privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காயோகாவின் தேசத்தில் ஆரோக்கியத்தின் அருகதை என்ன ?

யோகாவின் தேசத்தில் ஆரோக்கியத்தின் அருகதை என்ன ?

-

மோடி அமெரிக்க காங்கிரசில் ஆற்றிய இந்த உரையை கேட்டு மோடியின்  இந்திய பக்தர்கள் புளகாகிதம் அடைந்து இருக்கலாம்.
மோடி அமெரிக்க காங்கிரசில் ஆற்றிய இந்த உரையை கேட்டு மோடியின் இந்திய பக்தர்கள் புளகாகிதம் அடைந்து இருக்கலாம்.

மோடி, அமெரிக்க காங்கிரசில் பேசிய போது, “சுற்றுசூழல் பாதுகாப்பும், இந்த புவிக்கோளின் மீதான அக்கறையும் தாம் நமது (அமெரிக்கா மற்றும் இந்தியாவின்) பொதுவான பார்வையாகும். தாய் பூமியில் ஒற்றுமையோடு வாழ்வது என்பது எங்கள் இந்தியாவைப் பொறுத்தவரை தொன்மையான நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.” என்றார்.

அமெரிக்காவின் சூழலிய அக்கறையை அங்கீகரிக்கும் மோடி கூடவே அந்தக்காலத்திலேயே நாங்களும் அப்படித்தான் என்று விடுகிறார். ஆனால் உலக சுகாதார நிறுவனம்(உ.சு.நி) அளித்துள்ள 2016 ஆண்டுக்கான உலகளாவிய நகர்ப்புற சுற்றுச்சூழல் (வளிமண்டல நுண்துகள்) மாசு அறிக்கை மோடியை அம்பலப்படுத்துகிறது. அந்த அறிக்கையின் படி உலகில் மிகவும் மோசமாக மாசடைந்த முதல் 20 பெரிய நகரங்களில் 1௦ நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

வளிமண்டலத்தில் உள்ள நுண்துகள் மாசுபாட்டை அளவீடு செய்ய PM2.5 மற்றும் PM10 ஆகிய இரு அளவீடுகளை உலக சுகாதார நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இந்த இரு அளவீட்டுகளில் PM2.5 என்பது 2.5 மைக்ரான் மற்றும் அதற்கும் குறைவான அளவுள்ள நுண்துகள் மாசுகளை குறிப்பதாகும். PM10 என்பது 10 மைக்ரான் மற்றும் அதற்கு குறைவான நுண்துகள் மாசுக்களை குறிப்பதாகும். அளவில் மிகவும் சிறியதான PM2.5 மாசுகள் தான் மிகவும் அபாயகரமான நுண்துகள்களாகும்.

2014 ஆண்டிற்க்கான உ.சு.நி சுற்றுசூழல் அறிக்கையின் படி டெல்லி முதலிடத்தில் இருந்தது. தற்போதைய அறிக்கையின்படி டெல்லி சற்று பின்னால் இருந்தாலும் 11 வது இடத்தை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 14 மில்லியனுக்கு மேல் மக்கள் வசிக்கும் மாநகரங்களில் டெல்லி தான் மிகவும் மோசமாக மாசடைந்து உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

2014 க்கான உ.சு.நி சுற்றுசூழல் அறிக்கையின் படி டெல்லி முதலிடத்தில் இருந்தது. தற்போதைய அறிக்கையின்படி டெல்லி சற்று பின்னால் இருந்தாலும்  11 வது இடத்தை உறுதி செய்துள்ளது.
2014 க்கான உ.சு.நி சுற்றுசூழல் அறிக்கையின் படி டெல்லி முதலிடத்தில் இருந்தது. தற்போதைய அறிக்கையின்படி டெல்லி சற்று பின்னால் இருந்தாலும் 11 வது இடத்தை உறுதி செய்துள்ளது.

கடந்த முறை ஆய்வின் போது 1600 நகரங்களை ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்ட உலக சுகாதார நிறுவனம் தற்போது மேலும் 1400 நகரங்களை எடுத்துக் கொண்டுள்ளது. இருந்த போதிலும் காற்று நுண் துகள் மாசுபாட்டின் அளவில் பெரிய மாறுபாடு ஏதும் இல்லை என்பதையும் காற்று மாசுபாட்டின் அளவு மென்மேலும் அதிகரித்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கங்கை நதியின் சீர்கேட்டிற்கு அந்நதியில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளும், பார்ப்பன இந்து மத சடங்கு கழிவுகளும் தான் என்ற உண்மையை மறைப்பதற்கு எச்சில் துப்புபவருக்கு அபராதம் என்று அரசு மடை மாற்றுகிறது.

குறைவான மற்றும் நடுத்தர வருமானம் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வாழும் நகரங்களில் கிட்டத்தட்ட 98 விழுக்காட்டு நகரங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் காற்றின் தரத்தை பின்பற்றவில்லை என்றும் அதே நேரத்தில் அந்நிறுவனத்தின் தர நிர்ணயத்தை பின்பற்றாத பணக்கார நாடுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் அந்நிறுவனத்தின் அறிக்கை கூறியுள்ளது. சுரண்டும் நாடுகளையும் சுரண்டப்படும் நாடுகளையும் ஒரே மாதிரியாக மதிப்பிடுவதில் இருக்கும் முரண்பாடுகள் எவை?

உலகமயமாக்கலுக்கு முன்னர் நேரடி உற்பத்தியில் ஈடுபட்டு சந்தைக்காக உலகம் முழுதும் சுற்றிய அந்த பணக்கார நாடுகள் தற்போது அந்த உற்பத்தியை குறைந்த கூலிக்கு உழைப்பை விற்கும்ஏழை நாடுகளுக்கு மாற்றி விட்டன.

ஏழை நாடுகளின் இறையான்மையை தமது தேசங்கடந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் கபளீகரம் செய்து அந்நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன.
ஏழை நாடுகளின் இறையான்மையை தமது தேசங்கடந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் கபளீகரம் செய்து அந்நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன.

ஏழை நாடுகளின் இறையாண்மையை தமது புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் கபளீகரம் செய்து அந்நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன. இது ஒருபுறம் ஏழை நாடுகளின் உழைப்புச் சக்தியை வீணடிப்பதுடன் இயற்கை வளங்களையும் நாசம் செய்கிறது. பாக்சைடுக்காக தண்டகாரண்யா காடுகள், தாது மணலுக்காக கன்னியகுமாரி கடற்கரை, இரும்பு தாதுக்காக கர்நாடகா என அனைத்து இடங்களில் சுற்றுசூழல் நாசம் செய்யப்படுகின்றது.

இதனால் பணக்கார நாடுகளில் சுற்றுசூழல் மாசுபாடு இல்லையா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நுகர்வின் கழிவுகள் அந்நாடுகள் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டு தான் 2015 ல் அம்பலத்தில் ஏறிய வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் மாசு சோதனை மோசடி.

தமது அடிப்படைத் தேவைகளான உண்ணும் உணவு, உடுத்தும் ஆடை உள்ளிட்ட பெரும்பான்மையானவற்றை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து தருவித்து கொள்வதால் நுகர்வின் அடிப்படையிலான சுற்றுசூழல் மாசுபாட்டில் பணக்கார நாடுகள் தான் முன்னணியில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக தனி நபர் வெளியேற்றும் கரியமில வாயுவின் அளவில் மேற்கத்திய நாடுகளே முன்னணியில் உள்ளன.

நுகர்வையும் சுற்றுசூழல் மாசுபாட்டையும் பிரிக்க இயலாது. அதனால் நுகர்ச்சியின் சங்கிலியையும் நாம் தெரிந்து கொண்டாக வேண்டும். தனி நபர் நுகர்வையே முதன்மையான கொண்டு முதலாளித்துவம் இயங்குகிறது. ஒரு விளம்பர காதிதத்திற்காக காட்டையே அழிப்பதும் ஒருவர் ஒரு முறை உடுத்தி விட்டு எறியும் “யூஸ் அண்ட் த்ரோ” துணிக்காக டாக்காவில் ஓராயிரம் ஆடைத் தொழிலாளர்கள் பலியானதும் தான் முதலாளித்துவத்தின் பிரணவ மந்திரமாகும்.

