privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்ஐ.ஐ.டி டீனை கைது செய் ! பு.மா.இ.மு போராட்டம்

ஐ.ஐ.டி டீனை கைது செய் ! பு.மா.இ.மு போராட்டம்

-

rayf iit protest (3)

rayf iit protest (1)

rayf iit protest (2)

ஐ.ஐ.டி.யை ஆக்கிரமித்துள்ள பார்ப்பன கும்பலை விரட்டியடிப்போம்! புமாஇமுவினர் போராட்டம்!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருந்த அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட அமைப்பை தடை செய்து பார்ப்பனத் திமிரை வெளிப்படுத்திய ஐ.ஐ.டி நிர்வாகத்தை கண்டித்து, 30-05-2015 அன்று பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதனால், ஐ.ஐ.டி வளாகத்தின் முன்பாக காலையிலிருந்தே ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஏராளமான இந்திய அளவிலான ஊடகங்களும் வந்து குவிந்திருந்தன. அந்த சாலை முழுவதுமே ஊடகங்களாலும், காவல்துறையாலும் நிரம்பி வழிந்தது.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

மாணவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்காக அனைத்து வாயில்களிலும் போலிசார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

சுமார் பதினோரு மணி அளவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மோடி அரசிற்கு எதிராகவும், கருத்து சுதந்திரத்தை பறிக்காதே எனவும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். “இது வெறும் கருத்து சுதந்திர பறிப்பு மட்டுமல்ல பச்சையான பார்ப்பன பாசிச நடவடிக்கை” என்பதை அம்பலப்படுத்தியவாறு அவர்களைத் தொடர்ந்து சென்னை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் போராட்டக்களத்தில் இறங்கினர்.

இளம் சிறார்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். விரைந்து செயல்பட்ட காவல்துறை, “ஊடகங்களுக்கு செய்தி சென்று சேரக்கூடாது” என்பதற்காக பேட்டியளித்துக் கொண்டிருந்த பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் கணேசனின் சட்டை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றது. அதே நேரம் மற்றவர்களையும் அடித்து துன்புறுத்தி போலீசு வாகனத்தில் ஏற்ற துடித்தது. இதனால அந்த பகுதியே கலவரப்பகுதியாக மாறிப்போனது.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக போலீசார் குண்டுகட்டாக தூக்கி கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் ஏறும் வரையில் பார்ப்பன பாசிசத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய வண்ணமே இருந்தனர். அதனைத் தொடர்ந்து பு.மா.இ.மு.வின் பெண் தோழர்களை ஏற்றுவதற்காக காவல்துறையினர் முனைந்தனர். உறுதியுடன் இருந்த பெண் தோழர்களை ஏற்ற முடியாததால் போர்க்களமானது சர்தார் பட்டேல் சாலை.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

மாணவர் அமைப்பினர் கொண்டு வந்திருந்த கொடி, தட்டிகளை கிழித்தெறிந்து அராஜகத்தை வெளிப்படுத்தியது போலீசு. இறுதி வரை வளைந்து கொடுக்காத பெண் தோழர்களை துன்புறுத்தும் பணியில் போலிசார் இறங்கினர். தடுப்பிற்காக கட்டப்பட்டிருந்த கயிறில் பெண் தோழர்களை தள்ளிவிட்டு காயப்படுத்தினர். அதையும் மீறி வீரமாக முழங்கிக் கொண்டு பார்ப்பன பாசிசத்தை அமபலப்படுத்தியவாறு பெரியாரை உயர்த்திப்பிடித்தனர் புமாஇமு தோழர்கள்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்பு.மா.இ.மு செய்தி தொடர்பாளர் தோழர் மருது பேசுகையில், “ஐ.ஐ.டி.யில் ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை இல்லை. ஆனால் பெரியார் அம்பேத்கருக்கு தடை. அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்திற்கான தடையை நீக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். மேலும், அம்பேத்கர் – பெரியார் கருத்துகளை தடை செய்து இழிவுபடுத்திய ஐ.ஐ.டி டீன் சிவக்குமார் சீனிவாசனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

“நாலு பொண்னுங்கதான் அவளுங்கல ஏத்தறுதக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு” என அங்கிருந்த பெண்காவலர்கள் நொந்து போயினர். கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தனர்.
அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அவர்களைத் தொடர்ந்து மத்திய கைலாஷ் பகுதியில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தினரும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் சுமார் நூறு பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சற்று நேரம் கழித்து யாரோ ஸ்பான்சர் செய்த கார்களில் கண்களில் போதையும், வெறியும் கலந்தவாறு இந்து மக்கள் கட்சி எனும் கோஷ்டியினர் வந்திறங்கினர். கையில் அம்பேத்கர் படத்தையும், திருவள்ளுவர் படத்தையும் கொண்டு வந்திருந்தனர். ‘சென்னை ஐ.ஐ.டி.க்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் அதே சமயம் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தினை தடை செய்ய வேண்டும்’ என உளறினர்.

