ஆட்டோ சங்கர், விஜய் மல்லையா, ஈமு கோழி அதிபர், மகா பெரியவா ஜெயேந்திர சரஸ்வதி போன்ற ‘ஆளுமைகள்’ அனைவரையும் சேர்த்து செய்த கலவைதான் – டொனால்ட் டிரம்ப். குடியரசுக் கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் டிரம்ப்.
டிரம்பின் வாய் ஒரு விசேடமான உறுப்பு. பொதுவாக மூளையில் உற்பத்தியாகும் சிந்தனைகளை வெளியிடும் உறுப்பாக அறியப்படும் வாய், டிரம்பிடம் வேறு வகையில் செயல்படுகின்றது. அவரது வாய் நாறத்தனத்தின் ஆழ அகலம் என்னவென்பதையும், மூளையின் தொடர்பின்றி அதற்கென்றே தனியாக கருத்துக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளதா எனவும் நாசா விஞ்ஞானிகளாலேயே கண்டிபிடிப்பது சிரமம். நாற்பதாண்டு கால தொழில் நடவடிக்கைகள் அனைத்தையும் தனது வாயாலேயே அளந்துள்ளார் திருவாளர் டிரம்ப்.
எண்ணற்ற சந்தர்ப்பங்களில் பெண்களைக் குறித்து டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் அவரது தனிப்பட்ட மைனர் வாழ்க்கையிலிருந்து வருகின்றன. அமெரிக்க விஜய் மல்லையாவான டொனால்ட் டிரம்ப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருந்தாலும், அவருக்கு மனநிறைவை அளித்த தொழில்களாக சூதாட்ட விடுதிகளையும், அழகுப் போட்டிகளையுமே குறிப்பிடுகிறார். டிரம்பின் பழைய பேட்டி ஒன்றில், தனது கண்களுக்கு அழகு மட்டுமே திருத்தமாக தெரியும் எனவும், பெண்களின் மார்பகங்கள் தனக்கு எண்ணற்ற கற்பனைகளை தோற்றுவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்……
தங்கள் நாட்டின் அதிபர் பதவிக்கு பொருத்தமானவராக அமெரிக்க முதலாளி வர்க்கத்தால் டொனால்ட் டிரம்ப்பைப் போன்ற கழிசடையையே உற்பத்தி செய்ய முடியும் என்றால் உலக முதலாளித்துவத்தின் கோபுர கலசமாக அமெரிக்கா இருப்பது நியாயம்தானே?
இன்று உலகின் மிக பொன்னான நாள். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டானல்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த தகவலை மிக்க மகிழ்ச்சியுடன் நான் அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்கிறேன். தேசியவாதமே என்றும் வெல்லும் என்பதற்கு பிரிட்டனின் பிரெக்ஸிட் நிகழ்விற்கு பிறகு இது ஒரு சிறந்த வரலாற்று நிகழ்வாகும். இந்த வெற்றி ட்ரம்பிற்கு கிடைத்த வெற்றி மற்றும் அல்லாமல் பைபிளை நம்புவோருக்கும் சேர்த்து கிடைத்த வெற்றி.
அடப்பாவமே….. பெண் பித்தன் டானல்டு டிரம்ப் இறைத் தூதர் ஏசுவின் சீடரா ரபீக்க மேரி? பாவம் அமெரிக்க கிறிஸ்துவர்கள்….! ஆமாம் சாத்தான் எப்போது ஏசுவின் சீடன் ஆனது மேரி..? சொல்லவே இல்லையே நீங்கள் !
திரு Rebecca Mary அவர்களே, உங்களை நினைத்துப் பரிதாபப்படுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை. இந்து மதவாதிகள் தீவிரமாக ஆதரிக்கும் டொனால்டு டிரம்பை பைபிளை நம்புவோருக்கு கிடைத்த வெற்றி என்று வாய் கூசாமல் உங்களால் எப்படிக் கூறமுடிகிறது?
Trump Will Embrace Hindu Culture and Give up Beef: Hindu Mahasabha Leader
http://www.news18.com/news/india/donald-trump-will-embrace-hindu-culture-and-stop-eating-beef-hindu-mahasabha-leader-1310204.html
அட அடா ரியல் எஸ்டேட் மபியா டானல்டு டிரம்ப் தான் பைபிளின் விசுவாசியா…? பைபிளை என்ன மாற்றி சாத்தான்களின் வேத நூலாக மாற்றப் போகின்றீர்களா மேரி?