privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மண்டியிட்டது யார் ? கருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா ?

மண்டியிட்டது யார் ? கருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா ?

-

மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பல மாதங்களாக மிகவும் இரகசியமாகத் திட்டமிடப்பட்டு, கருப்புப் பணக் கும்பலுக்கு எதிராக ஏவப்பட்ட ‘துல்லிய’ தாக்குதல் என்றும், இதன் காரணமாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற முடியாமல் முழித்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு கருத்து திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. ஆனால், இந்த நடவடிக்கையின் பிறகு நாட்டில் நடப்பதென்னவோ பா.ஜ.க.வும் அதன் துதிபாடிகளும் கூறிவருவதற்கு நேர் எதிராக இருக்கிறது.

பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான மறுநிமிடமே சென்னை நகைக்கடையொன்றில் குவிந்த பண முதலைகளின் கூட்டம்.
பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான மறுநிமிடமே சென்னை நகைக்கடையொன்றில் குவிந்த பண முதலைகளின் கூட்டம்.

பொதுமக்கள் தாம் உழைத்து சம்பாதித்த பணத்தை மாற்றுவதற்குத் தெருவில் நிற்கிறார்கள். ஊரை அடித்து வாயில் போட்ட கருப்புப் பணக் கும்பலோ தமது பணத்தை நோகாமல் மாற்றி வருகிறது.

கிரிமினல் குற்றச் சட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்வதற்கான வாய்ப்பைக் குற்றவாளிகளே ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்பார் காரல் மார்க்ஸ். அதனை மெய்யாக்கி வருகிறார்கள் இந்தியாவின் கருப்புப் பண முதலைகள். அவர்கள் தம்மிடமுள்ள கருப்புப் பணத்தை வெள்ளையாக்க ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அதனைத் தடுப்பது என்ற பெயரில் மோடி அரசு ஒவ்வொரு நாளும் விதவிதமான கட்டுப்பாடுகளை அறிவித்து, அசடு வழிந்து நிற்கிறது.

கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு மோடி அவிழ்த்துவிட்ட துல்லிய தாக்குதல் ஒரு புதிய கருப்புப் பணச் சந்தையை உருவாக்கியிருப்பதை இன்று நாம் நேருக்கு நேர் காண்கிறோம். ஆடிட்டர்கள், வங்கி மேலாளர்கள், அரசு அதிகாரிகள், நகைக் கடைக்காரர்கள், கந்துவட்டி கும்பல்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனங்கள், ஹவாலா கும்பல்கள், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், திரையரங்கு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தனியார் மருத்துவமனைகள், கோவில்கள், மடங்கள் எனப் பலரும் கருப்பை வெள்ளையாக்கித் தரும் இந்த இலாபகரமான தொழிலில் இறங்கியுள்ளனர். இந்தப் புதிய கருப்புத் தொழிலைப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள், டாக்டர்கள், இஞ்சினியர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட கருப்புப் பணக் கும்பல், தங்களிடம் உள்ள கணக்குக் காட்டமுடியாத பணத்தை 25% முதல் 70% வரை கமிசன் கொடுத்து வெள்ளையாக மாற்றிவருகின்றனர்.

சேலம் அருகே நடந்த வாகனச் சோதனையின்போது பா.ஜ.க.வின் சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலர் அருணிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருபது இலட்ச ரூபாய் பெறுமான 2,000 ரூபாய் நோட்டு கட்டுக்கள் கொண்ட கருப்புப் பணம்.  (உள்படம்) பா.ஜ.க.வைச் சேர்ந்த யோக்கியன்  அருண்.
சேலம் அருகே நடந்த வாகனச் சோதனையின்போது பா.ஜ.க.வின் சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலர் அருணிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருபது இலட்ச ரூபாய் பெறுமான 2,000 ரூபாய் நோட்டு கட்டுக்கள் கொண்ட கருப்புப் பணம்.
(உள்படம்) பா.ஜ.க.வைச் சேர்ந்த யோக்கியன் அருண்.

மோடியின் அறிவிப்பு வந்த மறுநிமிடமே, கருப்புப் பணக் கும்பல் பறந்து சென்று தட்டியது நகைக் கடைகளின் கதவுகளைத்தான். சென்னை, மும்பய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அறிவிப்பு வெளியான நாளன்று இரவு எட்டு மணிக்கு மேல் களைகட்டத் தொடங்கிய தங்க நகை வியாபாரம் நள்ளிரவைத் தாண்டியும் ஜாம்ஜாமென்று நடந்தது. மும்பை, பூனே, நாசிக், கோவா ஆகிய நான்கு நகரங்களில் அன்றைக்கு இரவு மட்டும் 36 கோடி ரூபாய் அளவிற்கு தங்கம் விற்பனையானது. மும்பை நகரில் மட்டும் 16 கோடி ருபாய் அளவிற்குத் தங்கம் வாங்கப்பட்டிருக்கிறது. இது அதற்கு முந்தைய நாள் தங்க விற்பனையான 69 இலட்சத்தை விட 23 மடங்கு அதிகமாகும். நகைக் கடைகளுக்கு அடுத்து, கோவில்களும், பூசாரிகளும், மடங்களும்தான் கருப்புப் பணக் கும்பலை இரட்சித்தன.

நாட்டின் மிகப் பெரிய கந்துவட்டிக் கும்பலான மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணத்தை மாற்றுவதும் துரிதமாக நடைபெறுகிறது. மகளிர் சுய உதவிக் குழுகளில் உள்ள பெண்கள் அனைவருக்கும் தலைக்கு 2 இலட்ச ருபாய் தரப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தப் பரிமாற்றத்திற்கு 10 ஆயிரம் ருபாய் கமிசனாக அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

வங்கி மேலாளர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு, பொதுமக்களின் பெயர்களில் செல்லாத நோட்டுக்கள் வங்கிகளின் வழியாகவே மாற்றப்படுகின்றன. வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்கக் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் முதல் சிம் கார்டு வாங்குவதற்காகப் பெட்டிக் கடையில் கொடுத்த ஆவணங்கள் வரை அனைத்தும் களவாடப்பட்டு, மக்கள் மாற்றியது போல் போலியான கோப்புகளை உருவாக்கி, இந்த தகிடுதத்தம் நடைபெறுகிறது.

ஊழல், லஞ்சத்தில் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கும் ஜெயா-சசி கும்பலோ எவ்வித சிரமமும் அலைச்சலுமின்றி, டாஸ்மாக், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தியே காரியத்தைச் சாதித்துக் கொள்கிறது. மோடியின் அறிவிப்பு வந்த மறுநொடியே அரசு போக்குவரத்துக் கழகங்கள், பயணிகளிடமிருந்து 500, 1000 நோட்டுக்களை வாங்குவதை நிறுத்திவிட்டன. ஆனால், போக்குவரத்துக் கழகத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் முழுவதும் 1,000, 500 ரூபாய் கட்டுக்களாகவே சென்றன. வசூலான சில்லறைப் பணம் முழுவதும் எங்கு போயிருக்கும் என விளக்கத் தேவையில்லை.

black-white-exchange-captionதமிழகம் முழுவதும் உள்ள எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு வரும் வருமானம் 20 கோடி ருபாய்க்கும் அதிகம். டாஸ்மாக்கின் தினசரி வருமானம் கிட்டதட்ட 70 கோடி ருபாய். நாளொன்றுக்கு 90 கோடி ரூபாய், நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை 52 நாட்கள், இதைப் பெருக்கினால் கிடைப்பது கருப்பு வெள்ளையான விவரம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு பெட்ரோல் நிலையங்கள், பேருந்துகள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் செல்லாத நோட்டுக்களைப் பயன்படுத்தலாம் என அறிவித்தது, மோடி அரசு. ஆனால், அச்சலுகையே கருப்புப் பணத்தை மாற்றுவதற்கான பல புதிய வழிகளைத் திறந்துவிட்டது.

மராட்டிய மாநிலத்தில் திரையரங்குகளில் பழைய நோட்டுக்களை வாங்கலாம் என அம்மாநில அரசு அறிவித்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட திரையரங்கு முதலாளிகள், படம் பார்க்க யாரும் வராமல் காத்து வாங்கிய திரையரங்குகள் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவதாகக் கணக்கு காட்டிக் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித் தரும் தொழிலைத் தொடங்கினர்.

வார நாட்களில், பயணிகள் யாரும் இல்லாமல், வெறுமனே கூரியர் சர்வீஸ்களாகப் போய்வரும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதாகக் கூறித் தனியார் போக்குவரத்து முதலாளிகள் செல்லாத நோட்டுகளை வங்கிகளில் கட்டுகிறார்கள்.

சினிமா நட்சத்திரங்கள் ஹவாலா பேர்வழிகள் மூலம் தங்களது கறுப்புப் பணத்தை அமெரிக்க டாலர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். தனியார் சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் தமது ஆசிரியர்களின் கணக்கிலும், தொழில் அதிபர்கள் தமது ஊழியர்கள், தொழிலாளர்களின் கணக்கிலும் பல மாதச் சம்பளத்தை முன்பணமாகச் செலுத்தி பல கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கியிருக்கின்றனர்.

நெல்லை நகர புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் முகந்தெரியாத நபர் கொடுத்துச் சென்ற 50,000 ரூபாய் பணத்திற்கு இலவசமாக பெட்ரோல் பிடிக்கக் கூடிய ஆட்டோக்கள்.
நெல்லை நகர புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் முகந்தெரியாத நபர் கொடுத்துச் சென்ற 50,000 ரூபாய் பணத்திற்கு இலவசமாக பெட்ரோல் பிடிக்கக் கூடிய ஆட்டோக்கள்.

மோடி, தனது அரசின் சாதனையாகச் சொல்லிக்கொள்ளும் ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள், மிகவும் வெளிப்படையாகவும் அரசிற்குச் சவால்விடும் வகையிலும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கப் பயன்படுத்தப்படுகிறது. பணமே இல்லாமல் முடங்கிக் கிடந்த இவ்வங்கி கணக்குகளில் 64,000 கோடி ருபாய் அளவிற்கு பணம் கொட்டப்பட்டிருப்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. 2.5 லட்சம் ருபாய்க்கும் அதிகமாக உள்ள வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படும் எனச் சவடால் அடித்தது மோடி அரசு. கருப்புப் பணக் கும்பலோ தமது பணத்தை 2 இலட்சம் ருபாய்களாகப் பிரித்து ஜன்தன் திட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தி, மோடியின் முகத்தில் கரியைப் பூசியது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, அந்தக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகையை மாதம் பத்தாயிரத்துக்கு மேல் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்கிறார், மோடி.

இவையெல்லாவற்றையும் விட, கருப்புப் பணத்தின் காவலர்களான ஆடிட்டர்கள், மிகத் தந்திரமான முறையில் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டே கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி, மோடிக்கு பெப்பே காட்டிவருகின்றனர். புதிது புதிதாக நிறுவனங்கள் தொடங்குவது அல்லது ஏற்கெனவே நட்டமடைந்து திவாலான பழைய நிறுவனங்களைத் தூசிதட்டி திரும்ப எழுப்பி, அவற்றிற்கு மாநிலம் முழுவதும் கிளைகளைத் தொடங்கி, ஒவ்வொரு கிளைக்கும் ஊழியர்கள், இயக்குநர்கள் என நியமித்து, அவர்களுக்குச் சம்பளம், நிறுவனத்தை நடத்தியதன் மூலம் வந்த வருமானம், ஏற்பட்ட செலவு எனப் புகுந்து விளையாடுகின்றனர்.

இவை மட்டுமன்றி, அடகு வைத்த நகைகளை மீட்பதற்கு, விவசாயக் கடனைக் கட்டுவதற்கு எனப் பல வழிகளில் கருப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்படுகிறது.

கள்வன் பெரிதா, காப்பான் பெரிதா என்ற இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில், கைப்புள்ள வடிவேலு கணக்காகச் சட்டை கிழிந்து நிற்கும் மோடி, “நீங்களாகவே வந்து கருப்புப் பணத்தை வங்கிகளில் செலுத்திவிட்டால், அபராதத்தோடு 50 சதவீதம்தான் வரி; நாங்களாகச் சோதனை நடத்திப் பிடித்தால், அபராதத்தோடு சேர்த்து 85 சதவீத பணத்தைப் பறிமுதல் செய்துவிடுவோம்” என வருமான வரிச் சட்டத்தில் திடீர் திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

இந்தத் திருத்தத்தைக் கருப்புப் பணக் கும்பலுக்கு எதிரான இறுதி எச்சரிக்கையாகப் பிதற்றுகிறார்கள், மோடியின் ஆதரவாளர்கள். ஆனால், உண்மையில் கருப்புப் பணக் கும்பலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இன்னொரு சலுகைதான் இது. வெளிச் சந்தையில் 70 சதவீதம் வரை கமிசன் கொடுத்து கருப்புப் பணத்தை மாற்றியவர்களிடம் 50 சதவீதம் “வரி”யைப் பெற்றுக் கொண்டு அரசே அவர்களின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கித் தரும் கேவலமான புரோக்கர் வேலைதான் இந்தத் திருத்தம். 200 சதவீதம் வரை வரி விதிப்போம் என வீராப்பு பேசிய மோடி, 50 சதவீதம்தான் வரி என இறங்கிவந்து கருப்புப் பண பேர்வழிகளிடம் பேரம் நடத்துகிறார். சாதாரண பொதுமக்களின் கைகளில் மை வைத்து அவமானப்படுத்தும் இந்தக் கும்பல், பணம் வந்த வழியைக் கேட்க மாட்டோம் என கருப்புப் பணக் கும்பலிடம் மண்டியிட்டு நிற்கிறது.

மோடியின் இப்பண மதிப்பு நீக்க நடவடிக்கையைப் புனிதப் போராகச் சித்தரிக்கிறது இந்துமத வெறிக் கும்பல். ஆனால், போர் தொடங்கும் முன்பே மோடி குப்புற வீழ்ந்துவிட்டார் என்பதைத்தான் நள்ளிரவு நகைக்கடை வியாபாரம் தொடங்கி வருமான வரிச் சட்டத் திருத்தம் வரையிலான நடப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

– அழகு
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________

  1. இது ஒரு ஆரம்பம் தான்… இது ஒரு நல்ல முயர்ச்சியும் கூட… 120 கோடி மக்கள் உள்ள நாட்டில் எந்த ஒரு சீர் திருத்த நடவடிக்கையும் அவ்வளவு சீக்கீரம் செய்துவிட முடியாது… மோடி “ஒட்டு பொறுக்கி” அரசியல் செய்ய நினைத்தால் இது போன்ற மக்கள் வெறுக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருக்க மாட்டார்….நரசிம்மராவ் தலைமையில் மன்மோகன் சிங் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் தான் இன்றும் இந்தியாவை வழி நடத்தி கொண்டிருக்கிறது…இதனை பி.ஜெ.பி அரசே ஒத்துகொண்டுள்ளது… அது போல இந்த நடவடிக்கையும் அமையும்… பக்க விளைவுகள் இல்லாத விஷயம் எதுவும் இல்லை…

    • I accept your argument. But the damage that have already caused and it continuation ?????? Do you beileve that our poor and working class indians can be bear with that ? Do you really believe that this demonitarization really damaged the rats who keep the black money.

      For me, the real damage is bearing by the working class only.

      Mr. Indian please consult with an expert (Economist, may be) and afterwards write your opinion. Thank you.

    • ஆமாம் இந்தியன்….உங்களுக்கு மோடி நல்லவராகத்தான் இருக்க முடியும்…..

      எந்த ஊரிலாவது டீ விற்றவன் 12 இலட்சத்திற்கு உடையணிவானா?

      ஒரு நாட்டுப் பிரதமராக இருந்து கொண்டு ஒரு தொழிலதிபருக்கு ஆர்டர் பிடித்துக்கொடுப்பதற்காக ஆஸ்திரேலியா வரை சென்று வர முடியுமா?

      வியாபம் ஊழல் என்ன அமெரிக்காவிலா நடந்தது, அந்த ஊழலில் புரண்ட பணம் எத்தனை, கொலைகள் எத்தனை என்று மோடிக்குத் தெரியாதா?

      பாரத மாதா, பாரத மாதா என்று பஜனை பாடிக்கொண்டே அதானிக்கு தன் சொந்த மாநிலமான குஜராத்தின் நிலத்தையே சதுர அடிக்கு ரூ.1/- என கூறு போட்டு விற்றது தான் மோடியின் குலதர்மமா?

      கருப்புப் பண ஒழிப்பு குறித்து மன்மோகன் சிங் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் சொல்லாமல் ஓடி ஒளியும் மோடி ஒரு 56 இஞ்ச் ஆண் மகனா?

      ரெட்டி இல்லத் திருமணம் என்ன பாகிஸ்தானிலா நடந்தது?? ரூ.500/-க்குள் திருமணம் நடத்தி முடித்த ஒரு திருமண தம்பதியினரை ஆகா ஓகோ-வென வாழ்த்திய மோடிக்கு ரெட்டியை குறைந்தபட்சம் ஒரு எஸ்.எம்.எஸ்-ஸோ அல்லது ட்விட்டரிலோ ஒரு செய்தி போட்டு கண்டிக்க முடிந்ததா உங்கள் மோடிக்கு…

      200 குடும்பங்களில் இழவு விழுந்ததே…இதையெல்லாம் அனுபவிக்கும் மக்களிடம் உங்கள் மோடியை தமிழ்நாட்டுக்கு ஏன் குஜராத்துக்கே கூட தனியாக அனுப்புங்களேன்….. சாம்பல் கூடக் கிடைக்காது…

  2. இஃதன்றி இன்னும் பல வழிகளில் கருப்பை சுரண்டி வெள்ளையாக்கி சுரண்டிய கருப்பை மோடியின் முகத்தில் பூசி இருக்கிறது கருப்பு பண கும்பல்.வட கிழக்கு மாநில பழங்குடி மக்களுக்கும் அம்மாநிலங்களில் ஈட்டப்படும் வருமானத்திர்கும் அளிக்கப்பட்டுள்ள வருமான வரி விலக்கை பயன்படுத்தி வானூர்திகள் நிறைய மூட்டை மூட்டையாக செல்லாத தாள்களை அள்ளி சென்று அங்கிருக்கும் வங்கி கணக்குகளில் செலுத்தி சட்டப்படியே வெள்ளையாக்கி இருக்கிறார்கள்.

    பார்க்க.

    http://www.dailyo.in/politics/demonetisation-black-money-laundering-naga-tribes-tax-exemption-anato-zhimomi/story/1/14203.html

    http://timesofindia.indiatimes.com/india/Heres-why-scrapped-notes-are-flying-off-to-the-northeast/articleshow/55590761.cms

    மேலும் கருப்பை வெள்ளையாக்கும் 13-வழிகளை பட்டியலிட்டுள்ளது இந்த இணைய ஏடு

    http://www.huffingtonpost.in/2016/11/13/13-ways-in-which-indians-will-convert-their-black-money-into-whi/

  3. இலவச திட்டங்கள் அறிமுகப்படுத்துவது எளிது . ஆனால் நீண்ட கால நோக்கில் நாட்டை வறுமை பாதாளத்திற்கு தள்ளி விடும் . வாழும் உதாரணம் வெனிசூலா

    ராணுவம் வரணும், 1000 ரூபாய் நோட்டை தடை பண்ணனும் என்பது போன்ற அதிரடி மேங்கோ மேன் தீர்வுகள் , குறுகிய கால நோக்கில் அல்லல் படுத்தும் . நீண்ட கால நோக்கில் பொருளாதார மந்தத்தை ஏற்படுத்தும் . ________ இந்தியா ஏற்கனவே கடந்து வந்த பாதை என்பதால் , மீண்டு வரும் என்பதில் நம்பிக்கை உள்ளது.

    வாக்கு என்பதையே குறிக்கோளாக கொள்ளாமல் எடுத்த முடிவு,
    நிரந்தர தீர்வு இல்லை என்றாலும் போகும் பாதை நல்லது கொடுக்கும்
    என்று நினைப்பதால் மட்டுமே பொது மக்கள் பொறுத்துக்கொள்கிறார்கள்

    நல்ல முயற்சியில் மண்ணை கவ்வி இருப்பதால் தவறு இல்லை . தவறில் இருந்து பாடம் கற்று தாள் இல்லா பரிவர்த்தனை ஊக்குவிப்பதால் பாராட்டலாம்

    காண முயல் எய்த அம்பினில் யானை
    பிழைத்த வேல் ஏந்தல் இனிது

    பொருள் :

    வெற்றிகரமாக இலவச திட்டங்களை செய்வதை காட்டிலும் , கருப்பு பணத்தை பிடிக்க முயற்சி செய்து தோற்றால் நல்லதே!

  4. தவறில் இருந்து பாடம் கற்று தாள் இல்லா பரிவர்த்தனை ஊக்குவிப்பதால் பாராட்டலாம்

    பணபரிவர்த்தனை பாரட்டலாம் எப்படி 5ருவாய் பொருள் வாங்கினால் அதற்கு கார்ட் கார கம்பேனி 0,25சதவிதம் கம்சன் எடுப்பான் எழை சிறு வியாபரிகள் வாழ்கை அழியும் பெரும் முதலாளிக்கு லாபம்

    paytm போன்ற கார்ட் காரனிடம் பணம் வங்கிகொண்டு மோடி எனக்கு மல்லிகை கடை அண்ணசிக்கும் இடையில் paytm கார்ட்காரனை நுளையவிட்ட இந்த கேடியின் பணபரிவர்த்தனை எப்படி பரட்ட முடியும் காவிகளை தவிர யாரலையும் அந்த கேடி மோடியை பாரட்ட முடியாது

    • ஆயிரம் ரூபாய் தாள் ஒரு வருடத்தில் நூறு பேரிடம் செல்கிறது என்றால் அதனை மணி வெளாசிட்டி (வேகம் ) என்று கூறுவார்கள் . அதில் 20பேர் அந்த ஆயிரம் தாள் பரிவர்த்தனையை கணக்கில் காட்டினாள் வருமான வரி கட்ட வேண்டி இருப்பதாக கொள்வோம் .5 லட்ச ரூபாய் வருட வருமானம் 10 சதம் வரி என்று கணக்கிட்டால் 25000 X 20 = 5,00,000 ரூபாய் அரசுக்கு வரி கிடைக்கும் . இந்த பணம் கை மாறியதில் 20 முறை பொருள் விற்பனை என்றால் அரசுக்கு விற்பனை வரி வருவாய் கிடைக்கும் .

      விசா விற்கு பதிலாக ரூபெ நெட்ஒர்க் ஒரு சதம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறது .
      நூறு பரிவர்த்தனைக்கு 1000 * 10 =10,000 ரூபாய் செலவாகிறது . இந்த 10000 ரூபாயில் லாபத்திற்கு அரசு வரி போட்டு 2000 ரூபாய் எடுத்து கொள்ளும். அந்த கம்பெனிகளில் ஊதியம் பெறுபவர்களிடம் இருந்து 500 ரூபாய் வருமான வாரியாக எடுத்து கொள்ளும்

      அடுத்து இந்த பணம் சிறு வணிகர்கள் தனது கையில் இருந்து தர போவது இல்லை . பொருளின் விலையில் இதுவும் சேர்க்கப்படும் . சரி அப்படி என்றால் மக்களுக்கு நஷ்டம் தானே என்பீர்கள் ?
      இல்லை , இப்பொழுது பில் போட்டு வாங்குவதால் நுகர்வோரின் உரிமை அதிகமாகிறது . நுகர் பொருள் குறைபாட்டை , கிரெடிட் கம்பெனிகள் நிவர்த்தி செய்யும் . செலவாகும் பணத்திற்கு ஈடான சேவையை பெற்றுவிடுவார்கள் . அரசாங்கம் இப்பொழுது தாள் இல்லாபரிவர்தனைக்கு வரி குறைத்திருப்பதால் தற்போதைக்கு அந்த செலவையும் அரசாங்கமே ஏற்று கொள்கிறது

      அடுத்து வரி கொடுக்காமல் கட்டுக்கட்டாக பணம் வைத்திருப்பதால் , அதனை நிலமாக அல்லது தங்கமாக மாற்ற முயற்சிக்கிறார்கள் . தங்கமாக மாற்றுவதால் ரூபாயின் மதிப்பு குறைகிறது .
      அதாவது வரி செலுத்தாதோர் , வரியும் செலுத்தாமல் மற்ற வரி செலுத்துவோரின் சேமிப்பின் மதிப்பையும் குறைக்கிறார்கள்.

