privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்சென்னை ஐ.ஐ.டியில் பெரியார் அம்பேத்காருக்குத் தடை !

சென்னை ஐ.ஐ.டியில் பெரியார் அம்பேத்காருக்குத் தடை !

-

iit aஅம்பேத்கார் – பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த
பார்ப்பன இந்துமதவெறியரை முறியடிப்போம்!
சென்னை ஐ.ஐ.டி எனும் பார்ப்பனக் கோட்டையை அம்பலப்படுத்துவோம்
– படியுங்கள், பரப்புங்கள்!

த்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரடித் தலையீட்டின் பெயரில், சென்னை ஐஐடியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டு மாணவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் மீதான இந்தத் தடை நடவடிக்கை, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பிய மொட்டைக் கடுதாசியின் பேரில் எந்த விசாரணையுமின்றி ஐஐடி அவாள் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டிருக்கிறது.

இங்கே நாட்டு மக்கள் தாங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் என அரசு உறுப்பின் ஒவ்வொரு கதவுகளையும் மனு மேல் மனுபோட்டும் பதில் கிடைக்காமல் இருக்கிற பொழுது ஒரு மொட்டைக் கடுதாசியின் பேரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஐஐடி நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறது என்றால் அந்தக் கடுதாசியில் இருந்த பிராதுதான் என்ன?

iit c

  1. பாசிச மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளான நிலக் கையகப்படுத்துதல் சட்டம், காப்பீடு சட்டம், தொழிலாளர் நலச்சட்டம் மற்றும் கார்ப்பேரட் கைக்கூலியாகச் செயல்படுகிற மோடியை மாணவர்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விமர்சிக்கிறதாம் இவ்வமைப்பு.
  2. இந்துத்துவக் காலிகளின் சமஸ்கிருத இந்தி திணிப்பு, கார்வாப்சி, பசுவதைத் தடைச் சட்டம், லவ்ஜிகாத் கொள்கைகளை இவ்வமைப்பு விமர்சித்து துண்டுப்பிரசுரம் வழங்குகிறதாம்.
  3. குறிப்பாக அம்பேத்கர் பெரியார் கொள்கைகளை பரப்புவதன் மூலம் எஸ்.சி எஸ்.டி மாணவர்களை இந்துக்களுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் இவ்வமைப்பு திரட்டுகிறதாம். (இதன் மூலமாக தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லர் என்று நெற்றிப்பொட்டில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறது மோடி அரசின் இந்துத்துவக் கும்பல்)

மேற்கண்ட குற்றச் செயல்களுக்கு (!!!) சாட்சியாக ஏப்ரல்-14 அன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அமைப்பு வழங்கிய துண்டுபிரசுரத்தைக் காட்டியிருக்கிறது இந்த மொட்டைக்கடுதாசி.

அமைச்சகத்தின் உத்தரவிற்கு பதில் சொல்லும் விதமாக சென்னை ஐஐடி டீன் எம். சீனிவாசன், இவ்வமைப்பு ஒழுங்கு விதிகளை மீறியிருக்கிறது என்று சொல்லி எந்த விசாரணையுமின்றி தடை செய்திருக்கிறார்.

அது என்னடா ஒழுங்குவிதி என்றால் துண்டு பிரசுரமோ, போஸ்டரோ, டீனின் ஒப்புதல் இன்றி வழங்கப்படக் கூடாதாம். ஆனால் ஏப்ரல்-14லில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த கருத்தரங்கிற்கு பிற்பாடான நாட்களில் அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக ஒழுங்குவிதி மீறலைக் கண்டுபிடிக்காத ஐஐடி நிர்வாகம், ஆர் எஸ் எஸ் காலிகள் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மொட்டைகடுதாசி அனுப்பிய பிறகு தான் இது ஒழுங்குவிதி மீறல் என்று எதேச்சதிகாரத்துடன் மாணவர் அமைப்பை தடை செய்கிறது என்றால் இந்துப்பாசிசத்தின் எத்துணை கொடூரமான காலகட்டத்தில் இந்த நாடு போய்க்கொண்டிருக்கிறது என்பது தெரியவரும்.

iit d

ஆனால் இதே ஒழுங்குவிதி மீறல் விவேகானந்தா வாசகர் வட்டத்திற்கு கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் சென்னை ஐஐடி, தென்னிந்தியாவின் ஆர் எஸ் எஸ் கேந்திரமாக விவேகானந்த வாசகர் வட்டம் மூலமாகத்தான் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஐஐடி விடுதி நூலகங்களை கைப்பற்றுவது, ஆர் எஸ் எஸ் ஷாகாக்கள் நடத்துவது, வெறியுடன் பிள்ளையார் ஊர்வலம் நடத்துவது என்று பல காலி வேலைகளை செய்து வருகிறது.

மேலும் குருமூர்த்தி இந்துத்துவ லெக்சர் கொடுக்கவோ, அரை டவுசர் அரவிந்த நீலகண்டன் ஏகாந்தவாதம் பேசுவதற்கோ அவாள் நிர்வாகம் சாம்பிராணி போடுகிறது. ஆனால் அம்பேத்கர்-பெரியார் பெயரைக் கண்டவுடனே அலறித்துடித்து ஆயிரம் ஆண்டுகால பார்ப்பனிய வன்மத்துடன் மாணவர்களின் சனநாயக குரல்வளையை நசுக்குகிறது. இந்த கேடுகெட்ட சந்தர்பத்திலும் கூட தாழ்த்தப்பட்ட மாணவர்களை இந்துக்களுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் திசைதிருப்புகிறது என்று சொல்வதன் மூலமாக தனது சனாதன வர்ணாசிரம பாசிசத்தை ஆழ்ந்து நிறுவுகிறது.

ஏற்கனவே சென்னை ஐஐடி மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கான கல்வி நிலையமாக இருந்துவரும் வேளையில் சமூக பாசிசக் கொள்கைகள் மாணவர்களை உந்தித் தள்ளி போராட வைக்கிறது.

நலிந்த பின்புலத்திலும் சாதியக்கட்டுமானத்தில் பழிவாங்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவர்களையும் சனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்ட பிற மாணவர்களையும் அங்கு அப்பட்டமாக செயல்பட்டு வரும் பார்ப்பன-பாசிசத்திற்கு எதிராக போராட வைக்கின்றன.

தமிழ்நாட்டில் புரட்சிகர இயக்கங்களின் தாக்கத்தாலும் பல்வேறு மாநிலங்களின் மாணவர் இயக்கங்களின் பின்புலத்தாலும் சென்னை ஐஐடியின் பார்ப்பன பாசிச நடவடிக்கைகள் முன் எப்பொழுதையும் விட மாணவர்களால் தீர்க்கமாக எதிர்க்கப்பட்டு போராடப்பட்டுவருகின்றன. இதன் குரல்வளையை நசுக்கும் சந்தர்ப்பமாக இந்துத்துவ பாசிச மோடி கும்பல் நேரடியாக தலையிட்டு மாணவர் அமைப்பை துடைத்தெறிய எத்தனித்திருக்கிறது.

