privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகளக் கணிப்புகருப்புப் பணம் : மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள்

கருப்புப் பணம் : மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள்

-

பா.ஜ.க அரசின் ரூபாய் மதிப்பழிப்பு நடவடிக்கை ஆரம்பித்து மூன்று வாரங்களுக்கு பிறகு கருத்துக் கணிப்பு ஒன்று நடத்த முடிவு செய்தோம். பொதுவான ஊடக செய்திகள், நேரடி அனுபவங்கள், ஆங்காங்கே மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் ஆய்வு செய்து சுமார் 25 கேள்விகளை தெரிவு செய்தோம். அதையும் பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு 13 கேள்விகளாக சுருக்கினோம்.

எங்களுடைய நோக்கம் கருப்புப் பணம் குறித்து மக்களுக்கு என்ன தெரியும், மோடியின் அறிவிப்பு குறித்து என்ன கருதுகிறார்கள், இந்த நடவடிக்கை என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் – ஏற்படுத்தாது என்பதை துல்லியமாக கண்டுபிடிப்பது. அதே நேரம் முதலாளித்துவ ஊடகங்கள் – நிறுவனங்கள் பின்பற்றும் குறிப்பிட்ட பதிலை வாங்குவதற்காகவே தயாரிக்கப்படும் கேள்விகள்-சர்வேக்களுக்கு மாறாக, உண்மை நிலவரத்தை கண்டுபிடிக்கும் வண்ணம் கேள்விகள், அனைத்து கருத்துக்களுக்கும் வாய்ப்பு அளிக்குமாறான பதில்களையும் உள்ளடக்கி தயாரித்தோம்.

பிறகு யாரிடம் எடுப்பது என்ற பிரச்சினை. சாதாரண மக்கள், நடுத்தர வர்க்கம், மாத அதிக ஊதியம், குறைந்த மாத ஊதியம், தினசரி ஊதியம், மாணவர்கள், இல்லத்தரசிகள், சிறு வணிகர்கள் போன்ற பெரும்பான்மை மக்களை சென்றடைவதற்கு திட்டமிட்டோம். அதன்படி சென்னை, வேலூர், திருச்சி, கோவை, தஞ்சை, மதுரை ஆகிய நகரங்களில் பகுதிகள் தீர்மானிக்கப்பட்டன.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
வினவு கருத்துக் கணிப்பில் ஆர்வத்துடன் பங்கேற்ற ஆட்டோ தொழிலாளிகள்,சென்னை.

சென்னையில் எம்.எம்.டி.ஏ காலனி மற்றும் மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி குடியிருப்புக்கள், இரு பகுதிகளிலும் கடைத்தெரு, சந்தை போன்ற பொது இடங்கள்; திருச்சியில் திருவெறும்பூர், சுப்ரமணியபுரம், வயலூர் போன்ற புறநகர் பகுதிகளின் குடியிருப்புகள், கடைத்தெருக்கள், ஏ.டி.எம் வரிசைகள், பிஷப் ஹீபர் கல்லூரி; தஞ்சையில் புது பேருந்து நிலையம், கடைத்தெரு, கட்டிடத் தொழிலாளிகள், மானோஜிப்பட்டி குடியிருப்பு; மதுரையில் நீதிமன்ற வளாகம், மகவுப் பாளையம் – எல்லீசு நகர் – பழங்காநத்தம் குடியிருப்புக்கள், கடை வீதிகள், ஏ.டி.எம் வரிசைகள்; கோவையில் சூலூர், கவுண்டம்பாளையம், துடியலூர் குடியிருப்புகள்; வேலூரில் பழைய பேருந்து நிலையம், புது பேருந்து நிலையம்; ஆகிய இடங்களில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.

மொத்தமாக 85 தோழர்கள் கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். சில இடங்களில் ஒரு நாளும் சில ஊர்களில் இரு நாட்களும் கருத்துக் கணிப்பு நடைபெற்றன. சென்னையில் 12.12.2016 அன்று வீசிய புயலுக்கு முந்தைய நாளில் எடுக்கப்பட்டது. மற்ற ஊர்களில் அதே நாளிலும் அடுத்து வரும் இரு நாட்களிலும் எடுக்கப்பட்டன. கருத்துக் கணிப்பை அனுபவம் வாய்ந்த தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.

சென்னையில் வினவு செய்தியாளர் குழு, ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்களும் மற்ற நகரங்களில் ம.க.இ.க தோழர்களும் பங்கேற்றனர். களத்திற்குச் செல்லும் தோழர்களின் அரசியல் அமைப்பு பின்புலம் அறிமுகமாகாத வண்ணம் பகுதிகள் தெரிவு செய்யப்பட்டன. எங்கள் படிவங்களை நிரப்பிய மக்களில் மூன்று பேர் மட்டும் தோழர்களை ‘இன்னார்’ என்று கண்டு பிடித்தனர். அதே நேரம் அந்த மூன்று பேரும் அதற்காக தமது கருத்தை மாற்றிக் கொள்ளாமலேயே படிவங்களை நிரப்பினர்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
படியில் அமர்ந்து படிவத்தை நிரப்புகிறார் ஒருவர், சென்னை

வீடுகளில் உள்ள பெண்கள், சாதாரண மக்கள் பலரிடம் கேள்விகளைக் கேட்டும், புரிய வைத்தும் பதில்கள் நிரப்பப்பட்டன. நடுத்தர வர்க்கத்தினர் அவர்களே பதிவு செய்தனர். ஏ.டி.எம் வரிசைகளில் நின்றோர் கொலை வெறியுடன் கருத்துக்களை பேசிய வண்ணம் ஆவேசத்துடன் படிவங்களை நிரப்பினர். திருநங்கைகள் இருவரும், தமிழ் தெரிந்த சில வெளிமாநிலங்களைச் சேர்ந்தோரும் இக்கணிப்பில் பங்கேற்றிருக்கின்றனர்.

செய்தியாளர்கள் பல்வேறு சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டனர். சந்திக்கும் மக்களின் வயது, பாலினம், தொழில் மற்றும் கட்சி சார்பு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வது, முடிந்த வரை அனைத்துப் பிரிவு மக்களின் கருத்துக்களும் பிரதிபலிக்கும் வகையில் கருத்துக்கணிப்பை நடத்துவது என அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருந்தது.

கருத்துக்களை அறிந்து அதை வெளியிடுவதோடு, நாங்களே விரும்பாத கருத்தாக இருந்தாலும் கூட அது ஏன் மக்களிடம் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதையும் அதற்கான சமூக பொருளாதார பின்புலத்தையும் ஆய்வு செய்வதே எமது நோக்கமாக இருந்தது. இந்த பகுதி அடுத்த பாகத்தில் வெளிவரும். முதலில் கருத்துக் கணிப்பு யார் யாரிடம் எங்கே என்ன பிரிவினரிடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விளக்கப் படங்களைப் பாருங்கள்.

_______

சர்வேயில் பங்கேற்ற மொத்த மக்கள்

Ques1-total-per

____________________

சர்வேயில் பங்கேற்ற மக்கள் இடம் வாரியான எண்ணிக்கை மற்றும் சதவீதம்

2ques-city

____________________

சர்வேயில் பங்கேற்ற மக்கள் வயது வாரியான விவரம்

Ques3-age

____________________

சர்வேயில் பங்கேற்ற மக்களின் வருமான ரீதியிலான பிரிவு எண்ணிக்கை மற்றும் சதவீதம்

Backup_of_chart1

____________________

சர்வேயில் பங்கேற்ற மக்களின் நகரம், கிராமம் சதவீதம்

Backup_of_chart2

____________________

சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் நாளிதழ் படிக்கும் பழக்கம்

Backup_of_chart3

____________________

சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் டி.வி செய்தி பார்க்கும் பழக்கம்

 Backup_of_chart4

____________________

சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் நாளிதழ், டி.வி செய்தி இரண்டும் பார்க்கும் பழக்கம்

 Backup_of_chart5

____________________

சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் கட்சி ஆதரவு

Backup_of_chart6

____________________

ருத்துக் கணிப்பு முடிந்த பிறகு அனைத்து படிவங்களையும் கணினியில் பதிவு செய்யும் இமாலய பணி அச்சுறுத்தியது. அடுத்த நாளே வந்த வர்தா புயல் எமது பணியை பெரிதும் பாதித்தது. பிறகு தகவல் பதிவு செய்வதற்கான மென்பொருளை தயார் செய்து பல தோழர்கள் தமது அலுவலக பணிகளை முடித்து விட்டு கணினியேற்றம் செய்தனர். ஒரிரு தோழர்கள் இதற்காக கடுமையாக உழைத்தனர். பிறகு தகவல் பதிவு முடிந்து அதை பல்வேறு முறைகளில் சரிபார்த்து, பல்வேறு முறைகளில் இணைத்து ஆய்வு முடிவுகளை எடுக்கும் பணி நடந்தது. இறுதியாக வரைபடங்களை தயாரித்து அனைத்தும் சர்வே முடிவுகளாக உங்கள் பார்வைக்கு வருகிறது.

