privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவாடி ராசாத்தி... புதிய தலைமுறை மாலனின் குத்தாட்டம்

வாடி ராசாத்தி… புதிய தலைமுறை மாலனின் குத்தாட்டம்

-

குமாரசாமி தீர்ப்பை மானே தேனே என்று பாராட்டி தினமணியின் வைத்தி மட்டும் எழுதவில்லை. யாரெல்லாம் எழுதினார்கள் என்று பட்டியல் இட்டால் அதற்கு ஒரு ஆயுள் போதாது. ‘அம்மாவின்’ பவர் அப்படி. அல்லது பரிசு வாங்கிய நன்றிக் கடனில் மக்கள் கடனை கொன்று தின்னும் ஊடக பிரபலங்கள் இங்கே அதிகம்.

புதிய தலைமுறை மாலன்
டிவிட்டர், ஃபேஸ்புக்கில் மனந்திறந்து பூரித்த புதிய தலைமுறை மாலன்

நாளிதழுக்கு இருக்கின்ற அன்றாடம் செய்தி வெளியிடும் வாய்ப்பு வார இதழகளுக்கு இல்லை என்பதால் புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர் மாலன் கொஞ்சம் வருந்தியிருப்பார் போலும். அதனாலென்ன? டிவிட்டர், ஃபேஸ்புக்கில் அவர் மனந்திறந்து பூரித்திருக்கும் செய்திகளையும் அவற்றின் உட்கிடக்கையையும் இங்கே தொகுத்து தருகிறோம்.

(தீர்ப்பு வெளிவரும் அன்று மே 11 காலையிலிருந்து மாலன் பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறார். சரியாக 11.010க்கு வெற்றி செய்தி அவர் காதுக்குள் போக கைகளிலிருந்து டிவிட்டர் அறிவிப்பு பாய்கிறது.)

மாலன் நாராயணன் May 11 at 11:01am · Twitter ·

jaya is aquitted

(சரி, ஒரு செய்தியை ஒரு பத்திரிகையாசிரியர் வெளயிடுவதில் தவறு என்ன என்று விசாரிப்போர் பொறுமையாக மேலே போக…)
___________

(அடுத்த இரண்டு நிமிடத்தில் தமிழிலும் குதூகல அறிவிப்பு முழங்குகிறது)

மாலன் நாராயணன் May 11 at 11:03am · Twitter ·

ஜெயலலிதா விடுதலை
____________

மாலன் நாராயணன் May 11 at 11:20am · Twitter ·

not going for appeal -Dr.Swamy மேல் முறையீடு செய்யப் போவதில்லை –சுவாமி

(அடுத்த 15 நிமிடங்களில் சுவாமியின் செய்தி வெளிவருகிறது. இதில் செய்தியின் மதிப்பை விட மாலனின் பயமும், விருப்பமும் முக்கியம். இந்த வழக்கை ஆரம்பத்தில் போட்ட இந்த போக்கிரி மீண்டும் உ.நீதிமன்றம் சென்று பிழைப்புக்கு ஆப்பு வைப்பாரா என்பது பயம். அவர் அப்படி போகவில்லை என்றதும் அம்மாவின் விடுதலை உத்தரவாதமாகிவிடும் என்பது விருப்பம். ஆனால் சு.சாமி பேச்சிலும், எழுத்திலும் மேல் முறையீடு போவேன், கர்நாடக அரசு போகாவிட்டால் எனக்கு பவர் இருக்கிறது என்றே அனைத்து ஊடகங்களிலும் பேசினார். இது ஏன் மாலனுக்கு மாற்றி கேட்டது என்பதும் குமாரசாமி ஏன் கணக்கை மாற்றி போட்டார் என்று கேட்பதும் ஒன்று)
_____________

மாலன் நாராயணன் May 11 at 11:20am · Twitter ·

Retweeted Dhanya Rajendran (@dhanyarajendran):

Prosecution had failed to prove the charges. Appellants source of income has clearly established. ‪#‎JayaVerdict

(அடுத்ததாக மாலன் , நியூஸ்மினிட் செய்தி நிறுவனத்தில் வேலை செய்யும் தன்யா ராஜேந்திரனின் செய்தியை வெளியிடுகிறார். அதன்படி அரசுத் தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை, ஜெயா தரப்பு தெரிவித்த சட்டபூர்வ வருமானம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிலைநாட்டப்பட்டது என்பதை மாலன் தெரிவிக்கிறார். அதையும் ஒரு ஆங்கில செய்தியாளரின் மூலம் தெரிவிப்பதால், வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் எனும் வடிவேலுவின் தத்துவத்தை திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்.