ஆனால் சென்னை ஐஐடி இந்துவக்காலிகளுக்கான இடமல்ல. அது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் கல்வி நிறுவனம் என்றும் அது மக்களுக்கானது என்றும் அங்கே மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டிப்பதற்கு மாணவர்களாகிய எங்களுக்கு தார்மீக உரிமை உண்டு என்று சொல்கிற மாணவர்களின் குரல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்து வருகிறது.

iit b

இத்தகைய தருணத்தில் மாணவர்களுக்கு நாம் ஆதரவாக நிற்பதுடன் இந்து பார்ப்பனியத்தின் பாசிசக் கொள்கைகளை கருவறுத்திட வாசகர்களும் பிற கல்லூரி மாணவர்களும் அறிவுத்துறையினரும் மக்கள் திரளினரும் கைகோர்த்திட வேண்டும்.

இந்துத்துவம், கொடூரங்களின் கூடாரம் என்றார் அம்பேத்கர். ஸ்மிருதிகளையும் ஸ்ருதிகளையும் கொண்டிருக்கும் மதம் அழிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர் (இதைச் சொன்னதற்காகவும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது!). இவையிரண்டிற்கும் வழிவகுத்து பார்ப்பனியத்திற்கு சாட்டையடி கொடுத்தது பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபு. ஆனால் இன்று இத்தலைவர்களின் பெயரைத்தாங்கிய மாணவர் திரளின் அமைப்பே கலைக்கப்பட்டு இந்துப்பாசிசம் நிலைநிறுத்தப்படுகிறது.

இந்தக் கூட்டத்தை பார்ப்பனிய நச்சுப்பாம்புகள் என்று வரையறுப்பதிற்கு பதிலாக பாம்பு எது? பார்ப்பனியம் எது? என்று மற்றொருமுறை பிரித்துப்பார்த்துவிட வேண்டும். அப்படிச் செய்கிற பொழுது இந்த முறை அடி தப்பக்கூடாது!

Periyar T1 700

  1. காவிக் கூட்டம் எல்லா உயர் கல்வி நிறுவனங்களிலும் வெவ்வெறு வடிவங்களில் ரொம்ப பலமா இருக்கானுங்க.
    1. விவேகனந்த வாசிப்பு வட்டம்
    2.வாழும் கலை
    3.பல விதமான சேவைகள்… என முன் இருக்கும் எல்லா தளங்களிலும் காவிகள் ஆக்கிரமித்து உள்ளனர்.
    இதில் 3வது ரக சங்கிகள், புரட்சிகர மாணவர்களுக்கு குறை சொல்ல மட்டுமே தெரியும், அதற்கான வேலைகள் ஒன்றும் செய்வதில்லை என்ற கருத்தை பரப்புவதில் தெளிவாக இருக்கின்றனர்.

  2. பெரியாரும் தமிழர் அல்ல அம்பேத்கரும் தமிழரல்ல!! அப்படி இருக்கையில் ஏன் இந்த குடைச்சல்!!! தமிழர் அல்லாதவர்களுக்கு வக்காலத்து!!!!!! அதுசரி அம்பேத்கார் என்பவர்யார்?

    • நீர் தமிழர் அல்லாத மோடிக்கு வக்காலத்து வாங்கலயா என்ன?

      அம்பேத்கர் என்பவர் நாகரீக இந்தியாவை, சாதி இல்லாத இந்தியாவை கட்டமைக்க முயன்று தோற்று போனவர்.

    • பெரியாரும் அம்பேத்கரும் தமிழர் அல்ல!!!. அம்பேத்கர் யார்? எனக் கேட்கும் நண்பரே இது யாரை வெறுப்பேற்றுவதற்கான கேள்வி? அம்பேத்கர் யார் என்றே தெரியவில்லையெனில் அவர் தமிழர் இல்லை என்பது மட்டும் தங்களுக்குத் தெரிந்துவிட்டதா? பெரியார் தமிழர் அல்லாவிடில் அவரை வேறு யார் எனத் தாங்கள் அடையாளப்படுத்த விரும்புகிறீர்?. தமிழ்நாட்டில் மட்டும்தான் தாழ்த்தப்பட்டோர் உள்ளனரா? அவர்களுக்காக மட்டும்தான் போராட வேண்டுமா? இந்திய சாதிக்கட்டுமானத்தில் அனைத்து மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்டோர் இருக்கின்றனர். எல்லோருக்குமான பொதுச்சிக்கல்கள் இருக்கின்றன. அத்தகைய பொதுச்சிக்கல்களை முன்வைத்துப் போராடிய ஒரு முதல் போராளியைத் தாங்கள் யார் எனக்கேட்பதால் மட்டும் அவரையோ அல்லது அவர்வழிப் போராளிகளையோ தாங்கள் இழிவுபடுத்திவிட்டதாய்க் குரூரமாய் மகிழவேண்டாம். உங்களைப் போன்ற மனிதர்களை சாதி உள்ளிட்ட எதன் அடிப்படையிலும் தீண்டத்தகாதவர்களாய் நடத்துவதற்கு நீங்கள் அல்லது உங்களைப்போன்றவர்கள் வெட்கப்படவேண்டும். மாறாக ஏன் எதிர்த்துக் கேட்கிறாய் என அதிகாரம் செலுத்துகிறீர்கள்.

      தமிழ் ஊடகங்களில் அனைத்து மதம் சார்ந்த விழாக்கள், தேசத்தலைவர்களது தினங்கள் ஆகியவைத் தொடர்பாக திரைப்படங்கள் ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன. பெரியார் குறித்தத் திரைப்படம்கூட ஒளிபரப்பாகின்றது. ஆனால் அம்பேத்கர் பற்றியத் திரைப்படமெல்லாம் ஏன் நமது ஊடகங்களில் ஒளிபரப்பப்படுவதில்லை. 2000 ல் டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கர் திரைப்படம் வெளிவந்தது. (மகாராட்டிர மாநில அரசும் அப்போதிருந்த மத்திய அரசும் எடுத்தப்படம்) ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகியமொழிகளில் அதைப்பார்க்க இயலும். ஆனால் 15 ஆண்டுகளில் நம் ஊடகங்கள் எவையும் அத்திரைப்படத்தை நானறிந்த அளவில் ஒருமுறைகூட ஒளிபரப்புச் செய்யவில்லை. ஏன்? பழைமையான புராணம்சார் கதைகளை, அறிவுக்குப் பொருந்தாத எவ்வளவோ நிகழ்வுகளைப் பரப்புரைச் செய்யும் நமது ஊடகங்கள் குறந்த அளவிற்குக்கூட உண்மையான நடுநிலையுடன் நடந்துகொள்வதில்லையே!. இப்படித்தான் வெற்று வாதங்களை முன்வைத்து பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் ஒருசார்புடன் செயல்படுகின்றன. விவேகானந்தர் வட்டத்திற்குக் கொடுக்கப்படும் உரிமை அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு மறுக்கப்படுவதேன்? இத்தகைய அடக்குமுறைகளெல்லாம்தான் இந்த நாட்டில் இன்னும் சாதியக்கட்டுமானம் பெரும் ஆளுமையுன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மெய்ப்பிக்கின்றன.

    • அம்பேத்க்கர் யாருனே தெரியயாமயா கமென்ட் பொடுற _
      ________, என்ன கொடுமை சரவனா இது…

    • அய்யா மு.நாட்ராயன் அவர்களே, அம்பேத்கார் என்பவர் யார் என்று கேட்கும் உம்மிடம் இரு வினாக்கள். மோடி என்பவர் யாரைய்யா? விவேகானந்தர் என்பவர் யார்? இந்த இரு வினாக்களும் உமக்குக் குடைச்சல் கொடுக்காதா??

  3. நீயார்க் டைம் பத்திரிகை மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
    ஓபமவுக்கு ஒரு போன் செய்து நீயார்க் டைம் பத்திரிக்கைய தடை செய்ய சொல்வார்கள?

    அமெரிக்க முதலாளி மோடியை விமர்சனம் செய்யலாம் இந்தியா குடிமக்கள் விமர்சனம் செய்ய கூடத?

    ஐஐடி-யா? இல்லை பார்பன பல்கலை கழகமா?
    ———————————————————————–

    புதிய தலைமுறையில் நேர்ப்பட பேசு நிகழ்ச்சியயை பார்த்தேன் அதில் கலந்துகொண்ட ஏ.பி.வி.பி சார்பாகவும் பா.ஜ.க சார்பகவும் கலந்துக் கொண்டனர் மற்றும் அரசியல் விமர்சரகர் என்ற பா.ஜ.க வின் அதரவாளர் ஒருவர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சொன்ன கருத்துக்கள்
    1.ஐ ஐ டி மாணவர்கள் வந்தோமா படித்தோமா என்று இருக்க வேண்டும்.

    2.ஐ ஐ டி மாணவர்கள் அவர்கள் அமைப்புக்கு ஐ ஐ டி பெயரை பயன்படுத்த கூடாது.

    எனது கேள்வி
    1.மாணவர்கள் அரசியல் பேசுவது குற்றமா? தலித் மாணவர்கள் அரசியல் பேசுவது குற்றமா?

    2.ஐ ஐ டி மாணவர்கள் அவர்கள் கல்லூரியில் அந்த கல்லூரியின் பெயரை இணைத்து பெயர் வைக்கமால் கலை கல்லூரி, சட்டக் கல்லூரி பெயரையா இணைத்து பெயர்வைப்பார்கள்.

    இந்தியாவில் நடப்பது ஜனநாயக ஆட்ச்சி அல்ல காவிகளின் பாசிச ஆட்ச்சி என்பதை திரும்ப திரும்ப அம்பலமாகி வருகின்றன.

  4. என்ன பண்ண முடியும் உங்களால? அப்டி தான் ban பண்ணுவா. secular countrlya 21 st century இப்போ யாரு ஜாதி பார்க்கறா? பழைய பல்லவிய எவ்ளோ நாளைக்கு பாடுவேள்? அப்டியே போராட்ரதுனாலும் கோர்ட்ல கேஸ் போடுங்கோளேன்? அராஜகம் எதுக்கு? அப்டி தான் பண்ணுவா தப்பு தப்பா IIT misuse பண்ணினா.chumaa irupaalaa?

    • கோர்ட்ல கேஸ் போடணுமா?
      நன்னாருக்குடா க்ரிஷ்னா!
      குமாரசாமி இந்தமாதம் ரிடையர் ஆயிடுவான்
      பகவானே நேக்கு நன்ன ஜட்ஜா பார்த்து அனுப்புங்கோ!

  5. அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்கிள் ?

    சட்டமேதை தேசிய தலைவர் அம்பேத்கர் எங்கே …இந்திய சுதந்திர நாளை கருப்பு நாள் என்று சொல்லி எங்களை நீங்களே ஆட்சி செய்யுங்கள் என்று பிரிட்டிஷ்காரனை கெஞ்சிய E .V . ராமசாமி எங்கே ?

    ஏணி வைத்தால் கூட அம்பேத்கர் அருகில் வர முடியாது E .V . ராமசாமி அவர்கள்…

    • இங்கு அம்பேத்கார், பெரியார் இருவரில் யார் பெரியவர் என்ற கேள்வியில்லை அன்பரே. உங்கள் வாதப்படி அம்பேத்கார் பெரியாரை விட கூடுதல் மதிப்பு உடையவராய் இருந்து விட்டுப் போவதில் என்ன குறை வந்து விடப் போகிறது? இருவரும் சமூகநீதிக்காக போராடிய போராளிகள் என்பதை யார் தான் மறுக்க முடியும்?..

  6. It was anti-nationals, foreign agencies in supporting nd cultivating hatred for India among students, prompt action by govt., This is hindu country our govt., will inclined towards it, no matter what. hindu traditions overlay in every activities and everywhere in the nation. If you do not like it get lost from here. This is our country our religion our rules, T

  7. //It was anti-nationals, foreign agencies in supporting nd cultivating hatred for India among students, prompt action by govt., This is hindu country our govt., will inclined towards it, no matter what. hindu traditions overlay in every activities and everywhere in the nation. If you do not like it get lost from here. This is our country our religion our rules, T/தம்பி நாட்ட கொள்ளையடிக்கிற பன்னாட்டு கம்பனிகளையும், அதுக்கு மாமா வேல பாக்குற் மோடி ஆர் எஸ் எஸ் கும்பலையும் சொலறாப்புடி

  8. பார்பன புத்தி பகிரங்கமாக தெரியவில்லையா? அம்பேதர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற பெரை பார்த்தாலே இருவரும் ஒத்த கருத்து கொண்டவர்கள் என்பது புரிய வில்லையா? இவர்களின், குறைந்த பட்சம் யாராவது ஒருவரின் படைப்பு களை படித்திருந்தாலாவது புரிந்திருக்குமே! சிண்டு முடிதல் குலத்தொழில் போலும்!

  9. வினவில் பின்னூட்டமிடும் சில அம்பிகள் ஏதோ பெரியார் , அம்பேதரிடையே கருத்து வேறுபாடு இருந்தது போலவும், ஒருவர் பிற்படுத்தப்பட்டவகளுக்கு மட்டும், மற்றவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தலைவர் என்ற கருத்தை பரப்பி வருகின்றனர்! இது அவாளின் பகைவரை பிரித்து அழிக்கும் சூழ்ச்சி! இவாளின் குள்ளநரித்தனத்திற்கு பலியாகாமலிருங்கள் தோழர்களே ! ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பாடியவன் தமிழன் என்றால் பெரியாரும், அம்பேத்கரும் , அதே கருத்தை எதிரொலிக்கும் அனைவரும் தமிழரே! வள்ளுவனும், வள்ளலாரும் தமிழனென்றால் இதைப்போன்ற கருத்துடைய சீனத்து கபிலனும் தமிழனல்லவா!

    • ajaathasathru

      கற்பனை உலகத்துல ஏதோ இது பெரிய விஷயம் மாதிரி நெனச்சுண்டு வாழாதிங்கோ. இப்போ இருக்குற busy lifela இது எலாம் ஒரு பெரிய நியூஸ் கடயாது. நீங்க நினைகரா மாதிரி சிண்டு முடியறது எல்லாம் waste . இந்த பல்லவி எலாம் IT வந்ததுக்கு அப்பறம் கிழிஞ்சு போன TAPE. பொழுது போக ஏதோ NEWS அவ்ளோ தான்.

