privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் !

மோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் !

-

“கட்சிகாரங்களுக்கு தகவல் சொல்லி முன்னாடியே அவங்க பணத்தை மாத்திருப்பாங்கப்பா. நாமதான் கஷ்டப்படனும்”

ஐநூறு, ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த மறுநாள் அதன் பாதிப்புகள் குறித்து கேட்டபோது மளிகை கடை அண்ணாச்சி ஒருவர் கூறியது.

bjp_tweet
பா.ஜ.க-வின் பஞ்சாப் தலைவர்களில் சஞ்சீவ் கம்போஜ் அவரது டிவிட்டர் பக்கத்தில் புது நோட்டையே காட்டிவிட்டார். நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஊடக பிரச்சாரகர்கள் உள்ளிட்டு பலரும் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பை மிக இரகசியமாக  செயல்படுத்தப்பட்ட துல்லிய தாக்குதல் என்று வருணித்தார்கள். நடுத்தரவர்க்கமும் இப்படி தான் நினைத்திருந்தார்கள். தற்போது அண்ணாச்சி தன் அனுபவத்தில் கூறியது சரிதான் என்பதை உறுதி செய்யும்விதமாக ரூபாய் நோட்டு விவகாரத்தில் நடந்திருக்கும் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டது நவம்பர் 8-ம் தேதி. ஆனால் நவம்பர் 6-ம் தேதியே பா.ஜ.க-வின் பஞ்சாப் மாநில தலைவர்களில் ஒருவரான சஞ்சீவ் கம்போஜ் என்பவர் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தகவல் மட்டுமல்ல புதிய ரூ.2000-த்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதோடு இந்த 2016 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தின் அளவு மிக அதிகமாக அதிகரித்திருக்கிறது. அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தான் வைப்பு தொகை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக மார்ச் காலாண்டில் 2 லட்சம் கோடி, ஜூன் காலாண்டில் 1 லட்சம் கோடியாக வளர்ந்து வந்த வைப்பு தொகை இந்த ஜூலை காலாண்டில் ஆறு லட்சம் கோடி அளவிற்கு வளர்ந்துள்ளது. பார்க்க firstpost  – இணையத் தளத்தில் வந்துள்ள செய்தி.

Quarterly bank deposits
இந்த கலாண்டில் ஆறு லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ள வைப்புத் தொகை. ( நன்றி : firstpost )

ஆக பா.ஜ.க தலைவர்களுக்கு அரசின் முடிவு முன்னரே தெரிந்திருப்பதும், அதே சமயத்தில் டெபாசிட் தொகை வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக அதிகரித்ருப்பதையும் இணைத்து பார்க்கும் போது பா.ஜ.க-வின் கருப்புப் பண முதலைகளுக்கு முன்னரே தகவல் கொடுத்துவிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. மோடி அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாள் மேற்கு வங்க பா.ஜ.க-வின் வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறது, மார்க்சிஸ்டு கட்சி

இதுமட்டுமல்ல் இந்தி பத்திரிகையான தைனிக் ஜார்கன்,அக்டோபர் 27-ம் தேதியே அரசின் புதிய ரூபாய் நோட்டு குறித்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியிலிருக்கும் தனது தொடர்புகள் மூலம் இத்தகவலை பெற்று வெளியிட்டிருக்கிறார் பத்திரிகையாளர் பிரஜேஷ் துபே.

கருப்பு பணம் என்பது பெருமளவில் வெளிநாட்டு வங்கிகளிலும், அந்நிய நிதி மூலதனமாகவும் பல்வேறு பெயர்களில் பங்கு சந்தைகளிலும் சுற்றிவருகிற ஒன்று. அதே நேரம் ரூ.500, ரூ.1000 என்று பணமாக பதுக்கி வைத்திருப்பது சிறிய அளவிலானது. அதனால் மோடியின் நடவடிக்கை முதலாளிகளின் கருப்பு பணவிசயத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பதும் இது மக்கள் மீதான தாக்குதல் என்பதை முன்னரே எழுதியிருந்தோம். ஆனால் உள்நாட்டில் இருக்கும் இந்த சிறிய அளவு கருப்புப் பணத்தைக் கூட பா.ஜ.கவின் கூட்டாளிகளான முதலாளிகள், தொழிலதிபர்கள், கட்சிப்பிரமுகர்கள் வெள்ளையாக்கி வங்கிகளில் முன்னெச்சரிக்கையாக சேர்த்திருப்பது அம்பலமாயிருக்கிறது.

ஆக இந்த சர்ஜிக்கல் ஸ்டைரக் நடத்தப்பட்டிருப்பது மக்களிடம் மட்டும் தான். மக்களுக்கத்தான் இந்த செல்லாத நோட்டுப் பிரச்சினை தெரிந்திருக்கவில்லை. ஆனால் கருப்பு பண முதலைகளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. அதனால் தான் எந்த கருப்பு பண முதலைகளும் வங்கியின் வாசலில் நிற்கவில்லை. கருப்பு பணத்தின் மூலவர்களில் ஒருவரான ரஜினிகாந்த் உள்ளிட்டு சினிமா பிரபலங்கள், ஐ.பி.எல் விளையாட்டு வீரர்கள் மோடியை ஆதரிக்கிறாரகள். ஆனால் அப்பாவி மக்கள் தான் வங்கியில் நிற்கிறார்கள். மோடி அறிவித்த இரவில் பணம் இருந்தும் சோறு கிடைக்காமல் இருந்தார்கள்.

இது தொடர்பாக ஊடகங்களில் பேசிய பா.ஜ.க பேச்சாளர்கள் உள்ளிட்டு சிலர் ஒரு சிறிய அளவிலாவது கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறிவந்தார்கள். அப்ப்டி சிறிய அளவில் கூட எதையும் மோடியின் அறிவிப்பு சாதிக்கவில்லை என்பதோடு அதிலும் ஊழலும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இத்தனையும் செய்துவிட்டு ஐநூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என மோடி அறிவித்திருப்பது கருப்புப் பணத்தை திரும்ப கொண்டு வரும் என்றும் அதை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள். அர்னாப் முதல் பாண்டே வரை இதே பல்லவியை சலிக்காமல் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

BJP (Bharatiya Janata Party) spokesperson Meenakshi Lekhi during a press conference in Kolkata on Oct.27, 2013. (Photo: IANS)
பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி

ஆனால் பா.ஜ.க – கட்சியே இந்நடவடிக்கை கருப்பு பண விவகாரத்தை திசை திருப்பக்கூடிய செயல் என்றும், பொதுமக்களுக்கு எதிரான ஒன்று என்றும் அறிவித்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதிர்ச்சியடைய தேவையில்லை. எதிர்கட்சிகளாக இருக்கும் போது தவிர்க்க இயலாமல் சில உண்மைகளை பேசுவது அவசியமாகிறது. அப்படியான சூழலில் பா.ஜ.க தெரிவித்த கருத்து தான் அது.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் முன்னர் காங்கிரஸ் ஆட்சியின் போது 2005-ம் ஆண்டில் முந்தைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ன மாற்றப்போவதாக அறிவித்தார்கள். அப்போது பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி தெரிவித்த கருத்துக்களைப் பார்ப்போம்.

“நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது. சகல துறைகளிலும் அரசு திணறி வருகிறது. வாராக்கடன் அதிகரித்து பொருளாதாரம் சிக்கலில் இருக்கிறது. இச்சூழலில் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து மாற்றும் அரசின் மாய்மாலம், மக்களின் கவனத்தை திசை திருப்பக்கூடிய செயல்.

ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவிக்கும் ப.சிதம்பரத்தின் இந்த திட்டம் பணக்காரர்களுக்கானது. மக்களுக்கு எதிரானது. இத்திட்டத்தின் மூலம் சுவிஸ் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொண்டு வரமுடியாது. அதே சமயத்தில் வங்கி கணக்கு இல்லாத ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். தங்கள் பணத்தை அமெரிக்க டாலரிலும், யூரோவிலும், பவுண்டிலும் வைத்திருப்பவர்களை பாதிக்காது, ஆனல் சாதாரண மக்களின்ஒவ்வொரு பைசா சேமிப்பையும் பாதிக்கும்.

இது போன்ற திசை திருப்பும் நடவடிக்கையாயால் படிப்பறிவில்லாத, வங்கி வசதியில்லாத சாதரண மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இத்திட்டம் ஏழைகளுக்கு எதிரானது. 65% இந்திய மக்கள் வங்கியில்லாமல் ரூபாய் நோட்டாகத்தான் தங்கள் பணத்தை சேமிக்கிறார்கள். சிறிய அளவில் சேமிப்பு வைத்திருப்பவர்கள், வங்கி கணக்கு இல்லாதவர்கள், தங்கள் சிறிய வாழ்நாள் சேமிப்பை வைத்திருப்பவர்கள் இதன் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். இத்திட்டம் பொதுமக்களை இடைத்தரகர்களுக்கு இரையாக்கும்.

இத்திட்டம் கருப்புப் பணத்தை ஒழிக்காது. கருப்புப் பண முதலைகள் எந்த சிரமும் இல்லமால் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்வார்கள். அதற்கு தேவையான வேலைகளை செய்துகொள்ள ஆட்களை அமர்த்தி பணத்தை மாற்றிக்கொள்வார்கள்.

சுவிஸ் எச்.எஸ்.பி.சி வங்கி கணக்குகளின் விவரங்கள் அரசிடம் இருக்கிறது. ஆனால் அதை வைத்து கருப்பு பண முதலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது.”

ஆக தாங்கள் தற்போது எடுத்துள்ள நடவடிக்கை எத்தையது என்பதையும் அதன் தாக்கம் என்ன என்பதுமல்லாமல் அதன் நோக்கத்தையும் தன் வாயிலேயே அறிவித்திருக்கிறார்கள். மக்களை வதைப்பதில் இவர்கள் எவ்வளவு கைதேர்ந்தவர்கள் என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும் ? வீடியோவை பாருங்கள் பகிருங்கள்.

 

மேலும் தகவல்கள் :

  1. மக்களும் ,சிறு வியாபாரிகளும் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லும்னு அறிவிச்சு.

    அரசுக்கு கருப்பு பணம் தனே வெணும் அதை நாங்க மீட்கறோம்னு சொல்லி அவர்களின் கம்பேனியை முற்றுகை இட்டா என்ன ஆகும். இருக்கவெ இருக்கு எஸ் ஆர் எம் ,ஜே பி ஆர் , போன்ற கல்லூரிகள்,அப்புறம் எஸ் ஆர் வி போன்ற பள்ளிகள்.வைகுண்ட ராஜன் ,மணல் கொள்ளையர்கள்,பி ஆர் பி பழனிச்சாமி ஆகியோர்களின் கம்பேனிகள்.

    • வாய்ப்பிருக்கிறது நாகராஜ்.பெரும்பாலான சாமான்ய மக்களின் நலன் களை தொடர்ந்து புறக்கணித்து சிரமங்களையும் நெருக்கடிகளையுமே அவர்களை அனுபவிக்க வைத்து வாழ்வதும் வளம்பெற்று இருப்பதும் ஒரு சிறு கூட்டம்.எதற்க்கு இப்படி செத்து செத்து பிழைத்துக்கொண்டிருப்பது? யார் நலனுக்கோ செயல் படும் இந்த அரசாங்க பிடியிலிருந்து விலகி நமக்குள்ளேயே இயங்கி கொண்டிருக்க வேண்டியதுதான்.

