privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாவிரி : சென்னை - விழுப்புரம் ரயில் மறியல் - படங்கள்

காவிரி : சென்னை – விழுப்புரம் ரயில் மறியல் – படங்கள்

-

காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை வஞ்சிக்கும் காங்கிரஸ் பிஜேபி-யை புறக்கணிப்போம் !
காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபியை தமிழகத்தில் இருந்தே விரட்டியடிப்போம் !

தமிழகம் முழுவதும் 18.10.2016 மக்கள் அதிகாரம் ரயில் மறியல் போராட்டம் !

1. சென்னை

க்கள் அதிகாரம் சார்பில்  சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.வெற்றிவேல் செழியன் தலைமையில்எழும்பூர் ரயில் நிலையத்தில் 18.10.2016 அன்று ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது.

மக்கள் நலக்கூட்டணியினர் ரயில் நிலையத்திற்குள் போராடிக் கொண்டு இருந்தனர். அந்த இடத்திற்கு சற்று முன்னதாக தாசப்பிரகாஷ் சந்தோஷ் நகர் வழியாகச் சென்று பெண்களும் குழந்தைளுமாக சுமார் 100 பேர்கள் உள்ளூர் ரயில்களை மறித்தனர். ரயிலின் மீதேறி முழக்கமிடத் தொடங்கினர். ரயில் பயணிகளிடம் போராட்டத்தின் நியாயத்தை விளக்கி துண்டறிக்கைகளை கொடுத்தனர். அப்போது பலர் ரயிலை விட்டு இறங்கிச்சென்றனர்.

போலீசு மற்றவர்கள் போல போட்டோவுக்கு போஸ் கொடுத்து செல்ல மாட்டோம் எனத் தெரிந்து அடாவடியாக இழுத்துச்சென்றது. இதைக் கண்ட முதியவர் ஒருவர் ஏய்யா காவிரித்தண்ணிய திறக்கச்சொல்ல முடியுமா?  என்று போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அடிமைகளைப் பார்த்து பழக்கப்பட்ட போலீசு சும்மா இருக்குமா? அவரை சராமரியாக அடித்தது. இதைப்பார்த்த மக்களும் தோழர்களும் தண்டவாளங்களை விட்டு அகல மறுத்தனர்.

தோழர்களை கொத்தாகத் தூக்கி இன்னொரு தண்டவாளத்தில் வீசுவது, ஓடும் ரயிலுக்கு அருகில் தூக்கிப் போட்டது .இதைப்பார்த்து மற்றவர்கள் பயப்படுவார்கள் என மனப்பால் குடித்தது. குளவிக்கூட்டிற்குள் கை வைத்தது போல யாரையும் தொடமுடியவில்லை. அடுத்த கட்டமாக தனது பொறுக்கித்தனத்தை காட்டத் தொடங்கியது. ஆண் போலீசு  பெண்களின் உடையை இழுப்பதும் கைகால்களை முறுக்கியும் வெறியாட்டம் போட்டது.

தேவடியாளுங்களே  காசு வாங்கிட்டு ஆடுறீங்க என கூச்சல் போட்ட போலீசு அதிகாரி வினோத். ” என் பேரை நோட் பண்ணுடா என்னை ஒண்ணும் புடுங்க முடியாது “என்றான்.இன்னொரு போலீசு   “ ஏண்டி இப்படி ஆட்டம் போடுறீங்க” என ஒரு பெண் தோழரை ஆபாசமாகப் பேசிக்கொண்டிருந்தான்.  வீடியோ கேமராவைப் பார்த்ததும் ஏம்மா மரியாதையா பேசும்மா என்று சீன் போட்டான்.

கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ரயில் நிலையமே ஸ்தம்பித்தது. காவிரி நீரில் நமது உரிமையைப் பறிப்பது  மோடி அரசு மட்டுமல்ல ஆத்தா போலீசும் தானே.

