privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதோழர் கோவன் கைது - பேஸ்புக்கில் குவியும் கண்டனங்கள்

தோழர் கோவன் கைது – பேஸ்புக்கில் குவியும் கண்டனங்கள்

-

குறிஞ்சி நாடன்

‪#‎ஆபாச_பாடலுக்கு_மேடைதோறும்‬
‪#‎ஆராவரிப்பு‬???
‪#‎அடிப்படை_பிரச்சனையை_பாடினால்‬
‪#‎சிறையடைப்பு‬!!!
‪#‎பாசிச_வெறிபிடித்த_ஜெவின்‬
‪#‎முகத்திரையை_கிழித்தெறிவோம்‬!
‪#‎திசையெட்டும்_பாடலை‬
‪#‎ஒலிக்கச்செய்வோம்‬!!!!

தமிழச்சி (Tamizachi)

thamizhachiஜெயாவின் ‪#‎டாஸ்மார்க்‬ அரசியலுக்கு எதிராக ‪#‎விழிப்புணர்வு‬ பிரச்சாரத்தை ‪#‎எழுச்சிப்பாடல்‬ மூலமாக மக்களிடையே கொண்டு சென்றதற்காக ‪#‎தோழர்_கோவன்‬ கைது செய்யப்பட்டிருக்கிறார்.

“கலையும், இலக்கியமும் யாருடைய நன்மைக்காக இருக்க வேண்டும்?” என்று அதிகாரத்தை நோக்கி தோழர் ‪#‎பெரியார்‬ கேள்வி எழுப்புகிறார்.

“கலை / இலக்கியம் யாவும் மக்களுக்கே ” என்கிறார் தோழர் ‪#‎மாவோ‬.

“ஒரு பெரும் சமூக ஜனநாயக எந்திரத்தின் பற்சக்கரங்களாகவும் மறையாணிகளாகவும் கலை / இலக்கியம் இருக்க வேண்டும்” என்கிறார் தோழர் ‪#‎லெனின்‬.

ஆனால், தமிழ்நாட்டை ஆளும் ஜெயலலிதாவுக்கு, “கலை என்றால் சினிமாவில் ஆடும் டூயட்டாக இருந்தால் மட்டும் போதும்” என்று நினைக்கிறார். அவருடைய வயிற்றுப்பிழப்புக்கு வேண்டுமானால் ‘ டூயட் ‘ ஆட்டங்கள் கலையாக இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு சோறு போடாது.

மக்களுக்காக பேசப்படும் கலைகளும் இலக்கியங்களும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதைத்தான் புரட்சிப்பாடகரான தோழர் கோவன் செய்திருக்கிறார்.

எனவே, “ஜெயலலிதாவே டாஸ்மார்க்கை மூடு. தோழர் கோவனை வெளியே விடு.”

‪#‎தமிழச்சி‬
30/10/2015
‪#‎கருத்துரிமை‬ ‪#‎டாஸ்மாக்‬ ‪#‎தமிழ்நாடு‬ ‪#‎தமிழகஅரசு‬ ‪#‎அதிமுக‬ ‪#‎ஜெயலலிதா‬ ‪#‎ADMK‬

Abdul Hameed Sheik Mohamed

டாஸ்மாக்கை எதிர்த்து கலைநிகழ்ச்சி நடத்திய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் கோவன் அவர்களை தேச துரோக வழக்கில் தமிழக காவல்துறை கைது செய்திருப்பதன் மூலம் தனக்கு எதிராக குரல்களை ஒடுக்குவதில் இன்றைய மத்திய அரசுக்கு எந்தவிதத்திலும் தான் சளைத்தல்ல என நிரூபித்துள்ளது. இன்று கோவனுக்கு நேர்ந்தது தமிழக அரசை எதிர்க்கும் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஜனநாய உரிமைகளை பாதுகாக்க கோவனின் பக்கம் நிற்போம். மாற்று கருத்துக்களின் குரல்வளையை நெரிக்கும் கரங்களுக்கு எதிராக நம் கரங்களை உயர்த்துவோம். டாஸ்மாக்கை எதிர்ப்பது தேச துரோகம் என்றால் நாம் தேச துரோகிகளாக இருப்பதைத்தவிர வேறு வ்ழியில்லை.