      ஜாலியா ரெண்டு கமெண்ட்ஸ் படிச்சு தெரிஞ்சத உளறிட்டு போங்கோ.

      Don’t just think of non existent myths and live in your own illusion.

  10. அய்யா சாமிகளே ! இப்படி உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டம் இடுவது தேவையா? அம்பேத்கர் பேரறிஞர். தான் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் சரித்திர, சமூக, அறிவியல் ஆதாரங்களை அளிக்கும் அளவு ஆழங்கால் பட்டவர். தயவு செய்து ஈ.வெ.ரா. வையும், அம்பேத்கரையும் இணை வைக்காதீர்கள். சமூகப் போராளி என்ற இடம் ஈ.வெ.ரா.க்கு கிடையாது. அவர் கலகக்காரர் மட்டுமே.
    உடனே சின்டு முடிதல், அவாள் சூழ்ச்சி என்று வெறுப்பு மொழி பேசுவது எளிது. அப்படிப் பேச இருவரையுமே வாசித்திருக்க வேண்டியதில்லை. அதை மறைக்க இப்படி பொங்கல் வைப்பது.

    • பெரியார் கலகக் காரர்தான்! அந்தக் கலகக் குரலையும் நம் தந்தை ஆய்ந்து தான் வெளியிட்டார். இதோ தந்தை பெரியாரின் முடிவுகள்!

      1. கடவுள் என்பது காட்டுமிராண்டிக் கண்டுபிடிப்பு!
      2. வேதம் என்பது சூது நிறைந்தது!
      3. இதிகாசம் என்பது சதிமோசமானது!
      4. புராணெமென்பது புளுகு மூட்டை!
      5. அடியார்கள் என்பவர்கள் மடையர்களே ஆவார்கள்!
      6. தேவர்-அசுரர் என்பவர்கள் ஆரியர் திராவிடர்களே யாவர்கள்!
      7. சாஸ்திரமென்பது மோசடிக் குவியல்!
      8. முனிவர்கள், ரிசிகள் முட்டாள்களின் தொகுப்பு!

      மேற்கண்டவையெல்லாம் பெரியாரின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் தான் (பகுத்தறிவு அகராதி-பெரியார் களஞ்சியம் தொகுதி மூன்று).

      இதில் பெரியார் ஆராய்ந்து கேட்ட மறுகேள்வி எனக்கு மிகவும் பிடிக்கும். இதோ உங்களின் பார்வைக்கு!

      நிருபர்: கடவுள் இல்லை என்று சொல்ல ஒரு நாத்திகனுக்கு உரிமை உண்டென்றால் கடவுள் இருக்கிறார் என்று சொல்ல ஒரு ஆத்திகனுக்கும் உரிமை உள்ளதுதானே?

      பெரியார்: சோறு திங்க உரிமையுண்டு! சாணி திங்க உரிமையுண்டா?

      • Dear Thendral,

        Periyar abused hindus as a whole and projected that as if he is opposing only brahmins.

        In salem procession, he garlanded chappals to Lord Rama offending and religious sentiments. He does not know culture and always uses unparliamentary words and abuses the faith and hurts the feelings.எப்டி இருந்தாலும் பண்ண அட்டூழ்யதுக்கு அனுபவிப்பா

        பெரியார்: சோறு திங்க உரிமையுண்டு! சாணி திங்க உரிமையுண்டா?
        What is this language? Where is literary delicacy? shame on the part.

        கேட்கும் போதே உமடிண்டு வரது. இப்டி தான் பேசுவாளா? decency வேண்டாம்? இங்க வந்து அவர் சொன்னார்னு ஒரு பெரிய உளறல் lista பெரிய உபநிஷத் வாக்கியம் மாதிரி ஒப்பிகறேல்?
        மட்டு மரியாதை கொஞ்சம் கூட இல்லாத மனுஷன். உங்க ஆத்துல எலாரும் சாமிய வேண்டிக்க தானே செய்யறா? இல்ல எலாரும் நாச்திகாலா?

        மேடைல பேச வேணா உபயோகம். நமக்குன்னு கஷ்டம் வந்தா பகவனா தேடி போவோம். அன்னிக்கு இந்த வாசகத்துல ஒன்னும் உபயோக படாது. பேச வந்துடேளே.

        அது வேறு இது வேறுன்னு அரசியல் வ்யாக்யானம் சொல்லாதேள். வயர் எரியறது. ராமர்க்கு செருப்பு மாலை போட்டது சரியா? எலாதையும் பார்த்துண்டு தான் இருக்கான். தானே வந்து விளையும்.

        • ஹோமியத்தை குடிக்கிற உமக்கு ஏன்யா சாணி அப்டீங்குற வார்த்தையை கேட்டாலே உமட்டுது..

          ஒரு வேளை உமக்கு மனித ரத்த வாடைனா உமட்டதோ என்னவோ ..

      • 6. தேவர்-அசுரர் என்பவர்கள் ஆரியர் திராவிடர்களே யாவர்கள்!

        I dont agree with this statement.

        If Ramayan is a lie, Ravanan is also a lie.
        Cherry picking Ravanan to suit our needs is a not a right thing to do.

  11. மோடி வரதுக்கு முன்னாடியெ சொன்னோம் இவர்கள் இப்படிதான் என்று ……..

  12. Natrayan your voice not good this voice fully supported to matham and jathi.unnai pola irukkavanga varai jathi oliyapothillai jathi veri oliga suyamariyathai iyakkam valarga modi arasu oliga…natrayan voice chi chi

  13. நாரதர் கலகத்தை இந்த ‘னல்லவர்’ ஆரம்பித்துவிட்டார்! எப்படி வேறுபட்டனர் என்று ஒப்பீடு செய்திருந்தால் அதையும் விவாதிக்கலாமே! இது தான் சூத்திரனுக்கு எட்டாத சூழ்ச்சி! அடுத்து கெடுத்தலும், மித்திரபேதமும் அவாளுக்கே கைவந்த கலை! அதை புரிந்து கொள்ளும் அறிவு பெற்றாலே சூத்திரன் சும்மா இருக்கமாட்டானே! ஆத்திரம் இயற்கையாகவே வருமே!

  14. ஊடகத்துலும்,ப்ராமனன் திமிராக சூத்திரனை கேவலமா பேசுண்டு இருக்கா, ஆனா சூத்திரனுங்க ப்ராமனனுக்கு சூத்து கழுவி விடுவதை குரியா இருக்கா சொரனயே இல்லாமல், ஆனால் பார்ப்பனீயதை தோலுரித்து நிர்வானப்படுதியவர் பீமராவ், சூத்திரர் என்னும் பிற்பட்ட வகப்பை சேர்ந்த்வா இனியவது ப்ராமனாள் சூழ்சியை புரிந்த்து கொள்ள வேண்டும் இதில் பன்சமர் என்னும்
    மறையர்(பறையர்)ப்ராமனாளை தெளிவகா புரிந்துண்டு இருக்கா. சூத்திராலுக யோசியும்…

  15. அய்யா! கிரிஷ்ணய்யரே! சாணி என்று பெரியார் சொன்னதுக்கு குமெட்டிண்டு வந்துடிச்சோ? கோமியத்தை, அவா அவா கொமியதையும் கூட், குடிச்சுண்டு வர்ரேளே, அப்ப குமட்டலேயோ ?
    அவாளிடம் கேட் க வேண்டியது தானே!

