Wednesday, April 14, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க நொறுங்கியது டாஸ்மாக் - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போர் !

நொறுங்கியது டாஸ்மாக் – பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போர் !

-

வினவு வீடியோ:

காந்தியவாதி சசி பெருமாளை ‘திட்டமிட்டுக்’ கொன்ற தமிழக அரசு தொடர்ந்து டாஸ்மாக்கை நடத்துவதில் வெறியாக இருக்கிறது. ஆனால் தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகளை நொறுக்குவதில் மக்களும் உறுதியா இருக்கின்றனர். ஆம் சென்னை முதல் குமரி வரை போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. நெருப்பாய் பரவி வருகின்றன.

இந்நிலையில் இன்று 03.08.2015 திங்கட் கிழமை மதியம் 12.30 மணிக்கு சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சுமார் 600 பேர் வெளியே வந்து பூந்தமல்லி சாலையில் மறியல் செய்தனர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் மாணவர்கள் போர்க்குணத்துடன் முழக்கமிட்டனர்.

மூடு டாஸ்மாக்கை ! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும் ! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31 !”

எனும் மக்கள் அதிகார மையத்தின் முழக்கங்களை தொடர்ந்து எழுப்பினர். முதலில் போக்குவரத்து போலிசாரும் பிறகு சட்டம் ஒழுங்கு போலிசாரும் வந்தனர். மாணவர்களிடம் கலந்து போகுமாறு பேசிப் பார்த்தனர். மாணவர்கள் மறுத்து விட்டு தொடர்ந்து மறியலை நீட்டித்தனர். மொத்தம் அரை மணி நேரம் மறியல் நடந்தது.

மறியல் நடந்து கொண்டிருக்கும் போதே தீடிரென்று மாணவர்கள் பச்சையப்பா கல்லூரி அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை நோக்கி ஓடினர். தீவிர விற்பனையில் மும்முரமாக இருந்த டாஸ்மாக் கடை இந்த மாணவர் படையை எதிர்பார்க்கவில்லை. முதலில் சில மாணவர்கள் பிறகு அனைவரும் என குழு குழுவாக உள்ளே நுழைந்தனர். கடையின் பெயர்ப் பலகை, கடையில் இருந்த பெட்டிகள், பாட்டில்கள் அனைத்தும் மாணவரின் தாக்குதலில் சின்னாபின்னமாக்கப்பட்டது. சாலை முழுவதும் சாராய வெள்ளம் ஓடியது.

இதை எதிர்பார்க்காத போலிஸ் பிறகு லத்திக் கம்புகளோடு படையை அதிகரித்துக் கொண்டு மாணவர்களை தாக்க ஓடி வந்தது. போலிஸ் தாக்க ஆரம்பித்த பிறகு மாணவர்கள் சிதறி ஓடினர். ஆனால் அவர்கள் ஓடுவதற்கு முன்னர் டாஸ்மாக் கடை சுக்கு நூறாக உடைக்கப்பட்டது. நோக்கம் நிறைவேறியது.

வெறி கொண்ட போலிஸ் கொடூரமாக அடிக்க ஆரம்பித்தது. குறிப்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பில் இருக்கும் மாணவர்களை தேடிப் பிடித்து அடிக்க ஆரம்பித்தது போலிஸ். அந்த மாணவர்கள் தலை உடைந்து ரத்தம் ஓடிய போதும் அவர்கள் வாய் முழக்கத்தை நிறுத்தவில்லை. பச்சையப்பன் கல்லூரியில், பு.மா.இ.முவின் முன்னாள் கிளை செயலராக இருந்த தோழர் செல்வம் ரோட்டில் சுற்றி வளைத்து அடிக்கப்பட்டார்.

அவரைக் காப்பாற்றப் போன பெண் தோழர்கள் ஏழு பேரும் மிருகத்தனமான அடிகளை வாங்கிக் கொண்டனர். மாணவர்களுக்கும் தோழர்களுக்கும் தலையுடைந்து ரத்தம் ஓடியது. ஆண் தோழர்கள் ரத்தத்தோடு கைது செய்யப்பட்டதும், பெண் தோழர்கள் கடையின் முன்னால் அமர்ந்து முழக்கம் போட ஆரம்பித்தனர்.