ஆனால்……)

Dhanya Rajendran @dhanyarajendran :  Plugging our big story today. Are there glaring mathematical errors in Jayalalithaa case judgement? http://bit.ly/1JE89zv

(அடுத்த நாள் அதே தன்யா, நீதிபதி குமாரசாமியின் கணக்கு தவறை வைத்து முக்கியமான கட்டுரையை வெளியிடப் போவதாக தெரிவிக்கிறார். இதை மாலன் ஏன் வெளியிடவில்லை? இப்போதும் வடிவேலு தத்துவத்தையே நம்புகிறார். அதாவது சிவப்பாக இருப்பவன் சொல்வதை மக்கள் நம்பிவிட்டால்…..?)
____________

தரகர் மாலன்
பச்சமுத்துவின் முதல் ஊடக ஆசிரியர் சொன்னால் அறுதி உண்மை என்று நினைப்பு.

(அடுத்த ஒரு மணிநேரத்தில் மாலன் அவர்கள் வரலாற்றில் மூழ்கினாரோ இல்லை ஏற்கனவே எடுத்து வைத்திருந்தாரோ, இல்லை இத்தகைய ஆவண ரெடிமேடுகளை போயஸ்தோட்டமே கூட பார்சல்கூட அனுப்பியிருக்கலாம். இதில் இதற்கு முன்னர் போடப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஜெயா எப்படி வென்றார் என்பதை பட்டியல் இடுகிறார். அதைப் பார்த்தால் பல பத்து ஊழல் வழக்குகளில் இருந்து அம்மையார் ஏற்கனவே விடுதலை ஆனவர் என்பதால் இந்த வழக்கெல்லாம் ஒரு ஜுஜுபி என்ற நக்கல் இருக்கும். ஊரறிந்த ஒரு ஊழல் வழக்கில் பல்வேறு தகிடுதத்தங்கள் செய்யப்பட்டதையெல்லாம் மாலன் அவர்கள் இங்கே ஆவணப்படுத்தி முன்வைக்கவில்லை. எனினும் இந்த நிலைத்தகவலை எதிர்த்து பலரும் அவரிடம் கேள்வி எழுப்புகின்றனர்.)

மாலன் நாராயணன் May 11 at 11:30am

ஜெயலலிதா சந்தித்த/வென்ற/விடுவிக்கப்பட்ட வழக்குகள்

பிறந்தநாள் பரிசு வழக்கு
2011-ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

டான்சி
2002-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு விடுதலை செய்தது. மேல்முறையீட்டு வழக்கிலும் விடுதலை உறுதி செய்யப்பட்டது.

கலர் டி.வி.
இந்த வழக்கிலும் ஜெயலலிதா விடுதலைசெய்யப்பட்டார்.

கொடைக்கானல் ஓட்டல்
மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அவரை விடுதலை செய்தது.

நிலக்கரி
இந்த வழக்கில் இருந்தும் பின்பு ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.

ஸ்பிக் நிறுவன பங்குகள்
2004-ம் ஆண்டு ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.

திராட்சை தோட்டம்
இந்த புகார் 2013-ல் முடித்து வைக்கப்பட்டது. இதுபோல் திராட்சை தோட்டம் மூலம் ரூ 60 லட்ச அளவிற்கு வருமானம் ஈட்டிய வழக்கில் வருமானவரி கட்டவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

தெற்காசிய விளையாட்டு போட்டி
இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டாமின் நிறுவன உரிமம்
வழக்கு சிறப்பு கோர்ட்டிலேயே முடித்து வைக்கப்பட்டது. (எப்படி மாலன் சார்?)

வருமான வரி
எழும்பூர் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது. (வரியை கட்டுவதாக ஒத்துக் கொண்டு அதாவது கணக்கில் காட்டாத வருமானத்திற்குரிய வரி….இதெல்லாம் மாலன் சாருக்கு முக்கியமில்லை)

லண்டன் ஓட்டல்
இந்த வழக்கை திரும்பப்பெற சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது.