  16. அய்யா! அறிவு ஜீவி இராமன் அவர்களே! தேவர்-அசுரர் என்பது அப்படியே ஆரியர்-திராவிட போராட்டம் என்றுநானும் நம்பவில்லை! ஏகப்பட்ட கொள்ளைக்கார முட்டள்கள், தங்களுக்குள் சண்டையிட்டு ஊரான் தாலியறுக்க, குறுக்கேநுழைந்து ரத்தம் குடிக்கும் குள்ளனரிக்கூட்டம், ஜெயித்தவனை தேவன் என்றும், தோற்றவனை அசுரன் என்றும் பாடி வைத்தது! இந்திரன் சந்திரன் என்பதெல்லாம் பார்பனரை ஆதரித்தவநைத்தான்! பார்ப்பானை எதிர்த்தவன், ஆரியனேயானாலும் அவன் அசுரன் தான்! இன்னொரு பித்தலாட்டமும் உண்டு! பார்பனரை எதிர்த்து மாய்ந்த வீரர்களையும் , பார்பன ஆதரவாளனாகவே திரித்து புராணம் படத்தனர், பாமரனை ஏமாற்ற! உதாரணம்- பகவான் க்ரிஷ்ணன் , மகாபலி கதைகள்!

    தற்போது விவேகானந்தர், பகத்சிங் எல்லாம் சங்பரிவார நாயகர்களாக சித்தரிக்க முயற்சி செய்யவில்லையா!

  17. //ஏகப்பட்ட கொள்ளைக்கார முட்டள்கள், தங்களுக்குள் சண்டையிட்டு ஊரான் தாலியறுக்க, குறுக்கேநுழைந்து ரத்தம் குடிக்கும் குள்ளனரிக்கூட்டம், ஜெயித்தவனை தேவன் என்றும், தோற்றவனை அசுரன் என்றும் பாடி வைத்தது//

    You mean to say those stories are nothing but recorded histories with twisted information?

  18. ஆம் அய்யரே! வால்மீகி கூட தன் ராமாயணம் அப்படியே நடந்த கதை என்று கூறவில்லை! இணையை இழந்த ஒரு அண்டரெண்ட பறவையின் சோகத்தை கண்டு கற்பனையாக புனையப்பட்ட கதை என்றுதான் கூறுகிறார்; பின்னால் வந்தவர்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப சம்பவங்களை கூட்டியும் , குறைத்தும் முழுநூலாக்கினர்! அந்தந்த காலத்து நீதிகளும்/அனீதிகளும் காணப்படுகின்றன! அவ்வப்போது கால, தேச வர்த்தமானங்களுக்கேற்ப புதிய, திருத்தப்பட்ட பதிப்புகள் அரங்கேறியுள்ளன! மகாபாரதமும் அப்படியே! ஒரே காலத்தில்நடந்த கதையோ அல்லது ஒரே புலவனால் புனையப்பட்டதோ அல்ல! ஆதிக்க சக்திகளுக்கு ஒரு பிராமிஸடு லேண்டு தேவைதானே!

    • Please give me clear statement. Dont talk here and there. I have rewritten your statements clearly

      1.Ramayanam is a fiction
      2.Ramayanam is a fiction but real history was added later at some part. (Please provide what you think is history)
      3.Mahabaratham is not a fiction and is one big history book maintained by Aryan historians with intent of demeaning Dravidians

  19. அடுத்தவன் மனைவியை ஆட்கொள்ள விரும்பிய இந்திரன், சந்திரன், விஷ்ணு, அவரது அவதாரம் கிருஷ்ணன், பிரம்மா, சிவன் இவர்களுக்கெல்லாம் தண்டனை இல்லை. ஆனால் அசுரனான இராவணனுக்கு மரண தண்டனை. அமுத கலசத்தை தேவர்களும் அசுரர்களும் இனைந்து கடைந்து எடுப்பார்களாம். ஆனால் அதற்கான பலன் தேவர்களுக்கு மட்டும் தானாம். அசுரர்களை ஏமாற்ற பெண் உருவில் விஷ்ணு செல்ல, அந்த பெண் உருவை கண்டு மயங்கி சிவன் அந்த மாய பெண்ணுடன் சேர, ஐய்யப்பன் உருவானதாக சொல்கிறார்கள். புராண கதைகளை தீர ஆராயந்தோமேன்றால் பெரும் ஆபாச குப்பையே மிஞ்சும்.

    அசுரர்களை வர்ணிப்பதை பார்க்கும்போது அவர்கள் திராவிடர்களை தான் குறிக்கிறார்கள் என்று நன்கு விளங்கும். இதில் என்ன கொடுமை என்றால் திராவிடர்களை வீழ்த்தியதாக இவர்கள் கூறும் கதைகளை நம் திராவிடர்களே நம்பி கொண்டாடுகிறார்கள்.

    • I agree those are Religious fictional stories to maintain class structure and keep the people under control.
      In my opinion Ramayan was fictional novel for entertainment and people made Rama a god later.

      I do not agree it contains history.

  20. மகாபாரதம், முன்னாளில் இருந்த குரு வம்சத்தினரின் வரலாற்றை சித்தரிப்பதாக கருதலாம். ஆதிக்க ஆசையினால் சகோதர வம்சாவழியினர் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு, அனேகமாக அனைவரும், பரிட்சீத்து என்ற பிண்டமான உருவம் தவிர , அனைவரும் அழிந்த கதை! இந்தக்கதையை புராணிகர்களால் பிற்செர்க்கைகள், வெவ்வேறு காலத்தில் சேர்க்கப்பட்டு ஆரிய நால்வருண ஏற்பாட்டையும், பிராமணர்களின் உயர் தகுதி பற்றியும் பறை சாற்றுகின்றது!