– மனுஷ்ய புத்திரன்

கோவனின் கைதை கண்டித்து திமுக பொருளாளர் தளபதி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

”தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் உள்ள “மக்கள் அதிகாரம்” என்ற அமைப்பு “மூடு டாஸ்மாக்கை” என்ற போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. அந்த ” மக்கள் அதிகாரம்” அமைப்பினர் ” மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு” எனும் பாடலை வெளியிட்டு அதை கலை வடிவத்தில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதிநாடகமாக நடத்தி வந்தார்கள். இந்நிலையில், இந்தப் பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த திரு. கோவன் அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் திடீர் கைது செய்து செய்தனர். அவரை மிக மோசமாக நடத்தியதாகவும், அவரை போலீசார் எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதைக் கூறாமல் மறுத்தும் அலைக்கழித்துள்ளனர். இறுதியில் இப்போது திரு.கோவனை அவர்களை தேசத்துரோகம் உள்ளிட்ட கடுமையான இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது
குடும்பத்திற்கு செய்தி சொல்லப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை நீக்கக் கோரி போராடிய சசிபெருமாள் மரணத்திற்கு வித்திட்ட இந்த அதிமுக அரசு, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித் தனமாக தடியடி நடத்தி அவர்களை சிறையில் அடைத்தது. இப்போது திரு. கோவனை அவர்களை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று போராடுவோர் மீது அதிமுக அரசு இப்படி அடுத்தடுத்து அடக்குமுறையை ஏவி விடுகிறது. அதிமுக படை போல் காவல்துறை செயல்படுவதும், மனித உரிமைகள் இப்படி கொடுங்கரத்தால் நசுக்கப்படுவதையும் பார்த்தால் ஏதோ நெருக்கடி நிலைமை தமிழகத்தில் அமலில் இருக்கிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது. திரு. கோவன் அவர்களின் கைதிற்கும், மதுவிலக்கு போராட்டங்களை அடக்கும் அதிமுக அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தின் முன்பு சட்டத்தின் ஆட்சியும், கருத்து சுதந்திரம் அளித்துள்ள அரசியல் சட்டமும் தலைகுனிந்து நிற்கின்றனவே என்று வேதனைப்படுகிறேன்.

கோவனின் கைதை கண்டித்து தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி அவர்களின் அறிக்கை:

”டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் அதை நடத்தும் அரசு நிர்வாகத்தையும் எதிர்த்து பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர் கோவன் என்பவரை தமிழக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவம் பற்றி தி.மு.கழக பொருளாளர் தளபதி அண்ணன் ஸ்டாலின் அவர்களும் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார். தமிழக அரசின் இந்த கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள்… எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை காலத்தை நினைவூட்டும் வகையில் இருப்பதாக தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கோவன் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், மேலும் அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் படி தேச துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்திருக்கின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பாடியது தேச துரோகக் குற்றமா?

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கார்ட்டூனிஸ்ட் கலைஞர் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் அந்த கார்ட்டூனிஸ்ட் மீது தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.
நாட்டுப்புறக் கலைஞர் கோவன் கைது சம்பவத்தில் இருந்து… அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறையை தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த சில மாதங்களில் பல சமூக ஆர்வலர்கள், தன்னார்வை அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்புகள் என பலரும் தமிழக அரசின் மதுக்கொள்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் அருகே பல டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருப்பதை சுட்டிக்காட்டி நேரடியாக களப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி சசிபெருமாள் தனது போராட்டத்தின்போதே உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக அரசு அவரது பத்து வயது மகளைக் கைது செய்து தனது ‘பொறுப்புணர்வை’ வெளிப்படுத்தியது. இதேபோல மதுவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர்.

கடந்த நான்காண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்… அரசை விமரித்தற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் பத்திரிகையாளர்கள் மீதும், அரசியல் ரீதியான எதிர்க்கட்சியினர் மீதும் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது ஒருபடி மேலேபோய் மதுவை எதிர்த்துப் பாட்டிய நாட்டுப்புற கலைஞரை கைது செய்திருக்கிறது தமிழக அரசு.