புதிய தலைமுறை அட்டை
புதிய தலைமுறை அட்டையில் ‘அம்மா’வுக்கு மாலன் வைத்த காணிக்கை

(இந்த நிலைத்தகவல் குறித்த மக்கள் கருத்துக்கள்)

விருதை ஜே. கே :
பணம் மட்டுமே பத்தும் செய்யும்..!! கூடுதலாக அதிகாரமும் சேர்ந்து கொண்டால் நூத்தி பத்தும் செய்யும் !!

Yuva Krishna:
’சந்தித்த’ ஓக்கே. ‘வென்ற’ என்பது சரியானதா சார்?

மாலன் நாராயணன்:
விடுவிக்கப்பட்ட என்றும் போட்டிருக்கிறேனே

Yuva Krishna:
’விடுவிக்கப்பட்ட’ என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஜெயலலிதாவின் வெற்றி என்பதை மக்கள் களத்தில் 91, 01, 11 ஆண்டுகளில் பெற்றவற்றை மனமுவந்து ஏற்றுக் கொள்ளலாம். நீதிமன்றங்களில் ஜெ வென்றார் என்று சொன்னால், நாளை சல்மான்கானும் வெல்லப்போகிறார் என்று சொல்ல வேண்டியிருக்கும்.

Suresh Kumar Jaganathan:
Super sir.. நீதி : எவ்ளோ பண்ணாலும் தப்பிச்சிடலாம்

Pandian Govindarajan:
ஒருபத்திரிக்கையாளனாக ஏற்பட்ட சந்தோஷமும் மனநிறைவும் புரிகிறது.

Selvan Senthilkumar:
தீர்ப்புக்கு பிறகான பதிவு….. (பத்திரிகைகள் தான்அப்படின்னா…………….நீங்களும்…………?)

Madurai Veeran: அப்புறம் என்ன ஜேக்கு பாரத ரத்னா கொடுத்திடலாம்

_____________

(அடுத்து மாலன் அவர்கள் மதிய இடைவெளிக்கு முன்னர் நாத்திகம் பேசும் முட்டாள்களை அம்பலப்படுத்துகிறார். அதில் பொதுவில் திராவிட, இடதுசாரி, முற்போக்கு முகாம்களை கேலிசெய்யும் தொனி உள்ளது என்றாலும் மாலனது பத்திரிகை ஆசிரியர் என்ற பீடத்தின் பயம் காரணமாக பல பத்திரிகையாளர்கள் இதன் உட்குத்தை கண்டு கொள்ளவில்லை. மேலும் ஜெயா கும்பல் காசு கொடுத்து செய்த நேர்த்திக் கடன்களின் உண்மை சுயரூபத்தை பள்ளி செல்லும் பிள்ளைகள் கூட அறிவார்கள் என்றாலும் மாலனது கணக்கு வேறு. இருப்பினும் மாலனது நோக்கத்திற்கு எதிராகவே பலரும் பதில் அளித்திருக்கின்றனர்.)

மாலன் நாராயணன் May 11 at 1:10pm ·

பிரார்த்தனைகளை நேர்த்திக் கடன்களை கேலி பேசியவர்கள் இனி என்ன சொல்வார்கள்? தமிழகத்தில் இறை நம்பிக்கை அதிகரிக்குமோ?

Dhandapani Sakkarapani:
என்ன தவறு செய்தாலும் நேர்த்திக்கடன் செய்து தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துவிட்டால் என்ன செய்வது? தவறே செய்யாமல் இருந்தால் எதுவும் செய்யாமலே கடவுள் காப்பாற்றுவார் என நம்புவதுதானே உண்மையான கடவுள் நம்பிக்கை?

Rajee Sankar:
இறை நம்பிக்கைகள் அதிகரிக்குதோ இல்லையோ முட்டாள்தனமான துதிபாடல்கள் நிச்சயம் அதிகரிக்கும் .

மணி மணிவண்ணன்:
அப்போ, கடவுளும் ஊழல் பேர்வழிதான்னு மக்கள் நம்புவது கூடிவிடும்னு சொல்கிறீர்களா?

Yuva Krishna:
தமிழக மக்கள் அனைவருக்கும் குமாரசாமி, மொட்டை போட்டு காது குத்தியிருக்கிறார். இறைநம்பிக்கை இல்லாமலா இது நடந்திருக்கும்?

Nagore Rumi :
இதில் உங்களுக்கு வருத்தமோ?!