அவர்களை இழிவான மொழியில் திட்டிய போலிஸ் மிருகங்கள் கடைக்கு முன்னாடி இருந்த ஜேசிபி வண்டியை கிளப்பச் சொல்லி அது தோழர்களை உரசிப் பாரக்கும் வண்ணம் போகச் செய்து அழகு பார்த்தது.

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை கண்டு அதிர்ச்சியுற்ற செய்தியாளர்கள், பொது மக்கள் போலிசிடம் சண்டைக்குச் சென்றனர். ஆண் போலிஸ் காலால் உதைத்து, கெட்ட வார்த்தையால் திட்டி தனது வெறியை காட்டிக் கொண்டது. பிறகு மக்கள் எதிர்ப்புக்கு பிறகு பெண் போலிஸ் வந்து ஆண் போலிஸ் செய்த அதே வேலையை செய்தது.

படுகாயமடைந்த மாணவர்கள், தோழர்கள் அருகாமையிலுள்ள கே.எம்.சி மருத்தவமனையில் சேர்க்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட தோழர்கள், மாணவர்கள் சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மொத்தம் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் – மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பு.மா.இ.மு செயற்குழு உறுப்பினர் தோழர் நிவேதா மயங்கி விழுந்தார்.

ஆனால் தமிழக மக்களை மயக்கி சீரழித்து வரும் டாஸ்மாக்கை எதிர்த்து மாணவர்கள் போர் அறிவித்து விட்டனர். பச்சையப்பா மாணவர்கள் என்றால் ரவுடிகள், விஷமிகள் என்று இழிவு படுத்திய போலீசுதான் உண்மையில் ரவுடிகள் என்று நிரூபித்திருக்கிறது. மக்களின் துன்பத்தை நீக்கும் விதமாக இதோ மாணவர்கள் அணிவகுத்து விட்டனர்.

ஆலை தயாரிப்பு முதல், இலவச பொருள் வரை அனைத்துக்கும் பணத்தை அள்ளித் தரும் டாஸ்மாக்கிற்கு வரும் இடையூறை ஜெயா சசி கும்பல் பெரும் வெறுப்போடு பார்க்கிறது. அதன் காரணமாகவே போலிஸ் நாய்களை ஏவிவிட்டு ஒழித்து விடலாம் என்று பார்க்கிறது.

இதை ஏதோ வரும் தேர்தல் பிரச்சினையாக மாற்ற நினைக்கும் ஓட்டுக் கட்சிகளுக்கு மத்தியில், இல்லை இது அரசும் ஆளும் வர்க்கமும் திட்டமிட்டு செய்யும் தாக்குதல், இதை நாமே முறியடிக்க வேண்டும், மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதே தீர்வு என்று போராட்டம் சரியான பாதையை நோக்கிச் செல்ல வேண்டும்.

டாஸ்மாக்கிற்கு கெடு விதித்திருந்த “மக்கள் அதிகாரம்” எனும் அமைப்பின் சார்பில் விருத்தாசலம் இன்னபிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் நொறுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. பின்னர் அதை விரிவாக பதிவு செய்கிறோம்.

தற்போது சென்னை மற்றம் மதுரையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைத் தாக்கிய போலிஸ் மிருகங்களைக் கண்டித்து இந்தப்போராட்டம் நடக்கிறது.