      . இவர்கள் விவசாய நிலத்தை கூறு போட்டு கல் நட்டு அந்த நிலத்தை சேமிப்பு வங்கியாக பயன்படுத்துகிறார்கள் . இதனால் நிலமாக வாங்குவதால் சுற்று சூழல் பாதிக்கிறது . தமிழ் நாட்டில் மட்டும் தான் ஹை கோர்ட்டு தற்காலிக தடை அதுவும் இப்பொழுது தான் போட்டு உள்ளது .

      இது போன்ற தாள் இல்லா பரிவர்த்தனையை ஏதோ கமிஷனுக்காக செய்வதாக குறைத்து மதிப்பிட வேண்டாம் . அடுத்து தாள் இல்லா பரிவர்த்தனை கட்டாயமாக்க பட வில்லை (தற்போதுள்ள கரன்சி தட்டு பாட்டு நிலை வேறு ) . அண்ணாச்சியிடம் நீங்கள் காசு கொடுத்து வாங்கலாம்

      • இராமன் , பணமில்லா பரிவர்த்தனை பற்றிய உங்கள் கருத்துக்கள் நிலம்,தங்கம், கார் போன்ற பெரும் பணம் செலவாகும் விற்பனைகளுக்கு 100% சரியானதே! இது போன்ற விசயங்களில் பணமில்லா பரிவர்த்தனைகள் கருப்பு பண புழக்கத்தை கட்டுபடுத்த உதவும் என்பதிலும் எந்த மாற்று கருத்தும் இல்லை. பணமில்லா பரிவர்த்தனைகளை இந்த விடயங்களில் சட்ட பூர்வ்மாகவேண்டும் என்பதிலும் எனக்கு ஏற்புடையதே…

        அதே நேரத்தில் பணமில்லா பரிவர்த்தனை மூலம் ஒரு மாநில முதலவர் டீ வாங்கி குடித்தார் என்ற செய்திகள் இங்கு இந்தியாவில் இருந்து வருகின்றனவே! அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கு பணமில்லா பரிவர்த்தனை எந்தவகையில் உதவும் மற்றும் தேவை? முதலில் பணமில்லா பரிவர்த்தனையின் அவசியம் அத்தியவசிய பொருட்களுக்கு எங்கிருந்து வருகின்றது. ?

        • திரு ராமன் வெரும்வாயல வடை சுடுறதுல வல்லவர் போல இருக்கே ,ஆயிரம் ரெண்டாயிரம்,எழாயிரம் பிம்பிளிக்கி பிளாக்கிநெத்துதான் அந்த பாண்டியராஜன் பட கமெடி பாத்தென் ராமன் அதே ஏலத்த இங்க ஓட்டிகிட்டு இருக்காறு ,முதல்ல கம்மாப்ப்ட்டி கோல்வார் பட்டி இதெல்லாம் இணயம் மூலம் இனைக்கிற வழிய பாக்கனும் அப்புறமா ஆயிரம் ரெண்டாயிரம் எழாயிரம்னு ஏலம் போடுங்க அது வரை பிம்பிளிக்கி பிலாகிதான்….

  5. 2 மாசமா முயற்ச்சி பண்னி கருப்பு தோல்வியா அப்ப மோடி லூஸா ராமன், இல்ல மோடி பிராடுனு கட்டுரை சொல்லுது அதுக்கு என்ன பதில் சொல்லுங்க சின்ன ஜோக் ஏழைக்கு 2000 ரூபாய் இருந்தும் சில்லறை இல்லயாம் பணக்காரனுக்கு 2000 ரூபாயே சில்லறைதானம் எப்பிடி இதெல்லாம் சகிச்சுகிட்டு இந்த பிராடுக்கு சப்போர்ட் பன்றாங்களோ தெரியல….

  6. மோடி லூஸா பிராடா என்ற மாபெரும் விவாதத்துக்கு வருமாறு ரெபேக்கா மேரி ,திப்பு, மீரான்,தென்றல்,உனிவ்ர்புட்டி ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன் எனக்கு தெரிஞ்சுநிறைய பேரு சொன்னது மோடி பிராடுதான் என்று சிலர் மோடி லூஸுதான் அனா ரெம்பநல்லவ்ரு என்றார்கள் எது சரி என்று உங்கள் அறிய கருத்துகளை அள்ளி தெளியுங்கள்……

    • MR. Modi is a tip of an Ice berg. He is a tool. Not the organizer or the designer. As I already said, this demonetization is not he problem, but the way it implemented. decision makers do not understand of our India’s majority middle class and the lower class Indian’s needs and the problems. They think that they are living in USA and the people are Americans. Simply we, everyone should change our thinking pattern. We should not copy westerners. We should design our own methods and implement it. That should realizes/ reflect our peoples needs.

  7. கடைசி கால மிருகம் ஒன்று வந்து அது தன் முத்திரயை தரிக்காதயாரையும் விற்கவே கோள்ளவோ முடியாத படி செய்தது அனால் அந்த மிருகம் மோடி அல்ல

  8. @ மணிகண்டன் மற்றும் இராமன்

    மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் கருப்புப்பணம் எப்படி எல்லாம் வெள்ளையாக்க்கப்பட்டது என்று விரிவாக ஆய்வு செய்கின்றது இந்த கட்டுரை…. ஆனால் மோடியின் இந்த நடவடிக்கையை நேரடியாக ஆதரிக்கும் மணிகண்டனும் சரி , மறைமுகமாக ஆதரிக்கும் ராமனும் சரி இந்த கட்டுரையில் உள்ள விவரங்களுக்கு மறுப்பு தெரிவிக்க வாயைதிறக்க மாட்டேன் என்று மவுன விரதம் கடைபிடிகின்றார்கள். மோடியின் நடவடிக்கையால் ஏற்படும் பாரிய சீர்குலைவுகளை இவர்கள்மொவுனமாக கடந்து செல்வதன் நோக்கம் என்னவென்று வினவு வாசகர்கள் அறிந்து கொள்ளலாம் தானே ?

    பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மோடி பழைய செல்லாப் பணங்கள் மீது காட்டும் சலுகைகள் இது வரையில் பதுக்களுக்கு உள்ளான கருப்பு பணத்தை சந்தைக்கு எளிய முறையில் கொண்டுவர எளிய வழிகளை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு புறம் பழைய செல்லா பணம் 15 இலச்சம் கோடிகள் கிட்ட தட்ட முழுமையான அளவுக்கு வங்கிகளில் டெபொசிட் செய்யபட்டு உள்ளது.(dec 31க்கு பின் முழுவிவரமும் கிடைக்கும்). அப்படி என்றால் கருப்புப்பணம் எல்லாம் எங்கே போனது ? மோடியின் பண மதிபிழப்பு நடவடிக்கையின் மூலம் ஏற்பட்ட சில நூறு மனிதர்களின் உயிர் இழப்புகள் மற்றும் கோடிக்கணக்கான இதியர்கள் கால் கடுக்க வங்கிகளில் நின்றது, ATM இயந்திரங்கள் முன்பு அவற்றுக்கு பணம் வருமா வராதா(ATM s will be loaded with money or not) என்று தெரியாமல் கூட தவமாய் தவம் இருந்தது ஆகிய செயல்கள் மூலம் மத்திய அரசு சுட்டிக்காட்ட விரும்புவது என்ன வென்றால் இந்தயாவில் மனித உரிமைகள் சிறிதும் அரசாங்கத்தால் மதிக்கப்படாது என்பதே ஆகும்.

    ATM இயந்திரம் முன்பு சோகம் ததும்பும் முகத்துடன் சிறு குழந்தைகளை கையில் வைத்துகொண்டு மருத்துவ தேவைக்கு பணமெடுக்க நிற்கும் அம்மாக்கள், ஆசிரியர் வேலை முடிந்து அடுத்தததாக வீட்டு வேலைகளை செய்யும் கடமையில் இருக்கும் எம் ஆசிரியைகள் (நமக்கு வயசு எவ்வளவு ஆனாலும் நாம் நமது இளம் வயதில் பார்த்த தேவதைகள் தானே அவர்கள்,இன்னும் அந்த இளமை பருவ நினைவுகள் தானே மனதுள் உறைந்து கிடக்கிறது!) , ஷிபிட் முடிந்து வந்து மளிகைக்கும், வீட்டு வாடகைக்கும் பணமெடுக்க நிற்கும் தொழிலாளர்கள் , அப்படி நிறுக்கும் தருணத்தில் தன் தொழல் சாலையில் உற்பத்தி குறைக்கப் பட்டதாக வருத்தமுற்று வேலை இழப்பு ஏற்படுமோ என்று மனதுக்குள் எழும் ஐயத்தை முக சோர்வுகள் மூலம் காட்டும் இளம் தொழிலாளர்கள் என்று இவர்களை காணும் போது மனது பதறுகின்றது… ஆனாலும் மணிகண்டனும் ,ராமனும் ஈவு இரக்கம் இல்லாமல் மோடிக்கு ஆதரவாக பேசிக்கொண்டு தான் இருகின்றார்கள்!

    • ________

      தலைமை செயலர் ஆரம்பித்து சாதாரண டீ கடைக்காரர் வரையில் கோடி கணக்கில் கருப்பு பணம் வைத்து இருந்தவர்கள் இப்போது மாட்டி கொண்டு இருக்கிறார்கள், இதை எல்லாம் பார்க்கும் போது மோடியின் செயல் மிக சரியான ஒன்றே என்பதில் மாற்று கருத்து எதுவும் கிடையாது.

      இன்று ATM வாசலில் நின்றே தீர வேண்டும் என்ற அவசியம் இல்லை, கிராமங்கள் வரையில் ஸ்விப்பிங் மெஷின் வந்து விட்டது. எல்லாவற்றுக்கும் மேல் டெபிட் கார்டு மற்றும் உங்கள் வாங்கி கணக்கில் பணம் இருந்தால் போதும், உங்கள் வாங்கி கணக்கில் பணம் இல்லாமல் டெபிட் கார்டு வேலை செய்யவில்லை என்று சொன்னால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

      இதற்காகவே நான் சென்ற வாரம் சென்னையில் இருந்து எங்கள் கிராமத்திற்கு என் காரில் சென்றேன் (கையில் வெறும் 10 ரூபாய் மட்டுமே இருந்தது) பெட்ரோலில் இருந்து டோல் கேட் வரையில் அனைத்தையும் என் டெபிட் கார்டு மூலம் தான் செலுத்தினேன்.

      எங்கள் கிராமத்தில் எனக்கு வசதியாக ஒரு மேசை செய்ய சொல்லி தெரிந்த ஆசாரியை கேட்டு கொண்டேன் அதற்கு பணம் கொடுத்தது வங்கி fund transfer மூலம் தான்.

      நான் டெபிட் கார்டு பயன்படுத்தவே மாட்டேன் எனக்கு (கருப்பு) பணம் தான் வேண்டும் என்று வீண் பிடிவாதம் பிடித்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது… நீங்கள் பேசுவது வீண் பிடிவாதம் தான்…

      மருத்துவ செலவு முதல் அனைத்து செலவுகளையும் டெபிட் கார்டு மற்றும் online fund transfer மூலம் சமாளிக்கலாம் அதற்கு என் அனுபவமே சாட்சி.

      • ATM மூலம் பணம் எடுக்க கற்றுக்கொடுத்த வங்கி பொருளாதாரம் , ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தினம் ௨௦௦௦ மட்டுமே என்று கட்டுபாடு விதித்த அரசு, ATM இயந்திரங்களில் முன் நிற்கும் மக்கள் இவர்களை எல்லாம் முட்டாள்கள் என்ற ரீதியில் பேசிக்கொண்டு உள்ளார் மணிகண்டன். உண்மையில் இந்திய மக்களின் பொருளாதார சூழலை அறியாத ,வர்த்தக பரிவர்த்தனை முறைகளை பற்றி அறியாத மணிகண்டன் தான் நம்பர் ஒன் முட்டாள் என்று தன் பின்னுட்டம் மூலம் நிருபிகின்றார். ATM இயந்திரம் முன் மணி கணக்கில் நின்று பணம் எடுத்து செலவு செய்பவர்களை கருப்பு பணத்துக்கு ஆதரவானவர்கள் என்று மணிகண்டன் மனம் போன போக்கில் குற்றம் சுமத்துகின்றார். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்றால் கண்டிப்பாக கையில் பணம் தேவை என்ற எளிய உண்மையை இவர் போன்ற மூடர்களுக்கு எத்துனை முறை கூறினாலும் ஆங்காரம் கொண்ட இவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது தானே உண்மை.! (தொடரும்)

      • மணிகண்டன் மற்றும் இராமன் அவர்களே, கிராம வியாபார பரிவர்த்தனைகளை புரிந்து கொள்ள ஜோசப் அவர்களின் பின்னுட்டமே போதுமானது என்றாலும் சிறு நகரங்களில் மக்கள் எப்படி வியாபார பரிவர்த்தனைகளை செய்கின்றார்கள் என்று உங்கள் மண்டைக்கு ஏறுவதற்காக இந்த பின்னுட்டத்தை அளிக்கின்றேன்.

        சில நூற்றுகள் அளவில் உள்ள மளிகைக்கடைகள் உள்ள மறைமலை நகரில் 8 MORE சூப்பர் மார்கெட் போன்ற பெருவர்த்தக கடைகளில் மட்டுமே pont of sale (POS) பரிவர்த்தனை இயந்திரங்கள் உள்ளன. நீங்கள் கூறுவது போன்று மின்னணு பரிவர்த்தனைகளை செய்வது என்றால் மக்களுக்கு உள்ள வாங்கும் சுதந்திரம் அந்த எட்டு கடைகளுக்குள் முடக்கப்படுகின்றது. பிற கடைகளை அவர்கள் அணுகமுடியாத நிலையை ஏற்படுத்துகின்றீர்கள். மக்களின் தனி மனித சுதந்திரத்தில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மேலும் அண்ணாச்சி கடையில் MRP 25 என்று விலை உள்ள சாம்பார் மசாலாவை Rs18 க்கு வாங்க முடிகின்றது. (கடை காரர்கள் Rs 15 க்கு வாங்கி rs18 க்கு விற்கின்றார்கள்)அதே மசாலா மோர் சூப்பர் மார்கட்டில் அதே MRP 25க்கு தான் கிடைகின்றது. பேரம் எல்லாம் பேச முடியாது அங்கு. அப்படி பட்ட நிலையில் நட்டம் அடைவது என்பது யார்? கஸ்டமர்கள் ஆகிய மக்கள் தானே? இதே நிலை தான் உளுந்து ,துவரம் பருப்பு போன்ற பிராண்டட் பொருட்களுக்கும்…! அண்ணாசி கடையில் வாங்கும் போது rs ௨௦௦௦ க்கு வாங்கப்படும் மளிகை பொருட்கள் மோர் சூப்பர் மார்க்கட்டில் வாங்கும் போது Rs 2250 ஆகின்றது. (எல்லாவற்றையுமே MRP விலையில் வாங்குவதால்) அப்படி என்றால் பணமில்லா அத்தியாவசிய பொருட்ட்கள் விற்பனைக்கு பணமில்லா பரிவர்த்தனையை ஆதரிக்கும் நீங்களும் , வானொலியில் விளம்பரம் கொடுத்து மக்களுக்கு சங்கு ஊதி கொண்டு இருக்கும் மோடியும் பெருவணிக நிறுவனங்களை தானே ஆதரிக்கிண்றீகள்!?

        மேலும் ஒரு சிறு வணிகர் POS இயந்திரத்தை பயன்படுத்தும் போது அவர் இந்த இயந்திரத்துக்கு வங்கிக்கு அளிக்கவேண்டிய வாடகை மற்றும் ஒவொரு பரிவர்த்தனைக்கும் அவர் அளிக்கவேண்டிய கமிசன் இவை எல்லாம் யார் தலையில் விடியும்? கஸ்டமர் ஆகிய மக்கள் தாலையில் தானே! POS விற்பனைகளுக்கு 0.25% கமிசன் என்றாலும் கூட தினம் சராசரியாக Rs 50,000 விற்பனை செய்யும் வியாபாரி (50,000 * 30 days) = 15,000,00 என்ற அளவு மாத விற்பனைக்கு இயந்திரத்துக்கு வாடகை மற்றும் பரிவர்த்தனை கமிசன் என்று ௫5,000 அளவுக்கு இழக்கவேண்டும் அல்லவா ?

        மறைமுக வரி போடப்பட்டு அவை செலுத்தப்பட்டு தான் பொருட்ட்கள் விற்பனைக்கு கடைக்கு வருகிறன என்ற நிலையில் இந்த பணமில்லா பரிவர்த்தனை மூலம் வர்த்தர்களுக்கு ஏற்படும் கமிசன் இழப்பும், POS இயந்திர வாடகை இழப்பும் மக்கள் தலையில் தானே விழும்.!
        (தொடரும்)

        • செந்தில் உங்கள் வார்த்தைபடியே வருவோம் எந்த அண்ணாச்சி அவர் கடை பெயரில் official பில் கொடுத்து இருக்கிறார், அண்ணாச்சி கடையில் பில் எல்லாம் வெறும் வெள்ளை பேப்பரில் எழுதி கொடுப்பார்கள்… அதன் அர்த்தம் நம்ம அண்ணாச்சி சேல்ஸ் tax முதல் எந்த வரியையும் ஒழுங்காக கட்டுவது இல்லை, அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்…. இதை உங்களால் மறுக்க முடியும்மா ?

          நான் ஏன் பணம் கொடுத்து கருப்பு பண முதலாளியை உருவாக்கி விட வேண்டும் ? என் பணத்திற்கு சரியான கணக்கு வேண்டும், நான் நேர்மையாக வரி கட்டுவதை போல் மற்றவர்களும் வரி கட்டி நாட்டிற்கு உதவ வேண்டும் என்று நான் எதிர் பார்க்கிறேன் அதில் என்ன தவறு இருக்கிறது ?

          சரி உங்கள் கிராம பொருளாதாரத்திற்கு வருவோம், *99# என்ற சேவை உள்ளது அதன் மூலம் யாருக்கு வேண்டும் என்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் பணம் கொடுக்கலாம், இன்டர்நெட் அவசியம் இல்லை ஆனால் உங்கள் வங்கி கணக்கில் பணம் அவசியம் இருக்க வேண்டும்… அண்ணாச்சியிடம் இருக்க வேண்டியது எல்லாம் ஒரு வங்கி கணக்கு மட்டும் தான், வெகு சுலபமாக பணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். நம்ம அண்ணாச்சி வங்கி கணக்கு மூலம் பணம் வாங்க மாட்டேன் என்று சொன்னால் வேறு கடைக்கு போக வேண்டியது தான் காரணம் நம்ம அண்ணாச்சி கருப்பு பணத்திற்கு ஆதி போடுகிறார் என்று அர்த்தம்.

          கிராமத்தில் உள்ளவர்களை எல்லாம் முட்டாள்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்று நினைத்து கொண்டு இருக்காதீர்கள்… கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் ரொம்ப விவரமானவர்கள்…

          • மணிகண்டனின் அறிவு வியக்க வைக்கிறது.

            அறிவாளிகள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.இப்போது நடைமுறையில் இருப்பது விற்பனை வரி அல்ல.மதிப்பு கூட்டு வரிதான் நடைமுறையில் உள்ளது.அதாவது உற்பத்தியாளர் தனது பொருளின் மதிப்புக்கு வரி கட்டி விடுவார்.அவரிடம் அதனை வாங்கி விற்க்கும் மொத்த விற்பனையாளர் அவரது ஆதாயம் சேர்வதால் கூடுதலாகும் தொகைக்கு வரி கட்டுவார்.அதாவது 100 ரூபாய் விலையுள்ள பொருளுக்கு உற்பத்தியாளர் 14 ரூபாய் வரி கட்டி 114-க்கு கொடுப்பார்.அதை வாங்கி விற்பவர் 125 க்கு விற்றால் அந்த 11 ரூபாய்க்கு 14 விழுக்காடு வரி கட்ட வேண்டும்.அதாவது அந்த பொருளின் மொத்த விலை 126.50 ஆக இருக்கும்.இப்படி மொத்த விற்பனை சந்தையில் வரி செலுத்திய பின் உள்ள விலைக்கு வாங்கி வந்துதான் அண்ணாச்சிகள் சில்லறையில் விறகிறார்கள்.

            அண்ணாச்சி போன்ற சிறு வணிகர்களுக்கு அதாவது ஆண்டுக்கு பத்து இலட்சம் வரை விற்று வரவு உள்ள கடைகளுக்கு மதிப்பு கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

            இப்போது வரவிருக்கும் GST வரியில் இந்த விலக்கு 25-லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.

            விற்பனை வரி இருந்த போதும் வரி கட்ட வேண்டியிருக்கவில்லை.80-களிலேயே பலமுனை வரி விதிப்பு முறை நீக்கப்பட்டு ஒரு முனை வரி விதிப்பு முறை வந்து விட்டது.அதாவது உற்பத்தியாளர் அல்லது மொத்த விற்பனையாளர் ஒரு முறை வரி செலுத்தினால் போதும்.அடுத்த கட்ட விற்பனைக்கு வரி கிடையாது.

            இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் மளிகை கடை அண்ணாச்சிகளையும் செருப்புக்கடை பாய்களையும் ஏதோ அம்பானி மல்லையா அளவுக்கு வரி ஏய்ப்பு செய்வது போல பிதற்றித்திரிகிறார்கள் மூடர்கள்.

            • முதலில் வாட்டிற்கும் சேல்ஸ் tax இரண்டிற்கும் வித்தியாசம் தெரிந்து கொண்டு பேசுங்கள். கடந்த 10 வருடங்களின் விற்பனை வரியின் சராசரி 12.97 சதவீதம் இந்த வருடம் 2016 ல் தான் மிக சதிகமாக 15 சதவீதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

              Retail Sales Tax – This is a tax charged on sale of retail goods and is directly paid by the final consumer.
              Manufacturers’ Sales Tax – This tax is levied on the manufacturers of certain goods.
              Wholesale Sales Tax – This tax is levied on individuals who deal with wholesale distribution/sale of manufactured goods.
              Use Tax – This is a tax levied on the consumer for goods which are purchased without sales tax (generally from vendors who are not under the tax jurisdiction).
              Value Added Tax – This is an additional tax levied on all sales by certain governments.

              மோடியின் செயலால் இப்போது அனைவரின் வண்டவாளமும் வெளியே வந்து கொண்டு இருக்கிறது, இதில் பாதிக்கப்பட்டவர்கள் தான் மோடி சட்டவிரோதமாக தடை செய்து விட்டார், என் அலுவலகத்தில் எப்படி அனுமதி இல்லாமல் சோதனை செய்யலாம், ஏழைகள் பாதிக்க படுகிறார்கள் அது இது என்று முதலை கண்ணீர் விட்டு கொண்டு இருக்கிறார்கள். ஹார்ட் அட்டாக் என்று மருத்துவமனைக்கு ஓடி ஒளிகிறார்கள்.

