privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஉலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை

உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை

-

ன்னுடைய மாத வருமானம் ஆயிரம் ரூபாயா? அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அன்றாடம் பார்க்கிறாயா? அப்படியானால் நீ வலையில் சிக்குவதைத் தடுக்க முடியாது.

– ஒரு ஹாங்காங் கப்பல் முதலாளி

சீனத் தொழிலாளி
கள்ளத் தோணிதான் தன்னைச் சொர்க்கத்தில் சேர்க்க முடியும் என்று முடிவு.

சென் கான் திங் 20 வயது இளைஞன். அவனது மாத வருமானம் ஆயிரமல்ல, ஆறாயிரம் ரூபாய். சீனாவின் பியூஜியான் மாநிலத்திலுள்ள ஒரு சிற்றூரில் உணவு விடுதி நடத்தி வந்தான். மீன் மொத்த வியாபாரம் செய்து பணக்காரனாகி விடலாம் என்று முயன்று சேமித்த பணத்தைத் தோற்றான்.

எனினும் சோற்றுக்கே வழியில்லாமல் போய்விடவி்ல்லை. சொந்த வீடு, தொலைபேசியுடன் தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது. எனவே அந்தக் கப்பல் முதலாளி சொன்னதைப் போல ”வலையில்” விழுந்தான். எப்படியாவது அமெரிக்கா சென்று முன்னேறிவிட வேண்டும் என்ற வெறி அவனைப் பிடித்துக் கொண்டது.

சட்டபூர்வமான முறையில் தன்னை அமெரி்க்காவுக்கு ஏற்றுமதி செய்து கொள்வதற்கு அவன் ஒரு மருத்துவரோ, கணினி வல்லுனரோ அல்ல; சாதாரணத் தொழிலாளி. எனவே கள்ளத் தோணிதான் தன்னைச் சொர்க்கத்தில் சேர்க்க முடியும் என்று முடிவு செய்தான்.

பாஸ்போர்ட்டும் விசாவும் இல்லாமல் அமெரிக்க சொர்க்கத்திற்கு மனிதர்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் கைதேர்ந்தவர்களான ”பாம்புத் தலையர்கள்” (Snake heads) என்ற சீன மாஃபியாக் கும்பலை அணுகினான்.

17,000 கிலோ மீட்டர் கடல் பயணம், 18 லட்சம் ரூபாய் கட்டணம். அமெரிக்காவில் ஆள் இறங்கியவுடன் பணத்தை சீனாவில் தந்துவிட வேண்டும். இந்த அபாயகரமான பயணத்திற்குத் தன் தாய் சம்மதிக்க மாட்டாள் என்பதால் மகனும் தந்தையும் சேர்ந்து ரகசியத் திட்டம் தீட்டினர். ஒருநாள் இரவு கடையை மூடியவுடன் நேரே கடற்கரைக்குக் கம்பி நீட்டினான் சென்.

***

து ஒரு பழைய சண்டைக் கப்பல். அந்தக் கப்பலில் ஒரு சரக்குப் பெட்டகத்தை வாடகைக்குப் பேசியிருந்தார்கள் பாம்புத் தலையர்கள். 40 அடி நீள சரக்குப் பெட்டகத்தில் 100 பேர். அவர்கள் யாருக்கும் ஒருவரைரொருவர் அறிமுகம் கிடையாது. எனினும் அவர்களின் லட்சியம் ஒன்றே. அமெரிக்கா – பணம் – முன்னேற்றம். இந்த ‘லட்சியவாதிகளில்’ சில பெண்களும் ஒரு மூன்று வயதுக் குழந்தையும் அடக்கம்.

சரக்குப் பெட்டியில் பயணம்
சரக்குப் பெட்டியில் பயணம் (படம் விளக்கத்துக்கு மட்டும்)

சரக்குப் பெட்டிக்குச் சன்னல் கிடையாது. ஒரு மின்விசிறி மட்டும் உள்ளிருந்து காற்றை வெளியேற்றிக் கொண்டிருந்தது. இரண்டே கழிப்பறைகள். எக்காரணம் கொண்டும் பெட்டிக்கு வெளியே யாரும் வரக்கூடாது. ஒருவர் அடுக்கி வைத்தாற்போலத்தான் தூங்க முடியும். சில நாட்களுக்கு ஒருமுறை உணவுப் பொட்டலத்தையும் தண்ணீரையும் உள்ளே எறிவார்கள். வாரத்திற்கு ஒருமுறை மேல்தளத்திற்கு வந்து உப்புத் தண்ணீரில் குளித்துக் கொள்ளலாம்.

தினமும் இரவு நேரத்தில் இரண்டு பெண்களை மேல்தளத்திற்கு வரச் சொல்வார்கள் பாம்புத் தலையர்கள். காலையில் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். என்ன நடந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அது தங்கள் இலட்சியத்திற்கு அவர்கள் கொடுக்கும் விலை.

தாங்கள் ஏற்றிச் செல்லும் சரக்குகள் மனிதர்களாயிற்றே என்பதற்காக அந்த மாஃபியாக் கும்பல் இரக்கமெதுவும் காட்டவில்லை. மனைவி குழந்தையுடன் அமெரிக்க சொர்க்கத்திற்குப் பயணம் புறப்பட்ட கணவன் ஒருவன் வாந்தி பேதி கண்டு இறந்தான். அழுகிய தக்காளியைப் போலக் கடலில் வீசப்பட்டான். என்றாலும் என்ன? அநாதைகளான மனைவியும் குழந்தையும் சொர்க்கத்தை நோக்கித் தம் பயணத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தப் பயணம் முடியவே முடியாதோ என்ற அச்சம் சென்னுக்கு ஏற்பட்டது. புயலுக்கும், சூறாவளிக்கும் இடையில் மரணத்துடன் போராடியபடியே 35 நாட்கள் இடைவிடாத பயணம், இறுதியாக வட அமெரிக்கக் கண்டத்தின் தென் முனையில் உள்ள கவுதமாலா நாட்டின் கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தது கப்பல்.

மனிதர்கள் கடத்தல்
“இந்தப் பயணம் முடியவே முடியாதோ”

இடுப்பளவு தண்ணீரில் எல்லோரும் இறக்கி விடப்பட்டனர், நள்ளிரவில் நடுக் கடலில் குளிரில் விறைத்தபடியே படகுகள் வருவதற்காகக் காத்து நின்றனர். ஐந்து படகுகளில் அனைவரும் ஏற்றப்பட்டனர். படகுகளை அந்நாட்டின் கடற்காவல் படை துரத்தத் தொடங்கியது. ஒரு படகு கவிழ்ந்து 12 பேர் இறந்தனர். மற்றவர்களுக்கோ அவர்களைத் திரும்பி பார்க்கக்கூட நேரமில்லை. இன்னொரு படகு கரை சேர்ந்தவுடனே போலீசு 36 பேரை கைது செய்தது.

மீதமிருந்தவர்கள் ஒரு மாஃபியா தலைவரின் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நிலவறையில் அடைக்கப்பட்டனர். போலீசு கெடுபிடி குறையும் வரை வெளியே வரமுடியாது என்பதால் ஒரு மாதம் சென்னுக்கும் மற்றவர்களுக்கும் அங்கே சிறைவாசம்.

சீன விவசாயிகளின் வாழ்க்கையைக் காட்டிலும் படுமோசமான, வறிய வாழ்க்கையை கவுதமாலா விவசாயிகள் அனுபவிப்பதை சென் அங்கே கண்டான். சீன விவசாயிகளைக் காட்டிலும் தனது ஊரில் சென் பெற்றிருந்த வசதிகள் எவ்வளவோ அதிகம். ஆனால் சோற்றைத் தேடியா அவன் அமெரிக்கா போகிறான்? சொர்க்கத்தைத் தேடியல்லவா இந்தப் பயணம்.

ஒரு மாதம் நிலவறையில் சிறைவாசம். பிறகு சென்னும் அவனுடன் 24 பேரும் ஒரு லாரிக்குள் திணிக்கப்பட்டனர். அது மெக்சிகோவுக்கு திராட்சைப் பழம் ஏற்றிச் செல்லும் லாரி. லாரி நிறைய சரக்கிருந்தது. அடியில் ஒரு அடி உயரத்தில் ஒரு ரகசியத் தளம். அதில் மல்லாந்து படுத்தபடியே 40 மணி நேரப் பயணம். தண்ணீர், உணவு எதுவும் கிடையாது. கை காலை அசைக்கவும் முடியாது. முகத்துக்கு இரண்டங்குலம் மேலே லாரியின் தளம். முதுகுக் கீழே கரடு முரடான சாலையால் பதம் பார்க்கப்படும் பலகைகள்.

ஆள் கடத்தல் மாஃபியா
மெக்சிகோ அமெரிக்கா எல்லையில் போலிசு கெடுபிடி அதிகமாகி இருந்தது.

சென்னுக்கு மூச்சு முட்டத் தொடங்கியது. நாட்டை விட்டுக் கிளம்பியதே தவறோ என்று தோன்றத் தொடங்கியது. ஒரு வேளை அமெரிக்கா போய்ச் சேர்ந்து விட்டால் மறுகணமே பயணத்தொகை 18 லட்சம் ரூபாயை வசூல் செய்ய பாம்புத் தலையர்கள் தன் பெற்றோரிடம் போய் நிற்பார்கள். வட்டிக்கு வாங்கி கொடுத்து விடுவதாக அப்பா சொல்லியிருந்தார். ஒருவேளை அவரால் பணம் தர முடியாவிட்டால்?

நினைக்கவே அவனுக்குக் குலை நடுங்கியது. பணம் தராதவர்களை போதை மருந்துக் கும்பலிடம் விற்று விடுவார்கள் பாம்புத் தலையர்கள். போதை மருந்துக் கும்பலிடம் சிக்கினால் மீட்சியே கிடையாது. கோஷ்டி மோதலில் சாகலாம்; போலிசில் சிக்கினால் 20, 30ஆண்டுகள் சிறை.

இல்லையென்றால் பணம் தராத பயணிகளை பாம்புத் தலையர்கள் சுட்டுக் கொன்று விடவும் வாய்ப்புண்டு. மூச்சுத் திணறி லாரியிலேயே சாகப் போகிறோமா, சுட்டுக் கொல்லப்படுவோமா என்ன வகையான மரணம் என்று அவனது மனம் அலைபாய்ந்து கொண்டிருந்த போதே லாரி நடுக்காட்டில் ஓரிடத்தில் நின்றது.

சென்னும் மற்றவர்களும் மெக்சிகோவைச் சேர்ந்த மாஃபியாக் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏற்கனவே கவுதமாலாவில் 12 பேர் இறந்து, 24 பேர் கைது செய்யப்பட்டிருந்ததால் மெக்சிகோ அமெரிக்கா எல்லையில் போலிசு கெடுபிடி அதிகமாகி இருந்தது. எனவே இரண்டு மாதங்கள் நடுக்காட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

முள்வேலிக்கு அப்பால் 'சொர்க்கம்'
முள்வேலிக்கு அப்பால் ‘சொர்க்கம்’

பின் திடீரென்று துவங்கியது பயணம். மெக்சிகோ பாலைவனத்தில் சனவரி மாதக் கடுங்குளிரில் கால்நடையாகவே பயணம். குளிர் உறைநிலைக்கும் கீழே போனது. எனினும் தீக்குச்சியைக் கொளுத்தவோ, சிகரெட் பிடிக்கவோகூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கிளம்பும்போது அணிந்திருந்த பாண்ட் சட்டை தவிர யாரிடமும் வேறு உடையில்லை. குளிரைச் சமாளிக்க ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

ஆறு நாட்கள் நடந்து சேர்ந்த பின் அமெரி்க்க எல்லையின் முள்வேலி கண்ணில் பட்டது. கம்பியை வெட்டி 25 பேரையும் சொர்க்கத்திற்குள் தள்ளி விட்டார்கள் மெக்சிகோ மாஃபியாக்காரர்கள். கறுப்புநிற வேன் ஒன்று அவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு பறந்தது.

முதன்முதலாக அமெரி்க்க நகரமொன்றைப் பார்த்தான் சென். அது ஹூஸ்டன். அங்கிருந்து மறுநாள் லாஸ் ஏஞ்செல்ஸ் பயணம். லாஸ் ஏஞ்செல்ஸை அடைந்தவுடன் ஒரு அறைக்குள் அவனைச் சிறை வைத்தார்கள் பாம்புத் தலையர்கள். அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்துவிட்ட செய்தியை தொலைபேசி மூலம் சீனாவில் உள்ள பெற்றோருக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள்.

மகனுடையே குரலைக் கேட்டவுடனே தொலைபேசியிலேயே கதறி அழத்தொடங்கினாள் அவன் தாய். கள்ளத் தோணியில் சென்ற 12 சீனர்கள் கவுதமாலா அருகே கடலில் மூழ்கி இறந்தனரென்று செய்தித்தாளில் படித்தது முதல்,தனது மகனும் இறந்திருப்பானோ என்று இரண்டு மாதங்களாக அழுது கொண்டிருந்த தாய்க்கு மகனின் குரல் ஒரு ஆறுதல். தந்தைக்கோ அச்சம்.

'கள்ளத் தோணி' தொழிலாளர்கள்
சீனர்கள் வசிக்கும் பகுதியைக் கண்டுபிடித்து, ஒரு சீன முதலாளி நடத்தும் உணவு விடுதியில் வேலை.

பாம்புத் தலையர்களின் ஆட்கள் வருவார்கள். அமெரிக்காவில் ஆளைச் சேர்த்தவுடனே 18 லட்ச ரூபாய் தந்துவிட வேண்டும் என்பது பழைய ஒப்பந்தம். இப்போது தங்களது சரக்குகளில் 12 இறந்து போய்விட்டதாலும் 28 போலீசில் பிடிபட்டு விட்டதாலும் கட்டணத்தைக் கூட்டிவிட்டார்கள் பாம்புத் தலையர்கள். 25 லட்சம் ரூபாய் தரவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சென்னுக்கு ஆபத்து.

அலைந்து திரிந்து கந்து வட்டிக்குக் கடன் வாங்கி 25 லட்சம் ரூபாயைக் கொடுப்பதற்கு அவருக்கு இரண்டு வாரங்கள் தேவைப்பட்டது. அதுவரை லாஸ் ஏஞ்செல்சில் சிறை வைக்கப்பட்டிருந்த சென், பணம் கைமாறியவுடனே நியூயார்க்கில் கொண்டு விடப்பட்டான்.

நகரம் முழுவதும் அலைந்து திரிந்து சீனர்கள் வசிக்கும் பகுதியைக் கண்டுபிடித்து, ஒரு சீன முதலாளி நடத்தும் உணவு விடுதியில் வேலைக்கும் சேர்ந்து விட்டான். பாத்திரம் கழுவ வேண்டும். காய்கறி நறுக்க வேண்டும். ஒருநாளைக்கு 13 மணி நேரம் வேலை, மாதம் 1400 டாலர் (ரூ 70,000) சம்பளம்.

chinese-workersவாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி கடன் அடைக்க பெற்றோருக்கு பணம் அனுப்புகிறான். 25 லட்சம் ரூபாய் கடனும் வட்டியும் எப்போது அடையும்? மிக வேகமாக அடைத்தாலும் 8, 10 ஆண்டுகள் ஆகலாம்.

அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அவன் ஒரு கள்ளத்தோணி. பிடிபட்டால் திருப்பி அனுப்பிவிடுவார்கள். என்ன கொடுமை நடந்தாலும் கடை முதலாளியை எதிர்த்துப் பேச முடியாது. எதிர்த்தால் அவன் போலீசுக்கு காட்டிக் கொடுத்து விடுவான்.

எனினும் சென்னுக்கு மட்டும் இந்த நிலைமை இல்லை. அந்தச் சிறிய கடையில் அவனுடன் வேலை செய்யும் 17 சீனர்கள், 5 வங்காள தேசத்துக்காரர்கள், ஒரு இந்தியன் எல்லோரும் ‘கள்ளத்தோணிகள்’ தான் என்பதில் அவனுக்கு ஒரு ஆறுதல்.

நினைத்துப் பார்த்தால் நாம்தான் இந்தச் சாகசத்தைச் செய்தோமா என்று அவனுக்கே சந்தேகம் வருகிறது. 14,000 கிலோ மீட்டர் கடல் பயணம், கவுதமாலாவில் சிறை, மெக்சிகோ காட்டில் இரண்டு மாதம், பாலைவனத்தில் நடைபயணம், கடைசியில் மொழி தெரியாத பண்பாட்டால் வேறுபட்ட அறிமுகமான மனிதர்களே இல்லாத இந்த நாட்டில், அமெரிக்காவில் ஒரு வேலை!

