privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜீன்ஸ் பயங்கரவாதம் - தினமணியின் திருக்கோவில் லூலாயி !

ஜீன்ஸ் பயங்கரவாதம் – தினமணியின் திருக்கோவில் லூலாயி !

-

ஜீன்ஸ் போட்டால் கடவுளுக்கு ஆகாதாம்!
ஜீன்ஸ் போட்டால் கடவுளுக்கு ஆகாதாம்!

காமாட்சி ஆட்சி செய்யும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையிலும் இருக்கிறது. புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சிவனான்டி மண்ணில் ஜீன்ஸ் பேண்டுகளின் அட்டகாசம் அதிகரித்தபடியால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவர்கள் திருக்கோவில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தாமாகவே ஒரு வழக்கை பதிவு செய்தார்.

கிரானைடும், ஸ்டிக்கரும், பீஃப் கானமும் ஆட்டம் போடும் தமிழ்த்தாய் ஊரில் தாமாகவே வழக்கு போடுவதற்கு எத்தனையோ இருக்கையில் இற்றுப் போகும் அழுக்கு பேண்டு குறித்து ஒரு நீதியரசர் ஏன் இத்தனை அற ஆவேசம் கொண்டிருக்க வேண்டும்? ஏதோ இந்த மட்டிலாவது இந்த மண்ணில் அறம் சீவித்திருக்கிறதே என்று காரப் பணியாரம் சுவைத்துக் கொண்டு கவிதை ஏரியாவில் இலக்கியம் பூசும் சில வார்த்தை செதுக்கர்கள் சிலாகிக்கிறார்கள்.

அந்த வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் 26-ம் தேதி வைத்தியநாதன் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். நெற்றிக் கண் திறப்பினும் கூந்தலுக்கு இயற்கையாக மணம் கிடையாது என்ற அரிய உண்மையை நிலைநாட்டிய வைகைக் கரையில் லெக்கின்ஸ் போட்டால் இயற்கையாக பக்தி வராது என்று ஒரு பத்வாவை ஏவி விட்டார். அதில், தமிழக இந்து கோவிலுக்குள் வரும் ஆண்கள் மேல் சட்டை, வேட்டி, பைஜாமா, சாதாரண பேண்ட் (ஜீன்ஸ் இல்லை), சட்டை அணிந்து வர வேண்டும், பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகள் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றெல்லாம் தாலிபான் முல்லாக்களுக்கு போட்டியாக உத்தரவிட்டார்.

ஆன்ட்ராய்டு காலத்தில் அரை டிராயரை தடை செய்தால் பழனி ஆண்டவனே குற்றவாளியல்லவா?
ஆன்ட்ராய்டு காலத்தில் அரை டிராயரை தடை செய்தால் பழனி ஆண்டவனே குற்றவாளியல்லவா?

நீதியரசரே பொங்கி விட்டால் திருக்கோவில்களில் வெண் பொங்கலை மட்டும் படையல் செய்யும் இந்து அறநிலையத் துறையும் பொங்கினார்கள். அந்த பொங்கலை ஒரு சுற்றறிக்கையின் மூலம் அனுப்பியதோடு நீதியரசர் அய்யா அருளிய உடை உத்தரவுகளை கோவில்களில் அமல்படுத்துமாறு உத்தரவிட்டார்கள்.

அனைத்து சாதி மாணவரும் அர்ச்சகராக வேண்டுமென்ற ‘சாதா’ பிரச்சினைகளில் கும்பகர்ணணாய் உறையும் அறநிலையத் துறை, குட்டைப் பாவாடை போன்ற ஸ்பெசல் சாதா பிரச்சினைகளில் உசேன் போல்ட்டாய் ஓடுகிறது.

இதன்படி 2016 ஜனவரி புத்தாண்டு ஒன்றாம் தேதி முதல் திருக்கோவில்களில் காக்கிச் சட்டை போலீசார் கண்கொத்திப் பாம்பாக சீறிக் கொண்டு ஜீன்ஸ் – லெக்கின்ஸ் – குட்டைப் பாவாடை பயங்கரவாதிகளை கண்காணித்து வருகிறார்கள். சிம்புவையும், யுவராஜையும் தனிப்படை போட்டும் மோப்பம் கூட பிடிக்க இயலாத இந்த அப்பாவிகள் கோவில் யானைக்கு போட்டியாக முகப்பு கோபுரத்தின் முன்பு முட்டி போட்டவாறு இடுப்புக்கு கீழே உற்று நோக்கி வருகிறார்கள். யானையைக் கண்டு குஷியாகும் குழந்தைகள் இந்த பூனைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆமாம் ஐயா! மழலைகளுக்கும் சேத்துத்தானே அந்த உடைக் கட்டுப்பாடு!

மழை வெள்ளத்தில் உடையும் உடமைகளும் அடித்துச் செல்லப்பட்டு தெருவும் திணறலுமாக குடி மக்கள் சோர்ந்திருந்தாலும், கோவில்களில் வஸ்திரங்களை முறைப்படுத்துவதிலும், மதுக்கூடங்களில் சப்ளைகளை ஒழுங்குபடுத்தவதிலும் கோமளவல்லியை விஞ்ச யாருண்டு?

கூடவே கோமளவல்லிக்கு மயிலறகு கொண்டு காற்றாட்டுவதில் தினமணியின் ஆசிரியர்வாள் வைத்தி அவர்களையும் யாரும் விஞ்ச முடியாது. ஒன்றாம் தேதி வஸ்திர சட்ட சாஸ்திரம் அமலுக்கு வந்தது என்றால் இரண்டாம் தேதி வைத்தி மாமாவின் அர்த்த சாஸ்திரம் தலையங்கத்தில் “அவசியம்தான் இந்தக் கட்டுப்பாடு” என்று சீறிப் பாய்ந்தது.

மோடியின் லெக்கன்சும் கூட தடை செய்யப்படுமே வைத்தி சார்?
மோடியின் லெக்கன்சும் கூட தடை செய்யப்படுமே வைத்தி சார்?

மலையாள தேசத்தில் வெட்டி கட்டிய ஆம்படையான்களும், பாரம்பரிய உடை உடுத்திய பெண்மணிகளும் மட்டும்தான் குருவாயூர் முதல், பத்மநாபா வரையிலான மூர்த்திகளின் இல்லத்தில் அனுமதிக்கப்படுவதை சுட்டிக் காட்டும் வைத்தி சார்வாள், திருப்பதியிலும் அங்கனமே வஸ்திர சாஸ்திரம் முன் தேதியிட்டு அமலுக்கு இருப்பதை குத்திக் காட்டுகிறார். இவ்வண்ணம் மலையாள தேசத்தில் இருக்கும் மாந்தீரகங்களையும் அவர் நியாயப்படுத்துவாரா என்று யாரும் புத்தி கெட்டு கேட்கக் கூடாது. ஏற்கனவே போயஸ் தோட்டத்தில் மலையாள நம்பூதிரி மாந்திரீகவாதிகள் நிரம்பி வழிகிறார்கள்.

கேரளாவில் பைஜாமாவுக்கு கூட அனுமதியில்லை என்று புல்லரிக்கும் மாமா சார், அந்தபடிக்கு மோடிஜியின் – பைஜாமா அல்லது குர்தா அல்லது லெக்கன்ஸ் (லெக்கின்ஸின் ஆண்பால் பதம்) – போன்றவைகளுக்கும் அனுமதியிருக்காதே என்று லீகல் பாயிண்டை அம்மாவுக்கு பாடிய லோலாயியில் மறந்து விட்டார். சரிடே சார்வாளுக்கு நினைவூட்டியை பழுது பார்க்கும் கோட்டக்கல் ஆர்யவைத்தியசாலாவின் லேகியத்தை பரிந்துரை செய்!

இறைவழிபாட்டில் இத்தகைய கட்டுப்பாடுகள் இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எல்லா மதங்களுக்கும் உண்டு என அவாள் சார் இளைய தலைமுறையின் மனக்கிலேசத்திற்கு மருந்து போடுகிறார். சரிப்பா, மற்ற மதங்களில் பிறப்பால் ஒருவர் பாதிரியாரோ, முல்லாவா, குருவாகவோ மாறுவதற்கு தடையில்லையே, அது ஏன் இங்கில்லை என்று கேட்டால் ஆகமம், ஆப்பம், ஆம்லேட்டு என்று உச்சாடனம் செய்கிறார்.

இங்கேயும் அப்படி ஒரு புல்சேவை போட்டிருக்கிறார். அதாகப்பட்டது, மற்ற மதங்களில் ஆகமவிதிமுறைகள் இல்லையாம். காரணம் அவர்களது ஆலயங்கள் அனைத்தும் மக்கள் ஒன்று கூடி பிரார்த்திக்கும் வழிபாட்டுத் தலம் மட்டும்தானாம். இந்து மதத்தில் மட்டும் இவை பரிகாரத் தலங்களாகவும் இருக்கின்றனவாம். இதற்கு மேல் கிரகம், ஈர்ப்பு சக்தி, பரிகாரம், என்று சுற்றுகிறார். அதாவது கோவிலில் சட்டை போடாமல் நுழைந்தால் ஒரு சக்தி நம்மேல் ஏறிவிடுமாம்.

உழைக்கும் மக்களின் லுங்கிக்கும் தடை!
உழைக்கும் மக்களின் லுங்கிக்கும் தடை!

