privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாபாகிஸ்தானில் தூக்கு - இந்தியாவில் பாராட்டு !

பாகிஸ்தானில் தூக்கு – இந்தியாவில் பாராட்டு !

-

பாகிஸ்தான் நாட்டில் கிறித்தவ தம்பதியினரை எரித்துக் கொன்ற 5 முசுலீம்களுக்குத் தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், காசர் மாவட்டத்தில் உள்ள கொட் ராதா கிஷன் என்ற இடத்தில் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதியன்று, கிறித்தவ மதத்தைச்சேர்ந்த ஷாஷாத் மஸி மற்றும் அவரின் மனைவி ஷாமா பீபி இருவரும் தங்களுடைய மூன்று  குழந்தைகளோடு வீட்டிலிருந்தனர். உள்ளூர் மதத் தலைவன் ஹஃபீஸ் இஷ்டியாக் என்பவர் தொழுகைக்கு வந்த கிராம மக்களிடம் இந்த கிறித்தவ தம்பதியர் குர்-ஆனை எரித்து இசுலாத்தை அவமதித்து விட்டனர் என்று கூறி அவர்களைக் கொலை செய்யுமாறு உத்திரவிட்டார். திரண்டு வந்த முசுலீம்கள் ஷாஷாத்தின் வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரின் மனைவி ஷாமாவையும் அவர்களுடைய மூன்று குழந்தைகளிடமிருந்து பிரித்து விட்டு அடித்து இழுத்துச் சென்று உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டனர்.

லாகூர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்த இந்த வழக்கில் 103 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்து வந்தது. 23.11.2016 அன்று தீர்ப்பு வெளிவந்து உள்ளூர் மதத் தலைவன்ஹஃபீஸ் இஷ்டியாக் உட்பட 5 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 8 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கூடுதலாக இரண்டு இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஷாமா உயிரோடு எரிக்கப்படும்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளுக்கும் ரூ.50,00,000 இலட்சம் இழப்பீடு வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் நிபந்தனையாக இவர்கள் 18 வயதைத் தொடும்போது தான் அந்தப் பணம் இவர்கள் கைக்குக் கிடைக்கும்.

ravi-sisodia-national-flag
தேசியக் கொடி போர்த்தப்பட்எட நிலையில் ரவி சிசோடியாவின் சடலம். (உள்படம்) ரவி சிசோடியா.

தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் முதியவர் அக்லக் என்று எவ்வாறு வதந்தி பரப்பப்பட்டு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரோ அதே பாணியில் தான் இந்த கொடூரக் கொலையும் முசுலீம் வெறியர்களால் அரங்கேற்றப்பட்டது.

இந்தியாவில் நடந்த கொலைக்கும், பாகிஸ்தானில் நடந்த கொலைக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், இங்கே நடந்த கொலை செய்த கொலையாளிக்கு ரூ.25 இலட்சம் ரொக்கப் பணமும், கூடவே தேசக்கொடி போர்த்தப்பட்டு தேசபக்தர் என்ற அங்கீகாரமும் கிடைத்தது.

அரை குறை ஜனநாயகத்தோடு, முசுலீம் மதம் சார்ந்த அரசைமைப்பைக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களைக் கொன்ற பெரும்பான்மை மதவெறியர்களுக்கு மரணதண்டனை, சிறைத்தண்டனை மற்றும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு எல்லாம் கிடைத்துள்ளது.

ஆனால் மதச்சார்பற்ற ஜனநாயக என்று அழைக்கப்படும் இந்தியாவில் சிறுபான்மை மக்களைக் கொல்லும் பெரும்பான்மை மதவெறியர்களுக்கு பணமும், கூடவே தேசபக்தன் என்ற மரியாதையும் கிடைக்கிறது. ஆக ஜனநாயகம் இருப்பது பாகிஸ்தானிலா, இந்தியாவிலா?

________________

மேலும் படிக்க…