இனி வாழ்க்கை எப்படிச் செல்லும்? குடியுரிமை கிடைக்குமா, திருமணம் உண்டா, குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அவர்களை என்ன செய்வது, வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை தாய்நாடு செல்ல முடியுமா, பெற்றோர்களைப் பார்க்க முடியுமா… தெரியாது. இந்தக் கேள்விகள் எதற்கும் அவனுக்கு விடை தெரியாது.

இப்போதைக்கு அவனுக்கு தெரிவது ஒன்று மட்டும்தான். அவன் வெற்றிகரமாக வந்து சேர்ந்து விட்டான். டாலரைத் தொட்டுப் பார்த்து விட்டான்.

***

ரு வகையில் சென் அதிருஷ்டசாலி என்றே சொல்ல வேண்டும். அதே பியூஜியான் மாநிலத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் புறப்பட்ட 18 வயது ஜின் சிகாய் ஒரு ‘துரதிருஷ்டசாலி’

தொலைபேசி மெக்கானிக்கான ஜின் தரைவழியே இங்கிலாந்து செல்ல பாம்புத் தலையர்களிடம் 15 லட்ச ரூபாய் கொடுத்திருந்தான். பீகிங்கிலிருந்து ரயிலில் மாஸ்கோ; அங்கிருந்து லாரி, குதிரை வண்டியில் செக்கோஸ்லோவாகியா, அங்கிருந்து அப்படியே ஜெர்மனி, ஹாலந்து வழியாகச் செல்ல தேவையான போலி ஆவணங்களைத் தயாரித்திருந்தார்கள் பாம்புத் தலையர்கள்.

dead-in-containerகைச் செலவுக்குப் பணம் அனுப்புமாறு ஜூன் 10-ம் தேதி ஹாலந்திலிருந்து வீட்டுக்குப் போன் செய்தான் ஜின். ”தொண்ணூறு சதவீதம் பயணம் முடிந்து விட்டது. ஹாலந்திலிருந்து பெல்ஜியம், பிறகு இடையிலிருப்பது ஆங்கிலக் கால்வாய். அதைக் கடந்தால் இங்கிலாந்துதான்.” பெற்றோர்களுக்குப் பெரு மகிழ்ச்சி.

ஆனால் ஜூன் 18-ம் தேதி இங்கிலாந்திலிருந்து வெளியான செய்தி சீனாவையே அதிர்ச்சியிலாழ்த்தியது.

பெல்ஜியத்திலிருந்து தக்காளி ஏற்றிவந்த சரக்குப் பெட்டகத்தைச் சந்தேகத்தின் பேரில் சோதனை போட்டார்கள் பிரிட்டிஷ் சுங்க இலாகா அதிகாரிகள். தக்காளிகளை நகர்த்திவிட்டுப் பார்த்தால் ஒன்றன்பின் ஒன்றாக 54 மனித உடல்கள். அனைவரும் சீனர்கள்.

பெட்டகத்திலிருந்த ஒரேயொரு சன்னலும் வெளிப்புறமாக மூடிக் கொண்டு விட்டதால், மூச்சுத் திணறி, பெட்டகத்தின் சன்னலை மோதித் திறக்க முயன்று தோற்று, உடலில் நீர்வற்றி அதைச் சமாளிக்க தக்காளிகளைக் கடித்து உறிஞ்சி அதுவும் பயனின்றி மூச்சுத் திணறி துவண்டு செத்திருக்கிறார்கள்.

செத்தவர்கள் பெயரென்ன ஊரென்ன இந்தப் பெட்டகத்தை யார் யாருக்கு அனுப்பினார்கள் என்று எந்த விவரமும் தெரியாது. பிணங்களின் புகைப்படத்தைப் பார்த்துத்தான் தன் மகனின் மரணத்தை உறுதி செய்து கொண்டார்கள் ஜின்னின் பெற்றோர்கள்.

இது ஒரு துரதிருஷ்டசாலியின் கதை.

***

பிரான்சு நாட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள கிராமம் சான்கேட். ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஜரோப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்கள் புனிதயாத்திரைக்கு வந்த பக்தர்கள் போல அந்தக் கிராமத்தில் குழுமியிருக்கிறார்கள். ஒரே கூரையின் கீழ் உலகின் அனைத்து மொழிகளும், கலாச்சாரங்களும் உயிருடன் காணக் கிடைக்கும் அருங்காட்சியகம் அது. உண்மையான உலக கிராமம்.

கடவுச்சீட்டும் நுழைவுச் சீட்டும் இல்லாமல் இங்கிலாந்துக்கும், அங்கிருந்து அமெரிக்காவுக்கும் செல்லச் காத்திருக்கும் அந்தப் பயணிகளுக்காக செஞ்சிலுவை சங்கம் ஒரு மண்டபம் கட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த பெட்டகச் சாவுகளைப் பார்த்த பிறகும் இத்தகைய அபாயகரமான பயணம் குறித்து அவர்கள் அஞ்சவில்லையா?

இந்த மரணங்கள் மரத்துவிட்டன. எல்லைக் காவற்படையிடமிருந்து தப்பிப்பதற்காகப் படகின் உறைபனி நீரில் வீசியெறியப்பட்டு விரைத்துச் சாவோர் ஒவ்வொரு ஆண்டும் பலநூறு பேர். இவை கணக்கில் வராத சாவுகள். இத்தாலியின் கடற்பரப்பில் மட்டும் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 180 பேர்.

டோவர் நகரின் இந்தப் பெட்டகச் சாவு நடப்பதற்கு நான்கு நாட்கள் முன் ஒரு டச்சு அமைப்பு ‘ஜரோப்பாவில் நுழைய முயன்று இறந்தோர் இதுவரை 2000 பேர் என்று புள்ளி விவரம் வெளியிட்டிருந்தது. டோவர் சாவுடன் சேர்த்து 2054

”இது ஒரு வகையான ‘சி.என்.என் விளைவு (C.N.N-அமெரிக்கத் தொலைக் காட்சி). தங்கள் எதிர்காலத்தை அமெரிக்கக் கண்ணாடியின் வழியே பார்க்கப் பழகிவிட்டதன் விளைவு” என்று விமர்சிக்கிறார் சானகேட் நகரிலுள்ள செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரி.

”வயது இருபதாகப் போகிறது இன்னும் ஏன் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறாய். அமெரிக்கா போக வேண்டிதுதானே” என்று அறிவுரை கூறுவது சீனாவின் பியூஜியான் மாநிலத்தில் சகஜமாகிவிட்டது என்கிறார் ஒரு சீனப் பேராசிரியர்.

அமெரிக்க மோகம் பிடித்தவர்களை இந்தச் சாவுகள் அச்சுறுத்துவதில்லை. ‘சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புபவன் சாவுக்கு அஞ்சக் கூடாது’ என்று எண்ணுகிறார்கள் போலும்!ஜரோப்பவிலோ இச்சாவுகள் அப்போதைக்கு ஒரு பரபரப்புச் செய்தி. திருவிழாவில் கூழ் ஊற்றும் பண்ணையாரின் பேரப் பிள்ளைகள். கூலுக்கு அடித்துக் கொள்ளும் ஏழைகளை எப்படிப் பார்க்கிறார்களோ அப்படிப் பார்ப்பதற்குத்தான் அமெரிக்க, ஜரோப்பிய மக்களைப் பழக்கியிருக்கின்றன தகவல் தொடர்பு சாதனங்கள்.

”உலகத்தில் உள்ள ஏழைகளுக்கெல்லாம் நாங்கள் உயிர் காக்கும் படகாக முடியாது” என்று சலித்துக் கொள்கிறார் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் உழைப்பையும் இயற்கை வளங்களையும் இரண்டு நூற்றாண்டுக் காலம் சூறையாடிச் சேர்த்த சொத்தின் மீது அமர்ந்து கொண்டு இவ்வாறு பேசுவதற்கு எத்தனை திமிர் இருக்க வேண்டும்? உலகத்தையோ பரிபாலனம் செய்யும் பெரும் பொறுப்பைக் கடுகளவும் விருப்பமில்லாமல் தன் தோளில் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறும் ஏகாதிபத்தியவாதியின் கருத்து இது.

18,19-ம் நூற்றாண்டுகளில் ஆசிய ஆப்பிரிக்க அடிமைகளை வைத்துத்தான் தம் புதிய சாம்ராச்சியத்தை உருவாக்கிக் கொண்டன அமெரிக்காவும் பிரிட்டனும். இருபதாம் நூற்றாண்டில் கடினமான, ‘தரம் தாழ்ந்த’ வேலைகளைச் செய்ய கறுப்பு, பழுப்பு நிற மக்கள் இறக்குமதி செய்யப் பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் காலனி நாட்டு மக்கள் விடுதலைக்குப் போராடத் துவங்கிய பின், குடியேற்றத்தைத் தடுத்து ஜரோப்பா, சமமான குடிமக்களாக ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் தம்முடன் வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு அடிமைகள் மட்டுமே தேவைப்பட்டனர்.

***

ப்போதோ மறுகாலனியாக்கக் காலம். தமே விரும்பி மனமுவந்து வருகிறார்கள் அடிமைகள். ‘வேறு வழியின்றி’ ஏற்றுக் கொள்வது போலப் பாசாங்கு செய்கிறார்கள் ஏகாதிபத்தியவாதிகள்.

கள்ளத் தோணிகளிலும், சரக்குப் பெட்டிகளிலும் பயணம் செய்து சட்டவிரோதமாகத் தங்கள் நாட்டில் நுழையும் ஏழை நாட்டு உழைப்பாளர்களை அவர்கள் தடுக்கவில்லை. கள்ளச் சாராயத்தைப் பிடிக்கும் போலீசைப் போல அந்தப் பக்கம் திரும்பிக் கொள்கிறார்கள். அவ்வப்போது கணக்குக்கு ‘கேஸ்’பிடிக்கிறார்கள். சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தாங்கள் விரும்பாததைப் போல நடிக்கிறார்கள்.

ஈராக்கின் குழந்தைகளுக்கு ஒரு பால் பவுடர் டப்பாவோ, ஒரு மாத்திரையோ கூட செல்லவிடாமல் தடுத்து ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பட்டினி போட்டுக் கொன்ற அமெரிக்கா, சதாம் உசேனின் மாளிகையை விண்ணிலிருந்தே வேவு பார்த்து குண்டு வீசும் தொழில்நுட்ப ஆற்றல் பெற்ற அமெரிக்கா, சீனா, ரசியா போன்ற நாடுகளிலிருந்து ஒரு நபரோ ஒரு பத்திரிகையோ கூடத் தன் நாட்டில் நுழைந்துவிடாமல் இரும்புத்திரை போட்டு வைத்திருந்த அமெரிக்கா, இந்தக் கள்ளத் தோணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது எத்தகைய பித்தலாட்டம்?

”சொல்லப் போனால் இந்தச் சட்டவிரோதக் குடியேற்றத்தால் அவர்களது பொருளாதாரத்திற்கு லாபம்தான். அவர்களுக்கு மலிவான கூலியில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள். எதற்காக இந்த பிரிட்டிஷ்காரர்கள் சும்மா அலட்டுகிறார்கள்?” என்று சர்வ சாதாரணமாக குட்டை உடைக்கிறார் சான்கேட் கிராமத்தில் காவல் இருக்கும் ஒரு போலீசுக்காரர்.

ஏழை நாடுகளின் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு வேலைவாங்க முடியுமென்பதால் அங்கெல்லாம் மூலதனத்தை ஏற்றுமதி செய்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்; தம் சொந்த நாட்டில் குறைந்த கூலிக்கு எடுபிடி வேலை செய்வதற்காக ஏழை நாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதியும் செய்கின்றன.

சீனா, பிலிப்பைன்ஸ், இந்தியா, வங்காள தேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அரசுகளோ, தம் மக்கள் கள்ளத் தோணியேறி திரைகடலோடி திரவியம் தேடுவதையே விரும்புகின்றனர். அந்தியச் செலவாணி பற்றாக்குறையை ஈடுகட்ட அவர்களுக்கு டாலர் தேவை. கள்ளத் தோணியேறி அமெரிக்கா செல்லும் சீனர்கள், பியூஜியான் மாகாணத்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர்.

ஏகாதிபத்தியச் சுரண்டலால் ஏற்படும் அந்நியச் செலாவணி நெருக்கடியைக் சமாளிக்க இன்னும் கொடூரமான ஏகாதிபத்தியச் சுரண்டலால் கிடைக்கும் டாலர் பயன்படுகிறது. கந்துவட்டி கட்டமுடியாதவன் பெண்டாட்டியை அடமானம் வைத்த கதை இது.

என்ரான், போர்டு, மைக்ரோ சாப்ட் முதலாளிகள் எல்லை கடந்து எந்த நாட்டிற்குள்ளும் நுழையலாம். தொழில் தொடங்கலாம். ஆனால் தொழிலாளர்கள் எல்லையைக் கடக்கக் கூடாது. இதுதான் உலகமயமாக்கக் கொள்கையின் நீதி.

மூலதனத்திற்கு தேசம் இல்லை, அரசு இல்லை. உழைப்புக்குத் தேசம் உண்டு சுரண்டுவதற்கு; அரசு உண்டு அடக்குவதற்கு.

மூலதனம் சந்தையைக் கைப்பற்றக் கள்ளத்தோணி ஏறினால் அதன் பெயர் ராஜதந்திரம் அல்லது போர். உழைப்பு தன்னை சந்தையில் விற்றுக் கொள்ளக் கள்ளத் தோணி ஏறினால் அது குற்றம்!

குற்றவாளிகளை உள்ளூர் போலீஸ்காரன் நேசிப்பதைப் போலவே உலகப் போலீஸ்காரனும் நேசிக்கிறான். அவர்கள் அளிக்கும் இலஞ்சம் மலிவான உழைப்பு.

உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.

– சூரியன்

புதிய கலாச்சாரம், டிசம்பர் 2000

  1. //என்ரான், போர்டு, மைக்ரோ சாப்ட் முதலாளிகள் எல்லை கடந்து எந்த நாட்டிற்குள்ளும் நுழையலாம். தொழில் தொடங்கலாம். ஆனால் தொழிலாளர்கள் எல்லையைக் கடக்கக் கூடாது. இதுதான் உலகமயமாக்கக் கொள்கையின் நீதி.

    மூலதனத்திற்கு தேசம் இல்லை, அரசு இல்லை.உழைப்புக்குத் தேசம் உண்டு சுரண்டுவதற்கு; அரசு உண்டு அடக்குவதற்கு.

    மூலதனம் சந்தையைக் கைப்பற்றக் கள்ளத்தோணி ஏறினால் அதன் பெயர் ராஜதந்திரம் அல்லது போர். உழைப்பு தன்னை சந்தையில் விற்றுக் கொள்ளக் கள்ளத் தோணி ஏறினால் அது குற்றம்!//

    The above lines are the core of the article.

    if Visa is issued to individuals based on the skills(Point based system, where points shall be given to required skills), then most of Indian IT companies, who are all doing body shopping, which is very much similar to snake head gang, shall go bankrupt.

  2. ‘’Elysium’’ திரைப்படத்தின் கதையும், இந்தக் கட்டுரையும் ஒரே கருத்தையே கூறுகின்றன!

  3. கவதமாலாவில் கைதானவர் பற்றி இரு இடங்களில் எண்கள் மாறுபடுகின்றன .கவனியுங்கள

  4. மிக அருமையன பதிவு. அமெரிக்க மோகம் எந்தளவில் விடும். முதலாளிகள் தொழில் தொடங்க எங்கும் செல்லலாம் ஆனால் உழைக்கும் மக்கள் உழைக்க எங்கு செல்லவும் தடை!

    • //முதலாளிகள் தொழில் தொடங்க எங்கும் செல்லலாம் ஆனால் உழைக்கும் மக்கள் உழைக்க எங்கு செல்லவும் தடை!//

      வங்கியில் பணம் போடும் போது கேள்வி கேட்ட்க மாட்டார்கள் , லோன் கேட்கும் பொது கேட்கத்தான் செய்வார்கள் .

      அதென்ன டெபாசிட் போடும்போது கேட்கல , லோன் கேட்ட டோகுமன்ட் கேட்குறாங்க எனபது போல் இருக்கிறது

        • //Because the Capitalists are alm-givers and the workers should beg for their mercy according to Raman.//

          You very well know they allow talented people. Every country will take what it needs and sell what it has in excess..

