privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்அம்பேத்கர் - பெரியாருக்கு பணிந்தது சென்னை ஐ.ஐ.டி

அம்பேத்கர் – பெரியாருக்கு பணிந்தது சென்னை ஐ.ஐ.டி

-

அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் – பத்திரிகை செய்தி

ங்கள் மீதான தடை நீக்கப்பட்டிருக்கிறது. ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மொழியில் கூறுவதானால், எங்களது அங்கீகாரம் மீளத் தரப்பட்டிருக்கிறது.

எங்கள் மீது என்ன காரணத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டதென்பது உலகத்துக்கே தெரியும். மாணவர்களுக்கான டீன் படிப்பு வட்டத்தின் பெயரை மாற்றச் சொன்னார் என்ற உண்மை, ஒரு மொட்டைக் கடிதத்தின் மீது விளக்கம் கோரும் அமைச்சகத்தின் சட்ட விரோத நடவடிக்கை, எங்களைப் போன்ற மாணவர் குழுக்களைத் தடை செய்யவேண்டுமென்று தான் ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் பேசியதாக, பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் ஊடகங்களுக்கு அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் – இவையனைத்தும் இன்று எல்லோருக்கும் தெரியும்.

இருப்பினும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் கூற்றுப்படி இது ஐ.ஐ.டி நிர்வாகம் சுயேச்சையாக எடுத்த நடவடிக்கை. ஆகவே இது தங்களது சொந்த நடவடிக்கை என்றே ஐ.ஐ.டி நிர்வாகம் கூறிக்கொள்கிறது. அப்படித்தானே இருந்தாக வேண்டும். எங்களது அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம், ஐ.ஐ.டி யின் பெயரை அனுமதியில்லாமல் பயன்படுத்தினோம் என்பதுதானாம். அது நடத்தை விதிகளுக்கு முரணானதாம். நடத்தை விதிகள் ஏப்ரல் 18 அன்றுதான் அறிவிக்கப்பட்டன என்பதையும் எங்களது கூட்டம் ஏப்ரல் 14 அன்றே நடந்து விட்டது என்பதையும் இப்போதுதான் அவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில் நிபந்தனையற்ற முறையில் தடையை நீக்கியிருக்கிறார்கள். கடைசியில் இவ்வளவு அற்பமான ஒரு விவகாரம்தானா இது!

ஆகவே, அவர்களது விளக்கத்தின்படி இந்தத் தடைக்கும், அம்பேத்கர், பெரியார், பகத்சிங்குக்கும் தொடர்பில்லை. இந்து மதத்தின் மீதும் மோடி அரசின் மீதும் நாங்கள் முன்வைத்த விமரிசனத்துக்கும் இந்த தடைக்கும் தொடர்பில்லை. அவர்களுடைய வியாக்கியானமும் கயர்லாஞ்சி வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பும் அப்படியே ஒத்துப்போகின்றன. கயர்லாஞ்சி படுகொலைக்கும் தலித்துக்களுக்கு எதிரான சாதி ஆதிக்கவெறிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் அது சாதாரணமான ஒரு பழிக்குப்பழி வாங்கும் கொலை என்றும் என்றும் கூறுகிறது அந்தத் தீர்ப்பு.

ஆகவே, எங்களது அங்கீகாரம் மீளத்தரப்பட்ட போதிலும், நடந்தவைகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று ஐ.ஐ.டி நிர்வாகம் மறுத்து விட்டது. அவர்களிடமிருந்து அங்கீகாரத்தை வெல்ல முடிந்தது. ஆனால், மன்னிப்பை வரவழைக்க எங்களால் முடியவில்லை. “தீண்டத்தகாதோருக்கு தாங்கள் இழைத்த அநீதிகளுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோருவதற்கு ஒரு வாய்ப்பளியுங்கள்” என்று அம்பேத்கரிடம் காந்தி கோரிக்கை வைத்தாரே, அதுதான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது.

தனது தவறுக்காக வருந்துவதற்கு ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு நாங்களும் ஒரு வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் அதனை அவர்கள் ஒரு வாய்ப்பாக கருதவில்லை. மாறாக, அச்சுறுத்தலாகப் பார்த்திருக்கிறார்கள். இதற்குப் பணியக்கூடாது என்று கருதியிருக்கிறார்கள். இதில் எங்களுக்கொன்றும் ஆச்சரியம் இல்லை. “சாதி இந்து உளவியல் ‘கீழ்சாதியினரை’ ஒடுக்குவது குறித்து ஒருபோதும் குற்றவுணர்வு கொள்வதில்லை. அவ்வாறு ஒடுக்குவது தனது நியாயவுரிமை” என்றே அது கருதுகிறது என்பார் அம்பேத்கர்.