முதலில் கோவில்கள் என்ற கட்டமைப்பே வேதங்களை வேதவாக்காக கொண்ட ஆரிய சனாதான இந்து வருண சாதி சமயத்தில் கிடையாது. திருக்கோவில்களை கட்டி தீர்த்தங்கரர்களை பிரதிஷ்டை செய்த சமணர்களே இந்தியாவின் இந்து மதக் கோவில்களுக்கு காப்புரிமை பெற்றவர்கள். கோவிலே திருட்டு என்றான பிறகு சக்தி, ஈர்ப்பு என்ற புராணம் எதற்கு வைத்தி ஐயா?

எழுச்சிக்கும், நீடித்த சக்திக்கும் சேலம் சிவராஜ் வைத்தியக் கவிராயரின் சிட்டுக்குருவி தங்க பஸ்ப லேகியங்கள் கொலுவிருக்கும் போது ஆலயங்களின் பவர் எதற்கு? சரி, மேலாடை அணியாமல் சென்றால் ஆலயத்தின் கிரக காந்த சக்தியை முழுமையாக உடலில் வாங்க முடியும் என்று அனுபவத்தின் மூலம் பாடம் எடுக்கும் வைத்தி வாள்சார் ஒரு முக்கியமான லீகல் பாயிண்டை மறந்து விட்டார்.

அதாவது கீழாடையும் அணியாமல் சென்றால் இந்த கிரக காந்த சக்தி இன்னும் வலுவாக உடலினுள் முழுமையாக இறங்கும் அல்லவா? ஒரு சில குஞ்சாமணிகள் உள்ளாடை அணியாமல் ஒரு மாமாங்கம் கோவில் சென்றால் பேண்டுக்கு மேல் ஜட்டியைப் போட்டு சீறிப்பாயும் அமெரிக்க சூப்பர்மேன் சக்தி கிடைக்குமல்லவா என்று கொளுத்திப் போடுகிறார்கள்.

இன்னும் சில ஷகிலா பக்தர்கள், மலையாள பாரம்பரியப்படி முண்டும், ரவிக்கையும் உடுத்திய பெண்களை மட்டும் அனுமதித்தால் என்னவென்று கேட்கிறார்கள். வைத்திசார்வாள் இதற்கெல்லாம் இளைய தலைமுறை சமஸ் போன்ற தத்துவாதிகளிடம் கலந்தாலோசித்து எழுத வேண்டும். இன்னும் சில வாயாடிகள் திருக்கோவில் கோபுரங்களில் இருக்கும் டிரஸ் இல்லாத கோடுகளை அதாவது அம்மணக்குண்டி சிலைகளைக் காட்டி இதுக்கெல்லாம் நீதிபதி ஐயா எப்போதையா டிரஸ் போடுவார் என்று கேட்கிறார்கள்.

கழனியில் வேலை செய்பவர் ஏன் வெள்ளை உடை உடுத்தாமல் அரை டிராயரை போட்டு குற்றம் புரிகிறார்?
கழனியில் வேலை செய்பவர் ஏன் வெள்ளை உடை உடுத்தாமல் அரை டிராயரை போட்டு குற்றம் புரிகிறார்?

ஆனாலும் வைத்திசார்வாளை ஏதோ புளிச்ச தயிர் சாதப் பார்ட்டி என்று ஏமாந்து விடாதீர்கள். இப்படி ஏட்டிக்கு போட்டியாக கேட்கப்படும் கேள்விகள், கேலிகள், பழிப்புகள் அனைத்தும் திராவிட அரசியலின் சதி என்று முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக முதலிலேயே சொல்லி விடுகிறார்.  இவர்களின் பிரச்சாரத்தால் கோவில்களில் குறைந்த கூட்டம் இப்போது கூடியிருக்கிறது என்று கூத்தாடும் ஐயர்வாள் ஆசிரியர் சார், இருப்பினும் ஆலயம் தொழுவதில் மற்ற மதத்தினரிடம் இருக்கும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதைப் பார்த்து வேதனையும் படுகிறார்.

அதுதான் இறைநாடி வரும் இளைய தலைமுறை டி சர்ட், ஜீன்ஸ், ஷார்ட், லெக்கின்ஸ், ஸகின் டைட் ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற கிறித்தவ நாட்டு உடைகளை உடுத்தி வருவதாம். இதனால் பாவாடை, தாவணி, சேலை, வேட்டி போன்ற பாரம்பரிய ஆடைகள் காணாமல் போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறதாம். இத்தகைய பாரம்பரிய வஸ்திரங்களின் மேல் வைத்திஜி கொண்டிருக்கும் மரியாதையையும், மதிப்பையும், பெருமிதத்தையும் பார்த்தால் நிச்சயம் அவர் கோவணமோ, லங்கோடோதான் கட்டியிருப்பார். ஆதாரம் வேண்டுவோருக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.

இறைவழிபாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன என்று வைத்திசார்வாள் அதிசயமாய் எழுதியிருக்கிறார். என்ன அதிலும் நிலைய உள் குத்துக்கள் இருக்கலாம். அரபு – சமஸ்கிருதம், புர்கா – பாரம்பரியம், கண்டிப்பான தொழுகை – கண்டிப்பான விரதம் போன்றவைகளை அவர் யோசித்திருக்க கூடும். இருப்பினும் ஒரு சுலைமான் மதரசாவில் படித்து மவுல்வியாக ஆனாலும், ஒரு சுடலையாண்டி வேதப் பாடசாலையில் படித்து அர்ச்சகராக ஆக முடியாது என்பதால் அவர் இஸ்லாமியர்களை மனம் திறந்து பாராட்டும் பாவத்தை செய்பவராக கருத முடியாது.

கறை படாத வெள்ளை வேட்டியை உழைப்பே இல்லாத உத்தமர்கள் மட்டும்தான் உடுத்த முடியும்!
கறை படாத வெள்ளை வேட்டியை உழைப்பே இல்லாத உத்தமர்கள் மட்டும்தான் உடுத்த முடியும்!

மேலாடையில்லாமல் வந்தால் யாரெல்லாம் பூணூல், யாரெல்லாம் பூணாத ஆள் என்று கண்டுபிடிப்பதற்கு தோதாக இருக்குமென்று நாத்திக ராட்சசர்கள் தீவிர பிரச்சாரம் செய்து புளுகுகிறார்கள் என்று கோபப்படுகிறார் வைத்தி. பின்னே தினமணி ஆபிசோ இல்லை டி.-சி.எஸ் மேலாளர் அறையோ இல்லை செட்டிநாட்டு வித்யாஷ்ரமம் பள்ளி கிரிக்கெட் அணியோ ஒவ்வொரு முறையும் தோளைத் தடவிப் பாத்து யாரெல்லாம் நூல் பார்ட்டி என்று கண்டுபிடிக்கும் அவஸ்தை யாருக்கய்யா புரியும்?

இறுதியாக  வைத்தி சார் ஜி அவர்கள் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் ஒரு சிறு கோரிக்கையை வைத்து சாஸ்டாங்கமாக நமஸ்கரிக்கிறார். அதன்படி கோவில்களில் செல்லிடப் பேசியை தடை செய்யவும், மீறினால் பறிமுதல் செய்து அபராதம் போடுவதையும் உடை கட்டுப்பாட்டுடன் சேர்த்து செய்தால் கலியுகத்தில் தர்மம் தழைத்து, அதர்மம் வீழ்வது உறுதி என்கிறார் தினமணியின் தீதும் பிறர் தர வாய்ப்பேயில்லாத ஆசிரியர் ஜி அவர்கள்.

ஆமாமய்யா, இனி தேவநாதன் ஜிக்கள், கருவறையில் பலான காட்சிகளை படம் பிடித்து சி.டிக்களாக விற்றுத் தீர்ந்து அதுவும் கீதை விற்பனையை முறியடித்த வேதனைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லையல்லவா?

இதுவும் போக வைத்தியின் அர்த்தசாஸ்திரத்தில் ஏகப்பட்ட கோரிக்கைகள் உண்டு.

தேவதாசி முறையை மீட்டு வந்தால் தேவலோக இந்திர சபையில் நடக்கும் ஆட்டங்கள் இங்கேயும் நடக்கலாம். கடவுளும் உள்ளம் மகிழலாம். மாமிச உணவைத் தின்னுவதால் வரும்  வன்முறைக் குணங்களை மட்டறுக்க கோபுரத்தின் கீழேயே ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேனரைப் போட்டு வருவோர் எவரும் மட்டனோ சிக்கனோ மீனோ இல்லாத வயிறைக் கொண்டிருக்கிறாரா என்று ஸ்கேன் செய்து அனுப்பலாம். கூடவே மல ஜலங்களை காலி செய்யாமல் வரும் பக்தர்களுக்கு இனிமா கொடுத்து வெறும் வயிற்றோடு அனுப்பலாம்.

பாவாடை தாவணியை சினிமாவே மறந்து விட்ட நிலையில் பக்தியா மீட்டு விடும்?
பாவாடை தாவணியை சினிமாவே மறந்து விட்ட நிலையில் பக்தியா மீட்டு விடும்?

அன்றாடம், வாரம், மாதம் என்று கோவில்களுக்கு வருகை தருவோருக்கு              பாயிண்ட் போட்டு மயிலாப்பூர் கிரி கடை கிஃப்ட் கூப்பன் கொடுக்கலாம். கோவில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா, பாபா ராம் தேவ் யோகா,  டபுள்ஸ்ரீ ரவி சங்கரின் கார்ப்பரேட் யோகா, இராம கோபாலனின் சீற்றம், ஜக்கியின்  ஈஷா யோகா அனைத்திற்கும் நிரந்தர கடைகளை ஏற்படுத்தலாம்.

எல்லாம் சரிதான் வைத்திஜி சார்! ஒன்றைத் தவிர!!

ஏற்கனவே ஆன்ட்ராய்டு ஆப் மூலம் பக்தி ஆப், யோகா ஆப், விரத ஆப்புனு போய்க் கொண்டிருக்கும் ஃபுல் தமிழகத்தை இப்படி ஜீன்ஸ், லெக்கின்ஸ் தடை போட்டால் வவ்வாலும், ஐயரும் மட்டும் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு யார் வருவார்? ஜனவரி புத்தாண்டு கிறித்தவ புத்தாண்டு, அன்று நள்ளிரவு கோவில்களை திறக்காதீர்கள், அதிகாலைதான் இந்துப் பண்பாடு, அன்று கோவிலுக்கு போகாதீர்கள் என்று இந்து முன்னணியும், இதர பரிவாரங்களும் கரடியாக கத்தி என்ன?

புத்தாண்டை கொண்டாடுவோரும், நள்ளிரவு 12 மணிக்கு கோவிலுக்கு செல்வோரும் இந்துக்கள் இல்லை என அறிவித்தால் என்ன ஆகும்? இது சிறுபான்மை இந்துக்கள் வாழும் நாடாகிவிடாதா?

ஜாக்கி ஜட்டியும், லீவைஸ் ஜீன்சும், நாயுடு ஹால் லெக்கின்ஸும் போடுபவர்கள் கோவிலுக்கு வரக் கூடாது என்றால் பிறகு யார் வர வேண்டும்? நாகா சாமியார்களா? மல்டிபிளக்சிலும், ஹைப்பர் மார்க்கெட்டிலும், மேல் படிப்பிலும் இதுதான் உடை, இதுதான் நடை என்றான பிறகு கோவிலுக்கு மட்டும் என்னய்யா தடை? டாஸ்மாக்கிற்கு போகும் வழியில் வரும் பெருமாள் கோவில் முன்பு, பல்சரை நிறுத்தி பவ்யமாய் கன்னத்தில் ரெண்டு தட்டி, வாயில் ஒரு முத்தம் கொடுத்து செல்லும் பக்தர்கள் வாழும் நாட்டில் இத்தகைய கட்டுப்பாடுகள் வந்தால் முதலுக்கே மோசமென்று இந்த வைத்திக்கு யாரய்யா பாடம் எடுப்பார்கள்?

மடிசார் கட்டாமல் இந்து ஞான மரபுக்கு விரோதமாக வேலை செய்யும் பெண்கள்!
மடிசார் கட்டாமல் இந்து ஞான மரபுக்கு விரோதமாக வேலை செய்யும் பெண்கள்!

அமெரிக்காவில் மாடுகளை மேய்க்கும் கௌபாய்களும், கடுமுழைப்பு தொழிலாளிகளும் தார்பாய்களை கிழித்து தைத்த பேண்டுகளில் பிரச்சினையே இல்லாமல் வேலை செய்தார்கள். ஜீன்சின் தல புராணம் இவ்வாறு இருக்கையில் நம்மூர் கழனிகளில் வேட்டி, மடிசார், அங்கவஸ்திரத்துடன் இறங்கும் மக்களை பார்த்திருக்கிறீர்களா? இல்லை பாதாளச் சாக்கடைகளில் ராம்ராஜ் பாரம்பரிய காட்டன் வேட்டியுடன் இறங்கும் துப்பரவு தொழிலாளிகளைத்தான் பார்க்க முடியுமா?

பேண்டும், சுடிதாரும், லெக்கின்சும் வந்த பிறகுதான் அதிக பெண்கள் இந்தக் கால்களால் நாலு இடங்களில் நடக்க முடியும் என்பதைக் கண்டிருக்கிறார்கள். ஆலயத்திற்கும், சமையலறைக்கும் மட்டுமென்றால் சேலையே போதும்தான். ஆனால் உங்கள் குடமுழுக்கிற்கும், தேர்த்திருவிழா கூட்டத்திற்கும் ஒழுங்கு படுத்த வரும் பெண் போலிசு, பேண்டு போடக்கூடாது என்றால் மோடியிடம் சொல்லி இராணுவத்திற்கும் சேலையையே கட்டாய உடையாக்கலாமே?

temple dress code (1)ஆக உங்களது தூய வெள்ளை வேட்டியும், தூய மடிசார் சேலையும் எங்கள் உழைப்பாளிகளின் அன்றாட ஆடையாகாத போது கைலி கட்டினால் அனுமதி இல்லை என்றாகும் போது என்ன நடக்கும்?

ஏற்கனவே வைத்திவாள் கவலைப்படும் இறை வழிபாட்டு அலட்சியம் ஒரு மாபெரும் புறக்கணிப்பாய் முடியும். இளைய தலைமுறை இனி எந்நாளும் கோவிகளுக்கு வரமாட்டார்கள் என்றாகும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் அனுமதிக்கப்படும் பிரைவேட் கோவில்கள் உருவாகும். நாட்டார் தெய்வ வழிபாடும், கோவில்களும் வளரும்.

பிறகு இராம கோபாலனும், வைத்தியும் கரடியாய் கத்துவதைக் காணுவதற்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள்.

____________________

 

  1. வினவு போன்ற தலித் ஆதரவாளர்களுக்கு இந்து பாரம்பரியங்கள் வேடிக்கையாக தான் இருக்கும்… பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வரும் இந்த விஷயங்கள், முகலாயர்களளும், அங்கிலேய கிறுத்துவர்களாலும் உடைக்க முடியாத போது, சில கீழ் சாதி விஷமிகளால் ஒரு மண்ணும் செய்யமுடியாது…. சாக்கடை ஒரு ஒரத்தில் ஓடுவதை போல, சில கழிவுகள் இது போல கட்டுரை எழுதி பெருமைப்பட்டுக்கொள்ளும்… அவ்வளவு தான்.

    • Mr. Omini, Your are out. If you want to agitate others by cursing casts and religion, it’s not going to work here. If you have guts to argue with the theme then talk about that. What I fee from your comment is that you are afraid of some thing. May be you are afraid of loosing your community dominance in the society. My pint is here, Worshiping god is my rights. The way I dress is my right until it’s convenient with other people.(It is depends on where I live) But the latest announcement is completely one step going back to the stone ages. If a legal system controlled by caste, religion, and money then you have to expect all of these nonsense. Thank you.

    • Mr.Omnipresent the term DALIT was politically coined nothing to do with HINDU reigion. They are also Hindus only but due to foreign invasions and present conversion tacticS through NGO’s they are being alienated from HINDU. a few examples like @Hisfeet. The soil of PERIYAR and DRAVIDIAN alone is responsible for HONOUR KILLINGS and all type of discriminations.

      • Srinivasan, what caused honor killing and untouchability? teaching of Periyar or your retarded religion? Everybody knows that. You mean to say Manu, Puranas etc are Missionary conspiracies or Mughal myths? Story of Sambuka, Karna, Gita, Manu etc all have castist and sexist overtones. What makes you to accuse Periyar or others for all these? India tops in female infanticide and feticide. Baba Ramdev is selling medicine to produce male babies. Eating beef is banned while aghoris are gorging portions of human meat. Are you not ashamed that your civilization is a laughing bunch in the modern world? Do you want to place the blame for all these on Periyar/NGO/Mughal rule? Abolishing Sati was a Christian conspiracy. Devadasi system was ended by sickular Congress. Property rights for women is NGO backed evil. What else?

        • @HisFeet I can provide n number of counter against your cheap and dirty comments, than there will be no difference between you and me. Im aware that you are an EVANGELIST. Do not keep spitting on yourself by targeting either me or our RICH AND CULTURAL TAMIL traditions. I dont have any hatred with you because you are mere arrow and the persons are from foreign countries like US and EUROPE christian missionaries who have the wicked mind to poke our eyes with our finger.

          • Really funny. You can see that I am anti-US in opinions expressed in other comments. Europe? What is the % of Christians in Europe? Again, if I ask about problems in prevailing culture, why you bother to look in to some other religion? You can either answer me or question me separately.

            This is how your comment looks like:

            @Srinivasan, you don’t even answer one question raised by me but accuse me as a foreign agent, that is the difference between you and me. Im aware that you are an RSS slave. I dont have any hatred with you because you are mere arrow and the persons are from Northern states like Maharashtra (Shiv Sena) and Gujarat RSS sevaks who have the wicked mind to poke our eyes with our finger.

            • Rev.@HisFeet I do not want to lower myself by replying to you.I will reply to a true christian not to converted christians. After all you are frustrated when I talk about your religion than why do you want to give comments regarding HINDU alone. I have already stated that those who all talks about right wings and HINDUS are branded as RSS by PURE ANTI NATIONAL ELEMENTS.

              • Who is a true Christian? Jesus himself was a Jew. All Christians are “converted” Christians. I am not frustrated. You give some valid criticism like fraud pastors, child sex abuse in Catholic Church, looting in educational institutions etc. Instead you try to push caste problem on Periyar. That is what I was against. We need a leader like Periyar, not only to reform Hinduism also Christianity/Islam/Sikhism.

                • why do you expect me to criticize other religions it is not my job? I do respect all relgious sentiments inspite they also do the same. I once again strongly register that a TRUE TAMILIAN will never recognize EVR as a rationalist or reformist leader.He abused Tamil as the language of barbarians and ridiculed the Tamil people by claiming that he, a Kannadiga, could become a leader of the Tamils because there was no Tamilian fit to lead them. Do any TAMILIAN can accept this? EVR become famous by mere mocking at HINDU religion only. Not only he no one can talk against other relgion because all are well aware what will happen to them if they utter a word against other religion.