          If they allow poor unskilled workers , they will take the jobs of poor American workers. Ofcourse capitalist will welcome cheap labor but Govt have to protect their poor citizens.

          Please let me know which communist countries have the welcome board.

  5. கட்டுரை அமெர்க்கா கொடுமைகாரன் போலவும், ஏழைகள் ஏமாந்துவிடுவது போலவும் சிதரிகிறது.

    தன மீது தன திறமையின் மீது நம்பிக்கை உள்ளவன் , அதை வைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கிறான் . அதற்கான வாய்ப்பை காபிடலிசம் மட்டுமே தருகிறது என்பதை அவன் உணருகிறான் . அதனால் தான் அவன் காபிடளிஸ்ட் நாடுகளை தேடி ஓடுகிறான் .

    மூணு வேளை பிரட்டும் , இலவச மருத்துவமும் எல்லா மனிதரையும் மகிழ வைப்பது இல்லை .

    சீனத்து இளைஞா , மாவோ போல கம்ம்யூன்சிய ஆட்சி வேண்டும் என்று ஏன் போராட வில்லை ?
    அவனுக்கு அது தேவை இல்லை . அவனுக்கு தேவை அவன் திறமையை அங்கீகரிக்கும் ஒரு சமூகம் , அவன் திறமையை கொண்டு கவுரவமாக முன்னேற ஒரு களம் . அதற்காக அவன் உயிரையும் பணயம் வைக்கிறான் .

    மிடில் கிளாஸ் சீனர்கள் அமெர்க்கா விற்கு , பிரசவ சுற்றுலா சென்று குழந்தை பெற்று குடி உரிமை பெறுகிறார்கள்

    பணக்கார சீனர்களோ ஒரு மில்லியனுக்கு வீடு வாங்கி குடி உரிமை பெறுகிறார்கள்.

    யாரும் அங்கே தூய்மை கம்ம்யோன்சம் வேண்டும் என்று கோடி பிடிக்கவில்லை.
    யாரும் தூய்மை கம்ம்யூநிசம் க்யூபாவில் , வெனிசூலாவில் இருக்கிறது என்று அங்கே தேடி செல்லவில்லை .
    அட நீங்கள் போற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரன் வட கொரியா அருகே இருந்து அங்கே போகவில்லை

    இப்போது கம்ம்யூசியம் பேசி திரிபவர்கள் ஒரு வேளை ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் ,நாளை இந்தியர்கள் கூட பர்மா போனா கூட போதும் என்று ஓடும் நிலைமை ஏற்படும்

    • Vinavu always portrays Communist countries as the best in the world. But anyone trying to migrate over there?
      Which country attracts maximum immigrants? Why?
      Had it been Australia, all the illegal immigrants would have been asked to return.
      USA needs to protect its border and should prevent all these illegal immigrants.
      Many of them are criminals; they bring drugs and spread crime.

    • இராமனின் அவதூறுகளுக்கு சில எதிர்வினைகள்!

      \\தன மீது தன திறமையின் மீது நம்பிக்கை உள்ளவன் , அதை வைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கிறான் . அதற்கான வாய்ப்பை காபிடலிசம் மட்டுமே தருகிறது என்பதை அவன் உணருகிறான் . அதனால் தான் அவன் காபிடளிஸ்ட் நாடுகளை தேடி ஓடுகிறான் .\\

      இது உண்மையெனில் சீனன் ஏன் வெளிநாட்டிற்கு ஓட வேண்டும்? இன்றைக்கு உலகிலேயே அதிக முதலீடு இடப்படுவது சீனாவில் தான். Apple, acer, Lenovo மட்டுமன்றி உலகின் அனைத்து முதலீட்டாளர்களும் சீனாவில் தான் கணிசமாக முதலீடு செய்திருக்கின்றனர். இத்தகைய முதலீடுகள் அம்மக்களுக்கு வேலை வாய்ப்பைக் கூட வழங்கவில்லை என்பது உங்களது கருத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது இல்லையா? இதை மறைத்துவிட்டு கேப்பிடலிச நாடுகளை நோக்கி ஓடுகிறார்கள் என்று எழுதினால் முதலீட்டு தத்துவத்திற்கு தாங்கள் வழங்கிய ஆதரவு வெறும் எச்சகலைத்தனமாக சுருங்கிவிட வாய்ப்பிருக்கிறதே இராமன்! கொஞ்சம் கவனித்து எழுதுங்கள்!

      \\மூணு வேளை பிரட்டும் , இலவச மருத்துவமும் எல்லா மனிதரையும் மகிழ வைப்பது இல்லை .\\

      இது குடிகாரனின் உளறல் போல் உள்ளது! இது உண்மை என்று வைத்துக்கொண்டால் சீனாவில் முதலீட்டுத்திட்டம் உங்கள் கருத்துப்படி சுரண்டிப்பிழைக்கிறது என்றாகிறது. வறுமையை ஒப்புக்கொள்கிற உங்களது வெட்ககரமான போக்கு கம்யுனிசத்தின் மீது பழிபோடுவது தான் கேலிக்கூத்தாக உள்ளது. ஏனெனில் கம்யுனிச நாடுகளில் மூன்று வேளை பிரட்டும், இலவச மருத்துவமும் வழங்கப்பட்ட காலத்தில் ஐரோப்பாவின் பல நாடுகள் பஞ்சத்தில் செத்துமடிந்தன! நேரில் துடிக்கதுடிக்க மக்களைக்கொன்றன முதலாளித்துவ நாடுகள். இது உங்களது அவதூறுக்கு மற்றொமொரு பார்வை. இது தவிர தோழர் சூரியன் சூட்டிக்காட்டுவதைப் போன்று உங்களது சாடிச மானப்பான்மையும் இங்கு வெளிப்படுகிறது. ஹைத்தியில் பிரட்டுக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் அங்குள்ள பெண்களை உங்களது முதலாளித்துவ நாடுகளின் வெறிநாய்கள் படுக்கைக்கு அழைத்தனர். அதை மறைத்துவிட்டு இங்கு டெம்ளேட்டாக அவதூறு எழுதுவதை தொழில்முறை மாமாத்தனம் என்றே மதிப்பிடுகிறேன்!

      \\சீனத்து இளைஞா , மாவோ போல கம்ம்யூன்சிய ஆட்சி வேண்டும் என்று ஏன் போராட வில்லை ?\\

      சீனா என்றில்லை, எந்த நாட்டிலும் மக்கள் கம்யுனிச ஆட்சி வேண்டும் என்று கேட்பதற்கு அங்கு ஒரு கட்சி வேண்டும். வேலைத்திட்டம் வேண்டும். வினவு போன்ற கோடிக்கணக்கான பிரச்சார பீரங்கிகள் வேண்டும். வெறும் முகத்தில் பூசும் பேர் அன்ட் லவ்லிக்கே தாங்கள் வாலை ஆட்டும் முதலாளித்துவம் 30 நொடிகளுக்கு 30 இலட்சம் செலவழித்து மக்களின் புத்தியை வடிவமைக்கிறது. மனிதவிடுதலையை பேசுவதற்கும், நாம் ஓர் அடிமை என்பதை அடிமைகள் உணருவதற்கும் விளம்பரமோ படையோ பணமோ இல்லாத கம்யுனிச கட்சிகள் எவ்வளது தூரம் உழைக்க வேண்டும் என்பதை எண்ணி பார்த்ததுண்டா? அப்படியொரு நிலை சீனா மட்டுமில்லை எல்லா நாட்டிலும் எடுக்கப்படுகிறது. இதையெல்லாம் தான் பார்க்கத் தேவையில்லை என்று சொல்கிறவனின் மனது வலியவன் என்றால் காலை நக்கு! எளியவன் என்றால் எட்டி உதை என்கிற மனோதத்துவத்தில் தான் இயங்குகிறது என்பது எனது புரிதல்! தாங்களோ சொந்த சரக்கின்றி கதைப்பவர். இதில் உங்களை எதில் கொண்டு வைத்து விமர்சிப்பது?

      \\அவனுக்கு அது தேவை இல்லை . அவனுக்கு தேவை அவன் திறமையை அங்கீகரிக்கும் ஒரு சமூகம் , அவன் திறமையை கொண்டு கவுரவமாக முன்னேற ஒரு களம் . அதற்காக அவன் உயிரையும் பணயம் வைக்கிறான் .\\

      சீனனுக்கு கம்யுனிசம் தேவையில்லை என்று மதிப்பிடுவதற்கு சீனர்கள் ஒன்றும் தனக்கு மூலம் வந்தும் கூட முதலாளித்துவமே சிறந்தது என்று அடித்து பேசுபவர்கள் அல்லர்! தாங்கள் சொல்கிற திறமையை அங்கீகரிப்பது! வேலையை தக்கவைப்பதற்காக போராடுவது, கவுரமாக வாழ வழி என்று அந்நாட்டு மக்கள் ஒருவருடத்தில் மட்டும் நாற்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். அதாவது நமது வட இந்தியாவில் ஒரு மாதத்தில் நடக்கும் போராட்டம் அது! அதை அரசியல் போராட்டமாக புரட்சிக்கான அறைகூவலாக மாற்றுகிறவர்கள் கம்யுனிஸ்டுகள். வரலாற்றில் தொழிலாளிகளும் ஆரம்பத்தில் மார்க்சியம் கம்யுனிசம் என்று தெரிந்துவைத்து எல்லாம் போராடுவதில்லை. தனக்கு வேலை கொடுக்காமல் சுரண்டிய முதலாளித்துவத்தின் கொடூரத்தின் மீதான கோபத்தை மிசின்களை உடைத்தும் காண்பித்து இருக்கின்றனர். இங்கெல்லாம் மக்களை அணிதிரட்டி கம்யுனிசத்தின் கீழ் அரசியல் போர்த்திட்டத்தை முன்வைக்கிற பொழுதுதான் தீர்வுகளும் கிடைத்திருக்கின்றன! இதுதான் கவுரமாக முன்னறே மக்கள் முன் இருக்கும் ஒரே தீர்வு!

      \\மிடில் கிளாஸ் சீனர்கள் அமெர்க்கா விற்கு , பிரசவ சுற்றுலா சென்று குழந்தை பெற்று குடி உரிமை பெறுகிறார்கள் பணக்கார சீனர்களோ ஒரு மில்லியனுக்கு வீடு வாங்கி குடி உரிமை பெறுகிறார்கள்.\\

      அமெரிக்காவில் பிரசவ சுற்றுலா சென்று குடியுரிமை பெறுவதெல்லாம் இராமனின் டூபாக்கூர்! தாங்களே சாஸ்திரிபவனில் நாயைவிட கேவலமாக கால் நிடுக்க நின்று விசா பெற்றுதான் அமெரிக்கா போக முடியும். கார்ப்பரேட்டின் எச்சகலைத்தனம் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஒருபோதும் அடுத்தவர்களுக்கு கருத்து சொல்லும் போது கவனத்தில் கொள்வதில்லை என்று கருதுகிறேன். சரி இருந்துவிட்டு போகட்டும்! இதில் மிடில்கிளாஸ் சீனன் பிரசவ சுற்றுலா சென்று அமெரிக்காவில் கீரின் கார்டு பெறுகிறானாக்கும்?

      பணக்கார சீனர்கள் மில்லியனில் வீடு வாங்குவது உண்மை. இதை சீனர்கள் மிக அழகாக தோலுரிப்பார்கள். நம்ம நாட்டு தலைவர்கள் அமெரிக்காவினுடனோ அல்லது சப்பானுடனோ சண்டைபோட மாட்டார்கள். ஏனெனில் அவர்களது சொத்துக்கள் அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கிறது என்று உண்மையை போகிற போக்கில் சொல்வதுண்டு! ஆனால் இப்பேற்பட்ட கிரிமனல்களைத்தான் அமெரிக்காவில் திறமைக்கு அங்கீகாரம், கவுரமான வாழ்க்கை என்று பூசி மொழுகியது இராமனின் வாய்!!!!

      \\யாரும் அங்கே தூய்மை கம்ம்யோன்சம் வேண்டும் என்று கோடி பிடிக்கவில்லை.
      யாரும் தூய்மை கம்ம்யூநிசம் க்யூபாவில் , வெனிசூலாவில் இருக்கிறது என்று அங்கே தேடி செல்லவில்லை .
      அட நீங்கள் போற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரன் வட கொரியா அருகே இருந்து அங்கே போகவில்லை \\

      புரட்சியைத் திட்டமாக வைக்காத கம்யுனிச கட்சி இல்லாதவரை அங்கு மட்டுமல்ல எங்கும் கம்யுனிசத்தையெல்லாம் கோரமுடியாது. ஆகையால் முட்டாள்தனமாக உளறாதீர்கள் சார்! மக்கோ தாய்லாந்து தீவுகளுக்கு செக்ஸ் டூரிசம் போகிற முதலாளிகளும் இப்படித்தான் சொல்கிறார்கள். அங்குள்ள மக்கள் யாரும் கம்யுனிசம் பேசுவதில்லை;அவ்வளவு சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று!

      \\இப்போது கம்ம்யூசியம் பேசி திரிபவர்கள் ஒரு வேளை ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் ,நாளை இந்தியர்கள் கூட பர்மா போனா கூட போதும் என்று ஓடும் நிலைமை ஏற்படும்\\

      கேவலம் ஒன்றுக்கும் உதவாத இந்திய சட்டங்களுக்கு பயந்தே ஆண்டர்சனும் லலித்மோடியும் அர்ஜெண்டினா, இலண்டன் என்று பம்முகிற பொழுது, கம்யுனிச ஆட்சி வருகிற பொழுது, முதலாளித்துவாதிகளும் அவர்களின் புழுக்கைகளும் பர்மா மட்டும் போவார்கள் என்று நான் நம்பவில்லை. மூலதனத்தை பாதுகாக்க பால்வெளி அண்டத்திற்கு கூட பாய்வார்கள். பணம் பத்தும் செய்யும் என்கிற பொழுது பர்மாவெல்லாம் ஒரு பாயிண்டா பாஸ்?

      • ஆரோவில்லின் குதிரை அவர்களே !

        //சீனா என்றில்லை, எந்த நாட்டிலும் மக்கள் கம்யுனிச ஆட்சி வேண்டும் என்று கேட்பதற்கு அங்கு ஒரு கட்சி வேண்டும். வேலைத்திட்டம் வேண்டும்//

        சீனாக்காரனுக்கு கம்யூனிசம் பேச தூய்மை கம்ம்யூன்சிய கட்சி இல்லை என்கிறீர்கள் . கம்ய்யூன்சிய நாட்டிலேயே கம்ம்யூனிச கட்சிக்கு , கம்ம்யூனிச புத்தகங்களுக்கு ஒரு வறட்சி வந்து விட்டதா ? அடடா

        சரி அப்படியே ஏற்று கொள்கிறேன் . அப்படி கம்ம்யோநிசம் வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ள அவன் ஏன் வெனிசூலா போகவில்லை , அல்லது க்யூபா போகவில்லை என்கின்ற கேள்விக்கு பதிலை காணோமே ? பக்கம் பக்கமாக எழுதினாலும் அதை உளறல்கள் தவிர்த்து பார்த்தல் பதில் இல்லையே ?

        அடுத்து முதலாளித்துவ நாடுகள்தான் தொழிலாளர்கள் வர வேண்டாம் என்கிறார்கள் என்றால் ,
        க்யூபா,வெனிசூலா நாடுகளில் “உலக தொழிலாளிகளே வருக வருக ” என்கின்ற போர்டு வைத்து இருகிறார்களா .

        ஒரு வேளை ஸ்டாலின் ,மாவோ காலத்து ரஷ்யா சீனாவில் அந்த போர்டு இருந்ததோ ?

        • ஆர்வெல் புத்தகத்தின் இண்டு இடுக்கில் ஒளிந்திருக்கும் மூட்டைப்பூச்சி இராமன் அவர்களே!

          1. கம்யுனிச நாட்டிலே கம்யுனிசம் பேச கம்யுனிச கட்சிக்கு வறட்சி வந்துவிட்டதா என்பதை சிந்திப்பதற்கு முன் தங்களது கோவணம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா? முதலீடுகளைக் கொட்டி குவிக்கிற சீனா ஒரு கம்யுனிச நாடு என்றால் சந்தைப் பொருளாதாரம் முதலாளித்துவ சுரண்டல் என்று சொல்லுகிற தேசம் என்ன தேசம் ஐயா? உங்களது அண்ணன் அதியமானிடம் காட்டுமிராண்டி கம்யுனிஸ்டுகள் சந்தைப் பொருளாதாரத்தை எதிர்க்கிறார்கள்; அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். மாவோ காலத்தையும் தெங்சியோபிங்கின் காலத்தையும் ஒப்பிடுங்கள் என்று ஒப்பாரி வைத்ததைக் காணவில்லையா? பாஜக ஆர் எஸ் எஸ் அரைடவுசர் கும்பலைப் போல் விவாதித்தால் எப்படி?

