privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்தலசீமியா நோயை ஒழிப்பது எப்படி ?

தலசீமியா நோயை ஒழிப்பது எப்படி ?

-

மே எட்டாம் தேதி உலக ‘தலசீமியா’ தினமாக அனுசரிக்கப்படுகிறது என்று நாளிதழ்கள், விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டியிருக்கின்றன. தலசீமியா என்பது கொடிய மரபணுநோய் ஆகும். ஹிமோகுளோபின் புரதக் கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகள் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை அழிக்கின்றன. இதனால் இந்நோய் கண்ட குழந்தைகள் 2 வயதிலேயே இரத்த சோகையால் மரணமடைகின்றன. முதல் தலைமுறையில் ஒரு குழந்தை தன் பெற்றோரிடமிருந்து குறைபாடுடைய ஹிமோகுளோபின் மரபணுவை பெறுவதால் ஏற்படும் பாதிப்பை விட அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதாவது அக்குழந்தையின் பரம்பரை சந்ததிகளுக்கு இந்நோயின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மரபணு முறையில் இந்நோய் பரவும் முறை
மரபணு முறையில் இந்நோய் பரவும் முறை

இதுவரை தலசீமியா நோய்க்கு இரண்டுவிதமான சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்களாம். முதல் வகையில் இரத்த சிவப்பணுக்கள் உருவாகும் எலும்பு மஜ்ஜையை மாற்றம் செய்வது. இந்தமுறை அனைவருக்கும் பொருத்தமானதல்ல என்பது ஒருபுறமிருக்க இம்முறைக்கு அரசு மருத்துவமனையிலேயே பத்து இலட்சம் ரூபாய் செலவு ஆகிறதாம். இதுவே அப்போல்லோவாக இருந்தால் எவ்வளவாகும் என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்று.

இரண்டாவது சிகிச்சை முறையில் தலசீமியா நோய் கொண்ட குழந்தைகளுக்கு மாதம் தோறும் புது இரத்தம் ஏற்றுவதுடன் அதிகப்படியான இரும்புச் சத்தை உடலில் இருந்து வெளியேற்ற ஆயுள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டுமாம். இத்தகைய கொடிய நோய்க்கு சிகிச்சை என்பதை விட வருமுன் காப்பது என்றவிதத்தில் இரண்டு முறைகளை பரிந்துரைக்கிறார்கள். முதல் முறையில் கருவிலேயே தலசீமியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கருவை அழிக்க வேண்டும்; இரண்டாவது முறையில் அகமண உறவு முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அகமண உறவுமுறையை அதாவது சாதிக்குள்ளே திருமணத்தை தவிருங்கள் என்று மருத்துவம் பார்ப்பனிய இந்துமத புனிதத்தை ரத்து செய்கிறது. இதன்படி ஸ்டெம் செல்லுக்கு மகாபாரதத்தில் குந்தியின் கருப்பிண்டத்தை சைட் செய்யும் ஸ்மிருதி இரானி, மோடி, ஆர்.எஸ்.எஸ் போன்றவர்கள் குற்றவாளிகளாகிறார்கள்.

அம்பேத்கர் சாதியை ஒழிப்பது எப்படி எனும் நூலில் இந்தியாவில் நூற்றுக்கு 90 பேர் இராணுவத்திற்கு இலாயக்கற்றவர்கள் என்று மதிப்பிடுவார். பல்லாயிரக்கணக்கான சாதிகளுக்குள்ளான அகமண உறவு, சோடையான எதற்கும் லாயக்கற்ற சமூகத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது. 70 தலைமுறைகளுக்கும் மேலாக அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்து தர்ம சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிற மனுஸ்மிருதி அகமண உறவுமுறையை சமூகத்தில் நிலைநாட்டியிருப்பதை அறிவியல் மிகச்சமீபத்தில் ஐயந்திரிபற நிரூபித்துக்காட்டியது. அன்று தொடங்கிய சாபக்கேடு 2016 வரை நீடித்திருப்பது இந்த சமூகத்தின் அவமானமின்றி வேறல்ல.

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - நன்றி தி இந்து
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் – நன்றி தி இந்து

மருத்துவர்கள் கூறுவதுபடியே ஒப்பீட்டளவில் தென்மாநிலங்களைவிட வடமாநிலங்களில் தலசீமியா மரபணு நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதை ஒப்பு நோக்கினால் பார்ப்பன பாசிசத்தின் வீரியம் வடக்கில் எந்தளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பது தெரியவரும். மாறாக பார்ப்பனியத்திற்கு மரண அடி கொடுத்த சாருவாகர்கள், சித்தர்கள், திராவிடர்களின் மரபுதான் ஓரளவிற்கு தலசீமியா மட்டுமல்ல பார்ப்பன உயர்சாதிகளிடையே ஒவ்வொரு வீட்டிலும் தலைக்கு ஒன்று என பரவலாயிருக்கிற பல்வேறு மரபணு நோய்கள், மூட்டுவாதம், முடக்குவாதம் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பல நோய்கள் உழைக்கும் மக்களை அண்டவிடாமல் காத்திருக்கிறது.

யாதூம் ஊரே யாவரும் கேளிர் என்றிருந்த தமிழ் பண்பாட்டில் பார்ப்பனிய விசச் செடி உள்நுழைந்த பொழுது காந்தர்வ மணத்தை இழிவென்று கருதி வள்ளியை வேசியாக்கி முருகனை சுப்ரமணிய ஐயராக்கி அரக்க தொல்குடிகளை சூரசம்ஹாரம் செய்து, அதற்கு பரிசாக பார்ப்பான் முன்னிலையில் வேதம் முழங்க இந்திரனின் மகள் தேவசேனையை தாரைவார்த்துக்கொடுத்து ஏகபத்தினியாக்கியதை பரிபாடல் பேசுகிறது. ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரியை விரட்டிய கதையாக பார்ப்பனியம் பண்பாட்டில், கலாச்சாரத்தில் இப்படித்தான் கெட்டிப்பட்டது.

விளைவு! சாதியத்தின் பிடி இறுகினால் சமூகமே இரத்த சோகையாக நிற்கும் என்பதற்கு தலசீமியா ஒரு தேர்ந்த உதாரணமாகும். இந்தவகையில் பார்ப்பனியம் மக்கள் மீது ஏவியிருக்கும் கொடூர சுரண்டல் வடிவம் தான் தலசீமியா எனும் மரபணு நோயாகும். குழந்தையின் இரத்தத்தையே குடிக்கும் கொடிய தேவராக பார்ப்பனிய இந்துமதம் மக்கள் மீது உயிரியல் போரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் பொழுது  கவுண்டச்சியின் கருவில் சக்கிலியின் விந்துவா என்று கேட்கும் சாதிப்புனிதம் எப்படி தலசீமியாவை ஒழிக்கும் என்பதற்கு எவர் ஒருவரும் பதில் சொல்லியாக வேண்டும்.

இன்றைக்கு திவ்யா-இளவரசன், கெளசல்யா-சங்கர், வனிதா-முருகேசன் போன்ற தம்பதிகள் வாழ்ந்திருந்தால் இவர்களின் மழலைகளின் கண்கள் பளிங்கு போல் இருப்பதுமட்டுமின்றி தலசீமியா நோயற்ற செல்வங்களாக தவழ்ந்திருக்கும். ஆனால் அதற்கு மக்களின் பண்பாட்டிலிருந்து இந்து பார்ப்பனியத்தை முற்று முழுதாக வெட்டியெறிய வேண்டியிருக்கிறது. இதுதான் தலசீமியா மரபணு நோய்க்கு எதிராக நம்முன் இருக்கும் ஒரே தீர்வு!

– இளங்கோ

  1. மே எட்டாம் தேதி உலக ‘தலசீமியா’ தினமாக அனுசரிக்கப்படுகிறது என்று நாளிதழ்கள், விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டியிருக்கின்றன. இந்த செய்தியை தமிழ் இந்து வெளியிட்டிருந்தது. எப்பொழுதும் பத்திரிக்கை படிப்பதில் அவ்வளவு விருப்பம் காட்டாத நான் அன்று ஏதோ படித்து தொலைத்து விட்டேன்.ஆகவே இந்த கட்டுரை தொடர்பாக இதுதொடர்பாக என்னுடைய கருத்தினை அவை முன் கூற விரும்புகிறேன்.

    முதலில், கட்டுரையில் கூறப்படுவதைப் போன்று தலசீமியா என்னும் மரபணு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அகமண முறை திருமணத்தினால் அல்லவே அல்ல. சம்மந்த பட்ட மருத்துவ குழுவும் அவ்வாறு கூறவுமில்லை. சொந்த சாதியில் மணம் முடிப்பதனால் இந்நோய் ஏற்படுகிறது என்பது உண்மையானால், இந்நேரம் இந்தியாவில் 90 %அனைவரும் மனநிலை பிறழ்ந்தவராக அல்லது இந்நோய் தாக்கப்பட்டவ்ராகத் தான் இருக்க வேண்டும். ஆக, இந்நோய் ஏற்படுவதற்கு தலையாய காரணம் மருத்துவ குழு கூறுவதைப் போன்று உறவு முறைகளுக்குள் திருமணம் செய்வதே ஆகும்.