இந்த சில்லுண்டிகளது நோக்கம் பெரியாரை ஐ.ஐ.டி வளாகத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்பதே. ஏற்கனவே பெரியார் சிலைகளை சேதப்படுத்தி ஆட்டம் போட்ட இந்த சிறு வானரக் கூட்டம் இங்கும் தனது விசம வாலை ஆட்டியவாறு வந்தது. எதிர்ப்பு என்ற பெயரில் போராட்டத்தின் நியாயத்தை சாவடிக்க இந்த என்.ஜி.வோ டெக்னிக்கை இந்த கூட்டம் கையிலெடுத்தாலும், தமிழக மக்கள் செருப்படி கொடுத்து இந்த ஜந்துவை ஒழிப்பார்கள்.

இந்த ஜந்துகள் வெளியே பேசுவதை உள்ளே இருக்கும் பார்ப்பனக் கூட்டம் அமல்படுத்தியிருக்கிறது.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக இன்று சென்னையில் உள்ள கல்லூரியிலேயே பெரியாருக்கு தடை விதித்துள்ளது பார்ப்பனக் கூட்டம்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

இனியும் இதை அனுமதித்தால் தமிழகத்தை அடுத்த குஜராத்தாக மாற்றும் காலம் வெகு தொலைவில் இருக்காது. உறங்கும் தமிழகமே விழித்தெழு என்பதனை உணர்த்துவது போல் அமைந்தன இன்றைய போராட்டங்கள்.

பு.ஜ செய்தியாளர்கள்.
சென்னை.

மேலும் புகைப்படங்கள்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

 

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்திருவாரூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சுவரொட்டிப் பிரச்சாரம்

iit-aspc-rsyf-tvr-poster

    • எந்த ஜாதி ஆதிக்க ஜாதி என்று கூறவில்லை. இதிலிருந்து உங்களிடம் உள்ள பயம் தெரிகிறது. ஜாதி பெயரை குறிப்பிட்டால் அந்த ஜாதியினர் கொதித்தெழுந்து உங்களை என்ன சேதி என்று கேட்டு விடுவார்கள். அதனால் கண்டு கொள்ளாமல் இப்படி கூறி தப்பித்து விடுகிறீர்கள். தலித் தலித் என்று தமிழகத்தில் இல்லாத ஒரு அமைப்பை கூறி பிற சமுதாய மக்களை அச்சத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இது முட்டாள்தனமான நினைப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்திய அரசியல் சட்டத்தில் எஸ்.ஸி பிரிவினருக்கு என்று தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது நாடாளுமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்கப்படுகிறது. இதனை நீடிக்க உதவுவது எல்லாம் எஸ்.ஸி. அல்லாத சமுதாயத்தை சேர்ந்த எம்.பி.கள் தான். அவர்கள் மட்டும் நினைத்தால் இந்த ஒதுக்கீட்டை இல்லாமல் செய்யலாம்!!! நீங்கள் எல்லாம் மற்றவர்களின் நிழலில் இருந்து கொண்டு அவர்களையே தாக்குகிறீர்கள்!!! வெளிநாட்டில் இருந்து வரும் “பெட்ரோ டாலர்” உங்களுக்கு கை கொடுக்கிறது. ஆனால் இதே நிலை நீடித்தால் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களின் தலைமையை தமிழகத்தில் பிற சமுதாய மக்கள் ஏற்கவேண்டி வரும்!!!

  1. அனைத்து ஊடகத்திலும் போராட்ட செய்தியை பர்த்தேன் ஏழுச்சிமீகு போராட்டமாக இருந்தது.

    காவல்துறையினர் பெண் தோழர்களை காட்டுமிராண்டித்தனமாக இழுத்து செல்லும்போதும் அவர்களின் உறுதி குறையமாள் முழக்கங்களிட்டவாறு சென்றார்கள்.