  2. மிக முக்கியமான கட்டுரை. மோடியின் இந்த 500 ,1000 ரூபாய் நோட்டுகளை முடக்கியதில் ஏதோ மக்களை திசை திருப்பி இந்த நாட்டை அந்நிய மூலதனத்திற்கு அடக்க வைக்க நினைக்கும் அரசியல் சதி இருக்கோமோ என தோன்றுகிறது.

  3. ஐயா சாமிகளா சில மாதங்கள் முன்பு தானே அரசு கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் தங்கள் பணத்திற்கு amnesty அறிவித்தார்கள். அப்போது வங்கிகளில் டெபாசிட் ஆன பணம் தானே இது இந்த சின்ன விஷயம் கூட தெரியாமல் மோடி சதி, பிஜேபி சதி என்று சொன்னால் என்ன அர்த்தம்.

    மேலும் வங்கிகளில் பணம் டெபாசிட் ஆகிறது என்றால் அது வெள்ளை பணம் தானே ??? இல்ல வங்கி பணமும் கருப்பு தாணு சொல்ல போறிங்களா ?

    மோடி என்ன செய்தாலும் அதில் நாட்டு நலனை பார்க்காமல் வெட்டி அரசியலுக்காக எதிர்ப்பது சரியல்ல

    உங்களின் இந்த கட்டுரை தவறு

    • மோடி கருப்பு பணம் வைத்து உள்ளவர்களுக்கு கொடுத்த பொது மன்னிப்பை நியாயப் படுத்தும் Mr blackmoney மணிகண்டன் அவர்களே…,

      மோடி ஆட்சிக்கு வந்தது முதல் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுக்கொண்டு கருப்பு பண முதலைகளுக்கு ஆதரவாக தான் செயல்பட்டுகொண்டு உள்ளார் என்பதனை எப்படி மறந்தீர்கள்? ஆனாலும் அப்போது எல்லாம் வங்கியில் டெபாசிட் ஆகாத அந்த கருப்புப் பணம் இப்போது இந்த இந்த ஜூலை காலாண்டில் ஆறு லட்சம் கோடி அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதனையும் எப்படி மறந்தீர்கள் மணிகண்டன்?

      யார் கொடுத்த ரகசிய செய்தியின் அடிப்படையில் இந்த வைப்புத் தொகை வங்கிகளுக்கு வந்து உள்ளது மணிகண்டன்? மோடியா அல்லது மோடியின் அடிமை மந்திரிகளின் ரகசிய செய்தியா? யார் கொடுத்த செய்தியின் அடிப்படையில் ஆறு லச்சம் கோடிகள் வங்கியில் டெபாசிட் ஆகியுள்ளது ?

    • மணிகண்டன்…,அடிப்படை பொருளாதார அறிவு இன்றி வினவில் வந்து பேசிக்கொண்டு உள்ளீர்கள்…. வங்கியில் வைப்புத் தொகையாக இருக்கும் பணம் எல்லாம் வெள்ளை என்று யார் கூறியது உங்களிடம்..? கருப்புப் பண சுழற்சியின் ஒரு கட்டம் தான் அந்த கருப்பு வங்கியில் வைப்புத் தொகையாக நிற்பது… இந்த எளிய உண்மையை கூட அறிந்துக்கொள்ளாமல் எப்படி பேசிக்கொண்டு உள்ளீர்கள்? கருப்புப் பணம்…. ஆடிட்டர்களின் பித்தலாட்டங்கள்…. அதற்கு பின் வங்கிக்கு அந்த பணம் வந்து வைப்புத் தொகையாக டெபாசிட் ஆவது இதுவெல்லாம் பொருளாதார ரீதியில் உயரத்தில் உள்ள ,மிக உயரத்தில் உள்ள சீமான்களின் வேலை என்பதனை கூட அறியாமல் மக்களை தெருவில் நிற்க வைக்கும் மோடிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிகொண்டு உள்ளீர்கள்

    • மணிகண்டன்…,மோடியின் உள்நாட்டு பொருளாதார யுத்த சவால்களை மனித நேயத்தால் எதிர்கொள்ளும் தமிழகம்……..!
      ——————————————
      மோடியின் ஈவு இரக்கமற்ற இந்த செயலை எதிர் கொள்ளும் மனிதாபிமானத்தின் முற்றமாக தமிழ் நாடு இருக்கிறது…… தமிழர்கள் ,மலையாளிகள் ,சேட்டுகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் மக்கள் மோடியின் உள்நாட்டு பொருளாதாரப் போரை எதிர்கொள்கின்றார்கள்… வியாபார பரிவர்த்தனைகளில் மனித நேயமும், ஈவு இரக்கமும் ,நெளிவு சுளிவுகளும் இழைந்து ஓடுகின்றது. தமிழர் மளிகைகடை காய்கறிகடை கோழி கடை ,சேட்டு மளிகைகடை, சேட்டன் டீ கடை எங்கும் மக்களும் சரி வியாபாரிகளும் சரி காசு கொடுத்தோ அல்லது காசு கொடுக்காமலோ கணக்கு வைத்தோ வியாபார பரிவர்தனை செய்து கொள்கிறார்கள்… பாக்கி இல்லாவிட்டாலும் கணக்குல வேச்சிக்கிங்க அண்ணாச்சி …, சேட்டு என்று கூறிவிட்டு மக்கள் செல்கிறார்கள்….செயற்கையாக உள் நாட்டு பொருளாதார யுத்தத்தை தொடங்கி விட்டு ஜப்பானுக்கு ஓடி விட்டால் மக்கள் என்ன முடங்கி விடுவார்களா மோடி ஜீ ? அடுத்து என்ன தாக்குதலை மக்களின் மீது செய்யப்போகின்றார் மோடி?

  4. “கறுப்பு பணம் ஒழிந்துவிட்டது. புதிய இந்தியா பிறந்து விட்டது. மோடி சாதித்துவிட்டார்” என நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே!

    முதலில் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பு சுமார் 16 லட்சம் கோடி. அதில் 500 மற்றும் 1000 ரூபாயில் இருக்கும் பணம் சுமார் 13 லட்சம் கோடி.
    அதில் கறுப்பு பணம் 10 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம். அதாவது சுமார் 1.3 லட்சம் கோடி.

    அதிலும் சிலர் முன்கூட்டியே கறுப்பை வெள்ளையாக மாற்றியிருப்பார்கள். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக RBI தகவல் உள்ளது. RBI இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

    ஆகவே மீதம் உள்ள கறுப்பு பணம் சில ஆயிரம் கோடிகள் மட்டுமே. அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னர் இதில் சில கோடிகள் வெள்ளையாக மாறியிருக்கும். எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் அழிக்கப்பட்ட கறுப்பு பணம் சில கோடிகள் மட்டுமே.

    ஆனால் வெளிநாடுகளில் இந்திய கறுப்பு பண முதலைகள் பதுக்கியுள்ள பணம் 100லட்சம் கோடிக்கும் அதிகம் இருக்கும். நம்மூரு நத்தம் விஸ்வநாதனே 1000 கோடியை எளிதில் குவிக்க முடிகிறது. இந்த மாதிரி நத்தம் விஸ்வநாதன்கள் நாடு முழுக்க உண்டு. அரசியல், சினிமா, தொழில் என பல வழிகளில் சேர்த்து பதுக்கிய பணம் வெளிநாட்டு வங்கிகளில் பத்திரமாக உள்ளது.

    கறுப்பு பணம் ஒழிப்பில் அரசுக்கு அக்கறை இருந்தால் இந்த 100 லட்சம் கோடியைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து சில கோடி பணத்தை மட்டும் அழித்துவிட்டு தன்னை கறுப்பு பண அழிப்பாளராகக் காட்டிக் கொள்வது மக்களை ஏமாற்றும் செயல்.

    “இல்லை, வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க மோடி ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்” என நம்பினால் நீங்கள் அப்பாவியே! வெளிநாட்டு வங்கி ஒன்று தங்களிடம் வங்கிக்கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை அரசிடம் ஒப்படைத்தது. அந்தப் பெயர்களை இன்றுவரை வெளியிடவில்லை மோடி அரசு. பெயரையே வெளியிடாதவர்கள் எப்படி அவர்களிடமிருந்து பணத்தை மீட்பார்கள்?

    அது மட்டுமல்ல, இந்திய வங்கிகளில் 500 கோடிக்கும் அதிகமாக வாராக்கடன் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை அரசிடம் கேட்டது உச்ச நீதிமன்றம். அந்தப் பட்டியலைக் கொடுக்க மறுத்ததும் மோடி அரசுதான்.

    “மோடி என்ன செய்தாலும் குத்தம் சொல்வதுதான் உங்கள் வேலையா?” என நீங்கள் எதிர்கேள்வி கேட்கக் கூடும். நிச்சயம் அப்படி இல்லை. தேர்தலில் வாக்களித்தப்படி விலைவாசி குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, 15லட்சம் டெபாசிட் ஆகியவற்றை செய்துகாட்டும் பட்சத்தில் நிச்சயம் மோடி மீது விமர்சனங்கள் வராது.

    ஆனால் இதையெல்லாம் ஒருகாலமும் மோடி அரசால் செய்ய முடியாது. ஏனெனில் இங்கு உண்மையில் ஆட்சி செலுத்துவது கார்பரேட் முதலாளிகள்தான்.

    “அது எப்படி? நாம மோடிக்குதானே ஓட்டு போட்டோம்? அவர்தானே பிரதமர்” என கேட்கும் அப்பாவியா நீங்கள்? உங்களுக்கு இரு உதாரணங்கள் சொல்கிறேன்.

    1. மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் கம்பெனியிடம் கொடுத்தது மோடி அரசு. அதற்கு ஊதியமாக வசூலிக்கும் பணத்தில் கிட்டத்தட்ட 40% பணம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக மாணவர்களின் கல்விக்கடனைல் 40 சதவீதத்தை தள்ளுபடி செய்திருக்கலாமே?. செய்யமாட்டார்கள். ஏனெனில் மாணவர்களை விட ரிலையன்ஸ் நலன்தான் அரசுக்கு முக்கியம்.

    2. நம்ம விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கடன் கேட்டால் வீட்டுப்பத்திரம், நிலப் பத்திரம் என அனைத்தையும் எடுத்து வரச் சொல்கிறது வங்கி. ஆனால் ஆஸ்திரேலியாவில் திவால் ஆன நிலக்கரி சுரங்கத்தை வாங்க அதானி நிறுவனத்திற்கு 600 கோடி பணத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கிறது SBI வங்கி. ஏனெனில் விவசாயிகளின் நலனை விட அதானியின் நலன் முக்கியம்.

    “எல்லாம் சரி, இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?” என்று கேள்வி எழுப்புகிறீர்களா?
    அதற்கான பதில்:
    நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். மத்தவன் சொல்வதை கேட்காதீர். இந்த சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை சமூகத்தின் அடித்தட்டிலிருந்து பார்க்கப் பழகுங்கள். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயனடையப் போவது யார் என ஆராயுங்கள்.
    அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இல்லை என்றால் அமைதியாக வேடிக்கை பார்த்து கடந்து செல்லுங்கள். தேசபக்தி, நாட்டுநலன் என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடாதீர்கள். உங்கள் ஆட்டத்தால் பாதிக்கப்படுவது இந்த சமூகத்தின் அடித்தட்டு மக்கள்தான்.

