privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கேடி மோடிக்கு பயப்படும் கோழைகளா நாம் ? கொதித்தெழு - போராடு !

கேடி மோடிக்கு பயப்படும் கோழைகளா நாம் ? கொதித்தெழு – போராடு !

-

புதுச்சேரியின் பரபரப்பான சாலை அது. இந்திராகாந்தி சிக்னல். நான்கு திசைகளில் இருந்தும் வரும் வாகனங்கள் சிக்னல் விழும் வரை காத்திருந்து தான் செல்ல வேண்டும்.

அந்த பரபரப்பான இடத்தில் 16.12.2016 வெள்ளியன்று சிகப்பு சட்டை அணிந்து கொண்டு துண்டு நோட்டிசை கொடுத்து பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தனர். சிக்னல் விழுந்ததும் பாய்ச்சல் வேகத்தில் செல்லக்கூடியவர்கள் அனைவரும் அனேகமாக, வங்கி வாசலில் கால்கடுக்க நிற்க செல்ல வேண்டும். இல்லையெனில் எடுத்த பணத்தை செலவிட அவசரமாக செல்ல வேண்டும்.

தற்பொழுது முக்கியமான வேலை என்று வேறு எதுவும் இருக்காது. எதிர்பாரா விதமாக நிகழும் மரணத்தை தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் வீட்டில் வைக்கப் போவதில்லை. மோடியின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நின்று போயுள்ளன. அன்றாட தேவைகளுக்கே பணம் எடுக்க முடியாத சூழ்நிலையில் இதில் திருமணத்தை எப்படி நடத்துவதென்று புலம்பித் தவிக்கிறார்கள் மக்கள்.

தரைக்கடை முதல் சிறுவணிகம் வரை, விவசாயம் முதல் கட்டுமானத்தொழில்கள் வரை முடங்கிப் போயுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து பட்டினியால் பரிதவித்து வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையே இழந்துள்ளனர். ஆனாலும் ஒரு அமைதி நிலவுகிறது. இந்த அமைதி மோடி நடவடிக்கையின் மீது வைத்திருக்கும் மூட நம்பிக்கையா? இல்லை, காரியவாதமா?

புதுச்சேரி பிரச்சாரம் (8)சமீபத்தில் நெய்வேலி சென்றிருந்த நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. எதேச்சையாக மோடியின் இந்த நடவடிக்கையை பற்றி பேசும் போது கூறினார், நேற்று நான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் எடுக்க சென்றேன். என்னோடு சுமார் முன்னூறு பேராவது வரிசையில் நின்றிருப்பார்கள். நாங்கள் நின்றிருக்கும் பொழுது வங்கியின் மேலாளர் வெளியில் வந்தார். மாணிக்கம் என்ற காண்ட்ராக்டரை அழைத்து சென்று உள்ளே பேசிக்கொண்டிருந்தார்.

சிறுது நேரம் கழித்து ட்ரங்க் பெட்டியுடன் இருவர் வந்தனர். அவர் நேராக பணப்பெட்டக அறைக்குள் சென்று விட்டனர். அவர்களை தொடர்ந்து பாண்டுரங்கன் என்ற காண்ட்ராக்டருடைய (மெடிக்கல் ஷாப் உரிமையாளர்) மகன் நேராக உள்ளே சென்றார். எங்கள் கண்ணெதிரே பணத்தை மாற்றுகிறார்கள். ஆனால், வரிசையில் நிற்கும் எங்களுக்கோ நாலாயிரம் மட்டும் தருகிறார்கள். கேட்டால் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். நான் மக்களிடம் வாருங்கள் இந்த அநியாயத்தை கேட்கலாம் என்று கூறினேன். ஆனால் எந்த ரியாக்சனும் இல்லாமல் “எருமை மாட்டின் மேல் மழைபெய்தது போல்” இருக்கிறார்கள் என்று கூறி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.

தஞ்சையில் ஒரு வங்கியில் பணம் எடுக்க சென்ற வயதான பெரியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவருடைய அருகில் அவர் மனைவி மட்டும் அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தார். அதனை வேடிக்கை பார்த்தவாறே மக்கள் அனைவரும் வரிசையில் நின்று பணம் வாங்கிக் கொண்டிருந்தனர். அந்தளவிற்கு இரக்கமற்ற ஒரு கொடிய சமூகத்தில் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் எழாமலில்லை.

1

2மோடியின் நடவடிக்கை இந்தியாவையே வாட்டி வதக்கி கொண்டிருக்கிறது. ஒரு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவு சென்னையில் வர்தா புயல் ஏற்படுத்திய அழிவை விட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை மோடியை போற்றிய வாய்கள் அனைத்தும் இன்று தூற்றும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள பணத்தேவையை அரசால் சமாளிக்க முடியாது. 2017 ஏப்ரல் இறுதி வரை ஆகும் என்று வங்கி ஊழியர் சம்மேளன சங்கம் கூறுகிறது.