    போர் குணத்தோடு போராடிய அனைத்து தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  2. பார்ப்பன நரி கூட்டம் தனது நயவன்சகத்தை அமுல்படுத்தும் வேகம் அதிகரிக்கிறது. பெரியார் வாரிசுகள் நாம். பாடம் கற்பிப்போம்!தமிழகமே விழித்தெழு!

  3. ஹிந்து ராஜியத்தை அமைப்பது என்பது இந்த ஹிந்துத்துவாபாசிசவாதிகளுக்கு அவ்வளவு எளிது அல்ல. அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட அமைப்பை தடை செய்ததன் மூலம் இவர்கள் கண்ணி வெடியை அல்லவா மிதித்து உள்ளார்கள்? அதன் நெடியும் ,புகையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு பாசிச ஹிந்துத்துவாகளுக்கு எதிரான கருத்தியல் பிரச்சாரத்தை முற்போக்கு சக்திகளிடம் வலுபடுத்தும்.

  4. இந்த போராட்டங்களினால் ஜெயலலிதாவின்,
    ஊழல்,அடாவடித்தனம்,அஹங்காரம்,திமிர் இவற்றை மக்கள் சில தினங்களுக்கு மறந்து போவார்கள்,

    ஆர் கே நகர் திருவிலையாடல் முற்று பெறும்,
    ஜெயலலிதா வீரங்கனையாக(ஊழல்) முன்னெடுத்து செல்லப்படுவார்.

    இப்போதைக்கு ஜெயலலிதா,பிஜேபி பிலான் இதுதான்.

  5. விடுதலை புலிகள் சிறுவர்களை வலுக்கடாயமாக இழுத்து சென்று போரில் ஈடுபடுத்தினார்கள் என்று குற்றம் சாட்டுகிறோம். ஆனால் அதை நீங்களே செய்வது முரண்பாடு இல்லையா ?

    • புலிகள் குழந்தைகளை மட்டுமல்ல; பெரியவர்களையும் அரசியல்படுத்தவில்லை. அது தான் அவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனம். குழந்தைகள் இது போன்ற அரசியல் கூட்டங்களுக்கு வராமல் சோட்டா பீம் பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    • என்ன திரு அதியமான் அவர்களே,
      புலிகளின் சிறுவர்களும்-ஐ ஐ டி மாணவர்களும் ஒப்பிடக்கூடியவர்களா?

      போரில் ஈடுப்படுத்துவதும்- சமூக,அரசியல்,தத்துவ கருத்துக்களை விவாதிப்பதுவும்
      சமூகநீதிக்காக வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதுவும் ஒன்றா?

    • அதியமான் போன்ற வரலாற்று ஆய்வு எடிட்டர்களுக்கு போலந்து நாட்டின் சிறுவன் அல்லது சிறுமியின் இயற்க்கை சீற்றத்துக்கு எதிரான கடற்கரை தடுப்பு சுவற்றின் ஓட்டையை தன் கைகளால் அடைத்த வீரம் செறிந்த ஓர் இரவு போராட்டம் பற்றி தெரியாமல் இருப்பது பற்றி நான் நினைக்கும் போது அது எனக்கு வியப்பை அளிக்கின்றது .

      அது இயற்க்கை சீற்றத்துக்கு எதிரான போராட்டம்.

      இது கருத்துரிமையை பாதுகாக்கும் போராட்டம்.

      இந்த கட்டுரையில் உள்ள போராடிய சிறுவர் ,சிறுமியிடம் அதியமான் ஒருவேலை பேசிப்பார்த்தால் அவர்களின் அறிவாற்றல் அதியமானுக்கு புலப்படும் . அதியமானின் அறிவாளுமை குறைப்பாடும் அவருக்கு புலப்படும் .

      இந்த கட்டுரையில் உள்ள படத்தில் போராடும் சிறுவர் ,சிறுமியின் பற்றி எனக்கு நன்கு தெரியும். எம் தோழர்களின் குழந்தைகள் இவர்கள்.

      • 10 வயது கூட ஆகாத சிறுவர் சிறுமிகளை அரசியல் கூட்டங்களுக்கு அழைத்து செல்லவதை பற்றி சொல்லவில்லை. ஆனால் ஆபத்து நிறைந்த, வன்முறை வெடிக்க கூடிய, போலிஸ் அராஜகம் மிகுந்த சூழலுக்கு deliberateஆக கூட்டி செல்வது மடமை மற்றும் மிக தவறு. தள்ளுமுள்ளுவில் அந்த சிறுமிக்கு காயம் அல்லது பெரும் கேடு விளைந்திருந்தால் ? Try to use your common sense.

        • It is nice for you breaking the silence. Try keeping it up.

          அதியமானுக்கு நடைபெறுவது யுத்தம் என்று நினைப்பு போலும். நடைபெற்றது கருத்துரிமையை ஆதரிக்கும் ஒரு மறியல் போராட்டம் மட்டுமே. அதில் உண்மையில் அதியமான் போன்றவர்கள், அறிவு ஜீவிகள் பங்கு ஏற்க வேண்டியவர்கள் பங்கு ஏற்காத நிலையில் , குழந்தைகள் அந்த வெற்றிடத்தை நிரப்புகின்றார்கள் என்னும் போது அவர்களின் பங்களிப்பு உண்மையில் வரவேற்க வேண்டியதே.

        • குழந்தைகள், பெண்கள் பங்கெடுக்கும் போராட்டங்களை கையாள போலீசுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும். மனித உரிமைகள் கல்வி போலீசுக்கு புகட்டப்பட வேண்டும். கிரிமினல்கள் போல அரசியல் கைதிகளை நடத்தும் முறை ஒழிக்கப்பட வேண்டும். இது போன்ற எண்ணங்களே எனது காமன் சென்ஸில் உதிக்கின்றன.

          குழந்தைகளை செல்லப்பிராணிகள் போல வளர்ப்பது தான் ஆபத்து. பழங்களில் கூட விதை நீக்கம் செய்யப்பட்ட பழங்களை வாங்கி கொடுத்து இன்றைய மத்தியதர வர்க்கம் விதைகளற்ற இளம் தலைமுறையை உருவாக்கி வருகிறது. இள வயதிலே போராட கற்றுக் கொடுப்பது நாளைய சமூகம் எதிர்நோக்கும் தீங்குகளை எதிர்கொள்ளும் ஆற்றலை அவர்களுக்கு வழங்கும்.

  6. //விடுதலை புலிகள் சிறுவர்களை வலுக்கடாயமாக இழுத்து சென்று போரில் ஈடுபடுத்தினார்கள் என்று குற்றம் சாட்டுகிறோம். ஆனால் அதை நீங்களே செய்வது முரண்பாடு இல்லையா ?// IIT is in war field?
    New information.

  7. //10 வயது கூட ஆகாத சிறுவர் சிறுமிகளை அரசியல் கூட்டங்களுக்கு அழைத்து செல்லவதை பற்றி சொல்லவில்லை. ஆனால் ஆபத்து நிறைந்த, வன்முறை வெடிக்க கூடிய, போலிஸ் அராஜகம் மிகுந்த சூழலுக்கு deliberateஆக கூட்டி செல்வது மடமை மற்றும் மிக தவறு. தள்ளுமுள்ளுவில் அந்த சிறுமிக்கு காயம் அல்லது பெரும் கேடு விளைந்திருந்தால் ? Try to use your common sense.// Still he is not condemning the situation created by his own lovable state machine that lead to this war zone. But he puts blame on Left parties for that also. Boss this is not Communist state and it seems Taking kids out to political protest becomes a danger

  8. THIS IS DISGUSTING. The organizer of the protest group should be jailed for involving children to this violence. Aren’t you guys ashamed? Why the hell you bring children?

    Are you creating sympathy? stupid people.

    • சிறுதொண்ட நாயனார் அவர் புள்ளையாண்டானை பிரமணனுக்கு கறி சமைச்சப்போ மிளகு தூக்கலா போட்டாராமே அப்படியா?

      • லோகத்தை காக்குற சிவபெருமானே “தலைக் கறி”
        கேட்கும்போது,

        மிளகு தூக்கலா-அதுவும்”சக்தி” மசாலாதான்
        வேணும்னு ஒத்தக்காலில் நிண்ணு டான்ஸ் ஆடி அடம்பிடிச்சாராம்

        • இதுகூட பரவாயில்லை….இயற்பகை நாயனாரோட
          பொண்டாட்டிதான் வேணும்னு கேட்டு வாங்கிகிட்டு….
          வெள்ளை யாணை மேல ஏறி சிட்டாக பறந்து போயிட்டாராம்

  9. Chinna Kuzanthaikalin Manathil “Jaathi” ennum Nanjai Kalapathai earka mudiyathu. Ithai than porattam endra peyaril ivargal seigirargal. Jaathi vendam endru sonna Periyar sirupanmaiyinar vendum endru solla villai.

    Ennai porutha mattil Jaathi enbathe kidayathu.

Leave a Reply to ramadoss kothandaraman seethapathi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க