privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிவாதங்களில் ஆர்.எஸ்.எஸ் அடாவடி - அனைத்துக் கட்சியினர் கண்டனம் !

விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ் அடாவடி – அனைத்துக் கட்சியினர் கண்டனம் !

-

letter-head28.10.2016 அன்று மாலை, சென்னை, கோடம்பாக்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அலுவலகத்தில், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போரிடையே கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்குபெற்றோர்

1. கோபண்ணா, காங்கிரஸ் கட்சி
2. மா. உமாபதி, தி.மு.க
3. இ.பரந்தமன், தி.மு.க
4. கலி.பூங்குன்றன், திராவிடர் கழகம்
5. அ.அருள்மொழி, திராவிடர் கழகம்
6. சு.குமாரதேவன், திராவிடர் கழகம்
7. மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
8. அருணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா)
9. த. கனகராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா)
10. வன்னி அரசு, விடுதலைச் சிறுத்தைகள்
11. ஷா நவாஸ், விடுதலைச் சிறுத்தைகள்
12. ஓவியா, புதிய குரல்
13. வே. மதிமாறன், எழுத்தாளர்
14. சுப.வீரபாண்டியன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

28-10-2016 அன்று சென்னை கோடம்பாக்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அலுவலகத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போரிடையே நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இன்றைய கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற, பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், எழுத்தாளர்களுமாகிய நாங்கள், ஊடகங்களின் அழைப்பை ஏற்று, பல்வேறு தொலைக்காட்சிகள் நடத்தும் சமூக, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று, எங்களின் பார்வைகளையும், கருத்துகளையும் பதிவு செய்து வருகிறோம். அவ்விவாதங்களில் பங்கேற்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினர் பிறர் தம் கருத்துக்களைச் சொல்லவிடாமல், தடுத்தும், நாகரிகமின்றியும், அடாவடித்தனமாகவும், மிரட்டல் தொனியிலும், விவாதத்தை திசை திருப்பும் போக்கில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை முன் வைத்தும் பேசி வருகின்றனர்.

தொலைக்காட்சியில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் இப்போக்கினை தொலைக்காட்சியினர் முறைப்படுத்த வேண்டும் என்றும், ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அவ்வாறின்றி, ஒரு பக்கச் சார்பாகவே தொடர்ந்து நடந்து கொள்வார்களெனில் அத்தகைய தொலைக்காட்சி விவாதங்களின் பங்கேற்பது குறித்து நாங்கள் பரிசீலனை செய்ய நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்
சுப. வீரபாண்டியன்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை