privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே! - பு.மா.இ.மு

பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே! – பு.மா.இ.மு

-

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை-95, 9445112675
_______________________________________________________
கண்டன அறிக்கை

  • பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே!
  • கொலைக்கு பாரத ஸ்டேட் வங்கியும், அடியாள் ரிலையன்சுமே பொறுப்பு!

துரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் கதிரேசன் என்பவரது மகன் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான லெனின், பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வசூல் அடியாளாக நியமிக்கப்பட்ட ரிலைன்ஸ் நிறுவனத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

privatization-of-education-cards-09மாணவன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமெனில் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும், ‘100% கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு’ என்று கல்லூரிகள் உத்திரவாதம் கொடுக்கும் போது ஏன் இவ்வளவு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்.

இந்த தனியார் கல்லூரிகளின் வேலைவாய்ப்பு மோசடியைக் கண்காணிக்கிறதா இந்த அரசு? படித்தவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துகிறதா இந்த அரசு? இதனை செய்யாமல் மாணவர்களை கல்விக்கடன் என்ற புதைகுழியில் தள்ளுகிறது அரசு – வங்கி – தனியார் கல்லூரிகள் என்ற இந்த முக்கூட்டு களவாணிகளின் லாபவெறிக்கு உருவாக்கப்பட்ட இந்த மாயவலையில் சிக்கிய லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வேலை கிடைக்காமலும், கல்விக்கடனைக் கட்ட முடியாமலும் பரிதவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் ஏழை கொத்தனார் கதிரேசன் தனது மகன் லெனினை சிவில் இன்ஜினியர் ஆக்க ஆசைப்பட்டிருக்கிறார். பலமுறை அலைந்து திரிந்து தனது மகனுக்கு (அரசு தாராளமாக வழங்க உத்தரவிட்டிருக்கும்) கல்விக்கடனை பாரத ஸ்டேட் வங்கியிடம் வாங்கி ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் சேர்த்து விடுகிறார். படித்து முடிக்கின்ற பொழுது லெனின் பல லட்சம் இளைஞர்களில் ஒருவராக வேலைவாய்ப்பு சந்தையில் தள்ளப்படுகிறார்.

வேலை கிடைக்க தாமதமாகி வந்த நிலையில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கல்விக்கடன்களை வசூலித்துக் கொள்ளும் உரிமையை ஏற்கனவே பலலட்சம் கோடி வாராக்கடனை வைத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 45% விலைக்கு கொடுக்கிறது. விஜய் மல்லையா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம் வாராக்கடனை வசூலிக்கும் உரிமையை வாங்கத் துணியாத ரிலையன்ஸ் நிறுவனம் (மல்லையாவிடம் கடன் வசூலிக்க சென்றால் அவன் வேறு ஒரு நிறுவனம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாராக்கடனை வசூல் செய்யும் நிலைமை உருவாகலாம்) மிக எளிதில் மிரட்டி உருட்டி மாணவர்களிடம் வாங்கி விடலாம் என்பதால் இதனை வாங்குகிறது.

முகேஷ் அம்பானி
மல்லையாவிடம் கடன் வசூலிக்க சென்றால் அவன் வேறு ஒரு நிறுவனம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாராக்கடனை வசூல் செய்யும் நிலைமை உருவாகலாம்

மாணவர்கள் வேலை கிடைத்ததும் கட்ட வேண்டிய கடன்தொகையை வேலை கிடைக்கும் முன்பே உடனடியாக வசூல் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் தனது அடியாள் குண்டர்படையை ஏவிவிடுகிறது. இதே போன்றதொரு நிலைமையில் தான் கதிரேசனும், அவரது மகன் லெனினும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடியாள்படையால் மிரட்டப்படுகின்றனர். ஒரு மாதமாக இந்த மிரட்டல் தொடர்ந்த பொழுது, அன்றாடம் உழைத்துக் கிடைக்கும் வருமானம் மட்டுமே உடைய கதிரேசன் மிரட்டலை எதிர்கொள்ள முடியாமல், கடன் வாங்கியாவது ரிலையன்ஸ் அடியாட்கள் கோரிய முதல் தவணையாக ரூபாய் 50,000 கட்ட ஒப்புக்கொள்கிறார். அந்தப் பணத்தைக் கதிரேசன் தயார்செய்து கொண்டிருக்கும் போதே லெனினுக்கு ஜூலை 16-ம் தேதி அன்று ஒரு போன் வருகிறது. ”உங்கள் வீட்டிற்கு ஆட்கள் வந்து மிரட்டுவார்கள், உன் குடும்பத்தை அவமானப்படுத்துவார்கள் என்றெல்லாம் ரிலையன்ஸ் அடியாட்கள் மிரட்டியுள்ளனர். இதனால் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்த தந்தை தன்னால் மேலும் கஷ்டத்தை அனுபவிப்பதை சகித்துக் கொள்ள முடியாது லெனின் தற்கொலை செய்து கொள்கிறார்.

education-not-for-sale
கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசே கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக்கடனை வசூலித்துக் கடனைத் திருப்பி செலுத்து

பு.மா.இ.மு இந்த மரணத்தைத் தற்கொலையாக பார்க்கவில்லை. தனியார் கல்லூரிகளின் லாபவெறிக்கு தீனிபோடும் அரசு – பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் மூன்றும் சேர்ந்து நடத்திய படுகொலையாகவே கருதுகிறது. இதற்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறது.

ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையான கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் வாங்கும்படி அரசால் தள்ளப்பட்ட மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் என அறைகூவல் விடுக்கிறது.

கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசே – கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக்கடனை வசூலித்துக் கடனைத் திருப்பி செலுத்து என்று போராட மாணவர்களை அறைகூவி அழைக்கிறது.

இவண்,

த.கணேசன்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.

  1. இது அண்ணன் முகேஷ் அம்பானியின் கம்பெனி அல்ல! தம்பி அனில் அம்பானியுடையது! போட்டோ மாற்றப் பட வேண்டும்.

    தவிர, பையனின் தந்தை கொத்தனாரா? மேஸ்திரியா?

    சினிமா விரும்பி

  2. பல்லாயிரம் மாணவர்கள் கடன் வாங்கி கட்ட முடியாமல்,நாள் கடத்தி வங்கிகளிடம் அவகாசம் கேட் கும் போது, ஒரு மாணவன் தற்கொலை செய்தால் அது அந்த மாணவனின் தவறு… கடன் குடுத்தால் திருப்பி கேட் க்த்தான் செய்வான் பேங்க்காரன்… ஒரு வேளை ரிலையன்ஸ் ஆட் கள் கேட் காமல் ஸ்ட்டேட் பாங்க் ஆட் கள் பணத்தை கேட்டு இந்த மாணவ மாணஸ்த்தன் தற்கொலை செய்து கொண்டால், அதனை வினவு “நியாயப்படுத்துமா??? இந்த _______ இரண்டு அரியர்ஸ் வேற!!!.. வக்கில்லாதவன் கடன் வாங்கக்கூடாது… கடனை கட்ட முடியலைனா சாகவேண்டயது தான்.. இல்லை, மல்லையா மாதிரி பேங்க்காரனுக்கு புளிப்பு மிட்டாய் குடுக்க தெரிந்து இருக்கவேண்டும்…–

    • ரிலையன்ஸ்காரன் ஈவு இரக்கம் இல்லாம வசூலிப்பான் சார்! ஸ்டேட் பாங்க் அப்படியல்ல!

      சினிமா விரும்பி

      • மனைவியை அடமானம் வைத்து விளையாடி தோற்றான் தருமன் .
        மனைவியை துரியோதனன் என்ன செய்வான் என்று தெரிந்தும் , பகடையாகிய தருமனை நல்லவன் என்போம் , தனது உரிமையை செயல் படுத்திய துரியோதனனை தீயவன் என்போம் .

        ரிலையன்சு நிறுவனம் கொடுமை படுத்தி கடனை திரும்ப பெரும் என்பது தெரிந்தே விற்ற ஸ்டேட்டு வங்கி நல்ல வங்கி ?

  3. அரியர் இருக்கும்போதே பட்டதாரி ஆகி விட்டாரோ.. பரவால்ல நடத்துங்க கம்பெனிய

    • //அரியர் இருக்கும்போதே பட்டதாரி ஆகி விட்டாரோ///

      பட்டதாரி-க்கு மேல கோடு போட்டுகிடுங்க பாஸ்.

      அம்பானி கம்பெனி தான் நடத்தியிருக்கு. இதுல நீங்க வேற நடத்த சொல்றீங்களே…. பயமா இருக்கே!

  4. indian=psoradog வங்கிகள் கடன் கொடுப்பது மாணவனுக்கா?கல்வி வியாபாரிகளுக்கா?படிக்கக் கடன் கொடுக்கும் அரசுக்கு வேலை தரும் யோக்கியதை இல்லையே!கடனைத் திருப்பித் தராமல் டேக்கா கொடுக்க வழி சொல்லும் இந்துடியனே உன்னைப்போல் சுரட்டையாக வாழத் தெரியாத அவ மானஸ்தன் தான் லெனின்.லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளும் இப்படித்தான் உயிரைக் கொடுத்து மானம் காக்கின்றனர்.இண்டியனே வினவுக்குள் நீ ஒரு நல்ல காமெடியன்.

  5. //கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை.//

    அடிப்படை கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

    Admit your children in Government schools

Leave a Reply to Indian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க