Rk Rudhran :
சிலதுகள் நிஜமாகவே சிலுவையில் அறைந்து கொள்ளும்..ப்ராத்தனைகள் போஸ்டர்களாகும் போயஸ் தோட்ட வழியில்

Bala Mukundhan :
அந்த ‘நேர்த்திக் கடன்களில்’ எவ்வளவு, நிஜமாகவே மனமுருகி வேண்டி நேர்ந்து கொண்டது?, நேர வைக்கப்பட்டது? நேரம் காலம் பார்த்து நேர்த்தியான முறையில் செய்யபப்ட்டது?

Sivakkumar Sethuraman:
நல்ல எண்ணங்கள் கொண்ட பிராத்தனைகள்.. பலிக்கும்..! இதைத்தான் எல்லா மதத்திலுள்ள உண்மையான இறை நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இங்கே நிஜத்தைவிட போலிகள் தான் மிக அதிகம்.. இதை செய்து காட்டுவதன் மூலம் பிரபலமாகவும் ஆதரவு டிவியில் அதிக நேரம் முகத்தை காட்டி பப்ளிசிட்டி + கட்சி பதவிகள் + சட்டமன்ற சீட் காத்திருப்பதாக உறுதி படுத்தும்..?! இதன் மூலம் சொல்லாமல் சொல்லும் செய்திகள் …உணர்த்தும் உண்மைகள்..! என்னவென்றால் இவைகள் மூலம் கட்சியில் புதுப்புது டெக்னிக் + டார்கட் +அரசியல் எதிரிகளுக்கு வைக்கும் வேட்டு மோகத்திற்காக மட்டுமே.. அக்கறையாக காட்டிக்கொள்ளும் பச்சையாய் அரசியல் ஆதாயம்..?? இதுவே யதார்த்தம்.. மிக விரைவில் பரிசுகளாய் பதவிகள் உண்டு..உண்டு..கண்டிப்பாக உண்டு.. என்பது தான்.. சிலுவை சுமப்பும்.. காவடிகளும்.. பால் குடங்களும்.. ஹோமங்க்களும்.. அபிஷேகங்களும்.. உணர்த்தும் செய்தி.. மிக விரைவில் மாதாவும் அம்மன்களின் வடிவங்களும் புதுப்புதுசாய் தெய்வபிறவி எடுத்து வண்ணத்தில் சாலை முழுவதும் ஆக்கிரமித்து ஜொளிக்கும்… தமிழகத்தின் ஆண்மீக அரசியல் பிராத்தனைகள் கின்னஸ் ரெக்கார்டு செய்யும் ..?! உலகம்மே வியக்கும் தமிழன் புகழ் கோமாளியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை..

புதிய தலைமுறை மாலன்
தீர்ப்பு வந்த நாள் அன்று மாலை நேரத்தில் கொண்டாட்ட மனநிலைக்கு வந்திருந்தார் மாலன்.

Madurai Veeran:
அம்மாவுக்கு கோவில் கட்டவேண்டியதுதான் … அர்ச்சகர்களை தமிழக அரசு நியமிக்கும்

Nsm Shahul Hameed:
ஒரு விசயம் கவனித்தீர்களா சார்!, ஜெயலலிதாவுக்காக தமிழகத்தில் அநேகர் பிரார்த்தனை செய்தனர். ஆனால் நமக்குத் தெரிந்து பெரியளவில் யாரும் பிரார்த்தனை செய்யாமலேயே மற்ற மூவருக்கும் விடுதலை கிடைக்கவும் இறைவன் வழிசெய்துவிட்டாரே!. அதான் ‘வேண்டுதல் வேண்டாமை இலான்” என்றாரோ வள்ளுவர்?
____________

(அடுத்தபடியாக ஜெயா விடுதலை ஆனதன் காரணங்களை தீர்ப்பிலிருந்து எடுத்துரைக்கிறார். அவரது பதவி, வயது, பச்சமுத்துவின் முதல் ஊடக ஆசிரியர், மிரட்டலான புள்ளிவிவரங்கள் என்று பலவும் சேர்ந்து மாலன் சொன்னால் அதுவே அறுதி உண்மை என்பதை நிலைநாட்டும் என நம்புகிறார்.)

மாலன் நாராயணன் May 11 at 3:28pm

விடுதலை ஏன்?

