privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மேகி முதலாளிகளை கைது செய் - திருச்சி பெ.வி.மு

மேகி முதலாளிகளை கைது செய் – திருச்சி பெ.வி.மு

-

  • உணவில் நச்சு ரசாயனங்கள் கலப்படம், குழந்தைகளுக்கு இரைப்பை புற்றுநோய்!
  • நெஸ்லே – மேகி நூடுல்ஸ், ரிலையன்ஸ் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உள்ளிட்ட பெரும் முதலாளிகளை கைது செய்!

என்ற முழக்கங்களுடன் 08-06-2015 திங்கள் காலை 10.30 மணிக்கு பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள ரிலையன்ஸ் மெகா மார்கெட் கடை முன்பு மேகி மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்களை தீயிட்டு கொளுத்தி முற்றுகையிட்டு சிறுவர், சிறுமியர் உட்பட 28 பேர் கைதாகினர்.

trichy-protest-maggi-noodles-corporate-food-14மேற் கூறிய தலைப்பில் எரிப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அன்று காலையிலேயே  நூற்றுக் கணக்கான சுவரொட்டிகளை திருச்சி புறநகர் பகுதி முழுவதும் ஒட்டியதால் மக்கள் மத்தியில் விரிவாக பிரச்சாரம் ஆனது.

trichy-protest-maggi-noodles-corporate-food-01சுவரொட்டியில் தரப்பட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, “ஏம்மா ஏங்கமா எரிக்கப் போறீங்க டவுன்க்கு உள்ளேயா அவுட்டரிலா? கொஞ்சம் சொல்லுங்கம்மா” என்று “க்ளூ குடுங்க” என்பது போல கேட்டது கியூ பிரிவு போலீஸ்.

trichy-protest-maggi-noodles-corporate-food-06“ஏங்க சார், அனுமதி கேட்டா மட்டும் நடத்த விட்டுடுவீங்களா? வந்து 10 நிமிசத்துக்குள்ள வேனில் ஏத்துறீங்க. அதனால இடத்தைச் சொல்ல முடியாது” என்றதும், வேறு தோழர்களின் போனை தொடர்பு கொண்டு, “தோழர் நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க” என்று தகவலை அறிய கடும் முயற்சி செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

நாம் திட்டமிட்டபடி அரியமங்களம் ரைஸ் மில் பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் மெகா மார்க்கெட் கடை முன் எரிப்பு நடத்த தருணம் பார்த்து கொண்டிருந்த போது முன்னெச்சரிக்கையாக ரிலையன்ஸின் உள்ளே இரு காவல்துறை வாகனங்கள் பாதுகாப்பிற்கு தயாராக நின்றன.

ரிலையன்ஸ் மெகா மார்க்கெட்டுக்கு எதிரே ஒரு சந்துக்குள்ளிருந்து சிவப்பு பதாகையுடன் பேனர் முழக்கத் தட்டி போன்றவற்றுடன் ஆக்ரோசமாக முழக்கமிட்டு சிறுவர், சிறுமியர், பெண் தோழர்கள் தோழர் நிர்மலா தலைமையில் ரிலையன்ஸ் வாசலை நோக்கி பாய்ந்தனர்.

trichy-protest-maggi-noodles-corporate-food-07காவல் துறையினர் இந்த சிறுவர் படையை பார்த்து மிரண்டு ஓடிச் சென்று ரிலையன்ஸ் மார்க்கெட்டின் கேட்டை இழுத்து சாத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

காத்திருந்த பத்திரிகையாளர்கள் தோழர்களை சூழ்ந்துகொண்டனர். சிறுவர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தை கேமராவில் பதிய வைத்தனர், தோழர்களிடம் பேட்டி எடுத்தனர். தோழமை அரங்குகளின் தோழர்களும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களும் உடனிருந்து போராட்டத்தை உற்சாகப் படுத்தினர்.

மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சிறுவர்கள் எரிக்க முயன்றபோது, நாட்டுச் சொத்தை பாதுகாப்பது போல் காவல் துறையினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத நேரம் இரு சிறு தோழர்கள் கோக், பெப்சி பாட்டிலை தூக்கிபோட்டு காலால் பந்தாடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதன் பிறகு அரைமணி நேரத்துக்கு மேல் போராட்டம்  நடத்தப்பட்டது. பொதுமக்கள் இந்த பரபரப்பான சூழலை ஓடிவந்து நின்று பார்த்தனர்.

சாலையில் வண்டியில் சென்ற ஒருவர் இறங்கிவந்து தனது போனில் புகைப்படம் எடுத்தார். அந்த பரபரப்பினூடே ரிலையன்ஸின் ஊழியர் ஒருவர், நமது பேனரில் உள்ள முழக்கத்தை படம் பிடித்தார். உடனே காவல்துறை “போப்பா, ஏற்கனவே கண்டிச்சு போராட்டம் நடத்துறாங்க இதுல நீ வேற போட்டோ எடுக்கிற” என்றார்.