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு அடிப்படை உரிமைகளுக்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அரசு என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. தமிழக அரசின் இந்த அதிகார அத்துமீறலுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின் பெலிக்ஸ்

“மூடு டாஸ்மாக்கை மூடு” போன்ற சமூக பிழையான பாடல்களை பாடாமல்…..

“டாடி மம்மி வீட்டில் இல்லை…………………………”,
“நேத்து ராத்திரி எம்ம்மா……………………………….. ”
“கட்டிபுட்டி கட்டிபுடி டா…………………………………. ”

போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை பொதுமக்கள் பாடும்படி சமூகம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது..

//மது ஒழிப்பிற்காக “டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை இயற்றி பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. -செய்தி//

Tamil Aman
ஏ ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக்
ஏ டோன்ட் குளோஸ் தி டாஸ்மாக் மா
அட்லீஸ் ஓபன் தி பேக் டோரூ மா ஏக் தோ தீன் சார்–

என்கிற பாடல்தான் இன்று தேசிய பாதுகாப்பகவும் , இரு குழுவிற்கு இடையே நல்லுறவு போற்றும் ஒற்றுமை கீதமாகவும் இருக்கிறது…. வாழ்க சனநாயாகம்

‪#‎let_us_condemn_illegal_custody__of_makkal_paadagar_kovan‬
‪#‎மக்கள்_பாடகர்_கோவன்_அவர்களின்_சட்டவிரோத_கைதை_கண்டனம்_செய்வோம்‬

Feroz Babu

எங்களின் (மக்களின்) உண்மையான நாயகன் யார் என்பதை பரவலான மக்கள் அறிந்துகொள்ள ஒரு சந்தர்பம் அமைத்துக் கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி நன்றி நன்றி…
இன்னும் மற்ற நாயகர்களையும் சீக்கிரம் எமக்கு காட்டுங்க..

‪#‎let_us_condemn_illegal_custody__of_makkal_paadagar_kovan‬
‪#‎மக்கள்_பாடகர்_கோவன்_அவர்களின்_சட்டவிரோத_கைதை_கண்டனம்_செய்வோம்‬

==
எவண்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடச்சா செத்தான், வை திஸ் கொலவெறி என பெண்களை இழிவு படுத்தி பாடினால் மரியாதை. ஓபன் த டாஸ்மாக் எனும் பாடலுடன் வரும் படத்துக்கு வரி விலக்கு (இத்தனைக்கும் அதுல சின்னதா குடி குடியை கெடுக்கும் எனும் வாசகத்துடன்)

ஆனால் மூடு டாஸ்மாக்கை என பாடினால் சட்ட விரோத கைது.

என்னாங்கடா உங்க ஜனநாயகம் டேய்ய்ய்

‪#‎let_us_condemn_illegal_custody__of_makkal_paadagar_kovan‬
‪#‎மக்கள்_பாடகர்_கோவன்_அவர்களின்_சட்டவிரோத_கைதை_கண்டனம்_செய்வோம்‬

கா. தமிழரசன்

ம.க.இ.க பாடகர் கோவன் அவர்களை மதுக்கடை எதிப்பு பரப்புரை பாடலுக்காக தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனது உணர்வோடு கலந்து போன குரலுக்கு சொந்தக்காரர்
இசைவடிவத்தை பாடலை மக்களுக்கானதாய் பயன்படுத்தியதில் முதன்மையானவர்.

‪#‎கைதை‬ கண்டிப்போம்

திருமுருகன் காந்தி

தோழர் கோவனின் பாடல்கள் 1990களில் ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆட்சியின் பொழுது பெரும் எழுச்சியை கொண்டுவந்ததில் முக்கிய பங்கு வகித்தது. அப்பாடல்களில் தெரித்த கோபமும், நிமிர்ந்து நிற்கவைக்கும் குரலும் போராடும் உழைக்கும் மக்களின் குரல் என்பதில் எவ்வொரு சந்தேகமும் இல்லை.