இந்த உண்மையை மறைத்து மக்களை திசைதிருப்புவதற்கென்றே பல்வேறு அடுக்கடுக்கான பொய்யான திட்டங்களை புதிது புதிதாக அறிவிக்கிறார் மோடி. ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் நிலத்தை விற்பனை செய்ய பல்வேறு மோசடியான குலுக்கல் திட்டங்களை அறிமுகப்படுத்துவது போல அறிமுகப்படுத்துகிறார் மோடி.

கத்தரிக்காய் விளைந்தால் கடைத்தெருவிற்கு வந்து தானே ஆக வேண்டும். அதுபோல கத்தை கத்தையாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் வங்கியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. இவை அன்றாடம் செய்தி தாள்களில் வந்து சந்தி சிரிக்கிறது. இதனை மாற்றி தருவதற்கு பல்வேறு ஏஜெண்டுகள் உள்ளனர். தமிழகத்தில் 40%, வட மாநிலங்களில் 20 முதல் 70% கமிசன் என்றும் மாநிலத்திற்கு மாநிலம் கமிசனில் மட்டும் வேறுபாடு உள்ளது. இதில் பல தனியார் வங்கிகள் கருப்பு பண முதலைகளின் புரோக்கர்களாகவே மாறியுள்ளது.

நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 14,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் 56 % பொதுத்துறை வாங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 9,000 பொதுத்துறை வங்கி கிளைகள் உள்ள நிலையில் சராசரியாக ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் 86 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வெறும் 900 வங்கிக் கிளைகள் மட்டுமே உள்ள தனியார் வங்கிகளுக்கு 6,100 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு கிளைக்கும் 6.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை விட எட்டு மடங்கு அதிகம் என பாமக ராமதாசு குற்றம் சாட்டுகிறார்.

இருப்பினும் தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு தான் பெருமளவில் உள்ளது. தனியார் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் சுமார் 4,000 கோடி கருப்பு பண முதலைகளுக்கு வழங்கபாட்டிருக்கலாம் என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதுச்சேரியிலும் அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வங்கிகளில் நடைபெற்ற அதன் அன்றாட பணப்பரிவர்த்தனையில் தற்போது 25% கூட நடைபெறவில்லை. அனைத்து வங்கிகளும் முடங்கியுள்ளது.

இந்த பின்னணியில் இருந்து, அந்த செஞ்சட்டை அணிந்த தோழர்கள் ஏன் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச் செயலர் தோழர் பழனிசாமிக்கு மதியம் ஒரு மணியளவில் மாவட்ட கண்காணிப்பாளர் அலவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அவரிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், நீங்கள் செய்யும் பிரச்சாரத்தை நிறுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளனர்.

அதற்கு, நாங்கள் பிரசுரம் போட்டு விட்டோம். அதனை விநியோகிக்காமல் பாதியில் நிறுத்துவது முறையல்ல என்று கூறியுள்ளார். இந்த அதிர்ச்சியான பதிலை கேட்டு பணிவாக பேசிய காவல்துறை அதிகாரி, வடமாநிலங்களில் பெரும் கலவரமாக உள்ளது. தற்பொழுது நிலைமை இங்கு மட்டும் தான் சீராக உள்ளது. வங்கி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க கோரி எங்களிடம் வங்கி மேலாளர்கள் மனுக்கள் அளிக்கிறார்கள். இந்த சூழலில் உங்களுடையை பிரச்சாரம் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் உள்ளது எனவே தயவு செய்து நிறுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளார்.

அதனை மறுத்து, நாங்கள் அச்சடித்துள்ள பிரசுரத்தை கொடுத்தே தீருவோம் என்று உறுதியாக கூறியதும், உங்களை கைது செய்வேன் என்று மிரட்டியுள்ளார் போலிசு. முடிந்தால் கைது செய்யுங்கள் என்று தோழர்கள் பிரசுரத்தை விநியோகித்துள்ளனர்.

கருப்பு பண ஒழிப்பு ஒரு மோசடி என்பது நாளுக்கு நாள் அம்பலமாகி வரும் சூழலில் மக்கள் அமைதி காப்பது அவசியமற்றது. தற்பொழுது அமைதியாக இருப்பதென்பது நாளை நம் ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்படும் என்பதற்காக உதாரணம் தான் காவல்துறையின் மிரட்டல்.

நாம் ஒவ்வொருவரும் நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது. பாசிஸ்டுகளுக்கு எதிரான, சர்வாதிகாரத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த வேண்டிய தருணம் இது.

ஒரு கவிஞர் கூறுகிறார். அவர்கள் முதலில் கம்யுனிஸ்டுகளை கொன்றார்கள் .நான் போராடவில்லை. ஏனென்றால் நான் கம்யுனிஸ்ட் இல்லை. சோஷலிஸ்ட்களை கொன்றார்கள். அப்பொழுதும் நான் போராடவில்லை. ஏனென்றால் நான் சோஷலிஸ்ட் இல்லை. பிறகு எனது பக்கத்து வீட்டுக்காரரை கொன்றார்கள். அப்பொழுதும் போராடவில்லை. இப்பொழுது என்னை கொள்ள துடிக்கிறார்கள். ஆனால், எனக்காக போராட எவரும் இல்லை.

எனவே போராடுங்கள்! போராட்டத்தை தவிர வேறு குறுக்கு வழி இல்லை.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உங்களை அறைகூவி அழைக்கின்றது! அணி திரளுவோம்!!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்கள்.

கோத்தகிரி : கருப்புப் பண ஒழிப்பு மோடியின் மோசடி! மக்கள் அதிகாரம் பிரச்சாரம்.

டந்த மாதம் 08-11-2016 அன்று 8.00மணிக்கு ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று மோடியரசு அறிவித்தது. அதனால் சாமளிய மக்கள் வேலையில்லாமல் தொழில் செய்யாமல் கையிலிருந்த சிறிய தொகையை கூட வங்கியில் போட்டு திரும்ப பெறவதற்கு ஏ.டி.எம்-வாசலிலும், வங்கி வாசலிலும் பிச்சைக்காரர்களைப் போல் நிற்க வைத்தது. இந்த நிலை மேலும் மேலும் சமவெளி மக்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். அதன் பாதிப்பை மக்களிடம் பிரசுரமாக கொண்டு செல்ல கோத்தகிரி தாலுக்கா பகுதியில் 7-இடங்களில் தெருமுனை பிரச்சாரத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் கோத்தகிரி பகுதியில் மக்கள் அதிகாரம் போஸ்டர் ஒட்டினாலே, உடனே இரவு வேலை (போஸ்டர்களை கிழிப்பது) செய்யும் போலீசு, அனுமதி மறுத்தது.

நீங்கள் அனுமதி மறுத்தால் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்ற போது ஒரு இடத்தில் மட்டும் அனுமதியளித்தனர். இதையொட்டி 11-12-2016 ஞாயிறு காலை 11.30 மணியளவில் மார்க்கெட் பகுதியில் மக்களிடம் பிரசுரம் வினியோகித்தும், பறையடித்தும் பிரச்சாரத்தை தொடங்கினோம். பிரச்சாரத்தை தொடங்கி வைத்து தோழர்.முரளி அவர்கள் தோழர் ரவியை அழைத்தார்.

PHOTOS  ARPATTAMஅதன் பிறகு “ நாடு முன்னேறுது மோடி முழங்குறாரு” என்ற பாடல் ஒலி பரப்பப்பட்டது. காவல் ஆய்வாளர் பாட்டு போட வேண்டாம் நீங்கள் தான் நன்றாக பேசுகிறீர்களே பேசுங்கள் என்றார். அதை பொருட்படுத்தாமல் பாடலும் தோழர் மருதையன் பேசிய கருப்பு பணம் பற்றிய உரையை ஒலி பரப்பப்பட்டது. பின்னர் தோழர் ரவி அவர்கள் தலைமை தாங்கி மக்கள் அதிகாரத்தின் தோற்றம் எடுத்துக் கொண்ட வேலைகள் என்று மக்கள் அதிகாரத்தை அறிமுகப்படுத்தி பேசினார். பின்னர் ஒருங்கிணைப்பாளர் தோழர்.ஆனந்த்ராஜ் மோடி அரசின் டிஜிட்டெல் பாசிசத்தை விளக்கி பேசினார். ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழகத்தில் 3 இலட்சம் பேர் வேலை இழந்து உள்ளனர். ரூபாய் 500 மற்றும் 1000 கூலிக்கு வேலை செய்தாலும் கூட காசோலையாக கொடுக்கப்படுகிறது.

அதை வாங்க ஒரு நாள் வங்கியில் செலுத்துவதற்கு ஒரு நாள் பணமாக பெற ஒருநாள் என்று வேலைக்கு செல்லமுடிவது இல்லை. இதுவரை அப்பாவி ஏழை மக்கள் நூற்றுக்கு மேல் இறந்துள்ளார்கள். கருப்பு பண ஒழிப்பு என்பது எல்லாம் சாமானிய மக்கள் பணத்தை கார்ப்ரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்குவதற்காகவே, வங்கி பரிவர்த்தனைக்கு மாற சொல்கிறார்கள். மோடி அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்தால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது ஏழை மக்கள் பணத்தை வழிப்பறி செய்யும் திட்டம் தான். எனவே ஏழை எளிய மக்களை கார்ப்பரேட்டுக்கு காவல் கொடுக்க துடிக்கும் மோடி அரசை தூக்கி எரிந்து மக்கள் அதிகாரத்தை நிறுத்துவதே நமது எதிர்கால கடமையாக உள்ளது என்று உரையாற்றினார். மக்கள் பல பேர் 30 நிமிடத்திற்கு மேல் பிரச்சாரத்தை கவனித்துச் சென்றார்கள். இறுதியாக தோழர் வெங்கடேஷ் நன்றியுரையாற்றினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம். கோத்தகிரி.