    ராமன் வால்மீகியால் மனிதனாக சித்தரிக்கபட்டு , பின்னர் விஷ்ணுவின் அவதாரமாக பரிணமித்தார்! பிராமண சிரேஷ்டரான வசிஷ்டரின் மூதாதையரும், விஸ்வாமித்திரனின் மூதாதையரும் சகோதரர்களே! ஒருவர் பிராமனனாகவும், மற்றவர் சத்திரியனாகவும், செய்யும் தொழிலால் பிளவு பட்டனர்! விஸ்வாமித்திரன் பின்னர் புதிய கோத்திரம் படைத்தது தனிக்கதை! இந்த பிராமண ரிஷிகள் சஞ்சாரம் செய்த இடங்களிலெல்லாம் இனவிருத்தி செய்து கொண்டே போக , இவர்களுக்குள்ளேயே வர்ணபேதம் ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்தனர்! இந்தியாவின் மேற்குப்பகுதியில், காலூன்றியவர்கள் ஆதிகுடிகளான பூர்வ குடியினரை அடக்கி அரசு முறையை நிறுவி, சத்திரியராக தங்கள் இனத்தாரையே அரசனாக்கி , பூர்வகுடியினரை கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர்! அஸ்திர , சஸ்திர பயிற்சியற்ற பூர்வகுடிகள், ஆரியரின் போர்முறையும், தந்திரமும் அறியாமையால் ஆரியெளருக்கு அடிமையாயினர்! இவர்களே சூத்திரர்கள்! இக்காலத்தில் வந்தேறிகளுடன் ஏற்பட்ட இனக்கலப்பால், சில பூர்வகுடிகளும் தங்களை ஆரியரென கூறிக்கொண்டனர்! ராஜாக்களும் அவர்களால் ஆதரிக்கப்பட்ட குடிகளும் , பக்கத்து ஊரை சூரையிட்டு தனது செல்வததி பெருக்கிகொன்டு , அரசவை எனும் ஜால்ரா கூட்டம் சகிதம் வாழ்ந்து வர, நிரந்தர வருமானத்திற்கு அடிமையான சூத்திரர்களின் உழைப்பு சுரண்ட , தன்டல் முறையும், அரசு எனும் நிர்வாக முறையும் ஏற்பட்டது! இந்த அரசுநிர்வாக முறை மேற்கிலிருந்து வந்ததால், கிழக்கு மற்றும், தெற்கத்திய மக்கள் ஒற்றுமையான அரசு இல்லாததால் , ஆரியருடனான போரில், பெரும்பாலும் சூழ்ச்சியில் வீழ்ந்தனர்! இந்த ஆரியர் பிற மக்களை, பின்னர் திராவிடர் எனப்படுவோரை, வென்ற கதையை திரித்து புராணங்களாக எழுதிக்கொண்டனர்! போரில்நாடு பிடித்து ஆதிக்கம் செய்யவந்த கூட்டம் ஒரு சாதியாகவும், போரில் தோற்ற கூட்டம் அடிம சாதியாகவும் ஆயிற்று! குழு ஒற்றுமையுடன் ஒரு கூட்டம், மற்றொரு ஒற்றுமையிழந்த கூட்டத்தை ஏவல் அடிமையாக்கி, அவர்களின் ரத்தம் குடித்து வருகிறது! உலகம் எவ்வளவு நாகரிகமடைந்தாலும், ஓடப்பர்கள் உதையப்பர்களாகதவரை அடிமையாத்தாம் இருப்பர்! ஒயிட் காலர் , புளு காலர் பிரிவினர் விரோதிகளாகவே இருப்பர்- கொக்கும் ஆமையும்போல! ஒருவர் வலி மற்றவருக்கு புரியாது!

    • I am taking important declaration from your reply

      1) Mahabharata is a history of Guru clan
      2) Bramin Rishi’s(Monks) were real people who lived in India
      3) Aryans were better civilization with proper war machines and techniques
      4) Aryans won Dravidian in the war and that is the Ramayan ( பின்னர் திராவிடர் எனப்படுவோரை, வென்ற கதையை திரித்து புராணங்களாக எழுதிக்கொண்டனர்! I assume you are referring Ramayan here )
      5) Since Dravidian lost the war they were enslaved by Aryans and hence Aryans are upper caste and Dravida’s are lower caste

  21. 1.ஒரு குடும்பத்துக்குள்நடந்த ஆதிக்க சண்டை என்பது மட்டுமே மகபாரதகதையின் கரு என்ற அளவில் அது உண்மையானதாக இருக்கலாம்! அதற்காக குரு வம்சத்தின் பூர்வீகம் பற்றிய கதைகள் புனைவே!
    2. ரிஷிகள் எல்லோரும் பிராமணர்கள் அல்ல! பிரமத்தை அறிந்தவர்கள் என்ற உயர்வு நவிற்சியாக சிலர் பிராமணர்களாக மதிக்கப்பட்டனர்! அவர்கள் சந்ததியினரும் பிராமணராக வழி வழியாக வந்து, பிற்காலத்தில் பிராமண ரிஷிக்கும், பிராமண பெண்ணுக்கும் பிறந்தவரே பிராமணராக முடியும் என்று வகுக்கப்பட்டது! கஷ்யப முனிவரின் இர்ண்டு மனைவிகளில் ஒருவருக்கு பிறந்தவர்கள் தேவர்கள் எனவும், இன்னொருத்திக்கு பிறந்தவர்கள் அசுரர் எனவும் கூறப்படுகின்றனர்! இதே போல செல்வத்தின் அதிபதியான குபேரனும், தென் திசை அரசனான இராவணனும் ஒரே பிராமண ரிஷிக்கு பிறந்த தேவனும் அசுரனும் ஆவார்கள்! ராவணனை போரில் கொன்ற ராமனுக்கு பிரமகத்தி உண்டாயிற்று! வாலியை மறைந்துநின்று கொன்றாலும் எந்த பாவமும் இல்லையாம்! நடந்த கதையில் பிராமண (சனாதன) முறையை ஒப்புக்கொண்டவர், ஒப்புக்கொளாதவர் என்ற முறையிலும், பிராமணர் எனப்படுவோர் நடத்தும் வேள்வி முறையை ஒப்புகொள்ளாதவர், சோமபானம், சுராபானம் (அமுதம்) அருந்த தகுதியற்றவர் என ஒதுக்கபட்டவர் அசுரர் என்றாயினர்!

    2.பிராமணர் ஆதிக்கம் மிகுந்த வடபகுதி மக்கள், நாகரிகத்தில் தாங்களே சிறந்தவர்கள் என குறிக்க ஆரியர்கள் என அழைத்துக்கொண்டனர்! எஞ்சிய தென்பகுதி மக்கள், ஆரிய கலாச்சாரம் பின்பற்றாததால் திராவிடர் என ஆரியர்களால் குறிக்கப்பட்டனர்! ஆரியர் செல்வாக்கு செல்லுபடியான இடம் ஆரிய வர்த்தமானதாயிற்று, செல்லாத பகுதி திராவிடமாயிற்று!

    இந்த ஆரிய போதை,மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு கூட்டத்தாரால் பரப்பபட்டது! இந்தியாவில் வட பகுதினரும், ஜெர்மன் இனத்தூய்மயாளர்களும் தங்களை ஆரியர் என கூறிக்கொள்கின்றனர்!

    யூதர்களுக்கு ஒரு தாயகம் உருவாக்கிகொண்டதைப்போல, வடபுலம் ஆரிய வர்த்தமானது! தெற்கே வளமிக்க பகுதியை, ரிஷிகள் கண்டு , அவற்றை ஆரிய அரசன் ராமனைக்கொண்டும், சீதையைகொண்டும் , திராவிட பகுதியில் அரசாண்ட ராவணனை கொன்று தண்டகாரண்யம் எனும் கோதாவரி வரை வயப்படுத்திய நிகழ்வை கதையாக புனைந்ததே ராமாயணம்! பல கால கட்டங்களில், பல்வேறு புலவர்களால், பல்வேறு வடிவில் கூறப்பட்டுள்ளது! அடிப்படைநிகழ்வு மட்டுமே உன்மையாக இருக்கலாம்!