மக்களுக்கான கலைஞர்கள் மீது அரச வன்முறை கட்டவிழ்க்கப்படும் பொழுது , ஒட்டுமொத்த சமூகமும் எழுந்து நின்று அரசின் கட்டுமிராண்டி ஒடுக்குமுறையை தனிமைப்படுத்தி மக்களிடத்தில் அம்பலப்படுத்தவேண்டும். அவரின் குரல் மக்களிடத்தில் மீண்டும் முழங்குவதற்குரிய சுதந்திரத்தினை மீட்டெடுக்க வேண்டும். கலைஞர்கள் மீது பாஜக செய்யும் அடக்குமுறைக்கும், அதிமுக அரசின் அடக்குமுறைக்கும் வித்தியாசமில்லை.

இந்தக் கலைஞர்களின் குரல்கள் இத்தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானது என்றால், இத்தேசம் எம்மக்களுக்கு எதிரானது என்பதுதான் உண்மை.

தோழர். கோவனின் மீது அரசு செலுத்தி இருக்கும் வன்முறையை ஒட்டுமொத்த முற்போக்கு சமூகமும் எதிர்த்து ஒரே குரலில் பேசுவோம். அரசு எங்கள் மீது வன்முறை செலுத்துகிறது. அரசை அம்பலப்படுத்தும் கலைஞர்கள் தாக்கப்படுவது, ஒடுக்கப்படுவது சனநாயகம் செத்து தொலைந்து விட்டது என்பதற்கான அடையாளம்.

தோழர். கோவன் சார்ந்திருக்கும் இயக்கமான ம.க.இ.கவின் மீது உடன்பட முடியாத சில நிலைப்பாடுகள் எமக்கிருந்தாலும், அரசின் வன்முறை கட்டவிழ்க்கப்படும் பொழுது எமது ஆதரவு மக்கள் இயக்கத் தோழர்களுடனேயே இருக்கும். இந்திய அரசோ, ஏகாதிபத்தியமோ, இவற்றினை எதிர்த்துப் போராடும் இயக்கங்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை நாம் ஒன்றாக நின்றே எதிர்த்திடல் வேண்டும்.

தோழர் கோவனின் கைது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய அரசவன்முறை.

Bharathi Thambi

’மச்சி ஓபன் தி பாட்டில்’ என்று பாடினால் வரிவிலக்கு.
‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடினால் கைவிலங்கு.
சாராயக் கடையை மூடச் சொல்வது தேசத் துரோகம் என்றால் ஊற்றிக்கொடுப்பதுதான் தேசபக்தியா?

Alagesa Pandian

டாஸ்மாக்கை மூடச்சொல்லி பாட்டுப் பாடுவது தேசத்துரோகமாம். “ஓபன் த டாஸ்மாக்” என்று பாட்டுப்பாடுகிற சினிமா கோமாளிகள் வரிவிலக்கு பெறுவார்களாம். “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாட்டை எழுதிய கோவன் அவர்களை வாழ்த்தும் அதே சமயத்தில், அவரை கைது செய்த ஜெயலலிதாவின் சாராய சார்பு அரசுக்கு நமது கண்டனங்கள்!

vijii-ambedkarVijii Ambedkar

முதுகு வளைந்தவனெல்லாம் மந்திரினு வெள்ளையும் சொல்லையுமா சுத்தும்போது, நிமிர்ந்து நிக்கிற மண்ணின் மைந்தன் சிறைக்கு தான் போகனும்…

மக்கள் பாடகர் கோவனை கைது செய்த ஜெயாவின் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்…

இதிலும் ஒரு நன்மை இருக்கதான் செய்கிறது. அண்ணன் கோவனை பற்றி தெரியாதவர்களிடமும், அவரது பாடல்களும், கருத்துகளும் அதிக அளவில் போய் சேரும்…. தமிழக அரசின் இலவச புரோமோசன்….

Chandran Veerasamy

ஜெயா ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்
படுகிறது . மதுவிலக்கு கோரி பாடல்
பாடிய தோழர் கோவன் கைது செய்யப்
பட்டதைக் கண்டித்தும் , அவரை உடனடியாக
விடுதலை செய்யக் கோரியும் தமிழக காங்கிரஸ்
சார்பில் வரும் 2 ஆம் தேதி மாநிலம் முழுதும்
ஆர்ப்பாட்டம் !

## ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அறிவிப்பு !

sundarrajanSundararajan LawyerSundar

மதுபானம் ஆட்சிக்கும் , அதிகாரத்துக்கும் நல்லது.
மதுவிலக்கு கோரிக்கை ஆட்சிக்கும், அதிகாரத்துக்கும் எதிரானது.
ஆட்சியும், அதிகாரமும்தான் தேசம் என்பதால் மதுவிலக்கு கோரிக்கை தேசத்திற்கு எதிரானது.

Balan Guru

“மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை சில ஆயிரம் மக்களுக்கு மட்டும் சென்றுடடைந்த பாடலை லட்சக்கணக்காகன மக்களுக்கு கொண்டு சென்ற அம்மா ஆட்சியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை .

159_ஏ என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளதாம் , (சமூகத்தில் இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டிவிட்டுவது )

அரசாங்கமே நம்மளை இரு சமூகமாக பிரித்துவிட்டது , குடிக்கிற சமூகம் , குடிக்காத சமூகம் .

alaudeenAlaudeen L. Alaudeen

சமூகத்தை சீரழிக்கும் அம்மா சாராயக் கடைளுக்கு எதிராக பாடல் பாடி தமிழகம் முழுவதும் பிராச்சாரம் செய்த மக்கள் பாடகர், தமிழகத்தின் கத்தார், மகஇக மைய கலைக்குழு தோழர் கோவன் பாசிச ஜெயலலிதா அரசால் 30.10.2015ம் தேதி தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். “மூடு டாஸ்மாக்” , “ஊத்தி கொடுத்த உத்தமிக்கு போயஸ்ல உல்லாசம்” ஆகிய பாடல்களை பாடியதால் தேச துரோக வழக்கு என்பது அளவுக்கு மீறிய ஒடுக்கு முறை என்று விமர்சனம் வந்தாலும், பாசிச வெறி பிடித்த, மாற்று கருத்துடையோர்களின் விமர்சனத்துக்கு முகம் கொடுத்து பதில் சொல்ல துணிவு இல்லாத மாவீரர், அடிமைகளின் தலைவி பாசிச ஜெயா அங்கம் வகிக்கும் பெருபான்மை மக்களுக்கு எதிரான இந்த அரசமைப்பிற்கு எதிராக துரோகம் செய்யாமல் நன்மையா செய்ய முடியும்?

  1. கோவனின் கைதை கண்டித்து திமுக பொருளாளர் “தளபதி” அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

    தளபதி என்று வினவு அழைப்பது போல இருக்கிறது

  2. ஜெயாவும் அதன் போலீசும், திருடனுக்கு தேள் கொட்டியதப்போல தன்னோட அடிமைகளில் ஒருத்தன விட்டு அறிக்கை விடக்கூட தெம்பு இல்லாம முழிச்சிக்கிட்டு இருக்கு. என்னதான் அடக்குமுறையை ஏவினாலும் மக்களின் போராட்டங்களை ஒடுக்க முடியாது.

  3. தோழர் கோவன் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்ன வேடிக்கை என்றால் இதை விட மோசமாக ஜெ.மோடியை திட்டி அவர் பாடலக்ள் பாடிய போது கேசாமல் இருந்தவர்கள் இப்போது கைது செய்“கிறார்கள் என்றால் தேர்தல் அரசியல் தான் . தோழர் கைதை வெளியிடும் ஊடகங்கள் மறக்காமல் அவரை கிராமியக்கலைஞர், நாட்டுப்புற கலைஞர் என்றே அறிமுகப்படுத்துகினறனர். அந்த அளவுக்கு ஒரு சில ஊடகங்களுக்கு ம.க.இ.க மேல் காழ்ப்புணர்ச்சி. எது எப்படியே ஜெ வின் அராஜகத்தால் தோழாின பாடல்கள் தமிழகமெங்கும் பாடப்பட்டு வருகிறது. பேஸ்புக். வாடஸ்அப்பில் இப்போது தான் தோழாின் பாடலை பலர் முதன் முறையாக பார்க்கின்றனர். இனி அவர்கள் வினவு தளத்தை தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் கோவன் கைதை வன்மையாக கண்டிக்கும் நிலையிலும் புரட்சி வென்றெடுக்க ஆயுதமாக பயன்படுத்த என் வாழ்த்துக்கள்