 

pachayappa students rsyf (1) pachayappa students rsyf (2) pachayappa students rsyf (3) pachayappa students rsyf (4) pachayappa students rsyf (5) pachayappa students rsyf (6)

pachayappa students rsyf (3)

 1. /காந்தியவாதி சசி பெருமாளை திட்டமிட்டுக் கொன்ற/

  அரசு இவரை பிளான் பன்னி போட்டுதள்ளியதாக தெரியவில்லை.ஆதாரமில்லாத மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமாக போல தெரிகிறது

  • சசி பெருமாள் கலந்து கொண்ட அந்த டாஸ்மாக் கடை விதிமுறைப்படியே ஆரம்பத்திலிருந்தே மூடப்பட வேண்டிய கடை. இதை எதிர்த்து மாதக்கணக்கில் அங்கே போராட்டங்களும் முயற்சியும் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்கள் மற்றும் சட்டம் விதிமுறையை சட்டை செய்யாத அரசும், அதிகாரிகளும் ஒவ்வொரு முறையும் அலட்சியமாகவே தட்டிக் கழித்திருக்கின்றனர். இந்நிலையில் சசி பெருமாள் போராட்டத்தை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இது குறித்து பின்னர் எழுதுகிறோம். இங்கே திட்டமிட்டு கொன்றது என்பது அரசு அடித்து கொன்றதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் எப்படியாவது கடையை தொடர்ந்து நடத்துவோம் என்று அவர்கள் அதிகார மமதையோடு பலத்தோடு நடந்திருக்கின்றனர். அதுதான் அந்த திட்டமிட்ட கொலை

   • அரசு செய்த கொலை என்பதில் மாற்றுகருத்து இல்லை. “திட்டமிட்டு” கொலை செய்தது எனும் போது, அந்த அளவுக்கு அரசை அச்சுறுத்தியிருக்கிறார் என்று பொருள் வருகிறது.அதை ஏற்கமுடியவில்லை.
    தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

 2. போராட்டம் குறித்தப் பதிவுகளைத் தொலைக்காட்சியில் கண்டு உள்ளம் திகைக்கின்றது. மாணவர்களையும் பு.மா.இயக்கத்தினரையும் காவல்துறையினர் கையாளும் முறை அரசின் எதேச்சாதிகாரத்தினைப் பறைசாற்றுகிறது. மாணவர்கள் முழு மதுவிலக்கினை நோக்கி மிகத்தீவிரமாகப் போராட முனைந்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது. பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் பங்குகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் மனித அறிவை அழிக்கும் மதுவை வேருடன் அழித்து சமூகம் நலம்பெற இயலும்.

 3. The protest should concentrate on protesting against the habbit of drinking…enlight the family memers of the drunkards, neighbours, by posters an up to toop movement will have better results.

 4. பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்…

  முரட்டு மாணவர்கள் என்று பெயர் எடுத்தவர்களை சமூக நன்மைக்காக போராட தூண்டிய பு மா இ மு இயக்கம் செய்த காரியம் மிக அருமை.

  தமிழக மாணவர்களுக்கு பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் முன் மாத்ரி யாக நடந்து கொண்ட விதம் பிரமிக்கவைக்கிறது.

 5. குடி குடியை கெடுக்கும், குடி கேடி ஜயலலிதா தமிழ் நாட்டை கெடுத்து விட்டார் , சீ ஜெயலலிதா குடி கெடுத்து பணம் சேர்க்கும் பிழைப்பெல்லாம் ஒரு பிழைப்பா சாராயம் விக்கும் ரவுடிகளின் சாம்ராஜியத்தின் ராணி என்ற மமதயில் திரிகிற உனக்கு முடிவு காலம் வெகு விரைவில் வரும் ….

 6. அரசு மதுபான கடையை உடைப்பதை விட
  மதுபானம் சப்ளை செய்கிற சாரய வியாபாரிகள்
  நடத்தும் பேக்டரிகளை அடித்து நொருக்கினால்
  நன்றாக இருக்கும் அல்லவா?
  எரிகிறதை புடுங்கிட்ட
  கொதிக்கிறது நின்றுவிடும் அல்லவா?

  • தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கயும் சாராய பேக்டரி கிடையாதா ஹைதர் ?.

