privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவிஸ்வ இந்து ரவுடி பரிஷத்

விஸ்வ இந்து ரவுடி பரிஷத்

-

விசுவ இந்து ரவுடி பரிஷத்!
விசுவ இந்து ரவுடி பரிஷத்!

“துணிச்சலான ஒரு தலைவரை இழந்து தவிக்கிறோம். மத ரீதியாக இந்துத் தலைவர்களை குறிவைத்துத் தாக்குவது தொடர்கிறது. 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். உளவுத் துறை செயலிழந்து போய் விட்டது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர் கெட்டு விட்டது” என்று விஸ்வ இந்து பரிஷத்தின் தமிழகத் தலைவர் வேதாந்தம் ஒரு அஞ்சலியின் போது பேசினார். இந்த கசிந்துருகுதல் யாருக்காக?

கிருஷ்ணகிரி மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் தலைவரான சூரி, செப்டம்பர் 19, 2016 அன்று ஓசூர் நகரத்திலிருக்கும் அவரது ரியல் எஸ்டேட் அலுவலக வாசலில் படுகொலை செய்யப்பட்டார். வேதாந்தம் மலர் வளையத்துடன் “ஃபார்முலா அஞ்சலி” செலுத்தியது இந்த சான்றோருக்குகாகத்தான். இந்த கொலையை ஒட்டி ஓசூரில் இரண்டு நாட்கள் கடைகள் அடைக்கப்பட்டன.

போலீசும், ஊடகங்களும், ஃபேஸ்புக்கிலிருக்கும் இந்துத்துவ ஆட்களும் இந்தக் கொலையைச் செய்த ஜிகாதி யார் என்று தேடிக் கொண்டிருந்தார்கள். என்ன செய்ய, கொலை செய்தவர்களை விஸ்வ ஹிந்து பரிஷத்தே அனுப்பியிருக்கிறது. நம்ப முடியவில்லையா?

ஓசூர் அண்ணா நகரில் பிரபரமான சாராய வியாபாரியான கன்னையாவின் மகன்தான் பின்னர் சூரி என்று அழைக்கப்பட்டார். பேருந்து நிலையத்தில் சினிமா சி.டி கடை, பிறகு பைனான்ஸ், கட்டப் பஞ்சாயத்து என்று முக்கியமான ரவுடியாக வளர்ந்தார். ஒரு கொலை வழக்கின் முதல் குற்றவாளியாக சிறை சென்று பிணையில் வந்திருக்கிறார். இப்படியான தகுதிகளைப் பார்த்து வியந்த ஆர்.எஸ்.எஸ் கனவான்கள் சூரியை விஸ்வ இந்து பரிஷத்தின் மாவட்ட செயலாளராக நியமித்தனர். சனாதான தர்மத்தை காக்க இத்தகைய பக்கா ரவுடிஜிக்கள் தேவை என்பதை மனு முதல் கீதை வரை காலந்தோறும் வலியுறுத்துகின்றனர்.

இந்து இயக்க தலைவரானதும் ஓசூரில் விஸ்வ இந்து பரிஷத்தின் மாநில மாநாட்டை நடத்தி பார்ப்போரை வியக்க வைத்தார். ஒரு நகரத்து முன்னணி ரவுடி தலைவரானால் வசூல் என்ன, ஏற்பாடு என்ன எல்லாம் கச்சிதமாக நடக்கும் என்பதை சங்க பரிவாரத்து சான்றோர்கள் எவ்வளவு துல்லியமான யூகித்திருக்கின்றனர் பாருங்கள்!

இருப்பினும் பரிஷத்தில் கோஷ்டி மோதல் இல்லாமல் இல்லை. இவ்வளவு வசூல், காரியங்கள் இருக்கும் போது தொழில் போட்டி ஏற்படுவது சகஜம்தானே? சூரிக்கு போட்டியாக இருந்த கஜா பரிஷத்தின் நகர செயலாளராக இருக்கிறார். தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத்தின் சார்பாக சூரியும், அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத்தின் சார்பாக கஜாவும் மோதிக் கொண்டனர்.

2011 உள்ளாட்சித் தேர்தலில் இருவரும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரச்சினையில் மோதிக் கொண்டனர். சென்ற ஆண்டு சூரி கோஷ்டி கஜாவை வெட்டுகிறது. மகேஷ் எனும் கஜாவின் ஆள் கொல்லப்பட்டார். கஜா பிழைத்துக் கொண்டார். அந்த கொலைக்கு பழிவாங்கவே இந்தக் கொலை நடந்திருக்கும் என்பது ஊரறிந்த ஒன்று.

அதை ஆமோதிக்கும் வண்ணம் கஜாவும் தனது கூட்டாளிகளோடு போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.

இப்போது வேதாந்தத்தின் கண்ணீர் அஞ்சலியைப் பாருங்கள்! தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, இந்து தலைவர்கள் குறிவைத்து தாக்கப்படுவது, இன்னபிற அவரது கவலைகளை தீர்க்க வேண்டுமெனில் அன்னாரை கைது செய்வதும் அன்னாரது சங்க பரிவாரங்களை தடை செய்தால்தானே முடியும்?

வேதாந்தம் போன்ற விபூதிப் பழங்களும் சூரி போன்ற பக்கா ரவுடிகளும் இல்லாமல் விஸ்வ இந்து பரிஷத் இல்லை!

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட  குறுஞ்செய்தி.