அனைத்து இடங்களையும் சேர்த்து இந்த கருத்துக் கணிப்பிற்கு ஆன செலவு, படிவம் தயாரிப்பு, எழுது பொருள் செலவு, உணவு தேநீர் செலவு அனைத்தும் சேர்ந்து ரூ. 6,000த்திற்குள் மட்டும்தான். சென்னை சர்வேயில் பங்கேற்ற தோழர்கள் பலர் தமது காலை, மதிய உணவை அம்மா உணவகத்தில் முடித்தனர். அதுவும் அன்றைக்கு ஜெயலலிதா மரணத்தை ஒட்டி அங்கே இலவசமாக வழங்கப்பட்டது.

பொதுவாக கருத்துக் கணிப்புக்கான செலவு என்பது சந்திக்கப்படும் மக்களின் தலைக்கு இத்தனை ரூபாய் என்று தீர்மானிக்கப்படுகிறது. மேலோட்டமான சர்வே, விரிவான சர்வே, ஆழமான சர்வே என்று இதற்கு முதலாளித்துவ உலகம் விலையை நிர்ணயித்திருக்கிறது. வினவு சர்வேயை அதோடு ஒப்பிட்டுப்பார்த்தால் தலைக்கு 1000 ரூபாய் என்று வைத்தால் முப்பது இலட்சம் வருகிறது. அதையே ரூ.6000 செலவில் உங்களுக்குத் தருகிறோம்.

கருத்துக் கணிப்பில் கேட்க்கப்பட்ட கேள்விகள் – அதற்கு மக்கள் அளித்த பதில்கள்:

1. எல்லையில் வீரர்கள் கஷ்டப்படும் போது ஏ.டி.எம்.மில் நிற்க உனக்கு என்ன கேடு என்ற கேள்வி

ques1-army

____________________

2. ஜெயலலிதா, சசிகலா, சன் டி.வி மாறன்களின் கருப்புப் பணத்தை மோடி கைப்பற்றுவாரா?

ques2-modi-capture

____________________

3. கருப்பு பணத்தில் 50% அரசுக்கு கொடுத்துவிட்டு 50% வைத்துக் கொள்ளலாம் என்று சென்ற வாரம் மோடி அரசு புதிய சட்டம் கொண்டு வந்திருப்பது சரியா, தவறா?

ques3-new-law

____________________

4. பார்ட்டிசிபேட்டரி நோட் என்பது பற்றி தெரியுமா?

ques4-participatry-note

____________________

5. கருப்புப் பணம் அதிகமாக இருப்பது எங்கே?

ques5-blackmoney

____________________

6. ரஜினி, அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் வாங்கும் சம்பளம் எத்தகையது?

ques6-actor-salary

____________________

7. மோடியின் நடவடிக்கையால் அரசு அலுவலகங்களில் இலஞ்சம் ஒழியுமா?

ques7-bribe

____________________

8. அண்ணாச்சி கடைகளில் நீங்கள் எந்த முறையில் பொருள் வாங்க விரும்புகிறீர்கள் ?

ques8-department-store

____________________

9. இனிமேல் தனியார் பள்ளி / கல்லூரிகளில் கருப்புப் பணமாக வாங்கப்படும் கட்டாய டொனேசன் நிறுத்தப்படுமா?

ques9-school-college

____________________

10. பி.ஜே.பி., காங்கிரஸ் கட்சிகளுக்கு முதலாளிகள் கொடுக்கும் நன்கொடை

ques10-parties

____________________

11. மோடி நடவடிக்கையால் பாதிப்பிருந்தாலும் நீங்கள் ஏன் போராடவில்லை?

ques11-affested

____________________

12. மோடியின் நடவடிக்கையால் சிறுதொழில்கள், சிறு வணிகம் தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. என்ன கருதுகிறீர்கள்?

ques12-small-industry

____________________

13. நீங்கள் எத்தனை நாட்கள் வங்கியின் முன் வரிசையில் நின்றீர்கள்?

ques13-queue

____________________

“அரசியல்வாதிங்க கஸ்டப்படறாங்களா? எங்க சார்.. ஒரு அரசியல்வாதி கஸ்டப்படறத காட்டுங்க பாக்கலாம்? வயசாளி ஜனங்கதான் சார் லைன்லே நின்னு செத்து விழறாங்க? அந்த ஆளுக்கு ஒரு மனசாட்சி இருக்காதா… இத்தினி ஜனங்க செத்துப் போயிருக்காங்களேன்னு உறுத்தாதா? என்ன சார் ஜென்மம்”

“இல்லைங்க.. இப்படியெல்லாம் கொஞ்சம் நாள் சிரமங்கள் இருக்கும், அதைப் பொறுத்துக்கிட்டா எதிர்காலம் நல்லா இருக்கும்னு தானே மோடி சொல்றாரு? கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டாமா?”

“ஒழிக்கட்டும்.. யாரு வேண்டாமின்னு சொன்னா? ஆனா இவரா ஒழிக்கப் போறாரு? அம்மா செத்து மாலை போட வந்தவரு.. நேரா போயி சசிகலா மண்டைய நீவிக்கிட்டு நிக்கிறாரு. இவரு எங்கேர்ந்து கருப்புப் பணத்தை ஒழிச்சிடப் போறாரு?”

– வினவு சர்வேயில் தனியார் பள்ளி ஆசிரியையின் கருத்து

சிறுபான்மை என்றாலும் கணிசமான மக்கள் “மோடியின் நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கானதே” என்று நம்பினர். அவ்வாறு நம்பியவர்களும் மோடியின் நடவடிக்கையை ஆதரிக்காதோரும் மதிப்பழிப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படும் முறையை மிகக் கடுமையாக விமரிசித்தனர். ஆச்சரியமாக, பாரதிய ஜனதா ஆதரவாளர்களும், மோடியின் இரசிகர்களுமே கூட இந்நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிந்து விடாது என்றே தெரிவித்தனர்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
வினவு கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பள்ளி ஆசிரியை, சென்னை

உழைக்கும் மக்களில் ஒரு சிறு பிரிவினர் தாம் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை ‘தேச நலனை’ முன்னிட்டு தாங்கிக் கொள்வதாக தெரிவித்தனர். என்றாலும், பெரும்பான்மை மக்கள் மோடியின் நடவடிக்கை கருப்புப் பண ஒழிப்புக்கானது அல்ல என்றே நம்புகின்றனர். பொருளாதார ஆய்வுகளில் இருந்தோ, பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையிலோ மக்கள் அந்த முடிவுக்கு வந்தடையவில்லை; மாறாக தமது சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளில் இருந்தே அந்த முடிவுக்கு வந்துள்ளனர். அதே நேரம் மோடியின் நடவடிக்கையை ஆதரிக்கும் கணிசமானோரின் கருத்தை உருவாக்கும் பணியில் ஊடகங்களின் செல்வாக்கு இருப்பதையும் நாம் மறுக்க இயலாது.

படிவத்தின் ஆரம்பத்தில் வயது, தொழில், பாலினம், கட்சி சார்பு, டி.வி – தினசரி செய்தி படிக்கும் பார்க்கும் வழக்கம் போன்ற அறிமுக விவரங்களைப் பெற்றுக் கொண்டோம். அதன் அடிப்படையில் இந்த சர்வேயின் முடிவுகள் குறித்த ஆய்வு அடுத்த பாகத்தில் வெளிவரும்.

”கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன்னு சொல்றாரு.. சரிங்க, ஆனா இது வரைக்கும் கருப்புப் பணம் வச்சிருக்கிற ஒரு அரசியல்வாதி, ஒரு காலேஜ் ஓனருன்னு எவனையுமே அரெஸ்ட் பண்ணலைங்களே? தோ பாருங்க.. இன்னிக்கு ஞாயித்துக் கிழமை.. கறியெடுக்க கையிலே காசில்ல. ரெண்டு மூணு நாளாவே வேலை செய்துட்டு இருந்த ஏ.டி.எம்கள் கூட வேலை செய்யாமே கிடக்கு. காலைலேர்ந்து ஒவ்வொரு தெருவா சுத்தி வந்தும் பாத்தாச்சி.. தோ அங்கே பாருங்க.. கார்லே போறான் அவன் கஷ்டப்படுவான்னா நினைக்கிறீங்க?”- என்கிறார் லெட்சுமணன்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் சென்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளார். லெட்சுமணன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு அருகே இருந்த அவரது நண்பர் மணிகண்டன் குறுக்கிடுகிறார்..