 7. அரசு மதுபான கடையை உடைப்பதை விட
  மதுபானம் சப்ளை செய்கிற சாரய வியாபாரிகள்
  நடத்தும் பேக்டரிகளை அடித்து நொருக்கினால்
  நன்றாக இருக்கும் அல்லவா?
  எரிகிறதை புடுங்கிட்ட
  கொதிக்கிறது நின்றுவிடும் அல்லவா?
  மது தயாரிக்கும் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை… அறிந்து கொள்ளுங்கள்!
  தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டள்ளன. தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் யார்? யார்? என்று பார்ப்போம்.
  பீர் வகைகள்…
  சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர்.
  மோகன் புருவரீஸ் – மருத்துவக் கல்லூரி உரிமையாளர்.
  எம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன்.
  கல்ஸ்- தி.மு.க. தலைமையின் வாரிசுகள்.
  அப்பல்லோ- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.
  ஏ.எம். புருவரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது.
  மதுவகைகள்…
  யுனைடெட் ஸ்பிரிட்ஸ்- பெங்களூரு பிரபல தொழிலதிபர்.
  மோகன் புருவரீஸ்- மறைந்த முதல்வருக்கும் நெருக்கமான தொழிலதிபர்.
  சிவா டிஸ்டில்லரீஸ்-மறைந்த பொள்ளாச்சி தொழிலதிபர் குழுமத்துக்கு சொந்தமானது.
  எம்.பி டிஸ்டில்லரீஸ்- எம்.பி. புருஷோத்தமன்.
  சபில் – பொழுது போக்கு பூங்கா உரிமையாளருக்கு சொந்தமானது.
  மிடாஸ்- அ.தி.மு.க. தலைமை ஜெயலலிதா நெருக்கமானவருக்கு சொந்தமானது.
  எலைட் டிஸ்டில்லரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமானது.
  எஸ்.என்.ஜே- கருணாநிதிக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமானது.
  கல்ஸ் – திமுக வாரிசுகளுக்கு சொந்தமானது.
  கோல்டன் வாட்ஸ்-தஞ்சை தி.மு.க. அரசியல் தலைவருக்கு சொந்தமானது.
  இம்பீரியல் ஸ்பிரிட்ஸ்- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.
  இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் முதல் 8 லட்சம் பெட்டிகள் வரை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை.

 8. சில காலங்களுக்கு முன்பு ராமசேனா பப்புக்குள் புகுந்து பெண்கள் குடிக்க கூடாது என்று அடித்தார்கள்
  காதலர் தினம் தவறு என்று கூட பயமுரிதினார்கள்

  ஆப்கானிஸ்தானில் பெண்கள் கால் முகம் கூட தெரியாத அளவிற்கு ஆடை அணியவில்லை என்றால் , குச்சியால் முதாலிக் என்னும் மத படை அடிப்பார்கள்

  குடிப்பதை தடுக்க பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கடைக்குள் புகுந்து நொறுக்கி இருகிறார்கள்

  இந்த மூன்று சம்பவங்களிலும் உள்ள ஒற்றுமை என்ன வென்றால் பெரும்பான்மை சமூகத்திற்கு எது நல்லது என்பதை ஒரு குழு முடிவு செய்து அவர்களுடைய சிந்தனையை அடாவடியாக திணிக்க முற்படுவதுதான் .

  நல்ல பழக்கம் என்பதை யார் முடிவு செய்வது? இறைவனை வணங்குவது நல்ல பழக்கம் , நாத்திகம் அபத்தமானது என்று ஒரு குழு முடிவு செய்து நாளை வினவு அலுவலகத்தை அடித்து நொறுக்கினால் ?

  இது தவறான அணுகுமுறை . இந்த ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தான் மாற்றத்தை கொண்டுவர விளைய வேண்டும் . சசி பெருமாள் வழிமுறை தான் ஜனநாயகதிர்கானது .