                  • Srinivasan, you are taking Periyar out of context. It is the kind of anger due to frustration. Dad’s scolding can’t be counted as abuse. It is to make his children realize. I see Periyar as a human. Not as Kanadiga or Telugu or Tamil. Even if he is a Black or White, I don’t mind. What matters for me is his philosophy. Even I have some difference in opinion. But that won’t make Periyar any lesser.

  2. ஜீன்ஸ், பேண்ட் போட்டுக்கிட்டு எதாவது மசூதிக்குப் போயி தொழுக பண்ணுவாங்களா பாய்ங்க? இல்ல பேகம் சகோதரிங்க புர்கா போடாம போகமுடியுமா? (மொதல்ல சகோதரிகள் மஸூதிக்குள்ள நுழய அனுமதி உண்டான்னு தெரியல)
    ஏனய்யா உங்க சட்டங்கள கோவில்களுக்கு மட்டும் கொண்டு வரீங்க?

    • Mr. Manidhan, Simply you are comparing your religion with Wahhabi-sim. Am I wright ? Then you too have to grab a knife to cut the ……. Think before you write my brother. (Note: I am not generalizing religions here. Please read as my comments only for the response for the above comparison) Thank you.

  3. “Jeans Terrorism”. Amazing, Awesome article. Please publish similar articles everyday. Life has become so stressful. These articles help in relieving the stress.

  4. இதென்னடா அநியாயமாக இருக்கிறது. அவனவன் அரேபியர்களின், ஆபிரிக்கர்களின் ஆடையணிகளை எல்லாம் கொண்டு வந்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போட்டுக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை.

    தமிழ்நாட்டில் தமிழர்களின் மொழி, கலாச்சாரம், உணவுப் பழக்க வழக்கங்கள் எல்லாமே மாறிக் கொண்டு வருகின்றன. இப்பவே பரோட்டாவும், சால்னாவும் தோசை வடையையும், தமிழர்களின் பாரம்பரிய உணவாகிய பிட்டையும் விழுங்கி விட்டது. தமிழ்ச் சிறுமிகளின் ஆடையாகிய பாவாடை தாவணியைக் காண்பதே அரிது. கோயில்களில் தான் தமிழும் வளர்ந்தது, தமிழ்க் கலாச்சாரமும் காக்கப்பட்டது, அங்கே தான் தமிழ்ப் புலவர்களும் தமிழை வளர்த்தனர். அப்படியான தமிழர்களின் தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழர்களை, தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து செல்லுமாறு தமிழராகிய ஒரு நீதிபதி கூறுவதை தமிழர்கள் எதிர்ப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அல்லது இந்தக் கட்டுரையாசிரியர் தமிழரல்லாத திராவிடரோ என்னவோ யார் கண்டது. உதாரணமாக, தமிழ்நாட்டில் தமிழ்ப்பெண்கள் எல்லோரும் குஜராத்திப் பெண்கள் போல சேலையணிந்து கொண்டு கோயிலுக்குப் போக வேண்டுமென்று, இந்துத்துவா கொள்கைகளின் அடிப்படையில் அவர் கூறியிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயமுண்டு. அவர் கூறுவதெல்லாம், தமிழ்நாட்டில் தமிழர்களின், பாரம்பரிய ஆடைகளை (தமிழ்நாட்டில் கோயிலுக்குப் போகும் போது மட்டும்) அணியுமாறு தான் கூறுகிறார். இது பெரும்பான்மை சைவ/வைணவர்களாகிய தமிழர்களால் வரவேற்கப்பட வேண்டியதொன்று.

    ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல் எல்லாவற்றிலும் பார்ப்பனீயத்தைக் காண்பதும் தவறு. பார்ப்பனர்கள் இல்லாத ஈழத்தில், அரைகுறையாக ஆடையணிந்து கொண்டு யாழ்ப்பாணத்துக் கோயில்களுக்கு ‘உல்லாசப்பயணம்’ வரும் சிங்களவர்களை, அவர்களின் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு வரச் செய்வதற்காக இந்த நடைமுறை யாழ். நல்லூர் கோயிலில் 2010 இலேயே நடமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

    • Ok Vyasan. Let us take Pavadai thaavani! Is blouse allowed or not? If so, can we use hook (which is western evil) in it or not? Can women wear bra inside blouse? Also can they wear panty? If so is elastic in innerwears allowed or not? Those are all not there in our culture right? If their motive is to reinforce “Tamil” culture, why they allowed chudithaar? Is welcro dothi allowed? First ask the priests to wear shirt. Their sweaty, stinky hairy chest/belly and arm pit are an aversion to sight in public places. Yuk! Fix them first.

  5. உடைவிஷயத்தில் மட்டுமல்ல, பொதுவாக பெண்கள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும்நம் முன்னோர்களின் “பார்வை” வித்தியாசமாகத்தான் இருக்கிறது! கோவில்களில் காணப்படும் சகல விதமான சிற்பங்களை பார்த்து முற்றும் துறந்த(மானம்,மரியாதி இத்தியாதி..) சஙகர சாரிகள் முதல் சாதாரண குருக்கள் தேவனாதன் வரை அனைவரும் கெட்டது இந்த பெண்களால் தானே! ஆடையின்றி அன்னம் கேட்ட கடவுளும், ஆடையை திருடி மறைத்துநிர்வாணம் ரசித்த கடவுளும் உள்ள கோவில்களில் அறை குறை ஆடையுடன் அதுவும் பெண்கள் செல்லலாமா? ஆண்களும் உடை விஷயத்தில் கவனாமாயிருப்பதுநல்லது! இன்னொரு அய்யப்பன் வரக்கூடாதில்லையா!

  6. சட்டம் இயற்றுவது ஒரு நீதிபதியின் வேலை மற்றும் உரிமை அல்லது கடமை அல்ல. சட்டம் இயற்றுவது மக்கள் மன்றங்கள். அதனை நடைமுறைப்படுத்துவது அரசு இயந்திரம். முன்னர் ஏற்றுக்கொண்ட சில அடிப்படை கட்டுதிட்டங்களுக்குள் சட்டமும் அதன் நடைமுறையும் இயங்குகின்றனவா எனத் தீர்மானிப்பது நீதிபதியின் வேலை. ஆனால் நம் “மதராஸ் உயர் நீதிமன்றம்” எல்லாம் தானே என்ற நடைமுறையில் உள்ளது. தலைக் கவசம் அணியாவிட்டால் வண்டியைப் பிடுங்க வேண்டும் என்று எந்தச் சட்டத்திலும் இல்லை. ஆனால் ஒரு நீதிபதி ஒரு சட்டமாகப் போடுகிறார். தான் சீரழித்தப் பெண்ணிடம் சமரசமாகப் பேச அறிவுறுத்துகிறார் ஒரு நீதிபதி. இதுவரை சாட்டப்பட்டக் குற்றங்களுக்காக ஒருவரைக் கைது செய்யவேண்டாமேனும் நீதிபதி இனிமேல் சாட்டப் படக்கூடியக் குற்றங்களுக்கும் அவரைக் கைது செய்யக்கூடாது என உத்திரவிடுகிறார். இவற்றையெல்லாம் தட்டிக் கேட்டால் அவமதிப்பு வழக்கு பாயும் என மிரட்டப் படுகின்றனர். இப்போது நீதிமன்றத்தின் கோட்பாடு “தனக்குத் தானே” என்பதுதான். ஆளுபவ்ர்களுக்காவது எதிர்க் கட்சிகள் இருக்கின்றன. நீதிபதிகள் பழைய காலத்து மிட்டா மிராசுகள் போலச் செயல் படுகின்றனர்.

    • நீதிபாதி, பரிபாலனம் பாதி; ரெண்டும் சேர்ந்த்துதான் நான் என்கிறார்கள். ஆமாம், அப்படித்தானே ஒவ்வொரு தூணும் இன்னைக்கி சொல்லுது, நடந்துக்குது. ஒரே ஒருதூண் மட்டும் மத்த தூண் எல்லாத்துக்கும் நான் தான் ஒரே ஒரு முட்டுக் கம்புங்குது.
      மணல் மாதிரி மக்கள் இருக்கிற வரைக்கும் இந்த தூண்கள் எல்லா வெயிட்டயும் நம்ம மேல இறக்கும்.

  7. அகறை படாத வெள்ளை வேட்டியை உழைப்பே இல்லாத உத்தமர்கள் மட்டும்தான் உடுத்த முடியும்!
    இதை விட உழைக்கும் மக்களை கேவலப்படுத்த முடியாது யாராலும், உங்களுடன் போராட வரும் விவ்சாய முன்னனி தோழரகள் யாரும் வெள்ளை வேட்டி சட்ட துண்டுடன் தானே இருக்கிறார்கள் உங்களின் பழைய படங்களை பாருங்கள் போராடுன கையோட கோவிலுக்கு போனா யாரும் ஸ்டாப் பன்ன மாட்டாக எஙக ஊரில எல்லாம் டவுசரும் முன்டா பனியனும் போட்டுக்கொண்டு வயலில் வேலை செய்யும் விவசாயிகள் தும்பை பூ போ போல இருக்கும் வே#ட்டியும் சட்டையும் அணிந்து கோவிலுக்கோ மத்த பங்சனுக்கோ போறாக விட்டு தள்ளெளங்க உங்க பரப்புரையை ,அறநிலையதுறையின் இந்த உத்தரவு யாருக்கானது பங்களா பார்ப்பனர்களுக்கும் உயர் சாதி அமெரிக்க அடிமைகளுக்குமானது அதற்க்கு அவர்கள்தான் வயித்தெரிச்சல் பட வேண்டும் நீங்கள் படுவது வேடிக்கையானது
    அடுத்து பாத்திகனா லுங்கியோட கோவிலுக்கு போகரெ அனுமதி வேண்டும் என்பது போன்று எழுதி இருக்கிறார் கட்டம் போட்ட அரபு லுங்கிதான் உழைக்கும் மக்களுக்கான உடை என்று திரிக்க பார்க்கிறார் கட்டுரையாளர் இப்பெல்லாம் கருப்பு ,காவி,பச்சை .ஊதா,வெள்ளை என்று கலர் கலராக லுங்கிகள் வந்து விட்டன அதையெல்லாம் கட்டிக்கொண்டு உழைக்கவும் போகலாம் கோவிலுக்கும் போகலாம்