    • மணிகண்டன் போன்ற மக்கள் விரோதிகள் மோடியின் மக்களுக்கு எதிரான, இந்திய தேசத்துக்கு எதிரான உள்நாட்டு பொருளாதார போரை ஆதரித்துக்கொண்டே உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிப்பார்கள் என்று நம்பிக்கொண்டா உள்ளீர்கள் நண்பரே?

      //“கறுப்பு பணம் ஒழிந்துவிட்டது. புதிய இந்தியா பிறந்து விட்டது. மோடி சாதித்துவிட்டார்” என நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே!//

    • Guru…, your feedback is an excellent narration of current Economical war Initiated by Our PM Modi Jee against his own people…

    • //..ஆனால் ஆஸ்திரேலியாவில் திவால் ஆன நிலக்கரி சுரங்கத்தை வாங்க அதானி நிறுவனத்திற்கு 600 கோடி பணத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கிறது SBI வங்கி….//

      600 கோடி????? or 6,000 கோடி???

  5. மோடியின் உள்நாட்டு பொருளாதார யுத்த சவால்களை நம் அறிவாற்றலால் எதிர்கொள்வோம்…!

    முதலில் கையில் இருக்கும் செல்லாத நோட்டுகளை வங்கியில் உங்கள் கணக்கில் போடுங்க… தேவைக்கு அதிகமாக ஏதும் பொருட்களை வாங்கி செல்லும் கை காசை செலவு செய்யாதிங்க…. கையில் உள்ள வங்கி டெபிட்(Debet) கார்டில் மளிகை சாமான் போன்ற அத்தியவசிய பொருட்களை வாங்குங்க…. பிறருக்கும் வாங்கிக்கொடுத்து கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்… LIC due …, வங்கி கடனுக்கு due.., கட்டுவது மற்றும் பிற கடனகளை செக் மூலம் கட்டுங்க…. எக்காரணம் கொண்டும் குழந்தைகளின் தேவைகளை நிறுத்தாதிங்க…. அதே நேரத்தில் மோடியின் கயமைத்தனதை குழந்தைகளுக்கு அவர்களுக்கு புரியும் விதத்தில் சொல்லிக்கொடுங்க… கடைகளுக்கு கூட்டிச்சென்று எதார்த்த நிலவரத்தை குழந்தைகளுக்கு புரியவையுங்க…

  6. “கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.”

    manikandan got a title ? blackmoney ? good moderators.

    • கமால்…,

      கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்கிஉள்ளவர்களை பற்றிய பட்டியல் கையில் இருந்தும் அதனை கொண்டு அந்த பணத்தை கைபற்ற இயலாமல் உள்நாட்டில் நோட்டுகளை செல்லாதது ஆக்கியது மூலம் மக்களை சித்திரத்தை செய்யும் திருவாளர் மோடி ஜீ ஐ ஆதரித்து ரசிகர் மன்றம் நடத்தும் மணிகண்டனுக்கு Mr blackmoney மணிகண்டன் என்ற பெயர் சரியானது தான் கமால் அவர்களே!

      • விவரம் தெரியாமலேயே பேசுகிறீர்கள்.

        கருப்பு பணம் வெளிநாட்டில் எவ்வுளவு பதுக்கியிருக்கிறார்கள் என்ற விவரம் காங்கிரஸ் அரசுக்கும் சரி பிஜேபி அரசுக்கும் சரி தெரியாது. இன்னும் சரியாக சொல்ல போனால் சென்ற தேர்தலில் பிஜேபி வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் பற்றிய ஒரு பொய்யான தகவலை சொல்லி காங்கிரஸ் கட்சியின் மீது அவதூறு பரப்பினார்கள் (இந்த மாதிரியான அவதூறு அரசியல் எனக்கு ஏற்புடையது அல்ல)… பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு மோடி ‘மன்கி பாத்’ நிகழ்ச்சியில் வெளிநாட்டில் எவ்வுளவு கருப்பு பணம் உள்ளது என்று யாருக்கும் தெரியாது என்று சொன்னார். தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளில் பல லட்சம் கோடி கருப்பு பணம் உள்ளது அதை எல்லாம் கொண்டு வந்தால் ஆளுக்கு 15 லட்சம் பணம் கொடுக்கலாம் என்று விவரம் எதுவும் தெரியாமல் சொன்னார்கள்.

        அடுத்தது கருப்பு பணம் வெளிநாட்டில் இருப்பதாக தெரிந்தால் கூட அதன் மீது உடனே நடவடிக்கை எடுக்க முடியாது, காரணம் இன்னொரு நாட்டில் உள்ள வங்கியில் உள்ள பணத்தை பற்றி அறிய அந்த நாட்டோடு ஒப்பந்தம் இருக்க வேண்டும், அந்த நாடுகளின் சட்டம் அதற்க்கு ஒத்துழைக்க வேண்டும், மேலும் வெளிநாட்டில் கருப்பு பணம் வைத்து இருப்பவர்களை பற்றிய விவரம் தெரிந்தாலும் அதை வெளியிட அந்த நாடுகளின் ஒப்பந்தங்கள் தடுக்கலாம் இப்படி பல விஷயங்கள் இருக்கிறது.

        பிஜேபி அரசின் 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு கருப்பு பணம் மற்றும் கள்ள பணத்திற்கு எதிராக எடுக்க பட்ட முக்கிய நடவடிக்கை. 1000 ரூபாய் நோட்டுகளில் 50% பாகிஸ்தானில் இருந்து வந்த கள்ள பணம். இந்த பணத்தினால் பெரியளவில் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள் தான். இந்த கள்ள பணத்தால் இந்திய நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்க படுகிறது. இந்த கள்ள பணத்தால் ஏற்படும் முதல் பாதிப்பு விலைவாசி ஏறுதல், அதனால் ஏற்படும் பாதிப்பை சந்திப்பவர்கள் ஏழைகள் தான்.

        பாக்கிஸ்தான் ISI அமைப்பு 1000 கள்ள பணத்தை அச்சடிக்க 39 ரூபாய் செலவு செய்கிறார்கள்… அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 400 ரூபாய்க்கு விற்கிறார்கள் (வாங்குபவர்களுக்கு 600 ரூபாய் லாபம்)… இந்த 400 ரூபாயை வைத்து தான் பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களை நாட்டின் பல பகுதிகளிலும் நாட்டிற்கு எதிரான வெறுப்பையும் பிரிவினையையும் தூண்டி கொண்டு இருக்கிறார்கள், இன்று இந்த விவகாரம் சிறிதாக தெரியலாம் ஆனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நாட்டையே அழிக்கும் நிலைக்கு கொண்டு வரலாம்.

        • Good, now you are telling this scheme is to remove fake currencies. Tell this openly. Dont tell this is to remove black money.

          Even if people find fault in that, you people will come up with new reason(s).

        • Mr blackmoney supporter மணிகண்டன்…, மதியிழந்து சுயநினைவு இன்றி பேசிக்கொண்டு உள்ளீர்களா? யார் விவரம் தெரியாமல் பேசுகின்றார்கள் என்று பார்கலாமா மணிகண்டன்….? வெளிநாட்டில் பதுக்கப்பட்டு உள்ள இந்திய கருப்புப்பணம் பற்றி முதலில் பார்கலாம்… (sequence of events)

          1. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் தொடர்பான வழக்கில் 2014ல் தங்கள் தரப்பை முன்வைத்த பாரதிய ஜனதா அரசு, அவ்வாறு பெயர்களை வெளியிடுவது தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், இந்தியா செய்து கொண்டிருக்கும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறுவதாவும் இருக்கும் என்று தெரிவித்திருந்தது.

          2. இணையவாசிகள் ஒருபக்கம் காரி உமிந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம், காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் காவி பிளேடு பக்கிரிகளின் பேச்சு மாத்து செயலை கழுவி ஊற்றினர். பிள்ளைப் பூச்சி காங்கிரசே ஏறி அடித்ததில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பயிற்சி பெற்ற பாரதிய ஜனதாவுக்கு மகா கேவலமாக போய் விட்டது.

          3. லேசாக சொரணை வந்ததும் “கருப்பு பணத்தைப் பதுக்கியவர்கள் பெயர்களை வெளியிடுவோம்…. ஆனால் இரகசியமாகத் தான் வெளியிடுவோம்” என்றார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. ’இது சரியான போங்காட்டமாக இருக்கிறதே’ என்று அடுத்த சுற்று கொந்தளிப்புகளுக்குப் பின் மீண்டும் வாயைத் திறந்த அருண் ஜேட்லி, “பெயர்களை வெளியிட்டால் காங்கிரசுக்குத் தான் தர்ம சங்கடம் ஏற்படும்” என்றார். அதாவது காவியும் கதரும் வேறு வேறல்ல என்பதை மோடியை நம்பிய நடுத்தர வர்க்க அப்பாவிகளின் பொடனியில் தட்டி உணர வைத்தார்.

          4. இந்த மொத்த விளையாட்டின் விதிகளையும், போக்குகளையும் நன்கு உணர்ந்திருந்த பரம்பரை திருடனான காங்கிரசு களத்தில் இறங்கி விழி பிதுங்கிக் கிடக்கும் புது திருடன் பாரதிய ஜனதாவை போட்டு சாத்த தொடங்கியது. ”சொம்மா பூச்சி காட்டாத மாமூ.. நெஞ்சுல கீறது மஞ்சா சோறா இருந்தா, தில்லு இருந்தா பேரைச் சொல்லு நைனா” என்று லோக்கலாக இறங்கி அடித்தார் திக் விஜய் சிங். அதே கருத்தை கொஞ்சம் ‘மானே தேனே பொன் மானே’ சேர்த்து அறிவுஜீவி மொழியில் உரைத்தார் ப.சிதம்பரம்.

          5. கரடியே காறி துப்பி விட்ட துர்பாக்கிய நிலைக்கு ஆளான பாரதிய ஜனதா, தற்போது இறுதியாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. மேற்படி பிரமாண பத்திரத்தில் சுமார் எட்டு பேர்களின் பெயர்களை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. டாபர் குழுமத்தின் முன்னாள் தலைவர் பிரதீப் பர்மன், ராஜ்கோட்டைச் சேர்ந்த தங்க வர்த்தகர் பங்கஜ் சிமன்லால் லோதியா மற்றும் கோவாவைச் சேர்ந்த டிம்ப்ளோ என்கிற சுரங்க குழுமத்தைச் சேர்ந்த ஐவரின் பெயர்களும் இந்தப் பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

          6. இவ்வளவு அளப்பறைகளுக்குப் பின்னும் பாரதிய ஜனதா அளித்துள்ள பெயர் பட்டியலில் பெரிய முதலாளிகளின் பெயர்களோ அரசியல்வாதிகளின் பெயர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

          இதுக்கு என்ன சொல்லவரீங்க மணிகண்டன்….. நீதி மன்றத்தை மட்டும் ஏமாற்றி பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதா மோடியின் கயவாளித்தனமான பிஜேபி அரசு அல்லது இந்திய மக்களையும் ஏமாற்றி உள்ளதா? பதில் உள்ளதா இந்த பிஜேபி அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் பற்றி உங்களிடம் ?