நூற்றுக்கணக்கான இசுலாமியர்களை கொலை செய்வது குறித்து குற்றவுணர்வு கொள்ளாத ஒரு மனம், கயர்லாஞ்சி, ஹசிம்புரா கொலைகாரர்கள் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் ஒரு மனம், ஒரு படிப்பு வட்டத்தைத் தடை செய்வது குறித்தா குற்றவுணர்வு கொண்டு விடும்? அது ரொம்பவும் மிகையானதொரு எதிர்பார்ப்பல்லவா?

அவர்கள் வருத்தம் தெரிவிக்கத் தயாராக இல்லை. நாங்களோ அவர்களிடமிருந்து மன்னிப்பை வரவழைக்கும் அளவுக்கு இன்னும் வலிமை பெற்றுவிடவில்லை.

நேற்று நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை சுமார் 8 மணி நேரம் நீடித்தது. ஐ.ஐ.டி சென்னையின் வரலாற்றில், மாணவர்கள், அவ்வளவு ஏன், ஆசிரியர்களே கூட இத்தனை மணி நேரம், இயக்குநருடன் பேசியதில்லை என்கிறார்கள் ஐ.ஐ.டி ஊழியர்கள்.

இந்தச் சிறிய வெற்றி நிர்வாகத்தின் நியாயவுணர்ச்சியிலிருந்து பிறக்கவில்லை. ஜனநாயக சக்திகளின் நிர்ப்பந்தம் இந்த வெற்றியை வரவழைத்திருக்கிறது.

எல்லா மாணவர் அமைப்புகளும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று ஐ.ஐ.டி நிர்வாகம் கொள்கையளவில் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்களுக்கெதிரான மனதில் வேரோடியிருக்கும் வெறுப்பு, அவ்வாறு சமமாக நடத்துவதற்கு அவர்களை அனுமதிக்காது.

ஏனென்றால் எங்களை சமமாக நடத்துங்கள் என்று நாங்கள் அவர்களிடம் மன்றாடவில்லை. மாறாக, கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக முன்தள்ளப்படும் இந்துத்துவ நடவடிக்கைகளுக்கு சவால் விடுகிறோம். எனவே எங்களைத் திருப்பித் தாக்குவதற்கு ஒரு வாய்ப்பான தருணத்தை எதிர்பார்த்து இந்துத்துவ சக்திகள் காத்திருப்பார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம்.

ஆம். அரசியல் சட்டம் இருக்கிறது, சட்டங்கள் உள்ளன, நீதிமன்றங்களும் இருக்கின்றன. இவையெல்லாம் இருப்பதன் காரணமாக நீதியும் நிலவுகிறது என்று பொருள் அல்ல. உரிமைகளை நாம் வென்றுதான் பெற வேண்டும். போராடும் உறுதியிருந்தால் வெல்ல முடியும். இந்த சிறிய வெற்றி நம்மை மெத்தனத்துக்கு இட்டுச்சென்று விடக்கூடாது. மாறாக போராட்டத்தைத் தொடர்வதற்கான உந்துதலைத் தரவேண்டுமெனக் கருதுகிறோம்.

இந்தப் போராட்டத்தில் எங்களுடன் நின்ற அனைவருக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம். சமூகத்தின் பால் நாங்கள் கொள்ளவேண்டிய பொறுப்புணர்ச்சியை இந்த அனுபவம் மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இவண்
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்
08.06.2015

  1. எந்த முகாந்திரமும் இல்லாமலே தலித்துகள் என்ற காரண்த்துக்காகவே மாணவர்கள் பலி வாங்கப்பட்டு தற்க்கொலை செய்துகொள்ளப்படும் நிலைக்கு தள்ளி விடுபவர்கள் ,இவ்வளவு பெரிய புரட்சி பன்ன உங்கள சும்மா விடுவாளா அய் அய் டி நரிகள். என்ன சூழ்ச்சி செய்ய காத்து இருக்கின்றனவோ தெரியவில்லை. அம்பேத்க்கர்,பெரியார் மாணவர் அமைப்பினர் விழிப்புடனும் இதே அளவு தீரத்துடனும் ஒற்றுமை உணர்வுடனும் முற்போக்கு சக்திகளுடன் தொடர்பிலும் இருப்பது நல்லது இல்லேனா அய் அய் டி பாம்புகள் என்ன செய்யுமோ தெரியாது….

  2. தடை நீங்கியமைக்கு வாழ்த்துக்கள். வரவேற்கிறேன்.