  8. மேல போத்தாம துண்ட ஒதரி தோள்ல போட்டுக்குட்டு பூனூலும் தொந்தியும் பளபளக்க, நைய்ய்ஸ் எட்டு முழம் வேட்டியில கச்சம் வரிஞ்சு கட்டிக்கிட்டு டான் டான் டான்னு போர அர்ச்சகர்களுக்கு இந்த சட்டம், ஆணை ஏதும் பொருந்தப்போகுதா அவங்களும் கோயிலுக்குத் தானே போராங்க..… ஆனா பொருந்தாது. அது அவா கோவில்..இல்ல இல்ல அது (மூலஸ்தானம்) அவா அபார்ட்மெண்ட் இல்ல இல்ல டிபார்ட்மெண்ட் , ’கண்டக்டருக்கே டிக்கெட்டா?’ என்பதுபோல.

    இது வெருமனே கீழயும் மேலயும் போத்திக்கிட்டு போய் கும்புடுற விசயம் மட்டுமல்ல. கிண்டலோடு கொஞ்சம் சீரியசாவும் புரிஞ்சுக்கணும் ”பொத்திக்கிட்டு நாங்க சொல்றபடி நட” என்கிற கருத்தாதிக்கத்தின் வெளிப்பாடு.

  9. வழிபாடு உள்ளிட்ட பண்பாடு, பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் நிருக்கும் தராசு யார் கையில்?

    கடந்த மாதம் 20-22 தேதியை ஒட்டி இதே வைத்தியநாத [சாஸ்த்ரிகள்] கனம் நீதிபதி அவர்கள் 1008 பசுக்களைக் கொண்டு முசிறியில் கோபூஜை நட்த்த அனுமதி கோரிய ஒரு விவசாய சங்க தலைவரின் மனுவைத் தள்ளுபடி செய்தார். அதை செய்தித் தாள்களில் பார்த்திருப்பீர்கள்.

    அதற்கு அவர், ”உங்கள் மூடநம்பிக்கைக்காக விலங்குகளைத் துன்புறுத்தக்கூடாது. பசுமைப் புரட்சியும், புதிய தாராளவாத உலகமயப் பொருளாதாரமும் கிராமத்துப் பசுக்களை எல்லாம் கசாப்புக் கடைக்கு அனுப்பிவிட்டதனால் 1008 பசுக்களை ஓரிடத்துக்குக் கொண்டுவருவது அம்மாவால் யானைகள் படும் பாட்டைவிடக் கொடுமையானதாக இருக்கும். எனவே கூடாது” என்று சொல்லியிருக்கலாம்.

    ஆனால், அவர் சொல்லியதாகப் பேப்பரில் கண்ட காரணமோ சாட்சாத் சங்க பரிவாரத்தின் குரலாகவே ஒலித்தது.

    கோயில் உள்ளிட்ட ஒரு பொது இடத்துக்கு அதற்குரிய நாகரீகத்துடன் [தான் அங்கு விக்கிரகமல்ல என்ற புரிதலுடன்] உடையணிந்து செல்வது; விலங்குகளைத் துன்புறுத்தாது இருப்பது…. இப்படி ஒவ்வொன்றுக்கும் வேறுபட்ட புரிதல்களும் வேறுபட்ட புரிதல்களுக்கு வேறுபட்ட உட் பொருளும் இருக்கிறது. ஆதிக்கம் செய்யும் புரிதலுக்கும் அதன் பொருளுக்கும் உள்ள உறவை எடைபோடக் கற்போம்.

  10. This article clearly shows that Dalits don’t understand the value of hindu temples. If you don’t like hinduism, pls change to some other religion. You people cannot talk like this in pakistan.

  11. இந்தத் தீர்ப்பு சரியானது என்பதுதான் என் சிந்தனைக்கு எட்டுகிறது. ஆலயங்களையாவது அநாகரீகங்களிலிருந்து காப்பாற்றுங்கள். முதலில் உடை. பிறகு ஒழுக்கங்களை படிப்படியாக வரையறுக்கலாம். வினவு ஆலயங்களில் சம உரிமையை மட்டும் வலியுறுத்தலாம். கோவில்கள் என்றாலே எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.

    • Mr. Faqir,

      I am agreeing with your thinking, however, do you agree that a court can determine my day today life style ? These kind of changes should come from public. not from court. If this court ordered to have every household a Washroom (Toilet) and government should help then I would have welcomed it.

  12. இந்து மத விவகாரங்களில் கூட இசுலாமிய மதத்தை இழுக்காமல் இந்து மதவெறியர்கள் பேசுவதில்லை.உங்கள் கோவில்களில் எந்த ஆடை உடுத்துவது என்று முடிவு செய்வதில் இசுலாமியருக்கு என்ன பங்கு இருக்கிறது.நேர்மையாக அந்த பொருள் பற்றி மட்டும் பேசாமல் மற்ற மதங்களை இழுப்பதற்கு என்ன காரணம்.அதுதான் மதவெறி.

    மனிதன் என்ற மதவெறியர் கேட்கிறார்.\\ ஜீன்ஸ், பேண்ட் போட்டுக்கிட்டு எதாவது மசூதிக்குப் போயி தொழுக பண்ணுவாங்களா பாய்ங்க? இல்ல பேகம் சகோதரிங்க புர்கா போடாம போகமுடியுமா? (மொதல்ல சகோதரிகள் மஸூதிக்குள்ள நுழய அனுமதி உண்டான்னு தெரியல//.

    ஜீன்ஸ்,காற்சட்டை அணிந்து ஆண்கள் மசூதிக்கு செல்கிறார்கள்.இதனை எந்த ஒரு தொழுகைக்கு பின்னும் மசூதியிலிருந்து வெளியே வருபவர்களை வாசலில் நின்று கவனித்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.பெண்கள் பள்ளிவாசலில் போய் தொழ மதநெறிகள் தடை விதிக்கவில்லை.இரவு தொழுகை,அதிகாலை தொழுகை நேரங்களில் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக மைய நீரோட்ட முசுலிம்கள் நடத்தும் பள்ளிகளில் பெண்களை அனுமதிப்பதை தவிர்க்கிறார்கள்.அதே சமயம் வகாபிகள் ,அடிப்படைவாதிகள்,தீவிரவாதிகள்,ஆணாதிக்க வெறியர்கள் என அவதூறு செய்யப்படும் TNTJ ,TMMK நடத்தும் பள்ளிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அடுத்து வியாசன்.இவரும் முசுலிம் பெண்கள் புர்கா அணிவது பற்றி சாமியாடி விட்டுத்தான் விவாதத்தை துவக்குகிறார்,உங்க கோயில்ல என்ன ஆடை போட்டுக்கிறதுன்னு நாங்களா முடிவு பண்றோம்.எங்களை வம்புக்கிழுப்பது உங்கள் மதப்பற்றை காட்டாது.பிற மத எதிர்ப்பு மதவெறியைத்தான் காட்டும்.முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம்..பதிவில் முசுலிம் பெண்கள் புர்கா அணிவது பற்றி நீண்ட விவாதங்கள் நடைபெற்றன.
    அதில் இசுலாமியர்கள் எழுதிய பின்னூட்டங்கள் சுமார் நூறு இருக்கும்.அதில் ஒன்றில் கூட நாங்கள் இந்து சகோதரிகளின் ஆடை பழக்க வழக்கங்களை [அது நாங்கள் பின்பற்றாதது என்றாலும் கூட] குறை கூறி ஒரு வரி கூட எழுதியதில்லை.அதுதான் நாகரீகம்,

    தமிழர்களின் தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழர்களை, தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து செல்லுமாறு தமிழராகிய ஒரு நீதிபதி கூறுவதை தமிழர்கள் எதிர்ப்பதை வியாசனால் புரிந்து கொள்ள முடியவில்லையாம்.இதையே தமிழரல்லாத ஒரு நீதிபதி சொன்னால் வியாசன் எதிர்ப்பாராமா.என்ன தர்க்கம் [logic ] இது.

    பாவாடை தாவாணி காணாமல் போய் விட்டது என்றும் அரபு நாட்டு உடைகளை அணிகிறார்கள் என்றும் கோவப்படுறார்.ஒரே ஒரு கேள்வி.வேட்டி சட்டை காணாமல் போனது பற்றி ஏன் யாருக்கும் கோவம் வருவதில்லை.இந்த தீர்ப்பு ஆண்களுக்கு காற்சட்டை,பெண்களுக்கு சுடிதார் ஆகிய ஆடைகளை அனுமதிக்கிறது.இவையெல்லாம் தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளாக வியாசன் கருதுகிறாரா.