          2. சரி. உங்கள் பார்வையின் படியே வருகிறேன். முதலீடுகளைக் கொட்டிக்குவிக்கிற சீனா என்கிற கம்யுனிச நாட்டிலிருந்து எதற்காக சீனர்கள் ஓட வேண்டும்? முதலீட்டு தத்துவத்தின் அப்பட்டமான சுரண்டல் என்று ஒப்புக்கொள்வீரா?

          4. உழுபவனுக்கு நிலமும் உழைப்பதற்கு அதிகாரத்தையும் கேட்பதற்கு எதற்கையா வெனிசுலா கியுபா போகவேண்டும்? ஆன்சைட் மெண்டாலிட்டி கார்ப்பரேட் கைக்கூலித்தனம் என்பதை எப்படியாவது கற்றுக்கொள்ளுங்கள் இராமன்! அது ஒருபோதும் மானுடவிடுதலைக்கு மாற்றல்ல!

          5. உலகத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள் என்பது மார்க்ஸ் காலத்தில் இருந்து இருக்கிறது. போர்டு வைத்து எச்சிகலைகளைப் பொறுக்குவதற்கு இது போர்டு பவுண்டேசன் அல்ல.

          • //முதலீட்டு தத்துவத்தின் அப்பட்டமான சுரண்டல் என்று ஒப்புக்கொள்வீரா?//

            கேள்வி புரியாத மாதிரி நடித்தால் என்ன செய்வது ?

            முதலீட்டுதுவம் கம்ம்யோனிச சீனாவை சுரண்டுகிறது .அதனால் சீனா தொழிலாளி , சீனாவை விட்டு ஓடுகிறார் என்கிறீர் .

            அப்பிடி முதலீட்டுதுவம் சுரண்டலினால் ஓடுபவர் , ஏன் முதலீட்டுதுவ நாட்டை தேர்ந்தெடுக்கிறார் ?

            உங்களுக்கு கம்ம்யூனிச நாட்டின் செய்தி தொடர்பாளராக தகுதி இருக்கிறது . எல்லா கேள்விக்கும் ஒரே பதில் .

            //உலகத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள் என்பது மார்க்ஸ் காலத்தில் இருந்து இருக்கிறது.//

            ரொம்ப நல்லது , அந்த சீன தொழிலாளி மிடுகோடு க்யூபாவிற்குள் போயிர்க்கலாமே

            • \\முதலீட்டுதுவம் கம்ம்யோனிச சீனாவை சுரண்டுகிறது .அதனால் சீனா தொழிலாளி , சீனாவை விட்டு ஓடுகிறார் என்கிறீர் . அப்பிடி முதலீட்டுதுவம் சுரண்டலினால் ஓடுபவர் , ஏன் முதலீட்டுதுவ நாட்டை தேர்ந்தெடுக்கிறார் ? ரொம்ப நல்லது , அந்த சீன தொழிலாளி மிடுகோடு க்யூபாவிற்குள் போயிர்க்கலாமே\\

              ஆக உங்கள் கருத்துப்படி, முதலீட்டுத்தத்துவத்தின் கோரமுகத்தை ஏற்கிறீர்கள் என்றாகிறது. ஆனால் முதலீட்டுத்துவத்தால் சுரண்டப்படுகிற மனிதர் ஏன் முதலாளித்துவ நாட்டை தேர்ந்தெடுக்கிறார்? என்று ஒரு கேள்வியும் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று சொன்னால் சீனத் தொழிலாளி கியுபாவிற்கு போகவேண்டியதுதானே என்றும் இரண்டு கேள்வியைக் கேட்கிறீர்கள். இதற்கு ஏற்கனவே பதிலளித்தாலும் மீண்டும் மற்றொரு பார்வையை முன்வைக்கிறேன்.

              1. வெல்வதற்கு பாட்டாளிகளுக்கென்று நாடு இருக்கிறபொழுது, கியுபா ஏன் போக வேண்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் கியுபா-அமெரிக்கா என்று ஒப்பிடுகிறீர்கள். இதில் ஒரு திருட்டுத்தனம் உள்ளது. அதை இப்படி விளக்கலாம்.

              2. கியுபாவிலும் வெனிசுலாவிலும் அந்நாட்டு அதிபர்கள் ஏகாதிபத்தியத்துடன் எதிர்த்து நிற்கும் நாடுகளுடன் இணைந்து மாற்றுப்பொருளாதாரம் ஒன்றை முன்வைத்தார்கள். இத்திட்டத்தின்படி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிற நாடுகளில் தேசிய முதலாளித்துவம் வளரும் என்பதுதான் நிதர்சனம். முதலீட்டுத்தத்துவத்தை ஆதரிக்கிற உங்களைப் போன்ற நபர்கள் உங்கள் பார்வையின்படியே இதை ஆதரித்து இருக்க வேண்டும். ஆனால் முதலீட்டு தத்துவம் என்றாலே அது அமெரிக்காவிற்கு அடிபணிவது என்று எசமானனுக்கு வெறும் வாலை ஆட்டும் நாயாக மட்டுமே முதலாளித்துவ அறிவுஜீவிகளால் நிற்கமுடிகிறது. இது ஏன்? அங்கு தான் அறிவுஜீவிகளின் கம்யுனிச வெறுப்பை விட முதலாளித்துவ நக்கத்தனம் பல பரிமாணங்களிலும் நிற்கமுடிகிறது. இதிலிருந்து நான் சொல்லவருவது என்னவென்றால் முதலீட்டு தத்துவம் என்று விவாதித்தால் கூட உங்களால் அதன் கீழ் நின்று விவாதிக்க இயலாது. அமெரிக்க அடிமைத்தனம் எல்லாம் முதலீட்டுத்தத்துவம் அல்ல என்கிற பொழுது கியுபா-அமெரிக்க ஒப்பீடு தானாகவே செல்லாக் காசாகிவிடுகிறது. இது பார்வை ஒன்று.

              3. இரண்டாவது கோணத்தின் படி சோசலிச நாடுகளில் குடியேற்றங்கள், வரலாற்றில் கணிசமாக நிகழ்ந்திருக்கின்றன. கம்யுனிச அவதூறுகளிலேயெ பிரதானமான அவதூறு என்னவென்றால் ஸ்டாலின் சோவியத்தை ரசியமயமாக்கினார் என்பது. அதாவது ரசியர்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறியனர் என்ற அவதூறு நாம் இங்கு முன்வைப்பதைப் போன்று அவதூறுபரப்புவர்களால் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தனர் என்பதாகப் பார்க்கப்படவில்லை. மாறாக தேசிய வெறியூட்டப்பட்டு, கிழக்கு ஐரோப்பாவில் ரசியர்களா? என்று பிரச்சாரம் செய்தனர். தாங்கள் முதலாளித்துவாதி என்கிற பொழுது தேசிய வெறியை எதிர்ப்பவராக இருக்கக்கூடும். ஆனால் உங்களைப்போன்ற பித்துக்குளிகளுக்கு தெரியாதது என்னவென்றால் முதலாளித்துவம் தன்னைத் தக்கவைக்கும் பொருட்டு தேசிய வெறியை பிரதானமான ஆயுதமாக முன் தள்ளியது என்பதுதான்.

              3. அதே சோவியத் இருந்தபொழுது, கிழக்கு ஐரோப்பியாவில் இருந்து பல்வேறு தேசிய இனங்கள் ரசியாவில் குடியேறினர். கார்ப்பசேவ்-எல்ட்சின் கூட்டணி சோவியத் பொருளாதாரத்தை உடைப்பதற்கு முதன்மையாக பயன்படுத்தியது தேசியச் சண்டைதான். கொசாவாவிலும் உக்ரைனிலும் இன்ன பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்களின் ஒன்றுபடல் தேசிய வெறியாக வந்தே மாதரம் கோசம்போட்டு இரத்தக் களறியால் உடைக்கப்பட்டது. எடுத்துக்காட்டுகள் போதுமா?

              4. இதன்படி இப்பொழுது கியுபா-வெனிசுலா விசயத்திற்கு வருவோம். இலத்தீன் அமெரிக்க நாடுகளிலே கூட தேசிய வெறி ஏற்றுவதுதான் வலதுசாரி கும்பலின் பிராதன அரசியல். அங்கும் குடியேற்றம் இப்படி தேசியச் சண்டையாகத்தான் மாற்றப்படுகிறது. நேர்மையாக முதலீட்டுத்தத்துவத்தை ஆதரிக்கிற அறிவுசீவிகளுக்கு இது உறுத்தலாக இருக்கவேண்டும். ஆனால் அமெரிக்காவின் பொருட்டு எச்சி ஒழுக இரத்த வெறியோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

              5. ஆக உங்கள் கேள்விக்கு இறுதியான பதில் என்ன? குவைத்-சவுதி போன்ற நாடுகளில் கட்டுமானத் தொழிலில் உலகிலேயே சீனத் தொழிலாளர்கள் தான் அதிகம். இதன்படி பார்த்தால், கேப்பிடலிசத்திற்குப் பதிலாக சீனர்கள் ஷரியா அரசிற்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அவ்வளவு பெரிய முட்டாள்தனம் தான் கேப்பிடலிச நாடுகளுக்கு சீனர்கள் போகிறார்கள் என்கிற வாதமும்.

              இந்தப் பார்வையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி எழுதவும்.

              • ஆர்வில்லின் குதிரை அவர்களே !

                உங்களுக்கு கடைசி வரைக்கும் கேள்வி புரிய வில்லை . காண்டக்ஸ்ட் என்ன என்பதே புரிவது இல்லை . _________

                //ஆக உங்கள் கருத்துப்படி, முதலீட்டுத்தத்துவத்தின் கோரமுகத்தை ஏற்கிறீர்கள் என்றாகிறது//

                இந்த மாதிரி எந்த ஸ்டேட்மெண்டும் நான் விடவில்லை . குறைந்த பட்ச தமிழ் உரைநடை என்பதை புரிந்து கொள்ளும் அறிவு கூட நிறைய பேருக்கு இல்லை என்பதை உணர்கிறேன் . ஒரு வேளை விவாதத்தில் வெல்ல வேண்டும் என்பதை குறிகோளாக கொண்டு திரித்து பேசுகிறார்களா ?

                //குவைத்-சவுதி போன்ற நாடுகளில் கட்டுமானத் தொழிலில் உலகிலேயே சீனத் தொழிலாளர்கள் தான் அதிகம். இதன்படி பார்த்தால், கேப்பிடலிசத்திற்குப் பதிலாக சீனர்கள் ஷரியா அரசிற்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அவ்வளவு பெரிய முட்டாள்தனம் தான் கேப்பிடலிச நாடுகளுக்கு சீனர்கள் போகிறார்கள் என்கிற வாதமும்.//

                உயரை பணயம் வைத்து , அந்த நாட்டில் தான் எனக்கு முன்னேற்றம் இருக்கிறது என்று போவதையும் , விசா வாங்கி போவதையும் ஒன்றே எனபது போல சித்தரித்து முட்டாள் தனம் என்று வேறு பேசுகிறீர் .

                மத்த வாதமேல்லாமே உங்கள் அறியாமை . சீனாக்காரன் படை எடுத்து வந்த போது , தொழிலாளிகளுக்கு நல் வாழ்வு வர இருக்கிறது என்று ஆதரித்த கூட்டம் தானே . இங்கேயே கூட இந்திய கம்ம்யோநிஸ்ட் விளித்து கொண்டது . அதையும் உங்கள் பாசையில் சொன்னால் தேசிய வெறி தானே ?

                • \\உங்களுக்கு கடைசி வரைக்கும் கேள்வி புரிய வில்லை . காண்டக்ஸ்ட் என்ன என்பதே புரிவது இல்லை\\

                  முதலீட்டுத்தத்துவம் தான் மொத்த விவாதத்திற்கும் அடிப்படையாக எடுத்துக்கொண்டேன். கடைசியில் ச்சீ ச்சீ என்றாகிவிட்டது. தாங்கள் புரிந்துவைத்திருக்கும் கம்யுனிச சீனாவில் இருந்தோ தொழிலாளிகள் கொத்தாக கேபிடலிச நாடுகளுக்கு ஓடுகிற பொழுது கப்பலை தலைகீழாக கவிழ்த்தும் விதத்தில் கேப்பிடலிச நாடுகளின் முதலாளிகளோ சீனாவில் முதலீடுகளைக் கொட்டுகின்றனர். கடைசியில் முதலீட்டுத்தத்துவம் இந்தளவிற்கு நாறும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. இதைத்தான் எதிர்பார்த்தது.

                  கியுபா வெனிசுலாவிலும், தேசிய முதலாளித்துவத்தை முன் வைத்து என் பார்வையில் சில கருத்துக்களை வைத்திருந்தேன். அதற்கும் புஸ்வானம் தான்! அந்தளவிற்கு முதலாளித்துவம் என்றாலே அமெரிக்க நக்கத்தனம் என்றாகிவிட்டது உங்களுக்கு!

                  உங்களைக் குத்தம் சொல்வதை விட, இது ஒரு பொது சமூக விதியாகும். ஏனெனில்

                  1. தற்பொழுதைய நிலையின் படி, எந்த நாட்டிலும் தேசிய முதலாளித்துவம் எல்லாம் சாத்தியமில்லை.

                  2. அடிப்படையிலேயே முதலாளித்துவம் பல முதலாளிகளைக் கொல்கிறது.

                  3. முதலாளித்துவம் ஏகபோகமாக அழுகிநாறும் ஏகாதிபத்தியமாக நிற்கிறது. இதில் உங்களைப்போன்ற சிங்கிகள் தனிமனிதன் முன்னேறி கேப்பிடலிஸ்டாக நிற்கிறான் என்பதெல்லாம் மருந்துக்கும் வைக்க முடியாது.

                  4. ஏனென்றால் முதலாளித்துவம் ஒரு உற்பத்தி முறையாக நீடிக்கவில்லை.

                  நாடுகளைக் கைப்பற்றுவது,
                  எல்லா நாடுகளிலும் கூலியைக் குறைப்பது,
                  சொத்துக்களின் விகிதம் பாரதூரமாக அதிகரித்திருப்பது,
                  அனைத்து நாடுகளிலும் பாசிச கும்பல் ஆட்சி புரிவது,
                  விவசாயத்தை அப்புறப்படுத்துவது,
                  நீர், நில கனிம வளங்களைக் கொள்ளையிடுவது என்று அழுகி நாறுகிறது.

                  5. இந்த ஏகபோக ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலமாக முதலாளித்துவத்தின் இறுதி மூச்சுக்கு நாள் குறிப்பது மட்டுமே பாக்கி. இது பதில் மட்டுமல்ல, இது மட்டும்தான் நம் கையில் இருக்கிற ஒரே ஒரு கேள்வியும் கூட!

                  ——————————————————————————–
                  \\ஒரு வேளை விவாதத்தில் வெல்ல வேண்டும் என்பதை குறிகோளாக கொண்டு திரித்து பேசுகிறார்களா ?\\

                  பரிசுக்கோப்பையை உங்களுக்கே தரச் சொல்கிறேன்! தயவுசெய்து கம்யுனிச நாட்டில் மூலதனம் என்றால் என்ன? சுதந்திர சந்தைப்பொருளாதாரம் எப்படி வந்தது? என்று எனக்கு புரியும் படி உங்களது முதலீட்டுத்தத்துவத்தின் படி விளக்கினால் தேவலை!!!!

                  \\உயரை பணயம் வைத்து , அந்த நாட்டில் தான் எனக்கு முன்னேற்றம் இருக்கிறது என்று போவதையும் , விசா வாங்கி போவதையும் ஒன்றே எனபது போல சித்தரித்து முட்டாள் தனம் என்று வேறு பேசுகிறீர் \\

                  சவுதிக்கு விசா வாங்கிப்போவதா? உங்களுக்கு உயிரைப்பணயம் வைத்து சவுதி சென்றவர்களின் நிலை தெரியாது போலும்! ஜெட்டாவின் தெருக்களில் பார்க்கலாம்! எல்லா ஏகாதிபத்திய நாட்டிலும் இந்தப்பிரச்சனை உண்டு! இதை சரிபார்த்துக் கொண்டு என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்; சீனன் கேப்பிடலிச நாடு என்பதற்காக ஓடினான் என்றால் சவுதி சரியா அரசு என்பதற்காக ஓடினார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

                  ——————————————————————————-

                  முக்கியமான தங்களது கருத்திற்கு அடுத்த பின்னூட்டத்தில் பதில் அளிக்கிறேன்.