  4. ஜெயா-சசிகலா கொள்ளை கும்பல் வாங்கிய 1000 கோடி சினிமா தியேட்டர் பின்னணியில் ….. தோழர் கோவம் அவர்களின் பாடலை நினைத்து பார்த்தால் அந்த குப்பலின் ஆட்டம் நமக்கு எளிமையாக புரிகிறது. இதில் இந்த பாடலில் என்ன தவறு? ஊத்தி கொடுத்த உத்தமி போயசுல உல்லாசம் ….. உன்னை தானே இவர்களின் ஆட்டமும் உல்லாசமும்.

  5. தோழர் கோவம் அவர்களின் பாடலை மாற்றப்போகிறேன் :

    ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
    ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு “1000 கோடி சினிமா தியேட்டரு”

    (ஊருக்கு ஊரு சாராயம்…)

    இட்டிலி ஒத்த ரூவா, கக்கூசு அஞ்சு ரூவா
    பட்ட சோறு அஞ்சு ரூவா, பருப்பு விலை நூறு ரூவா
    பாட்டில் தண்ணி பத்து ரூவா, படிக்க பீசு லட்ச ரூவா
    ஜெயா-சசிகலா கொள்ளை கும்பல் வாங்கிய தியேட்ட 1000 கோடிரூவா
    நீ என்னுன்னு கேட்டா கொன்னுருவா

    (ஊருக்கு ஊரு சாராயம்…)

    படிக்க வுடாம உஸ்கூல மூடுறான்
    குடிக்க ஒயின்சாப்ப கோயிலாண்ட தெறக்கிறான்
    மாசம் ஒருநாள்தான் மண்ணெண்ணெ ஊத்துறான்
    இந்த நாசமத்த கடைய மட்டும் மிட்நைட்லதான் சாத்தறான்

    (சும்மாக் கிடந்த ஊருக்குள்ள கடையை வச்சான்
    ஆணு பெண்ணு அத்தனை பேரையும் குடிக்க வெச்சான்)

    ஆட்டுக்குட்டி, பேன், மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி
    தெருத்தெருவா கடைய வெச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிகிச்சி
    கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா
    இடுப்பு வேட்டியையும் உருவிக்கினு போச்சிடா

    (ஊருக்கு ஊரு சாராயம்..)

    தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு
    குடிமகன் மட்டையானா கலெக்டருக்கு சபாசுபாரெல்லாம் அ.தி.மு.க குண்டாசு
    இதுக்கு ஆல் டைமு செக்யூரிட்டி போலீசு

    (ஊருக்கு ஊரு சாராயம்..)

    ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆள் படைக்கு சம்பளம்
    போலீசு, குவாலிசு செலவு ஐட்டம் ஏராளம்
    அம்மா வந்து போனா அந்தச் செலவே பயங்கரம்
    சும்மா கேனத்தனமா மூடச் சொன்னா அவங்க பியூச்சரெல்லாம் என்னாகும்.

  6. தமிழக மக்களின் போர்க் குரல்…!
    தோழன் கோவன் பாடல்
    தனியொருவன் குரல் அல்ல…!
    டாஸ்மாக் மீது கடுஞ்சினங் கொண்ட
    ஒட்டு மொத்த தமிழக மக்களின் போர்க் குரல்…!

    பாமரன் குரல்… பாட்டாளிகளின் எழுச்சிக் குரல்…!
    வியர்வை சிந்தி உழைக்கும் மக்களின் உக்கிர குரல்…!
    மனிதர்களை நேசிப்பவர்களின் கோபக் குரல்…!
    போதையின் விபரீதங்களின் காரணமாக
    தந்தையிடம்…தனயனிடம் கற்பையிழந்த
    பெண்களின்…குழந்தைகளின் ஓங்காரக் குரல்…!
    பெற்றெடுத்த மகனென்றும் பாராமல்…
    தாலி கட்டிய கணவனென்றும் பாராமல்…
    வேறு வழியே இல்லாமல்…கொலை செய்து விட்டு…
    குற்றவாளி கூண்டில் நிற்கும் அபலைப் பெண்களின் அக்கினிக் குரல்…!