    \\இப்பவே பரோட்டாவும், சால்னாவும் தோசை வடையையும், தமிழர்களின் பாரம்பரிய உணவாகிய பிட்டையும் விழுங்கி விட்டது.//

    திண்ணை வேதாந்திகள் தொப்பையை நிரப்ப இட்லியும் பிட்டும் போதுமானதாக இருக்கலாம்.மீன்பாடி வண்டி ஓட்டவும் களத்து மேட்டுல உழைக்கிறதுக்கும் போறவனுக்கு பாய் கடை புரோட்டாவும் சால்னாவும் தள்ளுவண்டி முனுசாமி கடை மாட்டுக்கறியும்தான் சரிப்பட்டு வருது.வியாசன் கோவப்படுறாருன்னு அதை மாத்த சொல்ல முடியாது.வியாசன் அடிக்கடி தென் மாவட்ட சுற்றுலா போறவர்தானே.அங்கே விசாரித்து பார்க்கட்டும்.மதுரை பரமக்குடி,அருப்புக்கோட்டை போன்ற நகரங்களிலிருந்து ஓடும் பேருந்துகளின் ஓட்டுனர் நடத்துனர்கள் அந்த நகரங்களின் ”உயர்தர சைவ ”விடுதிகளில் சாப்பிடாமல் முதுகுளத்தூர்,கமுதி,ஏர்வாடி போன்ற சிறிய நகரங்களின் புரோட்டா கடைகளை தேடி வருவது ஏன் என விசாரித்து பார்க்கட்டும்..

    • //திண்ணை வேதாந்திகள் தொப்பையை நிரப்ப இட்லியும் பிட்டும் போதுமானதாக இருக்கலாம்.மீன்பாடி வண்டி ஓட்டவும் களத்து மேட்டுல உழைக்கிறதுக்கும் போறவனுக்கு பாய் கடை புரோட்டாவும் சால்னாவும் தள்ளுவண்டி முனுசாமி கடை மாட்டுக்கறியும்தான் சரிப்பட்டு வருது.//

      பரோட்டாவும் சால்னாவும் எந்த மக்களுக்கும் ஏற்ற உணவு கிடையாது.. உடலுக்கு அதிக தீங்கு ஏற்ப்படுத்தும் உணவுகளில் பரோட்டா தான் முதன்மையானது. அதை தயாரிக்க பயன்படுத்தும் மைதா மாவில் உள்ள பல்வேறு ரசாயனங்கள் ஆபத்துகள் நிறைந்தவை. உழைக்கும் மக்கள் உழைக்காத மக்கள் என்று அனைத்து தரப்பினர்க்கும் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து உடல் பருமன் சர்க்கரை வியாதி போன்று நோய்களை உருவாக்கி சீர்க்கெடுக்கும் உணவு பரோட்டா!!! மொத்தத்தில் பரோட்டா ஒரு கொடிய விஷம்.

      மற்றப்படி கட்டுரையின் கருத்து தவறாகத் தான் இருக்கிறது. வழிப்பாட்டு இடங்களுக்கு செல்லும் பொழுது கண்ணியத்தை ஏற்ப்படுத்தும் நாகரீகமான உடைகளைத் தான் அணிந்து செல்ல வேண்டும். ஜீன்ஸ். லோ ஹிப், லோ நெக், ஸ்லீவ் லெஸ் போன்ற உடைகளை அணிந்து வழிப்பாட்டு இடங்களுக்கு செல்வது அநாகரீகமான ஒன்றே. அதற்கென்று கடற்கரை,திரையரங்கம், ஷாபிங் மால்கள் போன்ற பல இடங்கள் நகரில் கொட்டிக் கிடக்கின்றன. பல வேளைகளில் எங்களின் தேவாலயத்திற்கு வரும் பெண்களே இதுப் போன்ற அரைக்குறை ஆபாச உடை அணிந்து வருவது மனதிற்கு நெருடல் ஏற்ப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அதென்னமோ தமிழ் நாட்டு கத்தோலிக்கர்கள் தங்களை ஐரோப்பிய நாட்டினராகவே நினைத்துக் கொள்கிறார்கள். உடலாலும்,சிந்தனையாலும்,உணவு உடைப் போன்ற அனைத்திலும் ஐரோப்பிய பழக்க வழக்கங்களை காப்பி அடிப்பதில் அப்படி என்ன சந்தோஷமோ???? இதன் மர்மம் எனக்கு விளங்கவில்லை? ஆகவே நீதிபதி வைத்திய நாதனின் இந்த தீர்ப்பினை நான் வரவேற்கிறேன்.

      • வந்து விட்டார்கள் அறிவியல் ஆய்வாளர்கள்.ஏதாவது அச்சடித்த காகிதத்தில் படித்தால் போதும்,அல்லது கணினித்திரையில் பார்த்தால் போதும் அதை நம்பி ஊர் முழுதும் பரப்பிக்கொண்டு அலைவார்கள் இந்த ஆய்வாளர்கள்.

        எப்படி, எத்தனை பேரின் மீது மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டு பரோட்டா உடலுக்கு கெடுதி என்ற முடிவுக்கு வந்தார்கள் போன்ற விவரங்களெல்லாம் இவர்களுக்கு தேவை இல்லை.அதுல படிச்சேன்,இதுல படிச்சேன் அதுனால அது தீங்குதான் என்பார்கள்.தங்களுடைய பொது அறிவை குறைந்த பட்சமாக கூட இந்த ஆய்வுக்கு பொருத்திப்பார்க்க மாட்டார்கள்.ஒரே ஒரு கேள்வி .

        புரோட்டா செய்ய பயன்படும் அதே மைதா மாவில்தான் பிரட்டும் பன்னும் பிஸ்கட்டும் செய்யப்படுகின்றன.அவற்றை குழந்தைகள்,நோயாளிகள் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்களே ,எப்படி.

        இன்னொரு கேள்வி.அந்த மைதா மாவில்தான் பிஸ்சா ,நூடுல்ஸ்,போன்ற உணவுப்பண்டங்களையும் செய்கிறார்கள்.அவற்றை நஞ்சு என சாடுவார்களா.பரோட்டாவின் மீது மட்டும் ஏன் இவ்வளவு காண்டு.ஏழைகள் உண்ணும் உணவு என்பதாலா.பணக்காரனின் உணவின் மீது பரிவும் ஏழைகளின் உணவின் மீது இளக்காரமும் கொள்வது சரியா.

        மைதாவின் மீது இவர்கள் சொல்லும் குறை என்னவென்றால் அது கோதுமை தவிட்டை நீக்கி விட்டு செய்யபடுவதால் அதில் நார்சத்து குறைவு.அதனால் செரிக்க நேரமாகும்.மாவு சத்து மிகுந்திருப்பதால் குருதியில் சர்க்கரை அளவை கூட்டும்..மைதாவை வெளுக்க வைக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

        அத்தனையும் உண்மை .ஆனால் இதனால் உழைப்பாளி மக்களுக்கு எந்த கெடுதலும் இல்லை.உடல் உழைப்புக்கு தேவையான ஆற்றலை வழங்குவதே குருதியில் உள்ள சர்க்கரைதான்.அதனால் உழைக்கும் மக்களுக்கு மாவுச்சத்து அதிகமாக இருப்பது பிரச்னையில்லை.அதிக உழைப்புக்கு அதிக ஆற்றல் தேவை என்பதால் செரிமானமும் அவர்களுக்கு பிரச்னை இல்லை.நாலு இட்லியை தின்று விட்டு திண்ணையில் உருளும் வேதாந்திக்கு வேண்டுமானால் அது செரிக்க நாலு மணி நேரமாகலாம்.சரக்குந்திலிருந்து மூட்டை ஏற்றி,இறக்கும் தொழிலாளிக்கு ஐந்தாறு புரோட்டா என்பதெல்லாம் சோளப்பொரி போலத்தான்.

        அடுத்து வேதிப்பொருள்.

        இன்றைய உணவுப்பொருள் எதில்தான் வேதிப்பொருள் இல்லை என பட்டியல் போட்டு விட்டு அறிவியல் ஆய்வாளர்கள் புரோட்டா நஞ்சு என சொல்லட்டும்.

        முதலிலேயே சொல்லிவிட்டேன்.பேருந்தில் குறுக்கும் நெடுக்கும் நாள் முழுவதும் நடக்கும் நடத்துனருக்கும்,அந்த பேருந்தை நாள் முழுவதும் அழுத்தி ஓட்டும் ஓட்டுனரும் திண்ணை தூங்கிகளல்ல.அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என கணினி தட்டும் பயில்வான்களின் அளவுகோலால் அளந்து சொல்ல முடியாது.

        • //எப்படி, எத்தனை பேரின் மீது மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டு பரோட்டா உடலுக்கு கெடுதி என்ற முடிவுக்கு வந்தார்கள் போன்ற விவரங்களெல்லாம் இவர்களுக்கு தேவை இல்லை.அதுல படிச்சேன்,இதுல படிச்சேன் அதுனால அது தீங்குதான் என்பார்கள்.தங்களுடைய பொது அறிவை குறைந்த பட்சமாக கூட இந்த ஆய்வுக்கு பொருத்திப்பார்க்க மாட்டார்கள்.ஒரே ஒரு கேள்வி .//

          அதுல படிச்சேன், இதுல படிச்சேன் என்பதெல்லாம் இல்லை. அலோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்ற அனைத்து துறை மருத்துவ வல்லுனர்களின் கூற்று இது. சந்தேகம் இருப்பின் தங்களின் குடும்ப மருத்துவரை அணுகி பரோட்டாவின் தீமைகளை தெரிந்துக் கொள்ளலாம்.(அவர் அறிவுள்ள நேர்மையான மருத்துவராக இருக்கும் பட்சத்தில்).

          பரோட்டா தயாரிக்க பயன்படுத்தும் மைதா மாவை வெண்மையாக உருவாக்க பயன்படுத்தப் படும்,benzoyl peroxide ,Calcium peroxide, Nitrogen dioxide,Chlorine,Chlorine dioxide, Azodicarbonamide போன்ற மோசமான(Bleaching products) வேதி பொருட்களால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், புற்று நோய் வரை பாதிப்பு ஏற்ப்படும் அபாயம் அதிகம்.