“ஏய்.. இருப்பா. தினத்தந்தியப் பாரு வேலூர்ல கோடி கோடியா புடிச்சிருக்கானாம்.. மோடி ஒருத்தனையும் விடமாட்டாருபா..” என்றவர், நம்மிடம் “சார், சுதந்திரத்திலேர்ந்து எத்தினி பேரு ஆண்டிருக்காங்க.. எவன் ஒருத்தனுக்காவது மோடிக்கு இருந்தா மாதிரி தில்லு இருந்திருக்கா? நீங்க வேணா பாருங்க.. இப்ப ரெண்டாயிரம் நோட்டு விட்டிருக்காரா.. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் அதை வாங்கிப் பதுக்குனதுக்கு அப்புறம் அதையும் செல்லாதுன்னு சொல்லிடுவாரு.” என்றார்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
வினவு கருத்துக் கணிப்பில் ஆர்வத்துடன் படிவத்தை நிரப்பும் இளைஞர்.

“அப்படியே செத்து செத்து வெளையாட வேண்டியது தானா? யோவ்.. புடிச்சதெல்லாம் புது நோட்டுய்யா.. கவருமெண்டுக்கே தெரியாம எப்டி அவனுக்கு கிடைச்சிதாம்? என்னாங்கடா கொரளி வித்த காட்றீங்க” என்று தனது நண்பரை முறைத்த லெட்சுமணன், நம்மிடம் திரும்பி “சார், எப்டி பழைய கருப்புப் பணத்தை புது கருப்புப் பணமா மாத்தினானுங்களோ அதே மாதிரி நாளைக்கு ரெண்டாயிரம் நோட்டு செல்லாதுன்னு அறிவிச்சா வேற நோட்டுக்கு மாத்திடுவானுங்க. கவர்மெண்ட்டே இதுக்கு உள்கை சார்” என்கிறார்.

நண்பர்களின் மோதலுக்கு காரணமாகி விடக்கூடாதென அவர்கள் நிரப்பிய படிவங்களை வாங்கிக் கொண்டு நகர்ந்தோம். மோடி ரசிகர் மணிகண்டன் நிரப்பியிருந்த படிவத்தைப் பார்வையிட்டோம் அதில் பள்ளி கல்லூரிகளில் செலுத்தப்படும் டொனேசன் இனிமேலும் கருப்பாகத் தான் இருக்கும் என்பதற்கான பெட்டியில் டிக் அடித்திருந்தார். இருபத்தைந்து வயதுக்கு கீழ் இருந்த இளைஞர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சி ஆதரவற்றவர்களாவோ, மோடி ரசிகர்களாகவோ இருந்தனர். அவர்களுமே கூட இந்நடவடிக்கை லஞ்சத்தை ஒழித்து “வெள்ளையான” இந்தியாவைப் படைக்கும் என நம்பவில்லை.. “ஒரு அட்டெம்ப்ட் தானே பாஸ்” என்றார் ஒரு இளைஞர். அதே நேரம் இந்த பிரிவினர் குறிப்பாக மாணவர்கள் நாட்டு நடப்பு குறித்த பொது அறிவு ஏதுமற்றும் இருந்தது உண்மை. அது குறித்த ஆய்வும் இரண்டாம் பாகத்தில் வரும்.

“ஒன்றுமில்லாததற்கு ஏதோவொரு முயற்சி எடுப்பது நல்லது தானே” என இளைஞர்கள் நினைக்கிறார்கள் என்றால் குடும்பத் தலைவிகளின் கருத்தோ அதற்கு நேர் எதிரான திசையில் இருந்தது.

“மோடி அக்கவுண்டுலே காசு போடுங்கன்னு சொன்னதை நம்பி 13 ஆயிரத்த போட்டேன் தம்பி. ரெண்டு நா மின்ன போயி கேட்டா காசு தரமாட்டோமின்னு பேங்குல சொல்லிட்டாங்க. நான் போயி மேனேஜரு கிட்டே அழுகவும் ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் தாரோமின்னு சொன்னாரு. அன்னிக்கு சொன்ன படி காசு குடுத்தாங்க. நேத்து காசு எடுக்கலாமுன்னு ஆட்டோவுக்கு போக வர 100 ரூபா செலவு செஞ்சிட்டு பேங்குக்கு போனா இல்லேன்னு திருப்பி அனுப்பிட்டாங்க” என்கிறார் 60 வயதான பாத்திமா என்கிற முதிய பெண்.

அவரது வீட்டு வாடகையை வசூலிக்க புரசைவாக்கத்திலிருந்து வந்திருந்தார் வீட்டு உரிமையாளர். அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
வினவு கருத்துக் கணிப்பில் தோழர் ஒருவரிடம் பதில்களைச் சொல்கிறார் பழம் விற்பனை செய்யும் அம்மா.

“சார் தப்பா நெனச்சிக்காதீங்க.. இன்னும் ரெண்டு ஒரு நாள்லே நானே கொண்டாந்து குடுத்துடறேன்” என்று அவரிடம் சொல்லி வழியனுப்பிக் கொண்டிருந்தார் பாத்திமா.

“மனுஷனுக்கு மனுஷன் இது கூட செய்யாட்டி எப்படிம்மா..” என்றவர் இரண்டடி நகர்ந்த பின் திரும்பி ”காசு கிடைச்சதும் கொண்டாந்து குடுத்துடுங்க.. இப்ப நான் வந்து போறதுக்கே இருநூறு ரூபா செலவு செய்திட்டேன்” என்றபடி நடையைக் கட்டினார்.

“பாருங்க தம்பி, இனி நான் வாடகை குடுக்க போக வர ஆட்டோவுக்கு செலவு செய்யனும். வயசாயிப் போச்சி.. பஸ்சுலயும் போக முடியாது. ஏதோ ஓனரு நல்ல மனுசனா இருக்கப் போயி பதினோராந்தேதி ஆகியும் வாடகை வசூலாகலைன்னு சத்தம் போடாம போறாரு” என்கிறார் பாத்திமா.

குடும்ப பாரத்தை தாங்குவதற்காக சிறிய நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பலருக்கும் சம்பளம் அளிக்கப்படவில்லை.

“சார் எங்க மேடம் தினசரி கொஞ்சம் கொஞ்சமா காசு எடுத்து அதையெல்லாம் சேத்து வைச்சி தான் சம்பளம் குடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க. இப்ப செலவுக்கு நாங்க எங்க சார் போவோம்? மோடி குடுப்பாரா சார்?” என்றார் தனியார் பள்ளி ஆசிரியை ப்ரமிளா.

அதே நேரம் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளும் அரசியல் – பொது அறிவில் பின்தங்கியிருப்பதை பார்க்கமுடிகிறது. அவர்களின் கருத்தை டி.விக்கள் உருவாக்குகின்றன என்பதை மறுக்க முடியாது.  இல்லத்தரசிகளில் கணிசமானோர் மோடியின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர். ஆனால் வேலைக்கு போகும் பெண்களோ மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர். இது குறித்த ஆய்வும் பின்னர் வரும்.

மக்களின் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அரும்பாக்கம் அண்ணா பெரும்பாதையில் இருக்கும் கறிக் கோழி கடைக்காரர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தோம்.

“யாரும் செலவு செய்யத் தயாரில்ல சார். கைலேர்ந்து போனா வராதுன்னு எல்லாரும் கிடைச்ச ஆயிரம் ரெண்டாயிரத்தையும் வீட்லேயே வைச்சி பாத்து பாத்து தண்ணி குடிச்சிட்டு இருக்கானுங்க. எங்க பொழப்பு நாறிடிச்சி சார்” என்றார்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
சமையல வேலையுடன் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் ஒரு தொழிலாளி!

அவருக்கு அக்கம் பக்கமாக கடை போட்டிருந்தவர்கள் தற்போது வியாபாரம் இல்லாமல் மூடி விட்டதாகத் தெரிவித்தார். “சார் இந்தக் கோழியெல்லாம் தாங்காது சார். வர வர தள்ளி வுட்டுடனும். தேங்கிடிச்சின்னா நம்ப கைக்காசு தான் போகும்” என்றவர், பகுதியில் இருந்த சில அசைவ உணவகங்களின் ஆர்டர் குறைந்த அளவிலாவது வந்து கொண்டிருப்பதால் தனது பிழைப்பு ஏதோ ஓடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவரிடம் ஸ்வைப் மிசின் வைத்துக் கொள்வதில் என்ன பிரச்சினை என்று கேட்டோம் “சார், நான் படிச்சதே அஞ்சாங்கிளாஸ் தான்.. அதுக்கெல்லாம் என்னா ரூல்சுன்னே தெரியாது சார்” என்றார்.

இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் ஏஜெண்ட் ஒருவர், வங்கி அட்டைகளைத் தேய்த்து வண்டி வாங்கிச் சென்ற தனது வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை நகல்களை ஒப்படைக்க வேண்டுமென அவரது வங்கி திடீரென சொன்னதாகவும், இப்போது அந்த வாடிக்கையாளர்களை எங்கே போய்த் தேடுவதெனத் தெரியவில்லை எனவும் புலம்பினார். மேலும், பல சந்தர்பங்களில் வங்கி அட்டைகளைத் தேய்த்து வண்டி வாங்கிச் சென்று இரண்டு நாட்கள் கழித்தே தனது கணக்குக்கு பணம் மாறுவதாகவும் தெரிவித்தார்.

“சரிங்க.. மோடி நாட்டோட பிரதமரு. அவரு சொல்றதுல எதுனா அர்த்தம் இருந்தாகனும் இல்ல. நீங்க கண்டிப்பா கார்டுல தான் வண்டி தருவேன்னு சொல்லிட வேண்டியது தானே?”

“சார் இதுக்கு இணையம் வேலை செய்யனும். அப்படியே வேலை செய்தாலும் பேங்க்கோட சர்வர் ஒழுங்கா இருக்கனும்.. அதாவது மூட்டைப்பூச்சி நசுக்கற மிசின் மாதிரி சார். அப்படியே ரெண்டு நாள் கழிச்சி நம்ம அக்கவுண்டுக்கு காசு வந்தாலும், ஒரு வாரத்துக்கு இவ்வளவு தான் எடுக்க முடியும்னு லிமிட் செட் பண்ணியிருக்காப்ல மோடி.. அப்புறம் நாங்க ரொட்டேசனுக்கு எங்கே போவோம்? எல்லாம் கேட்கிறதுக்கு நல்ல இருக்கும் அவ்ளோ தான் சார்” என்றார் சலிப்பாக.

மக்களின் துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது ஒரு பக்கமென்றால் அதை எந்த வகையிலும் எதிர்க்காமல் சமூகத்தில் நிலவும் அச்சுறுத்தும் மௌனமோ இன்னொரு புறம். அது குறித்த கேள்வியும் படிவத்தில் உண்டு. அதில் பெரும்பாலானோர் வேறு வழியில்லை என்றே தெரிவித்தினர்.

திருச்சியில் முதல் கேள்விக்கு சரி என்றும், தவறு என்றும் டிக் அடித்தவர்களிடம் விளக்கம் கேட்டு அவர்கள் அளித்த பதில் மூன்று வகையாக இருந்தது.

அ.தி.மு.க-பி.ஜே.பி இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் இராணுவ வீரர்கள் நாட்டுக்காக நிற்கின்றனர் நாம் ஏ.டி.எம்-ல் நிற்பது ஒன்றும் தவறு இல்லை. என்று கூறினார்கள்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
வினவு கருத்துக் கணிப்பில் பங்கேற்ற நடுத்தர வர்க்க மக்கள், சென்னை

கட்சி சாராத அரசு ஊழியர்கள், வியாபரிகள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஓரளவு அரசியல் கண்ணோட்டம் உள்ளவர்கள் இராணுவ வீரர்கள் சம்பளத்திற்காக நிற்கின்றனர் எங்களது பணத்தை எடுக்க நாங்கள் ஏன் நிற்க வேண்டும்? வேலைகளை விட்டுவிட்டு இங்கு வந்து காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு எத்தனை முதலாளிகள் காரை ரோட்டில் போட்டு விட்டு  நிற்கிறார்கள்? நீங்களே பாருங்கள். மோடி வந்து வரிசையில் நிற்பாரா? இல்லை. இந்த ஆளு நிர்வாக திறமையில்லாத நபருங்க  இந்த இரண்டாயிரம் பணத்திற்காக தினமும் இந்த வெயிலில் நிற்க வேண்டியுள்ளது, என்று கூறினார்கள்.

இன்னும் சிலபேர் அரசுக்கு சார்பாக சர்வே எடுக்கிறீங்களா? என்று கேட்டனர். இல்லை ஊடக ஆராய்ச்சி என்று ஏதோ சொன்னதும் ஒருவர் உங்களால் தான் இந்த மோடி ஆட்சிக்கு வர முடிந்தது. விளம்பரம் செய்தே பிரதமரா வந்துவிட்டான் பாவி, உங்களை முதலில் உதைக்க வேண்டும் என்றார். சிலர் மோடியின் நோக்கமே வரி கூட்டுவதற்கு தான் இப்படி செய்கிறார் என்றனர்.

மூன்று நபர்கள் படிவத்தில் அரசியல் கட்சிகளின் பெயர்களை வெளிப்படையாக போடக்கூடாது (காங் + பா.ஜ.க வாங்கும் கருப்புப் பண நன்கொடை குறித்த கேள்வி) எவனாவது சண்டைக்கு வருவார்கள், அதனால் பெயர்களை தவிர்த்து விடுங்கள் என்றனர். சிலர் ஏ.டி.எம் வரிசையில் நிற்பவர்கள் கருப்பு பணம் வைத்துள்ளவர்களா? என்ற கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றனர்.

திருச்சியின் மைய SBI வங்கிக்கு முன்  எடிஎம் வரிசையில் உள்ளவர்களிடம் சர்வே எடுத்த போது தான் மோடியை கெட்டவார்த்தைகளில் திட்டினார்கள். முக்கியமாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக படியான பாதிப்பில் உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

அதே நேரம் குடியிருப்பிலோ, மதுரை நீதிமன்ற வளாகத்திலோ மோடியை ரசிக்கும் மக்களும் உண்டு. கோவையில் பா.ஜ.க தரப்பினரும் டி.வி விவாதங்களில் பேசுவது போலவே சொல்கின்றனர். இருப்பினும் படிவத்தில் அவர்கள் அனைத்திற்கும் மோடிக்கு ஜே போடவில்லை.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
பழ வியாபாரத்தோடு படிவத்தையும் படித்து நிரப்புகிறார் ஒரு இளைஞர், சென்னை

கட்சி சார்பு என்று பார்த்தால் எங்களது கணிப்பில் மொத்த மக்களில் 4 சதவீதம் பேர் பா.ஜ.க-விற்கு ஆதரவு என்றே தெரிவித்திருக்கின்றனர். அவர்களுடைய கருத்துரைக்கும் பாணியும், அ.தி.மு.கவினரின் பாணியும் பெரிய அளவில் வேறுபடவில்லை. ஆனால் அ.தி.மு.கவில் சாதாரண மக்களும் பா.ஜ.கவில் நடுத்தர வர்க்கமும் பெரும்பான்மையாக இருக்கின்றனர். தி.மு.க செல்வாக்கு அதிகம் இருந்த தஞ்சை, வேலூர் பகுதிகளில் கருத்துக்கள் மற்ற ஊர்களை விட மாறுபட்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது.

சென்னையில் சொந்தமாக பட்டரை வைத்திருக்கும் மெக்கானிக் ஒருவரை சந்தித்தோம். குழந்தைக்கு உடல் சுகமில்லை எனவும், கடந்த மூன்று நாட்களாக வங்கியில் பணம் எடுக்க முடியாமல் தவிப்பதாகவும், தெருவில் போவோர் வருவோரில் எப்போதோ பார்த்து சிரித்தவர்களைக் கூட விடாமல் கைநீட்டி காசு கேட்டும் கிடைக்கவில்லை என்றும், கிட்டத்தட்ட பிச்சைக்காரனின் நிலைக்கு தான் வந்து விட்டதாகவும் சொல்லிக் கண்கலங்கினார்.

“சரிங்க… கஸ்டப்படறேன்னு சொல்றீங்க. இதுவரைக்கும் நாங்கள் பார்த்த பலரும் இதையே தான் சொல்றாங்க ஆனா ஏன் யாருமே போராட முன்வரலை?”

“வேற வழியில்ல சார்..” என்றவர் அவரிடமிருந்த படிவத்தை நம்மிடம் தந்து விட்டு தலையைக் குனிந்து கொண்டார்.