சொத்து மதிப்பு: ரூ. 37,59,02,466
வருமானம்: 34,76,65,654
வருமானத்திற்கு அதிகமான சொத்து: 2,82, 36,812
வருமானத்திற்கு அதிகமான சொத்து சதவீதத்தில்: 8.12%
10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் விடுதலை
(தீர்ப்பிலிருந்து)

Yuva Krishna: கொஞ்சம் முன்னே பின்னே இருப்பதால் அட்ஜஸ்ட் பண்ணி வெளியே விட்டுட்டாங்க .

(யுவகிருஷ்ணாவின் இந்த ‘மேலோட்டமான’ நக்கல் மாலனுக்கு கோபத்தை வரவழைத்திருந்தாலும் உடனே ஆதாரத்தை போட்டு தனது இமேஜை தூக்குகிறார்.)

மாலன் நாராயணன்:

Yuva Krishna கிருஷ்ணானந் அக்னிஹோத்ரி என்பவர் வழக்கில் உச்ச நீதிமன்றம் 10 சதவீதத்திற்குக்குறைவான மதிப்பு அதிகரிப்பு தண்டனைக்குரியதல்ல எனத் தீர்ப்பளித்திருக்கிறது அந்தத் தீர்ப்பை இங்கே காணலாம்: http://indiankanoon.org/doc/1919354/

Yuva Krishna:
அப்படியெனில்“நாட்டில் ஊழல் என்பது மிகப்பெரிய நோயாக உள்ளது. அந்த ஊழல் நோய் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை அவர் மனதில் வைத்துக் கொண்டு தீர்ப்பை வெளியிட வேண்டும். ஊழல் நடவடிக்கைகள் ஒரு நாட்டை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும்.”
– இப்படியெல்லாம் உச்சநீதிமன்றம் சொன்னது சும்மா லுலுவாயிக்குதான் போல

Mageshwar Anbazhagan:
இந்த விஷயம் 10 வருஷத்துக்கும் மேல விசாரணை செஞ்ச அய்யாங்களுக்கு தெரியலையா ?

Bala Kannan:
அப்பறம் பிட்பாக்கெட் அடிக்கரவனையும், செயின் திருடுருவனையும் ஜெயில்ல போடுறாங்க, ஒரு வீட்டுல பூந்து திருடுரது தப்பா என்னா ? அப்போ பேங்க்அ கொள்ளை அடிக்கலாமானு ஜட்ஜு ஐயாவ கேட்டுச் சொல்லுங்க…

_______________

(தீர்ப்பு வந்த தினத்தின் மாலை நேரம். எனவே மாலன் அவர்கள் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுகிறார்.)

மாலன் நாராயணன் May 11 at 4:59 pm

எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதோ?

வாடி ராசாத்தி, புதுசா, விரசா, ரவுசா என்ற பாடல்வரிகள் கொண்ட திரைப்பட விளம்பரம் ஒன்று இன்று வழக்கத்தைவிட அதிக முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதைப் போலத் தோன்றுகிற்து. பிரமையோ!

மாலன்
ஜெயா விடுதலை கொண்டாட்டங்களை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போனார் மாலன்.

(ஜெயா விடுதலையானதை அவர் மட்டுமல்ல, அ.தி.மு.க அடிமைகள் மட்டுமல்ல, தொலைக்காட்சி விளம்பரங்கள், பாடல்கள், டிரெயிலர்கள் கூட கொண்டாடுவதைப் பார்த்து அவரால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போகிறார்.)
___________

மாலன் நாராயணன் May 11 at 6:00pm

//எமகண்டத்தை வென்ற ஜெயலலிதா… சுக்கிர ஓரையில் சுகமான தீர்ப்பு// செய்தி இணைய தளம் ஒன்றில் இப்படி ஒரு தலைப்பு. ஹும்ம்ம்… தமிழ் இதழியல் எங்கேயோ போயிட்டது!

(அறிவுப்பூர்வமான ஒரு தீர்ப்பை, அம்மாவின் விடுதலையை மகிழ்ந்தாலும் தன் போல நுணுக்கமாக எழுதாமல் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவது சாதா இதழியல் என்று தனது சூப்பர் இதழியலை நிறுவிக் கொள்கிறார்.)
____________

(அடுத்த நாள் காலை அலுவலகம் வந்ததும் முதல் செய்தியாக தினத்தந்தியின் பீஸை எடுத்து போடுகிறார். நீதிபதி குன்ஹா எங்கு தவறு செய்தார் என்று நீதிபதி குமாரசாமி எடுத்து வைக்கும் லா பாயிண்டுகளை லாலா பாடிக் கொண்டே காப்பி பேஸ்டு செய்கிறார்.)