அதன்பிறகு “சரி இப்படியே முடிச்சிட்டு போறீங்களா?” என நமது  தோழர்களிடம் கேட்டனர், அதற்கு மறுக்கவே அனைவரையும் வேனில் ஏற்றினர்.

பிறகு ரிலையன்ஸ் மார்க்கெட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்த காவல்துறையினர் அனைவருக்கும் உள்ளே அழைத்து சென்று சிறப்பு விருந்து கொடுத்தது ரிலைன்ஸ் நிர்வாகம்.

trichy-protest-maggi-noodles-corporate-food-23நம்மை அருகாமையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், கூட்டிப் போய் வைத்தனர். மண்டப நிர்வாகி, பீதியாகி மின்சாரத்தை நிறுத்தினார். அங்கு நாற்காலிகள் இருந்தும் அதனை எடுத்து போடாமல், “கீழே அமருங்கள்” என்றனர் காவல்துறையினர்.

உடனே தலைமைத் தோழர்கள் காவல்துறை ஆய்வாளரிடம், “உட்கார முதலில் நாற்காலி எடுத்து போடச் சொல்லுங்க, மின்சாரத்தை போடச் சொல்லுங்க, குழந்தைகளை வைத்து கொண்டு வெக்கையில் இருக்க முடியாது”, என்றதும் காவல்துறையை சார்ந்தவர் “இல்லம்மா, கரண்டு பில்லு யாரு கட்டுவான்னு கேக்குறாரு” என்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதற்கு தோழர்கள் “சார், அது உங்க வேல. கரண்டப்பத்தி காசப்பத்தி நீங்கதான் பேசணும்” என்றதும் மின்சாரம் போட்டு விட்டனர். நாற்காலி போடப்பட்டு அனைவரும் அமர்ந்தனர்.

மண்டபத்தில் பாடல் பாடி, தோழர்களுக்கு மேகி நூடுல்ஸை மட்டுமல்லாது, புதிய கலாச்சாரம் 2012 கட்டுரை குப்பை உணவு தொப்பை வயிறு சப்பை மூளை கட்டுரையில் உள்ள நொறுக்குத் தீனி அபாயங்களை விளக்கிய போது காவல்துறையினரும் ஆர்வமுடன் கவனித்தனர்.

“தேசத்துரோகி ஆகணுன்னா பெப்சிய குடி,
வெள்ளக்காரன் வாரிசாகணுன்னா கோலா குடி
பெப்சி கோக் மிராண்டா, குடிச்சா
பெரியாஸ்பத்திரி வராண்டா,
சொன்ன பேச்ச கேக்கலன்னா சுண்ணாம்பு தான்டா,”

எனும் பாடல்களும் பாடி உற்சாகப்படுத்தினர்.

trichy-protest-maggi-noodles-corporate-food-02போராட்ட அனுபவத்தை கேட்டபோது, சிறுவர்கள், “எமக்கு போலீசை பார்த்து பயம் வரவில்லை” என்றனர். வருங்காலத்தின் போராளிகளின் போர்குணம் பிரமிப்படைய வைத்தது. அன்று மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முழக்கங்கள்

trichy-protest-maggi-noodles-corporate-food-16விரட்டியடிப்போம் ! விரட்டியடிப்போம் !
குழந்தைகள் உயிரை காவு வாங்கும்
நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ்
ரிலையசின் பாக்கெட் உணவை
விரட்டியடிப்போம் ! விரட்டியடிப்போம் !

குழந்தைகளின் உணவிலே
விஷம் கலந்து லாபம் பார்க்கும்
பன்னாட்டு முதலாளிகளை
கைது செய் ! கைது செய் !

துணைபோகாதே ! துணைபோகாதே !
தமிழக அரசே ! துணைபோகாதே !
தற்காலிக தடை போட்டு
முதலாளிகளின் லாபவெறிக்கு
துணைபோகாதே ! துணைபோகாதே !

குப்பை உணவு, தொப்பை வயிறு
சப்பை மூளை உருவாக்கும்
பன்னாட்டு கம்பெனிகளை
விரட்டியடிப்போம் ! விரட்டியடிப்போம் !

தரக்கட்டுப் பாட்டு சட்டங்களை
கால்தூசுக்கு நிகராக
குப்பையில் போடும் முதலாளிகளை
கைது செய் ! கைது செய் !

கோக், பெப்சி குளிர்பானங்கள்
உயிரைக் குடிக்கும் எமன்கள்
மேகி நூடுல்ஸ் வகையறாக்கள்
உணவல்ல குப்பைகள்
துரித உணவு என்ற பெயரில்
உழைக்கும் மக்களே, ஏமாறாதீர் !

உணவே மருந்து, மருந்தே உணவு.
பாரம்பரிய உணவு பழக்கத்தை
உயர்த்தி பிடிப்போம் ! உயர்த்தி பிடிப்போம் !
ஏகாதிபத்திய பண்பாடு மீது
காறி உமிழ்வோம் ! காறி உமிழ்வோம் !

செய்தி:

பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி.