privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்ஐ.ஐ.டி தடை குறித்து அருந்ததி ராய்

ஐ.ஐ.டி தடை குறித்து அருந்ததி ராய்

-

ம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்ற மாணவர் அமைப்பு ஐ.ஐ.டி மெட்ராஸின் தலைவரை அச்சுறுத்தி, அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அளவுக்கு என்ன செய்தது?

arundhati-royஅங்கீகாரம் ரத்து செய்ததற்கு சொல்லப்பட்ட காரணம் நம் கவனத்தை திசை திருப்பும் வழக்கமான மோசடி விளக்கம். அதாவது மாணவர்களிடையே வெறுப்பு பிரச்சாரத்தை தூண்டுகிறார்கள் மற்றும் மாணவர் அமைப்பின் பெயர் ‘மிகவும் அரசியல் தன்மை’ கொண்டிருக்கிறது என்று. ஆனால், இந்த காரணங்கள் விவேகானந்தா படிப்பு வட்டம் மற்றும் இதர படிப்பு வட்டங்களுக்கு இயல்பாகவே ஏனோ பொருந்தவில்லை.

இந்து மதத்தை பகிரங்கமாக இடித்துரைத்த அம்பேத்கரை ஏதோ அவர்கள் ஆள் என்பது போல இந்துத்துவா அமைப்புகளும், ஊடகங்களும் பொருத்தமே இல்லாமல் கொண்டாடி வரும் நேரத்தில்; ‘இந்து சட்டகத்துக்குள்’ தலித் மக்களை இந்து தேசியவாதிகள் “கர் வாப்சி” என்ற பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்,

ஏன் அம்பேத்கரின் உண்மையான வழித்தோன்றல்கள் மற்றும் அம்பேத்கரின் சிந்தனையை ஏற்றுக்கொண்டவர்கள் கைர்லாஞ்சியின் போட்மாங்கே குடும்பத்தினர் போன்று கொல்லப்படுகிறார்கள்?

எதற்காக அம்பேத்கர் பற்றிய பாடலை தனது அலைபேசியில் அழைப்பொலியாக வைத்ததற்காக ஒரு தலித் இளைஞர் அடித்தே கொல்லப்பட்டார்?

ஏன் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரம் ரத்தானது?

ஏனெனில் இந்த மாணவர்கள் ஆட்சியாளர்களின் பம்மாத்தை உற்று கவனித்து தங்கள் விரலை மிகவும் ஆபத்தான இடத்தில் வைத்துள்ளார்கள். தங்கள் நடவடிக்கையின் மூலம் கார்ப்பரேட் உலகமயமாக்கத்துக்கும், சாதியின் நீட்சிக்கும் இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தினார்கள்.

பகத் சிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் பிறந்தநாளையும் கொண்டாடியது அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம். இந்த ஆட்சியாளர்களை அச்சத்தில் உறைய வைக்க இதனை விடவும் வேறு எந்த ஒன்றாலும் முடியாது. இது தான் மாணவர்களின் மீதான நடவடிக்கைக்கு காரணம். இது அவர்கள் ஒழித்துக் கட்ட விரும்பும் ஒன்று.

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி மற்றும் முற்போக்கான முஸ்லிம் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதும் அவர்களை அச்சுறுத்துகிறது.

– அருந்ததி ராய்

தமிழில் – சம்புகன்

  1. குருமூர்த்தியின் குமட்டலூட்டும் இந்த்துத்துவ உரை, ஐ.ஐ.டி சென்னையில்.

  2. சரியாகத்தான் சொல்லியிருக்காப்போல! ‘வந்தே மாத்தறொம், ஏமாத்தரோம்…..’ இந்த பார்பன பிரச்சாரம் ‘தேச பக்தி’; பெரியார்-அம்பெத்கர் வட்டம் தேசவிரோதிகள்! என்ன கொடுமையடா!

  3. Thanks Sukhdev.Heard that speech by Gurumoorthi for more than 45 minutes.It was nothing but praising the past glory. “Whether it is economic development or cultural heritage in every thing India was great.Only in India there are women Gods.Only westerners called women as weaker sex etc etc”In an interview in Pudhiya`Thalaimurai yesterday(31st May)Arjun Sampath asked “IITyil Periyarukku Yenna Velai?”-Gurumoorthi in his IIT lecture was talking about the 1972 DK rally and was very proud of black shirt wearing Ayyappa Bakthas in 2015.Gurumoorthi has told the answer to Arjun Sampath.The enlightened audience has not asked Gurumoorthi as to why Sati was practiced?Why Manu has written very badly about women?Gurumoorthi was criticizing Marx for writing about India even without visiting India.But nobody in the audience asked him as to why these so called intelligent people do not relish “Mother India”by Katherine Mayo,an American lady who visited India in 1930 and wrote about the Indian society.