            • ஜிம்பாவே நாட்டின் பொருளாதாரத்தை சிரழித்த அதன் ஜனாதிபதி ராபர்ட் முகபேபோன்றவர் இவர்….

        • என்னய்யா நீங்க! எல்லாருமே விபரம் தெரியாமலே பேசுறீங்களே பேசுறார் பாருங்க மணிகண்டன் என்ன விபரம் பாருங்க.மோடி இந்தியில பேசுறார்ல அத உங்களுக்கு அழகான தமிழ்ல்ல மொழி பெயர்த்து விபரமா பேசுறார் பாருங்க.திரும்ப திரும்ப இனி விப்ரமில்லாம யாரும் பேசாதீங்க.பாகிஸ்தான் ஒன்னைத்தவிர வேறு எந்த காரணமுமில்லை…..எந்த அளவிற்க்கு மோடி பித்தன் களுக்கு பித்தம் தலைக்கேறி இருக்கிறது.

        • உண்மைக்கு புறம்பாக பிதற்றிக்கொண்டு இருக்கும் மணிகண்டன் அடுத்ததாக கள்ள நோட்டுகள் பற்றி பார்ப்போம் :

          இந்தியாவுக்குள் பாக்கிஸ்தான் 50% கள்ளப் பணத்தை 1000 ரூபாய்களாக பரப்பியுள்ளது என்று கூற வெட்கமாக இல்லையா உங்களுக்கு? “ஒரு வாதத்துக்கு” உங்கள் கருத்தை ஏற்றாலும் கூட உங்கள் மோடியின் அரசும் அதற்கு முத்தைய மோடியின் பங்காளி காங்கிரஸ் அரசும் என்ன செய்துகொண்டு இருந்து இந்த கள்ளப் பண புழக்த்தை தடுக்காமல்?

          உண்மை நிலவரம் என்னவென்றால் ரூ.17 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் ரூ.400 கோடி மட்டுமே கள்ள நோட்டுகள் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது. ரூ.400 கோடி கள்ள நோட்டுகளை ஒழிக்க 17 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை முடக்குவது எப்படி நியாயமாகும். இனி 2000 ருபாய் நோட்டுகளில் எத்தகைய கள்ள நோட்டும் வராது என்று உத்திரவாதம் தரமுடியுமா உங்களாலும் ,மோடியாளும்? சாயம் போகும் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை விட சிவகாசியில் கள்ள நோட்டு அடிக்கும் உள்நாட்டு கயவர்கள் ,பாக்கிஸ்தான் காரர்கள், IS திவிரவாதிகள் அதனைவிட சிறப்பான கள்ள நோட்டுகளை அடிக்கமாட்டார்கள் என்பதற்கும் அவற்றை புழக்கத்தில் அவர்கள் விடமாட்டார்கள் என்பதற்கும் என்ன விதமான உறுதிகளை உங்களாலும் மோடியாளும் கொடுக்கமுடியும்…

          //பிஜேபி அரசின் 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு கருப்பு பணம் மற்றும் கள்ள பணத்திற்கு எதிராக எடுக்க பட்ட முக்கிய நடவடிக்கை. 1000 ரூபாய் நோட்டுகளில் 50% பாகிஸ்தானில் இருந்து வந்த கள்ள பணம். //

          • நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் மோடியின் இந்த செயலை மிகவும் பாராட்டியிருக்கிறார், குழந்தை தொழிலிகளை அமர்த்துபவர்கள், பெண்களை கடத்துபவர்களின் தொழில்கள் எல்லாம் கருப்பு பணத்தை அடிப்படையாக கொண்டு இயங்குபவர்கள். மோடியின் இந்த செயலால் இவர்கள் எல்லாம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

            • என்ன மணிகண்டன்…, சம்மந்தம் இல்லாமல்உளறிகிட்டு இருக்கிங்க? மோடி வெளிநாட்டில் கருப்பு பணம் வைத்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது.., அவர்களின் பெயர்களை கூட வெளியிட அஞ்சுவது , நிதிமன்றத்தில் ஒப்புக்கு கருப்பு பண முதலைகளின் பெயர்களை மட்டும் (பத்து பெயர்களை மட்டும்) வெளியிட்டு வெம்பி நிற்பது போன்ற செயல்களுக்கா நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் மோடியை பாராட்டுகின்றார்?

            • மணிகண்டன்…, என்னுடைய பின்னுட்டம் 6.1.1.4 க்கு பதில் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் அவிங்க மோடியை பாராட்டினாங்க …, இவிங்க பாராட்டினாங்க என்ற எசப்பாட்டு பாடிகிட்டு இருக்கிங்களே இது நன்னாவா இருக்குது? கொஞ்சம் கூட சுயமா சிந்திக்கமாடிங்களா?