              நம்ம அண்ணாச்சி கடைக்கு வருவோம், இதுவும் என் நேரடி அனுபவம் தான், எங்கள் ஊரில் பெப்சி கூல் ட்ரிங்க்ஸ் அண்ணாச்சி கடையில் தான் கிடைக்கும் மற்ற கடைகளில் எல்லாம் கலர் தான் கிடைக்கும், பெப்சி அரை லிட்டர் பாட்டில் 30 ரூபாய்க்கு விற்ற போது (MRP 30) நம்ம அண்ணாச்சி அதை 35 ரூபாய்க்கு விற்றார்… இந்த 5 ரூபாய்க்கு கணக்கு என்ன என்று உங்களில் யாராவுது சொல்ல முடியும்மா ? இதே அனுபவம் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலும் கிடைத்தது (இப்போது இப்படி விலையேற்றி விற்கிறார்களா என்று தெரியவில்லை காரணம் நான் பஸ்சில் பிரயாணம் செய்து பல வருடங்கள் ஆகிறது).

              அண்ணாச்சி சரியான பில் கொடுத்து தனது வங்கி கணக்கில் இப்படி விலையேற்றி விற்ற பொருளுக்கு காசு வாங்குவாரா ? சொல்லுங்க பார்ப்போம்…

              • மணிகண்டன் அவர்களே ,மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவாக கறுப்பை வெள்ளையாக மாற்ற கமிசன் அடிப்டையில் புதிய கள்ளச்சந்தை உருவாகியுள்ளது. அதில் பிடிபட்டது ஒரு சிறு துளி தான் என்னும் போது மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பல் இளிக்கின்றது. அடுத்தாக முப்பது ரூபா குளிர்பானத்தை முப்பது அய்ந்து ரூபாவுக்கு விற்க்கும் “”உங்க ஊரு”” அண்ணாச்சியை சட்டப்படி தண்டிக்க துப்பு இல்லாமல் வினவில் வந்து நீங்கள் ஒப்பாரி வைப்பது ஏன் ? அடுத்ததாக சேல்ஸ் டக்ஸ் பற்றி புத்தகத்தில் படிப்பதை அப்படியே வாந்தி எடுக்காதிங்க! இன்றைக்கு என்ன பெயரில் அது வசூளிக்கப்படுகிறது என்றாவது அறிந்து கொண்டு பேசுங்கள்… இன்றைக்கு அந்த விற்பனை வரியின் பெயர் VAT (மதிப்புக்கூட்டபட்ட வரி) நாளைக்கு அதன் பெயர் GST. உங்களுடன் பேசுவது என்பது மிகவும் கடினமாக உள்ளது மணிகண்டன்…. ஒன்று உங்களுக்கு சுய புத்தியாவது இருக்கவேண்டும் அல்லது சொல் புத்தியாவது இருக்கவேண்டும்… இரண்டுமே இல்லை என்றால் எப்படி?

                அண்ணாச்சி வரி எய்ப்பு செய்வதாக முந்தைய பின்னுட்டத்தில் உளரிவைத்து உள்ளீர்களே அதனை நிருபிக்கவேண்டியது உங்கள் கடமை தானே?

              • இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பதால்தான் நடைமுறையில் இருப்பது VAT தான்,ST அல்ல என்று சொல்லியிருக்கிறேன்.அறிவாளிகள்தான் நடைமுறையில் இல்லாத விற்பனை வரியை கட்டவில்லை என அண்ணாச்சிகள் மீது கோபப்படுகிறார்கள்.

                அப்புறம் அண்ணாச்சி ஐந்து ரூபாய் பெப்சிக்கு கூடுதலாக வாங்கிட்டாராம்.ஆத்திரப்படுகிறார் மணி.

                நாம் இங்கு பேசிக்கொண்டிருப்பது ரொக்கமில்லா வணிகம் பற்றியே.அது சாத்தியமில்லை என நாங்கள் சொல்கிறோம்.மணி அண்ணாச்சியை வங்கி கணக்கு வைத்துக்கொண்டு அதன் மூலம் பணம் வாங்க சொல்கிறார்.இப்போது கேள்வி.வங்கி கணக்கு வைத்துக்கொண்டு அதன் மூலமாக ஐந்து ரூபாய் கூடுதலாக வாங்கினால் மணி என்ன செய்வார்.ஐந்து ரூபாய் கூடுதலாக வாங்குவதை வங்கி கணக்கு தடுத்து விடுமா என்ன.இது வெறும் உளறல்.

                அப்புறம் செந்தில் நறுக்கு தெறித்தாற்போல் கேட்டிருக்கிறார்.நுகர்வோரும் கடைக்காரரும் உழைத்து ஈட்டிய பணத்தில் பொருட்களை வாங்குவதர்கு வங்கிக்காரனுக்கு அவர்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்.PoS வாடகை ,அதற்க்கான சேவை வரி,வணிக தொகையில் குறிப்பிட்ட விழுக்காடு கழிவு [discount ].இத்தனை எழவையும் ஒரு கட்டுமான தொழிலாளியும் மளிகை கடை அண்ணாச்சியும் ஏன் கொட்டி அழ வேண்டும்.முதலில் மணி அதற்க்கு யோக்கியமாக பதில் சொல்ல வேண்டும்.

            • சிறு வணிகர்களுக்கு ஏன் வரிவிலக்கு அளிக்க வேண்டும்.அவர்களுக்கும் வரி போட்டு தேச பக்த வலைக்குள் கொணர வேண்டும் என யாராவது கொந்தளிப்பார்கள் என எதிர்பார்த்தேன்.நடக்கவில்லை.அப்படி யாராவது கொந்தளித்தால் அது சலுகையல்ல சிறு வணிகர்களின் உரிமை என நிறுவ போதிய விவரணைகள் உள்ளன.

              • உங்களை போன்றவர்களுக்கு சில அடிப்படைகள் சரியாக தெரியவில்லை, தேசம் என்றால் என்ன, ஏன் எல்லோரும் வரி கட்ட வேண்டும், அரசாங்கம் என்றால் என்ன போன்ற அடிப்படைகள் உங்களுக்கு(வினவு வாசகர்களுக்கு) தெரிவது இல்லை அதை எல்லாம் தெரிந்து கொண்டு பேசுங்கள்.

                உங்களை போன்றவர்கள் (வினவு உட்பட) அனைத்து தவறான கருத்துக்களையும் எழுதி விட்டு அதில் மானே தேனே என்பது மாதிரி ஏழை பழங்குடி அது இது என்று எல்லாம் சேர்த்து விட்டால் நீங்கள் சொல்வது சரி என்று ஆகிவிடாது அப்போதும் நீங்கள் சொல்வது தவறு தான்.

                ஒரு உதாரணம் சமீபத்தில் புயலால் சென்னையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன, அதில் சென்னைக்கு வெளியே இருந்த பகுதிகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை வாருங்கள் போராடுவோம் என்று வினவு சொன்னது.

                உங்களுக்கு வேண்டியது மழையாக இருந்தாலும் புயலாக இருந்தாலும் உங்கள் தேவைகள் தீர வேண்டும், சரி மின் வாரியத்திற்கு எப்படி பணம் கிடைக்கிறது (அதிலும் கூட தள்ளுபடி மற்றும் இலவச மின்சாரங்கள்) ? மின் ஊழியர்களுக்கு மாத சம்பளம், மின் இணைப்புகள் பராமரிப்பு செலவுகள், புதிய தடங்கல் என்று எவ்வுளவோ இருக்கிறது ஆனால் அதற்கு எல்லாம் பணம் எப்படி கிடைக்கிறது ?

                (நேரம் இன்மையால் மாலை தொடர்கிறேன்)

              • சாலை சரியில்லை என்றால் போராட்டம், அரசு மருத்துவமனையில் இலவச சிகிக்சை, அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், தேசிய பாதுகாப்பு என்று ஆரம்பித்து பல செலவுகள், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் என்பது எல்லாம் எப்படி சாத்தியம் ? நாம் கட்டும் வரிகள், வியாபாரிகள், நிறுவனங்கள் கட்டும் வரிகள் மூலம் தான் அரசு செலவு செய்ய முடியும் அதில் சிறு வியாபாரிகள் அதனால் வரி கட்ட மாட்டோம் என்று ஆரம்பித்தால் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இப்படி ஏதோ ஒரு காரணம் சொல்லி கொண்டே போகலாம். அமெரிக்காவில் 45 சதவீத மக்களுக்கு மேல் வரி காட்டுகிறார்கள் அதற்கு தகுந்தார் போல் social security அவர்கள் அரசால் கொடுக்க முடிகிறது ஆனால் நம் அரசால் முடிகிறதா ? 125 கோடி பேர் உள்ள நாட்டில் வெறும் 3 கோடி பேர் தான் வரி காட்டுகிறார்கள் மீதி இருக்கும் 122 கோடி பெரும் பரம ஏழைகள் என்று கதை அளக்க வேண்டாம்.

                வரி கட்டும் இந்த 3 கோடி பேரில் எத்தனை பேர் உண்மையான வருமானத்தை சொல்லி வரி காட்டுகிறார்கள் ?

                பெரும் வணிக நிறுவனங்கள் உட்பட பலரும் வரி ஏய்ப்பு செய்யவே விரும்புகிறார்கள், இதற்கு அடிபப்டை காரணம் நாம் ஏன் வரி கட்ட வேண்டும் என்ற அடிப்படை தெரியாமல் இருக்கிறோம், அதனால் தான் உங்களை போன்றவர்கள் சிறு வியாபாரிகளுக்கு வரி விலக்கு அவர்களுக்கு வரி விலக்கு இவர்களுக்கு வரி விலக்கு என்று சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.

                உடனே அரசியல்வாதிகள் ஊழல் கொள்ளை என்று ஆரம்பிக்காதீர்கள், அந்த அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பது நாம் தான் என்பதை மறக்க வேண்டாம்.

                இதில் இன்னொரு கூத்து விவசாயம் வருமானம் என்று சொல்லி பல பெரும் விவசாயிகள் வரி கட்டுவதில் இருந்து தப்பிக்கிறார்கள்… விவசாய வருமானத்திற்கு வரி என்று அரசு சொன்னால் உடனே விவசாயிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அவர்களிடம் போய் எப்படி வரி வசூலிக்கலாம் என்று சொல்லி போராட ஒரு கூட்டமே நம் நாட்டில் இருக்கிறது. வருடத்திற்கு 3 லட்சத்திற்கு மேல் விவசாய வருமானம் உள்ள விவசாயியிடம் ஏன் வரி வசூலிக்க கூடாது ?

                மோடியின் செயல் முக்கியமான ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.

                • மணி மீண்டும் மீண்டும் தனது அறிவை வெளிப்படுத்துகிறார்.122-கோடிப்பேர் வரி கட்டுவதில்லை என கொந்தளிக்கிறார்.

                  அறிவாளியே,நேரடி வரி,மறைமுக வரி என்றால் என்னவென தெரியுமா.மறைமுக வரிகளான சுங்கம்,கலால்,விற்பனையின் மீதான வரிகள்,சேவை வரி இவை அத்தனையையும் 125-கோடி மக்களும் செலுத்துகிறார்கள்.இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் எந்த பொருளானாலும் எந்த சேவையானாலும் மைய மாநில அரசுகள் அவற்றின் மீது இந்த வரிகளை போடாமல் விடுவதில்லை.இந்த வரிகளை செலுத்துவோர் கடைசி நுகர்வோர்தான்.அவற்றை மக்களிடமிருந்து வசூலித்து கட்டுபவர்கள் வெளியே தெரிகிறார்கள்.அவ்வளவுதான்.அதற்க்காக அவர்கள் கைக்காசை போட்டு கட்டுகிறார்கள் என்று ஆகி விடாது.காலையில் எழுந்து பல் தேய்க்கும் பற்பசையில் துவங்கி குடிக்கும் தேநீர்,உண்ணும் உணவு,பயன்படுத்தும் பெட்ரோல்,பேருந்து கட்டணம்,பார்க்கும் தொலைக்காட்ச்சி ,கட்டும் வாடகை ,கைப்பேசி,தொலைபேசி அத்தனைக்கும் மக்களிடமிருந்து வரி வசூலிக்கப்படுகிறது.

                  இந்த மறைமுக வரி என்பதே ஒரவஞ்சனையானது.அன்றாடம் கூலி வாங்கி பிழைக்கும் ஏழை தொழிலாளிக்கும் அம்பானி அதானிக்கும் ஒரே வரி என்பது என்ன நியாயம்.வாய்க்கு வாய் அமெரிக்காவை மேற்கோள் காட்டும் அறிவாளிகள் அங்கு மறைமுக வரி குறைவு,வருமான வரி,சொத்து வரி,பெரு நிறுவன வரி [corporate tax ]முதலான நேர்முக வரிகளே கூடுதல்,இந்தியாவிலோ இரண்டுமே சமம் என்பதை மட்டும் சொல்ல மாட்டார்கள்.

                  அப்புறம் சிறுவணிகர்கள் என்பதற்க்காக வரிவிலக்கு அளிக்கப்படுவதில்லை.அவர்கள் இறுதி நுகர்வோரிடமிருந்து வரியை வசூலித்து தரும் வரி வசூலிப்பாளர்கள்.[tax collectors ].ஆண்டுக்கு 16-லட்சம் கோடி ரூபாய் மைய அரசுக்கு மட்டும் வரி வருவாய் வருகிறது.மாநில அரசுகளின் வருவாய் தனி.இவற்றை வசூலிக்க கோடிக்கணக்கான ரூபாய்களை வருமான வரி ,வணிக வரித்துறை ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்குகின்றன அரசுகள்.ஓய்வூதியம்.கருணை தொகை இவை தனி.இப்படி எந்த செலவும் இல்லாத இலவச ஊழியர்களாக சிறுவணிகர்கள் பணியாற்றுவதர்கு கைமாறாகத்தான் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.அது சலுகையல்ல அவர்களின் உரிமை.அவர்களுக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பதாக இருந்தால் எரிவளி மானியத்தை [gas subsidy] நேரடியாக நுகர்வோருக்கு வழங்கும் DBT போல நுகர்வோரிடமிருந்து நேரடியாக வரி வாங்கி கொள்ளட்டும்.அதாவது வரியை குறைத்துக்கொண்டு அண்ணாச்சிகள் பொருட்களை விற்கட்டும்.அதற்கான வரி கூப்பன்களை அண்ணாச்சிகளிடமிருந்து வாங்கி கொண்டு நுகர்வோர் அரசு கருவூலத்தில் வரியை கட்டட்டும்

      • மணிகண்டன் எனக்கு என்னவோ நீங்கள் டீக்கடைக்காரர் என்று சொல்லும்போது நம்ம சாயாவாலா மோடி தான் ஞாபகத்துக்கு வருகிறார். எனவே நீங்கள் டீக்கடைக்காரர் என்ற வார்த்தையை கவனமாக உபயோகிக்கவும்…

        அப்புறம்… நீங்கள் கருப்புப் பணத்தைப் பற்றி நிறைய வெள்ளந்தியாகப் பேசுவது போல் எனக்குத் தோன்றுகிறது….ரெட்டி சகோதரர்கள் திருமணம் குறித்து நம் கட்சியினர் வாய்திறக்கவே இல்லை… நீங்களே அந்த விவாதத்திற்கு வழிவகுத்துவிடுவீர்கள் போல!! எச்சரிக்கை…எச்சரிக்கை…

      • //////இதற்காகவே நான் சென்ற வாரம் சென்னையில் இருந்து எங்கள் கிராமத்திற்கு என் காரில் சென்றேன் /////////////

        இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள இந்தியாவின் பெரும்பான்மையான ஏழை எளியவர்களின் வகைக்குள் நீங்கள் வர மாட்டீர்கள். அதனால் அவர்களின் பொருளாதார முறைமையையோ அதிலிருக்கும் சிக்கல்களையோ உங்களால் புரிந்து கொள்ள முடியாது. முதலில் மக்களுக்கு கழிவறையைக் கட்டி கொடுக்கச் சொல்லுங்கள். பின்னர் மற்றவற்றைப் புடுங்கலாம்.

        • ஆமா சார் இப்படியே சொல்லி கொண்டு இருங்கள் இன்னும் எப்போது தான் இந்த எம்.ஜி.ஆர் நம்பியார் காலத்து மனநிலையில் இருந்து மாற போகிறீர்கள் என்று தெரியவில்லை. உங்களை போன்ற ஆட்களுக்கு (வினவு உட்பட) ஏழைகள் மீது அக்கறை என்று சொல்வது எல்லாம் வெளி வேஷம், அப்படி அக்கறை இருப்பவராக இருந்தால் ஏழை மக்களிடம் இந்த சூழ் நிலையை எப்படி கையாள்வது என்று சொல்லியிருப்பீர்கள் ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை, மக்கள் ATM வாசலில் நிற்பதை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறீர்கள் அதில் யாராவுது மயங்கி விழுவானா என்று பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் அப்படி ஒருவன் விழுந்தால் உடனே மோடி சதி RSS சதி பிராமணன் சதி என்று கத்தி கொண்டு இருக்கிறீர்கள் இது தானே சார் உங்கள் ஏழைகள் மீதான அக்கறை ???

          மக்களிடம் வங்கி கணக்கில் பணம் போட்டு விட்டு அதை எப்படி தேவைக்கு ஏற்ப பணம் எடுக்காமல் செலவு செய்வது என்று சொல்லியிருக்கிறீர்களா ? அதனால் கிடைக்கும் நன்மைகளை சொல்லியிருப்பீர்களா ? கேட்டால் எங்களுக்கு பணம் தான் வேண்டும் என்பிர்கள்.

          உங்களை போன்ற ஆட்கள் கம்ப்யூட்டர் வந்த போதும் இப்படி தான் கத்தி கொண்டு இருந்திர்கள் ஆனால் கம்ப்யூட்டர் வந்ததால் தான் பலர் ஏழைமையில் இருந்து விடுபட்டு நீங்கள் சொல்வது போல் பணக்காரர்களா உருவாக்கியிருக்கிறார்கள்.

          கம்ப்யூட்டரை எப்படி நீங்கள் ஏற்று கொண்டீர்களோ அதேபோல் இந்த மாற்றத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்

  9. ஜீரோ பேலன்ஸ் மோடி அக்கவுன்ட் வச்சுறுக்க அன்னாடம் வேலைக்கு போற ஆளுகளுக்கு ஏடிஎம் கார்டு சேட்டு பேங்க் குடுக்கவே இல்லனுதான்நினைகுரேன் அப்பிடியே குடுத்து இருந்தாலும் குளத்து வேலைக்கு போயி வர்ர 500 ஓவா சம்பளத்த வங்கில செலுத்தி சுவைப்பு மிசின்ல தேச்சு தக்காளியும் வெங்காயமும் வாங்கனுமாம் என்னடா கொடுமை இது, கரண்டு பில்லு கட்டுர கவுர்மென்ட் ஆபிஸ்ல கூட சுவைப் மிசின் இல்லயாம் அண்ணச்சி கடைல எங்க இருக்க போவுது பிலா விடுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா இந்த எளவுக்கு டீவில விளம்பரம் வேற துப்புகெட்ட மோடிக்கு விவசாய தொலிலாளர்கள் கட்டிட தொலிலாளர்கள் போன்றவர்கள் இருப்பதே தெரியாது போல ,மாச சம்பளம் வாங்குரவங்க ஏடிஎம் அ பணம் எடுக்க மட்டும்தான் பெரும்பாலும் ஊஸ் பன்றாக அவ்ங்கல்லாம் கார்டா கேஸானு கேக்குற உயர்தர் ஓட்டல சாப்பிட மாட்டாங்க எல்லாம் சின்ன சின்ன ஓட்டல்தான் சாப்பிடுவார்கள் அங்கெல்லாம் கார்ட காமிச்ச சப்புளயரே முறைச்சு பாப்பான் ,எல்லாதுக்கும் டெபிட்டு கிரடிட் கார்டு ஊஸ் பன்றவங்க எல்லாம் அன்பே சிவம் மாதவன் மாறி பணக்காரனாவோ இல்ல அப்பர் மிடில் கிளாசாவோதான் இருக்கிறார்கள் இதுதான் இன்னய நிலமை இதுல பணமில்லா பரிவர்த்தனையை படு ஸ்பீடா போராகளாம்நாட்டயும் கொண்டு போகப்போறாங்கள படு ஸ்பீடா போயி எங்கயாது மோதி செத்துராதிகடா நட்டு கழன்டவனுகளா….

    • அண்ணாச்சி கடைல என்னவெல்லாம் இருக்கும் ப்ரான்டடு அயிட்டங்கள் சோப்பு பேஸ்ட்டு ,சாம்பு,கிரிமுனு அல்ரெடி டாக்ஸ் கட்டி வர்ற பிராண்டடு அயிட்டம் இதுக்கெல்லாம் டாகஸ் சரியா வரலனா அதுல அண்ணாச்சிய குத்தம் சொல்ல முடியாது அப்புறம் காய்கறிகள் உப்பு, புளி,எண்னை பருப்பு இதெல்லாம் விகிறதுல சால்ஸ் டாக்ஸ் கட்டாம கருப்பு பணமா பதுக்கப்படுதுனு சொன்னா எந்த வாயல சிரிக்கிறதுனு எனக்கே தெரியல அப்புறம் இந்த 2 வதா சொன்ன அயிட்டம் எல்லாம் எங்க வாங்கி எப்பிடி அன்னாச்சி கடைக்கு வருதுனு சிபியைய வச்சு ஆய்வு பன்னி பல கோடி பணத்த பிடிக்க சொல்லுங்கப்பா விட்டுடாதிங்க எனென்றால் அரசியல், சினிமா,தொழில் அதிபர்கள் என்ற மணல் மாபியாக்கள் சாரய அதிபர்கள் கல்லூரி நடத்துவோர், நகைகடைநடத்துவோர்,வட்டி பிஸினஸ் ,பைனான்சு கம்பெனி என்னால முடியல் மீதி டேஸ் டேஸ் இவங்கட்டயெல்லாம் கருப்பு பணத்த பிடிச்சி கஜானவ நிரப்பியாச்சு இப்ப அண்ணாச்சி கடை அரிசி சாக்குல உள்ள கருப்பு பணத்தை பிடிக்க போறோம் எல்லோரு 99 என்ற நம்பருக்கு கால் பன்னுங்க.
      ஆனா இதெல்லாம் அண்ணாச்சிக்கு தெரியுமா அவரெ ரொட்டேசனுக்கு பணம் இல்லாம உக்காந்துட்டு இருக்காரு அவ்ருகிட்ட போயி என் செல்போனுல இருந்து உங்க அக்கவுன்டுக்கு பணத்த ஏத்திட்டேன் நீங்கள் 99 க்கு டயல் பன்னுங்கனு சொன்னா அவரு அழுகுன தக்களிய கொண்டு அடிப்பாறு…..

      • கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் வங்கி மூலம் தான் பணம் கொடுக்கிறார்கள்… அவர்கள் அந்த பணத்தை ஸ்மார்ட் கார்டு மூலம் எடுக்கிறார்கள். கரண்ட் பில் கட்ட இப்ப பல சுலப வழிகள் இருக்கிறது… கருப்பு பணம் பதுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை எல்லாம் தவிர்க்கவே பார்க்கிறார்கள்…

        நம் நாட்டில் 48 ஆயிரம் பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வருமானம் வருவதாக கணக்கு காண்பித்து இருக்கிறார்கள் ஆனால் BMW Audi Benz போன்ற சொகுசு கார்கள் ஒரு வருடத்திற்கு 35 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை ஆகிறது அதேபோல் 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் 24 லட்சம் பேர் ஆனால் ஒரு வருடத்திற்கு 25 லட்சம் புதிய கார்கள் விற்பனை ஆகின்றன… இது எப்படி ? வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் தானே காரணம்.

        ஒரு டி கடைக்காரர் வட்டிக்கு பணம் விட்டு கோடி கணக்கில் கணக்கில் வராத பணத்தை சேர்த்து வைத்து இருக்கிறார், இது எல்லாம் மோடியின் செயலால் தானே வெளியே வந்து இருக்கிறது.

        • மணிகண்டன் இதனை பற்றி மிகத்தெளிவாகவே பேசியுள்ளேன்…. கவனிக்காதது உங்கள் தவறு… தங்கம், கார், வீடு ,நிலம் விற்பனை போன்ற விசயங்களுக்கு பணமில்லா பரிவர்த்தனையை கட்டாயம் ஆக்க்குவதற்கு மோடிக்கு குறுக்கே நிற்பவர்கள் யார்? மோடி ஏன் இத்தகைய பெரும் பணம் புழங்கும் விற்பனை ப்ரிவ்ர்த்தைனைக்ளில் பணமில்லா ப்ரிவ்ர்ர்தனையை கட்டாயம் ஆகமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றார்? பணமில்லா ப்ரிவர்த்த்தனை என்றவுடம் PoS இயந்திரத்துக்கு மட்டுமே உடனே போகசொல்ல வில்லை. செக் மூலம், DD மூலம் பணமில்லா பரிவர்த்தனைகளை செய்ய முடியும் அல்லவா?

        • மணிகண்டன் அவர்களே, பெரும் பணம் புழங்கும் விற்பனைகளை எல்லாம் (ex கார் …) பணமில்லா பரிவர்த்தனைகளாக நிகழ்த்த வேண்டும் என்று சட்டமோ அல்லது அவசர சட்டமோ இயற்ற மோடிக்கு தெரியாதா என்ன? தெரிந்தும் அப்படி செய்யாமல் அத்தியாவசிய பொருட்ட்க்லான மளிகைக்கும் ,காய்கறிக்கும் PoS இயந்திரங்களை பயன் படுத்துங்கள் என்று மக்களை மோடி மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது மூலம் அவர் யாருக்கு சாதகமாக இருக்கின்றார் ?

          • நான் சொன்ன விஷயத்தை இன்னும் நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை… இந்தியாவில் வெறும் 48 ஆயிரம் பேர் தான் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்களா ? அப்படி 48 ஆயிரம் பேர் தான் என்றால் எப்படி ஒரு வருடத்திற்கு 35 ஆயிரம் சொகுசு கார்கள் விற்பனை ஆகிறது ? Audi காரை ஒருவன் வாங்குகிறான் என்றால் நிச்சயம் அவனிடம் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருட வருமானம் இருந்தால் தான் முடியும், இவர்கள் எல்லாம் வருமான வரியை சரியாக காட்டாமல் தப்பித்து கொண்டு இருக்கிறார்கள், இப்படி ஏமாற்றியவர்கள் எல்லாம் இப்போது மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

            நிச்சயம் 2017 ஆண்டு வருமான வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

            • மணிகண்டன் அவர்களே,உங்கள் வாதத்தில் பணமில்லா பரிவர்த்தனையின் நோக்கம் என்ன என்று விவரங்கள் இல்லை . உயர் மதிப்பு பொருட்களான ஆடி கார் என்று மட்டும் அல்ல தங்கம், நிலம், வீடு, ஏனைய விலை உயர்ந்த பொருட்களும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் மட்டுமே வாங்கப்படவேண்டும் என்ற அவசர சட்டம் இயற்ப்பட்டால் அத்தகைய விற்பனை பரிவர்த்தனைகள் அனைத்துமே வருமான வருமான வரித்துறையின் கண்காணிப்புக்கு கீழ் வரும் என்ற உண்மையை நீங்கள் உணர இன்னும் எத்துனை நாட்கள் ஆகும்? தங்கம் வாங்க பணமில்லா பரிவர்த்தனை அவசியம் என்ற சட்டம் நடைமுறையில் இருந்து இருக்கும் எனில் மோடி உயர் மதிப்பு பணம் செல்லாது என்று அறிவித்த நவம்பர் 8 அன்று இரவு கருப்பு பண முதலைகள் கோடிகளை கொட்டி தங்கத்தை வாங்கி குவித்து இருக்க முடியுமா?

              அதனை விட்டுவிட்டு அத்தியாவசிய பொருட்களான மளிகைக்கு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதால் என்ன பயன்?

  10. கருப்பு பண ஒழிப்பு போரில் மோடிக்கு ஆதவாக போசும் கருப்பபண ஒழிப்பு விரர்களே புதுப்பட்டி பஸ்ஸான்டுல உள்ள கறிம்பாஸ் கடைல கார்ட வச்சு ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்க முடியுமானு பாருங்க என்னா ஏடிஅம் லீவு விட்டுட்டாங்க கறி எடுக்க காசு இல்லடானு பேஸி புக்குலநடுத்தற வர்க்க அறிவு ஜீவிகளே புலம்புவதாக தகவல்…

    • சரி உங்களால் ஆட்டு கரி வாங்க முடியவில்லை என்பதற்காக ஊரில் உள்ள கருப்பு பண முதலாளிகளை எல்லாம் விட்டு விட வேண்டும்மா ? இந்த கருப்பு பண முதலாளிகளால் தானே கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்று எல்லாம் கண்டபடி விற்க முடிந்தது… ரியல் எஸ்டேட் முதலாளிகள் எல்லாம் மக்கள் வாங்கும் சக்தியை மீறி விலை வைத்து விற்க முடிந்தது, எதனால் இந்த நிலை ?

      மக்கள் நலனுக்காக நிச்சயம் கருப்பு பணம் ஒழிக்க பட வேண்டும் அதற்கு அனைவரும் அவர்களால் முடிந்ததை செய்ய வேண்டும்.

      • மணிகண்டன் நீங்க சொல்லுறதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் வெங்காயத்த பதுக்குன ஆளுகல பிடிக்க கையாலாகத அரசுக்காக நான் ஏங்க கஸுட்டபடனும் ,ரியல் எஸ்டேட் முதலாளிகள கண்டு பிடிக்க மோடியாலயே முடியலாயா ஏழைகளை பட்டினி போட்டா அவுங்க என்ன செய்வாங்க அப்ப மோடி லூஸிதானு சொல்ல வரீங்களா கட்டுரையை முழுசா படிங்க ஜீ…….

  11. மணிகண்டன் உங்களை போன்ற மாபெரும் முட்டாளை நான் இதுவரையில் இந்த வினவு விவாதங்களில் கண்டதில்லை. உங்கள் முட்டாள் தனத்தை தினம் தினம் வினாவில் வெளிகாட்டி அசிங்கக்ப்ப்டாதீர்கள்! விற்பனை வரி என்பது என்ன வென்று கூட தெரியாமல் பேசிக்கொண்டு உள்ளீர்கள். ஒரு பொருள் சந்தைக்கு வரும் நிலையிலேயே அதன் மீது வரி விதிக்கபட்டு(VAT-value added tax) தான் வருகின்றது. அன்னாச்சி அவர் கடையில் விற்பனை செய்ய கோல்ட் வின்னர் ஒரு கிலோ எண்னையை 50 பாக்கெட்டுகள் விநியோகிஸ்தரிடம் (Distributor ) இருந்து வாங்குகின்றார் என்றால் அவர் வாங்கும் பொருட்களுக்கு அவர் செலுத்தும் பணத்தின் மூலம் அவர் வரியை கட்டிவிட்டு தான் வாங்குகின்றார். டீலரின் சேல்ஸ் மேன் பொருட்களை அட்டை பெட்டியில் இறக்கிவிட்டு அன்னாசியிடம் கணினியில் அச்சடிக்கபட்ட பில்லை கொடுத்து அதற்கான பணத்தை பெறுவதனை நீங்கள் அண்ணாச்சி கடைக்கு சென்று இருந்தால் தானே அறியமுடியும்…! அந்த பில்லில் பொருட்ட்களுக்கான வரியும்(VAT) உள்ளடங்கி இருப்பதனை நான் பார்த்து இருகின்றேன். கோல்ட் வின்னருக்கு என்று இல்லை எந்த பொருட்களை (சோப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு என்று …….) அண்ணாச்சி விற்பனைக்காக Distributor இருந்து வாங்கினாலும் அவற்றை வாங்கும் போதே அவர் வரி கட்டி விடுகின்றார் என்ற உண்மை கூடவா உங்களுக்கு தெரியவில்லை…. அத்தகைய நிலையில் அவர் வரி எய்ப்பு செய்ய சாத்தியங்கள் எப்படி உருவாகின்றது என்று நீங்கள் தான் விளக்கவேண்டும்.! முதலில் FMCG பொருட்ட்களை பெரு நிறுவனங்கள் எப்படி சந்தை படுத்துகின்றார்கள் , VAT என்றால் என்ன ,பொருட்ட்கள் எப்படி விநியோகிஸ்தரிடம் இருந்து கடைகளுக்கு செல்கின்றது எப்படி VAT பொருளின் மதிப்புடன் சேர்க்கபட்டு அதன் பின் பொருள் சந்தைக்கு வருகின்றது என்று அறிந்து கொண்டு வந்து இங்கு பேசுங்கள். (தொடரும்)

    ரொம்ப கூச்சமாக இருக்கு மணிகண்டன்…. நண்பன் மணிகண்டன் இந்த அளவுக்கு விவரம் இல்லாமல் இருகின்ராரோ என்று எனக்கு மிகவும் வெட்கமாக உள்ளது மணிகண்டன்.

  12. மணிகண்டன் விவாதத்தில் இறங்கும் முன் அதனை பற்றிய விவரங்களை எதோ ஒரு resorce மூலம் அறிந்துக்கொண்டு வந்து அதனை பற்றி விவாதியுங்கள். உங்களுடன் விவாதிப்தே ஒப்புக்கு சப்பாணியுடன் ஓட்டப்பந்தையம் ஓடுவது போன்று எவ்வித விறுவிறுப்பும் இல்லாமல் அலுப்பாக உள்ளது. சரி விசயத்துக்கு வருகின்றேன். விற்பனை வரியாகிய VAT காலாவதி ஆகும் நேரம் கூடவந்து விட்டது. Goods and Services Tax(GST) நிகழுக்கு வரும் தருணம் இது. இங்கு இது தொடர்பாக நீங்கள் அறிய சில இணைய லிக் க்குகளை கொடுக்கின்றேன்… வினவு அனுமதித்தால் நீங்கள் அவற்றை காணலாம்… (தொடரும்)

    https://en.wikipedia.org/wiki/Value-added_taxation_in_India

    https://en.wikipedia.org/wiki/Goods_and_Services_Tax_%28India%29

    இன்னும் அண்ணாச்சிகள் விற்பனை வரியில் எமாற்றுகின்றார்கள் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் எப்படி என்று நீங்கள் தான் விளக்கவேண்டும். மேலும் ஒரு விஷயம் : அப்படி இந்தியாவெங்கும் உள்ள அண்ணாச்சிகள் விற்பனை வரியில் எமாற்றுகின்றார்கள் என்றால் அருண் ஜெட்லி அவர்கள் எப்படி பட்ஜெட்டை போடுவார்!? More over ….., In 2015-2016, the gross tax collection of the Centre amounted to ₹14.60 trillion (US$220 billion). Pls tell me How and where this tax is collected?

  13. மணிகண்டன், FMCG பொருட்ட்கள் வந்து சேரும் இடம் ரிலையன்ஸ் ,மோர் போன்ற பெருவர்த்தக நிறுவனங்களாக இருந்தாலும் சரி , சிறிய அண்ணாச்சி கடையாக இருந்தாலும் சரி அதற்குரிய விற்பனை வரி என்பது இன்று VAT என்ற பெயரிலும் , நாளை விற்பனை வரி சட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு GST என்ற பெயரிலும் முன்பே அரசால் வ சூ ளி க்கப்பட்டுதான் கடைக்கு வருகின்றது. மக்களாகிய கஸ்டமருக்கு அண்ணாசி கடையில் பொருட்களை வாங்கும் போது MRP விலையை விட குறைவாக கிடைக்க காரணம் அங்கு ஆடம்பர செலவுகள் ஏதும் இல்லாமல் இருப்பதே… ரிலைன்ஸ் மற்றும் மோர் போன்ற கடைகளில் இரவு பகல் என்று பாராமல் எப்போதுமே விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும்….(ஆனாலும் டாய்லெட் வசதிகள் அங்கும் கிடையாது) குளிர்சாதன வசதிகள் எப்போதுமே முப்பொழுதும் இயங்கிக்கொண்டு தான் இருக்கும்…. இத்தகைய வசதிகள் அண்ணாச்சி கடைகளில் இல்லை என்பதால் (எங்களை போன்ற கஸ்டமருக்கு அவைகள் தேவையும் இல்லை) அவர்களுக்கான செலவு குறைக்கப்டுகின்றது. மேலும் POS இயந்திரமும் அண்ணாச்சி கடைகளில் கிடையாது என்பதால் மாதம் Rs 5000 க்கு மேல் செலவு குறைக்கப்படுகின்றது. எனவே அன்னாச்சிக்ளால் MRP யை விட குறைந்த விலையில் பொருட்ட்களை விற்க முடிகின்றது.

    அண்ணாச்சி கடைகளில் நிகழும் விற்பனையை பொறுக்க இயலாத பெருவர்த்தகர்கள் (மோர் மற்றும் ரிலையன்ஸ் போன்றவர்கள் ) மோடிக்கு அழுத்தம் கொடுத்து அண்ணாச்சி மளிகை கடைகளில் கூட பணமில்லா வர்த்தகத்தை நடத்தவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதன் நோக்கத்தை இப்போதாவது நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.. இல்லை மீண்டும் அண்ணாச்சி கடைகளில் கருப்பு பணம்…, என்ற விசயத்தை பிடித்துக்கொண்டு தொடர்ந்து தொங்கத்தான் போகின்றீர்களா?

    • ரிலைன்ஸ் மற்றும் மோர் போன்ற கடைகளில் AC போட்டாலும் அவர்கள் MRP விலையை தாண்டி விற்பது இல்லை, பல பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். அண்ணாச்சி கடையில் அப்படி இல்லை மேலும் ரிலைன்ஸ் மற்றும் மோர் போன்ற கடைகளில் expire ஆன பொருட்களை விற்க மாட்டார்கள் ஆனால் அண்ணாச்சி கடையில் (இதுவும் சென்னையில் எனக்கு அனுபவமே) expire ஆன பொருட்களை நம் தலையில் கட்ட பார்ப்பார்கள்… இந்த கசப்பான அனுபவத்திற்கு பிறகு தான் நான் ரிலைன்ஸ் கடையில் பொருட்களை வாங்க ஆரம்பித்தேன்… நான் ஒன்றும் ஓசியில் பொருள் வாங்கவில்லை என் பணத்திற்கு நியாயமாக தரமான பொருட்கள் வேண்டும் அது எங்கே கிடைக்கிறதோ அங்கே வாங்குகிறேன்.

      • மணிகண்டன் நீங்கள் அண்ணாசி கடைகள் மீது வைத்த வரி ஏய்ப்பு குற்றசாட்டை மறந்து விட்டு பேசிக்கொண்டு உள்ளீர்கள்! அந்த குற்ற சாட்டை நிருபிக்கவேண்டியது உங்கள் கடமை… அதனை மறந்து விட்டு விவாதத்தை திசை திருபுகிண்றீர்கள். இருந்தாலும் உங்கள் கேள்விகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளிக்கின்றேன். TNVAT பதிவு , TIN நம்பர் (தனி நபருக்கு PAN எண் போன்று வணிகர்களுக்கு TIN நம்பர்) என்று பல விசயங்களை தாண்டி தான் அண்ணாச்சிகளும் மளிகை கடைகளை தொடங்க முடியும் என்ற நிலையில் வரி ஏய்ப்புகள் அன்ன்னச்சி கடைகளில் எப்படி நடக்கிறது என்று நீங்கள் விவரித்தால் மாநில அரசுகளுக்கும் , மோடிக்கும் வரி ஏய்ப்பு செய்யும் அன்னச்சிகளை கையும் களவுமாக பிடிக்க வசதியாக இருக்கும்.

        இனி விவாத கருபொருளை தாண்டி நீங்கள் கூறும் விசயங்களை விவாதிப்போம். அண்ணாச்சி கடை என்று அல்ல ரிலையன்ஸ் பிரஸ் , மோர் சூப்பர் மார்கெட் என்று எல்லா கடைகளிலுமே expire ஆன பொருட்கள் இருபது என்னவோ உண்மை தான். பார்த்து வாங்குவது நமது நுகர்வோரின் கடமை.

        ரிலையன்ஸ் மீது இந்த expire ஆன பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆயிரகணக்கான வழக்குகள் கன்சூமர் கோர்டில் குவிந்து உள்ளதனை நீங்கள் காணவில்லை என்று நினைகின்றேன். ரிலையன்ஸ்சில் குழந்தைகளுக்கான அமுல் பவுடர் கூட expire date முடிந்து கூட விற்பனை செய்துகொண்டு தான் உள்ளார்கள். அண்ணாச்சிகள் அணைத்து பொருட்ட்களையுமே MRP யை விட குறைவான விலையில் விற்கும் நிலையில் ரிலையன்ஸ் நீங்கள் சில பொருட்ட்களை மட்டும் பெரும் தள்ளுபடி விலையில் பெறுவதற்கான உண்மை காரணத்தை அறிந்துக்கொண்டாளள் மீண்டும் அங்கு செல்ல மாட்டிர்கள். ரிலையன்ஸ்சில் “expire date முடியும் தருணத்தில்” உள்ள பொருட்ட்கள் அனைத்துமே தள்ளுபடி விலையில் தான் விற்கபடுகின்றன. அனைத்து பொருட்ட்களையுமே அவர்கள் ஏன் MRP யை விட குறைந்த விலையில் விற்க வில்லை என்று சிந்தித்து பாருங்கள்… உண்மை புலப்படும்.

        அதே நேரத்தில் மோர் சூப்பர் மார்க்கெட்டில் தள்ளுபடிக்கு கிடைக்கும் பொருட்கள் அனைத்துமே அவர்கள் பிர்லா குழுமத்தின் நேரடி தயாரிப்பு பொருட்ட்கள் தான்.(அவர்களின் ஒரு தக்காளி சாஸ் வாங்கினால் மற்றது இலவசம்-மற்ற பிராண்டுகளை விட விலை குறைவு. ) நூற்றுக்கும் அதிகமான பொருட்ட்களை அப்படி அவர்கள் குறைந்த விலையில் விற்க காரணம் தயாரிப்பு நிலையில் இருந்து நேரடியாகவே அவைகள் மோர் சூப்பர் மார்க்கெட்க்கு வருவதால் தான்…(பல முறைகள் அவர்கள் VAT செலுத்த வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?) நான் மோருக்குள் நுழையும் போதே என்னை பார்த்ததும் அங்கு உள்ள மேனேஜரும் சரி, துணை மேனேஜரும் சரி, விற்பனை பெண்களும் சரி , புதியதாக என்ன என்ன பிர்லா குழும தயாரிப்புகளுக்கு offer உள்ளது என்று கூறிவிடுவார்கள். தேவை எனில் அண்ணாச்சி கடைகளை விட அதே பொருளின் மற்ற பிராண்டுகள் விலை குறைவு எனில் மோரில் வாங்கிவிடுவேன்.( காசு கொடுத்து தான் POS யந்திரத்தை பயன் படுத்தியல்ல )

        • எப்படி பார்த்தாலும் ரிலையன்ஸ் expire ஆன பொருட்களை விற்பதில்லை ஆனால் நம்ம அண்ணாச்சி expire தேதி முடித்து 6 மாதம் ஆன பிறகும் அந்த பொருளை நம் தலையில் கட்ட பார்ப்பார். என்னை பொறுத்தவரையில் நான் வாங்கும் பொருள் தரமானதாக இருக்க வேண்டும் அதற்கு சரியான பில் வேண்டும். ரிலையன்ஸில் ஒரு தரமற்ற பொருளாக இருந்தால் அவர்களை consumer கோர்ட்க்கு இழுக்க முடியும், இழப்பீடு வாங்க முடியும் ஆனால் நம்ம அண்ணாச்சியை அப்படி consumer கோர்ட்க்கு இழுக்க முடியாது காரணம் அண்ணாச்சி பில்லை அவர் கடை பெயரில் தராமல் வெறும் வெள்ளை தாளில் கொடுக்கிறார்.

          • மணிகண்டன் , ரிலையன்ஸ் பிரஸ் வணிக நிறுவனம் மீது காலாவதி ஆன பொருட்களை விற்பனை செய்த காரணத்துக்காகவே எண்ணற்ற வழக்குகள் நுகர்வோர் நீதி மன்றத்தில் இருக்க அப்படி ஏதும் expire தேதி முடிந்த காலாவதியான பொருட்கள் அங்கு விற்பனை செய்யபடவில்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள் என்றால் உங்கள் நேர்மையில் தான் தவறு ஏற்பட்டு உள்ளது என்று பொருள் ஆகின்றது. ரிலையன்ஸ் நிறுனத்துக்கு எதிரான இத்தகைய வழக்குகளில் நுகர்வோர் வெற்றியும் பெற்று உள்ளார்கள் என்னும் நிலையில் ரிலையன்ஸ் பிரஸ் நிறுவனத்தில் expire தேதி முடிந்த காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யபடுவது இல்லை என்ற உங்கள் வாதம் கேலிக்குரியது.

            • பாஸ் என் கருத்தை மீண்டும் படிக்கவும் ரிலையன்ஸ் காலவாதியான பொருட்களை விற்றால் அவர்கள் நீதிமன்றத்திற்கு இழுக்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அண்ணாச்சியை அப்படி நீதிமன்றத்திற்கு இழுக்க முடியாது என்பதே என் வாதம், அதற்கு பதில் சொல்லாமல் வேறு எதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

              • இது உங்கள் கருத்து தானே மணிகண்டன்…. ரிலையன்ஸ் பிரசில் காலாவதி ஆனா பொருட்களே விற்க படுவது இல்லை என்று பீலா விட்டது நீங்கள் தானே மணிகண்டன்? //எப்படி பார்த்தாலும் ரிலையன்ஸ் expire ஆன பொருட்களை விற்பதில்லை ஆனால் நம்ம அண்ணாச்சி expire தேதி முடித்து 6 மாதம் ஆன பிறகும் அந்த பொருளை நம் தலையில் கட்ட பார்ப்பார்.//

              • மணிகண்டன், நீங்கள் சிறுவணிகர்கள் விற்பனை வரியில் ஏமாற்றுகின்றார்கள் என்று வைக்கும் குற்றசாட்டுக்கு இன்னும் இத்துணை நாளாகியும் எப்படி ஏமாற்றுகின்றார்கள் என்று ஆதாரத்துடன் பதில் அளிக்கவில்லை. காரணம் மிக எளிது. அரசால் VAT என்ற பெயரில் உள்ள விற்பனை வரி எப்படி வசூலிக்க்ப்டுகின்றது என்ற முறை கூட தெரியாமல் உளறிவிட்டு இப்பொது திரு திரு வென்று விழித்துக்கொண்டு உள்ளீர்கள்! என்ன செய்ய உண்மை அறிந்து பேசவேண்டும்….

                • ஹி ஹி ஹி அண்ணாச்சி கடையில் அவர்கள் கடை பெயரில் பில் தராமல் வெள்ளை தாளில் பில் கொடுப்பது எதற்காகவாம் ? இது கூட தெரியாதா ?

                  • உங்கள் பீலாவுக்கு ஒரு அளவே இல்லாமல் போகின்றது மணிகண்டன்….. வெகு சமிபத்தில் நான் மளிகை வாங்கும் சேட்டு மளிகை கடையில் ஒரு பிரச்சனை… குழந்தைகள் உணவு செர்லாக்கில் பிரச்சனை….. டப்பாவுக்குள் பூச்சிகள்….. வெள்ளை தாளில் பில் தான்…. சேட்டுக்கும் நுகர்வோருக்கும் பிரச்சனை…. காலாவதி ஆகாத இந்த பொருளுக்கு நான் ஏன் காசை திருப்பி கொடுக்கவேண்டும் என்பது சேட்டின் வாதம்….. உன்னிடம் தானே வாங்கினேன் என்பது நுகர்வோரின் வாதம். வழக்கு நீதி மன்றத்துக்கு சென்றது…. சேட்டின் வாதம் ஏற்கபட்டு செலாக் நிறுவனம் தான் பூச்சி உள்ள அந்த செர்லாக் பொருளுக்கு மாற்றாக வேறு பொருள் அளிக்கவேண்டும் என்று தீர்ப்பு வந்தது….தன் கைபட எழுதும் பில்லை மறுக்கும் நிலையில் எல்லாம் அன்னச்சிகடைகள் இல்லை….எனக்கும் இதுபோன்ற நிலை சில வருடங்களுக்கு முன் ஏற்பட்டது…. பில் எல்லாம் வாங்காமல் தான் லைன் டேட்ஸ்சை அண்ணாசி கடையில் வாங்கினேன்… புதிய சரக்கு தான்…. இருந்தாலும் உள்ளே சிறு சிறு வண்டுகள்…. அண்ணாச்சியிடம் திருப்பி அளித்தேன். அடுத்தமுறை டீலர் வந்த போது அவரிடம் இருந்து மாற்று சரக்கை வாங்கி அளித்தார்….

