privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்நூல் அறிமுகம்40-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய நூல்கள் !

40-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய நூல்கள் !

-

ரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் கொண்டவர்களின் தேடல்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய வரவுகள்.

kizhai-adகாவிரி : பா.ஜ.க.வின் பாக்கிஸ்தானா தமிழ்நாடு ?

பாகிஸ்தானா தமிழ்நாடு

1991 தனியார்மய சீர்திருத்தம் பலன் யாருக்கு ?

தனியார்மய சீர்திருத்தம்

வியாபம் ஊழல் அரசையே கபளீகரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க

vyapam

எது கருப்புப் பணம்? – மோடியின் டிஜிட்டல் பாசிசம்

கருப்புப் பணம்

அம்பேத்கர் – இந்துமதத் தத்துவம்

dr அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்

சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி ?

சிறந்த கம்யூனிஸ்ட்

 
40-வது சென்னை புத்தகக் காட்சியில் …
கடை எண் 434 – 435.
செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகம், சென்னை – 30
( பச்சையப்பன் கல்லூரி எதிரில் )
சனவரி 6-19, 2017

வேலை நாட்கள் : மதியம் 2 – 9 வரை
விடுமுறை நாட்கள் : காலை 11 – 9 வரை

அரசியல் தெளிவுபெற…
உழைக்கும் மக்களுக்கான தேடல்கள் ஒரே கூரையின் கீழ் …
வாருங்கள் ….!

10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே. 044-2841 2367

  1. //சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?//

    புத்தகத்தின் தலைப்பே தமாஷாக இருக்கிறது.. சத்தியமாக வரும் சிரிப்பை அடக்க முடியவில்லை. நல்ல சமையல் கலைஞன் ஆவது எப்படி, இரு சக்கர வாகனத்திற்கு பழுது பார்ப்பது எப்படி?,நல்ல கணவனாக, மனைவியாக இருப்பது எப்படி என்பது போல வேடிக்கையாக இருக்கிறது. ஒரு புத்தகம் படித்து ஒருவரால் நல்ல கம்யூனிஸ்ட் ஆக வர முடியும் என்றால், என்னால் நம்பவே முடியவில்லை. ரஜினிகாந்த படத்துல ஒரே பாட்லா பணக்காரன் ஆவாரே அது போலவா.. ஹி.. ஹி… ஹி.. ஹி…

    • ரேபாக்கா மேரி,

      நான் இன்னும் அந்த நூலை படிக்கவில்லை.

      நீங்கள் படித்தீர்களா என்று தெரியவில்லை.
      ஒருவேளை படித்திருந்தால் அது கூறவரும் விசியதைப் பற்றி ஒரு நாலு வரிகள் சொல்லுங்க.

      சிறந்த கம்யுனிஸ்டாக வருவதற்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. ஒருவேளை அதைதான் அந்த நூலும் கூற விளையலாம்.

      முந்தி கொண்டு சிரிப்பதில் என்ன பயன்.

    • தோழர் Liu Shaoqi 1939 ல் எழுதிய இந்த புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பில் அதன் பெயர் How to be a Good Communist என்று உள்ளது! அந்த புத்தகத்தை தமிழ் ஆக்கம் செய்யும் போது வேறு எப்படி அதற்கு தலைப்பிட முடியும் என்று நீங்கள் கூறினால் நலமாக இருக்கும்! சிரிப்பை நிறுத்திவிட்டு சிந்தியுங்கள் !

  2. நீங்கள் சொல்வது எனக்கும் சிரிப்பாக உள்ளது. அப்படியென்றால் தற்போது கம்யூனிசம் பேசுபவர்கள் உண்மையான கம்யூனிஸ்ட் கிடையாதா, அப்படியென்றால் யார் படித்தாலும் உண்மையான கம்யூனிஸ்ட் ஆகலாமா?

  3. கம்யுனிஸ்டு என்பவர் பொது வாழ்வில் கண்டிப்பாக மக்களுக்கு ஆற்ற வேண்டிய தியாகங்களை பற்றி விவாதிக்கும்,சொந்த வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விவாதிக்கும் இந்த நூலை பார்த்து சிரிக்கும் ரபெக்கா மேரியின் அறிவு மெய் சிலிர்க்க வைக்கின்றது

  4. நான் சொல்ல வரும் கருத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை….

    புத்தகத்தின் தலைப்பை பார்த்தால், என்னவோ சுய முன்னேற்ற புத்தகத்தின் தலைப்பை போன்று இருக்கிறது. சிறந்த தலைமை பண்பை வளர்த்துக் கொள்வது எப்படி? சிறந்த பேச்சாளர் ஆவது எப்படி? மிக சிறந்த கார்ப்பரேட் குரு ஆவது எப்படி? என்கிற ‘சுய’முன்னேற்ற கழிசடை தனங்களோடு சேர்ந்தது போல் உள்ளது. ஆகவே, அடுத்த வரும் மறு பதிப்பிலாவது நல்ல டைட்டில் ஒன்றை வைக்க சொல்லுங்கள். கம்யூனிச நூலுக்கு இந்த பெயர் செட் ஆகவில்லை. Definitely,Title seems to be Ludicrous n humiliating.

    • ரெபெக்கா மேரி,

      புத்தகத்தைப் படிக்காமல் நீங்கள் அதிமேதாவி போல, திமிர்த்தனமாகப் பேசுவது உங்களுடைய இயலாமையை விட கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்பைத்தான் வெளிப்படுத்துகிறது என்று நம்புகிறேன்.

      புத்தகத்தைப் படித்து நீங்கள் விமர்சனம் செய்தால் அது விவாதத்திற்கு வழிவகுக்கும். ஒருவேளை உங்களைக் கேட்டு அனுமதி வாங்கிய பிறகு தலைப்பு வைத்திருந்தால் சரியாக இருக்கும் என்கிறீர்களா?

      கம்யூனிஸ்டுகளும் உங்களைப் போன்றே இந்தச் சமூகத்திலிருந்துதான் வருகின்றனர். ஒருவேளை நீங்கள் கம்யூனிஸ்டு ஆகும் பட்சத்தில் உங்களுக்கான முதல் சுயவிமர்சனம் இங்கிருந்து தான் தொடங்கும்

    • புத்தகம் சொல்ல வரும் கருத்து என்னவென்று தெரியாமல் தான்தோன்றிதனமாக பேசுவது சரியா?

      உள்ளடக்கத்தை பார்க்காமல் வெறும் தலைப்பை மட்டுமே பார்த்து கேனத்தனமாக சிரிப்பது ஏன்?

      • @ செல்வம் …….

        முட்டாளை போல் பேசுகிறீர்கள்..

        நான் புத்தகத்தையா குறை சொன்னேன், புத்தகத்தின் தலைப்பு உகந்ததாக இல்லை என்று மட்டும் தான் கூறினேன் அவ்வளவே. புத்தகத்தின் உள்ளடக்கம் மிக உயர்வானதாகவும், அளப்பரியதாகவும் இருக்கலாம். ஆனால், அதற்கேற்ற தலைப்பு இது இல்லை என்று தான் கூறினேன். புத்தகத்தின் தலைப்பை பார்த்து சிரிப்பு வருகிறதோ இல்லையோ உங்களின் பதில்களை பார்க்கும் போது இன்னும் காமெடியாக இருக்கிறது. :)) :)) :))

        • ரெபக்கா மேரி,

          அய்யோ என்னவொரு அறிவு.

          வெறும் தலைப்பை மட்டும் குறை சொல்லிவிட்டு நீங்கள் சென்றிருக்கலாம். ஆனால் உங்களால் முடியாதே.

          தலைப்பு மட்டும் மேய்ந்து புத்தகத்தின் உள்ளடக்கத்தை விமர்சனம் செய்யும் உங்களது மேட்டிமைத்தனத்தை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது

          தலைப்பை மட்டுமே படித்துவிட்டு புத்தகைத்தை குறை கூறுவது தான் உங்களது கருத்தில் வெளிப்படுகிறது.

          அப்புறம் புத்தகத்தின் தலைப்பு சரியில்லை என்று எப்படி கருதுகின்றீர்கள்.

          இந்த புத்தகத்தை(How to be a Good Communist ) சீன கம்யுனிஸ்டு தலைவர் Liu Shaoqi 1939 ல் எழுதி இருக்கிறார். இதை மொழி பெயர்ப்பு செய்தவர் காலச்சக்கரத்தில் பின் சென்று அதன் தலைப்பை மாற்ற இயலாது.

          • //ஒரு புத்தகம் படித்து ஒருவரால் நல்ல கம்யூனிஸ்ட் ஆக வர முடியும் என்றால், என்னால் நம்பவே முடியவில்லை

            இந்த வரியின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? தலைப்பை வைத்து நூலை குறை சொல்லாமல் வேறென்ன. நூலை விமர்சனம் செய்யலாம். ஆனால் அதற்கென ஒன்றுமெ முயற்சி செய்யாமல் சும்மா ஏதாச்சும் கமெண்ட் போட வேண்டும் என்று என்ன அவசியம் உங்களுக்கு?

            கம்யுனிஸ்டுகள் ஒன்றும் வானிலிருந்து குதிப்பதில்லை. சமூகத்தில் ஒரு சாதாரணமான மனிதர்களாக இருந்து தான் கம்யூனிஸ்டுகளாக பரிணமிக்கிறார்கள்.
            கம்யூனிஸ்டுகளாக படிமாற்றம் செய்து கொள்வதற்கு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதில் தன்னளவிலும்வே சமூக அளவிலும் அவர் தொடர்ச்சியாக போராட வேண்டி இருக்கிறது.