அடிப்பதாலும் ஆபாச வார்த்தைகளால்  திட்டுவதால் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் அடங்கிப்போகலாம்.தோற்றுப்போன எதிர்நிலை சக்தியாகிப்போன இந்த அரசுக்ககட்டமைப்பை எறியத்துணிந்த கூட்டத்திற்கு போலீசு தாக்குதலும் ஆபாச ஏச்சுகளும் எம்மாத்திரம்? இனி தமிழகத்தின் உரிமையை மீட்க எப்படிப்பட்ட போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதாக இப்போராட்டம் அமைந்தது.

பத்திரிக்கை செய்தி :

chennai egmore

2. விழுப்புரம்

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாயிகள் சங்கம் தொடர்ச்சியாக போராடி வருகிறது. கட்சிகளும் தனித்தனியாக போராடி வருகிறார்கள். ஆனால் எதற்கும் மசியாத மத்திய அரசு என்னை எவனாலும் அசைக்க முடியாது என்று  தனக்கே உரிய பார்ப்பன திமிரோடு  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என  மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை  தனது காலுக்கு சமமாக கூட மதிக்க வில்லை மத்திய அரசு.  தமிழக அரசோ நிற்க கூட வக்கில்லாமல் அப்போலாவில்  படுத்து கிடக்கிறது.

இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள  அனைத்துக்கட்சிகளும் கூடி 17,18 அன்று தமிழகம் முழுவதும் இரண்டு நாள் 48 மணி நேரம்  ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்தனர். 16 ம் தேதி  இந்த ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி தனது உண்மை முகத்தை அம்பலப்படுத்தி காட்டியது பிஜேபி.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் 18.10.2016 இன்று ரயில் மறியல் போராட்டம்  நடத்துவது  என மக்கள் அதிகாரம் முடிவெடுத்தது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமையில்  நடைபெற்றது.

இந்த போராட்டத்தை நடத்த விடக்கூடாது என்பதற்காக ரயில் நிலையம் நுழைவு வாயில் எங்கும் தடுப்பு அரண்களை அமைத்து காவல்துறையை போட்டு வைத்திருந்தது. காட்டி கொடுப்பதற்காக கியூ பிரிவு போலீசாரையும் ஆங்காங்கே போட்டு வைத்திருந்தனர்.

சரியாக 10.30 மணிக்கு  சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் செல்லும் வண்டி வந்ததும் ஆங்காங்கே இருந்த தோழர்கள் கூடியதும் செய்வதறியாமல் திகைத்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களிடம் கைதாகுமாறு கேட்டது. முடியாது என்று மறுத்த தோழர்கள் முழக்கமிட்டவாறே ரயில் முன் அமர்ந்து விட்டனர்.

இதனை சற்றும் எதிர் பாராத அம்மா போலீசோ தோழர்களை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றது. பெண் தோழர்களை தூக்கி சென்ற பெண் போலீசிடம், உங்களுக்கும் சேர்த்து தானே போராடுகிறோம் என்று கூறி தோழர்கள்   வாக்குவாதம் செய்த  போது ” எங்களை என்ன பண்ண சொல்றிங்க, நாங்களும் அவுத்து போட்டு போராட சொல்றியா” என்று ஆபாசமாகவும் திமிராகவும் பதிலளித்து பெண் போலீசு. போலீசு என்றாலே ஆளும் வர்க்க கைக்கூலி தானே இதில் ஆண் – பெண் என்ற வேறுபாடே இல்லை.

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு தோழர்களை  கடுமையாக தாக்கியது. இரண்டு தோழர்கள் போராட்ட களத்திலேயே மயங்கி விழுந்தனர். இதனையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இறுதி வரை உறுதியாக போராடிய    அனைத்து தோழர்களையும் கைது  செய்வதற்குள் கதி கலங்கியது அம்மா போலீசு.

போராட்டத்தில் ஈடுபட்ட  கடைசி தோழரை கைது செய்யும் வரை மக்கள் கூட்டம் கலைந்து செல்லாமல் நின்றிருந்தனர். மக்கள் அதிகாரம் தோழர்களின் போராட்ட உணர்வை கண்டு உணர்வடைந்தனர்.

இப்போராட்டத்தில் விவசாயிகள், பெண்கள் என 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்களுடன்  மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவும்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்திரிக்கை செய்தி :

Villupuram

Villupuram 1

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.