மொத்தத்தில் மிகப் பெரிய ஏமாற்றம் ஒன்றை மக்களிடம் காண முடிந்தது. அதோடு கூட எப்போது வெடிக்கும் எனத் தெரியாத எரிமலை ஒன்று உள்ளே குமைந்து கொண்டிருப்பதையும் கண்டுணர முடிந்தது.

  • தொடரும்

தகவல் தொகுப்பு: வினவு செய்தியாளர்கள் மற்றும் ம.க.இ.க மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, வேலூர் தோழர்கள்
வரைபடம், வடிவமைப்பு: துரை – கலா
களப்பணி: ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் மற்றும் வினவு செய்தியாளர்கள்
மென்பொருள், தகவல் பதிவு: வினவு தொழில்நுட்பக் குழு
ஆய்வு – ஒருங்கிணைப்பு: வினவு கருத்துக் கணிப்புக் குழு

  1. வாக்களித்தவர்களின் ப்ரொபைலில்
    வருமானவரி கட்டுவோர் எத்துனை காட்டாதோர் எத்துனை ?
    என்கின்ற தகவல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .

    குறுகிய கால நோக்கில் சரியான திட்டமிடுதல் இல்லாமல் மாட்டி கொண்டார்கள் !
    ஆர் பீ ஐ கவர்னர் சரியாக எடுத்து உரைக்கவில்லை . அல்லது இதன் வீரியம் புரியவில்லை .

    ஆனாலும் தவறை திருத்தி கொண்டு , தாள் இல்லா பரிவர்த்தனையை ஊக்கு விக்கும் செயலில் இறங்கி உள்ளார்கள்

    நேர்மை நியாயம் அடிப்படையில் பார்க்கிறீர்களா
    பொருளாதார அடிப்படையில் பார்க்கிறீர்களா
    அரசியல் அடிப்படையில் பார்க்கிறீர்களா
    என்பதை கீழ்கண்ட இரண்டு செயல்களையும் ஒப்பிட்டு உள்ளேன்
    இரண்டுமே கருப்பு பணத்தை புழக்கத்திற்கு கொண்டு வர செய்யப்பட்டவை

    500,1000 தாள் மாற்றம்

    Morally Right
    Economically Stupid
    Politically Suicidal

    பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்

    Morally Wrong
    Economically Smart
    Politically a Gain

    • கோயிலில் மணி அடித்து ஏழைகளின் வயிற்றிலடித்து உண்டியலைச் சேமிக்கும் இராமன்கள் வரியா கட்டப்போகின்றனர். கடவுளிடமே பிடுங்கித் தின்னும் இராமன்களுக்கு ரூபாய் நோட்டு ஒழிப்பு என்ன பிரச்சினையைக் கொண்டுவந்துவிட முடியும்….வந்த பணத்தை சிட்டி பேங்கிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட அவாள்களின் ஏதோ ஒரு வங்கியிலோ பணத்தை டெபாசிட் செய்யப்போகின்றனர்.

      வருமானவரி குறித்து விதந்தோதும் இராமன் அய்யா அவர்களே, ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்குப் பின் உங்கள் ஆதிக்கம் உள்ள கோயில்களில் வருமானம் குவிந்ததே அதுகுறித்து உம்மவாளிடம் கணக்கு கேட்டால் உம்மையும் சூத்திரனாக்கிவிடுவர்…எச்சரிக்கை….

      திருவரங்கம், பார்த்தசாரதி, மீனாட்சி அம்மன், கபாலீசுவரன் கோவில்களின் தாள் இல்லா உண்டியலை உம்மவர்களை உடனே அமல்படுத்தச் சொல்லுங்கள்….அப்புறம் இருக்கு மோடிக்கு ஆப்பு…..

      சிவன்சொத்து குல நாசம்….

  2. The demonetization is morally not right since all those people who held black money were given advance information before the scheduled date and they have converted their black money into white well before the scheduled date.It may be politically suicidal only if the people in the States expecting Assembly elections within a year are alert.The move was politically motivated in the garb of creating an economic miracle.The Govt has not corrected its faulty move.The genuine course correction would be to print and release enough currency for circulation.With 40%of the population not having bank accounts,rural areas and tribe belts not having bank branches,the informal sector dependent on cash transactions,cashless economy is simply not possible in India right now.

  3. இராமன் தாள் இல்லா பரிவர்த்தனையை இந்தியாவுக்கு நீங்கள் பரிந்துரை செய்யும் நிலையில் கீழ் கண்ட விசயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டீர்க்ளா ? பொதுவில் பணமில்லா பரிவர்த்தனை பற்றி பொத்தம் பொதுவாக பேசுவதால் யாருக்கும் பயன் இல்லையே! கருப்பு பணம் புழங்கும் (high volume money transaction)மேல் நிலை பரிவர்த்தனைகளை பற்றி பார்கலாமா! அவற்றை பணமில்லா பரிவர்தனைகளாக மாற்றவேண்டும் என்பதில் யாதொரு கருத்து வேறுபாடும் எனக்கு இல்லை. அதே நேரத்தில் இஞசி பூண்டு பேஸ்டு, சோப்பு , போன்ற பொருட்ட்களை வாங்க கூட திருவாளர் மோடி அவர்கள் பணமில்லா பரிவர்த்தனையை (POS இயந்திரங்களை ) பயன்படுத்த கூறும் விசயத்தின் பின்னணி என்னவென்றும் பின்பு பார்கலாம். (அடுத்த பின்னுட்டத்தில்)இப்ப (high volume transaction)மேல் நிலை பரிவர்த்தனைகளை பற்றி :

    1.கருப்புப் பணம் தினம் தினம் அதிகம் புழங்கும் இடம் எது வென்றால் பத்திரபதிவு அலுவலகத்தில் நிகழும் நில விற்பனை பரிவர்த்தனைகளில் தானே? ஆனாலும் அங்கு இன்னும் இந்தியாவில் பணம் தான் விளையாடிக்கொண்டு உள்ளது. அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்றால் இங்கு இருந்து தானே தொடங்க வேண்டும்!

    ௨. அடுத்து அதிக அளவு கருப்பு பணம் புழங்கும் இடம் எதுவென்றால் கோவில்கள் தானே! அனைத்து மத கோவில்களையும் தான் சுட்டிக்காட்டுகின்றேன். ஆனாலும் அங்கு கருப்பு பணம் பணமாக நேரடியாகவே அனுமதிக்கப்படுகிறதே இந்தியாவில்.கோவில்களில் உண்டியலுக்கு பதில் வங்கிகளை திறந்து அதில் கோவில்கள் பணத்தை பெற்றால் என்ன? அல்லது பக்தரின் வங்கிகணக்கில் இருந்து கோவிலின் வங்கி கணக்குக்கு பணம் பரிமார்ரம் செய்யபட்டால் என்ன?
    ஏன் இன்னும் மோடி உள்நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் இத்தகைய செயல்களை செய்யாமல் இருக்கின்றார். அவருக்கு இதுவெல்லாம் தெரியாது என்று நான் சிறுகுழந்தை போன்று நினைக்கவில்லை. ஆனாலும் காரணம் என்ன?

    3.கார் விற்பனை நிலையங்கள், மற்ற பெரும் பணம் புழங்கும் விற்பனை நிலையங்களில் பணம் முற்றிலுமாக விற்பனைகளில் பயன்படுத்தகூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் என்ன? அனைத்து விற்பனைகலுமே செக் மற்றும் பணமில்லா பரிவர்த்தனையாக மாற்ற மோடிக்கு தடை போடுவது யார்?

    இப்படி இன்னும் (high volume transaction)மேல் நிலை பரிவர்த்தனைகளை அடுக்கிகொண்டே போகலாம். ஆனால் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு மளிகை ,சோப்பு சிப்பு கண்ணாடி போன்ற அத்தியாவசியமான பொருட்களுக்கு எதற்காக பணமில்லா பரிவர்த்தனையை பரிந்துரை செய்கின்றது இந்த மோடியின் அரசு. ?

    இராமன் நீங்கள் இப்போது வாழும் முதலாளித்துவ நாட்டில் sales மற்றும் kind of transaction பற்றி கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்…. மேலே நான் சுட்டிக்காட்டிய மூன்று ப்ரிவ்ர்த்னைகளும் எப்படி நடக்கின்றன என்றும் எழுதுங்கள்.

    • இப்பொழுது அரசாங்கத்தின் நிலைப்பாடு ,தவறான திட்டமிடலால் விழைந்த செயற்கை , தாள் பணம் தட்டுப்பாட்டினால் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு கார்டுகளை பயன் படுத்த சொல்லி அறிவுறுத்துகிறார்கள் .