      • \\இப்போது கம்ம்யூசியம் பேசி திரிபவர்கள் ஒரு வேளை ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் ,நாளை இந்தியர்கள் கூட பர்மா போனா கூட போதும் என்று ஓடும் நிலைமை ஏற்படும்\\

        இதுக்கு உங்கள் சகிக்கவில்லை . கம்ம்யூஒனிச ஆட்சியில் தொழில் நசிந்து வேலை இன்றி , வேலை தேடி போவார்கள் என்பதை திரித்து சட்டம் அது இது என்று திரித்து விட்டர்கள் . எனது நிலையை தெளிவு படுத்த ..

        இந்தியாவில் கேரளாவிற்கும் மேற்கு வங்கத்திற்கும் வேலை தேடி சென்றவர்கள் உண்டா ? அந்த இரு மாநிலங்களிலும் இருந்து பிற மாநிலங்கள் போய்தான் பிழைக்க வேண்டி இருக்கிறது . நாடு முழுமையும் கம்யூனிசம் என்றால் , பஞ்சம் பிழைக்க பர்மா தான் போக வேண்டும் என்பதே எனது கருது .

        அடுத்து இப்படி பேசி திரிபவர்களுக்கு விசா கொடுத்தால் முதல் ஆளாக ஏரோபிளேனில் ஏறி இருப்பார்கள் .
        அல்லது அவர்கள் பிள்ளைகள் அமெரிக்காவில் அல்லது ஏகாதிபத்திய நாடுகளில் பணியாற்றி கொண்டு இருப்பார்கள். எப்படி தமிழ் எங்கள் மூச்சு என்பவர்கள் இந்தி படித்து கொள்கிறார்களோ அது போலவே …

        • மூட்டைப்பூச்சி அவர்களே!

          \\கம்ம்யூஒனிச ஆட்சியில் தொழில் நசிந்து வேலை இன்றி , வேலை தேடி போவார்கள் என்பதை திரித்து சட்டம் அது இது என்று திரித்து விட்டர்கள் .\\

          இது ஒரு கேவலமான அவதூறு. உங்களது கருத்தே அதற்கு சாட்சி. சீனன் அமெரிக்கா ஓடிப்போன பொழுது கேப்பிடலிச நாடுகள் தான், அவனுக்கு வாய்ப்புக்களை வழங்குகிறது என்று சொன்னீர்கள். உலகிலேயே அதிக முதலீடு இடப்படுகிற இடம் சீனாதான் என்று இந்தப் பின்னூட்டத்தோடு அனைத்து பின்னூட்டங்களிலும் முன்வைத்திருக்கிறேன். முதலீடுகளுக்கு சொர்க்கமாகத் திகழும் சீனாவிலிருந்து ஏன் மக்கள் ஓட வேண்டும் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். உங்களிடமிருந்து இந்த விசயத்தில் Accountabilityஐ எதிர்பார்க்கிறேன். கேரளம் மேற்கு வங்கம் குறித்த கேள்விக்கு அடுத்த மறுமொழியில் பதில் உள்ளது. பார்க்கவும்.

          • ஆர்வில்லின் குதிரை அவர்களே !

            அதற்கு காரணம் சீனாவின் கம்ம்யூனிச கட்டமைப்பு . அவன் சுதந்திரமாக தனது சிந்தனையை , ஐடியாவை உற்பத்தி பொருளாக மாற்ற முடியாது . அந்த கட்டமைப்பில் நீங்கள் சுதநிதிரமாக இது போன்ற பதிவுகள் கூட போட முடியாது . கம்யூனிச கட்டமைப்பை தேடி ஒரு நாட்டிற்குள் யாரும் நுழைவது இல்லை . வட கொரியாவில் இருந்து தப்பி வருபவர்களை ஈவு இறக்கம் இல்லாமல் மீண்டும் வாடா கொரியாவிறு அனுப்பும் கூட்டம் தான் உங்கள் கம்யூனிச சீனா

            மூல தனம் வருகிறது , அது அவனை தொழிலாளியாக மட்டும் பயன்படுத்த பார்க்கிறது . அதையும் தாண்டி தன்னை முன்னிலை படுத்த விழைபவன் அந்த கட்டமைப்பை வெறுத்து காபிடலிச கன்ட்ரிக்கு ஓடுகிறான்

            • இராமனின் ரசவாத லீலைகள்!

              மிகப்பெரும் அதிர்ச்சியாக இராமன் அவர்கள் சீனாவில் மூலதனம் வருகிறது, ஆனால் அது அவனை தொழிலாளியாக மட்டும் பயன்படுத்தப் பார்க்கிறது என்று போகிற போக்கில் கம்யுனிசத்தை ஒருவரியில் சொடுக்கிவிட்டார்!

              ஹைகேட் கல்லறையில் உறங்கும் மார்க்சுக்கு இதைவிட புகழாரம் மிக்க வாசகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பது எனது புரிதல்!

              முதலில் இராமனிடத்தில் சில கேள்விகளைக் கேட்டுவைப்பபோம்.

              1. உலகிலேயே அதிக முதலீடு குவிகிற சீனத்தில் தொழிலாளிகள் வாழ்வதற்கு வழியின்றி கேப்பிடலிச நாடுகளை நோக்கி ஓடுகிறார்கள் என்று சொன்னார். தொழிலாளிகள் கேப்பிடலிச நாடுகளை நோக்கி குவிகிறார்கள் என்றால் உலக முதலாளிகள் ஏன் சீனாவை நோக்கி குவிய வேண்டும்?

              அதாவது இராமனின் பார்வைப்படி கேப்பிட்டலிஸ்டுகள் ஏன் இராமனின் கம்யுனிச சீனாவை நாடவேண்டும்? இருபத்தோரம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இந்தக் கேலிக்கூத்திற்கு இராமன் பதில் சொல்வாரா?

              —————————————————————————-

              இப்பொழுது இராமனின் ஒவ்வொரு வாக்கியத்தின் பொய்களைக் கவனிப்போம்.

              \\அதற்கு காரணம் சீனாவின் கம்ம்யூனிச கட்டமைப்பு . அவன் சுதந்திரமாக தனது சிந்தனையை ஐடியாவை உற்பத்தி பொருளாக மாற்ற முடியாது.\\

              சரவணா செல்வரத்தனம் ஸ்டோரில் விற்கும் வாத்து பொம்மையிலிருந்து வாசிங் மெசின் வரை அனைத்தும் சீன உற்பத்திப்பொருட்கள் தான். சீனாவில் தனியார்மயமும் தராளமயமும் கம்யுனிசத்தை எதிர்த்து எவ்வளவு பீடு நடை போடுகிறது என்று அதியமான் போன்றவர்கள் வியர்வை சிந்தி மெனக்கெட்டு முக்கித்தக்கி முதலாளித்துவத்திற்கு ஆதரவாக வாதம் வைக்கிற பொழுது, ஒரேயடியாக இராமன் அவர்கள் ஐடியாவை உற்பத்தி பொருளாக மாற்றமுடியாது என்று அவர்களின் வாதங்களின் மீது மூத்திரம் போகிறார்!

              முதலாளித்துவத்தின் உள்முரண்பாடுகள் பற்றி ஓரளவுக்குத் தெரியும் என்றால் முதலாளித்துவத்தை ஆதரித்து விவாதிக்கிற கைக்கூலிகளிடத்திலும் கூடவா முரண்பாடு! அடா இராமா!! என்ன சோதனை?

              ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையை கைக்குள் வைத்திருக்கிற சீன ஏகாதிபத்தியத்தால் உற்பத்தி பொருளாக மாற்ற முடியவில்லை என்று சொன்னால் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிஸ்டுகளின் நிலை வாயில் செருப்பைக் கவ்விய நாயின் நிலையாக அல்லவா இருக்கும்?

              \\கம்யூனிச கட்டமைப்பை தேடி ஒரு நாட்டிற்குள் யாரும் நுழைவது இல்லை .\\

              பிறகு மூலதனம் எப்படி வந்தது? சீனாவை கம்யுனிச நாடு என்று தாங்களாகவே சொல்லிக்கொண்டு அது எப்படி அல்ல என்று விளக்கினால் விளக்குபவர்களை போலி கம்யுனிசம் என்று தப்பிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு மூலதனம் குவிகிற சீனாவைப் பார்த்து கம்யுனிச கட்டமைப்பைத் தேடி ஒரு நாட்டிற்குள் யாரும் நுழைவது இல்லை என்று சொன்னால் இதில் எது கம்யுனிசம்? எது முதலாளித்துவம்?

              \\வட கொரியாவில் இருந்து தப்பி வருபவர்களை ஈவு இறக்கம் இல்லாமல் மீண்டும் வாடா கொரியாவிறு அனுப்பும் கூட்டம் தான் உங்கள் கம்யூனிச சீனா \\

              வட கொரியா கம்யுனிஸ்டு கம்யுனிஸ்டு என்று கதறினீர்களே! சீனா ஏகாதிபத்தியம் வடகொரியாவை விரட்டுகிறது. சரி. அமெரிக்கா ஏகாதிபத்தியம் என்ன செய்கிறது?

              \\அதையும் தாண்டி தன்னை முன்னிலை படுத்த விழைபவன் அந்த கட்டமைப்பை வெறுத்து காபிடலிச கன்ட்ரிக்கு ஓடுகிறான்\\

              தாங்கள் சொல்வது சரி. தொழிலாளிகள் என்றைக்குமே அப்படித்தான் இருக்க முடியும். ஆனால் சீன முதலாளிகளின் நிலைமை என்ன? கீழ்க்கண்ட ஒவ்வொரு பாயிண்டுகளுக்கும் பதில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

              1. ஏழை-பணக்காரன் ஏற்றத்தாழ்வு, சீனா, அமெரிக்காவில் மிக அதிகம்.
              2. உலகில் நான்கில் ஒரு கோடிசுவரன் சீனன். பார்க்க நியுயார்க் டைம்ஸ்
              3. அமெரிக்காவின் கடன்பத்திரங்களில் அதிக முதலீடு செய்திருப்பவன் சீன முதலாளி
              4. ஒட்டுமொத்த ஆப்ரிக்காவை ஒட்டச் சுரண்டுபவன் சீன முதலாளி
              5. ஏழைகள் அதிகம் வாழும் சீனாவில் தான், ஒரு சதுர மீட்டர் வீட்டு மனை 40000 யுவான்கள். அதாவது இந்திய ரூபாயில் சதர மீட்டர் 4இலட்சம். அப்படியானால் ஒரு செண்டின் விலை என்ன?

              மேலே உள்ள ஐந்து பாயிண்டுகளையும் தொகுத்தால் பொருளியலாளர் தாமஸ் பிக்கெட்டி மற்றும் சாஸின் கருத்தை சொல்வது இது தான்.

              சீனாவிலும் அமெரிக்காவிலும் நெதர்லாந்திலும் இந்தியாவிலும் சொத்துக்களின் பெரும்பகுதி வெறும் ஒரு சதவீதத்தனரின் கையில் இருப்பது அம்பலமாகும். தொழிலாளிகள் பிய்த்துக்கொண்டு உயிரைப் பணயம் வைப்பது இந்த முதலாளித்துவத்தின் கொடூரத்தால் தான்.

              ———————————————————

              சீனத் தொழிலாளி அமெரிக்கா போவது கவுரமான வாழ்க்கை என்றீர்கள். ஆனால் Hidden Economy என்றழைக்குப்படும் கொத்தடிமைகளைப் பயன்ப்படுத்துவது, போதை மருந்துக்கடத்தல், விபச்சாரம், கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவது, சூதாட்ட சந்தைகளை உருவாக்குவது இவற்றையெல்லாம் நம்பித்தான் கேப்பிடலிச நாடு இயங்குகிறது என்றால் அமெரிக்க சுதந்திர தேவியின் வேசைத்தனத்திற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.

              இதில் பாரதமாதாவின் பங்கு என்னவென்பதை இன்னும் நாம் பார்க்கவில்லை! ஆனால் illegal migrantsன் கதை முதலாளித்துவத்தின் மானக்கேடன்றி வேறல்ல!

              • //தொழிலாளிகள் கேப்பிடலிச நாடுகளை நோக்கி குவிகிறார்கள் என்றால் உலக முதலாளிகள் ஏன் சீனாவை நோக்கி குவிய வேண்டும்?//

                கம்ம்யூநிசம் ஆரம்பிக்கும் பொழுது , ஏற்கனவே இருந்த வளத்தை பங்கு போட்டு , ஏழைகளுக்கு கொடுக்கும் . எல்லாரும் ஆகா பூலோக சொர்க்கம் வந்து விட்டது என்று பூரிதிருப்பார்கள், ஆனால் நாளடைவில் கம்ம்யூநிசம் ஒரு நாட்டை வறுமை நிலைக்கு தள்ளுகிறது . தொழில் முனைவோரை முடுக்கி , தொழில் வளத்தை நசுக்கி விடுகிறது . எஞ்சி இருப்பது வறுமை , பயன்படுத்தபடாத இயற்கை வளம்.

                இயற்கையாகவே முதலீட்டு தத்துவம் , வறுமை ,வளம் இரண்டையும் பயன்படுத்தி குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முயலும். அந்த நேரத்தில் கம்ம்யோனிச நாடுகளை ஆளுபவர்களுக்கு வறுமையை ஒழிக்க வேறு வழி இல்லாமல் மூலதனத்தை உள்ளே விட்டு , மக்கள் உயிர் காப்பார்கள் .

                ஸ்டாலின் போன்றவர்கள் பலர் மடிந்தாலும் கம்ம்யூநிசம் காப்பார்கள்

                நார்த் கொரியா பண்ற நாடுகளில் உயிர் போனாலும் புரட்சி பேசிக்கொண்டு இருப்பார்கள் சர்வாதிகார தலைவர்கள் .

                மதுரோ என்ன செய்வார் என்று பொருது இருந்து பாப்போம்

                • தங்களது வாதத்தில் இருப்பது வெறும் அப்பட்டமான அவதூறுகள் மட்டுமே.

                  1. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றியது சோசியலிசம் (எ.கா ஸ்டெப்பி புல்வெளிகள் கோதுமை வயல்களாக மாற்றியமை). விளைநிலங்களை தரிசு நிலமாக மாற்றுவது முதலாளித்துவம் (எ.க. பாசிச மோடியின் நிலச்சீர்த்திருத்தத் திட்டம்) அதுவும் நிலச்சீர்த்திருத்த திட்டம் விவசாயிகளிடம் கேட்கமாலேயே பிடுங்கிக்கொள்வது. விளைநிலங்களைக் கூட விற்றாக வேண்டிய அவலம் முதலாளித்துவத்தில்!

                  2. தொழிலாளிகளையும் விவாசயிகளையும் அறிவியல் தொழில்நுட்பத்தோடு வளர்ப்பது சோசலியம் (எ.கா, டிராக்டர் உற்பத்தியில் 1930-34லியே சோசலிசம் தன்னிறைவு. வேதித் தொழிற்சாலைகளில் 1950களிலே 300% உற்பத்தி இலக்கு). மாறாக விவசாயிகளைக் கொன்றுவிட்டு நடுத்தரவர்க்கத்தை ஊதாரிகளாக மாற்றுவது முதலாளித்துவம் (எ.கா: கார் லோன் 7% டிராக்டர் லோன் 14%) இதைப் படிக்கிறவர் முதலாளித்துவத்தின் மூஞ்சியில் எச்சியைக் காறித்துப்புவார்.

                  3. பாலைவனத்தில் பருத்தி உற்பத்தி சோசலிசம். பருத்தி உற்பத்தியை பாலைவனமாக்கியது முதலாளித்துவம் (இந்தியாவில் இரண்டு இலட்சம் பருத்தி விவசாயிகள் பிடி காட்டனாலும் பூச்சிக்கொல்லி மருந்தாலும் தற்கொலை), முதலாளித்துவம் கொலை என்பது தான் சரி!

                  4. இயற்கையைப் பேணிக்காப்பது சோசலிசம். இயற்கையை நாசமாக்குவது முதலாளித்துவம். ஏனெனில் உற்பத்தி என்று வாய்சவடால் அடித்த முதலாளித்துவக் கும்பல், சந்தையில் சூதாடி தோற்றுவிட்ட பிறகு மூலதனத்திற்காக முதலில் நாசமாக்குவது இயற்கையத்தான்.