  4. In a debate in Sun TV,Arjun Sampath was going on repeating that the IIT students of the APSC were indulging in anti-national activities.But till the end of the programme,he could not spell out as to what were those “anti-national”activities,in spite of repeated questioning by the students and the programme coordinator.On the next day,an in-experienced person was made to talk(it looks like it was deliberately done) to Arjun Sampath in the Agni Parikshai programme of Pudhiya Thalaimurai TV.Arjun Sampath was having free time to spew venom.

  5. Hats off to APSC!
    Also, the comment box has been closed for Ramesh’s interview.
    it is very urgent and important to translate his interview into English and take it widely across.

    by the way, APSC has more in common with ம.க.இ.க. than with VCK, and it is equally unfortunate that Arunthathi Rai has not mentioned anything about Periyar. Periyar, Ambedkar, Bhagatsingh! Enough clue to prove the influence of ம.க.இ.க. on APSC!

  6. இந்திரா தன் பதவியை தக்கவைத்துக்கொள்ள, பார்ப்பனர்களின் சொல்கேட்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார், பார்பனரல்லாத மானில காங்கிரஸ் தலைவர்கள் ஒதுக்கப்பட்டனர், காமராஜர் உட்பட! ஆனால் ஊழல் புகாரில் ஒதுங்கியிருந்த டி டி கே சேர்த்துக்கொள்ளப்பட்டார்! எமெர்ஜென்சியின் போது, எல்லா எதிர்கட்சி தலைவர்களும் சிறையிலடைத்து சித்ரவதை செய்யப்பட்டனர்! முதுபெரும் காந்தியவாதி ஜெயபிரகாஷ் நாராயணன் அந்திம காலம்வரை சிறையில் அடைக்கப்பட்டார்! ஆனால் ஆர் எஸ் எஸ் இந்திராவை ஆதரித்ததால், ஜனசங்க , இன்றைய பி ஜெ பி தலைவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர்! சஞ்சய் காந்தி அரசு செயல்பாடுகளில் தலையிட்டு இஸ்லாமியருக்கு எதிரான சொல்லொனா கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டார்! பின்னர், தனது இந்துத்வா அஜெண்டாவிற்காக தன் தாயையே மிரட்ட, அகால மரணத்தில் மறைந்து போனார்!

    சஞ்சய் மறைவிற்க்குபின் இந்திரா யாரையும் நம்ப வில்லை! கமலபதி திரிபாதி,நரசிம்மராவ் இவர்களின் கைபொம்மையானார் என்றே சொல்லலாம்! அன்னிய சதியும், இந்திய துரொக குழுக்களும் சேர்ந்தே அவரை கொன்றன!

    அவருக்குபின் அவசர அவசரமாக முடிசூட்டப்பட்ட ராஜீவும், முதன்முறையாக 400 எம் பி பெரும்பாண்மை பெற்றதால் பார்பன குதியாட்டம் போட்டன! இடையில், இலங்கை தமிழனுக்கு அவர் செய்த துரொகத்தால் பழிவாங்கப்பட்டார்! இதிலெல்லாம் பின்புல சதியில் இந்துத்வா ஆதிக்க சக்தியான ஆர் எஸ் எஸ் இருந்திருக்கிறது! இன்றும் இந்திய பொருளாதாரம் அவர்கள் கையில்! இவர்களின் பினாமிகளே பொதுதுறையை நிர்வகிக்கிரார்கள்! இந்னும் முப்பது வருடங்களுக்கு உயர்னீதி மன்றமும் இவர்கள் கையில்தான்! ஊழல்வதிகள் பெரும்பாலும் இவர்களின் கூட்டாளிகளானதால் அவாளுக்கு ஆபத்தில்லை! ஆனால் சூத்திரனுக்கெல்லாம் அந்த உரிமை கிடையாது!

  7. ”கேளாத செவிகள் கேட்கட்டும்” என்று தோழன் பகத்சிங் போட்டானே அன்று ஒரு குண்டு,ஆங்கிலேயனின் பாராளுமன்றத்திலே.அது போல் இன்று போட்டார்கள் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம், அய். அய்.டி(I.I.T)யிலே.செங்குளவி கூட்டில் அல்லவா கை வைத்துவிட்டார்கள்.நேற்று தடையை விலக்கியது I.I.T-M நிர்வாகம்.வெற்றி கண்டது மாணவர் இயக்கம்( APSC).

Leave a Reply to புதுநிலா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க