    // நூற்றுக்கணக்கான இசுலாமியர்களை கொலை செய்வது குறித்து குற்றவுணர்வு கொள்ளாத ஒரு மனம், கயர்லாஞ்சி, ஹசிம்புரா கொலைகாரர்கள் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் ஒரு மனம் //

    இது அதீதம். இஸ்லாமியர்களை ஐஐடி நிர்வாகம் கொன்றது என்கிறீர்களா? அல்லது இக்கொலைகள் குறித்து ஐஐடி நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி என்கிறீர்களா? ஏன் ஐஐடி நிர்வாகம் குறிப்பாக குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டும்? சென்னை பல்கலைக்கழகம் என்ன குற்றவுணர்ச்சி கொண்டது? கயலார்ஞ்சி கொலைகாரர்கள் விடுதலை குறித்து ஐஐடி நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி என எப்படி சொல்கிறீர்கள்?

    • வினவு தோழா, வெங்கடேசன் சாருக்கு புரியற மாறி வாய்ப்பாட்டு கணக்காட்டம் எழுதியிருக்கலாம்.

      சரி, நான் கொஞ்சம் டிரை பண்றேன்.

      வெங்கடேசன் சார், இந்த நாடு பேரு இந்தியா, இங்க எப்படியும் 2000 வருசத்துக்கும் மேலா இந்துத்துவம் இல்லாட்டி பார்ப்பனியம் இல்லாட்டி பெரும்பான்மை அடிப்படைவாதம், சாதியவாதம்னு ஒண்ணு இருக்கு. இவுங்களோட பொலிட்டிகல் பார்ட்டிதான் இப்ப சென்டருல ஆளும் கட்சி. அதுல யாலே புகழ் ஸ்மிருதி அம்மா அமைச்சர், அவங்கதான் ஐஐடி மெட்ராசுகிட்ட என்னடா அங்க தலைவர் மோடிய பத்தி சவுண்டு ஓவராக விடுராங்கன்னு கேட்டு, உடனே தடை. ஐஐடின்னா அங்க ஆர்.எஸ்.எஸ் ஆட்கள்தான் கான்பரன்ஸ்ஹால்ல நிரந்தரமா பேசுவாங்க. அதுல அம்பேத்கார் பெரியார் பகத்சிங் எப்படி? அக்கிரகாரத்துல மீன்வித்தா அவாளுக்கு எப்படி வருமோ அப்படி!

      குஜராத்துல முசுலீம்ச கொன்னவங்கத்தான் ஆட்சியில இருக்காங்க. அவங்கதான் ஐஐடிய தடை செய்ய கேட்டாங்க. ஐஐடி அட்மினோ இல்லை மெஜாரிட்டி பேராசிரியருங்களோ rss இல்லாமலே இந்துத்துவத்தை பண்பாட்டுல ஏத்துக்கிட்டவங்க. எல்லாம் கூட்டிப்பாத்தா கணக்குசரி. இந்த பிரஸ் ரிலீசுல சொல்லியிருக்கிற குற்றவுணர்வு கொள்ளாத மனம்கிறதுக்கான உதாரணங்க எல்லாம் அடிப்படையில ஒண்ணுதான். சம்பவம் வேற வேற இருந்தாலும். எனிவே இந்த உதாரணங்களுல ஆட்களும் கட்சியும் ஒண்ணாத்தான் இருக்கு. அத வைச்சு கூட உங்களுக்கு புரியலையா? இல்ல…?

      ஆனா பாருங்க, நீங்க அப்பாவியா கேட்டீங்களா, இல்லை பிடிக்காம கேட்டீங்களான்ன்னு மட்டும் என்க்கு தெரியல.

      • Dear Mr. Pazhaniyaandi,

        நம்ப இப்போ இருக்கறது 21 century. இதுல எது பார்பான வாதம்? பாசிsam பயரூsam அப்டின்னு உளறிண்டு .

        Don’t live in illusion. if you want money, earn a good degree and join an MNC. All opportunities are available to all persons in equal measures nowadays.

        Nobody has time to speak about outdated caste and all other things.

        Even if someone joins a normal Government school, they have all avenues — old English books, newspapers, old dictionary references , algebra books and what not?

        So the earning potential is available to one and all.

        Better move on , prove your caliber using the reservation quotas get into good college and make money.

        Don’t live with illusionary notions like Paarpaneeyam and all.

        Enough of this

    • இந்த வாசிப்பு வட்டம் மன்னிப்பு கேட்கச் சொன்னது ஐஐடி நிர்வாகத்தை. அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. அதற்கான காரணம் ஐஐடி நிர்வாகத்தின் மனம் என அறிக்கை சொல்கிறது. இந்த context இல் “நூற்றுக்கணக்கான இசுலாமியர்களை கொலை செய்வது குறித்து குற்றவுணர்வு கொள்ளாத ஒரு மனம், கயர்லாஞ்சி, ஹசிம்புரா கொலைகாரர்கள் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் ஒரு மனம்” என எழுதுவது அதீதம். இவை பெரிய குற்றச்சாட்டுகள்.