    அகமண முறை, உறவு முறை திருமணம் இரண்டிற்கும் பாரிய வேறுப்பாடுகள் இருக்கின்றது. அகமணம் என்பது தனது சொந்த சாதியில் உலகின் எந்த மூலையிலும் பெண்/பிள்ளை தேடி பேசி முடிப்பது, புரியும் படி கூற வேண்டுமானால் அசலில் திருமணம் செய்வது.இவ்வகை திருமணத்தால் மரபணு ரீதியாக எந்த சிக்கலும் கிடையாது. உறவு முறை என்பது அப்படி கிடையாது, அக்கா மாமா என்று ரத்த சம்மந்த குடும்ப உறவுகளின் வாரிசுகளுக்குள் திருமணம் செய்துக் கொள்ளவது. பிரச்சனையே இதில் தான் இருக்கிறது. தலசீமியா மட்டுமல்ல மாலைக் கண், மனச்சிதைவு, புற்று நோய் போன்ற பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் இதில் அதிகம்.

    இந்த உறவுமுறை திருமணம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், சாதி என்பதல்ல. சாதிக்கும் ஒரு முக்கிய பங்குண்டு, ஆனால் பிரதான காரணம் சொத்துடமை தான். சொத்து கைவிட்டு போய்விடக் கூடாது என்பதற்காக தான், சொந்தத்திற்குள் திருமணம் செய்துக் கொள்கின்றனர். ஏக்கர் கணக்கில் நிலம், சவரன் கணக்கான தங்கம். தோப்பு தொறவு என்று எதுவும் முன்பின் தெரியாத ஒருவனின் கைக்கு போய்விடக் கூடாது என்பதற்காக இந்த வழக்கம் ஏற்பட்டது. இது ஏதோ கிராமப்புற நிலவுடமை சமுகத்தில் மட்டுமல்ல, நகரத்து முதலாளித்துவ சமூகத்திலும் இந்த வழக்கம் ஓரளவிற்கு இருக்கிறது. சொந்தத்தில் திருமணம் செய்யும் வழக்கம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

    கலப்பு திருமணம் செய்துக் கொண்டாலும், நாளடைவில் அவர்களும் சொந்தத்தில் திருமணம் செய்தாலும் இந்த பிரச்சனை மீண்டும் தலை தூக்கும். ஒரு தலித் சமுகத்தை சேர்ந்தவரை ஒரு ஆதிக்க சாதி பெண்ணை மணம் முடிக்கிறார் . அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் எதிர்காலத்தில் அந்த தலித் சமுகத்தை சேர்ந்தவரின் உடன் பிறந்தவர்களின்(அக்கா, தங்கை) சொந்தத்தில் மணம் முடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுதும் ஏதோ ஒரு வகையில் மரபணு குறைப்பாடு என்கிற பிரச்சனை காலபோக்கில் எழுந்தே தீரும்.

    அதே நேரத்தில், திருநெல்வேலியை சேர்ந்த சைவ பிள்ளைமார், தன் ரத்த சொந்தங்களை தவிர்த்து யாழ்ப்பணத்தில் இருக்கும் பாரம்பரியமிக்க சைவ வேளாளர் வீட்டில் தன் மகனுக்கோ,மகளுக்கோ திருமண சம்மந்தம் வைப்பதாலோ, அல்லது காரைக்குடி நாட்டுகோட்டை செட்டி சிங்கப்பூரில் இருக்கும் தன் சொந்த இனத்தில்(அசலில்) திருமணம் செய்வதாலோ இதுப் போன்ற மரபணு ரீதியான பிரச்சனைகள் வருவது சொற்பமே.

    என் அனுபவத்தில், சொந்த சாதியில் ஆனால் ரத்த உறவுகள் கடந்து திருமணம் செய்துக் கொண்டவர்களின் பிள்ளைகள் அனைவரும் பெரும்பாலும் நன்றாகவே இருக்கிறார்கள். அதே நேரத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களில் மரபணு குறைப்பாடு கொண்ட பிள்ளைகளும் இருக்கவே செய்கிறார்கள். அதற்க்கு சிறந்த உதாரணம் என் ஒன்று விட்ட அக்காவின் பிள்ளை ( பெரியப்பாவின் மகள்). என் கருத்திற்கு வலு சேர்க்க அதை பற்றி விரிவாக பேச விரும்பவில்லை.

    என் கருத்தை சாதிக்கு ஆதரவாக பேசுவதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என் அனுபவத்தில் கண்டு கேட்டவற்றை, என் வாழ்வில் எனக்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன் அவ்வளவே. என் கருத்தை ஏற்ப்பதும், ஏற்காமல் என்னை கரித்து கொட்டிவிட்டு போவதும் அவரவரின் விருப்பம். நன்றி

    • என்னக்கோவ்.. ரொம்ப நொந்து போய் கமாண்டு போடுறீங்க.. எனக்கு ஒரு டவுட்டு.. சின்ன சாதியா இருந்தா (யாரும் தப்பா எடுத்துக்காதீங்க.. எண்ணிக்கை அளவுல சொன்னேன்) இந்த அகமண முறை எப்படி இருக்கும்?

    • ஒரே ஜாதியாக இருந்தாலும் , ஒரே குலம் கோத்திரமாக இருந்தால் திருமணம் செய்து கொள்ள முடியாது .

    • ரெபெக்கா மேரி, மிகவும் மெனக்கிட்டு சாதிக்கு முட்டு கொடுத்து வாதாடி உள்ளீர்கள். இதில் என் சொந்த அனுபவம் என்று பேத்தல் வேறு. இந்தநாட்டு கலச்சார வெங்காயங்கள் அனைத்தும் சாதி என்னும் ஒற்றைச்சொல்லின் மீதே கட்டப்பட்டவை என்பது எல்லாருக்கும் தெரியும். சாதீயம் உயிர்வாழுவது இந்த கேடுகெட்ட அகமுறை மண அமைப்பினாலேயே.

      மண்டை மட்டுமல்லாது உடல் முழுவதும் மூளையாக அதிசயப்பிறவியாக படைக்கப்பட்ட ரெபெக்கா இந்த கேள்விக்கு பதிலளிக்கவும். இப்பொழுது ஒரு ஆளை எடுத்துக்கொள்வோம். அவர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கட்டும். அவருக்கு ஒரு தாயும் தகப்பனும் ஆகிய இருவர் கட்டாயம் இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கும் தாய் தந்தையர்கள் இருக்க வேண்டும், இவ்வாறாக ஒரு 30 தலைமுறை முன்னோக்கிப்பார்த்தால் 2ன் மேல் 30 மடங்கு ஆட்கள் இருந்திருக்க வேண்டுமா. அதாவது 1000 ஆண்டுகளுக்கு முன்னர் 1 பில்லியன் மனிதர்கள் இருந்தனரா.

      இந்த கேள்விக்கு பதில் தேடுங்கள், உங்கள் கட்டுக்கதையின் பொய் உங்களுக்கு புலப்பட்டுப் போகும்.

      (இந்த புளுகுணித்தனத்துக்கு இவர் கருத்தை எல்லாரும் ஏற்றுக்கொண்டு போற்றிப்புகழ்ந்தேதான் ஆக வேண்டுமாம். அக்கா, உங்கள் அருகாமை கோவிலில் இந்த பெரும் கண்டுபிடிப்பை பொறித்து வைத்து பக்கத்திலேயே அமர்ந்து கொள்ளுங்கள், பின்வரும் சாதி தலைமுறைகள் பார்த்து படித்து பயன் பெறுவராக)

      • அட வெலக்கென்ன குப்பரே!

        தாங்கள் ஏன் தங்களையே அந்த ஒரு “ஆளாக” கருதிக்கொண்டு (என்னால் முடியாது போனாலும்), உங்கள் முப்பது முப்பாட்டனார் கூட மர பெஞ்சில் வரிசையாக உக்கார்ந்து கைகளை (தத்தம்) தொடைமீது வைத்து போட்டோ எடுத்து போடக்கூடாது……….உங்களின் 2 டு தி பவர்ந் கண்டுபிடிப்பின் மூலமாக ஒரு 200 பாட்டார்கள் தேறமாட்டார்கள்?

    • ரெபெக்கா மேரி என்ற பார்ப்பனீய விசத்துக்கு,

      ஏற்கனவே கோகுல்ராஜ் கட்டுரையில், குடும்பப் பாசம் என்ற பெயரில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை சாதி் வெறியர்கள் கொன்றாலும் அது சாதி வெறியினால் அல்ல என்று விக்கிரமன் பட செண்டிமெண்டை உதிர்த்து சாதியத்துக்கு சாமரம் வீசினீர்கள்.

      இப்போது, சொந்த அனுபவம் எனும் பெயரில் சாதியத்துக்கு முட்டுக் கொடுக்கிறீர்கள்.

      இதுக்கு சொம்படிக்க நாலு அல்லக்கைகள் வேறு.

      சாதி தேவை என்று பேசுவதற்கு கூச்சமாக இல்லையா ?. சாதி தவிர்க்கமுடியாதது எனப் பேசுவதற்கு வெக்கமாக இல்லையா ?.

      இதில் குடுமியை மறைக்க கிறுஸ்தவப் பெயர் வேறு .. தூ..

      மனிதனை மனிதன் இழிவாக நடத்தும் சாதிய வேற்றுமையை அடியோடு களைந்தெறிய ரெபெக்கா போன்ற பார்ப்பனீயப் பதர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது அவசியம்.

      • சிறிய திருத்தம்..
        கோகுல்ராஜ் அல்ல .. உடுமலை சங்கர் கட்டுரை.

      • ரெபெக்கா மேரி சாதி முறையை ஆதரித்து எழுதவில்லை .
        சாதிக்குள் மணந்தால் தலசீமியா வரும் எனபது தவறு ரத்த உறவுகளுக்குள் மணந்தால் மட்டும் வரும் என்று தான் கூறுகிறார் .
        அறிவியல் அடிப்படையில் கூறுகிறார் .