                  5. இயற்கைப் பேரிடர் வந்தால் அங்கு ஓடி வந்து முதலில் நிற்பது சோசலிசம். மாறாக எங்கள் மோடி எப்படி என்று செல்பி எடுத்து பேட்டி காண்பது முதலாளித்துவம்!

                  6. Start from the scratchந் படி புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது சோசலிசம். கைரோட்ரான் என்றால் என்ன என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதன் மகத்துவம் என்ன என்பதை முற்றிலும் உலகிற்கு படைத்தது சோசலிசம். மாறாக அறிவியலாளின் உழைப்பை விலை பேசி சம்பளத்தைத் தூக்கி எறிய மட்டுமே முதலாளிக்குத் தெரியும். இலாபம் இல்லையென்றால் கண்டுபிடிப்புகள் என்பது முதலாளிகளுக்கு கெண்டைக்கால் மயிருக்குச் சமம். ஆகையால் அமெரிக்காவின் முன்னணி மருந்து கம்பெனிகள் விளம்பரத்திற்கு பில்லியன் செலவிடுகிற பொழுது, விளம்பரத்தின் தொகையில் 6%மட்டுமே ஆராய்ச்சிக்கு செலவிடுகிறது.

                  7. ஒரு நாட்டின் வளத்தை குழந்தைகளை வைத்தே மதிப்பிடமுடியும். சோசலிச நாட்டில் 100% எழுத்தறிவு சமீபத்தில் ஈக்வெடாரிலும் சாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதலாளித்துவ நாட்டில் அது இன்னும் சாத்தியமில்லை. எங்கெல்லாம் சீர்திருத்தங்கள் நடைபெற்றனவோ அங்குமட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது.

                  8. டிபி நோய்க்கு பாக்டீரியா காரணம் என்று சொல்கிற பொழுது அது மட்டுமல்ல காசநோய் ஒரு சமூக நோய் என்று சொல்லி அதை நீக்கியது சோசலிசம். கம்யுனிட்டி மெடிசன் துறையை உலகிற்கு வளர்த்து எடுத்துக் கொடுத்தவர்கள் சோசலிசம். ஆனால் எங்கெல்லாம் சேரி இருக்கிறதோ அங்கெல்லாம் டிபி உண்டு. நியுயார்க்கும் இதற்கு விதிவிலக்கல்ல என்றால் முதலாளித்துவம் சாதித்தது என்னடா? என்று தைரியமாகக் கேட்கலாம்.

                  9. முதலாளித்துவம் நீடிக்க வேண்டுமென்றால் போதை, விபச்சாரம் நீடிக்க வேண்டும். ஏனெனில் இவையெல்லாம் மறைமுக பொருளாதார காரணிகள். HSBC வங்கியே கஞ்சாவை விற்றூ ஆரம்பிக்கபப்ட்ட வங்கிதான். அதன் விரிவாக்கம் ஹாங்காங், ஷாங்காய் பேங்கிங்க கார்ப்பரேசன். இதன் தலைமையிடம் இலண்டன்.

                  10. முக்கியமாக வாழ்க்கைக்கு சம்பாரி என்று சோசலிசம் சொல்கிற பொழுது சம்பாதிப்பதற்கு வாழ் என்று சொல்வது முதலாளித்துவம். இவ்வகையில் மனிதனை விலங்கு நிலைக்கு தாழ்த்துவது முதலாளித்துவம். பண்பாட்டையும் நாகரிகத்தையும் சுரண்டுவது முதலாளித்துவம்.

                  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நாங்கள் இப்பொழுது மிக அவசியமாக வலியிறுத்தவேண்டியது இன்னொரு விசயம் ஆகும்.

                  அது “உடமை பறித்தவனை உடமை நீக்கம் செய்வது”

                  கம்யுனிசத்தின் வரலாற்று சிறப்புமிக்க விடுதலை ஆயுதம்.

                  • ஓஹோ சொசியளிசநாடுகளில் பாலாரும் தேனாறும் ஓடுதோ ! எனக்கு ஒரு லிட்டர் பால் பார்சல் 🙂

                    //ரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றியது சோசியலிசம்//

                    அப்படியா ? இந்தியாவில் சீனாவில் வட கொரியாவில் பஞ்சம் வந்த பொது உதவினார்களா ?
                    உகரைனில் ஏன் சாப்படிற்கே வலி இல்லாமல் செத்தார்கள்

                    பேப்பர்ல எழுதி வசத இனிக்காது . ப்ரோபகண்டா செய்திகளை படுச்சுட்டு உண்மைன்னுநினசுகுது நம்ம குதிரை !
                    உங்கள் கற்பனை உலகை நிஜ உலகத்தோடு ஒப்பிட்டு இருப்பதெற்கெல்லாம் பதில் சொல்லி மாளாது .
                    ஏழை பணக்காரன் என்பதே கூடாது . என்ன உழைப்பவன் சோம்பேறி ரிஸ்க் எடுப்பவன் என்றெல்லாம் மனிதர்களில் பாகுபாடு கிடையாது . எல்லாரும் சமம் .

                    உங்களை சோசியலிச கற்பனையில் விட்டு விடுக்றேன். விவாதம் முற்றும்

                    • \\ஓஹோ சொசியளிசநாடுகளில் பாலாரும் தேனாறும் ஓடுதோ ! எனக்கு ஒரு லிட்டர் பால் பார்சல்\\

                      அதிமுக கொள்ளைத்தலைவியின் ஆசியோடு ஆவின் பாலைத்திருடி இரண்டாயிரம் கோடி கொள்ளையடித்தைக் கண்டுகொள்ளமுடியாத முதலீட்டுவாதி இராமனுக்கு ஒரு லிட்டர் சோசலிச பால் வேண்டுமாம்!! இப்பொழுது நன்கு புரியும்; முதலாளிகளும் அரசும் சேர்ந்துதான் ஆட்சி அமைத்து ஊழல் புரிகின்றன என்பதும் இது ஒரு பாசிச அரசு என்பதும். இந்த இலட்சணத்தில் இராமன் போன்றவர்கள் முதலீட்டு வாதிகளாம்!

                      சரி. இராமன் ஆசைப்படியே பால் தருவோம்! ஆனால் அதற்கு முதலாளித்துவத்திற்கு பால் ஊற்றுவது என்று பெயர்!!!

                      \\உகரைனில் ஏன் சாப்படிற்கே வலி இல்லாமல் செத்தார்கள் \\

                      திங்கற சோத்துல உப்பு இருந்தா, நல்ல கம்யுனிச அவதூறு புத்தகமாக வாங்கி, நீலகண்டன், அமெரிக்கா, பத்ரி, ஜெயமோகன் போன்றோரிடம் உக்ரைன் கதையை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த அவதூறுகளை வைத்தே உக்ரைன் பஞ்சத்தை நேரம் கிடைக்கும் பொழுது விளக்குகிறோம். இதிலிருந்து தாங்கள் தெரிய வேண்டியது நிறைய இருக்கிறது. சாம்பிளுக்கு இரண்டு; குலாக்குகளின் பதுக்கல், கம்யுனிஸ்டுகள் எப்படி பஞ்சத்தை மீட்டெடுத்தனர் என்பது.

                      இன்னொரு விசயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். உக்ரைனில் பஞ்சம் வந்த பொழுது ஐரோப்பாவிலும் பஞ்சம் வந்தது. ஆனால் பஞ்சத்திற்கு தீர்வு கண்டவர்கள் கம்யுனிஸ்டுகள் மட்டுமே. மற்ற நாட்டில் செத்து மடிந்தார்கள்! அந்த வரலாறு தெரியுமா?

                      அதனால் தான் சொல்கிறேன், பஞ்சத்தை சோசலிசம் மட்டும் தான் தீர்க்கமுடியும். வேறு எதுவும் அல்ல!

                      ————————————————

                      நேரம் கிடைக்கும் பொழுது விவாதியுங்கள்! ஆர்வெல் பிரிட்டிஸ் உளவுக்காக கைக்கூலி வேலைபார்த்தது அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதை முதலில் படியுங்கள். முட்டாளாக ஆர்வெல்லைத் தூக்கிகொண்டு திரிவது கேலிக்கூத்து! இதைவிட பெரிய காமெடி இருக்க முடியாது!

            • //ஆர்வில்லின் குதிரை அவர்களே….//

              கேள்வி கேட்டா இப்படியா கலாய்க்கிறது. அது சரி.. இவர் குதிரை என்றால், ஆர்வெல் குறிப்பிடும் பன்றிகள் யார்.

              • ஆர்வெல்லின் குதிரை கதா பாத்திரம் , பன்றி கதாபாத்திரம் கூறும் புரட்சி புரட்சி சமத்துவம் என்பதை முழுமையாக நம்பும் . பண்ணையை சீர்மிக்க கடுமையாக உழைக்கும் . மனிதர்கள் பண்ணையார்களாக இருந்து வலை வாங்கியபோது அதற்கு நல்ல உணவு கிடைத்தது . அனால் இப்போது சமத்துவ பண்ணையில் அதிக வேலை , குறைந்த உணவு என்று மெலிந்து விடும் . ஆனாலும் அது புரட்சியில் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் .
                வேலை செய்ய முடியாமல் படுத்துவிட்ட பின்னர் , கசாப்பு கடை வண்டி வந்து தூக்கி போகும் . அதை கண்டுபிடித்த நாயிடம் , ஆம்புலன்ஸ் பற்றாகுறையால் தான் சக புரட்சி தோழர்கள் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருப்பதாக பன்றிகள் பொய் பேசும் .

                அதாவது கடைசி வரை கிராண்ட் ஸ்கீம் என்ன என்று புரியாமல் , கற்பனை உலகத்தில் கடைசி வரை வாழ்ந்து , அந்த புரட்சிய்நாலேயே கொல்லப்பட்டு விடும் . கடைசி வரை அதற்கு புரியாது . அதனால் தான் தென்றல் அவர்களை ஆர்வெல்லின் குதிரை என்று அழைக்கிறேன் .

                பன்றி கதாபாத்திரங்கள் ரஷ்யாவில் இரு தலைவர்களையும் அவர்களுக்கு இடையே இருந்த பிணக்குகளையும் னையாண்டி செய்கிறது .

                Vinavu has reviewedthe book
                https://www.vinavu.com/2010/11/08/spy-2/

                (சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. – வினவு)

        • \\இந்தியாவில் கேரளாவிற்கும் மேற்கு வங்கத்திற்கும் வேலை தேடி சென்றவர்கள் உண்டா ? அந்த இரு மாநிலங்களிலும் இருந்து பிற மாநிலங்கள் போய்தான் பிழைக்க வேண்டி இருக்கிறது . நாடு முழுமையும் கம்யூனிசம் என்றால் , பஞ்சம் பிழைக்க பர்மா தான் போக வேண்டும் என்பதே எனது கருது .\\

          இந்தக் கருத்தின் முட்டாள்தனத்தைப் பார்ப்போம். முதலில் சீனாவை எடுத்துக்காட்டாக வைக்கிறேன். சீனா ஒரு கம்யுனிச நாடு என்றீர்கள்! சீனாவில் யுனான் மற்றும் சியான் மகாணங்கள் தாங்கள் சொல்கிற கேரளம் மற்றும் மேற்குவங்கத்தை விட கம்யுனிச அரசியல் பொருளாதார கலாச்சாரத்தில் வரலாற்றில் வலுவான பின்னணியைக் கொண்டவை. அது மட்டுமல்ல அங்குள்ளவர்கள் சோசலிச பொருளாதாரத்தை வாழ்வில் நேரில் அனுபவித்தவர்கள். இன்றைக்கும் அங்கு சோசலிச கட்டுமானங்கள் உண்டு. சோசலிசம் என்றால் அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாத தற்குறியான தாங்கள், இதுபற்றி ஆய்வு செய்வீர்கள் என்று நம்பவில்லை. ஏனென்றால் இப்பொழுதுவரை பீரியாக கொடுப்பது தான் சோசலிசம் என்றும் அம்மா உணவகம் ஆரம்பித்த செயலலிதாவை மிகச் சிறந்த சோசலிஸ்டு என்று பலவிவாதங்களில் முன்வைத்துள்ளீர்கள். இது ஒரு புறம் இருக்கட்டும்.

          நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் உங்கள் பார்வையின் படி சீனா போன்ற கம்யுனிச நாட்டிலேயே யுனான் மற்றும் சியான் மகாணங்களில் இருந்து கொத்துக் கொத்தாக விவசாயிகளும் தொழிலாளிகளும் தங்கள் நிலங்களிலிருந்தும் வாழ்விடங்களிலும் இருந்துவிரட்டியடிக்கப்பட்டு நகர்மயமாதலின் படி, பெய்ஜிங்கிற்கும், சென்ஜென்னிற்கும் ஷாங்காய்க்கும் மக்கள் அற்ப கூலிக்காக திரள்கின்றனர்.

          இந்த பெய்ஜிங்க், சென்ஜென், ஷாங்காய் போன்ற நகரங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் கட்டுமானங்கள், கணக்கில் அடங்காத தொழில் முதலீடுகள் என்று வருகிற சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகும்.

          இப்பொழுது என் கேள்வி என்னவென்றால் ஏன் சீனா போன்ற உள்நாட்டிலேயே மக்கள் வலிந்து நகர்மயமாக்கலின் கோரவிளைவில் சிக்கித்தவிக்க வேண்டும்? ஏன் நிலங்களை விட்டுவிட்டு விவசாயத்தை விட்டுவிட்டு முதலீட்டு நகரங்களுக்கு ஓடிவரவேண்டும்?

          1. முதற்காரணம் அப்படி மக்கள் ஓடிவருவது, உங்கள் பார்வையின் படி முதலீட்டுத்தத்துவம் தான் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கமுடியும் என்று சொல்கிறது. இது உண்மையெனில் சீனாவைப் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் இந்த விவாதத்தில் சீனன் வெளிநாட்டில் தப்பி ஓடிப்பிழைக்கிற அளவிற்கு அங்கு நிலைமை மோசம் என்று தாங்கள் சொல்லியிருக்கிறீர்கள். இங்கேயே உங்களது முகத்திரை மட்டுமல்ல முதலீட்டுத்தத்துவத்தின் முகத்திரையும் கிழிந்துவிடுகிறது.

          2. இப்பொழுது இந்தியாவிற்கு வருவோம். இந்தியாவில் கம்யுனிசம் உங்கள் பார்வையின் படி கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் இருப்பதாக சொல்கிறீர்கள். இங்கெல்லாம் வேலை வாய்ப்பை மும்பையும் சென்னையும் பெங்களூரும் வழங்குவதாகச் சொல்கிறீர்கள். மக்கள் கேரளாவிலும் மேற்குவங்கத்திலும் டாடாவின் டீ எஸ்டேட்டிலும் காப்பித் தோட்டங்களிலும் கொத்தடிமைகளாக இன்றுவரை வாழ்க்கை நடத்திவருகின்றனர். இதையும் மறைத்துவிட்டுதான் கேரளம் மேற்குவங்கம் கம்யுனிச கோட்டை என்று தினமலம் வாசகர் போல வாதம் வைக்கிறீர்கள். இது பிரச்சனையில்லை.

          3. ஆனால் முதலாளித்துவம் இருக்கிற நாட்டில் ஏன் சிலபல நகரங்களில் மட்டும் முதலீடு கொட்டப்படுவதும், மக்கள் விவசாயத்திலிருந்து பிரிக்கப்படுவதும் வாழ்வாதராங்கள் சூறையாடப்படுவது நடக்கின்றன?

          ———————————————————————————

          இந்தியா- மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூர் அகமதாபாத் சிறப்பு பொருளாதார மண்டலங்கள். இங்கெல்லாம் விவசாயத்தைவிட்டு விட்டு அஞ்சுக்கும் பத்துக்கும் சிங்கி அடிக்கிற கோடிக்கணக்கான மக்கள் தாங்க முடியாத வறுமையிலும் இழிநிலையிலும் வாழ்கின்றனர். பீகார். ம.பி, உ.பி போன்றவையெல்லாம் ஒருவளர்ச்சியும் இல்லாத மாநிலங்கள்.

          அமெரிக்கா- பிலெடெல்பியா, நியுயார்க் (ஐந்தில் ஒருவன் ஏழை), அலபாமா, கலிபோர்னியாவின் பல மகாணங்கள் ஓட்டாண்டிகளாக இருக்கும் மாகாணங்கள்.