      மத்திய அரசு, மோடி, இராணி போன்றோரை முன்வைத்து இந்த வாக்கியங்களை எழுதி இருந்தால் எனக்கு பிரச்சனை இல்லை.

      • \\மத்திய அரசு, மோடி, இராணி போன்றோரை முன்வைத்து இந்த வாக்கியங்களை எழுதி இருந்தால் எனக்கு பிரச்சனை இல்லை.\\

        வெங்கடேசன் சார், மத்திய அரசு, மோடி, இராணி, ஐ.ஐ.டி நிர்வாகம் எல்லாம் ஒன்றுதான். மிக முக்கியமாக கொள்கை வடிவமைப்பவர்கள் (Policy makers) பெரும்பாலும் ஐ.ஐ.டி ஆர் எஸ் எஸ் கும்பல் தான். அது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலுமே அப்படித்தான். உங்களுக்குப் பிரச்சனை என்னவென்றால் ஐ.ஐ.டி நிர்வாகம் என்பது உயர் கல்வியின் ஓர் அங்கம்; அவர்கள் கயர்லாஞ்சி கசிம்புரா குறித்து மன்னிப்பு கேட்க தேவைதானா என்று கருதிக்கொள்கிறீர்கள். ஆனால் ஐ.ஐ.டி நிர்வாகம் அப்படிப்பட்டதல்ல. அங்கே ஆர்.எஸ்.எஸ் தான் முதன்மையானது. ஐஐடி இயக்குநரே விவேகானந்தா வாசகர் வட்டத்தில் உரைகளை நிகழ்த்தியுள்ளார். பிள்ளையாரை மஞ்சப்பையில் எடுத்துச் சென்று அமைதியாக ஆற்றில் விடுகிற வெங்கடசேனின் மனதிற்கு, அங்கு வெறியுடன் பிள்ளையார் ஊர்வலம் போவதை ஒருமுறை பார்த்தால் அனைத்தும் தெரியவரும் என்பது எனது கருத்தாகும்.

      • அம்பேத்கர் பற்றிய பாடலை கைப்பேசியில் அழைப்பொலியாக வைத்திருந்ததற்காக தலித் ஒருவரை அடித்தே கொன்றுள்ளனர் ஆதிக்க சாதி மிருகங்கள்.பார்க்க/

        http://www.thehindu.com/news/national/other-states/dalit-youth-killed-for-ambedkar-song-ringtone/article7232259.ece

        அந்த மிருகங்களிடம் வெளிப்படும் தலித் வெறுப்பும் அம்பேத்கர் பெயரை மாற்று என கொக்கரித்த IIT -M பார்ப்பன கும்பலின் தலித் வெறுப்பும் வேறு வேறு அல்ல.வெங்கடேசன்கள் விளங்கி கொள்ளட்டும்.

        • மிக மிக கொடுமை.
          அம்பேத்கர் பெயர் மேல் ஏன் அப்படி ஒரு விரோதம்.

          நாடு எங்கு போகிறது என்றே தெரியவில்லை.

          அனைவர்க்கும் கல்வியறிவு புகட்ட வேண்டும். சாதிப்பற்றின் பாதிப்புகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். வருங்கால சந்ததியினராவது இந்த சாதி பிணையில் இருந்து விடுதலை பெறட்டும்.

    • அப்பாவி முசுலிம் மக்களை கொன்ற இந்துத்துவ கும்பல் ஆட்சிக்கு வருவதற்கு சென்னை ஐ.ஐ,டி,யில் இயங்கும் இந்துத்துவ ஆதரவாளர்கள் முழு மூச்சாக வேலை செய்துள்ளனர்.மோடியின் குசராத் வளர்ச்சி என்ற பொம்மலாட்டத்தை கண்டு ஏமாந்து அவர்களுக்கு வாக்களித்த அப்பாவி மக்களும் இந்த இந்துத்துவ கும்பலும் ஒன்றல்ல.குசராத் இனப்படுகொலை பற்றி பேசினாலே கோத்ரா தொடர்வண்டி எரிப்பை காட்டி அக்கொலைகளை நியாயப் படுத்தும் அயோக்கியத்தனத்தை கூசாமல் செய்யும் மனிதப்பதர்களை இணையத்திலும் மெய்யுலகிலும் நீங்கள் காணலாம்.அவர்களும் சென்னை ஐ.ஐ,டி யை ஆக்கிரமித்துள்ள பார்ப்பன கும்பலும் வேறு வேறு அல்ல.அவர்களுக்கு கோத்ரா என்றால் இவர்களுக்கு வளர்ச்சி,2002 க்கு பிறகு குசராத்ல கலவரம் ஏதுமில்லையே போன்ற சப்பை வாதங்கள்.இப்போது சொல்லுங்கள் ”நூற்றுக்கணக்கான இசுலாமியர்களை கொலை செய்வது குறித்து குற்றவுணர்வு கொள்ளாத ஒரு மனம்” என்று சொல்வது சரியா தவறா