                  • முதலில் அண்ணாச்சி கடைகள் எப்படி vat கட்டுகின்றார்கள் என்ற விசயத்தை அறிந்துக்கொண்டு வந்து இங்கு பேசுங்கள் மணிகண்டன்…சரி இவ்வளவு நாட்களாகியும் நீங்கள் உண்மை தெரியாமல் உளறிக்கொண்டு இருப்பதால் விளக்குகின்றேன்….நண்பர் திப்பு கூறுவது போன்று அண்ணாச்சி போன்ற சிறு வணிகர்களுக்கு அதாவது ஆண்டுக்கு பத்து இலட்சம் வரை விற்று வரவு உள்ள கடைகளுக்கு மதிப்பு கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆண்டுக்கு ஐந்து இலச்சத்துக்கு மேல் விற்பனை என்றால் அந்த கடைக்கு TIN நம்பர் கட்டாயம்… (Taxpayer Identification Number.) இந்த நிலையில் எப்படி அண்ணாச்சிகள்விற்பனை வரியில் எய்ப்பு செய்கின்றார்கள் என்று கூறுங்கள் அல்லது பதில் அளிக்க இயலவில்லை என்றால் விவாதத்தில் இருந்து வெளியேறுங்கள்…

                    • நான் கேட்பது ஏன் பில்லை நேர்மையாக கடை பெயரில் கொடுக்காமல் வெள்ளை தாளில் கொடுக்கிறார்கள் என்பதே அதற்கு இது வரையில் பதிலே காணோம். நேர்மையானவர்களாக இருந்தால் கடை பெயரில் பில் கொடுக்க வேண்டியது தானே.

                      அடுத்த கேள்வி எப்படி ஒரு கடையில் வருடத்திற்கு 10 ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறார்கள் என்று தெரியும் ? வாடிக்கையாளருக்கு கொடுக்கும் பில்கள் மூலம் தானே.. அதை ஒழுங்காக கொடுக்காததால் நோக்கம் என்ன ? வரி காட்டாமல் ஏமாற்ற தானே ?

                      உங்களுக்கு எல்லாம் அரசாங்கத்தை ஏமாற்றுவது ஒரு பொழுதுபோக்காக இருக்கிறது

                      சரியான நேர்மையான வரி கட்டினால் தான் அரசாங்கத்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியும்… எதற்கு எடுத்தாலும் போராட்டம், வரி கட்ட சொன்னால் மாட்டோம் என்று ஏமாற்றி கொண்டு இருந்தால் கடைசியில் பாதிப்பு, நீங்கள் போலித்தனமாக உருகும், ஏழை மக்களுக்கு தான்.

                      வரி கட்டுவது நம் கடமை.

                    • செந்தில் சொல்வது ஒரு வகையில் சரிதான்.அதில் ஒரு சின்ன விளக்கம்.

                      தமிழ்நாட்டிற்குள் பொருட்களை கொள்முதல் செய்து தமிழ்நாட்டுக்குள் விற்கும் வணிகருக்கும் வெளிமாநிலங்களில் இருந்து பொருட்களை தருவித்து இங்கு விற்கும் வணிகருக்கும் VAT ஐ பொறுத்தவரை ஒரு வேறுபாடு உள்ளது.முன்னவர் 10-லட்சத்துக்கு குறைவான விற்று வரவு உள்ளவராக இருந்தால் VAT பதிவு கட்டாயமில்லை.பின்னவர் 5-லட்சத்துக்கு குறைவான விற்று வரவு உள்ளவராக இருந்தால் VAT பதிவு கட்டாயமில்லை.

                    • 2014-15 ஆண்டுக்கான மொத்த தமிழ் நாடு அரசின் மொத்த வரி வரவு Rs. 85,772.71 கோடிகள். அதில் விற்பனை வரி மூலம் கிடைத்த வரி வரவு Rs. 60,314.61 கோடிகள். (மொத்த வரி வரவில் 70.32%விற்பனை வரி மூலமாக கிடைத்து உள்ளது). மணிகண்டன் மக்களையும் , விற்பனையாளர்களையும் வரிகட்டாமல் எய்கின்றார்கள் என்று குற்றம் சாட்டுகின்றார் என்ற நிலையில் மேல் உள்ள விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

                  • இந்த அறிவாளிக்கு எளிதில் எதுவும் விளங்காது போல.10-லட்சத்துக்கு குறைவான விற்று வரவு உள்ள வணிகர்கள் ST /VAT பதிவு செய்ய வேண்டியதில்லை.ஆகையால் கடை பெயரில் பில் தரவும் வேண்டியதில்லை.இது சட்டப்படியான உரிமை.

                    • இன்னும் நீங்க பச்சை புள்ளையாவே இருக்கீங்க பாஸ்… பல கடைகள் வருடத்திற்கு 10 ரூபாய்க்கும் மேலாகவே வியாபாரம் செய்கிறார்கள், அவர்கள் பில்லை மட்டும் கடை பெயரை போடாத வெள்ளை தாளில் தான் கொடுக்கிறார்கள்.

                      உங்கள் வைத்தபடியே வருவோம் அண்ணாச்சி கடைகள் எல்லாம் 10 ரூபாய்க்கு கீழ் வியாபாரம் செய்கிறார்கள் என்றால் கடை பெயரில் பில்லை நேர்மையாக கொடுக்க வேண்டியது தானே, ஏன் செய்வது இல்லை ? விளக்கம் கொடுக்க முடியும்மா ?

                    • மணிகண்டன் , பச்ச பிள்ளையாக இருந்தால் கூட அது வளர வளர மிக வேகமாக கத்துகொள்ளும்! நீங்க வளர்ந்த பின்னும் அறிவற்று இருப்பது தான் இங்கு உங்கள் புரிதலில் பெரும் பிரச்சனையாக உள்ளது. என்ன செய்ய?
                      [1] 10 லச்சதுக்கும் மேல் ஆண்டுக்கு விற்பனை செய்யும் மளிகை பற்றி :
                      ———————————————————–
                      பில்லு [பில்லு என்று கூவுகின்ர்களே! பில் எதற்கு என்ற புரிதலாவது உங்களுக்கு உள்ளதா? TIN நம்பர் வாங்கி 10 லச்சதுக்கும் மேல் ஆண்டுக்கு விற்பனை செய்யும் மளிகை கடைகாரர்கள் கண்டிப்பாக கணினி பில்லை கொடுத்துக்கொண்டு தான் உள்ளார்கள்..! எங்க ஊருக்கு வாங்க..மறைமலை நகருக்கு வாங்க! tin நம்பர் உள்ள வியாபாரிகளின் கடைகளை காட்டுகின்றேன். அங்கு பில் இல்லை என்றால் அப்புறம் பேசுங்க! (மறுபடியும் கணினி பில் தானே எங்கே கடை பெயர் அச்சடிக்ப்ட்ட பில் என்று வினவில் புல்ம்பாதிர்கள் மணிகண்டன்! மோர், போன்ற பெரு வர்த்தக கடைகளிலும் கணினி பில் தான்) TIN நம்பர் வைத்து உள்ள கடைகாரர்கள் அவர்கள் டிளர்களிடம் வாங்கும் பொருட்களுக்கு பில் வாங்குவதால் அவர்கள் அதற்கு VAT வரிகட்டி தான் வாங்குகின்றார்கள்.
                      VAT சட்டம் என்ன கூறுகின்றது என்றால்…………
                      Whether dealers paying tax on composition basis have to
                      maintain detailed accounts ?(VAT FAQ)
                      Not necessary
                      (a) The dealers who opted to pay tax on his total turnover not
                      exceeding Rs. 50 lakhs are to maintain purchase and sales
                      accounts alone.
                      இது தான் தமிழ் நாட்டின் சட்டம்….. விற்பனை வரி கட்ட பில்கள் தேவையே என்று தான் இந்த சட்டம் கூறுகின்றது….. ஆனாலும் கணினி பில்களை அவர்கள் கொடுகின்றார்கள்….இல்லை என்று இன்னும் நீங்கள் புலம்புவீர்கள் என்றால் எங்காவது மரத்தில் போய் முட்டிகொள்ளுங்கள் மணிகண்டன்…. TINநம்ம்ப்ர்உள்ளவர்கள் மாதம் மாதம் அவர்கள் வாங்கும் மற்றும் விற்கும் பொருட்களின் அடிப்டையில் விற்பனை வரியை SBI மூலமாக செலுத்திக்கொண்டு தான் உள்ளார்கள்…. விற்பனை வரி செலுத்த முழுமையான-விவரமான விற்பனை கணக்கு தேவை இல்லை என்று vat கூறும் போது அதற்கு எதிராக நீங்கள் இங்கு உளரும் காரணம் உங்களின் அறிவில் உள்ள குறைபாடே தவிர வேறு ஏதும் இல்லை….

                      [2] 10 லச்சதுக்கும் குறைவான விற்பனை மளிகை கடைகள் பற்றி :
                      ——————————————————-
                      இவர்கள் டிளர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு மட்டுமே VAT வரி கட்டவேண்டுமே தவிர விற்கும் பொருக்ளுக்கு VAT கிடையாது என்பது தான் தமிழ் நாட்டின் விற்பனை வரி சட்டம்…. அப்புறம் என்ன ஹருக்கு விற்பனை வரி கட்டவேண்டும் அவர்கள்…? வெள்ளை தாளில் உங்களுக்கு அவர்கள் பில் கொடுப்தால் என்ன பிரச்சனை…. உங்களுக்கு கடை பெயர் வேண்டுமானால் அவர்களிடம் கேட்டு ரப்பர் ஸ்டாம்ப்சீலை அந்த வெள்ளை பேப்பர் பில்லில் பெற்றுக்கொள்ளுங்கள் ! அவர்கலுக்கு விற்பனையில் VAT கட்ட தேவை இல்லை என்ற நிலையில் வெள்ளை பில்லின் மூலம் வரி கட்டாமல் எய்கின்ரர்கள் என்று நீங்கள் கூறுவது வடிகட்டிய முட்டாள் தனமாக இல்லையா மணிகண்டன்… ?

                    • change:

                      இது தான் தமிழ் நாட்டின் சட்டம்….. விற்பனை வரி கட்ட பில்கள் தேவையே என்று தான் இந்த சட்டம் கூறுகின்றது….. ->இது தான் தமிழ் நாட்டின் சட்டம்….. விற்பனை வரி கட்ட பில்கள் “”””தேவையே இல்லை “”””என்று தான் இந்த சட்டம் கூறுகின்றது…

                    • மணிகண்டன்…., விற்பனை வரித்துறை ஒன்றும் இளித்த வாயர்கள் அல்ல…! ஆண்டுக்கு விற்பனை வரி கட்டுவது விற்பனை 10 லச்சத்துக்கு மேல் என்றால் கட்டாயம்… அதற்கு தான் TIN நம்பரை VAT பதிவாக பெற வேண்டும் என்பது கட்டாயம்…. ஒருவேளை விற்பனை 5 லச்சம் மேல் என்றால் TIN நம்பரை vat பதிவாக பெறவேண்டும்… ஆனால் VAT வரி கட்ட தேவையில்லை. 5 லச்சதுக்கும் கீழ் விற்பனை உள்ள மளிகை கடைகளில் VAT வரி மற்றும் VAT பதிவு எதுவுமே தேவை இல்லை… இது தான் இன்றைய தமிழ் நாடு வணிக வரித்துரையின் சட்டம். இந்த சட்டத்தை கண்காணிக்கவும் வழிகள் உள்ளன….
                      கீழ் உள்ள விற்பனை வரி சட்ட விசயங்களை கூர்ந்து கவனியுங்கள் :
                      How is the assessment made?
                      All the assessments are self-assessments as all returns filed are to be
                      accepted. The dealers need not appear before assessing authority or produce
                      the accounts for annual assessments. The assessing authority shall accept
                      the returns filed by the dealer and pass assessment order after the
                      assessment year is over. The orders shall be served on dealers in the manner
                      prescribed in Rules.

                      What is self-assessment?
                      Self determination of tax liability by dealer through periodical returns
                      prescribed in the Act is called Self-assessment.

                      Will there be any random check of accounts?
                      Yes. The Commissioner of Commercial Taxes, may select assessments not
                      exceeding 20% of total self assessments in the State for detailed check of
                      accounts. The details of such selection shall be placed on notice board in the
                      assessment circle and in the department websites The accounts which are
                      selected for detailed check shall be called and checked by assessing
                      authority. After check, the assessing authority either accept and confirm the
                      self assessment already passed or revise the assessment.

                      ஆண்டுக்கு பத்து லட்ச்சதுக்கு மேல் விற்பனை செய்யும் மளிகை கடைகாரர்கள் சுயமாகத்தான் எவ்வளவு விற்பனை வரி என்று கணக்கீட்டு செய்கின்றார்கள்…(அவர்கள் டிளர்களிடம் இருந்து வாங்கும் பொருட்கள் TIN
                      பதிவின் மூலம் வாங்கப்படுவதால் ஏமாற்ற முடியாது) இந்த மளிகை கடைகள் அடுத்து 20% அளவுக்கு Commercial Taxes துறையால் கண்காணிக்கபடுகின்றன.

                    • நீங்கள் சொல்வது தவறு செந்தில்

                      சிறிய கடையாக இருந்தாலும் சரி பெரிய கடையாக இருந்தாலும் சரி, வருடத்திற்கு 1 லட்சத்திற்கு விற்பனை செய்தாலும் சரி 1 கோடிக்கு விற்பனை செய்தாலும் சரி வாடிக்கையாளர்களுக்கு பில் கொடுக்க வேண்டும்… இன்னும் சொல்ல போனால் சரியான பில் கொடுக்காமல் இருப்பதே சட்டப்படி தவறு, பில் என்பது வாடிக்கையாளர்களின் உரிமைகளில் ஒன்று.

                      பில் கொடுத்த பிறகு அதில் ஒரு copy கடைக்காரர் வைத்துக்கொள்ள வேண்டும் வருட கடைசியில் கடைக்காரர் வாங்கிய பொருளுக்கும் விற்ற பொருளுக்கும் லாபம் எவ்வுளவு என்று கணக்கிடப்படும் அந்த அடிப்படையில் கடைக்காரரின் வருமானம் கணக்கிடப்படும்… அவரின் வருமானம் அரசு விதித்து இருக்கும் அளவிற்கு மேல் இருந்தால் அதற்கு வரி கட்ட வேண்டும்.

                      கடைக்காரர் பொருள் வாங்கும் போது கட்டிய வரிக்கும் விற்கும் போது கட்ட வேண்டிய வரியையும் ஒன்றாக நினைத்து குழப்பி கொண்டு இருக்கிறீர்கள்…

                      இதில் பல விஷயங்கள் உள்ளது. உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்… திருப்பூரில் ஒரு சட்டை தயாரிக்கிறார்கள் என்றால் பஞ்சு, நூல் என்று பல பொருட்களை வாங்குகிறார்கள்.

                      1. சட்டைக்கு பட்டன் தைக்க வெளியே கொடுக்கிறார்கள்
                      2 . சட்டை இஸ்திரி போட வெளியே கொடுக்கிறார்கள்
                      3 . சட்டையை package செய்ய வெளியே கொடுக்கிறார்கள்

                      இப்படி ஒவ்வொரு முறையும் சட்டைக்கு value add ஆகிறது, திருப்பூரில் இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் ஆயிரங்களில் நடப்பது இல்லை லட்சம் மற்றும் கோடிகளில் நடக்கிறது ஆனால் இடையில் இவ்வுளவு வேலைகளை செய்பவர்கள் முன்பு வரி கட்டுவது இல்லை. வாட்டினால் இப்போது வரி கட்டி கொண்டு இருக்கிறார்கள், இதிலும் பல தில்லுமுல்லுகள் (பெரும் ஊழல்கள்) நடப்பதால் அரசு இப்போது GST கொண்டு வர பார்க்கிறது (ஊழல்வாதிகள் முடிந்தளவுக்கு GSTயை தடுக்க பார்க்கிறார்கள்)

                      உங்களை போன்ற ஆட்கள் மோடி கொண்டு வர பார்ப்பதால் GSTயை எதிர்ப்பீர்கள் ஆனால் GST 1980களில் கொண்டு வந்து இருக்க வேண்டும் congress அரசு தவறு செய்து விட்டது அதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

                    • ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்க்கும் மேலாகவே அண்ணாச்சி வணிகம் பண்ணுறாராம்.கண்டுபிடிச்சுட்டாரு துப்பறியும் சோம்பு.எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி உளறினால் எப்படி.ஒரு நாளைக்கு ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு வணிகம் செய்வதறகே அல்லாடும் சிறுவணிகர்கள் பற்றி இப்படி அடிச்சு விடுறது வக்கிரமே அன்றி வேறல்ல.

                      நியாயமாக பார்த்தால் ஒரு சிறுவணிகர் 20 லட்ச ரூபாய்க்கு வணிகம் செய்தாலும் வரி விலக்கு அளிக்க வேண்டும்.இந்த 10 லட்ச ரூபாய் வரம்பு 2006-ஆம் ஆண்டு VAT சட்டம் வந்தபோது நிர்ணயிக்கப்பட்டது.பணவீக்கம் பெருத்துப்போன இந்த நாட்டில் பணவீக்கம் அதாவது விலைவாசி ஆண்டுக்கு 10-விழுக்காடு அதிகரித்துக்கொண்டே போகிறது.ஆகவே ஒவ்வொரு ஆண்டும் வரம்பை ஒரு லட்ச ரூபாய் கூட்டிக் கொண்டே போயிருக்க வேண்டும்.

                    • அண்ணாசசி போன்ற சிறுவணிகர்களின் வணிகத்தை இவர்கள் அருகிலிருந்து கவனித்ததில்லை என தெரிகிறது.அஞ்சுக்கும் பத்துக்கும் இருபது முப்பதுக்குமாக ஐம்பது நூறுக்குமாக சில்லறையாக விற்பனை ஆகும்.இருபது ரூபாய்க்கு விற்பனை செய்தால் அண்ணாச்சிக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஆதாயம் கிடைக்கலாம்.இதில் ஐம்பது காசு செலவு செய்து பில் போட்டால் அவருக்கு எப்படி கட்டுப்படியாகும்.

                      மேலும் வணிக வரித்துறை பதிவு பெற்று கணக்குகளை பராமரிப்பது என்பது பில் போடுவதோடு முடிந்து விடுவதில்லை.ஒவ்வொரு விற்பனையையும் பில் நம்பரோடு இரவு கடையை மூடுவதற்க்கு முன் விற்பனை பதிவேட்டில் [sales register ]ஏற்ற வேண்டும்.பிறகு அன்றைய விற்று வரவையும் கொள்முதல் விவரங்களையும் செலவு விவரங்களையும் உரிய கொள்முதல் பில் மற்றும் ,செலவுக்கான ரசீதுகள் விவரங்களுடன் அன்றாட ஏட்டில் [day book ]எழுத வேண்டும்.அதன் பின்னர் ஒவ்வொரு தலைப்பிலான நடவடிக்கைகளையும் ledger ல் தனித்தனியாக வகை பிரித்து அதனதன் பக்கங்களில் எழுத வேண்டும்.இந்த விவரங்கள் அனைத்தையும் மாதம் ஒரு முறை மொத்தமாக கணக்கிட்டு monthly return ஆக வணிக வரித்துறைக்கு இணையம் மூலம் தெரிவிக்க வேண்டும்.அதன் பின் ஆண்டுக்கு ஒரு முறை Trial Balance ,profit and loss account ,Balance sheet இத்தனையும் ஆயத்தப்படுத்தி அத்தனையும் வணிக வரித்துறைக்கு இணையம் மூலம் தெரிவிக்க வேண்டும்.ஒரு சில லட்சங்களுக்கு வணிகம் செய்யும் கடைக்கு கூட கடைசியா சொன்ன மூணு கருமாந்தரத்தையும் ஆயத்தப்படுத்த பல நாட்கள் வேறு எந்த வேலையும் செய்யாமல் உழைக்க வேண்டியிருக்கும்.இவற்றையெல்லாம் செய்வது மாத ஊதியத்திற்கு ஒரு கணக்காளரை வைக்காமல் சாத்தியமில்லை.

                      ஐம்பது அறுபது சதுர அடி கொண்ட ஒரு சிறு கடையை நடத்தும் வணிகர்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை என்பதால்தான் அரசு வணிக வரி பதிவையோ,பில் போடுவதையோ அவர்களுக்கு கட்டாயமாக்கவில்லை.இது புரியாத அறிவாளிகள் பில் போடல பில் போடல ன்னு கூவிட்டு திரியுறாங்க.பெரிய பின்புலம் ஏதுமில்லாமல் தனி ஆளா கடை நடத்தும் அண்ணாச்சியை பாத்து கணக்குப்பிள்ளை வச்சுக்கோன்னு சொன்னா அதை விட லூசுத்தனம் ஏதாவது இருக்குமா.

          • காலாவதியான பொருட்கள் விற்பனை என்று தான் இல்ல்லை…. , நுகர்வோருக்கு ஏற்படும் எத்தகைய குறைபாடுகளுக்கு நாம் நுகர்வோர் நீதி மன்றம் செல்ல கையில் எழுதிக்கொடுத்த பில்லாக இருந்தாலும் சரி ,கணினி அச்சடித்த பில்லாக இருந்தாலும் சரி அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. கையில் எழுதப்படும் பில்களுக்கு அதிக நம்பகதன்மை உள்ளது என்பதனையும் மறுக்க முடியாது. நான் மளிகை கடை வைத்து உள்ளேன்… கையில் வெள்ளை தாளில் பில் எழுதிக்கொடுகின்றேன் என்றால் என்னுடைய கையெழுத்தை நான் நுகர்வோர் நீதி மன்றத்தில் மறுக்க இயலாது என்ற எளிய உண்மை கூட உங்களுக்கு தெரியவில்லை மணிகண்டன்…என்னமோ அன்னச்சி கடைகளில் ஏற்படும் நுகர்வோர் குறைபாடுகளுக்காக நுகர்வோர்கள் நீதி மன்றத்துக்கு செல்லவே இல்லை என்ற ரீதியில் தானே பீலா விட்டுகொண்டு உள்ளீர்கள்!

  14. மணிகண்டன் போன்ற கல்லுளிமங்கன் களோடு வீணான விவாதம் பண்ணிக்கொண்டிருக்கிறீர்களே உங்களால் அவர்களை ஒரு அங்குலம் மாற்றவோ சிந்திக்கவோ வைக்க முடியுமா?அவர்கள் காவி பாம்புகளால் அடைகாத்து பொறிக்கப்பட்ட குஞ்சுகள்.இதுபோன்ற பல தளங்களில் பல்வேறு வகையில் பரவி,குழப்பி அடிப்பதையே கொள்கையாக கொண்டு இயங்குவதுதான் அவர்களின் ஒரே பணி.அண்ணாச்சி என்பது எதன் குறியீடு?ரோட்டோரமாய் மிகச்சிறிய முதலீட்டில் கடை தொடங்கி ராப்பகலாய் அந்த கடையிலேயே தன் வாழ்வை அர்ப்பணித்து இரவு பதினோரு மணிவரை சாதாரண பொது மக்களின் ஆத்திர அவசரத்திற்க்கு சேவையாற்றி வரும் சிறு வியாபாரிகள்தான் அண்ணாச்சிகள்.எவ்வளவு கொழுப்பெடுத்துபோய் அண்ணாச்சிகளெல்லாம் ஏமாற்றுகாரர்கள் ரிலையன்ஸ்காரந்தான் மகா யோக்கியன் என்று சொல்ல முடிகிறது?இப்படிப்பட்ட அழிச்சாட்டிய காரர்களோடு என்னத்த விவாதம் பண்ணி என்னத்த கிழிக்க போறீங்க?மோடி விட்ட குசுவும் மணக்கும் என்று சொல்லித்தெரியும் ஜந்துகளிடம் வேலை மெனக்கெட்டு மல்லுகட்டுவதை விட்டு விட்டு வேறு வேலைய பாருங்கைய்யா

    • அப்படினா நீங்க என்ன இஸ்லாமிய (பச்சை) பாம்பா ?

      ஏன் சார் எதற்கு எடுத்தாலும் காவியை இழுக்கிறீர்கள், இந்த நாட்டிற்காக காவிகள் மட்டும் தான் பேச வேண்டும்மா ஏன் எங்களை போன்ற பொது மக்களில் ஒருவர் பேச கூடாதா ? நான் சாதாரண பொதுமக்களில் ஒருவன், என் மீது கலர் பூசுவது எல்லாம் வீண் கற்பனை.

      • இப்பவாவது புரியுதா என் பிரியத்திற்க்குரிய மட ஜனங்களே!நாட்டுக்காக பேச ஆரம்பித்துவிட்டார்.இனி இப்படியே போய் தேசபக்தி பாடத்தை நடத்த ஆரம்பிச்சிடுவானுங்க.அதன் பிறகு என்ன!தீவிரவாதம் குண்டுவெடிப்பு பயங்கரவாதம் தேசியகீதம்னு சுத்துவானுங்க.வெக்கமேபடாம நின்னு ஆடுவானுங்க.இந்த கூறுகெட்ட செல்லா நோட்டு அறிவிப்பையும் அதன் தொடர்ச்சியாய் அந்தர்பல்டி அடித்துக்கொண்டே இவ்வளவு பெரிய தேசத்தை ஆளுகிறவனுங்க,அதற்க்கு விளக்குகிற விளக்கத்தையும் பார்க்கிற கொசுமூளை இருக்கிறவனும் வாயால சிரிக்கமாட்டான்….வேண்டாம் விட்டுடுறேன்..பிஜேபி காரனை தவிர ஒருத்தன் இதை ஆதரிக்கிறானா?அத்தனை கருப்பு பணக்காரனும் அழகா பாதுகாப்பா தன்னிடமுள்ளதை மாற்றிவிட்டு சொகுசா கொட்டாய் விட்டு உக்காந்திருக்கிறான்.பாவப்பட்ட ஜனங்கதான் படாதபாடுபட்டு திரியிறாங்க.இதில் உலக்மே தெரியாத ஒரு வர்கம் இருக்கிறது.அதற்க்கு ஒரு எளவும் புரியாது.ஆனால் எல்லாம் தெரிந்ததாக காட்டிக்கொள்ளும்.அதுகள் ஏதோ நமக்கு நல்லது நடக்கப்போகுது என்று கனவுலகில் மிதந்து திரிகிறது.அதுகளுக்கு ரெட்டிவீட்டு ரெய்டும் ராம்மோகன்ராவ் கைதும்,குதிரைக்கு கண்ணில் கொல்லுகட்டை காட்டிய மினுமினுப்பை தருகிறது.நாட்டுமக்கள் கையில் காசில்லாமல் தத்தளிப்பது இரண்டு மாதத்தை தொடுகிறது.நம்மையெல்லாம் கிறுக்கனுங்களாக்கிவிட்டோம் என்று இந்த மணிகண்டன் களின் ஆசான் கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

  15. மார்ச் 31 க்கு மேல யாராவது 500,1000 ரூபாய் (பழையது) வைத்து இருந்தால் 4 ஆண்டு சிறை தண்டனை இதை விட லூஸிதனமான் அறிவிப்பு வேற எங்கயும் உண்டா அமா தெரியாம கேக்குறேன் அப்பிடி வச்சு இருந்தாலும் அதுல என்ன பயன் செல்லாதுனு சொன்ன பிறகும் அத மாத்துரதுக்கு சந்தர்ப்பம் முடிஞ்ச பின்னும் வச்சுட்டு அலைஞ்சா அவன் லூஸாதன் இருக்க முடியும் அப்புறமும் அந்தநோட்ட வச்சு என்ன பயனாம் அப்பிடியே மார்ச் 31 மேல மாத்துனா அது கள்ள சந்தைலதான் மாத்துவானுக கருப்பு பணத்த பிடிக்க முடியாதவன் கள்ள சந்தைல பழைய நோட்டு மாத்துறத பிடிச்சுடுவாரா ஏன்யா கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்துல ஏறி வைகுன்டம் போறானாம் இதுக்கு அவசர சட்டம் வேற என்டா சிரிப்பு மூட்டிகினு அலையுதிக…..

  16. எனக்கென்னமோ மோடிக்கு மன்ன்டியிட்டது அப்பட்டமா அவருக்கே தெரியுது இருந்தாலும் ஒரு சினிமா ல வடிவேலு முதல என் ஏரியாவுக்கு வாடா பாப்பேம் ,அப்புறம் என் தெருவுக்கு வாடா ,அப்புறம் என் வீட்டுக்கு வாடா பாப்போம்னு வெட்டி சவுன்டு குடுத்துக்கிட்டே வீட்டுக்கு வந்த கீரோ கால பிடிச்சு கெஞ்சுவாரு அந்த சிரிப்புநியாபகத்துக்கு வருது…..

  17. மணிகண்டன், இந்திய கருப்பு பண ஓட்டங்களை-நுட்பங்களை அறிந்தும் கண்டும் காணாமல் செல்லும் மோடியின் mouth பிஸ் ஆகவே நீங்கள் இங்கு பேசிக்கொண்டு உள்ளீர்கள். தங்கம் வாங்க பணம் எதற்கு? முதலில் பதில் அளியுங்கள். தங்கம் வாங்க பணமில்லா பரிவர்த்தனை தானே நியாமான திட்டமாக இருக்க முடியும் . அப்போது தானே கருப்பு பணத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும். அதனை நடைமுறைபடுத்த மோடி எவ்வித சட்டத்தையும் கொண்டுவர தயங்குவது ஏன்? மோடி பண மதிப்பிழப்பு அறிவுப்பு வந்த நவம்பர் 8 அன்று மட்டும் மும்பை, பூனே, நாசிக், கோவா ஆகிய நான்கு நகரங்களில் அன்றைக்கு இரவு மட்டும் 36 கோடி ரூபாய் அளவிற்கு தங்கம் விற்பனையானது. மும்பை நகரில் மட்டும் 16 கோடி ருபாய் அளவிற்குத் தங்கம் வாங்கப்பட்டிருக்கிறது. இது அதற்கு முந்தைய நாள் தங்க விற்பனையான 69 இலட்சத்தை விட 23 மடங்கு அதிகமாகும். இந்த செய்தியை உங்களால் மறுக்க முடியுமா?

    மேலும் இந்த கட்டுரைமோடியின் அரசு கருப்பு பண முதலைகளுக்கு எப்படி எல்லாம் உதவுகின்றது என்ற விசயத்தை விவரமாகவே தான் கூறிக்கொண்டு உள்ளது. முடிந்தால் பதில் அளியுங்கள் !

  18. தங்கம் வாங்க பணம்……!

    தக்காளி வாங்க PoS….பணமில்லா பரிவர்த்தனை ஊக்குவிப்பு …

    கோமாளித்தனமான உள்நோக்கம் உள்ள மோடியின் அரசு…..

    அதனை ஆதரிக்கும் நிஜ கோமாளி மணிகண்டன்….

  19. மணிகண்டனின் கவனத்துக்கு : (டபுள் பில்லிங்-அக்கௌன்ட் சிஸ்டம் பற்றி)
    விற்பனை வரியில் அண்ணாச்சி கடைகள் ஏமாற்றுகின்றார்கள் என்று ஆதாரம் இல்லாமல் பீலா விடும் மணிகண்டன் அவர்களுக்கு, பில் வேண்டும் என்று பிதற்றும் மணிகண்டன் அவர்களுக்கு சில விளக்கங்கள் :

    Rs 2௦௦ கோடிகளுக்கு மேல் முந்தைய ஆண்டு விற்பணனை செய்த HLL ,ITC போன்ற FMCG உற்பத்தியாளர்கள் எப்படி எல்லாம் அரசை விற்பனை வரி கட்டாமல் ஏமாற்றுகின்றார்கள் என்று பார்கலாம்…. அவர்கள் அவர்களுக்கும் கீழ் உள்ள டிளர்களுக்கு பொருட்களை அனுப்பும் போது இரண்டு விதமான பில்களை பாரமரிகின்றார்கள். (அவர்கள் வணிக வரி துரையின் சட்டப்படி பில்களை பராமரிப்பது அவசியம்-கட்டாயம் ) ஒன்று அவர்கள் கணக்குக்கு…. மற்றது விற்பனை வரித்துறைக்கு !(டபுள் அக்கௌன்ட் சிஸ்டம்) அதற்காகவே என்று பிரத்தியோகமான கணினி மென் பொருட்களும் இன்று சந்தையில் உள்ளன! விற்பனைவரி கட்ட அவர்கள் பயன் படுத்தும் பில்களை மட்டுமே விற்பனை வரி அதிகாரிகளிடம் அவர்கள் காட்டுவார்கள்…. மற்ற பில்லின் மூலம் விர்ப்ணனை வரி ஏய்ப்பு செய்வார்கள்…. வரும் வருமானத்துக்கும் வருமான வரி ஏய்ப்பு செய்வார்கள்…. கருப்பு பணத்தை உருவாக்குவார்கள்….

    இத்தகைய ஏமாற்றுகின்ற பில்லிங்க சிஸ்டம் சிறு வணிகர்களுக்கு அவர்கள் vat கட்டவே தேவை இல்லை என்ற நிலையில் எப்படி பயன் படும் என்று மணிகண்டன் தான் சிந்திக்கவேண்டும்… இங்கு நான் கூறும் விசங்களை ஒருங்கிணைந்து சிந்தித்து பார்க்கும் அளவுக்கு மணிகண்டனின் மூளைவேலை செய்யுமா என்று சந்தேகமாக உள்ளது.!

  20. திப்பு நீங்கள் சொல்வதும் தவறு…

    ஒரு சிறிய மளிகை கடையில் கோதுமை வாங்குகிறீர்கள் என்று வைத்து கொள்வோம், வீட்டில் வந்து பார்த்தால் கோதுமை முழுவதும் பூச்சி கெட்டு போய் உள்ளது, கடைக்காரரிடம் சென்று நீங்கள் கொடுத்த கோதுமை கெட்டு போய் இருக்கு வேறு ஒன்று கொடுங்கள் என்று கேட்டு அவர் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்விர்கள். உங்கள் வார்த்தைபடி கடைக்காரரிடம் சரியான பில் நீங்கள் வாங்கவில்லை, எதன் அடிப்படையில் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றம் செல்விர்கள் ? உங்களிடம் தான் பில் இல்லையே நீதிமன்றத்தில் எதன் அடிப்படையில் இந்த கடையில் தான் கோதுமை வாங்கினேன் என்பதை நிரூபிப்பீர்கள் ? கடைக்காரர் நீதிமன்றத்தில் இது என் கடையில் வாங்கின பொருள் இல்லை என்று சொன்னால் உங்களால் என்ன செய்ய முடியும் ?

    சரியான பில் என்பது நுகர்வோரின் உரிமை, அதை வாங்க வேண்டியது நுகர்வோரின் கடமையும் கூட, சரியான பில் கடைக்காரர் கொடுமாட்டேன் என்று சொன்னால் அது சட்டப்படி தவறு.

    நுகர்வோரின் உரிமைகளில் இன்னொன்று வாங்கும் பொருளின் உண்மை விலை (இதை யாருமே பின்பற்றுவது இல்லை) MRP என்பது ஒரு பொருளை அதிகபட்சம் எவ்வுளவு விலைக்கு விற்கலாம் என்பது தான். ஆனால் பொருளின் உண்மை விலை அதை விட குறைவாக இருக்க வேண்டும் அது பற்றி கேட்டால் தெரிவிக்க வேண்டியது விற்பனையாளரின் கடமை (எந்த ஒரு கடைக்காரரும் அதை சொல்ல மாட்டார்)

    நீங்கள் சொல்வது போல் பில் வேண்டாம் என்பது கருப்பு பணத்திற்கு வழி செய்யும் ஒரு காரியம் கணக்கில் காட்டாமல் கருப்பு பண பதுக்கலுக்கு தான் வழி செய்யும்.

    பில் என்பது அவசியம் அதை அனைவரும் கடைகளில் வாங்க வேண்டியது உங்களின் கடமை மற்றும் உரிமை.

    மேலும் MRP என்பது பொருளின் விலையை விட கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் வரை இருக்கலாம் ஆனால் உண்மையில் அது பொருளின் விலையை விட அது பல மடங்கு கூடுதலாக இருக்கிறது…

    அதற்கு சிறந்த உதாரணம் மருந்துகள். என் நண்பனின் அம்மாவிற்கு கிட்னி failure அதற்கு சென்னையில் உள்ள மிக சிறந்த மருத்துவமனை சிகிக்சை பெற்றார் இதற்கு வாரம் ஒரு முறை அவருக்கு ஊசி போட வேண்டும் மருத்துவமனை அந்த ஊசியின் விலை 2500 ரூபாய்க்கு கொடுத்தார்கள் (ஊசியின் அட்டையில் MRP 2500 என்று தான் போட்டு இருந்தது) ஒரு வருடத்திற்கு பிறகு வேறு ஒரு மருத்துவ நண்பரை பார்த்து இது பற்றி பேசும் போது அவர் ஒரு டீலரை சொன்னார் அங்கே அதே கம்பெனி அதே ஊசி ஆனால் விலை வெறும் 300 ரூபாய் தான்.

    • சிறுவணிகர்கள் முகப்பழக்கம் ,வாடிக்கை இவற்றை நம்பி பிழைப்பவர்கள். இயல்பாகவே அவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே நல்லதொரு நேசம் நிலவும்.அப்படியெல்லாம் கெட்டுப்போன பொருளை விற்பனை செய்ய மாட்டார்கள்.ஒருவேளை அறிந்தோ அறியாமலோ விற்றிருந்தாலும் அதனை மாற்றித்தர தயங்க மாட்டார்கள்.ஏனென்றால் அவர்கள் ஒரு சிறிய பரப்பளவுக்குள் வாழும் மக்களிடம் பொருட்களை விற்பனை செய்பவர்கள்.ஓரிரு தெருக்களுக்குள் அவர்களுடைய வாடிக்கையாளர்கள் அடங்கி விடுவார்கள்.நான்கு தெரு தள்ளிப்போனால் வேறொரு அண்ணாச்சி கடை இருக்கும்.ஆகவே ஒரு வாடிக்கையாளரை பகைத்துக்கொண்டாலே அவர்களுடைய மொத்த வணிகமும் கெட்டுப்போகும்.செந்தில் கூட சொந்த அனுபவத்தில் அப்படி மாற்றியதை இங்கு பதிவு செய்திருக்கிறார்.

      பேரங்காடிகளில் பில் போட்டு வாங்கும் ”அறிவாளி”கள்தான் கெட்டுப்போன பொருளை மாற்றப்போனால் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அலைந்து திரியும் பாக்கியவான்கள் ஆகிறார்கள்.

      அந்த பாக்கியவான்கள் சில சமயங்களில் ”முடிஞ்சதை செஞ்சுக்கோ” என்று மேலாளர்களால் ஏளனம் செய்யப்பட்டு பிச்சைக்காரனை போல காவலாளிகளால் துரத்தியடிக்கப்பட்டு நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு ஓடுகிறார்கள்.

      \\சரியான பில் கடைக்காரர் கொடுமாட்டேன் என்று சொன்னால் அது சட்டப்படி தவறு.//

      இவ்வளவு விளக்கம் சொன்னாலும் கிளிப்பிள்ளையாக கத்திக்கொண்டிருந்தால் பேசிப்பயனில்லை.பெரியார் அடிக்கடி ஒரு பழமொழியை தனது உரைகளில் குறிப்பிடுவார்.

      முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.

      • நம்பிக்கையின் அடிப்படையில் வியாபாரம் என்பது எல்லாம் இருக்கட்டும் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் சரியாக சொல்லவில்லை.

        நான் சென்னையில் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அண்ணாச்சி மளிகை கடையில் தான் மாதம் 5000 சாமான் வாங்குவோம் அவர்கள் தான் என்னிடம் கெட்டு போன எண்ணையையும் பூச்சி பிடித்த கோதுமை மாவையும் கொடுத்தார்கள்… நான் என்றுமே கடன் வைத்து பொருள் வாங்கும் பழக்கம் இல்லாதவன்… என்னிடமே இப்படி நடக்கும் போது மற்றவர்களை பற்றி சொல்ல தேவையில்லை.

        நம்பிக்கையின் அடிப்படையில் பொருள் வாங்கும் காலம் எல்லாம் மலையேறி விட்டது இன்று இருப்பது அடுத்தவனை ஏமாற்றி பிழைக்க கொஞ்சமும் கூச்சப்படாத காலம், அதனால் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

        தரமான பொருள் நியாமான விலை அதற்கான reciept யாரும் நம்பிக்கையின் அடிப்படையில் யாரும் ஏமாற வேண்டாம்.

        • \\இன்று இருப்பது அடுத்தவனை ஏமாற்றி பிழைக்க கொஞ்சமும் கூச்சப்படாத காலம்//

          தான் திருடி பிறரை நம்பாள்.

          \\ அதனால் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.//

          சரி மணிகண்டன் எச்சரிக்கையாவே இருக்கட்டும்.முதல்ல அவர்கிட்டருந்து மக்கள் எச்சரிக்கையா இருக்கணும்னு நான் சொல்கிறேன்.பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி பாய சொல்கிறாரே அது எப்பேர்ப்பட்ட கொள்ளைக்கு துணை போகும் அயோக்கியத்தனம் என்று சொல்கிறேன்.

          இந்தியாவில் சில்லறை வணிகத்தின் மொத்த மதிப்பு 2016-17 நிதியாண்டில் சுமார் 47 லட்சம் கோடியை தொடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

          பார்க்க ,http://www.thehindu.com/business/Industry/indian-retail-market-to-reach-47-lakh-crore-by-201617-study/article5677176.ece

          இதுக்கு ரொக்கம் குடுக்காம குட்டிசுவத்துல உரசுற கழுதை மாதிரி அட்டையை தேச்சு பணம் குடுத்தா வங்கிக்காரனுக்கு எவ்வளவு கமிசன் குடுக்க வேண்டியிருக்கும்.2 விழுக்காடு வச்சுக்கிட்டா கூட 94 ஆயிரம் கோடி ஆவுது,யார் அப்பன் வீ ட்டு பணம் தூக்கி குடுக்க சொல்றாரு.இது அரசுக்கும் போக போவதில்லை.தனியார் வங்கிகளே பெரும்பாலும் கொள்ளையடித்து செல்லக்கூடும்.இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா.

          • மனிதர்களை நம்பி நம்பி ஏமாந்து போன வெறுப்பில் பேசுபவன் நான்.

            சரி அது இருக்கட்டும் அது என்ன வாங்கி கமிஷன், ஏற்கனவே RBI வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினால் அதற்கு எந்த கமிசினும் வாங்க கூடாது என்று RBI உத்தரவு போட்டு இருக்கிறது. இது வங்கியிடம் ஸ்விப்பிங் மெசின் வாங்கும் போதே விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் கமிஷன் வாங்க மாட்டேன் என்று அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்டு தான் ஸ்விப்பிங் மெசின் வாங்குகிறார் அப்படி வியாபாரிகள் உங்களிடம் கமிஷன் 2 சதவீதம் கேட்டால் நீங்கள் அது பற்றி புகார் தெரிவிக்கலாம்.

            https://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Id=8461&Mode=0

            4. Levying fees on debit card transactions by merchants – There are instances where merchant establishments levy fee as a percentage of the transaction value as charges on customers who are making payments for purchase of goods and services through debit cards. Such fee are not justifiable and are not permissible as per the bilateral agreement between the acquiring bank and the merchants and therefore calls for termination of the relationship of the bank with such establishments.

            திப்பு நீங்கள் கொடுப்பது பொய்யான தகவல்.

            • Mr Manikantdan,no fees on debit cards rule already ended on 31-12-2016.Upto 31-3-2017,fee of 0.25% will be levied on debit cards up to purchase of Rs1000 and 0.50% will be levied from Rs1001 to Rs2000/-.After 31-3-2017,the fees will be levied at 0.75%.Now itself,fee of 0.75% will be levied for purchase above Rs2000/-Fee of 1.25% to 1.50% will be levied on purchases made by swiping credit cards.

              • வியாபாரிகளுக்கு வங்கி கொடுக்கும் சேவைக்கு வாங்கும் கமிஷன் இது, அந்த கமிசனை வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் மீது கட்டுவது நியாயம் இல்லை, அதற்கு வங்கி சேவையை அந்த வியாபாரிகளுக்கு முற்றிலும் நிறுத்தலாம் என்று RBI உத்தரவே இருக்கிறது.

                வியாபாரிகள் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கமிஷனுக்கு வாடிக்கையாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அப்படி செய்வது வாடிக்கையாளர்களை வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம்.

                • என்ன ஒரு புத்திசாலித்தனம், ஆட்டோவில் ஒட்டிய அழுக்கை ஆளை அடித்தே போக்கி விடுகிறாரே அறிவாளி மணி.

                  வணிகர்கள் அட்டையை தேச்ச கருமத்துக்காக வங்கிக்கு கொடுக்க வேண்டிய கழிவை வாடிக்கையாளரிடம் வசூலிக்க கூடாது என்று சொல்றாரு .இதைத்தானே நாங்களும் சொல்கிறோம்.வணிகர்கள் தங்கள் வருமானத்திலிருந்து ஒரு பகுதியை வங்கிகாரனுக்கு ஏன் கொட்டி அழ வேண்டும்.யார் அப்பன் வீட்டு பணம் , அள்ளிக் கொடு என சொல்ல நீ யார் என கேட்கிறோம்.தேவையுள்ளவன் ரொக்கமில்லா வணிகத்துக்கு மாறட்டும்.சரியானதாக இருந்தால் அடிஅடியாக எல்லோரும் கூட மாறட்டும்..அது சமூகம் முழுமைக்கும் சரிபபட்டு வராது,சாத்தியமும் இல்லை எனபது ஒரு புறம் இருக்கட்டும். கட்டாயப்படுத்தி இன்னிக்கே எல்லாரும் வந்து கப்பம் கட்டுங்கடா என சொல்வதற்க்கு எவனுக்கும் உரிமையில்லை.

                  இது அப்படியே வெள்ளைக்காரனின் காலனி ஆதிக்கத்தை ஒத்திருக்கிறது.

                  ஊரான் ஊரான் தோட்டத்திலே
                  ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்
                  துட்டுக்கு ஒன்னு விக்க சொல்லி
                  காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்.

                  என்று காலனி ஆதிக்கத்தை சாடினார்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள்.இவர்கள் ஒரு ரகம். வெள்ளைக்காரனின் காலை நக்கி பிழைத்த துரோகிகளோ காலனி ஆதிக்கத்துக்கு ஒத்தூதிக் கொண்டிருந்தார்கள்.இவர்கள் இன்ஒரு ரகம்..அதே போன்று இன்று எமது மக்கள் உழைத்து ஈட்டிய பணத்தில் ”வெள்ளரிக்காய்”வாங்கும்போது எமது அண்ணாச்சிகள் சொந்த முதல் போட்டு சொந்த உழைப்பில் செய்யும் வணிகத்துக்கு இந்த வணிகத்தோடு எந்த வகையிலும் தொடர்பில்லாத வங்கிககு கப்பம் கட்ட சொல்றாரு மணி.