மாலன் நாராயணன் Yesterday at 9:23am

குன்ஹா எங்கு தவறு செய்தார் என்பதை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விளக்கியுள்ளார்:

இந்த வழக்கில் ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது கீழ்க்கோர்ட்டு ஒரு தவறான முடிவுக்கு வந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதில் சட்ட தடைகள் இல்லாதது மட்டுமல்ல, நீதியின் நலன் கருதி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கில் வருமான வரி விவகாரங்களை ஒரு குறைந்தபட்ச மதிப்பாக கூட எடுத்துக்கொள்ள கீழ்க்கோர்ட்டு மறுத்துவிட்டது.

திருமண செலவு
சுதாகரன் திருமண செலவு ரூ 3 கோடி என்று கீழ்க்கோர்ட்டு மதிப்பிட்டு இருக்கிறது. இந்த செலவை ஜெயலலிதா செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஆதாரங்கள் இல்லை

சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல. ஒட்டுமொத்த விஷயங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளும் போது, கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பும், அதற்கான ஆதாரமும் பலம் குறைந்து காணப்படுகிறது என்பது எனது கருத்து. கீழ்க்கோர்ட்டு கூறிய ஆதாரங்கள் சட்டப்படி வலிமையாக இல்லை.

நன்றி: இன்றைய தினத் தந்தி

குன்ஹா தீர்ப்பு வெளியானபோதே அது சட்டத்தின் பார்வையில் பிழைகள் கொண்டது எனக் கூறியிருந்த்தேன். என் கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

( நீதிபதி குன்ஹா தீர்ப்பை அப்போதே தவறு என்று சட்டத்தின் பார்வையில் தான் தொலைநோக்காக கூறியிருந்ததை இங்கே மாலன் அவர்கள் பெருமை பொங்க கூறுகிறார். இதையே சோ அவர்களும்  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக நீதிபதி குமாரசாமி அவர்கள் வேண்டுமென்றே கணக்கை தவறாக போட்டு போங்காட்டம் ஆடித்தான் மாலன் அவர்களது கணிப்பை நிரூபிக்க வேண்டும் என்றால் இங்கே நாம் ‘அம்மாவை’யோ இல்லை, குமாரசாமியையோ குற்றம் சொல்வது சரியல்லவே?)

மனேஸ் நமசிவாயம்:
நல்லா ஜால்ரா அடிக்கீரீங்க, திருட்டு கேசுக்கு…

Jayaseelan Ganapathy:
அதெல்லாம் சரி சார்… இதெல்லாம் மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் வந்தது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதா?

Hemanathan Kumar:
நீதியரசர் குமாரசாமியின் கணக்குப்படி இரண்டரை கோடி கணக்கில்வராத தொகைக்கு என்ன தண்டனை ??? அது பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளா???

Thirumurthi Ranganathan:
“சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல.” – அரசியலில் பலம் படைத்தோர், அல்லது பண பலம் படைத்தோர், அல்லது அடியாட்கள் பலம் படைத்தோர்கள் மீது நடைபெறும் வழக்குகளில் சாட்சிகள் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு விதமாக சாட்சி சொல்லும்படி ‘அன்பாக’, அல்லது ‘ஆட்டோவில் கூட்டிச் சென்று’ என்று விதவிதமாக கவனிக்கப் பட்டு பிறழ் சாட்சிகளாவதைத்தான் கால காலமாகப் பார்க்கிறோமே. எனவே மேற்சொன்ன கருத்தை (“சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல.”) நீதிமன்றங்கள் முன்வைத்துத் தீர்ப்புச் சொன்னால், அது எப்போதுமே , பலம் படைத்த, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதாயமாக முடியாதா மாலன் நாராயணன் சார்?

Rajiv Gandhi:
இது ரொம்ப ஓவர்

Suresh Kumar Jaganathan:
இவ்ளோ நியாயத்த வெச்சுகிட்டு எதுக்கு சார் 18 வருசம் போட்டு இந்த இழுஇழுத்தாங்க…

Komandur Kannan:
ஒருவர் கூட உங்களுக்கு ஆதரவான நிலையை எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

Anbu Jaya:
இதெல்லாம் ஒரு கண் துடைப்பு. எல்லோரும் அறிந்த ரகசியம்.