      கயர்லாஞ்சி குற்றவாளிகள் விடுதலையை இவர்கள் கொண்டாடுவார்கள் என்பதை புரிந்து கொள்ள அம்பேத்கர் என்ற பெயரை கண்டாலே இவாளுக்கு ஏன் பத்திண்டு வர்ரது என எண்ணிப்பார்க்க வேண்டும்.APSC என்ற பெயரை மாற்ற வேண்டும் என சொன்னது ஏன் என எண்ணிப்பார்க்க வேண்டும்.இவர்கள் விவேகானந்தா படிப்பு வட்டத்தை தலை மேல் வைத்து தாங்குவதையும் RSS சாகாக்களை அனுமதிப்பதையும் அந்த RSS கும்பல் இடைநிலை சாதிகளை அடியாட்களாக பயன்படுத்துவதையும் அதற்காக சாதி வெறியை அக்கும்பல் ஊட்டி வளர்ப்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

  3. வெறிநாய கட்டி போட்டா ரொம்ப சவுண்டா கத்துதுன்னு அத அவுத்து விட்டா நாம அந்த நாய்க்கு பயந்து அவுத்துவிட்டுட்டோமுன்னு அர்த்தமா? சவுண்டு அடங்கினா போருமுன்னுதான் அதுக்கு அர்த்தம்

    • பெயர்தான் மனிதன், ஆனால் கருத்து என்னமோ மிருகத்தனமாக அல்லவா இருக்கிரது. சோ சாட்.

  4. தமிழகத்தில் பாஜக வந்தா இந்தநாடு மரணமாகும். பார்ப்பன பயங்கர வாதிகளை தமிழ் மண்ணில் இருந்து விரட்டிட வேண்டும் பெரியார் அம்பேத்கர் வாரிசுகள் என்றூ நிறுபிக்க வேண்டும் என்ன…

  5. தென்றல், திப்பு,
    அங்கு நான் படித்தபோது கிடைத்த அனுபவம் வேறு மாதிரி இருக்கிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் நான் மேற்கோள் காட்டிய கட்டுரை வாசகங்கள், “ஐஐடி = ஆர்ஆர்எஸ்” என தென்றல் முன்வைக்கும் சமன்பாடு ஆகியவை அதீதங்கள் (exaggerations) என கருதுகிறேன்.

    இந்த அமைப்பு துண்டறிக்கைகளாக வெளியிட்ட கருத்துக்களிலும் எனக்கு முரண்பாடு உள்ளது. முக்கியமாக, “இந்து மதம் அழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்தை எதிர்க்கிறேன். அடுத்து, உலகளவில் இல்லாவிட்டாலும், இந்திய அளவில் முதன்மை கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடியும் ஒன்று. இதை பொதுப்புத்தி, அவ்வப்போது வெளியாகும் உலக-ஆசிய அளவிலான தரவரிசை பட்டியல்கள் போன்றவற்றின் அடிப்படையில் மட்டுமின்றி, எனது சொந்த அனுபவத்தில் இருந்தும் கூறுகிறேன். இந்த கோணத்தில் மேலும் விரிவாக பேச இயலும். இத்தகு சிறந்த நிறுவனத்தை, “brahminical tyranny” என ஒற்றை முத்திரை குத்தி சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    பேச்சுரிமை என்பதிலும் எனக்கு முழு தெளிவில்லை. இதன் எல்லை என்ன, பொதுவெளியில் பேசுவதற்கும், ஒரு கல்லூரியில் வெளியிடப்படும் துண்டறிக்கை ஆகியவற்றுக்கும் இடையே எல்லைக் கோடு வெவ்வேறு வகைகளில் வகுப்பட வேண்டுமோ என்றும் சந்தேகம் உண்டு. உதாரணமாக, சென்னை பல்கலை மாணவர் குழு ஒன்று, “இந்த பல்கலை ஆசிரியர்கள் மடையர்கள்” என போஸ்டர் ஓட்டுவது அனுமதிக்கப்படலாமா? பல்கலை நிர்வாகம், குழுவை அடக்கப் பார்க்குமா, அல்லது, மேலே சொன்ன கூற்று சரியா, தவறா என பட்டிமன்றம் நடத்துமா?