  ஜனநாயக முறைப்படி மறியலில் ஈடுபட்ட பச்சையப்பா மாணவர்களை பாராட்டுகிறேன் . அதில் வழி தவறி சட்டத்தை கையில் எடுத்த மாணவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்

  • ///ஜனநாயக முறைப்படி மறியலில் ஈடுபட்ட பச்சையப்பா மாணவர்களை பாராட்டுகிறேன் . அதில் வழி தவறி சட்டத்தை கையில் எடுத்த மாணவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்///

   அடங்கப்பா .. ராமா … அம்மா கூப்புடுதுயா உன்னத் தான் .. முட்டாள் அடிமைக்கூட்டத்த அமைச்சருங்களா வச்சிக்கிட்டு பாவம் இங்க மக்கள் மத்தியில் உருவான எதிர்ப்ப சமாளிக்க முடியாம அம்மா தவிக்கையிலே .. தவிச்ச வாயிக்கு ’தண்ணி’யா நல்ல கமெண்ட் போட்ருக்கீயளே …

   சனநாயகம்னா இன்னானு தெரியுமா உனக்கு ?. கடைய வைக்கும் போது அந்தப் பகுதி மக்கள் கிட்ட கேட்டு வச்சா அது சனநாயகம். நீ கேட்டா வச்ச ?.. அத எடுக்க சொல்லும் போது மட்டும் எங்க நைனா வந்திச்சு சனநாயகம் …

   இந்த பொன் மொழிகளையெல்லாம் அப்படியே ஒரு தட்டில எழுதி எடுத்துட்டு, போயஸ் தோட்ட பங்களா வாசல்ல நின்னா .. போற வர்ற அமைச்சர் மடையனுங்களுக்கு அறிக்கை விட வசதியா இருக்கும் ..

 9. பச்சையப்பா மாணவர்கள் என்றால் ரவுடிகள், விஷமிகள் என்று இழிவு படுத்திய போலீசுதான் உண்மையில் ரவுடிகள் என்று நிரூபித்திருக்கிறது

 10. சமீபகாலமாக தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மட்டுமே குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்த காலம் மாறி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களும் மதுவிற்கு அடிமையாகிற சூழல் உருவாகியுள்ளது. ஒட்டு மொத்த தமிழகமும் போதையில் மயங்கி எதற்கும் லாயக்கற்ற மலடாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற ”உயரிய” நோக்கத்திற்காக மட்டுமே ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் திட்டமிட்டு செயற்படுகிறது. டாஸ்மாக் விற்பனை துவங்கிய, 2003 நிதியாண்டில், ரூ 3,500 கோடியாக இருந்த விற்பனை, 2012-13 நிதியாண்டில் ரூ 21,680 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது 28188 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த நச்சுச் சூழல், போதையினால் வாகனவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தை முதலிடத்திற்கு தள்ளியுள்ளது.
  மதுவின் கொடுமை உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பான்மையான குடும்பங்களை, குறிப்பாக பெண்களை சொல்லொனா துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. இக்கொடுமைகள் பொறுக்கமுடியாமல் பெண்கள் தன்னிச்சையாகப் பொங்கியெழுந்து டாஸ்மாக்கை அடித்து நொறுக்குகிறார்கள். டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று நீதிமன்றத்தை நாடினால் “அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது” என நீதிமன்றம் ஒதுங்கிகொள்கிறது. இப்போராட்டத்தில் காந்தியவாதியான சசிபெருமாள் அநியாயமாக காவு கொடுக்கப்பட்டுள்ளார். நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார். இன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் (பு.மா.இ.மு.) தலைமையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாகை மூடு என்ற முழக்கத்துடன் பூந்தமல்லி சாலையில் மறியல் செய்துள்ளனர். மேலும் கல்லூரி அருகே இயங்கி வந்த டாஸ்மாக்கை நொறுக்கியுள்ளனர். போலீசின் கொடூரமான தாக்குதலில் பு.மா.இ.மு. – வின் மாணவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மாணவர்கள் அருகாமையிலுள்ள கே.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போராடிய மாணவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தரின் காட்டுதர்பார், நிர்வாகச் சீரழிவிற்கெதிராக போராடிய மாணவர்கள் மீதும் போலீஸ் வெறிபிடித்த தாக்குதலைக் கட்டவிழ்த்துள்ளது. போராடும் மாணவர்கள் மீதான போலீசின் இத்தகைய ஜனநாயகமற்ற கொடூரமான தாக்குதலை அம்பேத்கார் பெரியார் படிப்பு வட்டம் வன்மையாக கண்டிக்கிறது
  மேலும், ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் டாஸ்மாக் வருமானம், மக்கள் நலத்திட்டத்திற்கே பயன்படுகிறது எனச் சொல்வது இந்த அரசு வக்கற்றுப் போயுள்ளதை தானே ஒப்புக்கொள்கிறது., தமிழகத் தாய்மார்களின் தாலியை அறுத்து, தாலிக்குத் தங்கம் கொடுப்பது ஆபாசத்தின் உச்சகட்டம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் எண்ணிலடங்கா போராட்டங்கள் நடந்து வந்தாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாய்மூடி கள்ள மௌனம் சாதிப்பது வெட்கக் கேடானது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்து வைத்துள்ள இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றிப் பரவட்டும். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் இப்போராட்டம், அனைத்து மாணவர் சமுதாயமும் தார்மீகமான இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாய் மண்ணை, மக்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
  இவண்
  அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்