        காண்டக்ஸ்ட் என்பதை புரிந்து கொள்ளும் திறன் மிகவும் குறைந்து வருகிறது

        //ஏற்கனவே கோகுல்ராஜ் கட்டுரையில், குடும்பப் பாசம் என்ற பெயரில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை சாதி் வெறியர்கள் கொன்றாலும் அது சாதி வெறியினால் அல்ல என்று விக்கிரமன் பட செண்டிமெண்டை உதிர்த்து சாதியத்துக்கு சாமரம் வீசினீர்கள்.
        //

        அது அவர் சாதி வெறியர்களின் நல்லவர்கள் போல உனக்கு நல்லது சொல்றேன் என்று கூறுவதை விட்டில் பூச்சியாய் நம்பி விட்டார் . அதிலும் அவர் குறைந்த வயதில் திருமணம் வேண்டாம் படிக்க வேண்டும் என்பதை தான் , ( அப்படிதான் எல்லாரும் வளர்க்கப்பட்டு உள்ளோம் ) நமக்கு நல்லது சொல்றாங்க அடிப்படையில் அவரும் நம்பி நமக்கும் எடுத்துரைத்தார் .

        அவர் சாதி மத வெறியர் அல்ல மொழி வெறியர் மட்டுமே 🙂

    • ரெபெக்க மேரி என்பவர் அளித்த மறுமொழி வினவின் திரித்தல் கார்யத்தை அம்பல படுத்துகிறது.

      செய்திகளை தன் வசதிக்கு ஏற்றப்படி எப்படி எல்லாம் திரித்து எழுதலாம் என்பதற்கு வினவின் தரம் ஒரு உதாரணம். மேற்கண்ட செய்தியில் மருத்துவர்கள் எங்கும் அகமண முறையை பற்றி பேசாத பொழுது கட்டுரையாளர் இவ்வாறு திரித்து எழுதி இருப்பது கண்டனதிற்க்குரியது. பாரம்பர்ய வ்யாதிக்கும் அகமண முறைக்கும் எந்த சம்ம்பந்தமும் கிடையாது. கட்டுரையாளர் குறிப்பிடும் சார்வாகர் எனப்படுவோர் பொருள் முதல் வாதத்தை அடிப்படையாக கொண்ட வட இந்திய பிராமண சமுகத்தை சேர்ந்தவர்களே. சுருங்க வினவின் பாஷையில் கூறவேண்டுமானால் ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் தான்.

      தலித் இனத்தை சேர்ந்தவர்களுக்கு பிராமண மற்றும் இதர ஆதிக்க சாதி பெண்கள் மீது தான் காதல் வருமோ என்னவோ. அவர்களின் சொந்த சாதி பெண்களை மணம் முடிப்பதில் அப்படி என்ன கிலேசமோ.

      • //தலித் இனத்தை சேர்ந்தவர்களுக்கு பிராமண மற்றும் இதர ஆதிக்க சாதி பெண்கள் மீது தான் காதல் வருமோ என்னவோ//

        எல்லாம் ஒரு தலை காதலா ?

  2. பின்னுட்டம் எழுத ராமன், மேரி போன்றவர்கள் ரொம்ப கஷ்டப்படுவது கண்கூடாக தெரிகிறது..! உறவு முறைகளுக்குள் திருமணம் செய்வது என்பது சொந்த சாதியில் திருமணம் செய்வது போன்றது தானே என்ற கேள்வியை மேரிக்கு எழுப்புகிறேன். மேலும் பெரும்பானமையான சாதிக்குள் நடக்கும் திருமணங்கள் எதோ ஒரு வகையில் சொந்தத்துக்குள் நடத்தபடும் திருமணங்கள் தான். (தூரத்து சொந்தங்கள்)

    சாதி கடுமையாக நிறுவனம் ஆக்கப்பட்டு உள்ள ஹிந்து சமுகத்தில் அகமண முறைகூட குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது போன்ற நிலையை பிறக்கும் குசந்தைகளின் ஜீன்களுக்கு(மரபணுக்களுக்கு) ஏற்படுத்தும். ஒருவர் திருநெல்வேலியை சேர்ந்த சைவ பிள்ளையாக இருந்தாலும், மற்றவர் யாழ்ப்பணத்தில் இருக்கும் சைவ வேளாளராக இருதாளும் ,என் அவர் இடம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்தாலும் அவர்கள் திருமணம் செய்யும் போது அதன் விளைவாக பிறக்கும் குழந்தைக்கு ஜீன்களில்(மரபணுக்களில் )வீரியமான கலப்பு ஏற்பட சாத்தியமே இல்லை…

    அடபோங்க சாமி…., தேவர் ஊட்டு பொண்ணு… அந்த பெண்ணை கட்டிகிட்டவன் அமெரிக்காவில் சீரழிவு வாழ்க்கை வாழ்ந்து அந்த பிள்ளையை கொடுமை படுத்தினான்… திருமணம் ரத்து ஆயிற்று…அந்தபெண் பிள்ளை நர்சிங் படிச்சி இருந்தது.. அமெரிக்காவிலேயே வேலை தேடிகிட்டது…. அந்த பெண் வேலை செய்யும் மருத்துவமனையில் வேலை செய்யும் அமெரிக்க நர்ஸ் அவருடையை மகனை இந்த பெண்ணுக்கு மறு திருமணம் செய்து வைத்தாங்க…. குழந்தையுடன் அவிங்க எங்க ஊருக்கு நண்பரின் வீட்டுக்கு வந்தாங்க…. (நண்பரின் மச்சினிச்சி அந்த பொண்ணு) இந்திய- அமெரிக்க கலப்பில் பிறந்த அந்த குழ்ந்தை அறிவாறலும்,அழகும் பெற்று விளங்குகின்றது….

    ஏலே ராமா நீறு அமெரிக்க , ஜெர்மனி என்று முதலாளித்துவ நாகரிக நாடுகளுக்கு சென்றாலும் உமது கொலம் கோத்திரத்தையும் எடுத்துகிட்டு தான் போவிரோ?????திருந்துங்க சாமி…..

  3. பின்னுட்டம் எழுதும் ராமன், மேரி போன்றவர்களின் புரிதலில் சந்தேகம் எழுகிறது…. இந்த கட்டுரை எழுப்பும் உள்ளார்ந்த கேள்வியை, குற்றசாட்டை இவர்கள் புரிந்து கொள்ளாமல் பின்னுட்டம் என்ற பெயரில் சாதி அமைப்புகளுக்கு ஆதரவாக நீட்டி முழங்குகிரார்கள். இந்து மதம் அதிகார பூர்வமாக அங்கிகரிக்கும் நான்கு வர்ண அடிபடையில் தான் உழைப்பு பிரிவினையும், சாதிகளும் உருவாகின என்ற உண்மை இவர்களுக்கு புரியவில்லை? (வில்லையா?) நான்கு வர்ணத்தின் அடிபடையில் கட்டமைக்கப்பட்ட ஹிந்து சமுகம், அக சாதிய திருமண உறவுகள் மூலம் பிறக்கும் குழந்தைகளின் ஜீன்களுக்கு பரமபரை ரீதியான நோய்களை உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வுக்கே சவால்விடுகிறது. பிராமணர்களின் சங்கத்து தலைவர் தன் சொந்த சாதியில் தான் திருமண உறவு கொள்வது நல்லது என்று சாதி பற்றுடன் புலம்பினார்…அதே போன்றவர்கள் தானே இந்த மேரியும், ராமனும்….

    • வந்துட்டாருய்யா .. சொம்பத் தூக்கிட்டு .. நாட்டாம ,,

      சொந்த சாதிக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிட்டு கூமுட்டையா பெத்து ஒழிஞ்சு போங்கடா..

    • வெள்ளாளர் சாதி அமைப்பின் இந்த பாராட்டுகளை ஏற்கின்றிக்லா அல்லது எதிர்கின்றிகளா மேரி?

  4. இதே வர்ணாசிரம அகமணமுறையை பெரியண்ணன் திரு. பி. ஜைனுலாபிதீன் வேறுமாதிரியாக கூறுகிறார். மக்களை இவ்வாறு ஒடுக்குவதில் எந்த மதத்து பூசாரியும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர் என்பதை காட்டிக்கொள்கின்றனர்.

  5. எனக்கு கட்டுரையில் சில ஐயங்கள் உள்ளன.
    1. அகமண முறை தாலசீமியா நோய்க்கு காரணம் என்பதற்கான மருத்துவர்களது கூற்றுகளைத் தாண்டிய காத்திரமான அறிவியல் ஆய்வு தாள்கள் ஏதேனும் உள்ளனவா? அவை கேஸ் ஸ்ட்டியாக இருப்பின் ஏற்பது குறித்து பரிசீலிப்பதுதானே சரியானது?
    2.தென்னிந்தியாவில் வட இந்தியாவை விட இந்நோய் குறைவாக இருப்பதற்கான காரணமாய் பார்ப்பன பாசிசத்தை கட்டுரையாளர் குறிப்பிட்டாலும், ஆய்வு உண்மை என வைத்துக் கொண்டாலும், இங்கு அகமண முறை இடையில் தான் வந்து சேர்ந்த்து என்பதற்கான ஆதாரம் எது? அப்படி வந்தாலும் எத்தனையாவது தலைமுறையில் தாலசீமியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது?
    3.இந்நோயின் வகைகள், இந்நோயின் விளைவாய் உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள், இதற்காக நடைபெற்று வரும் மருந்து கண்டுபிடிப்பு ஆய்வுகள் போன்றன இடம்பெறவில்லை என கருதுகிறென். சேர்க்க அவசியமில்லையா
    4.இரு பெற்றோர்களுக்குமே இந்நோய்க்கான ஜீன்கள் இருக்கும்பட்சத்தில் தான் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ அறிவியல் சொல்கிறது. ஜீன்களின் வடிவமைப்பில் இதுபோன்ற குறைபாடு புறமண உறவிலும் நிகழ்வது சாத்தியம் தானே. அகமண முறையினால் அதிகரிக்கும் என்பதற்கான புள்ளிவிபரம் ஏதுமுளதா
    5.நிகழ்தகவின் விதிமுறைகளை பார்ப்பன பாசிசமோ, அகமணமோ, புறமணமோ தீர்மானிக்கும் என்பது எப்படி சரியானது. கட்டுரை விளைவில் இருந்து அகவயமாய் காரணத்தை நோக்கி நகர்வதால் காந்தர்வ மணம், வள்ளி தெய்வானை பிரச்சினை, சித்தர்கள் என ஒரு டிரிபிள் ஜம்ப அடிப்பதாக படுகிறது. அது சரிதானா?