          சீனா- சென்ஜென், குவாங்ஜோ, ஷாங்காய், பெய்ஜிங் போன்றவை முதலீடு நகரங்கள். மற்றவை கேரளம் மேற்கு வங்கம் போன்றவை.

          இங்கிலாந்து- லண்டன் முதலாளித்துவ நகரம் என்றால் ஈஸ்ட் இலண்டன் நகரத்தில் ஒரு நரகம்.

          —————————————————————————————-

          முதலீட்டுத் தத்துவத்தின் படி, உலகின் எந்த நாட்டை எடுத்தாலும் இலாபங்களைக் கசக்கிக் பிழிய விவசாய பொருளாதாரத்தை சீரழித்து மக்கள் வாழ்விடங்களில் இருந்து துரத்தி, குறைந்த கூலிக்கு ஆட்களை அமர்த்தி, ஒருபக்கம் அளவிடமுடியாத சொத்துக்களை உடைய கோடிசுவரர்கள் ஒரு பக்கம்; மறுபக்கம் வறுமையும் இழிநிலையும் வைத்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக மேற்கண்ட சான்றுகளில் இருந்து தெரிகிறது.

          இதைத்தான் வளர்ச்சியடைந்த நகரம் என்று வளர்ச்சியடையாத நகரம் என்று பார்க்கிறீர்கள். ஆனால் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு இது. பெரும்பாலான மக்களைச் சீரழித்து அப்பட்டமாக சுரண்டினால் ஒழிய முதலாளித்துவத்தால் நிற்க முடியாது.

          1)குறைந்த கூலிக்கு ஆட்கள் இல்லையென்றால் இலாபம் கிடையாது.

          2) விவசாயத்திலிருந்து மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் பீகாரிலும் ஆட்களைத் துரத்தாவிட்டால் உள்நாட்டு பொருளாதரம் வளரும். உள்நாட்டு பொருளாதாரம் வளர்ந்தால் அந்நிய முதலீடுகள் வராது. அந்நிய முதலீடுகள் ஒரு நாட்டிற்கு வருவதற்குகாரணமே அந்நாட்டில் பணவீக்கம் அதிகம் என்பதனால்தான். சான்றாக அமெரிக்க முதலாளி கனடாவை விட இந்தியாவில் தான் முதலீடு செய்ய விரும்புவார். ஏனெனில் இங்குதான் இலாபம் அதிகம்.

          3) இருந்தபோதிலும் முதலாளித்துவத்தின் முரண்பாடு இப்படியே நிற்காது. மக்களிடம் வாங்கும் சக்தி இருந்தால் தான் சந்தை நிற்கும். சந்தை இல்லாவிட்டால் கீரிஸ் போன்று ஒவ்வொரு நாடும் திவலாகும்.

          4. கீரிஸ் திவாலாவது எதைக் குறிக்கிறது? ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை அது இந்தியாவின் கேரளாவாகவும் மேற்குவங்கமாகவும் பீகாராகவும் இருக்கிறது என்பதைத்தான்.

          நகரத்தை அழித்து நகரத்தை உருவாக்குவது என்பது வடிவேலு சொல்வதைப் போல செத்து செத்து விளையாடுவதைப் போன்றது.

          ஆனால் என்ன கொடூரம் என்றால் இங்கே சாவது தொழிலாளிகள் மட்டுமே; முதலாளிகளின் மூலதனத்திற்கோ சொத்திற்கோ இந்த அமைப்பு நீடிக்கும் வரை எந்த பங்கமும் வருவதில்லை.

          எ.கா: நெதர்லாந்தின் 60% சொத்துக்கள் வெறும் பத்துசதவீத பணக்காரர்கள் கையில்!

          இத்துடன் நிறுத்துகிறேன். வேண்டுமானால் சொல்லுங்கள்; அடுத்த பின்னூட்டத்தில் நெதர்லாந்தில் கேரளாவையும் மேற்குவங்கத்தையும் பீகாரையும் மும்பையும் காட்டுகிறேன்.

          ——————————————————————–

          பின்குறிப்பு: வினவுக்காரர்கள் ஒரு முறை கம்யுனிசத்தைப் பற்றி அறிய விரும்புவர், கம்யுனிஸ்டாக ஆவதைத் தவிரவேறு வழியில்லை என்று சொல்லியிருந்தார்கள். கம்யுனிசத்தைப் பற்றி தெரியவேண்டுமானால் இது ஒரு சந்தர்ப்பம். நேர்மையிருந்தால் நெஞ்சுரம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். அவதூறுகளில் இருந்து ஆரம்பியுங்களேன். உங்களின் அருகதை என்னவென்று பார்த்துவிடுவோம்!

          • Excellent Mr Thendral.In the 1950s and 1960s,Tamil youth knew about Self Respect Movement by listening to speeches of Periyar,Anna,Kalaignar etc.They considered the public meetings of these leaders as Evening Colleges. Similarly,your replies to Raman and others contain lot of insights into communist thinking.You are proving that real communists are not just slogan mongering and that they always think about the welfare of workers and farmers.I would suggest that you should relate these insights into present day plans such as smart cities,bullet trains,Bibek Debroy Committee on Railway restructuring,T.R.Subramaniyam Committee Recommendations on environment,Chandrababu Naidu’s capital city project at Amaravathi etc.Please continue your series of comments.

          • தீவிர கம்மியுநிசவாதிகளுக்கும் தீவிர இசுலாமியவாதிகளுக்கும் ஒரு ஒற்றுமையை காண்கிறேன். தாங்கள் ஏற்றுக்கொண்ட சித்தாந்தம்/கடவுள் தவிர மற்ற எல்லா சிந்தாந்தம்/கடவுள் எல்லாம் பொய் என்ற மனநிலை. தாங்கள் ஏற்றுக்கொண்ட சித்தாந்தம்/கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எல்லாம் வாழத்தகுதி இல்லாதவர்கள், அழிக்கப்பட வேண்டியவர்கள். யாராவது இவர்களோடு விவாதித்தால், கேள்வி கேட்டால் அவர்களை விரோதியாக பாவிப்பார்கள். சிறந்த ஒரு எடுத்துக்காட்டான ஒரு மாடல் இவர்களால் இன்னும் காட்ட முடியவில்லை. கேட்டால் நீங்கள் இன்னும் எங்கள் சிந்தாந்த/கடவுள் புத்தகத்தை முழுமையாக படித்து உணரவில்லை. முழுவதுமாக படித்து விட்டு வாருங்கள் என்று கூறுவார்கள். உங்கள் சித்தாந்தத்தை/கடவுளை முழுமையாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் நடக்கும் நடப்புகளை ஆதாரத்தோடு எடுத்து வைத்தால் உடனே அந்த நாடுகள் எங்கள் சித்தாந்தத்தை/மதத்தை போலியாக ஏற்றுக்கொண்டவர்கள், அவர்கள் உண்மையான கம்மியுநிச்டுகள்/இசுலாமியர் அல்ல என்று விவாதத்தில் இருந்து தாவி விடுவார்கள்.

            தயவு செய்து ஒரு சிறப்பான கம்மியுனிச working model ஐ எங்களுக்கு காட்டுங்கள்.
            நேற்று கூட வியட்நாமில் சீன நண்பருடன் இது குறித்து விவாதித்தேன். கம்மியுனிசம் சீனாவில் தோற்று விட்டது என்று அவரே கூறினார். அது குறித்து அவர் கவலையும் படவில்லை. அது ஒரு failed model என்று அவரே சொன்னார்.

            என்னை பொறுத்தவரை அனைவரும் சமம், அனைவருக்கும் வாய்ப்பு ஆகிய கம்மியுனிச கோட்பாடுகளோடு முழுமையாக நான் ஒத்துப்போகிறேன். அதனை நடைமுறை படுத்துவதில் தான் சில வேறுபாடுகளை காண்கிறேன். அனைவருக்கும் கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் முன்னேற சம உரிமை வழங்கப்பட வேண்டும். அதே சமயம் தனி மனிதர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை தடை செய்யும் வண்ணம் அது இருக்க கூடாது. ஜனநாயகத்தை துறந்த கம்மியுனிசம் என்பது முதலாளித்துவத்தை விட ஆபத்தானது. வாழ்க்கையில் நேர்மையாக முன்னேற வேண்டும் என்ற ஆசையை அடக்க முயல வேண்டாம். அதனால் தான் கம்மியுனிசம் தோல்வியை தழுவியது.

            மற்றவர்களை ஏமாற்றி சம்பாதிப்பது நிச்சயம் தடுக்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் ஒட்டுமொத்தமாக சுயநலமே இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க நினைப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. தங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் நினைப்பது இயல்பான ஒரு விடயம். அதற்கு கடிவாளம் போட்டால் அந்த சித்தாந்தத்தை மக்கள் புறக்கணிப்பார்கள். இதில் சூது, சூழ்ச்சி ஏதுமில்லை.

            தற்போது நம் நாட்டிற்கு தேவை மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒரு தலைமை. அது கிடைத்துவிட்டால் தானாக நாடு முன்னேற்ற பாதையில் செல்லும்.

            எந்த கட்சிக்காரனாக இருந்தாலும் மீடியா, பொதுமக்கள் முன்னிலையில் தங்களது பெயர் கெடுவதை அவர்கள் விரும்புவதில்லை. இதை வைத்து தற்போதைய அரசியல்வாதிகளை மக்கள் நல சட்டங்களை கொண்டு வர என்ன முயற்சி எடுக்கலாம் என்று யோசிக்கலாம்.

            மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை நாம் ஏமாற்ற முடியாது என்று என்றைக்கு அவர்கள் உணருகிறார்களோ, என்று நாடு சரியான வழியில் செல்லும்.

            டெல்லி மக்கள் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளையும் புறக்கணித்து அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஏன் வாக்களித்தார்கள்? மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஒரு நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். வெறும் கோஷங்களோடு நிறுத்தாமல் மக்களுக்கு உண்மையாக பணிபுரிந்து அவர்களின் தேவைகளை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்பவர்களுக்கு மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பார்கள்.

            • கம்மூனிசம் செயிக்குமோ ,சீனாவுல போலிக்கம்மூனிசமா அதெல்லாம் கேட்டுட்டு இருந்தா தென்றல் உங்க மேல கடுப்பாகிட போறாரு,
              முதல் பத்தி மட்டும் முற்றிலும் உண்மை.

          • தோழர்.தென்றல்

            //அமெரிக்கா- பிலெடெல்பியா, நியுயார்க் (ஐந்தில் ஒருவன் ஏழை), அலபாமா, கலிபோர்னியாவின் பல மகாணங்கள் ஓட்டாண்டிகளாக இருக்கும் மாகாணங்கள்.//

            //இங்கிலாந்து- லண்டன் முதலாளித்துவ நகரம் என்றால் ஈஸ்ட் இலண்டன் நகரத்தில் ஒரு நரகம்.//

            அலபாமா, கலிபோர்னியா, டெக்சாஸ் போன்ற மாநிலங்கள் ஓட்டாண்டிகளாக இருக்கின்றன சரி. ஆனால், அமெரிக்காவில் இருந்தோ அல்லது ஐரோப்பிய நாடுகளில் இருந்தோ “எங்களுக்கு வாழ வழியில்லை” என்று கதறி கொண்டு யாரும் கள்ளத் தோனியின் மூலமாக வேறு நாடுகளுக்கு ஓட வில்லையே. இதெல்லாம் கியூபா, வெனிசுலா, சீனா போன்ற சோஷலிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளில் மட்டும் நடக்கும் மர்மம் என்ன?

            • \\அமெரிக்காவில் இருந்தோ அல்லது ஐரோப்பிய நாடுகளில் இருந்தோ “எங்களுக்கு வாழ வழியில்லை” என்று கதறி கொண்டு யாரும் கள்ளத் தோனியின் மூலமாக வேறு நாடுகளுக்கு ஓட வில்லையே. இதெல்லாம் கியூபா, வெனிசுலா, சீனா போன்ற சோஷலிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளில் மட்டும் நடக்கும் மர்மம் என்ன?\\

              இதில் மர்மமெல்லாம் ஒன்றுமில்லை மேரி அவர்களே! தாங்கள் சொல்வதுபோலன்றி இது கியுபா, வெனிசுலாவில் மட்டும் நடைபெறுவதில்லை.சீனா சோசலிச பொருளாதாரம் அன்று. உலகின் அமெரிக்காவிற்கு அடுத்த ஏகாதிபத்தியம் சீனா. ஏகாதிபத்தியம் என்றால் அழுகிநாறும் முதலாளித்துவம்.

              ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளும் செல்லும் இடம் தரவரிசையின் படி ரசியா, ஜெர்மனி, பிரான்சு.

              ஆப்ரிக்கர்கள் செல்லும் இடம் குவைத், அரேபியா, இத்தாலி (கள்ளத்தோணி), போர்ச்சுக்கல்.

              மெக்சிகோ செல்லும் இடம் யுஎஸ் ஏ.

              பிரேசில் செல்லும் இடம் கனடா.

              இவற்றில் ஆப்ரிக்கா தவிர அனைத்தும் முதலாளித்துவ நாடுகள்.

              எந்தக் கேப்பிட்டலிசம் உள்ள நாட்டிலும் சேரிகள் என்பது முதலாளித்துவத்தின் கொடூரத்தால் தான் உருவாக்கப்படுபவை. உங்களது இரண்டாவது கேள்விக்கு விடைகாண, நாம் அமெரிக்காவெல்லாம் போக வேண்டிய அவசியமில்லை.

              பனைமரத்துப்பட்டியிலிருந்து மும்பைக்கு ஓடிப்போய் தாராவியிலோ அல்லது டில்லியின் ராம்தாஸ் காலனியோ மக்கள் குடியேறுகிற பொழுது உங்கள் கேள்வி என்ன கேட்கிறது? தாராவியின் மக்கள் ஓட்டாண்டிகள் எனும் பொழுது அவர்கள் ஏன் வேறு இடம் போகவில்லை என்று கேட்கிறது. இந்தியாவிற்குள்ளேயே விடைகாண முடியாத முட்டுச்சந்து இது. முதலாளித்துவம் இயங்குவதற்கு தேவையான அடிப்படையான முரண்பாடு இது.

              இதே உலக அளவில் அமெரிக்கா, சீனா, ரசியா, சப்பான் என்று நான்கு ஏகாதிபத்தியங்கள் உள்ளன. இதில் பெரிய அண்ணன் அமெரிக்கா, சின்ன அண்ணன் சீனா. அமெரிக்காவில் உள்ள ஏழைகள் ஏன் வேறு இடம் நோக்கிப்போகவில்லையென்று கேட்பது மும்பையின் தாராவி மக்கள் ஏன் வேறு இடம் நோக்கிப் போகவில்லையென்று கேட்பதுபோல் உள்ளது.

              இதற்கு இராமன் என்ன சொல்கிறார் என்றால் மும்பையின் தாராவிதான் சொர்க்கமாக இருக்கிறது. மக்கள் கவுரத்தோடும், வாய்ப்புகளோடும் இருக்கிறார்கள் என்கிறார். அவர் முன்வைக்கும் கவுரவம் அமெரிக்கா சேரியின் கவுரம் சீனச் சேரியின் கவுரவம் எல்லாம் முதலாளித்துவத்தின் மானக்கேடான சீரழிவுகள்!

              ஏனெனில் எங்கெல்லாம் மக்கள் வாய்ப்பு தேடி ஓடினார்களோ, அங்கெல்லாம் அங்கு சொந்த நிலங்களைவிற்றுவிட்டு, உதிரிபாட்டாளிகளாக, குற்றக்கும்பல்களின் கோரப்பிடியில் மிகவும் இழிந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

              சீனாவில் ஜென்ஜென்னில் குடியேறிய உள்ளூர் சீனர்களின் நிலையும், அமெரிக்காவின் நியுயார்க்கில் இருந்து வாசிங்கடன் நகர்ந்த உள்ளூர் அமெரிக்கர்களின் நிலையும், சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு கள்ளத்தோணி போய் நியாயார்கில் சைனீஸ் கேம்பர்கர் விற்கிற சீனரின் நிலையும் இப்படிப்பட்டது தான்!

              இதை எப்படி பெருமையாக அதுவும் முதலாளித்துவத்தின் சாதனையாக கருத முடியும்? முதலாளித்துவத்தின் முடிந்த முடிபான இழிநிலை இது. மனிதச் சரக்கின் துயரக்கதை இது.

              ——————————————–
              ஒரு தலைகீழ் கேள்வி?