 11. https://www.facebook.com/pages/Ambedkar-Periyar-Study-Circle/294957000684609?fref=nf

  சமீபகாலமாக தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மட்டுமே குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்த காலம் மாறி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களும் மதுவிற்கு அடிமையாகிற சூழல் உருவாகியுள்ளது. ஒட்டு மொத்த தமிழகமும் போதையில் மயங்கி எதற்கும் லாயக்கற்ற மலடாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற ”உயரிய” நோக்கத்திற்காக மட்டுமே ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் திட்டமிட்டு செயற்படுகிறது. டாஸ்மாக் விற்பனை துவங்கிய, 2003 நிதியாண்டில், ரூ 3,500 கோடியாக இருந்த விற்பனை, 2012-13 நிதியாண்டில் ரூ 21,680 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது 28188 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த நச்சுச் சூழல், போதையினால் வாகனவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தை முதலிடத்திற்கு தள்ளியுள்ளது.
  மதுவின் கொடுமை உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பான்மையான குடும்பங்களை, குறிப்பாக பெண்களை சொல்லொனா துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. இக்கொடுமைகள் பொறுக்கமுடியாமல் பெண்கள் தன்னிச்சையாகப் பொங்கியெழுந்து டாஸ்மாக்கை அடித்து நொறுக்குகிறார்கள். டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று நீதிமன்றத்தை நாடினால் “அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது” என நீதிமன்றம் ஒதுங்கிகொள்கிறது. இப்போராட்டத்தில் காந்தியவாதியான சசிபெருமாள் அநியாயமாக காவு கொடுக்கப்பட்டுள்ளார். நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார். இன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் (பு.மா.இ.மு.) தலைமையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாகை மூடு என்ற முழக்கத்துடன் பூந்தமல்லி சாலையில் மறியல் செய்துள்ளனர். மேலும் கல்லூரி அருகே இயங்கி வந்த டாஸ்மாக்கை நொறுக்கியுள்ளனர். போலீசின் கொடூரமான தாக்குதலில் பு.மா.இ.மு. – வின் மாணவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மாணவர்கள் அருகாமையிலுள்ள கே.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போராடிய மாணவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தரின் காட்டுதர்பார், நிர்வாகச் சீரழிவிற்கெதிராக போராடிய மாணவர்கள் மீதும் போலீஸ் வெறிபிடித்த தாக்குதலைக் கட்டவிழ்த்துள்ளது. போராடும் மாணவர்கள் மீதான போலீசின் இத்தகைய ஜனநாயகமற்ற கொடூரமான தாக்குதலை அம்பேத்கார் பெரியார் படிப்பு வட்டம் வன்மையாக கண்டிக்கிறது
  மேலும், ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் டாஸ்மாக் வருமானம், மக்கள் நலத்திட்டத்திற்கே பயன்படுகிறது எனச் சொல்வது இந்த அரசு வக்கற்றுப் போயுள்ளதை தானே ஒப்புக்கொள்கிறது., தமிழகத் தாய்மார்களின் தாலியை அறுத்து, தாலிக்குத் தங்கம் கொடுப்பது ஆபாசத்தின் உச்சகட்டம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் எண்ணிலடங்கா போராட்டங்கள் நடந்து வந்தாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாய்மூடி கள்ள மௌனம் சாதிப்பது வெட்கக் கேடானது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்து வைத்துள்ள இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றிப் பரவட்டும். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் இப்போராட்டம், அனைத்து மாணவர் சமுதாயமும் தார்மீகமான இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாய் மண்ணை, மக்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
  இவண்
  அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்