      தாள் இல்லா பரிவர்த்தனையை திட்டமிட்டு செயல் படுத்தினால் , நீங்கள் கூறுவது போன்ற இடங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் . ஆனாலும் கட்டாயப்படுத்துவது தனி நபர் உரிமைக்கு எதிரானது . வரி சலுகை கொடுத்து ஊக்கம் கொடுக்கலாம் .

      உண்மையில் இந்த கருப்பு பண , பினாமி பொருளாதாரத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட முக்கிய கருவி ஆதார் அட்டை திட்டம் . பொறுமையாக எல்லா அக்கவுண்ட் , லேண்ட் டாக்குமெண்ட்களை ஆதாரோடு இணைத்தால் போதும் . நந்தன் நீலகேணியின் தோலை தூர நோக்கில் தொடங்கப்பட்டது . இந்த திட்டமும் தனி நபர் உரிமைக்கு எதிரானது என்றாலும் கூட , கட்டுப்பாடற்ற நாட்டில் அதை தவிர வேறு வழி இல்லை

      • இந்தியாவை கட்டுபாடுகள் அற்ற நாடு என்று கூறி எழுததோம் கவிழுத்தோம் என்ற பண மதிபிழப்பு முடிவுகளை மோடி அரசு எடுப்பதனை விட பணமில்லா பரிவர்த்தனையை உயர் மதிப்பு விற்பனைகளுக்கு (above rs 20,000) செயல்படுத்துவது என்பது தானே கருப்பு பணத்தின் மீதான கட்டுப்பாடுகளை உறுதிபடுத்தும் மற்றும் கருப்பு பண நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும்? இப்போது பான் கார்டு எண் அவசியம் என்பது rs50,000 க்கு மேல் உள்ள விற்பனை பரிவர்த்தனை களுக்கு மட்டுமே என்று உள்ள நிலையை மாற்றி rs 20,000 க்கு மேல் உள்ள விற்பனை பரிவர்த்தனைகலுக்கு பான் கார்டு அவசியம் மற்றும் அவைகள் அனைத்துமோ பணமற்ற பரிவர்த்தனைகளாக தான் இருக்கவேண்டும் என்று சட்டதையோ , அவசர சட்டத்தையோ அரசு இயற்றினால் அதில் தனிமனித உரிமைகள் எந்த வகையிலும்பாதிக்கப் படாது அல்லவா?

        மோடி அரசு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் விசயத்தில் ஒரு அவசர சட்டத்தை தற்போது கொண்டு வந்து உள்ளது உங்களுக்கு தெரியும் என்று நினைகின்றேன். சம்பளங்கள் அனைத்தும் வங்கி கணக்கிலோ அல்ல்லது காசோலைகள் மூல்மாகவோ தான் அளிக்கவேண்டும் என்று புதிய அவசர சட்டத்த்தை இப்பொது நடைமுறை படுத்தியுள்ளது. அதில் எந்தவிதமான தனிமனித உரிமைகளும் மீரப்டவில்லை என்ற நிலையை வலியுறுத்தும் மோடியின் அரசு உயர் மதிப்பு விற்பனைகளுக்கு பணமில்லா பரிவர்த்தனையை நடைமுறை படுத்துவதால் தனிமனித உரிமைகள் பாதிக்கபடும் என்று எப்படி நம்புகிறது?

  4. India’s awful act underscores another piece of immorality. Money represents what people produce in the real world. It is a claim on products and services, just as a coat-check ticket is a claim for a coat left at the coat check in a restaurant or a ticket is for a seat at an event. Governments don’t create resources, people do. What India has done is commit a massive theft of people’s property without even the pretense of due process–a shocking move for a democratically elected government. (One expects such things in places like Venezuela.) Not surprisingly, the government is downplaying the fact that this move will give India a onetime windfall of perhaps tens of billions of dollars.By stealing property, further impoverishing the least fortunate among its population and undermining social trust, thereby poisoning politics and hurting future investment, India has immorally and unnecessarily harmed its people, while setting a dreadful example for the rest of the world.

  5. இராமன் ,வங்கி கணக்குக்கு பான் கார்டு எண் , ஆதார் எண் ஆகிய விவரங்களை கொடுத்த ஒரு நபர் கருப்பு பணத்தை கையாளவே முடியாது என்ற ரீதியில் தானே பேசிக்கொண்டு உள்ளீர்கள்! எங்க சென்னையில் தலைமை செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த ராவ்ஜி அவர்கள் இவை எல்லாமும் வைத்து இருந்தும் கருப்பு பணம் (ஊழல் பணம் தான் கருப்பகின்றது) என்ற முதலையின் மீது சவாரி செய்துகொண்டு தானே இருந்தார். அவரை எல்லாம் பான் கார்டும், ஆதார் அட்டையும் கட்டுப்படுத்தத்து ஏன்? கேள்வியை குதர்க்கமாக எடுதுக்கொள்லாதிர்கள் ! தமிழ் நாட்டின் உண்மை நிலவரத்தை தான் கூறிக்கொண்டு உள்ளேன். மேலும் டெல்லியில் இருந்து சென்னை வந்து இறங்கும் ஒரு நைஜீரிய நபர் லச்சகணக்கில் புதிய நோட்டுகளுடன் வந்து இறங்கியுள்ளார். என்னை போன்ற ஒரு எளிய மனிதனுக்கு பழைய நோட்டுகளை வங்கி கணக்கில் ௨௦௦௦ வரையில் மாற்றும் (நான்கு 500 ரூபாய் நோட்டுகள்) போதே பொறுமையுடன் என் ஆதார் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை என்னிடம் இருந்து வாங்கி என் கணக்குடன் இணைத்த அந்த வங்கி ஊழியரையும் , அந்த தகவல்களை அளித்த என்னையும் இவர்களின் செயல்கள் சிறுமை படுத்துவது போன்று தானே உள்ளது. அப்ப என்னை போன்ற எளியவர்கள் மீது மட்டுமே கருப்பு பணத்தின் மீதான் கட்டுப்பாடு பாயுமா? வல்லவன் எப்போதுமே அவன் வகுத்ததே வாய்கள் என்று கருப்பு பணத்துடன் ஆட்டம் போடத்தான் செய்வார்களா?

    மோடியின் பண மதிப்பு இழப்பு செயல் , ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவைகள் கருப்பு பணத்தை பணக்காரர்களை மற்றும் அதிகார வர்க்க அளவில் கட்டுபடுத்தாது என்றால் அவைகள் எளிய என் போன்ற இந்திய பிரஜைகளை மட்டுமே கட்டு படுத்தும் என்றால் பண மதிப்பு இழப்பு செயல் முலமாக ஊழலை ஒழிப்பேன், கள்ள நோட்டுகளை ஒழிப்பேன், கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று மோடி பறைசாற்றுவது எல்லாம் உண்மையில் ஏற்புடையது தானா? இல்லை என்றால் அவரின் இந்த செயலுக்கான உள் நோக்கம் என்னவாக இருக்கும் என்று நினைகின்றீர்கள் இராமன் ?

    • (ஊழல் பணம் தான் கருப்பகின்றது)—-> அரசு அதிகாரத்தில் இருபவர்களுக்கு கருப்பு பணம் என்பது அவர்களின் சம்பள பணம் அல்ல அல்லவா? கணக்கில் வரும் சம்பளத்துக்கு அவர்கள் வரிகட்டி தானே ஆகவேண்டும். அதனையும்(சம்பளத்தையும்) மிஞ்சி அவர்களிடம் உள்ள பணம் மற்றும் அசையும் அசையா சொத்துகள் என்பன ஊழல் பணம் தானே என்ற அடிப்படையில் பேசுகிறேன்.

      • கருப்பு பணம் :- சட்டத்திற்கு உற்பட்ட வகையில் சம்பாதித்து ஆனால் லாபத்திற்கு வரி கட்டாத பணம்
        ஊழல் பணம் :- சட்ட விரோதமாக சம்பாதித்த பணம் .

        இரண்டும் வேறு வேறு

        அடுத்து ரெட்டி போன்ற அவுட்லையர் சாம்பிள்களை வைத்து கொண்டு , திட்டத்தின் ரீச்சை எடை போடுவது தவறு . அடுத்து அவர் எவ்வளுவு கமிஷன் கொடுத்து புது நோட்டுகளை பெற்றார் என்பது தெரியாது .
        வெகுஜன கருப்பு பண பதுக்கல் பேர்வழிகள் நிறைய கமிஷன் கொடுத்தான் மாற்றுகிறார்கள் . இவை அனைத்தும் வங்கி அதிகாரிகள் , பெட்ரோல் பங்குகள் போன்ற பல ஓட்டைகள்மூலமாக திட்டம்நீர்த்துபோய் விட்டது .