    • தலசீமியா ஒரு மரபணு நோய்…. மரபணு நோய்க்கு அகமண உறவு முறையை முதன்மையான காரணம் என்பது நிருபிக்கபட அறிவியல் விஷயம் என்ற நிலையில் உங்களின் மொக்கையான ஐந்து கேள்விகளும் தவறானாவை என்று நிருபிக்கப்படுகின்றது அல்லா?

  6. இப்படி ஆழமா சாதியத்துக்கு ஆதரவா அகமண உறவு முறைகளை ஆதரிக்கும் அறிவாளிகள் நாளைக்கு அண்ணன்-தங்கை திருமணத்தை கூட ஆதரிக்கத்தான் செய்வார்கள்! அதுவும் அக மண திருமண முறை என்று வியாக்கியானம்-கோனார் நோட்ஸ் எழுதுவார்கள்…. உறவுக்குள் திருமண முறை ,சாதிக்குள் திருமணம் ஆகிய வழக்கங்கள் நேரடியாகவே ஹிந்து மத வருணாசிர அமைப்பை சார்த்து இருக்கிறது என்ற உண்மையை இந்த அறிவாளிகளுக்கு எத்துனை முறை எடுத்து கூறினாலும் புரியாதா? பெரிய டுபாக்கூர் அரிவாளி போன்று பாயிண்ட் பாயிண்டா சொத்தை கேள்வியை தான் எழுப்புவார்கள்…

  7. ஆமாம் ராஜேஷ் தோழர். இப்போதுதான் நானும் கவனித்தேன். அபத்தமான பல கேள்விகளை, விமரிசனங்களை நான் முன்வைத்துள்ளேன். சற்று கோபமாக உங்களது பதில் இருந்தாலும் சரியாக எனக்கு விளக்கி விட்டீர்கள். நன்றி. அவ்வப்போது இப்படி நீங்கள் சுட்டிக்காட்டினால் தான் என்னைப் போன்ற ஏகலைவன்கள் உருவாக முடியும். கரக்டுதானே நான் சொல்வது.

    வினவு தோழர்களுக்கு,
    என்னுடைய பின்னூட்டம் அபத்தமாய் இருந்தாலோ, மையமான கட்டுரையை விட்டு விலகுவதாக இருந்தாலோ தயவுசெய்து பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் இந்த டுபாக்கூர் அறிவாளி பட்டம் படுத்துற பாட்டுனாலதான் சொல்கிறேன். நன்றி

    • வினவு தோழர்களுக்கு என்பதை வினவை நடத்தும் அன்பர்களுக்கு எனப் படிக்கவும்

  8. The thalassemias are a heterogeneous group of inherited disorders caused by mutations that decrease the rate of synthesis of α- or β-globin chains. As a consequence there is a deficiency of hemoglobin, with additional secondary red cell abnormalities caused by the relative excess of the other unaffected globin chain.

    Molecular Pathogenesis

    A diverse collection of molecular defects underlies the thalassemias, which are inherited as autosomal codominant conditions. Adult hemoglobin, or HbA, is a tetramer composed of two α chains and two β chains. The α chains are encoded by two α-globin genes, which lie in tandem on chromosome 11, while the β chains are encoded by a single β-globin gene located on chromosome 16. The mutations that cause thalassemia are particularly common among Mediterranean, African, and Asian populations.

    β-Thalassemia

    The β-globin mutations associated with β-thalassemia fall into two categories: (1) β0, in which no β-globin chains are produced; and (2) β+, in which there is reduced (but detectable) β-globin synthesis. There are more than 100 different responsible mutations, the majority of which consist of single-base changes. Individuals inheriting one abnormal allele have thalassemia minor or thalassemia trait, which is asymptomatic or mildly symptomatic. Most individuals inheriting any two β0 and β+ alleles have β-thalassemia major; occasionally, individuals inheriting two β+ alleles have a milder disease termed β-thalassemia intermedia.

    α-Thalassemia

    The molecular basis of α-thalassemia is quite different from that of β-thalassemia. Most of the α-thalassemias are caused by deletions that remove one or more of the α-globin gene loci. The severity of the disease that results from these lesions is directly proportional to the number of α-globin genes that are missing. The loss of a single α-globin gene is associated with a silent-carrier state, whereas the deletion of all four α-globin genes is associated with fetal death in utero, because the blood has virtually no oxygen-delivering capacity. With loss of three α-globin genes there is a relative excess of β-globin or chains other than α-globin. Excess β-globin (or γ-globin chains early in life) forms relatively stable β4 and γ4 tetramers known as HbH and Hb Bart, respectively, that cause less membrane damage than do free α-globin chains. Therefore, the hemolytic anemia and ineffective erythropoiesis tend be less severe in α-thalassemia than in β-thalassemia. Unfortunately, both HbH and Hb Bart have an abnormally high affinity for oxygen, which renders them ineffective at delivering oxygen to the tissues.

    Clinical Course

    β-thalassemia major manifests itself postnatally as HbF synthesis diminishes. Affected children fail to develop normally, and their growth is retarded from shortly after birth. They are sustained only by repeated blood transfusions, which improve the anemia and reduce the skeletal deformities associated with excessive erythropoiesis(chipmunk facies). With transfusions alone survival into the second or third decade is possible, but gradually systemic iron overload develops. The combination of iron present in transfused red cells and the increased uptake of dietary iron from the gut lead inevitably to iron overload. The latter stems from inappropriately low levels of plasma hepcidin, a negative regulator of iron uptake that is “underexpressed” in conditions (such as β-thalassemia major) that are associated with ineffective erythropoiesis. Unless patients are treated aggressively with iron chelators, cardiac failure from secondary hemochromatosis commonly occurs and often causes death in the second or third decade of life. When feasible, bone marrow transplantation at an early age is the treatment of choice.

    In β-thalassemia minor there is usually only a mild microcytic hypochromic anemia; generally, these patients have a normal life expectancy. The diagnosis of β-thalassemia minor is made by Hb electrophoresis. In addition to reduced amounts of HbA (α2β2), the level of HbA2 (α2δ2) is increased. The diagnosis of β-thalassemia major can generally be made on clinical grounds. The peripheral blood shows a severe microcytic hypochromic anemia, with marked variation in cell shapes (poikilocytosis). The reticulocyte count is increased. Hb electrophoresis shows profound reduction or absence of HbA and increased levels of HbF. The HbA2 level may be normal or increased. Prenatal diagnosis of both forms of thalassemia can be made by DNA analysis.

    HbH disease (caused by deletion of three α-globin genes) is not as severe as β-thalassemia major, since α- and β-globin chain synthesis is not as imbalanced and hematopoiesis is effective. Anemia is moderately severe, but patients usually do not require transfusions. Thus, the iron overload that is so common in β-thalassemia major is rarely seen. α-Thalassemia trait (caused by deletion of two α-globin genes) is often an asymptomatic condition associated with microcytic red cells and mild anemia…

    Excerpts from ROBBIN’S BASIC PATHOLOGY Ed 8…

  9. திரு மணி அவர்களே,

    எதோ ஒரு மருத்துவநூலில் இருந்து காப்பி எடுத்து பதிவு செய்தது. எனக்கு விளங்க வில்லை. உங்கள் பேரறிவுக்கு எப்படியும் விளங்கி இருக்கும். ஆனால் இதில் அகமணமுறை பற்றி கூறப்பட வில்லை என்று கூறி விடாதீர். நான் இந்த சேமியா நோயினால் செத்து விடுவேன்.

    • எனக்கு பேரறிவா.. நானே ஏகலைவனாகும் முயற்சியில் தான் இருக்கிறேன். அதனால் காப்பி அட்டக்காப்பியாகத்தானே இருக்கும். காப்பியை விட காஃபியை மோர் ஆக்கும் சங்கர வேலை சிறப்போ இல்லையோ

  10. மேலும் திருவாளர் மணீ,

    //அவை கேஸ் ஸ்ட்டியாக இருப்பின் ஏற்பது குறித்து பரிசீலிப்பதுதானே சரியானது//

    தாலசீமியா கேஸ் ச்டடீ ஆகும் அளவு சிறிய அளவான நோய் இல்லை. அதிகமான மக்களை பாதிக்கும் நோய்.

    //ஆய்வு உண்மை என வைத்துக் கொண்டாலும், இங்கு அகமண முறை இடையில் தான் வந்து சேர்ந்த்து என்பதற்கான ஆதாரம் எது? அப்படி வந்தாலும் எத்தனையாவது தலைமுறையில் தாலசீமியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது?//

    நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா மெண்டலிய பரம்பரை நோய்களும் அகமண முறையினாலேயே உண்டாகிறது. இடையில்தான் வந்ததா என்ற கேள்விக்கு பதில் ஏற்கனவே வினவில் ஒரு தனி பதிவாகவே வந்துள்ளது. தலைமுறை கணக்கு சரியாக சொல்ல முடியாது. 2வது தலைமுறையிலும் வரலாம், 4 5 இலும் வரலாம்.

