privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைமருதமலை முருகைய்யா - மாட்டுக்கறி ( ரீ) மிக்ஸ்

மருதமலை முருகைய்யா – மாட்டுக்கறி ( ரீ) மிக்ஸ்

-

மாட்டுக்கறி ( ரீ) மிக்ஸ்

(” மருதமலை மாமணியே முருகய்யா…” பாடல் மெட்டில் பாடி சுவைக்கவும் )

கோடி ருசிகளிலே கொடுக்கும் ருசி எந்த ருசி?
குமரி முதல் இமயம்வரை குவிந்த ருசி எந்த ருசி?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் ருசி எந்தருசி?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் அந்த ருசி!
அ ஆஆ… ஆஆஆ.. மாட்டுக்கறி மாட்டுக்கறி கோமாதா.

மாட்டுக்கறி
“உலகமெலாம் உணவாகும் மாடய்யா…”

உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா…

மணமிகு வெஞ்ஜனம் அழகிய பக்குவம்
மணமிகு வெஞ்ஜனம் அழகிய பக்குவம்
ஐயா உமது மருத்துவ குணம் தருமே…

உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா…
தைப்பனி நன்நாளில் தள்ளு வண்டி யெங்கும்
பக்தர்கள் கொண்டாடும் மாடய்யா ஆ…
தைப் பனி நன்நாளில் தள்ளு வண்டி யெங்கும்
பக்தர்கள் கொண்டாடும் மாடய்யா ஆ…

உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா…

மாட்டுக்கறி
“உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா”

கோடிகள் குவிந்தாலும் கோமாதாவை மறவேன்
ஆ… ஆஆஆ …. ஆ.. ஆஆ ஆஆ ஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமாதாவை மறவேன்
நாடியென் பலம் கூட நான் வருவேன்
நாடியென் பலம் கூட நான் வருவேன்…

அஞ்சுதல் நிலை மாறி அவரவர் விருப்பாக
எழு பிறப்பிலும் உன்னை எட்டிடுவேன் ஆ…

உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா
உலகமெலாம் உணவாகும் மாடய்யா…
சக்தித் திருமகன் கொத்துக்கறிதனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென சக்திப்பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் கொத்துக்கறிதனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென சக்திப்பெருகிட வருவேன் நான் வருவேன்

மாட்டுக்கறி
“காண்பதெல்லாம் உனது பலம் அது நூறுபலம்”

பரமனின் வாகனனே அழகிய தமிழ்முகனே
காண்பதெல்லாம் உனது பலம் அது நூறுபலம்
காலமெல்லாம் எனது பலம் பெருகுது விடையா
காண்பதெல்லாம் உனதுபலம் அது நூறு பலம்
காலமெல்லாம் எனது பலம் பெருகுது விடையா…

அதிபதியே பலபொருளே இன்சுலினே மருத்துவனே
அதிபதியே பலபொருளே இன்சுலினே மருத்துவனே

பாலது நெய்யது பையது பெல்ட்டது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
பாலது நெய்யது பையது பெல்ட்டது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது

வருவாய் சுகமே மாடய்யா
ஆ ஆ… ஆஆ… ஆஆ..
யாவர் வணங்கும் மாட்டுக்கறி ஐயா!
உலகமெலாம் உணவாகும் மாடய்யா
உழைப்பவர் நலம் காக்கும் மாடய்யா ஐயா…

மறுஆக்கம் : துரை. சண்முகம்

( யக்ஞ்யவல்யரின் பார்முலா படி இளங்கன்று குட்டிகளை ஏப்பம்விட்டு காலக்கொடுமையால் மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கும் ‘பிதுர்க்களின்’ கோடான கோடி ஆவிகளுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்!)

  1. ///”
    கோடி ருசிகளிலே கொடுக்கும் ருசி எந்த ருசி?
    குமரி முதல் இமயம்வரை குவிந்த ருசி எந்த ருசி?
    தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் ருசி எந்தருசி?
    தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் அந்த ருசி!”//

    தொகேரா நன்னா பேஷா வச்சிருக்கேள் போங்கோ!

    by: மயிலாப்பூர் பிராமணாள் Beaf போஜனப் ப்ரியா மண்டலி (Secret), (எங்களுக்கு நாடெங்கும் பூணூல் கிளைகள் உண்டு).

    அவசரமாக புனையப்பட்ட கவிதையா? சற்று அதிகமாகவே பாடல் வரிகளை அடியொற்றி இருப்பதாகப் படுகிறது. ராகத்தை மட்டும் பொருத்தி இன்னும் வரிகளுக்கு வெளியில் சென்று அமைத்திருந்தால் remix இன்னும் சுவையாக இறுந்திருக்கும்…

  2. அடுத்து அல்லா அல்லா என்ற சங்கீத ஸ்வரங்களில் பாட விழைகிறோம்

Leave a Reply to pisaaசுkutti பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க