 12. https://www.facebook.com/permalink.php?story_fbid=463100367203604&id=294957000684609

  Statement from Ambedkar Periyar Study Circle (APSC)

  From the name Tamilnadu State Marketing Corporation (TASMAC) you might have misunderstood that it is the state sponsored shop to sell stuffs cheaply, but it is the sole shop for all liquors. The liquors are procured from different proxies of politicians of various parties which includes AIADMK, DMK etc. The sale of liquors through these monopoly shops started during 2003 with the turnover of 3,500 crores, the same was raised to 21,680 crores during the year of 2012-13. The exponential increase of profit by 28,188 crores is achieved by ruin of lakhs of families of Tamilnadu out of tears. Up-to-date there are 6,800 liquor shops which sucks the breathe of populace by trickling effect. The scenario crafted Tamilnadu as top state in india meant for road accident death by liquor addiction. At earlier the youths and elders were more addicted for liquors but now even the children and students become more towards liquor. The whole society is changing its status from cognizant to cataleptic from which the infertile society is not so far.

  Various political and apolitical organizations are fighting for the complete abolition of alcohol sale through TASMAC and to put an end to alcohol consumption. Out of their turmoil, the women’s of many families are organized voluntarily and attacked liquor shops at various places of Tamilnadu. As expected, the courts are also washed their hands, said “we can’t interfere on government policies”. Recently by last week the Gandhian activist Mr.Sasiperumal was killed by TN government due to its conscious insult on his struggle by acting like deaf to hear his protesting voice. He died at the struggling point itself. MDMK secretary Mr.Vaiko also raided one of the TASMAC shop near his home village. Yesterday at Chennai, the Revolutionary Student-youth front (RSYF) organized a protest along with students of Pachaiyappa’s college (nearly 600) near a TASMAC shop which situated at Aminjikarai, around Pachaiyappa’s college. The students raised the slogans kudikkava? Padikkavaa? (To drink? Or To study?), which stalwartly criticised the government. The protest ended with the raiding of liquor shop. The police started to shout with filthy words, lathi charged and attacked vehemently on student mass. Umpteen numbers of students struggled to come out of the brutal attack of mob but in vein. Even the girl students were attacked with the boots of police men. All are arrested and imprisoned. From the reliable sources it is also confirmed that the students even attacked under custody. Most of the students are under medical treatment at KMCH hospital. The same brutal attack was done by police men on students who protested against Pondicherry Vice-chancellor’s illegitimate appointment and anti-student decision.

  It’s become very often throughout India that the protesting student community are attacked and rough handled by both central and state owned watch dogs. The Ambedkar Periyar Study Circle (APSC) strongly condemns the cruel attack of police rabble and the cunning move of Ms.Jayalalitha who is the mastermind for all these chaos.

  The ruling Tamilnadu government claims that every penny of the profit out of TASMAC are the sole source for the Pro-people welfare schemes, the state accepts the collapse of governance. Its shame and oxymoron, that the government is offering gold for thaali (Mangal sutra) to poor old spinsters by plucking the same thaali from poor mothers of TN. The government also conducted a high level official meeting yesterday night, to identify the group/party which is behind all these protest and ransack of TASMAC shops instead of bringing resolution for complete abolition of alcohol. The initiation RSYF and Pachaiyappa college student’s struggle against TASMAC shops flickered the very good sign to spread throughout Tamilnadu. The students protest also reminds the bounded duty of ours, to uphold soil and people.

  Regards
  Ambedkar Periyar Study Circle (APSC)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க