privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅறை எண் 2008 : பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார் ?

அறை எண் 2008 : பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார் ?

-

PP Logo

பத்திரிக்கைச் செய்தி

 நாள் : 11.10.2016

 பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார்?

  • செப்டம்பர் 22 –ந்தேதி : ஜெயலலிதா அப்போலாவில் அனுமதிக்கப்பட்டார்.
  • செப்டம்பர் 23 –ந்தேதி : காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு.
  • செப்டம்பர் 24 –ந்தேதி : வழக்கமான உணவையே எடுத்துகொள்கிறார்.
  • செப்டம்பர் 25 –ந்தேதி : உடல்நிலை சீராக இருக்கிறது.
  • செப்டம்பர் 26 –ந்தேதி : விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்.
  • செப்டம்பர் 27 –ந்தேதி : இன்னும் சில தினங்கள் இருந்துவிட்டு
    தன் பணிகளுக்குத் திரும்புவார்.
  • செப்டம்பர் 28 –ந்தேதி : உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
  • செப்டம்பர் 29 –ந்தேதி : மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார் சசிகலா.
  • செப்டம்பர் 30 –ந்தேதி : லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் சென்னை வருகை.
  • அக்டோபர் 01 –ந்தேதி : அப்போலாவில் ஆளுநர் வித்யாசாகர்ராவ்.
  • அக்டோபர் 02 -ந்தேதி தொற்று நோய்க்கு சிகிச்சை
  • அக்டோபர் 03 –ந்தேதி : சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன – அப்போலாஅறிக்கை
  • அக்டோபர் 04 –ந்தேதி : லண்டன் சிறப்பு மருத்துவர் வருகை.
  • அக்டோபர் 05 –ந்தேதி : எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை
  • அக்டோபர் 06 -ந்தேதி: உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்.

 – இவையெல்லாம் அப்போலா அறிக்கைகள் அடிப்படையிலானவை.
(ஆதாரம் : ஜூனியர்விகடன் )

  •  அக்டோபர் 07 –ந்தேதி : முதல்வரின் உடல்நிலை படிப்படியாகத் தேறிவருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள், இதயச் சிகிச்சை நிபுணர்கள், செயற்கை சுவாச சிகிச்சை நிபுணர்கள், நோய்த் தொற்று சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்கள் ஆகிய மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் முதல்வர் இருக்கிறார். இந்த அப்போலோ மருத்துவ நிபுணர் குழுவுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர், மயக்க மருத்துவ நிபுணர், இதய சிகிச்சை நிபுணர் ஆகியேரைக் கொண்ட குழு முதல்வருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து விரிவாக ஆய்வுசெய்தனர்.

    (ஆதாரம் : திஇந்து-தமிழ்)

கடைசியாக வந்த அப்போலோ அறிக்கை அடிப்படையிலான தமிழ் இந்து செய்தியில் இருந்து ஜெயலலிதாவுக்கு என்னென்ன நோய்கள் என்று பாமரர்களும் அறிந்து கொள்ளமுடியும்.

இப்போது சொல்லுங்கள் – யார் பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள்?

 அப்போலா மருத்துவர்களா? ஆளுநரா? அமைச்சர்களா? ஆளும்கட்சிக்காரகளா? அப்போலாவில் காவலர்கள் அனுமதிக்கும் இடம்வரை போய் முதல்வர் உடல் நிலைதேறி வருகிறது; நல்ல சிகிச்சை அளிக்கைப்படுகிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள் எனப் பேட்டி கொடுக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களா?

இல்லை – வதந்திகளைப் பரப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் சமூக ஊடகத்தாரா ?

இவண்
தோழர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள்அதிகாரம், தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321