                  மேலே சொன்ன இரண்டு ரகத்தில் மணி எந்த ரகம்.

                  • விட்டால் வங்கி கொடுக்கும் அனைத்து சேவைகளையும் இலவசமாக கொடுத்து வங்கிகளை இழுத்து மூட கொள்வீர்கள் போல
                    கார்டு மூலம் பணம் வாங்குவதால் அதிக வாடிக்கையாளர்களை கவரலாம் என்பது வியாபாரிகளின் நோக்கம், அதற்கு வங்கி கொடுக்கும் சேவையை வியாபாரிகள் வாங்குகிறார்கள். விட்டால் வியாபாரிகள் சோப்பு விற்கிறார்கள் அதற்கு ஏன் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ரொம்ப புத்திசாலி தனமாக பேசுவீங்களோ ???

                    வியாபாரிகள் எப்படி சோப்பு விற்கிறார்களோ அதேபோல் வங்கிகள் வியாபாரிகளுக்கு கொடுக்கும் சேவைக்கு கமிஷன் வாங்குகிறார்கள்.

                    சில நாடுகளில் இந்த கமிஷன் நம் நாட்டை விட அதிகமாக இருக்கும் சில நாடுகளில் இந்த கமிஷன் தொகை குறைவாக இருக்கும் ஆனால் இது அனைத்து நாடுகளிலும் இருக்கும் ஒரு நடைமுறை.

                    இது போன்ற சேவைகளை நிறுத்தினால் வங்கிகளின் செயல்பாடுகள் முடங்கும் மக்களுக்கும் சேவை செய்ய முடியாது அதனால் தான் RBI மீண்டும் வங்கி கமிஷன் முறையை கொண்டு வந்தார்கள்.

                    • வங்கிகளின் சேவையை யாரும் இலவசமாக கேட்கவில்லை.தாராளமாக கட்டணம் வாங்கி கொள்ளட்டும்.அப்படி வாங்கி கொண்டுதான் வங்கிகள் செயல்படுகின்றன.ஆனால் குறிப்பிட்ட ஒரு சேவை தேவையில்லாதவனிடம் போய் இந்த சேவையை நீ பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை.அந்த அயோக்கியத்தனத்தை ரொக்கமில்லா வணிகம் என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கிறது மோடி கும்பல்.அந்த தீமையை உணர மாட்டாமல் அல்லது உணர்ந்தாலும் கருத்தொருமித்த மதவெறி கும்பல் என்ற அடிப்படையில் அந்த அயோக்கியத்தனத்தை ஆதரித்து கூவிக்கொண்டிருக்கிறார் மணி.

                      டிவிட்டரில் பா,.ச.க.ஆதரவு கருத்துக்களை மறுபதிவு [retweet ]செய்தாலே எத்தனை எண்ணிக்கை என்று பார்த்து காசு கொடுக்கிறார்கள் என கேள்வி.மணி தவறோ பித்துக்குளித்தனமோ சொந்தமாவே எழுதுறாரு.நல்ல தொகையாக கிடைக்க வாழ்த்துக்கள்.ஆனால் ஒரே ஒரு ஆலோசனை.

                      வாங்குன காசுக்கு மட்டும் கூவுங்க.மேக்கொண்டு மேக்கொண்டு கூவுனா அடுத்த தவணையை குறைச்சிற போறாங்க.

                    • யாரும் நீ இந்த சேவையை பெற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று ஒருவரையும் கட்டாயப்படுத்தவில்லை… கார்டு மூலம் பணம் வாங்கும் போது வியாபாரிகள் வரி காட்டாமல் ஏமாற்ற முடியாது, உங்களை போன்ற ஆட்கள் உள்நோக்கத்தோடு வியாபாரிகள் வரி கட்ட தேவையில்லை என்று சொன்னாலும் இதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரிகள் கிடைக்கும் அதன் மூலம் ஏழை மக்களுக்கும் கிராம மக்களுக்கும் அரசு சேவைகள் செய்ய முடியும்.

                      மேலும் மோடி அறிவிப்பிற்கும் மதவெறிக்கு என்ன சம்பந்தம் ? சும்மா எதற்கு எடுத்தாலும் மதம் ஜாதி என்று பேசி கொண்டு இருக்காதீர்கள்.

                      என் பார்வையில் மோடியின் செயல் நாட்டிற்கு பெரிய நன்மையை கொண்டு வரும். அதை இந்த ஆண்டில் நீங்களே பார்க்கலாம் வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை நிச்சயம் இந்த ஆண்டு மிக அதிகமாக இருக்கும் பாருங்கள்.

                      உடனே நான் சம்பாதிக்கிறேன் நான் ஏன் வரி கட்ட வேண்டும் என்று ஆரம்பிக்காதீர்கள்.

                      நான் இங்கே கருத்து சொல்வதே தேசத்திற்கு விரோதமாக செயல்படும் ஒரு சிலரையாவுது மாற்றலாம் என்ற எண்ணத்தில் தான். நீங்கள் எந்த மதமாகவும் இருங்கள் நீங்கள் எந்த ஜாதியாகவும் இருங்கள் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் இருங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் இருங்கள் நீங்கள் எந்த அரசியல் கட்சியை வேண்டுமானாலும் உங்கள் விருப்பம் போல் ஆதரித்து கொள்ளுங்கள், ஆனால் நீங்கள் இந்தியர் என்ற அடிப்படையை மறந்து விடாதீர்கள் உங்களின் விசுவாசம் இந்தியா மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

                    • அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேச பக்தி என்று அறிஞர் சாமுவேல் சான்சன் சொன்னது எவ்வளவு சரியாக இருக்கிறது.கடைசியில் மாற்றுக்கருத்து சொல்வோரை கருத்து ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் அவர்களது விசுவாசம் பற்றி பேச கிளம்பிட்டாரு மணி.மக்களை நேசிப்பதால்தான் அவர்களுடைய நலனை முன்னிறுத்தி பேசுகிறோம்.மோடியின் அடாவடிகள் எப்படியெல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக இருக்கிறது என ஆதாரத்தோடு சொல்கிறோம்.அவற்றை மறுக்க முடியாத ஆத்திரத்தில் தேச விரோதிகள் என அவதூறு ஏசுகிறார்.]

                      அட்டையை தேய்ச்சு பணம் கொடுத்தால் வரி ஏய்க்க முடியாதாம்.அட அறிவாளியே GST யில் இருபத்தி அஞ்சு லட்ச விற்பனை வரை வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது.அந்த சிறு வணிக்கர்களையும் அட்டையை தேய்க்க வைச்சு வங்கிகாரன் கொள்ளையடிக்க காட்டிக் கொடுப்பது என்ன நியாயம்.

                      எல்லோருமே அட்டையை தேய்ச்சு பொருள் வாங்கிகினால் வரி ஏய்ப்பு இன்னும் அதிகமாகும்.ஒருநாளைக்கு அட்டை தேய்ப்பு கோடிக்கணக்கில் இருக்கும். வருமான வரித்துறையில் பணியாற்றும் கணக்கு பரிசீலனை செய்யும் அதிகாரம் கொண்ட [scrutiny officers ] ஆறாயிரம் அதிகாரிகளை வைத்துக்கொண்டு அத்தனையும் கணக்கில் காட்டப்பட்டிருக்கிறதா என சரி பார்க்க முடியாது.வணிக வரித்துறையை களமிறக்கினால் இதற்கே முழு ஆண்டும் சரியா போயிரும்.அப்புறம் வரி வசூல் கணக்கை யார் பார்ப்பது.

                      அப்புறம் வரி ஏய்ப்பு நடப்பதே அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையால்தான்.பெரிய வணிகர்கள்தான் வரி ஏய்ப்பு செய்கிறார்கள்.அதனை தடுக்க வேண்டுமானால் மக்களிடம் வாருங்கள்.இதற்க்கு தீர்வு மக்களிடம்தான் உள்ளது.வரி வசூல் அலுவலகங்களை கண்காணிக்க மக்கள் குழுக்களை அமைக்க வேண்ண்டும்.அவர்களது செயல்பாடுகளை சீரான இடைவெளியில் சமூக தணிக்கைக்கு உள்ளாக்க வேண்டும்.அப்புறம் பாருங்கள்.ஒரு பயல் லஞ்சம் வாங்க முடியாது.ஒரு பயல் வரி ஏய்க்க முடியாது.

                    • ______

                      சிறு வியாபாரிகள் உங்கள் வார்த்தைபடி வெறும் 10 தெருவில் உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் தெருவிற்கு மிக குறைந்தபட்சம் 10 வீடுகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் மாதம் 2000 முதல் 8000 வரையில் பொருட்கள் வாங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் மிக மிக குறைந்த சராசரியாக ஒரு வீட்டிற்கு 3000 ரூபாய்க்கு மளிகை சாமான் வாங்குகிறார்கள் என்று வைத்து கொண்டால் ஒரு மாதத்திற்கு 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, அதில் ஒரு மாதத்திற்கு மிக குறைவாக வெறும் 50 ஆயிரம் ரூபாய் தான் லாபம் என்று வைத்து கொண்டால், அந்த சிறு வியாபாரியின் வருட வருமானம் 6 லட்சம் வருகிறது.

                      நீங்கள் பில் வாங்க தேவையில்லை என்று சொல்வதால் ஏற்படும் பின்விளைவுகள்

                      1. இந்த 6 லட்சத்திற்கான வருமான வரியை உங்களை போன்ற ஆட்களால் வியாபாரி காட்டாமல் நாட்டை ஏமாற்றுகிறார்
                      2 அரசுக்கு கட்ட வேண்டிய (VAT) வரியை வியாபாரிகள் காட்டாமல் நாட்டிற்கு பெரும் இழப்பு (உங்களுக்கு ஒரு தகவல் டெல்லி அரசு கடைகளில் பொருள் வாங்கி விட்டு பில் வாங்குபவர்களுக்கு பரிசு அறிவித்து இருக்கிறது) http://timesofindia.indiatimes.com/city/delhi/Customers-to-get-prize-for-taking-receipts/articleshow/49343785.cms
                      3 கருப்பு பண பதுகளுக்கும் கள்ள சந்தைக்கும் தான் உங்களின் பொய்யான தகவல் உபயோகப்படும்

                  • திப்பு நேர்மை என்பது அரசு மற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் சொந்தம் அல்ல நாட்டில் உள்ள அனைவரும் (மக்கள் உட்பட) நேர்மையாக செயல்படும் போது தான் சரியான ஆட்சி நடக்கும் மக்களில் ஒரு பகுதியினரான வியாபாரிகள் நேர்மையில்லாமல் நடக்கட்டும் அதை அதிகாரிகள் பிடிக்கட்டும் என்பது சரியான வாதம் அல்ல.

                    நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள் நேர்மையாக நடக்கவே விரும்புகிறார்கள் என்பது தான் இந்த நாட்டில் உள்ள மிக சந்தோசமான செய்தி, அவர்கள் நேர்மையான அரசாங்கம் என்பதற்காக சிறிய துன்பங்களையும் ஏற்க தயாராகவே இருக்கிறார்கள் அதனால் தான் மோடி ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்ன பிறகும் துன்பங்கள் பல சந்தித்த பிறகும் போராடாமல் இருக்கிறார்கள், வினவு போன்றவர்களின் போராட வாருங்கள் போராட வாருங்கள் என்று பல முறை கூப்பிட்ட பிறகும் மக்களிடம் எந்த ஆதரவும் இல்லாமல் இருப்பதற்கு காரணம் இது தான்.

                    காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையில் வாழும் மக்கள் அனைவரும் இந்த நாட்டை நேசிக்கிறார்கள் இந்த நாட்டின் நலனுக்காக தியாகங்கள் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.

      • திப்பு,

        மிகவும் அருமையான விளக்கம்.

        எங்கோ எட்ட இருக்கும் பேரங்காடிகளில் ஒன்னு ரெண்டு பொருட்களை வாங்க சென்று விட்டு தேவையோ அற்றதோ ஒரு நூறு பொருட்களை அள்ளி வருவார்கள் சட்டம் பேசும் சிகாமணிகள்.

        பேரன்க்காடிகளுக்கும் அண்ணாச்சி கடைகளுக்கும் உள்ள இன்றியமையாத வேறுபாடுகள் சிலவற்றை என்னால் முடிந்த அளவிற்கு கிழே வரிசைபடுத்துகிறேன்,

        1. அன்றாண்டங்காச்சிகளான ஏழை எளிய மக்கள் தமக்கு தேவையான பொருட்களை வாங்க செல்லுமிடம் அன்னாச்சி கடைகளே. எடுத்துகாட்டாக சமூக பொருளாதாரக் காரணிகளால் ஏழை எளிய மக்களின் ஒரு நாளைய தேவையே சில பத்து ரூபாய்க்குள் அடங்கி விடும். ஓரிரண்டு பத்து ரூபாய்தாள்களை எடுத்துக் கொண்டு ஒரு ரூபாய்க்கு மிளகாய், 100 கிராம் தக்காளி, 100 கிராம் உருளைகிழங்கு…….அன்றைய தேவையையே அதற்குள் அடக்கி விடுவர்.மாறாக பத்து ரூபாயை எடுத்துக் கொண்டு எங்கோ இருக்கும் பேரங்காடிக்கு செல்பவன் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் இல்லையென்றால் பில் வேண்டும் என்று அதார் உதார் விடும் சவுண்டு பார்டிகளாகத்தான்இருக்க வேண்டும்.

        2.அண்ணாச்சி கடைகளுக்கு செல்லும் மக்கள் தாங்கள் எடுத்துச் செல்லும் பணத்திற்கு ஏற்ப பண்டங்களை வாங்குவார்கள். எடுத்துகாட்டாக பத்து ருபாய் மதிப்பு கொண்ட ஒரு சோப்பை வாங்க சென்றால் அதை மட்டுமே வாங்குவார்கள். ஆனால் பில் கேக்கும் அறிவாளிகள் ஒரு சோப்பை வாங்க சென்று தேவை இல்லாமல் பல சோப்புகளை வாங்கி வருவார்கள். சில இலவசங்களை கொடுப்பதாக விளம்பரத்தை கண்டால் கண்டதையும் அள்ளி வருவார்கள்.

        3.ஏழை மக்களும் அண்ணாச்சி கடைகளும் பொருட்களை பதுக்காமல் பகிர்ந்து கொண்டு வாழும் சமூகத்தின் அங்கங்கள் ஆவார்கள். காசுள்ளவன் பேரங்காடிகளில் பல நாட்களுக்குத் தேவையென தேவைக்கு அதிகமாக பொருட்களை அள்ளி வருகிறான். அதில் பல பொருட்கள் வீணாகின்றன. சமூகத்திற்கு தேவையான பொருட்களை தனிமனித உரிமை என்றும் பணம் இருக்கிறது என்றும் வீனடிக்கின்றனர். ஆனால் ஏழை எளிய மக்களுக்கும் அவர்கள் நாடும் அன்னாச்சி கடைகளுக்கும் இடையேயான பணம்-பண்டம் பரிமாற்ற உறவு பெரும்பாலும் அன்றாடத் தேவைகளுகாக தான் நடக்கிறது.இங்கே பொருள் விரயம் என்பது கணிசமாக தவிர்க்கப்படுகிறது.

        4. அண்ணாச்சி கடைகள் மனிதர்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தின் அடிப்படையில் நடக்கின்றன. கெட்டுப் போன பொருட்களை கொடுப்பதால் நல்லிணக்கம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களது வியாபாரமும் பாதிக்கப்படும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

        5. கையில் காசு இல்லாவிட்டாலும் அண்ணாச்சி கடைகளில் கடனுக்காவது பொருட்களை வாங்கி விட முடியும். இங்கே காசு அல்ல நம்பிக்கை மட்டுமே பண்ட மாற்றத்தின் அடிப்படையாக இருக்கிறது. கடன் அன்பை முறிக்கும் என்று எழுதினாலும் அது வெறும் சொற்கள் மட்டுமே.

        இதைப் புரிந்து கொள்ளுமளவிற்கு மணிகண்டன் போன்றவர்களுக்கு அறிவில்லை என்பது மட்டுமல்ல அதற்க்கான மனமும் இல்லை என்பது தான் கொடுமை. இவர்களுக்கு இதயம் என்பது முதுக்குப் பின்னே தான் இருக்கிறது.

        • ஐயோ பாவம் நீங்கள் இந்த உலகத்திலேயே இல்லை போல இருக்கு… எந்த உலகத்தில் சார் 1 ரூபாய்க்கு மிளகாய் கொடுக்கிறான் ? மேலும் சிறு கடைகள் ஒன்றும் நீங்கள் சொல்வது போல் இல்லை.

          உதாரணம் இதோ

          http://economictimes.indiatimes.com/news/economy/policy/roadside-eatery-owners-declare-rs-50-crore-under-black-money-scheme-in-mumbai/articleshow/54618396.cms

          ரோட்டோரத்தில் உள்ள சிறு கடை 50 கோடி ரூபாய் கருப்பு பணம் வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது…உங்களை போன்ற ஆட்கள் ஏழைகளுக்கு உருகிறோம் என்ற பெயரில் கருப்பு பண முதலைகளை ஆதரித்து கொண்டு இருக்கிறீர்கள்… இப்படி கணக்கில் காட்டாமல் வளரும் கருப்பு பணத்தால் தான் ஒரு நல்ல மருத்துவமனையை கூட கிராமங்களில் அரசு கட்ட முடியாமல் இருக்கிறது.

          உங்களுக்கு உண்மையில் ஏழை மக்கள் மீது அக்கறையிருந்தால் கருப்பு பண பதுக்களை எதிர்த்து இருப்பீர்கள் ஆனால் உங்களை போன்ற ஆட்கள் தானே இப்படி பில் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்று சொல்லி அரசுக்கு செல்ல வேண்டிய வரியை தடுத்து கருப்பு பணத்தை ஆதரித்து ஏழை மக்களுக்கு பெரும் தீமைகளை மறை முகமாக செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

          • ஒரு ரூபாய்க்கு இரு ரூபாய்க்கு மளிகை பொருட்கள் நீங்கள் வாங்கி இருக்கவில்லை எனில் ஒரு மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

            அப்படியெனில் 5000 ரூபாய்க்கு நீங்கள் அண்ணாச்சி கடையில் பொருள் வாங்கி உள்ளீர்கள் என்பது புருடா.

            அல்லது பில் கொடுக்காத ஒரு பேரங்காடியில் பொருட்களை வாங்கி விட்டு அதை அண்ணாச்சி கடையில் வாங்கியதாக அடித்து விட்டிருக்க வேண்டும்.

            • ஒரு வேலை நீங்க 20 வருடத்திற்கு முன்பு இருந்த நிலையை சொல்கிறீர்களோ ? 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்கும் மளிகை சாமான் எந்த ஊரில் கொடுக்கிறார்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும். கடலை மிட்டாய் கூட இப்ப 1 ரூபாய்க்கு வந்து விட்டது சார்.

              இன்றைய காலத்திற்கு வாங்க சார், உங்க பழைய காலத்திலேயே நிக்காதிங்க… நவம்பர் மாதத்திற்கு முன்பு மிளகாய் விலை கிலோ 220 ரூபாய், அதில் வெறும் 50 கிராம் என்று வாங்கினால் கூட 11 ரூபாய் வேண்டும்… ஆனால் நீங்கள் சொல்லும் சிறிய கடைக்காரர்கள் 11 ரூபாய்க்கு கொடுக்க மாட்டார்கள் அவர்கள் 50 கிராம் மிளகாயை 15 ரூபாய் என்று விற்பார்கள்… சிறிய கடைக்காரர்களின் கொள்ளை இது.

              1 ரூபாய்க்கு பச்சை மிளகாய் கூட கொடுக்க மாட்டார்கள்.

              பில் வேண்டாம் என்று சொல்லும் போதே நீங்கள் கருப்பு பணத்தை ஆதரிப்பவர் என்று தான் அர்த்தம்.

              • செல்லம்,

                நாங்க காசு கொடுத்து பொருளை வாங்கும் பழைய காலத்திலேயே இருக்கோம். நீங்க கார்ட தேச்சி பொருளை வாங்கும் மோடி காலத்திலேயே வாழுங்க.

                எனது வீட்டருகில் இருக்கும் அண்ணாச்சி கடையில் இன்று கூட இரண்டு ரூபாய்க்கு பச்சை மிளகாய் வாங்கினேன். கார்ட் தேய்க்கும் கனவான்கள் கூட அவசரத் தேவைக்கு அண்ணாச்சி கடைகளிடம் தான் செல்கிறார்கள் பேரங்டிகாடிக்கு செல்வதில்லை.

                அப்புறம் பேரங்காடியில் கொள்ளை இலாபத்திற்கு விற்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் அண்ணாச்சி கடை மிளகாய் விலைப் பற்றி தாங்கள் கூறுவது பொய் என்று நான் கூறத் தேவையில்லை.

                நாங்கள் வழக்கமாக புயன்படுத்தும் ஸ்டீம் அரிசி அண்ணாச்சி கடையில் 50 ரூபாய். அதே அரிசி சிலப் பேரங்காடிகளில் 55 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதே போல இட்லி அரிசியின் விளையும் கூட அடே நிலைதான்.

                அப்புறம் பேரங்காடிகளில் எடையும் துல்லியமாக இருக்கும். ஒரு மைக்ரோ கிராம் கூட திகம் இருக்காது. ஆனால் அண்ணாச்சி கடைகளில் எப்பொழுதும் சற்று கூட தான் இருக்கும். அல்லாது கொஞ்சம் எடை கூட இருந்தால் சரி போடுங்க அண்ணாச்சி என்று உரிமையுடன் கூட நாம் கேட்கலாம்.

                அப்புறம் பெரங்கடிகளில் சிலப் பொருட்கள் விலைக் குறைவாக இருக்கலாம். ஆனால் அதை வாங்குவதன் மூலம் மாதக்கணக்கில் கார்ட் தேச்சு வாங்கும் கோமகன்களுக்கு வேண்டுமென்றால் சில பத்து ரூபாய்கள் மிச்சபடுத்தலாம். ஆனால் சில பத்து ரூபாயில் பொருட்களை வாங்கும் ஏழை எளிய மக்களுக்கு பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. அப்புறம் அத்தனையும் அள்ளிபோட்டு கடைசியில் வீனடிப்பார்களே அதை கணக்கில் கொண்டால் அந்த ஒன்று ரெண்டு பிரச்சினைகள் எல்லாம் தூசி தான்.

                கடைசியாக ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்க்கு மளிகை பொருள்கள் வாங்கலாம் என்று தான் நான் கூறினேனே தவிர அறுசுவை உணவிற்கு தேவையான அனைத்தையும் வாங்கலாம் என்று கூறவில்லை.

                ஏற்கனவே நண்பர்கள் உங்களுக்கு விளக்கம் கொடுத்து விட்டார்கள். ஏன் சிறு அண்ணாச்சி கடைகள் பில் கொடுக்கத் தேவையில்லை என்று.

                பில் கொடுத்து கருப்பு பணம் பதுக்கியவர்கள் தான் கருப்புப் பணத்தின் ஊற்று மூலங்கள்.

                அண்ணாச்சியோ அல்லாது நானோ கிடையாது.

                • ஹி ஹி ஹி ஹி நீங்கள் தான் நேற்று 1 ரூபாய்க்கு மிளகாய் வாங்கினேன் என்று கூசாமல் சொன்னிர்கள் இன்று பச்சை மிளகாய் 2 ரூபாய்க்கு வாங்கினேன் என்று சொல்கிறீர்கள்… உங்கள் வார்த்தை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை. குறைவாக சிறியளவில் விற்கும் போது சிறிய கடைகள் விலையை கூட்டி விற்று ஏழை மக்களை கொள்ளையடிப்பது இன்றும் நடை முறையில் இருக்கும் விஷயம் தான்.