    இந்த விவகாரத்தில் பேச்சுரிமை, விவேகாநந்தர் படிப்பு வட்டம் x அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்ற விவாதம் போன்றவை எல்லாம் இரண்டாம் பட்சமாகவும், தெளிவற்றதாகவும், பரபரப்பு அடிப்பையில் அமைவாதாகவும் கருதுகிறேன்.

    ஒரு விஷயம் மட்டுமே அடிப்படையானதாகவும், முக்கியமானதாகவும், தெளிவானதாகவும் எனக்கு படுகிறது. அது ஐஐடி ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு (முறையானதாக) கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது. இது எனக்கு ஏற்புடையதாக உள்ளது.

  6. சார், நீங்களும் rss பிரச்சாரத்துக்கு எப்பிடியோ பலியாயீட்டீங்க. இந்து மதம் அழிக்கப்பட வேண்டும்முனு சொன்னது அம்பேத்கார். சாதி ஒழிய சாஸ்திரம் ஒழிய இந்துமதம் ஒழியணும்னு அவர் சொன்னதைத்தான் ஏபிஎஸ்சி மேற்கோள் காட்டியிருக்காங்க. இத சங் பரிவார்தான் இவங்க சொன்னதா வெறுப்ப கெளப்ப நினைக்குது.
    நெக்ஸ்ட்டு என்னன்ணு அந்த மாணவர் டீம் சொன்ன அறிக்கைய நீங்க படிச்சீங்களா இல்லை வசதிக்காக மறந்தீட்டீங்களான்னு தெரியல. அம்பேத்கர், பெரியார் பெயர் டூ பொலிட்டகல், மாத்துன்னு ஐஐடி நிர்வாகம் முன்னாடி சொன்னது, மோடி ஆட்சிய எதிர்த்து இவங்க போட்ட நோட்டீஸ் இதுதான் முதன்மைன்னு அவங்க சொல்லியிருக்காங்க. அதனால்தான் மனிதவளத்துறை என்ன நடக்குதுன்னு ஐஐடி ய கூப்ட்டு கேக்குது.

    இப்ப தடையை நீக்குறோம்னு சொல்லிட்டு முழுப்பூசணியை மறைச்சுட்டு ஏன்னமோ டெக்னிக்கல் மிஸ்அண்டர்ஸ்டேண்டிங்கன்னு முடிச்சுட்டாங்க. கடைசியா அந்த ஸ்டூடன்ட்ஸ் விட்ட பிரஸ் ரிலீசுல மேல் சாதிக்கு அவ்வளவு குத்த உணர்வு வராதுன்னு அம்பேத்கர் சொன்னதை கோட் பண்ணியிருக்காங்க. இதுக்கு மேல என்ன சார் செய்யுறது?

    மோடி குஜராத் கலவரத்துல நேரடியா ஈடுபடல, அவரென்ன துப்பாக்கி தூக்கிட்டு போய் சுட்டாரா, பெட்ரோல கொண்டு போய் எரிச்சாரா, வீடியோ ஆதாரம் எங்கன்னு கேப்பீங்களோண்ணு ரொம்ப பயமா இருக்கு சார் 🙁

    • அது அம்பேத்கர் சொன்னது என்பது தெரியும். இருந்தும், எனக்கு அந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை.

      “ஐஐடி=ஆர்எஸ்எஸ்” என்பது அதீதம் தான். எனது ஐஐடி வாழ்க்கை அனுபவம் முற்றிலும் வேறானதாக இருந்தது. அங்கு நான் மதத்தை சிறிதும் உணர்ந்ததில்லை. நான் எனது சொந்த விருப்பத்தின் பேரில் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு விடுமுறை நாட்களில் செல்வது மட்டுமே நான் உணர்ந்த மத நடிவடிக்கை என கூற முடியும்.

      இந்த அமைப்பு உருவாவதற்கு முன்பே பூசலும், பரஸ்பர வெறுப்பும் இருந்துள்ளதாக தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் இதன் கிளைகள் தான். ஐஐடி நிர்வாகத்தின் செயல்களுக்கு இந்த வெறுப்பு தான் முதன்மை காரணம். இந்துத்வ குணாதிசியம் இங்கே முக்கியக் காரணமல்ல.

      ஐஐடியில் புதிதாக வேதாந்தம் பேசிக்கொண்டு இருப்பதாக சமீபத்தில் தான் அறிந்தேன். அது பேசப்படும் இடத்தில், அம்பேத்கர்-பெரியாரும் பேசப்பட வேண்டும். அவ்வகையில் இந்த அமைப்புக்கு எனது ஆதரவு உண்டு. தடை நீக்கத்தையும் வரவேற்கிறேன்.

      மேலே சொன்னது போல, இட ஒதுக்கீடு தான் இங்கே அடிப்படை விஷயம். அதை ஆதரிக்கிறேன். மற்றவை இரண்டாம் பட்சம்தான்.

      இதற்கு மேல் விரிவாக விவாதிக்க விருப்பமில்லை. இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

  7. நான் ஒருகாலத்தில் மிகுந்த பக்தியுடன் ஆச்சார சீலனாக, ஒரு பிராமண நண்பர்களுடன் ஒன்றாக படித்தவன் தான்! எனது நண்பர்களோ சிறு வயதிலிருந்தே ஒன்றாக பழகி வந்ததால் எந்த வித்தியாசமும் பாராட்டவில்லை! ஆனால், அவர்கள் வீட்டில் புதிதாக வரும் சில முதியவர்கள் அதீதாளா, பதீதாளா என்று கேட்பார்கள்! அப்போதும் எனக்கு புரியவில்லை! ஆறாம் வகுப்பு படிக்கும்போது சமஸ்க்ருதம் படிக்க, பிராமண நண்பர்களுடன் நானும் பெயர் கொடுக்க, அந்த பொல்லாத வித்வான் என்னைக் கேட்ட கேள்வி, “சூத்திரனுக்கு எதுக்கடா சஸ்கிருதம்?”, என்னையும் எனது பிராமண நண்பரையும் சிந்திக்க வைத்தது! பக்தி சிறிது சிறிதாக விடை பெற்றது! ஆரம்பத்தில் கடவுள் இல்லை என நினைக்கவே பயந்த நாங்கள், கொஞ்சம் கொஞ்சமாக பெரியார் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தோம்! பெரியாரை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள பின்னும் முப்பது ஆண்டுகள் ஆயின! எனது முற்பொக்கு பிராமண நண்பர்கள் திருமணத்திற்கு பின்னர் மாறினர்!

    எனது மிகச்சிறிய ஏமாற்றமே பெரியாரை நாடத்தூண்டியது! தாழ்த்தப்பட்டவர்கள் கொடுமைப்படுத்தபடுவது போல எனக்கு அவமானம் நேர்ந்திருந்தால்?

    நண்பர் வெங்கடேசன் ‘கொடுத்து’ வைத்தவர்! அவருக்கு எங்கள் அனுபவம் புரியாது! அதுவும் தற்போதைய “பார்ப்பன மறு மலர்ச்சி” காலத்தில்நடக்கும் எல்லா சம்பவங்களும் தொடர்புடையவை என்பது அவருக்கு புரியாதது ஆச்சரியமே!

  8. திருத்தம்!
    நான் ஒருகாலத்தில் மிகுந்த பக்தியுடன் ஆச்சார சீலனாக, ஒரு சில
    பிராமண நண்பர்களுடன் ஒன்றாக படித்தவன் தான்!

  9. Ajaathasathru

    You should have been really ridiculous to quit bhakthi because some Sanskrit teacher discouraged you.

    All scriptures are available online. study and immerse yourself in devotion.

    If you are in politics, user periyar otherwise it is total waste of time.

  10. //“பார்ப்பன மறு மலர்ச்சி”//எந்த வெங்காயமும் கிடையாது. யாரோ ஏகாதியபத்தியத்தின் ஆதரவில் கூட்டிக்கொடுக்கும் தொழிலை பார்க்கிறார்கள்.அது தெரியகூடாது என்பதற்காக இந்துத்துவா கொள்கையை கொண்டுவருவதுதான் காரணம். இதனால் பிரச்சனைகள் திசைமாறுகிறது அல்லவா?
    இன்னும் கூட ஆழமாக சிந்திக்கவேண்டும். எ.கா. ஜப்பானை எடுத்துக்கொள்வோம்.கடவுள்+நிலப்புரவுத்துவ குணங்கள் தவீர்த்து அவர்களின் தொழிற்நுட்பவளர்ச்சி, அதனால் ஏற்பட்ட பண்பாடு,பழக்கவழக்கங்கள்,குடும்பங்களில் உள்ள உறவுமுறைகள், இயந்திர தன்மையில் இயங்கக்கூட மனிதர்கள்.கலாச்சாரத்திற்கு அடிநாதமாக இருக்ககூடிய Sex விசியங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் முன்னுக்கு பின் முரணாக உள்ளது,அவர்களின் முறை.ஒரு இயந்திர Robotட்டுகளை உருவாக்குகிற நாடு. கேவலம் நிலபிரவுத்துவ கலாச்சாரத்தின் பிரதிப்பளிப்பான ரஜினி படங்களை அவர்கள் பார்ப்பதும்,வரவேற்பதும்,அவர்களின் மத அடிப்படையில் ஆன கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், அதை வரவேற்பதும் சந்தேகமாக உள்ளது.உங்களுக்கு தெரியும் தொழில்புரட்சி எல்லாவற்றின் மத,கலாச்சாரம்,பண்பாடு,பழக்கவழக்கங்களையும் உடைத்து,மனிதனுக்கு மனிதன் சுயநலத்தை தவிர அதாவது பணத்தை தவிர ஒன்று இல்லை என்று காட்டிவிடும்.அப்படி காட்டிவிட்டால் அடுத்தது ஒரு சோசியலிச புரட்சிக்கு தாயார் நிலையில் உள்ள நிலை. இந்தநிலையில் அவர்கள் மனங்கள் வித்தியாசமாக உள்ளது.ஜப்பான் அப்படி சென்று இருக்கவேண்டிய நிலையில் இருந்து ஏன் இப்படி மாறி இருக்கிறது. ஏதோ தவறாக இருக்கிறது. தவறாக நடைப்பெருகிறது.ஏன் இன்று நமக்கு தெரிந்த சில வளர்ந்த நாடுகளின் தேர்தல் வெற்றிக்கூட சந்தேகமாக உள்ளது. பழைமைவாத கட்சியை அந்த மக்கள் ஆதரிப்பத,என்னடா நமக்கே எடுத்துக்காட்டுகாளாக இருந்த நாட்டின் மக்களின் மனங்கள் குப்பையில் எரிகிற பழைமைவாதகட்சிகளை ஆதரிப்பதும் வெற்றிபெறசெய்வதும் விசித்திரமாக உள்ளது. அதனால் எதோ தவறாக நடைப்பெறுகிறது. அந்த நோய்தான் இப்பொழுது இந்தியாவுக்கும் வந்து இருக்கிறது.