          இந்த பரோட்டா உணவை தவிர்க்க மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல பேரணிகள் நாட்டில் நடைபெறுகின்றன. அதில் ஒன்று கீழே தருகிறேன்.

          https://www.youtube.com/watch?v=BdGXKsvPT8w

          இதைப் போன்ற விழிப்புணர்வு பேரணிகள் சென்னையிலும் பல நடந்துள்ளன. இணையத்தில் பார்க்கவும். பரோட்டா என்பது ஒரு உயிர் கொல்லி உணவே. இதில் சந்தேகமே வேண்டாம்..

          //இன்னொரு கேள்வி.அந்த மைதா மாவில்தான் பிஸ்சா ,நூடுல்ஸ்,போன்ற உணவுப்பண்டங்களையும் செய்கிறார்கள்.அவற்றை நஞ்சு என சாடுவார்களா.பரோட்டாவின் மீது மட்டும் ஏன் இவ்வளவு காண்டு.ஏழைகள் உண்ணும் உணவு என்பதாலா.பணக்காரனின் உணவின் மீது பரிவும் ஏழைகளின் உணவின் மீது இளக்காரமும் கொள்வது சரியா.//

          மிகவும் தவறான அவதானிப்பு. பரோட்டா ஏழைகளின் உணவெல்லாம் கிடையாது. சகோதரர் திப்பு, சரவண பவனுக்கும், வசந்த பவன் மற்றும் புகாரி அஞ்சப்பர் போன்ற அசைவ உணவகங்களுக்கும் செல்ல விலை போலும். சரவண பவனில் 1 Plate பரோட்டா 80 முதல் 90 ரூபாய். மலேசியன் பரோட்டா என்று நகரில் உருவாகி இருக்கும் புது கலாசாரதிர்க்கும் இன்னும் போகவில்லையோ என்னவோ. அங்கே சென்றால் தெரியும் பரோட்டா யாருக்கான உணவு என்பது. விஷயம் இது தான் பரோட்டாவை எங்கு சாபிட்டாலும் சரி,பாய் கடையோ அல்லது உயர் தர பவன்களிலோ விளைவு ஒன்று தான்.

          மேலும் பிசா, பாஸ்டா, கேக், நூடல்ஸ் போன்ற உணவுகளை தரமானவை என்று யார் சொன்னது? நீங்கள் பத்திரிக்கைகள் படிப்பதில்லை போல்!!!! இவை போன்ற உணவுகளுக்கு எதிராக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எவ்வளவோ எழுதியும் கூறியும் விட்டார்கள். யார் கேட்க்கிறார்கள்?

          மக்கள் ஒரு விதமான “உணவு போதைக்கு” அடிமையாகி இருக்கிறார்கள். அதனால் தான் இதுப் போன்ற உணவுகளை ஆபத்து என்று தெரிந்தும் அதை சாப்பிடுகிறார்கள். KFC போன்ற உணவகங்களில் சென்று கோழி இறைச்சி சாப்பிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணரமால் ஒன்றுமில்லை. குடிகாரனுக்கு தெரியும் தான் அருந்தும் மது அவன் உயிரை கொஞ்ச கொஞ்சமாக குடிக்கிறது என்று இருந்தும் நாட்டில் குடிக்காமலா இருக்கிறார்கள். அதே போன்று தான். இப்போதிருக்கும் சமுகம் கொடுக்கும் நெருக்கடி ஒருப் பக்கம் என்றால்,போதா குறைக்கு மக்களை மொன்னைகளாக்கும் நுகர்வு கலாசாரம் வேறு.

          //ஆனால் இதனால் உழைப்பாளி மக்களுக்கு எந்த கெடுதலும் இல்லை.உடல் உழைப்புக்கு தேவையான ஆற்றலை வழங்குவதே குருதியில் உள்ள சர்க்கரைதான்.அதனால் உழைக்கும் மக்களுக்கு மாவுச்சத்து அதிகமாக இருப்பது பிரச்னையில்லை.அதிக உழைப்புக்கு அதிக ஆற்றல் தேவை என்பதால் செரிமானமும் அவர்களுக்கு பிரச்னை இல்லை//

          மிகவும் தவறான வாதம். பரோட்டா நிச்சயம் உழைக்கும் மக்களுக்கு கெடுதல் ஏற்ப்படுத்தக் கூடிய ஒன்று தான். பேச வேண்டுமே என்பதற்காக பேச கூடாது. உழைக்கும் மக்களுக்கு தேவையான க்ளுகோஸ் எனப்படும் சர்க்கரை ஆற்றல் அரிசி சோற்றிலும், கேழ்வரகிலும் தான் அதிகம் இருக்கிறது. புரோட்டா என்பது இன்றைக்கு 30 ஆண்டுகளாக தான் இந்த மண்ணுக்கு பரிச்சயம். அதற்க்கு முன்பு வரை அரிசியும் கேழ்வரகும் கம்பும் தொட்டுக் கொள்ள கருவாடும் தான் உழைக்கும் மக்களின் ஜீவாதாரமான உணவு. இதற்க்கு மேல் நீங்கள் கூறுவதைப் போன்று மாட்டிறைச்சி மிக நல்ல உணவே. கண்டிப்பாக அனைவரும் எடுத்துக் கொள்ளவேண்டி உணவு.

    • திப்புநானாவுக்கு என்மீது தனியானதொரு அன்பு, என்னை இழுக்காது விட்டால் அவருக்குப் பொழுது போகாது. என்ன செய்வது, நான் விட்டாலும் அவர் விடுவதாக இல்லை.

      ரவிக்கை போடாமல் தமிழ்ப்பெண்கள் திரிந்த காலத்தில் இரவீந்திரநாத்தாகூரின் மனைவி வங்காளத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழ்ப்பெண்களுக்கெல்லாம் ரவிக்கை போடக் கற்றுக் கொடுத்தததாக திப்புகாக்கா விட்ட கதை எல்லாம் ‘இந்து’ சகோதரிகளின் ஆடைபழக்க வழக்கங்களை பற்றி எழுதுவது என்ற விடயத்துக்குள் வராதோ?

      ‘தமிழர்களின் தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழர்களை, தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து செல்லுமாறு தமிழராகிய ஒரு நீதிபதி கூறுவதை தமிழர்கள் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை’ – அதன் கருத்து என்னவென்றால் ஒரு தமிழ் நீதிபதிக்கு தன்னுடைய மாநிலத்தில் தனது முன்னோர்களின் கோயில்களில் தனதின மக்களைப் பாரம்பரிய ஆடைகளை அணியுமாறு கூறும் போது வேறேதும் உள்நோக்கம் இருக்க முடியாது. இதுவே வேற்றின நீதிபதியாக இருக்கும் போது, அவரது உள்நோக்கங்களை சந்தேகிக்க வாய்ப்பு உண்டு.

      தமிழ்நாட்டில் வேட்டி காணாமல் போவதும் கவலைக்குரியது தான். குறைந்த பட்சம் அதை இன்றும் சிலர் தமிழ்நாட்டுக் கோயில்களில் அணிவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால் 99.5% ஈழத்தமிழர்கள் வேட்டியணிந்து மேற் சட்டையைக் கழற்றி விட்டுத் தான் கோயிலுக்குச் செல்வோம். ஈழத்துக் கோயில்களில் சின்னஞ் சிறுவர்கள் கூட வேட்டி அணிந்திருப்பதைக் காணலாம். எனக்கு வேட்டி கட்டத் தெரியாத போதிலும் பெல்ட்டால் வரிந்து கட்டிக் கொண்டாவது, தமிழ்நாட்டிலுள்ள போது கோயிலுக்கு (மட்டும்) போவது என்னுடைய வழக்கம். குளித்து விட்டு, வேட்டி கட்டாமல் கோயிலுக்குப் போனால், ஏதோ தவறு செய்வதாக அல்லது விதியை மீறுவது போன்ற குற்ற உணர்வு தான் எனக்கு ஏற்படுகிறது.

      //திண்ணை வேதாந்திகள் தொப்பையை நிரப்ப இட்லியும் பிட்டும் போதுமானதாக இருக்கலாம்.///

      முகலாய உணவுகளுக்கு மட்டும் பழக்கப்பட்ட திப்பு காக்கா தமிழர்களின் பிட்டு சாப்பிட்டதில்லைப் போல் தெரிகிறது. பிட்டைப் போல் தொப்பையை நிரப்புவது மட்டுமன்றி ஊட்டச்சத்தும் நிறைந்த உணவு கிடையாது என்ற உண்மை அவருக்கு தெரியவில்லை. ரெபெக்கா மேரி கூறியது போல் புரோட்டாவின் மைதா மாவு உடலுக்கு ஏற்றதல்ல. அதை விட ஆடு, மாடு கோழியின் தோல், எலும்பு மற்றும் கழிவுகளைப் போட்டு ஹோட்டல்களில் செய்யும் ‘சால்னா’ புரோட்டாவை விட பயங்கரமானது. சால்னாவோ என்ன சவமோ தமிழ்நாட்டில் அதை நான் தொட்டது கூட இல்லை. சைவவிடுதிகளில் சாப்பிடாது விட்டால் புரோட்டாவும் சால்னாவும் மட்டும் தான் தமிழ்நாட்டில் உள்ளது போல் கதை விடுகிறார் திப்பு. புரோட்டா கடைகளில் கூட்டம் நிறைந்திருப்பதை பரமக்குடி, சாயல் குடி, இராமநாதபுரத்தில் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் இலங்கைத் தமிழர் யாரும் பிட்டும் மீன்குழம்புக் கடையும் வைக்கவில்லை அதனால் தான் உங்களின் புரோட்டாவுக்குக் கூட்டம் வழிகிறது. 🙂