            அந்த பிரச்சினைகளைப் பற்றி இந்நூல் பேசலாம். அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் இது சொல்லலாம். சுயம்பு போலல்லாமல் கம்யூனிஸ்டு என்பவர் வாழ்நாள் முழுக்க தொடர்ச்சியாக தன்னையும் சமூகத்தையும் விமர்சனம் சுய விமர்சனம் செய்வதன் வாயிலாகவேதன்னை ஒரு கம்யூனிஸ்டாக புடம் போட்டு கொள்ள முடியும் என்பதைப் பற்றியும் இந்நூல் கூறலாம்.

            எனவே தலைப்பில் இருந்து உள்ளடக்கத்தை கற்பனை செய்யும் பாணியிலிருந்து விடுபட்டு உள்ளடக்கத்திற்கு பொருத்தமான தலைப்பு இருக்கிறதா என்பதை படித்து பின்பு முடிவு செய்யவும்.

            நன்றி.

            • @ செல்வம்

              நீங்கள் இன்னும் உங்களின் காமெடியை நிறுத்தவில்லையா? காமெடி என்பதை தாண்டி இப்போது மொக்கை போட்டு கொண்டிருக்கிறீர்கள்.

              நான் தெளிவாக கூறிவிட்டேன், ஆரம்பத்தில் இருந்தே நான் குறிப்பிட்ட நூலை தாக்கி பேசவில்லை, அதன் தலைப்பை பற்றி மட்டும் தான் குறிப்பிடுகிறேன் என்று . இந்த எளிய விஷயம் கூட விளங்க வில்லை என்றால் அது உங்கள் அறிவின் குறைபாடு. மேலும், எந்த நூலையும் நான் குறை சொல்வது கிடையாது. முற்று முழுவதுமாக வீண் என்று கருதி எதனையும் குப்பையில் கடாச முடியாது. அது அதற்கென்று ஒரு பயன்பாடு நிச்சயம் உலகின் எந்த மூலையிலாவது இருக்கும். வேறு நல்ல பெயர் வைத்திருக்கலாமே என்று என் கருத்தை தெரிவித்தேன் அவ்வளவே. இதற்க்கு மேல் நீட்டி முழக்கி இன்னும் எங்களை சிரிக்க வைக்க வேண்டாம்.

              • மேரி அக்கா,

                இந்த புத்தகத்தை(How to be a Good Communist ) சீன கம்யுனிஸ்டு தலைவர் Liu Shaoqi 1939 ல் எழுதி இருக்கிறார். இதை மொழி பெயர்ப்பு செய்தவர் காலச்சக்கரத்தில் பின் சென்று அதன் தலைப்பை மாற்ற இயலாது

                அதனால் பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சு வுட்ருங்க……

            • அப்பிடினா கம்மூனிஸ்ட்ல சாதா கம்மூனிஸ்ட் பெசல் கம்மூனிஸ்டுனு இருக்காங்களா சாதா கம்மூனிஸ்டு பெச்ல் ( சிறந்த) கம்மூனிஸ்ட் ஆக இந்த புத்தகத்தை படிக்கனுமா யாரவது கோவப்படாமல் பதில் சொல்லவும்

        • ஒரு புத்தகம் எதனை பற்றி விரிவாக பேசுகின்றதோ அதற்கு ஏற்ற பெயரை வைப்பது என்பதில் என்ன தவறு இருக்கிறது? இதில் சிரிக்க ஏதாவது நகை சுவை இருக்கின்றதா என்ன? பேராசிரியர் தாமோதரன் அவர்கள் எழுதிய சமையல் கலை நூலுக்கு “வீடு சைவ சமையல்” என்ற பெயரை வைத்துள்ளார்கள்….. அந்த நூல் சமையல் கலை சிரிது அறிந்த பலருக்கும் hand book அல்லது செய்முறை புத்தகம் போன்று உதவுகின்றது… அது போன்று தான் How to be a Good Communist என்ற நூல் கம்யுனிஸ்டு கட்சிக்குள் நுழையும் அல்லது நுழைந்த இளம் தோழர்களுக்கு ஒரு வாழ்வியல் வழிகாட்டியாக இருக்கிறது. என்னை பொறுத்த வரையில் இந்த புத்தகத்தின் பெயரில் ஏதும் வில்லங்கமோ, குறைபாடோ , நகைக்க வேண்டிய தேவையே இருபதாக தெரியவில்லை… அப்படியே ஒரு வேலை நீங்கள் சிரித்தாலும் அது உங்கள் தனி மனித சுதந்திரமாக எடுத்துக்கொள்ளலாம்…. ஆனால் அதனை நீங்கள் பின்னுட்ட பகுதியில் எழுதி உங்கள் நகை சுவை உணர்வை விளமபர படுத்த வேண்டிய தேவை எங்கே ஏற்படுகின்றது…?

  5. Hi vinavu,

    I expected very much early of your update on your books list. but you are posting very late as the book fair is going to complete in few days 🙁 🙁 🙁
    Next time please post before the book fair starts.

Leave a Reply to p.joseph பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க