    //இந்நோயின் வகைகள், இந்நோயின் விளைவாய் உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள், இதற்காக நடைபெற்று வரும் மருந்து கண்டுபிடிப்பு ஆய்வுகள் போன்றன இடம்பெறவில்லை என கருதுகிறென். சேர்க்க அவசியமில்லையா//

    இதோ நான் பதிந்து இடம்பெற வைத்து விட்டென். என்ன பண்ணப்போவதாய் உள்ளீர்கள்.

    //இரு பெற்றோர்களுக்குமே இந்நோய்க்கான ஜீன்கள் இருக்கும்பட்சத்தில் தான் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ அறிவியல் சொல்கிறது. ஜீன்களின் வடிவமைப்பில் இதுபோன்ற குறைபாடு புறமண உறவிலும் நிகழ்வது சாத்தியம் தானே. அகமண முறையினால் அதிகரிக்கும் என்பதற்கான புள்ளிவிபரம் ஏதுமுளதா//

    ஜீன்களின் வடிவமைப்பு என்ன கடையில் ஆர்டர் கொடுத்து வாங்குவது என்றா நினைத்தீர்? அப்பாவும் அம்மாவும் ஒரே வம்சாவளி என்றால் மட்டுமே தான் இப்படி குறைபாடான மரபுக்கூறுகள் குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது. உம். ஒரு பள்ளர் குடும்பத்தில் இந்த நோய் கூறு இருப்பதாக வைத்துக்கொள்வோம். பள்ளர் அனைவரும் சொந்த சாதியிலேயே மணமுடிப்பார்கள் என்றால் கணவனுக்கும் மனைவிக்கும் இந்தநோய்கூறு கடத்தப்பட வாய்ப்புள்ளது. இப்பொழுது ஒரு சக்கிலியர் இந்த பெண்ணுக்கு கணவனாக வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது சாதியில்நோய் இல்லை என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது பிறக்கும் குழந்தைக்கு ஒன்று, இந்தநோய்கூறே இல்லாமல் போகலாம், அல்லது ட்ரைடாக அல்லது அமைதியாக இருந்து விடலாம். பள்ளருக்கு பதில் பிள்ளை, கவுண்டன், முதலி, வண்ணான் என்று எந்த சாதியையும் வைத்துக்கொள்ளுங்கள்.

    //நிகழ்தகவின் விதிமுறைகளை பார்ப்பன பாசிசமோ, அகமணமோ, புறமணமோ தீர்மானிக்கும் என்பது எப்படி சரியானது.//

    மனு ஸ்மிருதியும் கோவில் ஐயரும் சொல்லாமல் சொந்தத்துக்குள்ளேயே மணமுடியுங்கள் என்று பொதிகைமலை குடிகார சித்தரா சொன்னார்.

    ட்ரிபுள் ஜம்ப் எல்லாம் இருக்கட்டும், நீங்கள் இப்படி புழு மாதிரி தரையில ஊர்வதைத்ர்கான் சகிக்க முடியவில்லை.

  11. வினவு தோழர்கள் அந்த மருத்துவ பதிவையும் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால் தலையும் புரியாது, காலும் புரியாது.

  12. நான் கடவுள் இல்லை……….

    முதலில் மணி எழுப்பிய கேள்விகளுக்கு உருப்படியான பதில்களை கூறவும்.

    //ஜீன்களின் வடிவமைப்பு என்ன கடையில் ஆர்டர் கொடுத்து வாங்குவது என்றா நினைத்தீர்? அப்பாவும் அம்மாவும் ஒரே வம்சாவளி என்றால் மட்டுமே தான் இப்படி குறைபாடான மரபுக்கூறுகள் குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது. உம். ஒரு பள்ளர் குடும்பத்தில் இந்த நோய் கூறு இருப்பதாக வைத்துக்கொள்வோம். பள்ளர் அனைவரும் சொந்த சாதியிலேயே மணமுடிப்பார்கள் என்றால் கணவனுக்கும் மனைவிக்கும் இந்தநோய்கூறு கடத்தப்பட வாய்ப்புள்ளது. இப்பொழுது ஒரு சக்கிலியர் இந்த பெண்ணுக்கு கணவனாக வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.//

    உங்கள் பெனாதளுக்கு ஒரு அளவே இல்லையா. நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளே தோற்றார்கள் போங்கள். சொந்தத்தை தாண்டி முன் பின் தெரியாத எங்கள் சொந்த இனத்தை சார்ந்த, நாங்கள் வேறு குடும்பத்தில் சம்ம்பந்தம் வைத்துக் கொள்ளும் பொழுது எங்களுக்கு ஏன் அந்த பாரம்பர்ய குறைபாடேல்லாம்.

    • வணக்கம் குறுக்குநூல் அனந்து,

      (பெயரிணைப்பிலுள்ள வலைத்தளத்தை பார்த்ததால் இந்த பட்டப்பெயர். அதை நீங்கள் பெருமையாகவே கருதுவீர்கள் என்று எண்ணுகிறேன்)

      உங்கள் சொந்த இனத்துக்குள்ளேயே சில பல தலைமுறைகளாக மணமுடித்து எடுப்பீராயின் மரபணு குறைபாடுகளின் தேக்கம் நிச்சயம் வந்திருக்கும். உங்களுக்கும் உங்கள் இனத்துக்கும் வாழ்த்துக்கள்.

  13. The thalassemias are a heterogeneous group of inherited disorders caused by mutations that decrease the rate of synthesis of α- or β-globin chains. As a consequence there is a deficiency of hemoglobin, with additional secondary red cell abnormalities caused by the relative excess of the other unaffected globin chain.

    Molecular Pathogenesis

    A diverse collection of molecular defects underlies the thalassemias, which are inherited as autosomal codominant conditions. Adult hemoglobin, or HbA, is a tetramer composed of two α chains and two β chains. The α chains are encoded by two α-globin genes, which lie in tandem on chromosome 11, while the β chains are encoded by a single β-globin gene located on chromosome 16. The mutations that cause thalassemia are particularly common among Mediterranean, African, and Asian populations.

    β-Thalassemia

    The β-globin mutations associated with β-thalassemia fall into two categories: (1) β0, in which no β-globin chains are produced; and (2) β+, in which there is reduced (but detectable) β-globin synthesis. There are more than 100 different responsible mutations, the majority of which consist of single-base changes. Individuals inheriting one abnormal allele have thalassemia minor or thalassemia trait, which is asymptomatic or mildly symptomatic. Most individuals inheriting any two β0 and β+ alleles have β-thalassemia major; occasionally, individuals inheriting two β+ alleles have a milder disease termed β-thalassemia intermedia.

    α-Thalassemia

    The molecular basis of α-thalassemia is quite different from that of β-thalassemia. Most of the α-thalassemias are caused by deletions that remove one or more of the α-globin gene loci. The severity of the disease that results from these lesions is directly proportional to the number of α-globin genes that are missing. The loss of a single α-globin gene is associated with a silent-carrier state, whereas the deletion of all four α-globin genes is associated with fetal death in utero, because the blood has virtually no oxygen-delivering capacity. With loss of three α-globin genes there is a relative excess of β-globin or chains other than α-globin. Excess β-globin (or γ-globin chains early in life) forms relatively stable β4 and γ4 tetramers known as HbH and Hb Bart, respectively, that cause less membrane damage than do free α-globin chains. Therefore, the hemolytic anemia and ineffective erythropoiesis tend be less severe in α-thalassemia than in β-thalassemia. Unfortunately, both HbH and Hb Bart have an abnormally high affinity for oxygen, which renders them ineffective at delivering oxygen to the tissues.

    Clinical Course

    β-thalassemia major manifests itself postnatally as HbF synthesis diminishes. Affected children fail to develop normally, and their growth is retarded from shortly after birth. They are sustained only by repeated blood transfusions, which improve the anemia and reduce the skeletal deformities associated with excessive erythropoiesis(chipmunk facies). With transfusions alone survival into the second or third decade is possible, but gradually systemic iron overload develops. The combination of iron present in transfused red cells and the increased uptake of dietary iron from the gut lead inevitably to iron overload. The latter stems from inappropriately low levels of plasma hepcidin, a negative regulator of iron uptake that is “underexpressed” in conditions (such as β-thalassemia major) that are associated with ineffective erythropoiesis. Unless patients are treated aggressively with iron chelators, cardiac failure from secondary hemochromatosis commonly occurs and often causes death in the second or third decade of life. When feasible, bone marrow transplantation at an early age is the treatment of choice.

    In β-thalassemia minor there is usually only a mild microcytic hypochromic anemia; generally, these patients have a normal life expectancy. The diagnosis of β-thalassemia minor is made by Hb electrophoresis. In addition to reduced amounts of HbA (α2β2), the level of HbA2 (α2δ2) is increased. The diagnosis of β-thalassemia major can generally be made on clinical grounds. The peripheral blood shows a severe microcytic hypochromic anemia, with marked variation in cell shapes (poikilocytosis). The reticulocyte count is increased. Hb electrophoresis shows profound reduction or absence of HbA and increased levels of HbF. The HbA2 level may be normal or increased. Prenatal diagnosis of both forms of thalassemia can be made by DNA analysis.