      • \\திப்புகாக்கா விட்ட கதை எல்லாம் ‘இந்து’ சகோதரிகளின் ஆடைபழக்க வழக்கங்களை பற்றி எழுதுவது என்ற விடயத்துக்குள் வராதோ?//

        உண்மையிலேயே வியாசனுக்கு அறளை பேந்து போச்சுன்னு தெரியுது.நான் என்ன எழுதியிருக்கிறேன்.அவர் என்ன சொல்றாரு.”இந்து சகோதரிகளின் ஆடை பழக்க வழக்கங்களை குறை கூறி ஒரு வரி கூட எழுதியதில்லை.”என்று சொல்லியிருக்கிறேன்.அவரோ ”எழுதுவது”பற்றி மட்டும் பேசுகிறார்.இந்துக்கள் குறித்த சாதாரணமான தகவல்களை எடுத்தாள்வதும்,அவர்களை வன்மத்துடன் குறை கூறி எழுதுவதும் ஒன்றா. இந்த தீர்ப்புக்கும் முசுலிம்களுக்கும் என்ன தொடர்பு இருக்கு.அவர்களை விவாதத்துக்குள் இழுப்பது என்ன வகை நாகரீகம்.இந்த கேள்வி மட்டும் அறளை பெயர்ந்த மூளைக்கு உரைக்கவே மாட்டேங்குதே.

        \\தனதின மக்களைப் பாரம்பரிய ஆடைகளை அணியுமாறு கூறும் போது வேறேதும் உள்நோக்கம் இருக்க முடியாது.//

        .காற்சட்டையும்,சுடிதாரும் எப்படி பாரம்பரிய ஆடை ஆச்சு.

        • தமிழ்ப்பெண்களின் ஆடையணிகளைப் பற்றி அதாவது “தமிழக இந்து தாய்மார்கள் சட்டை அணியும் வழக்கம் இருக்கவில்லை” என்று நீங்கள் எழுதியதற்கும், குறை கூறி எழுதுவதிற்குமிடையே பெரிய வேறுபாடு கிடையாது. “தமிழக இந்து தாய்மார்கள் சட்டை அணியும் வழக்கம் இருக்கவில்லை” என்று நீங்கள் எழுதிய போது அதில் ஏதோ நிறைவு இருப்பதாக எண்ணி நீங்கள் எழுதியதாக யாரும் நினைக்கவும் மாட்டார்கள்.

          \\தனதின மக்களைப் பாரம்பரிய ஆடைகளை அணியுமாறு கூறும் போது வேறேதும் உள்நோக்கம் இருக்க முடியாது.//

          வேட்டி, சேலை, பாவாடை, தாவணி என்ற வரிசையில் கடைசியில் தான் அவர் காற்சட்டை, சுடிதாரையும் (குறைந்த பட்சம் அவற்றையாவது அணியுமாறு) குறிப்பிட்டிருக்கிறார் என நம்புகிறேன்.

          • \\தமிழ்ப்பெண்களின் ஆடையணிகளைப் பற்றி அதாவது “தமிழக இந்து தாய்மார்கள் சட்டை அணியும் வழக்கம் இருக்கவில்லை” என்று நீங்கள் எழுதியதற்கும், குறை கூறி எழுதுவதிற்குமிடையே பெரிய வேறுபாடு கிடையாது.//

            வரலாற்று தகவல் ஒன்றை அப்படியே சொல்லி இருக்கிறேன்.அது பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை.ஆனாலும் அதுவும் குறை கூறுவதில் சேரும் என்கிறார்.என்னே ஒரு தமிழறிவு.

            \\குறைந்த பட்சம் அவற்றையாவது அணியுமாறு//

            அது எப்படி பாரம்பரிய ஆடையாகும் என்று கேட்கிறேன்.அது பாரம்பரிய ஆடை இல்லை என்று ஒப்புக்கொள்ள என்ன தயக்கம்.ஒப்புக்கொண்டு விட்டால் அடுத்து என்ன கேள்வி வரும் என்று தெரிவதால் தப்பிக்க பாக்குறாரு.

  13. //ஆன்ட்ராய்டு காலத்தில் அரை டிராயரை தடை செய்தால் பழனி ஆண்டவனே குற்றவாளியல்லவா?//
    பழனி ஆண்டவர் கோவனத்துடன் காட்சி தருவதால் நாங்களும் கோவந்த்துடன் கோவிலுக்கு போக அனுமதி கேக்குறீகளா அண்ணாச்சி என்னய்யா எரிச்சல் தரும் உங்கள் கம்மூனிஸ் சிந்தனை நீங்க முதல்ல கோவனத்தோட வீட்ட விட்டு வெளிளயாவது வரீகளா பாருங்க ,அடுத்த முறை உங்கள் பெண்கள் மற்றும் ஆண்களை அரை ட்ராயருடன் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் அரசுக்கு எதிராக …

  14. நீதிமன்றம் என்றால் அந்த இடத்திற்குரிய நடத்தை விதிகள் இருக்கும். வழக்கு நடக்கும் போது ஒரு பார்வையாளர் அலைபேசியில் பேசினால் அது அந்த இடத்தின் “ஆம்பியன்ஸை” பாதிக்கும். வழக்காடுபவர்களின் கவனத்தை திசை திருப்பும். நீதிபதி அவரை வெளியேற்றத்தான் செய்வார்.

    இந்துக் கோயிலுக்கென்று சில பல நடத்தை விதிகள் இருக்கும். அதை மதித்து நடக்க சம்மதமில்லை என்றால் எதற்கு அந்தக் கோவிலுக்கு வர வேண்டும் – ஏதாவது பாருக்குப் போகவேண்டியதுதானே ? ஏற்கனவே இருந்த நடைமுறைதானே அமல்படுத்தப்படுகிறது ?

    இது குறித்து நீதிபதியாகப் பணி புரியும் பாதிக்கப்பட்ட தனி மனிதர் ஒருவர் தொடுத்த வழக்கின் கூறுகளை ஆராயாமல் அவரது ஜாதியைக் குறிப்பிட்டு எழுதுவது என்ன விதத்தில் சரியாகும் ?

    மேலும் அந்த வழக்கு, கோயிலுக்குக் கடவுளை வணங்க வரும் பக்தர்களைப் பற்றியது. இந்துக்களின் பாரம்பரியங்கள்/கடவுள்களை மட்டும் வாடிக்கையாக மறுக்கும் வினவு எழுத்தாளர்களுக்கு இதில் என்ன வேலை ?

    மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விவாதங்களில் வினவின் இரட்டை வேடத்தை ஒப்பிட்டுக் காட்ட இஸ்லாத்தை இழுக்க வேண்டாம் என்று கோருபவர்கள் இதை சிந்தித்து பின்னூட்டம் இட வேண்டும்.

  15. நேற்று சென்னை முழுக்க எல்லா கோழிக்கறி, ஆட்டுக்கறி கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டுள்ளன. என்ன காரணம் என்று தெரியவில்லை.

    தை பூசம் தான் காரணம் என்றால் நாட்டில் கிருத்துவர்களும், இசுலாமியர்களும் ஏன் மாமிசம் வாங்க தடை விதிக்க வேண்டும்?

    அவரவர் விருப்பப்படி என்ன உண்கிறார்களோ, உண்னட்டுமே?

  16. அதற்க்கு தை பூசம் காரணமல்ல …… எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்றும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய ஜீவகாருண்ய வள்ளல் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் நேற்று. அதற்க்கு மதிப்பளித்து நேற்று இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இறைச்சி கடைகள் மட்டுமல்ல, டாஸ்மாக் சாராய கடைகளும் சேர்த்தே மூடப்பட்டன. இதில் தவறொன்றும் இல்லையே

  17. /தை பூசம் தான் காரணம் என்றால் நாட்டில் கிருத்துவர்களும், இசுலாமியர்களும் ஏன் மாமிசம் வாங்க தடை விதிக்க வேண்டும்?/தைப்பூசம் இல்லை காகை அண்ணன் அன்னிக்கு வள்ளளார் பிறந்த தினம் ஜீவகாருன்யத்தை போதித்த ஒரு மகானுக்காக கிறிஸ்துவர்கள் ஒரு நாள் கறி துன்னாமல் இருந்தால் மெலிந்து விட மாட்டார்கள்

    • வள்ளலார் பிறந்தநாள் அக்டோபர் 5, 1823, அவர் மாயமாக மறைந்த நாள் 3௦ ஜனவரி, 1874 என்று விக்கிபீடியா சொல்கிறதே? வள்ளலார் பிறந்த தினம் ஜனவரி 24 என்று நான் தேடியவரை எங்கும் பதியப்படவில்லை.

      ஜீவகாருண்யத்தை போற்றுவதேன்றால் அந்த நாளில் மீனும் இராவும் விற்கப்பட்டதே? அவையும் ஜீவராசிகள் தானே?

  18. அசைவம் சாப்பிடுவது தவறென்றால் அதனை எந்நாளும் சாப்பிடாமல் இருக்கலாமே. சில “நல்ல நாட்களில்” அசைவம் உண்ணக் கூடாது என்றிருப்பதால் “தழை மேய்பவர்களுக்கு” இந்த “மாமிச பட்சணிகள்” என்றால் இளக்காரம்.

Leave a Reply to Rebecca Mary பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க