னி நபர் வெளியேற்றும் கரியமில வாயுவின் அளவில் மேற்கத்திய நாடுகளே முன்னணியில் உள்ளன
தனி நபர் வெளியேற்றும் கரியமில வாயுவின் அளவில் மேற்கத்திய நாடுகளே முன்னணியில் உள்ளன

ஏகாதிபத்தியங்களின் உலக சந்தைக்கான உற்பத்தி பின்னிலமாக பரிணாமம் எடுத்திருக்கும் இந்திய பொருளாதாரம், இந்த சுற்றுசூழல் மாசுபாட்டிற்க்கான தரப்பட்டியலில் பெற்றிருக்கும் இடம் தான் அதற்காக பெற்றிருக்கும் வெகுமதி. சுற்றுசூழலில் இந்த நிலையானது இந்தியச் சமூக சூழலின் வெளிப்பாடாகும். பெரும்பாலான உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் இந்தியா அதன் நுகர்ச்சியிலோ ஆப்ரிக்கா ஏழை நாடுகளையும் விட பின்தங்கியே உள்ளது. அதாவது உற்பத்தி செய்த உணவுப் பொருட்களில் பெரும்பான்மையானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உணவு உற்பத்தியில் ஈடுபடும் ஏழை எளிய இந்திய மக்கள் தரத்திலும் அளவிலும் குறைவான உணவுப்பொருட்களையே நுகர்கின்றனர். இந்திய மக்களின் சமூகவாழ்க்கை முறையில் இருக்கும் இந்த முரண்பாடு அவர்களின் ஆயுட்கால சராசரியையும் அறிவு வளர்ச்சியையும் பாதிக்கிறது. இந்தியக் குழந்தைகளில் 90 விழுக்காட்டினர் போதிய புரதத்தை தமது தினசரி உணவில் எடுத்து கொள்வதில்லை. வளரும் பருவத்தில் அறிவு வளர்ச்சியோடு ஆற்றலிலும் மேலை நாடுகளை விட நமது குழந்தைகள் குன்றி இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

காற்று மாசுபாடு என்ற ஒற்றை விசயத்தில் மறைபொருளாக பல்வேறு விசயங்கள் மறைந்துள்ளன. உலக பணக்கார வர்க்கத்தின் நுகர்வு சந்தைக்காக இந்திய மக்களின் இயற்கை வளங்களையும், உழைப்பு சக்தியையும் வீணடிக்கும் இந்திய ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதிகள் அதற்கு வெகுமதியாக பெருமளவு கழிவுத் தொகையையும், பிரதமர் பதவிகளையும், அமைச்சர் பதவிகளையும், அமெரிக்கா செல்லும் நல்வாய்ப்பையும்(!) பெற்றுக் கொள்கின்றனர்.

யோகாவை கண்டு பிடித்து உலகமெங்கம் பரப்பி வரும் தேசத்தின் யோக்கியதை இதுதான். இன்னும் காலரா, மலேரியா, டெங்கு, அம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்களின் உலகளாவிய புள்ளிவிவரங்களிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஆனால் ஸ்வச்ச பாரத், யோகா ஆரோக்கியம், அதற்கு விளம்பர திருவிழா என்று இந்த எழவுகளுக்கு மட்டும் குறைவில்லை.

– சுந்தரம்.

மேலும் படிக்க

Smart Cities Mission
List of countries by food energy intakeList of largest producing countries of agricultural commodities
Air pollution levels rising in many of the world’s poorest cities
Asia: Pollution Index 2016
Delhi not ‘most polluted’, but dirty air fouls many cities
Most Polluted Cities in India