              ஏன் அமெரிக்காவின் முதலாளிகள் ஏழை நாடுகளான துனிசியாவிலும் ஆப்ரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் கடைவிரிக்க வேண்டும்? இராமன் சொல்வதைப்போன்று அவர்கள் நமக்கு வாய்ப்பளிக்கும் நல் உள்ளங்கள் என்று வைத்துக்கொள்ளலாமா? மனிதச் சரக்கின் துயரக்கதையில் அமெரிக்கா சீனாவின் நாடுபிடிக்கும் ஏகாதிபத்தி வெறி இல்லையா?

              • உயிரோடு தாரவிக்கு போவதும் , உயரி போக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் அமெர்க்கா போவதும் ஒன்று இல்லை . இரண்டையும் ஒன்று போல பேசி குழப்ப வேண்டாம் .

                கட்டுரையில் வரும் சீனா இளைஞன் முன் இப்படி இரண்டு சிந்தனைகள் வந்து இருக்கும் . உயிரோடு நகரத்திற்கு போவதா ? உயிரை பணயம் வைத்து அமேரிக்கா போவதா ?

                அவன் ஏன் பின்னதை தேர்ந்தெடுத்தான் ?

                //பிரேசில் செல்லும் இடம் கனடா.//

                பக்கத்துல வெனிசூல இருக்கும் போது , எப்படி இது ?

                • உயிரோடு தாராவிக்குப் போகிறார்கள் என்பது உங்கள் மனவக்கிரத்தின் உச்சம். மிகச்சமீபத்தில் மேற்குவங்க மால்டா மாவட்டத்தில் ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்டு தன் குழந்தையின் சதையை அறுத்துத்தின்றாளாம். ஏன் தெரியுமா? தன் கணவன் டில்லிக்கு வேலை தேடிச் சென்றதாக போனவன் ஒருவருடமாகியும் வீடு திரும்பவில்லை. டில்லியில் குளிரில் விறைத்துச் சாகிற ஏழைகள் மட்டுமே ஆயிரக்கணக்கில். சொந்த இடத்தில் விவசாயத்தைத் தொலைத்து, எங்கே போனான் என்று முகவரியே இல்லாமல் தொலைந்தவர்கள் இலட்சக்கணக்கில் உண்டு. உங்கள் முதலாளித்துவத்தின் கொடூரத்தின் உச்சம் இது.

                  மும்பையின் கணக்கு வேண்டுமா? இந்தக் கதை ஏழையினுடையது அல்ல. ஹைதாரபாத் கமிசனரின் பள்ளி செல்லும் மகள் மும்பை விபச்சார விடுதியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டாள். ஏன்? மாடலிங்கில் கொடி கட்டி பறக்கலாம் என்று நினைத்த மாணவியை வெறும் லிப்ஸ்டிக்கை காட்டி கடத்திச் சென்றது முதாலாளித்துவ விபச்சாரக்கும்பல் (ஆதாரம் சுனிதா கிருஷ்ணன்-என்ஜிஓ).

                  தாராவிக்கு உயிரோடு போகிறார்கள் என்று தாங்கள் சொல்வதற்குக் காரணம் உங்கள் மனநிலையை வடிவமைத்த முதலாளித்துவம் தான்.

                  ஸ்லம் டாக் மில்லினியர் படம் எடுத்து, சேரி சொர்க்கம் என்று காட்டி ஆஸ்கார் வாங்கியது இதே அமெரிக்கா தானே?!!!!

                  காக்காமுட்டையில் வறுமை இனிமை என்று சொன்னதும் இதே பாக்ஸ் ஆபிஸ் அமெரிக்காகாரன் தானே!

                  இதே சீனனை அமெரிக்கா என்று காட்டி, மாபியாவிடம் கொத்தடிமைகளாக விற்றதும் இந்த மனோநிலைதானே!

                  இவ்வளவு மூச்சைக் கொடுப்பதற்கு, இருநுறு ஆண்டுகளாக சுரண்டிய அமெரிக்காவை இபபடிக் குடியேறுகிறவர்களுக்கு கீரின் கார்டு கொடுக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம். இன்போசிஸ் கார்ப்பரேட்களுக்கான விசாவே, திருட்டு விசா என்கிற பொழுது உங்களைப்போன்ற ஆட்களே பக்கா திருட்டுப் பயல்கள் என்கிற பொழுது உங்கள் வாதத்தில் ஏதாவது முகாந்திரம் இருக்கிறதா?

                  ஆக உங்களைப்போன்றவர்கள் தாராவி, தீடிர் நகரை விட அமெரிக்காவை உயிரைப் பணயம் வைத்து தேர்ந்தெடுப்பதற்கு காரணம் என்று சொல்வதற்கு உங்களுக்கு அமெரிக்காவின் சேரியைப் பற்றியோ இந்தியாவின் சேரியைப் பற்றியோ ஏதுவும் தெரியவில்லை என்பது மட்டுமல்ல; அதை தெரிந்து கொள்ளவிரும்பாதவரும் கூட என்று சொல்லலாம்.

                  இந்த விதத்தில் கார்ப்பரேட் அமெரிக்க அடிமைகள் தான் ஆர்வெல்லையும் சேர்த்து பன்றிகளாக இருக்கின்றனர் என்று சொல்லலாமில்லையா?

                  \\கட்டுரையில் வரும் சீனா இளைஞன் முன் இப்படி இரண்டு சிந்தனைகள் வந்து இருக்கும் . உயிரோடு நகரத்திற்கு போவதா ? உயிரை பணயம் வைத்து அமேரிக்கா போவதா ?\\

                  ஆம். அதனால் தான் புஜியானில் வாழும் சீனன் அமெரிக்க கேப்பிடலிச நகரங்களுக்கு ஈடான சற்றும் தீமை குறையாத முதலாளித்துவ சூறையாடல் நகரங்களான ஷாங்காய்க்கும், செஞ்சென்னிற்கும் பிஜீங்கிற்கும் போவதற்கு தயங்கி அமெரிக்கா சொர்க்கமாக இருக்கும் என்று நினைத்து உயிரைப் பணயம் வைக்கிறான்.

                  முதலாளித்துவ கொடூரத்திற்கு மாற்று முதலாளித்துவம் அல்ல என்பதை பயணத்தின் இறுதியில் தானே கண்டுகொள்கிறான். அங்கு தானே முதலாளித்துவ ஈனத்தனம் முழு வீச்சில் தெரிகிறது.

                  இதைவிட இன்னொன்றையும் கறாராகச் சொல்லலாம். இதே அமெரிக்க முதலாளிகள், சீன நகரங்களில் முதலீடுகளைக் கொட்டோ கொட்டு என்று கொட்டுவதும் சீன முதலாளி அமெரிக்க கடன்பத்திரங்களில் முதலீடு செய்வது பற்றியும் வாயே திறக்க முடியவில்லையே உங்களைப்போன்றவர்களால்? இது எதைக் காட்டுகிறது?

                  முதலாளித்துவம் இருக்கிற இடங்களில் எல்லாம் ஏழைகள் இன்னும் ஏழைகளாக இருக்கிறார்கள். பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

                  இதில் ஒரு முதலாளித்துவ நாடு ஏழைக்கு வழங்கும் இடம் என்ன என்பதுதான் கேள்வி! அது இழிநிலை, வறுமை தாங்கமுடியாத துயரம் என்பதன்றி வேறல்ல. உங்களால் இதைப் புரிந்துகொள்ள இயலாமல் சொர்க்கம் என்று கதைப்பதற்கு காரணம் ஒருவகையான சாடிசம் அன்றி வேறில்லை!

                  \\பக்கத்துல வெனிசூல இருக்கும் போது , எப்படி இது ?\\

                  இந்தக் கேள்வியில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? சோசலிச பொருளாதாரம் இருக்கிற அனைத்து இலத்தின் அமெரிக்க நாடுகளிலும் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியது அமெரிக்க ஏகாதிபத்தியம் தான். இதில் பிரேசில்காரன் வெனிசுலா போவது இருக்கட்டும். முதலில் ஒரு வெனிசுலாக்காரனலோ அல்லது பிரேசில்காரனாலோ தான் உற்பத்தி செய்த பொருளை அமெரிக்காவின் இடையூறின்றி முதலில் வர்த்தகத்தில் ஈடுபட முடியுமா? தாங்கள் ஒரு முதலீட்டுவாதி என்கிற பொழுது கொஞ்சமாவது மான ரோசம் இருந்தால் இப்படியொரு கேள்வியைக் கேட்பீர்களா?

    • முதலாளித்துவம் வாய்ப்பை தருவதன் முலமே நீடிக்க முடியும்,ஆனால் மனிதத்தை கொன்று விடும்.சோசலிசம் வாய்ப்பும் தரும் வாழவும் வைக்கும்.தயவு செய்து கம்யுனிிசத்தை பற்றி தொிந்து கொண்டு பேசுங்கள்,

      • //சோசலிசம் வாய்ப்பும் தரும் வாழவும் வைக்கும்//

        இது உங்கள் கற்பனை . நிஜ வாழ்வில் இது ஏதும் நடந்து இருக்கவில்லை . மத சட்டம் வந்தால் மக்கள் திருத்திவிடுவார்கள் என்று நம்பும் பக்தன் போல உள்ளது உங்கள் கூற்று .

  6. Under the essay about SANGATE,Sooriyan has described how the media has trained the American and European public to view the “illegal” immigrants.(Like the grand sons of a feudal lord looking at the poor quarreling among themselves for the porridge distributed by the feudal lord during the festival)Media in India has also trained people like Raman to look at the poor the same way.

  7. கற்றது கையளவு !!! நீங்கள் கேட்கும் ரோல் மாடல், 1920 இலிருந்து 1950 வரை ஸ்டாலின் அமைத்த பூலோக சொர்க்கம். 200 வருடங்களாக பிரிட்டன் உலக மக்களை எல்லாம் கொன்று குவித்த வள்ரச்சியை 30 வருடங்களில் அடைந்தது. அனைவருக்கும் அனைத்தும் கிடைத்தன.
    M18, சிஐஏ ஆகியவை எப்படி அவதூறு பரப்பி, இட்லரை ஏவி அந்த நாட்டினை நாசம் ஆக்கின என்பது வரலாறு. பிரிட்டிஸ் ஆவணங்களிலே இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

    வியட்நாமில் சீனன் தென்பியாங்கிடம் கேட்டீர்களா ?

    • Aathavan/தமிழ்,

      192௦-195௦ இல், 2௦௦ வருடங்களில் கொண்டு வந்த வளர்ச்சியை 3௦ வருடங்களில் அடைய முடிந்தால், ஏன் அந்த வளர்ச்சியை மீண்டும் கொண்டு வர மக்கள் முயலவில்லை?

      ஏன் அத்தகைய ஒரு முயற்சியை மக்கள் புறக்கணிக்கிறார்கள்?

      சூது, சூழ்ச்சி என்று மீண்டும் கண்மூடித்தனமாக யோசிக்காமல் சற்று நிதானமாக யோசித்தால் தங்களுக்கே விளங்கும்.

      கூண்டில் அடைபட்ட கிளிக்கு மூன்று வேளை உணவும் இருக்க இடமும் இருக்கிறது. ஆனால் அதனால் அது இஷ்டப்பட்ட இடத்திற்கு செல்லவோ, இஷ்டப்பட்ட வாழ்க்கையை அடையவோ அதற்கு அனுமதி இல்லை. அது நிச்சயம் சுதந்திரமாக திரியும் கிளியின் வாழ்க்கைக்கு தான் எங்கும்.

      ஒரு கிளிக்கே சுதந்திரம் தேவை எனும்போது மனிதர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவது தவறில்லையே.

      1௦௦ சதவீதம் முதலாளித்துவம், 1௦௦ சதவீதம் கம்மியுனிசம் இரண்டுமே மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. இரண்டிலும் ஆபத்து உள்ளது. எனவே, ஒரு புதிய வடிவை மக்களுக்கு வழங்க முயற்சிக்கலாம். முதலாளித்துவத்தில் உள்ள சுதந்திரம், ஜனநாயகம், அனைவருக்கும் முன்னேற வாய்ப்பு, கம்மயுநிசத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவ வசதி, அனைவருக்கும் சம உரிமை, தொழிலாளிகளுக்கு அவர்கள் வேலைக்கு ஏற்ற நல்ல ஊதியம் ஆகிய இரண்டு வடிவங்களையும் இணைத்த புது வடிவத்தை கொண்டு வர யோசிக்கலாம்.

      நான் மேலே கூறியது போலி முதலாளித்துவம், போலி கம்மியுனிசம் பற்றி அல்ல. மக்கள் விரோத அரசுகள் பற்றி அல்ல.

  8. கம்யூனிசத்தையும், பொதுவுடைமை சமுதயாதையும், விமர்சனம் செய்யும் முதலாளிதுவம், மூலதனத்தை விரும்பும் பலரும் எளிதாக கேட்கும் கேள்வி உலகில் எங்ஙாவது வெற்றிகரமான கம்யூனிச நாடு ஒன்று உன்டா என்பது. அதேபோல், உலகில் உழைப்பை சுரண்டாத சமத்துவத்தை அடைந்த முதலாளித்துவ நாடுகள் உன்டா என்று கேட்பதில்லை. மூலதனத்தில் அதிக லாபம் தந்த ஆப்பிள் , அதன் உற்பத்தி பொருட்களுக்கு பின்னால் இருக்கும் உழைப்பு சுரன்டல், இயற்கை வளங்கள் சுரன்டல் இவை அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை, தெரிந்தாளும் காட்டிகொள்வதில்லை. எங்கோ எவனோ எப்படி செத்தால் எனக்கு என்ன. அவனை யாரு அமெரிக்கா வர சொன்னது, அவனுக்கு அமெரிக்க மெல இருக்க நம்பிக்கைல அவன் உயிரை பனையம் வைக்கிரான், இது தான் மூளதனத்தின் வெற்றி அப்டினு பெருமை பேசிகிராங்க, தன்நலமும், தான் அன்டி பிழைக்கும் ஆதாரத்தின்நலமும் அவுங்களுக்கு முக்கியம் தானே. ஆண்டிலா வின் உயரத்தில் பெருமை கொள்ளும் மனமுடையோர் அதை சுற்றி உள்ள வீடற்றோரின் நிலை பற்றியோ, அருகிருக்கும் சேரிகளின் நிலை பற்றியோ, காரணம் பற்றியோ சிந்திக்கும் எண்ணம் வராது. அவர்களின் பார்வை அப்படி பழக்கபடுத்தபட்டிருக்கிறது.

  9. அமெரிக்க சொர்க்கத்தைப் பற்றி புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கும், முன்றாம் உலக நாடுகளில் இருந்து புலம்பெயரும் மக்கள் (இப்போது சோஷலிச நாடு என்று சொல்லிக் கொள்வதற்கு எந்த மாதிரியும் இல்லாத போது) ஏன் சோஷலிச நாடுகளுக்குச் செல்வதில்லை? என்பது போன்ற அறிவுப்புர்வமான(?) கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் ராமன் போன்ற அறிவாளிகளும், அது போன்ற சிந்தனையுடைய மற்ற அன்பர்களும் கிழ்க்காணும் செய்தியை செய்தியை படித்துவிட்டு, ஏன் 35 சதவிகித அமெரிக்க மக்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற நினைக்கிறார்கள் என்பதற்குப் பதில் கூறவும்..

    35% of Americans would consider leaving the US – study

    http://rt.com/usa/271144-americans-considering-leaving-us/

    ராமன், Rebecca Mary போன்றோர்களுக்குப் பதில்களாக அருமையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கும் தோழர் தென்றல் அவர்களுக்கு வாழத்துக்கள்.

  10. கற்றது கையளவு

    காரணத்தையும் கூறிவிட்டு (சூது / சூழ்ச்சி) வேறு மாதிரி யோசிக்க சொன்னால் எப்படி ?

    மேற்கூறிய சூதும் சூழ்ச்சியும் ஒரு காரணம் என்றால், உள்காரணங்கள்

    1) ஸ்டாலினிச அரசில் ஏகாதிபத்திய கைகூலிகள் ஊடுருவல் – இதற்கு தீர்வாக மாவோ, கலாச்சாரப்புரட்சியை உள்வைத்தார்.

    2) கம்பியூனிச கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கையில் கவனம் தேவை என்பது சோவியத் உடைப்பின் பாடம்.

    3) குட்டி முதலாளித்துவ பூச்சிகள் மீது கட்சியின் கட்டுப்பாடு தேவை என்பதும் ஒரு பாடம்.

    இந்தப் பிரச்சனைகளை எல்லாம் களைந்து மீண்டும் சோவியத் எழும்.

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க