        நூறு சதம் ஒரு திட்டம் அமல் படுத்தப்பட வேடனும் என்றால் நூறு சாதம் நேர்மையான அலுவலர்களை கொண்டுதான் செய்ய முடியும் .இதுதான் கம்ம்யூனிஸத்தின் இரும்புப்பிடி அரசிற்கும் பொருந்தும் .
        செயல் இழந்த நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து எல்லோரும் தவறிழைக்க தயக்கம் காட்டவில்லை.

        நீதித்துறையை கணினி மயமாக்கி , தீர்ப்புகளை விரைவுபடுத்தாவிட்டால் பிலிப்பைன்சு போன்ற மேங்கோ மேன் ஆட்சியை அமைத்து நாட்டை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடுவார்கள் .

        டிஜிட்டல் ஆடிட் டிரேயில் இருக்கும் என்றாலும் துணிந்து வங்கி அலுவலர்கள் தவறு இழைத்துள்ளார்கள் .
        இப்பொழுது அரசிடம் பிக் டாட்டா இருக்கிறது . அனலைஸ் செய்து முதலைகளை பிடிக்க பல வருடங்கள் ஆகும்

        அடுத்து பாண் கார்டு ஏன் இதை தடுக்க வில்லை என்று கேட்கிறீர் . பாண் கார்டு வைத்துள்ள வரி செலுத்துவோர் திருமணம் ,வீடு,கல்வி லஞ்சம் கொடுக்க போன்ற காரனுங்களுக்காக கட்டு காட்டாக பணத்தை எடுத்து வரி செலுத்த மறுப்பவர்களிடம் கொடுக்கிறார்கள். இவை எல்லாம் தாள் இல்லா வர்த்தகமாக மாறினால் தான் முடியும் .

        முடியாது என்று சொல்ல வேண்டாம் , எனது அயலார் இந்தியா சென்று வெற்றிகரமாக கிரகப்பிர வெசம்செய்து விட்டு வந்தார் .எல்லோருக்கும் சமபலத்தை ஆன்லைன் மூலமாக கொடுத்து உள்ளார.

        வீடு வாங்குபவர் ஏன் பணமாக தர ஒத்து கொள்கிறார் என்றால் , முத்திரை தாள் கட்டணத்தை சேமிக்க செய்கிறார் . இதனை மாற்றி டிஜிட்டலாக மாற்றப்படும் கட்டணத்திற்கு முத்திரை தாள் கட்டணம் கிடையாது என்று கூறினால் நல்ல பணமாக வைத்திருப்பவர் கருப்புப்பண பேர்வழிகளுக்கு தாள் பணமாக உதவி செய்ய மாட்டார். அடுத்து இவர்களிடம் இருந்து தாள் பணமாக பெற வேண்டும் என்றால் , விலையில் குறைப்பு செய்தால் மட்டுமே தாள் பணம் கொடுக்க ஒருவர் முன்வருவார் . விலை குறைப்பேயொரு டாக்ஸ் போலாகிவிடும் . இது போன்ற ஊக்கங்களை கொடுத்து தான் சமுதாயத்தை மாற்ற முடியும் .

        தற்போதுள்ள 50000 பாண் கார்டு லிமிட் என்பது ஏழைகளை தொந்தரவு செய்ய கூடாது என்னும் நோக்கில் கொண்டுவரப்பட்டது . அனைவருக்கும் ஆதார் வாங்கிவிட்டால் லிமிட்டை 5 ஆயிரமாக மாற்றி விடலாம் .

        //என்னை போன்ற ஒரு எளிய மனிதனுக்கு பழைய நோட்டுகளை வங்கி கணக்கில் ௨௦௦௦ வரையில் மாற்றும் (நான்கு 500 ரூபாய் நோட்டுகள்) போதே பொறுமையுடன் என் ஆதார் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை என்னிடம் இருந்து வாங்கி என் கணக்குடன் இணைத்த//

        இத்துணை நாளாக பாண் கார்டை ஏன் நீங்கள் இணைக்க வில்லை ?
        இப்பொழுது நீங்கள் குறைந்த வரி செலுத்தும் பார்டரில் உள்ளீர்கள் , நாளை கணினி நிறுவனம் ஆரம்பித்து நேர்மையாக வரிசெலுத்த ஆரம்பித்தாள் தான் மோடியின் செயலை பரராட்டுவீர்கள் .

  6. பணமே இல்லை எனும்போது கார்டை எப்படி தேய்ப்பது? 4 முதலாளிகளின் நலனுக்காக மக்களை தெருவில் நிறுத்தியிருக்கிறான் மோடி.மோடி ஒரு முட்டாள் என்பது நிரூபனமாகியிருக்கிறது.

  7. இராமன் மற்றும் மணிகண்டன் ,

    1. முன்னாள் தலைமை செயலாளர் வீட்டில் நடந்தது வருமான வரித்துறை ரைடு என்ற நிலையில் பார்க்கும் போது அவரிடம் இருபது வருமானத்துக்கு அதிகமான பணம் தான் என்ற நிலையில் தான் நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கபடுகிறது. ஏன் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மீதும் உள்ள வழக்கு வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் என்ற நிலையில் தான் வழக்கு சுப்ரீம் கோர்டில் தீர்ப்புகள் வழங்கப்படாத நிலையில் தொங்கிக்கொண்டு உள்ளது. இவற்றை எல்லாம்(ராவ் மற்றும் ஜெயா வைத்துள்ள சொத்துகள் ) ஊழல் சொத்து என்று நிருபிக்க ஆதாரங்களுக்கு எங்கே போவது? வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் என்ற நிலையில் விசாரணைகள் செல்லுமாயின் ஓரளவுக்காவது அவர்களின் தெரிந்த வருமானத்தின் அடிப் படையில் அவர்கள் கருப்பு பணம் வைத்து இருகின்றார்கள் என்று நிருபிக்க இயலும் அல்லவா? அந்த அடிப்டையில் தான் அவற்றை கருப்பு பணம் அல்லது கருப்பு பணத்தின் மூலம் வாங்கிய சொத்துக்கள் என்கின்றேன். செல்லா நோட்டு திட்டத்தால் தான் முன்னாள் தலைமை செயலாளர் வீட்டில் இருந்து கருப்பு பணம் கைபற்ற பட்டு உள்ளது என்று மணிகண்டன் கூறுவது நகைப்புக்கு இடமானது. ஒரு வேலை இந்த திட்டம் அமுலாக்கப் படுவதற்கு முப்பே வருமான வரித்துறை ரைடு நடைபெற்று இருந்தால் அவர்களிடம் இருந்த கருப்பு-ஊ ழல் பணம் கைபற்ற பட்டுதானே இருக்கும்!
    2. அடுத்ததாக அதிகாரிகள் ஊழல் மயமானவர்கள் என்றால் மோடியின் இந்த திட்டத்தால் நாட்டுக்கு என்ன நன்மை? செல்லா நோட்டுகளாக உள்ள கருப்பு பணம் எப்படி அரசின் கைகளுக்கு வந்து சேரும்? செல்லா கருப்பு பணம் கமிசன் அடிப்டையில் புதிய கருப்பு பணமாக மாற்றபட்டு மீண்டும் அதே கருப்பு பண முதலைகள் கைகளில் வந்து குவிகின்றதே தவிர அந்த பணம் இந்த திட்டத்தால் அரசிடம் வந்து சேரவில்லை அல்லவா? மோடியின் இந்த திட்டத்துக்கு பின் எத்துனை கோடி கருப்பு பணம் அரசால் கைபற்ற பட்டு உள்ளது என்ற விவரங்களை உங்களால் கொடுக்க முடியுமா இராமன் ? கிட்டத்தட்ட மோடியால் அறிவிக்கபட்ட அனைத்து செல்லா நோட்டுகளும் (15 லச்சம் வரையில்) வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்ற நிலையில் கருப்பு பணம் அனைத்தும் வெள்ளையாக்கப்பட்டு உள்ளது என்பது தானே உண்மை? (நேரடியாக பதில் அளிக்க முயலலாம் நீங்கள் இருவரும் )
    3. இந்தியாவில் வங்கி பரிவர்த்தனைகள் பற்றிய பிக் டேட்டா இருபது என்னவோ உண்மைதான். அந்த விவரங்ககளை டேட்டா மைனிங் மென்பொருளை கொண்டு ஆய்வு செய்ய அரசு தயாராக உள்ள்ளதா என்பதே இன்றைய கேள்வி?