Jeeva Manickam:
நீங்கள் குமுதத்தில் ஆசிரியராக இருந்தபோதுதானே வளர்ப்பு மகன் கலியாணம் உட்பட பல சம்பவங்கள் நடந்தன. திமுக ஆட்சிக்கு வந்ததும் சுற்றமும் நட்பும் என்று ஜெயலலிதாவை சுற்றி இருக்கும் மன்னார் குடி கும்பலைப் பற்றி நீங்கள் குமுதத்தில் பரபரப்பாய் தொடர் எழுதினீர்கள். ஜெயலலிதாவும் சசிகலாவும் நகை அணிந்த படங்களை நடுப்பக்கத்தில் வெளியிட்டு கருணாநிதியின் நண்பனாய் காட்டிக் கொண்டீர்கள், இன்று ஆட்சி மாறி விட்டது. காட்சி மாறிவிட்டது. தங்களின் ம்னசாட்சியும் மாறிவிட்டது.

(கவனியுங்கள், துக்ளக் சோ, சு.சுவாமி போல இன்னும் பல பார்ப்பனர்களைப் போல மன்னார்குடி கும்பலை தனிமைப்படுத்தி, அதாவது சசிகலா வந்த பிறகே ஜெயாவுக்கு பிரச்சினைகள் வந்தன என்ற கண்ணோட்டத்தில் மாலன் அவர்களும் அப்போது எழுதியிருக்கிறார்.)

Chandrasekar Nallusamy:
Mr Malan Sir we are (common people) not stupid, within 6 month cat will come out. Don’t try to make us fool. Better we will put vote for nota. All political parties are in same platform.

Jayaseelan Ganapathy:
நீதி வென்றது…சத்தியம் ஜெயித்தது…அப்புறமென்ன வழக்கம் போல மக்கள் தோற்றார்கள்…! நீதியரசர்.குமாரசாமியையே 2ஜி வழக்கிற்கும் நீதிபதியாக நியமித்து ஒரு அரசியல்(சமூக நீதி)சமத்துவத்தை பாஜக அரசு நிலைநாட்ட வேண்டும். இதன் மூலம் மக்கள் நீதிமன்றத்திற்கும் நீதிக்கும் சம்பந்தமே இல்லை என உணர்வர். மைசூர் போண்டாவில் மைசூரைத் தேடுவது, திருநெல்வேலி அல்வாவில் திருநெல்வேலியை தேடுவது போன்றது தான் நீதிமன்றத்தில் நீதியை தேடுவதும்.

Karthick Karu:
இதெல்லாம் தெரிஞ்சும் புதிய தலைமுறைல ஏன் சார் இறங்குமுகம்னு முதல் பக்கத்துல போட்டாங்க. 8%ஆல்கஹால் கலந்த பீர் அடிச்சிட்டு வண்டி ஓட்டுனா தப்பு இல்லையா சார்.

U S Aurro Bindhan:
நீங்களும் இப்படி மாறீட்டங்களே தப்பு செய்றவனுக்கு ஆதரவா சட்டம் வந்தா அவன் தப்பு செய்யலேன்னு ஆயிடுமா?

Abdul Hameed:
சாரே…. நீங்கள் ரொம்பத் தான் மெனக்கெடுரீங்க. பூணூல் பாசமா?

Balachandar Muruganantham:
i thought you are unbiased. are you?

Pandian Govindarajan:
கொஞ்சம் கொஞ்மாக பூனைக்குட்டி வெளியே வருகிறது. சந்தர்பவாதம் !

Vaidheeswaran Bharathy:
பாசம் இருக்கவேண்டியதுதான் தவறில்லை.. மாலன் ஒன்றும் குண்டு வைப்பவர்களுக்கு மெனக்கெடவில்லையே?

Senthilkumar Jayaprakash:
நான்கு பேரும் உத்தமர்களா?

உதயகுமார்:
கணக்கையே தப்பா போட்டிருக்கிற நீதிபதி நீதியை மட்டும் சரியா கொடுத்திருப்பாரோ?

Madurai Veeran:
குமாரசாமி எங்கு தவறுகள் செய்துள்ளார் என்று அறிய உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தால் தெரிய வரும்.

சக்தி விக்னேஷ்வர்:
ஒரு உயர்ந்த பத்திரிக்கையாளர் உங்களுக்கு ஒவ்வாத கருத்தை சொல்லிவிட்டால் உடனே இல்லாததையும் பொல்லாததையும் அவர் மீது வைப்பது தான் உங்கள் டிசைனா? பூணூல் பாசம்–எவ்வளவு அபத்தமான வார்த்தை?