    3.ஆரியர்கள் தந்திரமும், அடுத்துக்கெடுத்தல், மித்திரபேதம் முதலிய அரசியல் கலையை கொண்டிருந்தனர்; அதனால் ஆரியம் ஜெயித்தநாகரிகமேயன்றி, சிறந்த நாகரிகம் கொண்டதல்ல! பல சிறப்பு கூறுகள் பூர்வ குடிகளிடமிருந்து கற்றுக்கொண்டவை!

    உங்கள் பதிலில் 4 மற்றும் 5 க்குநான் ஒப்புகிறேன் ! ஆனால் சாதி அமைப்பு ஒருநிகழ்வில் மட்டும் ஏற்படவைல்லை! பல்வேறு பகுதி அரசர்களும், அடுத்த பகுதி அரசனை வென்றாலும் , ஒரேநாடாக இணைத்துக்கொண்டாலும், ஆந்தந்த பகுதி மக்கள் தங்கள் பழக்கவழக்க மாறுபாட்டால் தனிதொகுதியாயினர்! சிலர் குலத்தொழிலைக்கொண்டும், சிலர் யுத்தத்தில் தோற்றுபிடிபட்ட அன்னியமண்ணில், கிடைத்த அடிமட்ட வேலையை ஏற்றுக்கொண்டதாலும் சாதிகளும் அவற்றில் உயர்வு தாழ்வும் ஏற்பட்டது! இக்காலகட்டத்தில் பிராமணர்கள் மேற்கொண்டு இனக்கலப்பு மற்றும் சாதிக்கலப்பு ஏற்படாமலிருக்க முதலில் நால்வருண பேதமும் , பின்னர் அவற்றின் சங்கிரம சாதிகளும் என வகைப்படுத்தினர்! இருந்தாலும் தொடர்ந்து இனக்கலப்பும், சாதி கலப்பும் ஏற்ப்பட்டு கொண்டுதான் இருந்தன.

    ஆங்கிலேயர் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும்போதுதான், பிராமணர்கள் முன்பு வகுத்த நால்வகை சாதிகளன்றி, ஒருவருக்கொருவர் கொள்வினை – கொடுப்பினை தொடர்பில்லாத 600க்கும் மேற்பட்ட சாதிகள் இருப்பதை பட்டியலிட்டுள்ளனர்!

    வெற்றி பெற்ற ஆரியர்கள் தங்கள் மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள, மந்திர தந்திர வித்தைகளை புகுத்தி, திராவிட வீரர்களையும், அவர்தம் சிறு தெய்வங்களையும் ஆரிய வேத கால தெய்வங்களுக்கு அடிமையாக்கி எல்லாமே பிராமண மதத்துக்கு அடிமையென மூளைச்சலவை செய்து வருகின்றனர்! கொள்ளயடித்தேனும் கோயில் கட்டுக என்பது திராவிடனிடம் மட்டுமே எடுபட்டது!

    • அஜாதா சத்ரு அவர்களே ! நான் இன்னும் எனது கருத்தை சொல்லவே ஆரம்பிக்கவில்லை . உங்களது வளாவாள .கோழக்கொழா என்று பரவலாக எழுதி இருந்ததை சுருக்கி , தெளிவாக சுருக்கமாக எழுதி இருக்கிறேன் . ஒவ்வொரு முறையும் ஆம் இதைத்தான் சொல்கிறேன் என்று சொல்வீர்கள் என்று பார்த்தால் ,உங்களது கருத்தையே உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

      உண்மையை 1+1=2 என்று எழுதினாலும் 2-1=1 என்று எழுதினாலும் பொருள் மாறாது .

      நீங்கள் வரலாற்று உண்மைகளை காற்று அறிந்து பேசுவது போல தெரியவில்லை , போது புத்தியில் இருந்து பேசுகிறீர்கள் .

  22. உலகில் தங்கள் இனமே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எனவும், தங்கள் சாமியே முழுமுதற்கடவுள் எனவும் பல பிரிவினர் அவரவர் பூசாரிகள் வார்த்தையையேநம்பி வந்துள்ளனர்! முதன் முதலாக, பூசாரிகளை எதிர்த்து, தங்களுக்குள் ஒருமாதிரியான ‘ஜனனாயகம்’ கண்டவர்கள் கிரேக்கர்களே! பிற இனத்தவரை வெற்றி கொண்டு, கப்பம் கட்ட வைத்து தமது ராஜிய எல்லையை விரிவு படுத்தினாலும், பொது மக்கள் பழைய மதவாதிகளை முற்றிலும் மறந்துவிடவில்லை! அவ்வபொது கலகம் செய்து, புதிய இனத்தவர்கள் ஆதிக்கம் பெற்றனர்! பின்னாலில் ரோமர்களும் புரொகித கும்பலின் ஆதிக்கத்தால் பிளவுபட்டு அழிந்தனர்!

    அவாப்போது ஏற்பட்ட கலகங்களால் விரட்டப்பட்டு , பழைய மதத்தினர் இந்தியாவிற்கும் , ரஷ்யா, ஜெர்மனி போன்ற பிரதேசங்களுக்கு சென்றிருக்கலாம்! மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவிற்கு வந்தவர்கள், ஆரியர் என்று தங்களை கூறிகொண்டவர்கள், அதிர்ஷ்ட சாலிகள்! இவர்களை தேவர்கள் என்று கும்பிட ஒரு கூட்டம், தஸ்யுக்கள் எனப்படும் மக்கள், வெள்ளந்திகள், இவர்களுக்கு அடிமையாக கிடைத்தார்கள் ! எப்படி அவர்களை வெற்றிகன்டு, தங்களுக்கு அடிமையாக்கினார்கள் என்று சிம்பாலிக்காக கூறுவதே மகாபாரதம்! மனுச்மிருதிகள் நேரடியாக பார்ப்பனர்களுக்கு மட்டும் பகர்வதை , கதையின் மூலம் , எதிர்த்தவன் கதி என்ன ஆயிற்று பார்த்தாயா பகர்வதே நம் இதிகாசங்கள்! ஒவ்வொரு கிளைக்கதைக்கும், மூல கதையோட்டத்திற்கும் உள்ள ஒரே தொடர்பு இது தான், பகவத்கீதையின் பிரசித்தம் இவ்வாறே!

  23. அய்யா ராமன் அவர்களே!நான் சொல்வதாக,நீங்கள் ஆஙிலத்தில் கொடுத்திருப்பது தவறான முடிவுக்கு இட்டு செல்லலாம்! அகவே ஒவ்வொரு பிரிவிற்கும் விளக்கம் தந்திருக்கிறேன்! உங்கள் கருத்தை நீங்கள் வளா வளா அல்லாமல் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று தீர்க்கமாகவே கொடுக்கலாம்! அதற்கு பிண்ணூட்டம் தேவையல்ல! நான் படித்து பட்டம் பெற ஒரு புண்ணாக்கும் புராணங்களில் இல்லை! எல்லாம் உங்களைபோன்ற மேதாவிகளின் அளப்புகளிலிருந்து பெற்றதுதான்!