    HbH disease (caused by deletion of three α-globin genes) is not as severe as β-thalassemia major, since α- and β-globin chain synthesis is not as imbalanced and hematopoiesis is effective. Anemia is moderately severe, but patients usually do not require transfusions. Thus, the iron overload that is so common in β-thalassemia major is rarely seen. α-Thalassemia trait (caused by deletion of two α-globin genes) is often an asymptomatic condition associated with microcytic red cells and mild anemia…

    Excerpts from ROBBIN’S BASIC PATHOLOGY Ed 8…

      • மணி என்ற பெயரில் இங்கு மொக்கையடிக்கும் நண்பர் உண்மையில் யாருங்க?

        • ரவியண்ணே.. உங்க பேரும் எனக்கு தெரியும். என் பேரும் உங்களுக்கு தெரியும். இப்படி ஒரு மையப்பொருளுக்கு சம்பந்தமில்லாத கேள்வியை கேட்கும் நீங்கள் கீழே நான் கொடுத்த இணைப்பில் முதல் இணைப்பையாவது படித்தீர்களா.. படித்து விட்டு பேச வாருங்கள். நான் போடுவது மொக்கையா.. இல்லை விவாதிக்க விரும்பாமல் சல்லியடிப்பது யார் என்பது தெரிய வரும். ’எச்சொல் எவரெவர் வாய் கேட்பினும் அச்சொல் மெய்பொருள் காண்ப தறிவு’ என்ற வள்ளுவரின் கூற்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

          • ரவியண்ணே.. தாலசிமியா நோய்க்கு அகமண முறைதான் காரணம் என்பதற்கான அறிவியல் ஆய்வு பேப்பர்களையோ அல்லது மருத்து படிப்புக்கான டெக்ஸ்ட் புக்குகளையோ ஆதாரமாக தராமல் திருடுபவன் எல்லாம் கருப்பாக இருப்பதால் கருப்பாக இருப்போர் எல்லாம் திருடர்கள் என்ற மொக்கை லாஜிக்கை வைத்து பார்ப்பனியத்தை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் காமடி பண்ணுவதால் பார்ப்பனிய ஆதரவாளர்களுக்கு நக்கலடிக்க தோதான முறையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதை நோக்கித்தான் விவாதங்களை கட்டியமைத்து ஆக்கப்பூர்வமாய் கூட போயிருக்க முடியும். ஆனால் நான் கடவுள் ராஜேஷ் நீங்கள் என பலருமே மையப் பொருளை விட நபர்கள் மீதான வன்மத்தோடுதான் உரையாடல்களை கட்டமைக்கின்றீர்கள். தெரியவில்லை. மக்களோடு உறவாடுபவர்களிடம் இருக்க முடியாத குணாம்சம் இது. உங்களிடம் இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதை உங்களது உள்வட்டத்திலேயோ அல்லது உங்களுக்குள்ளோ கேட்டுப் பழகிப் பாருங்கள்.

    • These excerpts are taken from the basic Text Book for UG medical graduates and it is published in 2007. Now you can get 9th edition even online version also. But after this book released, lot of papers were published especially from NCBI and Mayo Clinic. Please read the following links which has used to improve your perception on this issue.
      https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC527686/
      http://www.bloodjournal.org/content/117/5/1745.long?sso-checked=true
      http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14651858.CD008708.pub3/abstract
      https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3206538/

  14. திருவாளர் கடவுள் அவர்களே.. (நீங்கள் நான் கடவுள் இல்லை என பணிவாகவே சொல்லிக் கொண்டாலும்) கடைசியில் இருந்து துவங்குவோம் சண்டையை. நான் நெளியும் இடத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அல்லது அதற்கான ஸ்பெஷல் எபக்ட் உள்ள கூலிங் கிளாஸ் இருந்தால் வாங்கித் தரவும்.
    அகமண முறையை மனுவுக்கு யாரும் பின்பற்றவில்லை என்பது வரலாற்றுரீதியில் பிழையான கருத்து. ஒரு எவாலுவேசன் என்ற முறையில் அறிவியல்பூர்வமான மனித பரிணாம வளர்ச்சியில் முதலில் இனக்குழுவுக்குள்தானே மணம் நடந்திருக்க முடியும். இதற்கு பொதிகை மலை சித்தர் வந்து வேறு இனக்குழுவில் தான் மணம் முடிக்க வேண்டும் என ஸ்கந்தனாகிய முருகனிடமா வந்து சொன்னார் கடவுளே.
    எல்லாவற்றையும் இப்படி வைத்துக் கொள்வோம் அன்ற அசம்ப்சன் முறையில் தான் நீங்கள் பதில் சொல்லி உள்ளீர்கள். என் அறிவுக்கு எட்டிய வரையில் இக்குறைபாடு உடைய புரதம் இரு பெற்றோருக்குமே இருந்தாலும் 16 வது வார முடிவில் கர்ப்ப பையில் உள்ள நீரை எடுத்து சோதித்து பார்த்தால் தான் உறுதி செய்ய முடியும் என்று மருத்துவ அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. இப்படி இருவருக்குமே குறைபாடு இருப்பது வேறு சாதிகளுக்குள்ளும் இருக்கலாம், ஒரே சாதிக்குள்ளும் இருக்கலாம். இப்படியான குறைபாடு உடைய பெற்றோர்களின் விகிதம் அல்லது இதற்கான தென்னிந்திய விபரங்கள் என புள்ளிவிபரம் இல்லாமல் நாம் பேசுவது சரியானது இல்லை. பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் வர வாய்ப்பில்லை. உங்களது வாதப்படி பார்த்தால் அகமண முறையினால் சாதியில் இருக்கும் அனைவருக்குமே இந்த குறைபாடு இருந்தால் தான் எல்லா குழந்தைகளுக்கும் இந்நோய்க்கு வாய்ப்புதான் இருக்கிறது. உறுதி என்று இல்லை. புறமண முறையினால் இந்நோய் குறைந்துள்ளது என்பதற்கான தென்னிந்திய புள்ளிவிபரம், தென்னிந்தியாவில் புறமண முறை அதிகம் என்பதற்கான புள்ளிவிபரம் இதெல்லாம் இல்லாமல் பேசுவது சரியான வாதமாக தெரியவில்லையே.
    நான் ஏன் நோய் பற்றி பதிவு செய்ய சொன்னேன் என்றால் அதில் இன்னும் அறிவியல் பூர்வமாய் அணுகுவதற்கான விசயங்கள் நிறைய எளிமையாய் விளக்க இருக்கிறது. அப்பகுதி விடுபடுவதால் இது குறித்த அறிவியல் அணுகுமுறையை வெறும் பார்ப்பனியம் என்ற சிறு சட்டகத்தில் அடைக்க பார்க்கும் அபத்தம் நிகழ்கிறது. குறிப்பாக இனக்குழு சமூக உறவு நீடிக்கும் ஆப்ரிக்க, தென்னமெரிக்க பகுதிகளிலும் இந்நோய் அதிகமாகவே காணப்படுகிறது. இதெல்லாம் கூடி வந்தால் இக்கட்டுரை சிறப்பாய் இருக்கும் என்பதற்காகத்தான் சொன்னேன். இதற்காக கொண்டையை சிலுப்பி சண்டைக்கு நிற்க வேண்டாம் கடவுளே..
    கடவுளே.. எனது இரண்டாவது கேள்வியை சற்று நிதானித்து படித்துப் பாருங்கள். நான் கேட்டது வேறு. நீங்கள் சொல்வது வேறு. கேள்வியை கொஞ்சம் ஜம்ப் அடிக்காமல் (அது டிரிபிளா என தெரியவில்லை) படிக்கவும்.
    ஆனாலும் உங்கள் பின்னூட்ட பதிவில் கடவுளாக இருப்பதால் இந்த ஐயம். என் பாட்டிலே குற்றமா என நெற்றிக்கண்ணை காட்டி விடாதீர்கள். என் சிஸ்டம் ஹேங்க் ஆகி விடும். எல்லா மெண்டலிய நோய்களுக்கும் அகமண முறைதான் காரணம் என்கிறீர்களே. இது ஆய்வு முடிவு தானா அல்லது உங்களது அக முடிவா
    கேஸ் ஸ்ட்டி குறித்து நான் விரிவாக பேச வேண்டும். அதை இன்னொரு நாள் வைத்துக் கொள்வோம். அதுக்கும் அளவுக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு மேல் இப்போதைக்கு வேண்டாம்.
    ஒருவகையில் நான் புழு போல் தான் நெளிகிறேன். அறிவியலை கற்றுக்கொள்ள இப்படித்தான் நெளிய வேண்டும் என என் ஆசிரியர்கள் எனக்கு சொல்லித் தந்தார்கள். மொதல்ல அந்த மடப்பசங்கள ஒதைக்கணும். ஏன்டா எனக்கு உண்மைய சொன்னீங்கனு திரும்ப திரும்ப கேட்டு

    • திரு மணி அவர்களே,

      எகண மொகணகளை எடுத்து விட்டு பார்த்தால் மிஞ்சுவது என்னவோ அதற்கு பதிலளிக்கிறேன்.

