privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திAPSC தடை: திருச்சி என்.ஐ.டி முற்றுகை - மோடி படத்திற்கு செருப்படி

APSC தடை: திருச்சி என்.ஐ.டி முற்றுகை – மோடி படத்திற்கு செருப்படி

-

த்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரடித் தலையீட்டின் பெயரில், சென்னை ஐ.ஐ.டியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டு மாணவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது.

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை
அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டு மாணவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது.

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான இந்தத் தடை நடவடிக்கை, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பப்பட்ட மொட்டைக் கடுதாசியின் பேரில் எந்த விசாரணையுமின்றி ஐ.ஐ.டி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டிருக்கிறது.

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை
“ஒரு மொட்டைக் கடுதாசியின் பேரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறது”

இங்கே நாட்டு மக்கள் தாங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் என அரசு உறுப்பின் ஒவ்வொரு கதவுகளையும் மனு மேல் மனுபோட்டு தட்டியும் பதில் கிடைக்காமல் இருக்கிற பொழுது ஒரு மொட்டைக் கடுதாசியின் பேரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறது. ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கான கல்வி நிலையமாக இருந்துவரும் வேளையில் சமூக பாசிசக் கொள்கைகள் மாணவர்களை உந்தித் தள்ளி போராட வைக்கிறது.

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை

இதன் மூலம் மாணவர்களை அரசியலில் ஈடுபடக்கூடாது எனக் கூறுகின்றது மோடி அரசு. இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்காலம் என்றால் எதிர்காலம் பற்றியும் அரசியல் பற்றியும் தெரிந்துகொள்வதை தடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா ?

மாணவர் அமைப்பு தடை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள், முற்றுகை போராட்டங்கள் நடத்தி வருகின்றோம்.

apsc-ban-trichy-nit-siege-by-pala-12அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவரம்பூரில் உள்ள NIT யில் 02-06-2015 அன்று காலை 10.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியோர் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தின. தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி, பேச: 8056905898

திருச்சி சட்டக் கல்லூரி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை ஐ.ஐ.டி-யில் செயல்பட்டுவரும் அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டம் ( APSC ) என்ற மாணவர் அமைப்பு தடை செய்யப்பட்டதை கண்டித்தும், தடையை நீக்கக் கோரியும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கிளை அமைப்பாளர் தோழர்.சுந்தர் அவர்களின் ( RSYF ) தலைமையில் கல்லூரி வளாகம் முன்பு இன்று (02-06-2015) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டக் கல்லூரி மாணவர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பி, மோடியின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பி, மோடியின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சட்டக்கல்லூரி, திருச்சி

Leave a Reply to saravanan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க