privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாபாகிஸ்தானில் தூக்கு - இந்தியாவில் பாராட்டு !

பாகிஸ்தானில் தூக்கு – இந்தியாவில் பாராட்டு !

-

பாகிஸ்தான் நாட்டில் கிறித்தவ தம்பதியினரை எரித்துக் கொன்ற 5 முசுலீம்களுக்குத் தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், காசர் மாவட்டத்தில் உள்ள கொட் ராதா கிஷன் என்ற இடத்தில் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதியன்று, கிறித்தவ மதத்தைச்சேர்ந்த ஷாஷாத் மஸி மற்றும் அவரின் மனைவி ஷாமா பீபி இருவரும் தங்களுடைய மூன்று  குழந்தைகளோடு வீட்டிலிருந்தனர். உள்ளூர் மதத் தலைவன் ஹஃபீஸ் இஷ்டியாக் என்பவர் தொழுகைக்கு வந்த கிராம மக்களிடம் இந்த கிறித்தவ தம்பதியர் குர்-ஆனை எரித்து இசுலாத்தை அவமதித்து விட்டனர் என்று கூறி அவர்களைக் கொலை செய்யுமாறு உத்திரவிட்டார். திரண்டு வந்த முசுலீம்கள் ஷாஷாத்தின் வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரின் மனைவி ஷாமாவையும் அவர்களுடைய மூன்று குழந்தைகளிடமிருந்து பிரித்து விட்டு அடித்து இழுத்துச் சென்று உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டனர்.

லாகூர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்த இந்த வழக்கில் 103 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்து வந்தது. 23.11.2016 அன்று தீர்ப்பு வெளிவந்து உள்ளூர் மதத் தலைவன்ஹஃபீஸ் இஷ்டியாக் உட்பட 5 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 8 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கூடுதலாக இரண்டு இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஷாமா உயிரோடு எரிக்கப்படும்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளுக்கும் ரூ.50,00,000 இலட்சம் இழப்பீடு வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் நிபந்தனையாக இவர்கள் 18 வயதைத் தொடும்போது தான் அந்தப் பணம் இவர்கள் கைக்குக் கிடைக்கும்.

ravi-sisodia-national-flag
தேசியக் கொடி போர்த்தப்பட்எட நிலையில் ரவி சிசோடியாவின் சடலம். (உள்படம்) ரவி சிசோடியா.

தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் முதியவர் அக்லக் என்று எவ்வாறு வதந்தி பரப்பப்பட்டு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரோ அதே பாணியில் தான் இந்த கொடூரக் கொலையும் முசுலீம் வெறியர்களால் அரங்கேற்றப்பட்டது.

இந்தியாவில் நடந்த கொலைக்கும், பாகிஸ்தானில் நடந்த கொலைக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், இங்கே நடந்த கொலை செய்த கொலையாளிக்கு ரூ.25 இலட்சம் ரொக்கப் பணமும், கூடவே தேசக்கொடி போர்த்தப்பட்டு தேசபக்தர் என்ற அங்கீகாரமும் கிடைத்தது.

அரை குறை ஜனநாயகத்தோடு, முசுலீம் மதம் சார்ந்த அரசைமைப்பைக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களைக் கொன்ற பெரும்பான்மை மதவெறியர்களுக்கு மரணதண்டனை, சிறைத்தண்டனை மற்றும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு எல்லாம் கிடைத்துள்ளது.

ஆனால் மதச்சார்பற்ற ஜனநாயக என்று அழைக்கப்படும் இந்தியாவில் சிறுபான்மை மக்களைக் கொல்லும் பெரும்பான்மை மதவெறியர்களுக்கு பணமும், கூடவே தேசபக்தன் என்ற மரியாதையும் கிடைக்கிறது. ஆக ஜனநாயகம் இருப்பது பாகிஸ்தானிலா, இந்தியாவிலா?

________________

மேலும் படிக்க…

  1. பாக்கிஸ்தான் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒரு விதிவிலக்கு என்றே நினைக்கிறேன், இந்த ஒரு வழக்கின் தீர்ப்பை வைத்து இந்தியாவின் மீது அவதூறாக பேசுவதை ஏற்க முடியாது…
    பாகிஸ்தானோடு இந்தியாவை ஒப்பிட்டதற்காக வினவை வன்மையாக கண்டிக்கிறேன்.

    • இந்தியாவில் இப்படி ஒரு விதிவிலக்கான தீர்ப்பை தீர்ப்பை பற்றி சொல்லுங்களேன்.

      குஜராத் படுகொலை.
      கயர்லாஞ்சி படுகொலை,
      கீழ் வெண்மணி படுகொலை.
      அகலக் படுகொலை,
      இளவரசன் உள்ளிட்டு கவுரவ படுகொலைகள்,
      தருமபுரி பேருந்து எரிப்பு,
      டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார படுகொலை
      பத்மினி வழக்கு………………………………………………………………..

      என இந்த பட்டியல் மிக நீளமாக நீளுகிறது. இதே போல ஒரு நீளமான பட்டியலை பாகிஸ்தானிலும் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை.

      கேள்வி இங்கே, இந்த மாபாதக குற்றங்களுக்கு ஹிந்து தேசபக்தர்களாகிய நீங்கள் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வாங்கி கொடுத்தீர்கள்?

      பாகிஸ்தான் இசுலாமிய மதவெறியர்கள் நாடு என்றாலும் ஒரு குற்றத்திற்காவது தண்டனை கொடுத்து உள்ளதே. நீவிர் என்ன கிழித்தீர்….. மூச்சுக்கு முன்னூறு தடவை பாகிஸ்தான் பாகிஸ்தான் என்று கூவுவதை விட………

      த்தூ தெறிக்க…….ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை…..

      • 1. கிறிஸ்துவ பாதிரியாரை எரித்து கொன்ற வழக்கில் தாரா சிங்கிற்கு நீதிமன்றத்தால் ____________ கொடுக்கப்பட்டது
        2. மேலவளவு தலித்துகளை கொன்றவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை கொடுத்து இருக்கிறது

        இப்படி எத்தனையோ வழக்குகளில் இந்திய தீர்ப்பு கொடுத்து இருக்கின்றன. பாகிஸ்தானை பார்க்கும் போது இந்தியா உயர்ந்த தேசம் தான்.

  2. மதவெறியர்கள் முஸ்லீம்களாக
    இருந்ததால் அட்லீஸ்ட் குழந்தைகள்
    மட்டுமாவது தப்பித்தன.

  3. இந்த செய்தியை மற்ற பார்ப்பன மீடியாவில் வெளியிட மாட்டார்கள். காரணம் அவர்கள் பாகிஸ்தானை இந்திய மக்களின் மனதில் எதிரியாக எப்பொழுதுமே காட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பவர்கள்.

    • யாப்பா முடியல… இந்த செய்தியல்ல என்ன சார் இந்திய இருக்கு ? பாகிஸ்தானில் மிக மிக அபூர்வமாக ஒரு தீர்ப்பை கொடுத்தார்கள் அதற்கும் இந்திய நட்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு ?

      அது சரி பாக்கிஸ்தான் என்றைக்கு இந்தியாவோடு நட்போடு இருந்து இருக்கிறார்கள். வாஜ்பாய் லாகூருக்கு நட்புணர்வோடு சென்றால் பாக்கிஸ்தான் கார்கிலை ஆக்கிரமித்து அவர்களின் நட்பை காட்டுகிறார்கள், மன்மோகன் சிங் நட்பை வளர்க்க முயற்சி செய்தால் மும்பையில் அப்பாவி மக்களை பாகிஸ்தானிகள் கொன்று அவர்கள் நட்பை காட்டுகிறார்கள், மோடி நட்பை வளர்க்க பாக்கிஸ்தான் சென்றால் இங்கே பதன்கோட்டில் தாக்கி பாக்கிஸ்தான் நட்புணர்வை காட்டுகிறார்கள்.