                  ஒரு வேலை நீங்கள் காட்டுவாசியோ அதனால் தான் இப்படி விவரம் தெரியாமல் இருக்கிறீர்களோ என்னமோ யார் கண்டது ?

                • இன்னொரு ஆதாரம் ஜெயலலிதா அவர்களின் மரண செய்தி வருவதற்கு முன் அனைவரும் கடைகளுக்கு சென்று பால் மற்ற பொருட்களை வாங்கினார்கள் அப்போது பக்கத்தில் இருப்பவர்கள் என்றெல்லாம் எந்த சிறிய வியாபாரியும் நினைக்கவில்லை 20 ரூபாய் பாலை 60 ரூபாய்க்கு கூசாமல் விற்றார்கள். காய்கறிகளை எல்லாம் அவர்கள் வாய்க்கு வந்த விலைக்கு விற்றார்கள் இந்த சிறிய வியாபாரிகள் எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் செயல்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பில் கேட்கும் பழக்கம் இருந்திருந்தால் இந்த சிறிய வியாபாரிகள் எல்லாம் இப்படி பகல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்க மாட்டார்கள்…

                  நிச்சயம் உங்களை போன்ற ஆட்கள் கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் ஆட்கள் என்பதில் மாற்று கருத்து சிறிதும் இல்லை.

                  • பொய்யாக புலம்புகின்றார் மணிகண்டன்…. சிறு வியாபாரிகளின் கடைகளுக்கே செல்லாதவர் பால் விலையை ரூபாய் 60க்கு கடைகாரர்கள் விற்றதாக பொய்யாக புலம்புகின்றார்….உண்மையில் தந்தி தொலைகாட்சியில் அன்று மாலை அதிகார பூர்வமற்ற செய்தி வந்த உடன் கடைகளை மூடத்தான் கடைகாரர்கள் முனைப்புடன் இருதார் களே தவிர விற்பனையைசெய்யவில்லை என்பது தான் உண்மை…. சிறு கடைகாரர்கள் மட்டும் அல்ல மோர் போன்ற பெரு வணிக நிறுவனங்கள் கூட கடையை உடனடியாக மூடிவிட்டார்கள்… அன்று மதியமே மரண செய்தி கசிய தொடங்கியதால் மக்கள் காய்கறி கடை, மளிகை கடை என்று கூட்டமாக குவிந்து தேவையான பொருட்ட்களை வாங்கத்தான் செய்தார்கள்… நீண்ட நாட்களுக்கு பின் காய்கறி கடைகளில் பெரும் கூட்டம்….. தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகளின் விலையை ஏற்றுவது என்று எல்லாம் எங்க ஊரு அண்ணாச்சிகள் செய்வது இல்லை….

          • அய்யா,

            கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி தான் பிச்சைகரங்க கூட ஸ்வைபிங் மெசின் பயன்படுத்துவதாக உங்க தலிவரு மோடி அடிச்சு விட்டாரு. அதையே பத்திரிக்கைகள் வாந்தி எடுத்தார்கள். பின்னர் அது யூடியூப் பதிவேற்றம் அதுவும் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்பது தெரிந்து காறித் துப்பினார்கள்.

            அப்புறம் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி 6000 கோடி கருப்புப் பணத்தை தானே முன் வந்து கொடுத்ததாக அடித்து விட்டனர். பின்னர் அதுவும் புருடா என்று தெரிய வந்தது.

            என்னங்க பாஸ் இப்படி ஒரு டுபாகூரா இருக்கீங்களே. போயி புள்ள குட்டிகளை படிக்க வைக்கின்ற வழிய பாருங்க.

            சரி அப்படியே இருந்தாலும் அது எப்படி வந்துச்சுன்னு கண்டுபுடிக்க வேண்டிய கடமை காவல்துரைக்குக்ம் புலனாய்வுத் துறைக்கும் இருக்குது. முந்திரி கோட்டையாட்டம் தீர்ப்பு நீங்க சொல்லாதேங்க.

    • மணிகண்டனுக்கு விசயங்களை ஒருங்கிணைத்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு இல்லை என்பதனை தன்னுடைய பின்னிட்டம் மூலம் நிருபிக்கின்றார்…நுகர்வோரை பொறுத்தவரையில்வெள்ளை தாளில் அண்ணாச்ச்சிக்ளால் கொடுக்கப்படும் பில்களே போதுமானது… நுகர்வோருக்கு தேவை பட்டால் அந்த வெள்ளை தாளில் ரப்பர் ஸ்டாம்ப் பெற்றுகொள்ல்லாலம் என்பது தான் தற்போதைய நடைமுறை…. வணிக வரிதுரையும் , நுகர்வோர் நீதி மன்றங்களும் (CONSUMAR POINT OF VIEW வில் )இதனை அனுமதிக்கின்றது… அதே நேரத்தில் வணிகவரித்துறை சிறு மளிகை கடைகாரர்கள் பில்களை கண்டிப்பாக பராமரிக்கவேண்டும் என்று எந்த உத்தரவையும் போட வில்லை…. பில்கள் பராமரிக்கப்டவேண்டும் என்ற அந்த உத்தரவு ஆண்டுக்கு 200 கோடிகளுக்கு மேல் விற்பனை செய்யும் அல்ல்லது உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கே பொருந்தும் என்பது தான் வணிக வரி துரையின் சட்டம்….

  21. மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கிய தாள் பண மதிப்புக்கு நீக்கத்திற்கு பிறகு , எவ்வளவு தாள் பணம் நீக்கப்பட்டது , எவ்வளவு வரி வசூலானது என்கின்ற தகவலை தராமல் , மக்களை புகழ்ந்து விட்டு கமுக்கமாக இருந்துவிட்டார் பிரதமர் .

    தவறில் இருந்து பாடம் கற்று கொண்டு , பீம் ஆப் , டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வரி விலக்கு போன்ற சரியான பாதைக்கு திரும்பி இருப்பது ஆறுதல்

  22. மணிகண்டன், அண்ணாச்சி கடைகளை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் தருணத்தில் நீங்கள் நேரடியாக ஆடைகள் உற்பத்தி செய்யும் திருப்பூருக்கு சென்று விட்டிர்களே மணிகண்டன்…! ஏன் ? உற்பத்தி பிரிவில் அதன் முதலாளிகள் வரி எய்ப்பு செய்கின்றார்கள் என்பதனை நான் உங்களுக்கு முன்பே என்னுடைய பின்னுட்ட்டம் 19 ல் சுட்டிக்காட்டியுள்ளேன்… விற்பனை வரியை மட்டும் அல்ல …. விற்பனை வரியை அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றுவதன் மூலம் அதனை தன் வருமானத்தில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் வருமானத்திலும் வரிஏய்ப்பு செய்து கொண்டு தான் உள்ளார்கள்…அதன் மூலம் கருப்பு பணத்தை உற்பத்தி செய்து கொண்டு தான் உள்ளார்கள்…. வெள்ளை த்தாள் பில் செல்லும் என்று நீதி மன்றங்கள் குறிப்பாக நுகர்வோர் நீதி மன்றங்கள் அறிவித்த பின்னும் பில் விசத்தில் நீங்கள் வைக்கும் வாதம் நகைப்புக்கு இடமானது….. வேண்டுமானால் வெள்ளை பில்லில் கடையின் ரம்பர் ஸ்டாம்ப் பெற்று செல்லலாம்….

    உங்களுக்கு நான் பதில் அளிக்க ஏற்பட்ட தாமதத்துக்கு காரணம் பெரு நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செளுலாரின் பித்த்லாட்டங்க்களால் ஏற்பட்டது தான். 3G offer என்று அவர்கள் 249 ரூபாயிக்கு அளித்த data வில் 4G data இருந்தமையால் என்னுடைய 3G மோடம் வேலை செய்யவில்லை…. 3G offer என்று 4G data கொடுத்த பெரு நிறுவனங்கள் ஏமாற்று காரர்களா? அல்லது புளி இல்லை என்றால் உப்பு இருக்கு என்று கூறும் அண்ணாச்சிகள் ஏமாற்று காரர்களா மணிகண்டன்?

  23. வாழ்வியல் எதார்த்தம் தெரியாத மணிகண்டன்,மோடி வகையறாக்கள் சொன்னதே,செய்வதே வேதம் என்று வாதாடினால் என்ன சொல்லி புரியவைக்க முடியும்?எடுத்தற்க்கெல்லாம் சட்டம் சட்டம் என்று பேசுகிறார்.இதிலிருந்தே அவர் இந்த மண்ணில் வாழவில்லை. எங்கோ அந்தரத்தில் தொங்க வேண்டும்.அல்லது மோடிகளின் பரப்புரை பறவையாய் திரிய வேண்டும்.இந்த நாட்டில் அனைத்தும் சட்டப்படி நடக்கிறதா? சட்டம் நடக்கும்படி இருக்கிறதா? சட்டத்தின் ஒரு நூல்கூட பிசகாமல் ஒருவன் ஒரு வீடு கட்டமுடியுமா?வீடென்று அல்ல எதுவுமே முடியாது.பெரும்பாலும் நடைமுறை சாத்தியமற்ற நிர்வாக சட்டங்கள் தான் ஏட்டில் இருக்கிறது.அவை பின்பற்ற போவதில்லை என்பதும் அதிகார வர்கத்திற்க்கு தெரிந்தே இருக்கிறது.அவை மீறபபடவேண்டும் அதன் காரணமாய் அதிகார வர்க்கம் முறைதவறி கொழுக்க வேண்டும்.இதைத்தான் அனைத்து துறைகளிலும் பார்க்கிறோம்.வரி என்பது மிக எளிமையான முறையில் விதிக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வருமாயின் நிச்சயம் பொதுமக்களில் 90 சவீதத்திற்க்கும் மேல் வரி செலுத்துபவர்களாக்வே இருப்பார்கள். லஞசமும் ஊழலும் எங்கிருந்து துவங்குகிறது?பேராசை பிடித்து சட்டத்தை வளைப்பவனை நான் பேசவில்லை. சாதாரண பொது ஜனத்தை கள்ளனாக ஆக்குவது யார்? நடைமுறை சாத்தியமற்ற சட்ட நடைமுறைகள்தான்.நான் ஒரு வியாபாரியாக சொல்கிறேன், மிக நேர்மையாக வியாபாரம் பண்ணி எவனுக்கும் கூனி குறுகாமல் மிக கெளரவமாகவே இருக்க விழைகிறேன். ஆனால் எதார்த்தத்தை பார்க்கிறேன் சாத்தியமே இல்லாத அளவிற்க்கு வரி விதிப்பு முறைகளும் சிக்கல்களும் விரவி கிடக்கிறது.என் மலைப்பை பார்த்து உடனடியாக ஆள் வருகிறான் “கொடு எனக்கு கொஞ்சம் நான் சரி பண்ணி தருகிறேன். ஆளுக்கு கொஞ்சம் ஏய்ப்போம்” என்று ஆரம்பித்து ஏய்ப்பது ஒரு கலையாக மாறி ஒட்டு மொத்த நாடும் ஏய்த்து ஏய்த்தே நாறிபோய் கிடக்கிறது.இதை எப்படி களை எடுப்பது? நோட்டை செல்லாது என்று அறிவித்து புதிதாக பிரிண்ட் போட்டு வெளியாக்கினால் இது தீர்ந்து விடுமா?இதில் அரசியல் பழிவாங்கலும் இதன் மூலமாய் ஏதுமறியா பொது மக்களை ஏமாற்றுதலும்தான் இருக்கிறதே ஒழிய இதன் மூலமாய் என்ன சீர்திருத்தம் நடந்து விடும். அரசின் நிர்வாக முறை எளிமையாய் இருத்தல் ஒன்றே ஊழலையும் முறை கேட்டையும் ஒழிக்க ஒரே வழி.நாம் மிகப்பெரிய மக்கட்செல்வம் கொண்ட நாட்டினராய் இருக்கிறோம்.மிகக்குறைவான வரிவிதிப்பிலேயே மிகப்பெரிய வருவாயை ஈட்ட முடியும். தொழில்நுட்பம் மிகுந்த நாடுகளிலேயே இந்த வளம் கிடையாது.ஆனால் ஆட்சியாளர்களின் அக்கறையற்ற நிர்வாக முறையே தொடர்ந்து அதிகார வர்க்கத்தால் நாட்டை எல்லா வகையிலும் சுரண்டி கொழுக்க வைக்கிறது.அரசின் எந்த சலுகையையும் அதிகம் பெறாத, தன் கை ஊன்றி கர்ணம் அடித்து தெருவோரம் கடை வைத்து பிழைக்கும் மக்களிலிருந்து ,வாழ்வை தொலைத்து வெளிநாடு போய் அங்கே கூலிகளாய் பல வருடம் குடும்பம் மனைவி குழந்தைகளை பிரிந்து மாடாய் உழைத்து சேர்த்த பணத்தை வைத்து ஒரு செருப்பு கடையோ துணி கடையோ வைத்து பிழைக்கும் மக்கள் வரை அனைவரையும் திருட்டு பட்டம் வேறு கட்டவைக்கிறது.

    • சட்டப்படி நடப்பது இல்லை என்றால் அதற்கு காரணம் என்ன ? உங்களை போன்றவர்களையே எடுத்துக்கொள்வோம் சாதாரணமாக கடையில் ஒரு பொருள் வாங்கினால் சட்டப்படி அந்த கடைக்காரன் ரசீது கொடுக்க வேண்டும் ஆனால் உங்களை போன்ற ஆட்கள் கொடுக்க தேவையில்லை என்று சொல்லி கருப்பு பணத்திற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். இங்கே சட்டத்தை மதிக்காமல் நடப்பது உங்களை போன்ற ஆட்கள்.

      சிஃனலில் கோட்டை தாண்டி நிற்க கூடாது ஆனால் அனைவருக்கும் அவசரம் கோட்டை தாண்டி தான் நிற்கிறார்கள் எதிரில் வாகனத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லை.

      இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்து பார்த்தால் பலரும் சட்டத்தை மீறுவதில் வெட்கப்படுவது இல்லை.

      ________________

      என்னை போன்ற சிலர் சட்டம் அது இது என்று பேசினால் உங்களை போன்றவர்களுக்கு பிடிப்பது இல்லை.

  24. சிக்னலில் கோட்டை தாண்டி நிற்கிறார்களாம்..இதையா விவாதித்து கொண்டிருக்கிறோம்? நான் பொருளாதார சட்டங்களைத்தான் பேசுகிறேன்.நான் ஒரு வியாபாரியாக நிதர்சனமான நடைமுறைகளை நித்தமும் அனுபவித்தவனாக பேசுகிறேன்.மாதத்திற்க்கு பல லட்சங்களோ அல்லது கோடியோ வியாபாரம் செய்யும் மார்வாடிகள் சில ஆயிரங்களுக்கு கூட பில் போட்டு வியாபாரம் பண்ணுவதில்லை.மோடியை பெரிய அளவில் ஆதரித்து உயர்த்தியவர்கள் இவர்களே.மோடியின் கட்சிக்கு மனமுவந்து காணிக்கை அளிப்பவர்களும் இவர்களே.இவர்கள் தான், உங்கள் பாஷையில் சொல்லப்போனால் பில் போடாமல் “பெரும் அளவில் ஏப்பம் விடும்” அப்பாவி அண்ணாச்சிகள் வரை தொடர்பு வைத்திருப்பவர்கள்.இவர்களில் யாராவது செல்லாநோட்டால் கலங்கி நின்றார்களா?எந்த பதட்டமுமில்லாமல் கடைசி தவணைவரை செல்லா நோட்டை சர்வசாதாரணமாய் என்னிடமிருந்தே வாங்கி போயிருக்கிறார்கள்.என் ஒருவனிடமிருந்தே பல ஆயிரங்கள் என்றால் என்னை போல எத்தனை சில்லரை வியாபாரிகள்.நானும் வெளி மாநிலங்களிலிருந்து கொள் முதல் செய்பவந்தான்.என்னிடம் சிஎஸ்டி நம்பர் இருக்கிறது.நான் வரி கட்டியே கொள்முதல் செய்து கொள்கிறேன். பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதில் வரி ஏய்க்கும் சாமர்த்தியம் எனக்கு கிடையாது.முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் எண்ணமும் எனக்கில்லை.என் 400 சதுர அடி கடையின் வாடகை 27000 ரூபாய்.கரண்ட் பில்,சம்பள செலவுகள் இன்னும் கடை சார்ந்த எதிர்பாராத பல செலவுகள் இவை அனைத்தையும் கணக்கு பார்த்தால் இன்றைய காலத்தில் எதுவும் மிஞ்சுவதில்லை.ஓரளவு இந்த வரியை மிச்சம் பிடிப்பதில்தான் ஓடுகிறது.இந்த உண்மையை மனப்பூர்வமாய் ஒத்துக்கொள்கிறேன்.என் கணக்குகளை கொஞசம் சுருக்கி திருத்தி பார்த்து தருபவரும் மோடி ஆதரவாளர்தான்.நான் அவருக்கு ஒரு சுண்டைக்காய் பல மலை முழுங்கிகளை க்ளைண்ட்டாக வைத்திருக்கிறார்.நான் துவக்கத்தில் சொன்ன மார்வாடி சிஎஸ்டி எண்ணே எடுக்காமல் பல காலமாய் தில்லி கல்கத்தா லுதியான அகமதாபாத் சூரத் போன்ற நகரங்களிலிருந்து என்னை போன்ற எத்தனையோ வியாபாரிகளுக்கு கோடிகளுக்கு வியாபாரம் பண்ணி குவிக்கிறார்.இந்தியா என்ற இந்த பெரும் கடலில் நான் சொன்ன மார்வாடி ஒரு சிறு துளி.இவரைப்போன்று அல்லது இவருக்கும் பல படிதரங்களில் மேலே மேலே என்று எத்தனையோ மார்வாடிகள் .இவர்களில் எத்தனை பேர் நோட்டு அறிவிப்பால் இதுவரை சேர்த்த கருப்பு பணத்தை தொலைத்துவிட்டு பைத்தியக்காரணாய் அலைகிறார்கள்?அலைகிறவர்கள் யார்? ஒரு சேகர்ரெட்டியும் ஒரு ராம்மோகன்ராவும் தான் குற்றவாளிகளோ?கவுன்சிலரிலிருந்து போகிறது போகிறது …போய்க்கொண்டே இருக்கிறது.துணை நடிகனிலிருந்து போகிறது போகிறது…சூப்பர்ஸ்டார் வ்ரை போகிறது.வெட் கமே இல்லாமல் இப்படி முட்டு கொடுத்து பேச கொஞ்சமும் அலுக்கவில்லையா மணிகண்டா?

    • நாட்டில் பெருகி வரும் லஞ்சம்,ஊழல், கருப்பு பணம், பதுக்கல் மற்றும் இவைகளை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் மத்திய அரசால் மக்கள் மீது அவிழ்த்து விட பட்டிருக்கும் பண வீக்கம், பண மதிப்பு நீக்கம் என்னும் பெரும் சுமை போன்ற அனைத்து சமூக கேடுகளையும் களைய சிறந்த ஒரே தீர்வு, இப்போது தடை செய்ய பட்ட 500,1000 ரூபாயுடன் சேர்த்து புதிதாக வந்திருக்கும் 2000 ரூபாய் போன்ற பெரு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அனைத்தையும் முழுமையாக, நிரந்தரமாக தடை செய்து நாட்டின் பொருளாதாரத்தை வெறும் 100 ரூபாய்க்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் இந்த நாட்டை பிடித்த அனைத்து வகையான சமூக சீர்கேடுகளும் ஒரு சேர ஒழியும். இதற்க்கு நம் முன் இருக்கும் ஒரே வழி, மகாத்மா காந்தி முன்னெடுத்த “கிராம பொருளாதாரத்தால்” மட்டுமே முடியும்.

      அதீத தொழில் நுட்பம், இயந்திர உற்பத்தி போன்றவை இன்றில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் நாம் வாழும் சமூகத்தை நிச்சயமாக படு குழியில் தான் தள்ளி விடும். இப்பொழுது மக்களை விழுங்க காத்திருக்கும் “டிஜிட்டல் பாசிசம்” இதற்க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு . முன்பு “இயந்திர பாசிசத்தில்” சிக்கி மனிதன் இயந்திரங்களோடு இயந்திரமாய் தன் சாரத்தை இழந்து திணறி கொண்டிருந்தான், இப்பொழுது மனிதனின் மொத்த சாரத்தை உறிஞ்சி எடுக்க அந்த இடத்தில் டிஜிட்டல் பாசிசமும் சேர்ந்து கொண்டது. ஆகவே,முடிந்த அளவு இயந்திர உற்பத்தியை, தொழில் நுட்பத்தை ஒரு கட்டுக்குள் வைத்து, மனிதனுக்கு வேண்டிய அடிப்படையான தேவைகள் அனைத்தையும் கிராம கை தொழில், குடிசை தொழில் அல்லது சிறு தொழில் மூலம் முன்னெடுப்பதே சால சிறந்தது.

      ஒரு சமூகம், எவ்வகையிலும் வன்முறையற்ற சமூகமாக இருக்க வேண்டுமென்றால், அதில் வாழும் மக்கள் எளிமையானவர்களாக(ஏழ்மையானவர்களாக அல்ல) அதாவது எளிமை சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டும். அதற்க்கு அவர்கள் முன்னெடுக்கும் உற்பத்தி முறை மிக எளிமையானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மனதில் எளிமையான நல்ல எண்ணங்கள் பிறக்கும். அதற்க்கு மையப்படுத்த பட்ட இயந்திர உற்பத்தியை கட்டுப்படுத்தி, “கிராம பொருளாதாரம்” என்கிற பரவல் உற்பத்தியை மேற்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். மேலும், அனைவருக்கும் வேலை என்பதற்கான சாத்தியமும் இதில் தான் அதிகம்.

  25. தோழர் வில்லவன் முகநூலிலிருந்து

    பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அட்டைவழி பரிவர்த்தனையை நிறுத்துவதாக அறிவித்திருப்பது பணமற்ற வர்த்தகம் எனும் மேட்டுக்குடிகளின் பிரச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் முதல் எச்சரிக்கை.
    இந்தியாவின் சில்லறை வர்த்தக கட்டமைப்பு 10% ரொக்கமற்ற வர்த்தகத்துக்குகூட லாயக்கற்றது. இந்த அறிவுகூட இல்லாமல் பணமற்ற வர்த்தகத்தை பரிந்துரைத்தார்களா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. ரூபாய் நோட்டு இல்லாததன் நெருக்கடியை சமாளிக்க அள்ளிவீசப்பட்ட காரணங்களில் ஒன்று, அவ்வளவுதான். இப்போது அவர்களது ஆலோசனை அவர்களையே பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.
    இதற்கும் மோடியின் கால்நக்கிகள் முட்டுக்கொடுப்பார்கள், கைவசம் ஊடகங்கள் இருக்கையில் அவர்களுக்கு என்ன கஷ்டம்?

    • இதோ எதிர்த்துப் போராடினால் மோடி கும்பலை பணிய வைக்க முடியும் என்பதற்க்கான சான்று.

      பார்க்க,http://economictimes.indiatimes.com/industry/energy/oil-gas/banks-defer-decision-to-charge-transaction-fee-on-card-payments-at-petrol-pumps/articleshow/56408145.cms

      பெட்ரோல் விற்பனை மையங்கள் கழிவு கொடுத்து கட்டுபடியாகாது என அட்டை பரிவர்த்தனையை நிறுத்துவதாக அறிவித்தவுடன் மோடி கும்பல் அலறி அடித்துக்கொண்டு பின்வாங்கியுள்ளது. பணமற்ற வர்த்தகம் மக்கள் நலனுக்காவா,வங்கிகளின் கொள்ளைக்காகவா

Leave a Reply to கி.செந்தில்குமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க