சொல்லிருப்பாக ஏன்னா குற்றம் சாட்டப்பட்டவக எல்லாம் ஜாமினுல வீட்டுல இருக்காகன்னு சொன்னேன் அது போலவே நடந்துடுச்சி அண்ணாச்சிக்கு ஒரு நாள் கடை லீவு விட்டதுல ஒரே வருத்தமா போச்சு போங்க ,அம்மாவல்லாம் ஒன்னும் பண்ன முடியாது ம க இ க காரக முட்டாள் ஜனத்த திருத்தி ஊழலுக்கு எதிரா அணி திரட்டி புரட்சி பண்ணி அம்மாவ தண்டிச்சிடலாமுனு பாக்குறாங்க ….

  15. இப்படி ஒரு தீர்ப்பெழுத சட்டம் பயின்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவையா? நானே வேலையை கச்சிதமாக முடிதிருப்பேனே!

    குற்றம் சாட்டப்பட்டவர் நாளிதழ்கள் படிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். உருகுவே, உகாண்டா போன்ற நாடுகளில் வெளியாகும் நாளிதழ்கள் உட்பட ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரம் நாளிதழ்கலாவது படிக்கும் வழக்கம் உள்ளவர். இப்படி அறுபது வருடங்களாக படித்த இதழ்கள் அனைத்தையும் சேமித்து வைத்து 1995 இல் பழைய பேப்பருக்கு எடைக்கு போட்டதில் இருபத்தைந்து கோடியே, அறுபது லட்சத்து மூவாயிரம் ருபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதை கீழ் நீதிமன்றம் கணக்கில் எடுக்க தவறிவிட்டது. உகாண்டா நாட்டு பழைய பேப்பர் வியாபாரி காட்டுமோ நிலீதா சொன்ன சாட்சியம் இதை தெளிவாக் நிரூபிக்கிறது. எனவே கீழ் நீதிமன்ற தண்டனையை தள்ளுபடி செய்கிறேன்.

  16. தீர்◌ப்பு சட்டங்களையும் சாட்சியங்களையும் அடிப்படையாக வழங்கப்படுவது. எல்லாரும் நீதிபதிகளாகி தண்டனை விதிக்க முற்படுவது எந்த வகையில் நீதியாகும் ? எல்லாரும் முதல் அமைச்சர் ஆகவேண்டும். எல்லாரும் நீதிபதிகள் ஆகவேண்டும். நல்ல தேசமப்பா இது.

  17. இதுவரை வழங்கப்பட்ட இந்திய நீதிமன்ற தீர்ப்புக்கள் அனைத்தும் சரியானது போலவும் இந்த குமாரசாமியின் தீர்ப்பு மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாதது போலவும் கூறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. குன்காவின் தீர்ப்பு மட்டும் என்னவாம்!!! 1௦௦ கோடி தண்டனை விதித்தாரே இது எந்த சட்டத்தில் உள்ளது.

    எங்கும் எதிலும் ஜாதி மதம் என்ற போர்வையில் இருப்பவர்களுக்கு நேர்மை என்ன என்பது தெரியாது. வினவு எப்போதும் ஜாதியை தூண்டிவிடுதல் அல்லது இஸ்லாமிய பயன்க்காரவாத்திற்கு ஆதரவு தெரிவித்தல் இதில் மட்டுமே கைதேர்ந்தது!!!!

    • So now Natraayan has passed his verdict against Vinavu.OK.We are not finding fault with Justice Natrayan.But,if the “new”justice has time,let him read the facebook pages published by Vinavu. about the other verdict particularly page no 852.If Vinavu publishes only false news,Why this “new”justice frequents Vinavu?Does he think he is the one man army against Vinavu?

  18. தனக்கு என்றால், பதக்கு என்பதே பார்ப்பனநீதி! மனுசாத்திரமே அவாள் சூத்திரம்! அய் பி எல் முதல் பச்சையப்பன் டிரஸ்ட் வரை எல்லாம் அவால் பள்ளயமே! காமன்வெல்த் விளையாட்டு ஊழல்களில் கல்மாடி சிறு மீன் சிக்கினாலும், திமிங்கிலம் ஷீலா தப்பிக்கவில்லையா? எட்டி மாட்டினாலும் அம்மா விடுதலை! அவாள் நீதியே தனிதான்!

Leave a Reply to கொள்ளைக்காரி ஜெயா விடுதலை – ஏன் ? | Indian News | SriLankan Tamil News | Articles | பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க