      //அகமண முறையை மனுவுக்கு யாரும் பின்பற்றவில்லை என்பது வரலாற்றுரீதியில் பிழையான கருத்து. ஒரு எவாலுவேசன் என்ற முறையில் அறிவியல்பூர்வமான மனித பரிணாம வளர்ச்சியில் முதலில் இனக்குழுவுக்குள்தானே மணம் நடந்திருக்க முடியும்.//

      மனுவுக்கு முன்னர் எத்தனை பேர் சொல்லி இருந்தாலும் மனு சொன்னதால் மட்டுமேதான் இப்படி ஒரு நிறுவனமாக சாதீயமும் அகமண முறையும் இந்தியாவில் உள்ளது. பரிணாம கோட்பாட்டில் என்ன ஐயா 4 குரங்குகள் திடீரென்று மனிதனாக மாறிவிடுவோம் என்று முடிவெடுத்து தங்கள் இனக்குழுவுக்குள் மணமுடித்தது போல் சொல்கிறீர். பரிணாமம் ஒரு டிரிபுள் ஜம்பில் நடப்பதில்லை. தவறும் சரியுமாக சிறிதும் பெரிதுமாக பற்பல மரபணு மாற்றங்கள் கூடிச் சேர்ந்து வேறு இனமாக மாறுகிறது. ஒரே இனக்குழுவில் குரங்குகள் மணமுடித்து இருந்தால் அந்த இனம் அழிந்து போயுருக்கும். உம். சீ விடமின் நமக்கு விடமின், சில குரங்கினங்களுக்கு இல்லை. ஏனெனில் அந்த மரபணு அழிந்து விட்டது. சீ விட்டமின் அளவுக்கதிகமாக பழங்களில் கிடைத்திருப்பதனால் அந்த மரபணுவின் தேவை அந்த குரங்கினத்திற்கு இருந்திருக்காது. அப்படிப்பட்ட மரபணுவை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதால் தீமையே விளையும். அதனால் புதிதான மரபணுக்களை கொள்வது மட்டுமல்ல, தேவையற்றவற்றை அழிப்பதும் இனமாற்றத்திற்கு தேவை.

      //இக்குறைபாடு உடைய புரதம் இரு பெற்றோருக்குமே இருந்தாலும் 16 வது வார முடிவில் கர்ப்ப பையில் உள்ள நீரை எடுத்து சோதித்து பார்த்தால் தான் உறுதி செய்ய முடியும் //

      16 வாரத்தில்தான் கண்டுபிடிக்கமுடியும் என்று வைத்துக்கொண்டாலும் கரு உருவாகும்போதே குறைநிறைகளொடே ஆரம்பமாகிறது.

      //இப்படி இருவருக்குமே குறைபாடு இருப்பது வேறு சாதிகளுக்குள்ளும் இருக்கலாம், ஒரே சாதிக்குள்ளும் இருக்கலாம். இப்படியான குறைபாடு உடைய பெற்றோர்களின் விகிதம் அல்லது இதற்கான தென்னிந்திய விபரங்கள் என புள்ளிவிபரம் இல்லாமல் நாம் பேசுவது சரியானது இல்லை.//

      அகமணமுறையை பின்பற்றும் சாதி இனக்குழுவுக்குள் அந்த குறைபாடுடைய மரபணுவே தேங்கும். இந்த விவரங்கள் தென்னிந்தியாவில் அல்ல, எல்லா இந்தியாவிலும் இல்லை. ஆனால் ஐரோப்பிய யூதர்களிடையே இது போன்ற ஆராய்ச்சிகள் எவ்வளவோ செய்யப்பட்டு விட்டன. அதேதான் இங்கேயும் இருக்கும்.

      //உங்களது வாதப்படி பார்த்தால் அகமண முறையினால் சாதியில் இருக்கும் அனைவருக்குமே இந்த குறைபாடு இருந்தால் தான் எல்லா குழந்தைகளுக்கும் இந்நோய்க்கு வாய்ப்புதான் இருக்கிறது. உறுதி என்று இல்லை.//

      ஒடுங்கிய மரபணு, அதிகாரமிக்க மரபணு அவற்றின் உயிரியல் வெளிப்பாடுகள், உருவாக்கும் நோயின் ஊடுறுவல் இவற்றை இங்கே பாடம் எடுக்க இயலாது.

      //எல்லா மெண்டலிய நோய்களுக்கும் அகமண முறைதான் காரணம் என்கிறீர்களே. இது ஆய்வு முடிவு தானா அல்லது உங்களது அக முடிவா//

      மெண்டல் தனது ஆராய்ச்சியை இருவேறு தன்மை கொண்ட கடலையில் சோதனை செய்து மரபணுக்களை கண்டுபிடித்தார். அது “அகமண முறை” சோதனைகளே.

      //கேஸ் ஸ்ட்டி குறித்து நான் விரிவாக பேச வேண்டும். அதை இன்னொரு நாள் வைத்துக் கொள்வோம்.//

      எதிர்பார்த்திருக்கிறேன்.

      • கடவுளே
        சத்தியமா நீங்க சொல்ல வார ஏதுமே என் சிற்ற்றிவுக்கு எட்டவில்லை. ஒருவேளை எட்டியோர் யாராவது எனக்கு நோட்ஸ் கொடுத்தால் புரிந்து கொள்வேன். ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ளாதீர்கள். நீங்க என்னமோ சொல்ல வாரீங்க. ஆனா அதுக்குள்ள கோபமாகிடுறீங்க. அதுனால இன்னொன்றை சொல்ல ஆரம்பிக்கிறீங்க, இல்ல ஆமா இப்போ என்னான்ற என்று மல்லுக்கு நிற்கிறீர்கள். நான் உண்மையில் ஐயங்களைத்தான் கேட்டேன். ஐயங்களுக்கான மறுமொழிக்கு மறுமொழிக்கு எனப் போய் விவாதங்களை எங்கேயோ கொணொடு என்ன கையப் புடுச்சு இழுத்தியா பாணிக்கு வர வைத்து விட்டீர்கள். கடவுளே நீர் வாழ்க. நும் கொற்றமும் வாழ்க.

  15. முதல் பத்தில் மனுவுக்கு யாரும் என இருப்பதை மனுவுக்கு முன்னர் யாரும் என படிக்கவும்

    • மணி,

      அந்த ஆங்கில மருத்துவப் பதிவை படித்து விட்டீர்களா?

      அதுதான் முதலில் பதிவு செய்தது. வினவு அதை பின்னர் ஏற்றியதால் இந்த குழப்பம்.

  16. கட்டுரையாளருக்கு ஒரு ஆலோசனை…

    அக மண உறவு முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… ஆனால் கருவிலேயே இந்த நோய் உள்ள சிசு அழிக்கபட வேண்டும் என்று கூறுவதில் தான் எனக்கு உடன்பாடு இல்லை… மருத்துவ முறைகள் முன்னேறிச்செல்லும் அது தலசீமியா நோயை கருவிலேயே அழிக்கும் genetic engineering , gean based drug design போன்ற முறைகளில் இந்த மரபணு நோயை அழிக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்… கருவில் இருக்கும் சிசுவை அழிப்பதை விட கருவில் உள்ள சிசுவின் நோயை அழிப்பது என்பது மனித தன்மை உடைய செயல் தானே?

    //முதல் முறையில் கருவிலேயே தலசீமியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கருவை அழிக்க வேண்டும்; இரண்டாவது முறையில் அகமண உறவு முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.//

  17. கடந்த 2 நாட்களாக சொந்த கடும் வேலையின் காரணமாக வினவில் பதிவிட முடியமால் போய் விட்டது. அதற்குள் ஒரு களேபரமே நடந்து விட்டது. ஒருவர் என்னடாவென்றால் நான் சாதிக்கு முட்டு கொடுக்கிறேன் என்கிறார். இன்னொருவர் ஒருபடி மேலே போய், என்னை பார்பனிய விஷம் என்றே முத்திரை குத்தி விட்டார். நான் கூற வருவதை ராமன் அவர்கள் புரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே. இதற்கிடையில் எனக்கு ஆதரவாக சாதி அமைப்புகள் சார்ந்த நபர்கள் வேறு. இரு தரப்பினருமே என் கருத்தினை, நான் கூற வருவதை புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சாதியம் என்பது நான் முட்டு கொடுத்து தூக்கி நிறுத்த வேண்டிய நிலையில் ஒன்றுமில்லை, அது ஏற்கனவே சமுகத்தில் கெட்டியாக இறுகிப் போய் தான் உள்ளது. சாதி என்பது மனிதனின் சமுக பரிணாம வளர்ச்சியின் வரலாற்றின் இடை கட்டத்தில் தோன்றியது. எப்படி தோன்றியதோ அவ்வாறே அது கால வெள்ளத்தில் விழ்ந்து விடும். அனைத்து மனிதர்களும் சமம் ஆவார்கள். அதனை புரட்சிகரமாக ஒரே அடியில் அடித்து விழ்த்துவது என்பதெல்லாம் முடியாது. வேண்டுமானால் எனக்கு கார சாரமாக பதில் கொடுப்பதற்காக பின்னூட்டத்தில் வாய் ஜம்பம் அடிக்கலாம் அவ்வளவே. இனி விடயத்திற்கு வருவோம்.

    இங்கு மரபார்ந்த நோய்கள் மற்றும் அது தொடர்பான அகமண முறை என்பதை பற்றி எனக்கு தெரிந்த வரை நான் எனது கருத்துக்களை முன் வைத்துள்ளேன். ஆனால், இப்போது வரை நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு திருப்த்திகரமான பதிலையும் யாரும் அளிக்க வில்லை, என்னை வசைப்பாடுவதை தவிர. என்னை திட்டித்தீர்க்கும் இந்த நேரத்தில் அகமண முறை தொடர்பான மருத்துவ ஆய்வுகளோ, தரவுகள் சார்ந்த புள்ளி விவரங்களையோ அளித்திருக்கலாம். பலருக்கும் அது பயனுள்ளதாக இருந்திருக்கும்.