      பாகிஸ்தானிகள் மனம் மாறாத வரையில் இந்திய பாக்கிஸ்தான் நட்பு சாத்தியமே இல்லை.

      • அய்யா….அந்த அபூர்வ ராகம் இங்கே கேட்கவில்லையே ஏன்?
        கொலைகாரனுக்கு இந்தியக் கொடிய போர்த்தி நமஸ்காரம் பண்றீங்களே ஏன்?

        ஒரு வேலை அந்த ராகம் எங்கள் காதுகளை செவிடாக்கி இருந்தால் தயை கூர்ந்து ஒருமுறை எடுத்துக் காட்டு கூறவும்…..கூகுளில் மேய்ந்தாவது சொல்லவும்……

        இந்த கேள்விகளுக்கு பதிலில்லை,
        குஜராத் படுகொலை.
        கயர்லாஞ்சி படுகொலை,
        கீழ் வெண்மணி படுகொலை.
        அகலக் படுகொலை,
        இளவரசன் உள்ளிட்டு கவுரவ படுகொலைகள்,
        தருமபுரி பேருந்து எரிப்பு,
        டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார படுகொலை
        பத்மினி வழக்கு………………………………………………………………..

        • காதை இறுக்கமாக மூடி கொண்டு ஒண்ணுமே கேட்கவில்லை என்று சொன்னால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது…

          பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியா மிக மிக உயர்ந்த நாடு தான்… உங்களை போன்றவர்களுக்கு குஜராத் கலவரத்தில் மோடிக்கு எந்த சம்மதமும் இல்லை என்று நீதிமன்றம் சொன்னால் கூட ஏற்றுக்கொள்ள மாட்டிர்கள், நீதித்துறையின் மீதே அவதூறாக பேசுவீர்கள்… நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து இந்த மாதிரி தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தால் பிறகு ஏன் நீதிமன்றங்கள், வக்கீல்கள், நிதிபதிகள் ஆளாளுக்கு அவரவர் இஷ்டத்திற்கு தீர்ப்பு சொல்லிக்கொள்ள வேண்டியது தான்…

      • யப்பா உங்க விவாத முறையை நீங்க தான் மெச்சிக்கனும்! எங்க போனாலும் விவாதப் பொருளை திசைதிருப்பி விட்டுவிட்டு ‘கையை பிடிச்சு இழுத்தியா’ என்பது…
        உங்களிடம் விவாதிப்பவர்களை குழப்பி ‘மொத இருந்து வா, பொண்டாட்டி ஓடிப் போனதுல இருந்து வா’ எனபது.. யப்பா உங்கள் குரங்கு சேட்டைகளை நீங்க தான் மெச்சிக்கனும்.

        அபூர்வமா அபூர்வமில்லியா என்பதா விவாதம்? அல்லது பாகிஸ்தான் இந்தியா இடையிலான அணுகுமுறைகளா இங்கு விவாதப் பொருள்?

        சமீபத்தில் அக்லகை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டணை அளிக்கப்பட்டது? கொலைக்குற்றவாளியின் மேல் தேசியக் கொடி போர்த்தியது சரியா தவறா?

        இதைக் கேட்டால் உடனே ‘காஷ்மீரில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியின் மேல் பாகிஸ்தான் கொடி போர்த்தியது மட்டும் சரியா’ன்னு கேட்கனும். ஓகே.. வா? விவாதம் விளங்கிடும்.

      • மணிகண்டன் …, இத விட்டுட்டிங்களே ! மோடி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஏன் நாடாளும்ன்ன்றத்துக்கே சொல்லாமல் கூட பாக்கிஸ்தானுக்கு சென்று டீ குடித்ததை மறந்துட்டீங்களே ! அதனையும் சேர்த்துக்குங்க!

Leave a Reply to எமகண்டன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க