        • தேசவிரோத மணிகண்டன் அவர்களே …,

          மோடியின் இந்த செல்லா நோட்டுகள் அறிவிப்புகளின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவந்துக் கொண்டு தான் இருகின்றன.. பெரு முதலாளிகளிடம் இருந்து தேசிய வங்கிகளுக்கு திரும்பி வராத ஏழரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடனை வசூலிக்க துப்பு இன்றி உள்ள மோடிக்கும் ஆதரவாக ஏன் பேசிக்கொண்டு உள்ளீர்கள்? மோடியின் அடிமை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி யின் வாக்குமுலத்தை முன்பே கொடுத்தேன். படித்தும் காணாமல் சென்றீர்கள்…. மீண்டும் கொடுக்கின்றேன்… படித்துவிட்டு பதில் அளியுங்கள்…. மக்களின் கை பணத்தை பிடுங்கி அந்த பெரு நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் முயர்சி தான் இது என்பதனை அருண் ஜேட்லியின் வார்த்தைகளை படித்து உணருங்கள் தேச மக்கள் விரோதியே மணிகண்டன்…

          அருண் ஜெட்லி வாக்குமுலம் : “””வங்கிகளுக்கு இதன் மூலம் (இந்த பணம் 500 1000 ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம்) மூலதனம் கிட்டும் என்றாலும் அவற்றிற்கு மேலும் மூலதனம் தேவைப்படும். ஆனால் இதன் மூலம் மூலதனம் திரட்டும் ஆதாரம் அதிகரித்துள்ளது””

        • அடிப்படை கணக்குக்கூட தெரியாத மணிகண்டன் அவர்களே…,

          கள்ள நோட்டுகள் பற்றிய உங்கள் Mokkai கணக்கை சிறிது ஆய்வு செய்வோம்… இந்த மாதம் ஒன்பதாம் தேதி வரையில் புழக்கத்தில் இருந்த மொத்த ரூ.17 லட்சம் கோடி மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ள சதவிகிதம் முறையே 47.8 மற்றும் 38.66 என உள்ளது. இரண்டும் சேர்த்து புழக்கத்தில் உள்ள சுமார் 86 சதவிகித நோட்டுகள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. நீங்கள் கூறுவது போன்று 50% அளவுக்கு 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் என்றால் அவற்றின் மதிப்பு 6.57 லட்சம் கோடி என்று ஆகின்றது. இவ்வளவு பெரிய கள்ளப்பணம் புழக்கத்தில் வரும் வரையில் மோடியில் அரசு வேடிக்கை பார்த்துகொண்டு இருந்ததா மணிகண்டன்? நீங்கள் என்ன மதி மயங்கி சுயநினைவு இன்றி பேசிக்கொண்டு உள்ளீர்களா மணிகண்டன் அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா உங்களுக்கு ?

      • //தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளில் பல லட்சம் கோடி கருப்பு பணம் உள்ளது அதை எல்லாம் கொண்டு வந்தால் ஆளுக்கு 15 லட்சம் பணம் கொடுக்கலாம் என்று விவரம் எதுவும் தெரியாமல் சொன்னார்கள்.// அப்புறம் எதுக்கு பில்டப்பு…? ரொம்ப நல்லவன்யா…

  7. பித்தம் தலைக்கேறிய மோடி பித்தர்கள்…..காலம் உங்களுக்கு தக்க பதில் சொல்லும்.

  8. மணிகண்டன்…, மோடியின் இந்த செல்லா நோட்டு அறிவிப்புக்கு பின் சுமார் 2 இலச்சம் கோடிகள் அளவுக்கு சனி வரையில் வங்கியில் இந்திய மக்களால் டெபாசிட் செய்யபட்டு உள்ளது. இன்னும் வரும் மார்ச் மாதம் வரையில் எத்துனை லச்சம் கோடிகள் மக்களின் வரிப்பணம் டெபாசிட் செய்யபடும் என்று அறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் டெபாசிட் ஆகிற அவ்வளவு பணமும் வங்கிகளுக்கு எதற்கு என்றாவது என்றைக்காவது ஆராய்தீர்களா ? நிதி அமைச்சர் அருண் ஜெட்லீயின் வாக்கு மூலத்துடன் சேர்த்து ஆய்வு செய்யுங்கள்… : “”வங்கிகளுக்கு இதன் மூலம் (இந்த பணம் 500 1000 ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம்) மூலதனம் கிட்டும் என்றாலும் அவற்றிற்கு மேலும் மூலதனம் தேவைப்படும்.”” என்று கூறுகின்றார். இவ்வளவு பணத்தையும் வங்கிகள் என்ன செய்யபோகின்றன? கீழ் கண்ட நிகழ்வுகள் எதுவையும் மோடி செய்யலாம் .

    ௧. இந்த மக்களின் பணத்துக்கான வட்டியை குறைக்கலாம்… (வங்கிகளிடம் பணம் அதிகம் இருக்கும் போது வட்டியை குறைப்பது என்பது தான் பொருளாதார விதி)… ஓய்வு பெற்றவர்கள் டெபாசிட் செய்த பணத்துக்கான வட்டியும் குறைந்து அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம்…, PF ஆகியவற்றின் வட்டியையும் குறைக்க சாத்தியம் உள்ளது.

    கா. மக்களின் இந்த வங்கி டெபாசிட் பணம் மும்பே தேசிய வங்கிகளுக்கு திரும்பி வராத ஏழரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடனுடன் இருக்கும் இந்திய பெரு முதலாளிகளுக்கு தேசத்தின் தொழில் வளர்சி என்ற பெயரில் கொடுக்கப்பட்டு மீண்டும் மக்கள் பணம் சூறையடப்படலாம்…

    இவற்றை எல்லாம் நீங்கள் மறுதலித்திர்கள் என்றால் வேறு எதற்கு இவ்வளவு பணம் வங்கிகளுக்கு தேவைபடுகின்றது என்பதனை ஜெட்லியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் பதில் அளியுங்கள்.

    • Third Line correction :
      “””எத்துனை லச்சம் கோடிகள் மக்களின் வரிப்பணம் டெபாசிட் செய்யபடும் என்று அறுதியிட்டு கூற””-> எத்துனை லச்சம் கோடிகள் மக்களின் பணம் டெபாசிட் செய்யபடும் என்று அறுதியிட்டு கூற

Leave a Reply to கி.செந்தில்குமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க