    4. பான் கார்டு இருந்தும் கருப்பு [பணம் புழங்கும் நிலையை ஏற்றுக்கொண்டு அதற்கான காரணத்தை கூறுகின்றீர்கள். என்னுடைய விளக்கம் என்னவென்றால் மோடியையோ அல்லது அவரின் அரசையோ Rs 20,000 க்கு மேற்ப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கண்டிப்பாக பான் கார்டு அவசியம் , அத்தகைய பரிவர்த்தனைகள் பணமில்லா பரிவர்த்தனைக்ளாகப்ப்டவேண்டும் என்று சட்டம் இயற்ற குறுக்கே யார் வந்து தடை செய்வது அவர்களை என்று விவரிக்க முடியுமா உங்களால்? இந்திய பொருளாதாரம் என்ற கட்டிடத்தின் மீது உள்ள குறைகளை களைய முழு கட்டிடத்தையும் இடித்து தடை மட்டம் ஆக்கும் வேலையை தானே இந்த செல்லா நோட்டு திட்டம் மூலம் செய்து உள்ளார் மோடி? இந்த திட்டத்தின் எதிர்மறையான பலன்கள் அடுத்த நிதி ஆண்டின் போது GDP போன்ற புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவரும். இப்போதே நாட்டின் GDP யின் வளர்சி 7.8 % ல் இருந்து 7.1% குறையும் என்று கணக்கீடு செய்யபட்டு உள்ளது. GDP யில் ஏற்படும் குறைவு என்பது நாட்டில் வேலை குறைப்பு போன்ற பிரச்சனைகளில் தொடங்கி சங்கிலித்தொடர் போன்று பல்வேறு உப பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்று மோடிக்கு உண்மையிலேயே தெரியாதா என்ன?

    5. வீடு வாங்க, நிலம் வாங்க பணமில்லா பரிவர்த்தனை அவசியம் என்ற சட்டத்தை இயற்ற என்ன/யார் அரசுக்கு தடையாக உள்ளது/ இருகின்றார்கள் என்று கூறுங்கள் பாப்போம்.

    6. பான் கார்டின் தேவை பற்றி நீங்களை தெளிவாக பேசிவிட்டு என்னுடைய பான் என்னை ஏன் வங்கியில் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிண்றீகள் இராமன் ? 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட என்னுடைய இந்தியன் பேங்க் வங்கி கணக்குக்கு அன்றைய நிலையில் பான் அவசியம் இல்லை …. மேலும் என்னுடைய வங்கி பரிவர்த்தனைகள் அனைத்துமே Rs 6000 என்ற லிமிட் க்குள் இருப்பதால் அவர்களும் அதனை கோரவில்லை. இரண்டாயிரம் செல்லா பணத்துடன் வங்கிக்கு செல்லும் போது அவர்கள் கேட்டால் கொடுக்கலாம் என்று பான் மற்றும் ஆதார் விவரங்களை கொண்டு சென்றான். அவர்களும் வாங்கிக்கொண்டார்கள். (ஒரு விஷயம் தெரியுமா பான் எண் இல்லாமல் LIC பணம் பங்கு சந்தை பணம் போன்றவற்றை என்னுடைய கணக்கில் நான் திரும்ப பெற்றால் அதற்கு வரி 20% க்கும் மேல் என்ற விஷயமாவது உங்களுக்கு தெரியுமா?

    • change:

      2.(15 லச்சம் வரையில்)->(15 லச்சம் கோடிகள் வரையில் )

      3.இந்தியாவில் வங்கி பரிவர்த்தனைகள் பற்றிய பிக் டேட்டா இருபது என்னவோ உண்மைதான். வெளிநாட்டில் பதுங்கி உள்ள இந்திய கருப்பு பணத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் மோடி அரசு அந்த விவரங்ககளை டேட்டா மைனிங் மென்பொருளை கொண்டு ஆய்வு செய்ய உள் நாட்டில் புழங்கும் கருப்பு பணத்தை கைபற்ற அரசு தயாராக உள்ள்ளதா என்பதே இன்றைய கேள்வி?

  8. தந்தி டி.வி.யிலும் அதே நேரத்தில் கருத்துகணிப்பு வெளியிட்டார்கள் அதில் கே.டி.ராகவன் பங்குப்பெற்றார். கே.டி.ராகவன் மலைத்து பார்க்கும் அள்விற்கு தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு மோடி சார்பு இருந்தது. கால் மணி நேரத்திற்கு மேல் அதை பார்க்கமுடியவில்லை

  9. கறுப்பு பணம் – வெளுப்பு பணம் என்று கூறுவதே ஒருவித நிறவெறிதான்! (வருமான)கணக்கில் காட்டப்படும் பணம், மறைக்கப்படும் பணம் என்பதே சரி! அரசுக்கு கணக்கு காட்டாமல், உண்மையான வருமானத்தை, லாபத்தை, உபரி மதிப்பை, கறுப்பு பொருளாதாரம் என்பர்! அவை ஓரளவுநோட்டுகளாவும், பெருமளவு குறைத்து மதிப்பிடப்பட்ட சொத்துக்களாகவும், எளிதில் கையாளக்கூடிய தங்கம் மற்றும் வைர கற்களாகவும் ஒளிந்திருக்கலாம்! இந்த கறுப்பு ப்பொருளாதாரம் அடிக்கடி ரைடு, பொது மன்னிப்பு , கவர்ச்சிகரமான வ்ட்டி முதலிய செயல்கள் மூலம் அவ்வப்போது புழக்கத்திற்கு கொண்டு வரப்படும்! இல்லையெனில், அதிக லஞ்சலாவணியங்களுக்கும், வோட்டுக்கு பணம் தருதல் போன்ற அரசியல் சீர்கேட்டிற்கும் வழிவகுக்கும்! எதிர்வரும் உ பி, பஞசாப் தேர்த்ல்களை மனதில் கொண்டே இந்த ‘கறுப்பு பண’வேட்டை ஆரம்பித்திருக்கிறார் மோடி! ஆளும் கட்சிக்கு முன்னேற்பாடாக வேண்டிய அளவுநோட்டுகள் சப்ளை ஆகியிருக்கும்!

    மற்றபடி காகிதநோட்டுகளை தவிர்த்து இந்திய மக்களை டிகிடல் உலக சொர்க்கத்திற்கு கொண்டு செல்வதாக மோடி சொல்வது வெறும் கப்சா தான்! உண்மையில் மக்களை திரிசங்கு சொர்க்கத்தில்தான் தள்ளிவிட்டார் மோடி!

    கள்ளநோட்டு புழக்கத்தை தடுத்து, பயங்கரவாதத்தை தவிர்த்துவிட்டதாக மார்தட்டி கொள்வதும் ஏமாற்று வேலையே! தீவிர வாதிகளுக்கு வேறு எவ்வளவோ வழிகளில் பணம் ஏற்பாடு செய்ய முடியும் என்பது உலக வர்த்தகத்தை புரிநதுகொண்டவர்களுக்கு புரியும்; பாமரர்களையே இப்படி ஏமாற்றுகிறார் மோடி!

  10. வெளினாடுகளில் அதிகாரிக்கு தெரிந்தும்,அரசுக்கு தெரியாமலும் அன்னிய செலாவணியாக சேமிக்க முடியும்! பெரு முதலாளிகள், அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பினால் இப்படி செய்வது உண்டு. பிற்காலத்தில், அந்த அதிகாரி ‘கவனித்து’ கொள்ளப்படுவார்! முன்னால் செபி அதிகாரிக்காக தனி ஆர்டினன்சு போட்டு , அரசு செயலாளராக கொண்டு வந்தார் மோடி !முதல் தார்மீக அடிப்படையிலும் , சட்டபடியும் இது தவறான செயலாகும்! முதல் கோணல் முற்றும் கோணலாயிற்று!

    ஒத்து வராத ரகுராம் வெளியேற்றப்பட்டு, வளைந்து கொடுக்கும் ஓபிஎஸ் போன்றவர்நியமிக்கப்பட்டு , சட்ட ரீதியான வழிமுறைகளை பின்பற்றாமல் ‘சர்வாதிகாரத்தனமாக’ பிரதமரால்நடைமுறைப்படுத்தப்பட்ட ,நாணய மதிப்பிழப்பு, உண்மையில் நாட்டை, இந்திய அரசை, ரிசர்வ் வங்கியை ‘திவால்’ என்று அறிவிப்பதற்கு சமம்! திரு சிதம்பரம் அவர்களின் பேட்டிகள் மிகவும்நச்சென்று , ஆணித்தரமாக உள்ளன! அன்பர்கள் படித்து பலனடையவும்!

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க