எத்தனை நாட்களுக்கு தான் இந்த பிராமண துவேஷ விளையாட்டை விளையாடப் போகிறீர்களோ? இதையெல்லாம் சொன்னால் நான் ஒரு ஜால்ரா என்பீர்கள். ஜால்ராக்கள் மனதில் ஜால்ரா மணி லகலகவென்று ஆடிக்கொண்டுதான் இருக்கும்.

அவரின் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் எனக்கு அவரின் பால் ஏற்பட்ட உண்மையில் சொல்கிறேன்–பார்த்து பேசுங்கள். உணர்ச்சி பெருக்கில் ஒரு நடுநிலையாளரிடம் உளறி கொட்டாதீர்கள்.

பாரதியையே பார்ப்பன வண்ணம் பூச துடிக்கும் மனப்பாங்கையே இது காட்டுகிறது.

(அய்யா சக்தி விக்னேஷ்வர், இங்கே மாலன் அவர்கள் அவருக்கு ஒவ்வுவதை மட்டும் ஏன் விசமத்தனமாக எடுத்து வைக்கிறார் என்பதே கேள்வி. அவரின் பால் உங்களுக்கு ஏற்பட்ட உண்மையின் இலட்சணம் இப்போதாவது புரிகிறதா? அவர் நடுநிலையாளர் என்று உணர்ச்சி பெருக்கில் உளறுவது சரியா?)

Bharathi Mithran:
Mr.maalan everyone knows how grand her foster sons marriage was held..how kumarasamy holds that jaya didn’t spend much…as long as people like support her under pretext of a neutral journalist its only a dream that corruption is eradicated in public life

Raja Sekaran:
Mr.Malan..go through the judgement.. blind mathematical error in total amount of credits..குன்ஹா தப்புனு குமாரசாமி சொல்றார்…குமாரசாமி தப்புனு மக்களே சொல்றாங்க…

Kavi Kkavin:
மாலன் sir இப்ப என்ன சொல்ல வரீங்க அந்த பெண் அரசியல்வாதி அப்பழுக்கற்ற தூய்மையானவர் என தானே . சரி விடுங்க .

Rangaraju Raju:
மாலன் நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் என்றும்தெரியும். ஆனந்தத்தில் நரி ஊளையிடாமல் இருந்தால்தான் வியப்பு!

(ஆனந்தத்தில் நரி ஊளையிடாமல் இருந்தால்தான் வியப்பு……….என்னா ஒரு பன்ஞ்)

______________________

(இதன் பிறகு நீதிபதி குமாரசாமியின் கூட்டல் அயோக்கியத்தனத்தை ஊரே கண்டுபிடித்து காறித்துப்பிக் கொண்டிருக்கும் போது, குன்ஹா தீர்ப்பு தவறு என்று அன்றே சொன்ன மாலன் இப்போது என்ன செய்கிறார்?)

மாலன் நாராயணன் shared புதிய தலைமுறை வார இதழ்’s photo.

நேற்று தில்லியில் நில நடுக்கம். சென்னையில் நில அதிர்வு. அதற்கு முன்

சென்ற வெள்ளிக்கிழமை (8.5.2015) அன்று வெளியான புதிய தலைமுறை இதழில் நிலநடுக்கம் பற்றிய எச்சரிக்கை

(ஜெயா விடுதலை என்று தீர்ப்பு வந்ததும், பாரிவேந்தர் உடன் அறிக்கை வெளியிட்டு ஆனந்தப்பட்டார். அவரிடம் குப்பை கொட்டாவிட்டாலும் மாலன் அவர்கள் இப்படித்தான் எழுதுவார். எனினும் தற்போது நடந்த இந்த ‘கணக்கு’ பிரச்சினைக்காக மாலன் அவர்கள் அசடு வழிவதை பார்த்து பரம்பொருள் சும்மா இருப்பாரா? இருக்கவே இருக்கிறார் நீதியரசர் தத்து. நாளைக்கே உச்சநீதிமன்ற வழக்கில் அம்மா விடுதலை ஆகும் போது இதைத்தான் நான் அன்றே சொன்னேன் என்று மாலன் நெஞ்சு நிமிர்த்தி கூற முடியாது என்று சொல்ல முடியாதில்லையா?)