    குடிக்க பணம் தரவில்லையென்று
    பெற்றெடுத்த மகனால் கொலை செய்யப்பட்ட
    தாய்-தந்தையரின் பரிதவிப்புக் குரல் …!

    டாஸ்மாக் மரண கிணற்றில் மாண்டுவிட்டவர்களின்
    மனைவி மார்களின் சாபக் குரல்…!
    போதையின் விளைவால்… பலவகை வன்முறைகள்…
    விவாக ரத்துக்கள்…சாலை விபத்துக்களில்
    பாதிக்கப் பட்டோர் குமுறும் குரல்…!
    பதின் வயது பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவி
    பெற்றோர்களின் அபயக் குரல்…!

    கொள்ளையடித்தாவது… கொலை செய்தாவது…
    பிச்சை எடுத்தாவது…எப்படியாவது…
    குடித்து விடவேண்டும் என்கிற மனோபாவத்திற்கு
    ஆளானவர்களின் ஆர்பாட்டக் குரல்…!

    தன் வீட்டில் அரை சவரன்…கால் சவரன்…தாலி…
    அண்டா… குண்டா…எல்லாம் முடிந்த பிறகு…
    அரிசி…பருப்பு…மிளகாய்…உப்பு வரை திருடி
    மன நோயாளிகளாகி விட்ட மனங்களின் வேதனைக் குரல்…!

    தமிழக மக்களின்
    கோவணமும் டாஸ்மாக்கில் பறிக்கப்பட்ட நிலையில்…
    கோவனின் கோப வரிகள்…உண்மையானவை…! சத்தியமானவை…!!
    கோடிக்கணக்கான குரல்களின் ஒருமித்த குரல் கோவன் குரல்…!!!
    – அக்னி

  7. Tamil Hindu polling : At 12.06 am

    தமிழக முதல்வரை விமர்சிக்கும் டாஸ்மாக் எதிர்ப்புப் பாடலுக்காக கோவன் கைது செய்யப்பட்டதை கண்டிப்பதுடன், அவர் மீதான போலீஸ் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என்ற தமிழகத் தலைவர்களின் வலியுறுத்தல்…

    நியாயமானது : 65%
    சரியல்ல : 16%
    வழக்கமான அரசியல் : 19%

  8. அதிகாரத்தை காயப்படுத்தாத பாடலை உண்மையான கலையாக கருத முடியாது!
    கடமை தவறும் அரசை யார் கேள்வி கேட்பது?

    ”தோழர் கோவன் ஒரு மக்கள் பாடகர். தமிழகத்தின் புனிதமான (?) காலடியில் புரண்டு சனநாயகம் பெற்றெடுத்த பண்ணையடிமைத் தலைவர்களைப் போல புனித காலைப் போற்றி பாட அவர் அரண்மனை விகடகவிஅல்ல.அவர் உண்மையான கலைஞர்.

    அவரது பாடல் அதிகாரத்தை காயப்படுத்தியது. அவ்வாறு காயப்படுத்தாத பாடலை உண்மையான கலையாக கருத முடியாது. அவரது பாடல் மக்களை சாராயத்திற்கு எதிராக புரட்சி செய்ய சொன்னது . அரசியலமைப்பு சட்டமும் அதைத்தானே சொல்கிறது.மக்களின் உடல் நலத்தை காப்பது அரசின் கடமை அல்லவா ? கடமை தவறும் அரசை யார் கேள்வி கேட்பது?

    நீதித்துறையும் , நிர்வாகமும் அதிகாரத்திற்கு கால் அமுக்கி கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சாமானிய மக்களுக்காக குரல் கொடுப்பது சமூக ஆர்வலர்களின் கடமை இல்லையா?

    என்ன நோக்கத்திற்காக தோழர் கோவன் போராடினாரோ அதற்காக அவருடன் துணை நிற்போம்.”

    – மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், உயர்நீதிமன்றம், மதுரை கிளை.

  9. கோவலன் கொல்லப்பட்டதில் கூட சில
    நியாயமிருக்கு
    கோவன் தண்டிக்கப்படுவதில் என்னய்யா
    நியாயம்?

Leave a Reply to குருத்து பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க