    நான் இங்கு ஏற்கனவே கூறியதுப் போல் அகமண முறையினால் தான் அனைத்து வித மரபணு குறைப்பாடுகளும் ஏற்படுகிறது என்பது உண்மையானால், இந்நேரம் இந்தியாவில் 100க்கு 99 விழுக்காடு அனைவரும் ஏதாவது ஒரு மன,உடல் சம்மந்தமான நோயினால் பாதிக்கப்பட்டவராகத் தான் இருக்க வேண்டும். உறவுகளுக்குள், அதிலும் குறிப்பாக நெருங்கிய உறவுகளுக்குள்(தாய் மற்றும் தந்தையின் ரத்த உறவுகள்) சங்கிலி தொடராக திருமணம் செய்துக் கொள்வதால் ஏற்ப்படும் பிரச்சனை தான், இந்த மரபணு குறைபாடு, மற்றும் அதனால் ஏற்ப்படும் நோய்கள் என்பதெல்லாம். இந்த வகை திருமணங்களை மருத்துவர்கள் ஆங்கிலத்தில் “சொன்சன்குஇனெஒஉச் மர்ரிஅகெச்” என்று அழைப்பார்கள். கொஞ்சம் தூரத்து உறவுகளாக இருந்தால் போதும் இந்த மரபணு குறைப்பாடுகள் ஏற்ப்படுவது சொற்பமே,அல்லது ஏற்படாமலும் இருக்கலாம். எடுத்துகாட்டாக, ஒருவர் தன்னுடைய அண்ணன் மனைவியின் உடன் பிறந்த சகோதரியை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஏனெனில் இங்கு அவர் நெருங்கிய ரத்த உறவு என்பதில் அடங்கமாட்டார். சென்னையில் வாழும் ஒரு பிராமண குடும்பம், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் இன்னொரு பிராமண குடும்பத்தில் திருமண உறவு வைப்பதாலோ அல்லது அதே சென்னையில் வாழும் நெருங்கிய ரத்த சொந்தமல்லாத இன்னொரு குடும்பத்துடன் சம்மந்தம் வைப்பதாலோ எந்த மரபணு ஆபத்தும் கிடையாது(இப்படிபிள்ளை,முதலியார்,செட்டியார்,நாடார் என்று யாரை வேண்டுமானாலும் பொருத்தி கொள்க).நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை எந்த மருத்துவ நிபுணரிடம் வேண்டுமாலும் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். இதனை யாரும் மறுக்கவே முடியாது.ஆகவே, பயமில்லாமல் ஒருவர் தாரளமாக அகமண முறையில் திருமணம் செய்துக் கொள்ளலாம். அதனால் எந்த பாதிப்பும் கிடையாது. கொள்கைக்கு முரணாய் இருக்கிறது என்று நினைத்தால் கலப்பு திருமணம் என்கிற புறமணமும் செய்துக் கொள்ளலாம். அது அவரின் தனிப்பட்ட விருப்பம்.

    கட்டுரையாளர் கூறுவதைப் போன்று மூட்டுவாதம், முடக்கு வாதம் என்பதெல்லாம் வெறுமனே மரபணு சம்மத பட்டது என்று சுருக்கி விட முடியாது. உடல் உழைப்பு என்பது குறையும் பொழுது இவையெல்லாம் ஏற்ப்படுவது சகஜமே. மேலும், இதில் கவனிக்க பட வேண்டியது என்னவென்றால் இந்த மரபணு குறை என்பது ஒப்பீட்டளவில் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளுடன் பார்க்கும் பொழுது இந்தியா, ஆப்ரிக்கா,மத்திய ஆசியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற வறுமை நாடுகளில் தான் அதிகம் உள்ளது. இதற்க்கு உட்டசத்து குறைப்பாடும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

    மாறிவரும் வாழ்கை முறையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழல், உணவு பழக்க வழக்கம், மன அழுத்தம், முளை மற்றும் உடல் சார்ந்த அதிக வேலை பளு. உழைப்பே இல்லாத வாழ்க்கை என்று அனைத்தும் சேர்ந்து தான் குறைப்பாடுகளை உருவாக்குகின்றன. இவைகளை மறுத்து விட்டு அகமண முறை தான் அனைத்து கேடுகளுக்கும் காரணம் என்று கை காட்டுவது சுத்த அயோக்கியதனம் ஆகும். மரபணு குறைபாடு யாரிடமும் இருக்கலாம். ஆதிக்க சாதி, தாழ்த்த பட்ட சாதி என்கிற வேறுபாடெல்லாம் நோய்களுக்கு கிடையாது. சர்க்கரை நோய் என்பது பணக்காரர்களின் வியாதி என்று கூறப்பட்ட காலமெல்லாம் மலையேறி இன்று கடுமையாக உழைப்பவர்களுக்கும் அது உடமையாகி விட்டது.

    மீண்டும் நான் முதலில் கூறியதை நினைவு படுத்துகிறேன், அனைத்து உடல் குறைப்பாடுகளுக்கும் அகமண முறைத் தான் காரணம் என்றால் இந்நேரம் இந்த நாட்டில் அனைவரும் உடலாலும், மனதாலும் ஊனமுற்றோராகத் தான் அலைய வேண்டும். அப்படி ஒரு சவலையான சமுகத்தில் இருந்து நமக்கு ஒரு புத்தர், காந்தி, பகத்சிங், சந்திரசேகர் அசாத், நேதாஜி போன்றவர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். ஏன் நாம் அனைவரும் கொண்டாடும் பெரியார் போன்றவர்கள் உருவாகி இருக்க முடியாது. நன்றி.. வருகிறேன்.

  18. *இந்த வகை திருமணங்களை மருத்துவர்கள் ஆங்கிலத்தில் “consanguineous marriages”
    என்று அழைப்பார்கள்.

    • நீங்களும் ஓரளவு அகமண முறையில், நெருங்கிய சொந்த உறவில் இதற்கு வாய்ப்பிருப்பதாக சொல்லி கட்டுரையை மறைமுகமாய் ஆதரிக்கின்றீர்கள். ஆதரிப்பது பிரச்சினையில்லை. அதற்கு மருத்துவ நிபுணர்களை ரெகமண்டு செய்கிறீர்கள். உண்மையில் அப்படி இருப்பதற்கான புள்ளிவிபரம் ஏதும் உள்ளதா? அப்படி இல்லாமல் பேசுவது அல்லது அதற்கான ஆய்வுகளுக்கான தரவுகள் இல்லாமல் பேசுவது சரியான விசயம் இல்லையே..

      • நான் மறைமுகமாகவெல்லாம் ஆதரிக்கவில்லை, மருத்துவ உலகின் பொதுவான கூற்று அது. சொந்தத்தில் திருமணம் செய்வதால் உடனே குறைப்பாடுள்ள குழந்தைகள் பிறக்கும் என்பதெல்லாம் கிடையாது. 4அல்லது 5 தலைமுறைகள் தொடர்ந்து நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்தால் ஏற்படலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் அபிப்ராயம். இதற்கான முறையான புள்ளி விவரங்கள் ஏதும் இது வரை அளிக்க பட்டதில்லை. இருந்தாலும் நீங்கள் எழுப்பிய இந்த கேள்வியை நிச்சயம் புறந் தள்ள முடியாது.

        //இரு பெற்றோர்களுக்குமே இந்நோய்க்கான ஜீன்கள் இருக்கும்பட்சத்தில் தான் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ அறிவியல் சொல்கிறது. ஜீன்களின் வடிவமைப்பில் இதுபோன்ற குறைபாடு புறமண உறவிலும் நிகழ்வது சாத்தியம் தானே. அகமண முறையினால் அதிகரிக்கும் என்பதற்கான புள்ளிவிபரம் ஏதுமுளதா…//

        இது ஆய்வு செய்ய பட வேண்டும், ஜீன்களில் ஏற்ப்படும் குறைப்பாடு என்பது வெறுமனே சொந்தத்தில் திருமணம் செய்வது என்கிற ஒற்றை காரணத்தினால் மட்டும் தான் ஏற்படுகிறது என்று கூறி புறச்சூழலை நாம் புறம் தள்ள முடியாது. நன்றி.

  19. கட்டுரையும் சரி விவாதிப்பவர்களும் சரி. பார்ப்பனர்கள் வருகைக்கு முன் இங்கு அகமண முறை நிலவவில்லை என சொல்வது ஆதாரமற்றது. இதனை சாதி குறித்த குறிப்புகளை வாசித்திருந்தாலோ கட்டுரையின் பல்வேறு அபத்தமான வாதங்களை கண்டுபிடித்திருக்க முடியும். இதற்கு வாய்ப்பு இல்லாத வெளியில் இருக்கும் நபர்களுக்கு நான் கீழ்கண்ட கேகே பிள்ளை அவர்களின் புத்தகத்தை படித்து பயனுறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறிய புத்தகம். எழுதி ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் காத்திரமான ஆய்வில் ஒன்று.

    http://www.amazon.in/Caste-System-Tamil-Nadu/dp/8180940403

  20. ரெபக்கா உங்கள் இந்த எளிமையான கருத்துகளை கூட படித்து புரிந்துகொண்டு உணர்ச்சி பொங்காமல் இவர்களால் பேச முடியவில்லை என்பது என்னால் நம்ப முடியவில்லை. இந்த அளவுக்கு கூட கண்மூடித்தனமாக எல்லோரையும் ஒரு பொது முத்திரை குத்தி இம்சிக்க முடியுமா?

  21. ஆதியில் இல்லாமல் பாதியில் வந்த ஜாதி ஒழிக

    பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் குணத்தின் அடிப்படயில் உருவான வர்ணாசிரம தர்மம் வாழ்க

Leave a Reply to நான் கடவுள் இல்லை பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க