  11. நன்றி! கிருஷ்ணன் அவர்களே! ஒரு கவுதமன், பிண ஊர்வலத்தை பார்த்து, மரணத்தின் இன்றியமையாமையை உணர்ந்து, புத்தனானது போல, எனக்கு கடவுள், மதங்கள் பற்றி, மேலும் மேலும் அறிய ஆவலேற்பட்டது! பெரியார் கலந்து கொண்ட, ஒரு தனியார் நிகழ்ச்சியில், நான் கடவுள் வாழ்த்து பாட, “அன்பே தெய்வம்” என்ற பாடல், பெரியார் அதை கூர்ந்து கேட்டு , அன்பே வடிவமாக, கடவுளை கும்பிட்டால் எனக்கு என்ன வேலை? என்றுஅதைப்பற்றி பத்து நிமிடங்களுக்கு பேசினார்! அவரின் அந்த உயர்ந்த பண்பே என்னை அவர்பால் ஈர்த்தது! மதவாதிகள் பித்தலாட்டமாக, உழைக்கும் பாமரரை சுரண்டவே , கடவுள் கதைகளை புனைந்தனர் என்பது புரிந்தது! இந்து மத புனிதம், அய்யா ராமானுஜ தாத்தாச்சாரியாரின் வாக்குமூலத்தால் தகர்ந்தது! கிரித்துவம் அன்பர் வீரமணியின் “பகுத்தறிவு சுவடுகள்” மூலம் அம்பலமானது!

    இன்னமும் நான் வள்ளலாரின் நேர்மையையும், பெரியாரின் வெளிபடையான, தெளிவான கொள்கை யையும் வியந்து பாராட்டுகிறேன்! காரல் மார்க்ஸ் படித்த பின்னரும் , இவர்களது கருத்துக்கள் முறண்பட்டதாக தெரியவில்லை! காம்ரேடுகளின் பார்ப்பன தலைமை அவர்களை மூளைச்சலவை செய்து வேதகாலத்துக்கு இட்டுசெல்லுமே ஒழிய புரட்சிக்கு உதவாது!நக்சல்பாரி இயக்க பரவலை ஒடுக்கவே இவர்களை கூட்டணி கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும்! ஏழைக்கு எந்த பலனும் இல்லை! இந்தியாவின் பன்முக கலாச்சார, மொழி, இன பிரிவுகளை அங்கீகரிக்காமல், மத்திய ஆளும் பார்பன சக்திகளுக்கு துனை போவதில் இவர்கள் அம்பலப்பட்டுவிட்டார்களே! தீக்கதிரில் திருவாளர் நம்பூதிரி பாட் எழுதிய “ஆரிய மாயையா-திராவிட மாயையா?” படித்த பொழுதே உணர்ந்து கொண்டேன்; பின்னர் அதற்கு பதில் திராவிடர் கழகம் அதே தலைப்பில் மறுப்புநூல் வெளியிட்டு இவர்களது திரிபு வாதத்தை அம்பலமாக்கியது! இவர்களைப்பற்றி பெரியாரின் கருத்து சரியானதே!

Leave a Reply to பழனியாண்டி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க