    எல்லாம் வேததிலிருக்கிறது, வேதமோ என் கக்கத்திலிருக்கிறது எனும் பார்பனர்கள், ஒன்று வேத , புராண இதிகாசங்களின் உண்மையான மொழிபெயர்ப்பை வெளியிடவேண்டும் அல்லது எல்லொருக்கும் வேதபாட சாலையில் அனுமதி தரவேண்டும்! சாதிக்கொருநீதி இனி இல்லை!

  24. 3) Aryans were better civilization with proper war machines and techniques
    Utter nonsense, they even learned calender system from Indus valley civilisation. “பெருமைக்குரிய நாகரீகங்கள் தங்கள் வளார்ச்சிப்போகிலேயே அழிவை நோக்கிச் செல்கின்றன. ஏனென்றால் பண்பாட்டு வளர்ச்சி என்பது பன்மைத்துவம் நோக்கிக் கொண்டுசெல்லும். ஒவ்வொரு உட்கூறும் தனித்து வளரும். அவ்வாறு வளர்பவை ஒன்றுடன் ஒன்று முரண்படும். அந்நிலையில் அது ஒற்றைப்படையான, வலிமையான போர்ச்சமூகமாக அல்லாமலாகும். ஒருமையும் தீவிரமும் கொண்ட, அதேசமயம் பண்பாட்டில் பின்நிலையில் நிற்கும் சமூகங்களால் அவை தோற்கடிக்கப்படும்.
    4) Aryans won Dravidian in the war and that is the Ramayan
    Bharatham and ramayanam are fictious stories, searching truth or history in these are not possible. the hero’s of both stories are not Aryans.
    As per bharatham, All acharyans last to Krishna, a shepherd; as per Ramayan, Raman could have lost to Ravan if they have not got help from Hanuman and Sukreevan

  25. a.//Aryans were better civilization with proper war machines and techniques//

    b.//Aryans won Dravidian in the war and that is the Ramayan! I assume you are referring Ramayan here//

    c.//Since Dravidian lost the war they were enslaved by Aryans and hence Aryans are upper caste and Dravida’s are lower caste//

    All the above are Mr.Rsmsns attributes/ understandings…… not mine!

    Aryan civilisation shall not be ssumed as indian origin. It is linked to Mesophdomiyan culture from where they spread to Baltic , Middle Asia and Industan. As Greek warriers are excellent in harnessing millittary hardwares, strategies etc. etc.

    Indian brahmins who might have broght the technique of formations and philosophy of King!
    They taught millitary science to weds of ruling clans and naturally they are respected nd revered by kings!

    But when king went against their interest they united under ‘Brahmaasthirm’, nothing but brahminicl ‘fatwa’ and deserted the king gainst a new one, mostly from old king’s clan ! Mine is a general statement for todays politic also! Kindly bear with my poor english!

    • a.//Aryans were better civilization with proper war machines and techniques//
      அஸ்திர , சஸ்திர பயிற்சியற்ற பூர்வகுடிகள், ஆரியரின் போர்முறையும், தந்திரமும் அறியாமையால் ஆரியெளருக்கு அடிமையாயினர்!

      b.//Aryans won Dravidian in the war and that is the Ramayan! I assume you are referring Ramayan here//
      ஆரியருடனான போரில், பெரும்பாலும் சூழ்ச்சியில் வீழ்ந்தனர்! இந்த ஆரியர் பிற மக்களை, பின்னர் திராவிடர் எனப்படுவோரை, வென்ற கதையை திரித்து புராணங்களாக எழுதிக்கொண்டனர்!

      c.//Since Dravidian lost the war they were enslaved by Aryans and hence Aryans are upper caste and Dravida’s are lower caste//
      போரில்நாடு பிடித்து ஆதிக்கம் செய்யவந்த கூட்டம் ஒரு சாதியாகவும், போரில் தோற்ற கூட்டம் அடிம சாதியாகவும் ஆயிற்று!

      Read 21 for full context.You are arguing with yourself 🙂

  26. அய்யா ராமர் அவர்களே! உங்கள் விருப்பப்படி திரித்துவிட்டீர்களே! இயல்பான குணம் போலும்!
    நான் கூறியது:”அஸ்திர , சஸ்திர பயிற்சியற்ற பூர்வகுடிகள், ஆரியரின் போர்முறையும், தந்திரமும்…” எவ்வாறு ‘பெட்டெர் சிவிலிசேசன்’ ஆனது? வரலாற்றில் மங்கோலிய முறட்டு இனம், ஆசியநிலப்பகுதியில் பெரும்பகுதியை அடக்கியாண்டது! பார்பரிய இன முறட்டு வீரர்கள் பலநாட்டு மக்களை வென்றார்கள்; அதனால் இவர்கள்நாகரிக வளர்ச்சி யடைந்த சமூகமாக மதிக்கப்படவில்லையே! ஆரிய இனமும் அப்படித்தான்! அதை பற்றி இந்திரன், சந்திரன் வரலாறு தெரிந்தவர் கூறிவிட்டாரே!

    ஆர்யர் , திராவிடரை வெற்றிகொண்டது பெரும்பாலும் சூழ்ச்சியில்! ராமன் திராவிடனா, ஆரியனா?
    ராவணன் ஆரியனா , திராவிடனா? ராமாயனம் தண்டகாரன்ய வனத்து திராவிடர்களையெல்லாம் அழித்த கதையாக இருக்கலாம்! சீதைக்காக ராமன் காட்டிற்கு வரவில்லை, காட்டிற்கு வந்து அவ்விடத்து குடிமக்களை கொன்றதால் ராவணன் தலையிட்டான்!

    சிவ புராணங்களில் தடாதகைபிராட்டியும், ராவணனனும் சிறந்த சிவ பக்தர்களாக காட்டப்பட, இராமாயணத்தில் அவர்கள் அசுரர் ஆனது எப்படி? வேதவேள்வியையும், சுராபானகளியாட்டத்தையும் வெறுத்தவர்கள் என்பதால் “அசுரர்” ஆனாரோ? இன்னும் வினவலாம் நண்பரே!

  27. கிருட்டினன், அனுமான்,நந்தி முதலியவர்கள் கதை வேறுவிதமானது! இவர்களும் பிராமனியத்தை எதிர்த்த தீரர்கள்! அவர்காலத்தில் அடங்கியிருந்த பிராமணர்கள், அவர்கள் பிராமணநலம் விரும்பிகள் என பின்னாளில் திரித்துவிட்டனர்! எதிர்ப்பு வரும்போது அடங்கியிருந்து, எதிர்க்க ஆளில்லையென தெரிந்ததும் சண்டப்பிரசண்டமாய் எழுவர்!

    ஊரெல்லாம் பெரியார் ஸ்தூபி வைத்து, பெரியார் புகழ் பரப்பியவருக்கு வாய்த்த சின்ன வீடு அண்ணா-பெரியார் கொள்கைக்கு வைத்த வேட்டு போல, அசுர அரசர்களை அடிமையாக்கிய ஆரிய மாலாக்களும் செய்திருப்பர்! திராவிடன் தோற்ற வரலாறு இதுதான்!

Leave a Reply to ramadoss kothandaraman seethapathi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க