privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுமக்கள் அதிகாரத்தின் டெல்லிக்கட்டு - சென்னை, விழுப்புரம் - படங்கள்

மக்கள் அதிகாரத்தின் டெல்லிக்கட்டு – சென்னை, விழுப்புரம் – படங்கள்

-

சென்னை – மதுரவாயல் : டெல்லிக்கட்டு திருவிழா !

க்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்புகள் 17.1.2017 மாலை மதுரவாயலில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் முக்கிய இடங்களான அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் இப்போது, எப்படி பதற்ற நிலையில் உள்ளதோ அதேபோல், சென்னை மதுரவாயல் முழுவதும் நேற்று (17.1.2017) பதற்ற நிலையாக இருந்தது. இதனால் பீதி அடைந்த போலீசு, மதுரவாயலில் முக்கிய இடங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசு தடுப்புகளை அமைத்து நின்றனர்.

மாலை 5.30 மணியளவில் மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் இருந்து மாடுகளுடன் மஞ்சு விரட்டு ஊர்வலமாக கிளம்பியது. இதில், தமிழகத்தை வஞ்சிக்கும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பலுக்கு எதிரான “ஜல்லிக்கட்டு இல்ல இது டெல்லிக் கட்டு, நாம் உடைக்க வேண்டியது டெல்லிக் கொம்பு” என முழக்கங்களை எழுப்பினர். ஊர் பொதுமக்கள், தோழர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Maduravoyal Manjuvirattu (3)

அந்த ஊர்வலம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை நெருங்கியபோது, போலீசில் பந்தோபஸ்தோடு ஊர்வலம் சென்றது. இதனால், சாலையில் சென்ற வாகனங்கள் பேருந்துகள் ஊர்வலத்துடன் ஊர்வலமாக வந்தன. ஊர்வலம் இறுதியாக மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வாயிலை அடைந்தது. அங்கு தமிழர் வீர விளையாட்டான சிலம்பம் நடைபெற்றது. 1000-க்கும் மேற்ப்பட்ட மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் நிற்கின்றனர். அவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் போலீசும் நிற்கிறது. சாலையில் செல்பவர்கள் நின்று கவனித்து செல்கின்றனர். இதனால், அந்த பகுதியே திருவிழா போல மாறியது. மக்கள் அதிகாரத்தின் முழக்கங்களை மக்கள் அனைவரும் முழங்கினர்.

பின் மக்களிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் போராட்டத்தின் நோக்கம் பற்றி உரை நிகழ்த்தப்பட்டது.

தொடர்ச்சியாக மத்திய பி.ஜே.பி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. முல்லை பெரியாரில் தண்ணீர் விடமறுப்பு, தமிழக வழக்கறிஞர்களுக்கு மட்டும் வாழ்நாள் தடை, மருத்துவ படிப்பில் நீட் தேர்வால் தமிழர்களுக்கு செய்யப்பட்ட அநீதி. காவிரி நீர் விசயத்தில் தமிழகத்தின் பங்கை தராமல் துரோகம் செய்கிறது மோடி கும்பல்.  இப்படித்தான் மாட்டை பிடிக்க கூடாது என்ற ஜல்லிக்கட்டின் மீதான தடை. இப்படி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிப்பது  ஓர் அநீதி. தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி. இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் மனுநீதி. இந்த மனுநீதியை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

போராடினால் ஆட்சியை கலைப்போம் என்று சுப்பிரமணியசாமி சொல்கிறார். இந்த பார்ப்பன கும்பலுக்கு யார் இந்த தைரியத்தை கொடுத்தது? தமிழக மக்கள் சூடுசுரணை அற்றவர்கள் என நினைக்கும் இந்த கும்பலுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழக மாணவர்களின் போராட்டம் தமிழகத்தை தொடர்ச்சியாக வஞ்சித்துக் கொண்டிருக்கும் இந்த பார்ப்பன கும்பலுக்கு எதிராக ஓன்றுதிரட்டபட வேண்டும். இனி காளைகளை அடக்குவது வீரவிளையாட்டல்ல, காவி காளைகளை அடக்குவதே தமிழர்களின் வீரத்திற்கு சவால் விடும் விளையாட்டு. இது ஜல்லிக்கட்டு அல்ல, டெல்லிக்கட்டு. நாம் பிடிக்க வேண்டியது காளையின் கொம்பிகளை அல்ல, பார்ப்பன கும்பலின் கொம்புகள். அவற்றை தமிழகத்தை விட்டே அடித்து விரட்ட வேண்டும்.

இந்தி திணிப்பின் போது, தமிழகமே எழுச்சியுடன் போராடியது, அதேபோல் திமிர் பிடித்த பி.ஜே.பி-யின் பார்ப்பன கும்பலை தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம் என இந்த போராட்டம் மக்களை, மாணவர்களை, இளைஞர்களை என அனைத்து தரப்பினரையும் அறைகூவி அழைத்தது.

இந்த மஞ்சு விரட்டு போராட்டத்திற்கு போலீசு வேறு வழியின்றி இடையூறு செய்யாமல் அமைதி காத்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இந்தப் போராட்டம் நடைப்பெற்றது. பல்வேறு தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

– வினவு செய்தியாளர்

_______________

தேவை ஜல்லிக்கட்டு அல்ல, டெல்லிக்கட்டு! விழுப்புரம் போராட்டம்!

மோடி அரசின் தமிழன விரோத போக்கால் தமிழக விவசாயத்தை அழிக்கும் விதமாக காவிரி தண்ணீர் தர மறுப்பது, தமிழகத்தின் நெற்க்களஞ்சியமான டெல்டாவை அழிக்கும் விதமாக மீத்தேன், ஷெல், கெயில் போன்ற அழிவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது. மேலும் கூடங்குளம் அழிவு திட்டத்தை அமுல்படுத்துவதாகட்டும் இந்தி, சமஸ்கிருத திணிப்பு,நீட்தேர்வை அமுல்படுத்துவது, கீழடியில் தமிழர்களின் தொன்மையான ஆய்வை செய்ய மறுப்பது. இப்படி பார்ப்பன எதிர்ப்பு உள்ள மாநிலம் என்பதால் தமிழனத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

அதற்கு ஏற்றாற் போல் உச்சிக் குடுமி மன்றம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தில்லை கோயிலை தீட்சிதர் கையில் ஒப்படைத்தது, ஊழல் நீதிபதிகளுக்கு எதிராக போராடிய தமிழக வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை தடுத்து தீண்டாமையை கடைபிடிப்பது என உச்ச நீதிமன்றம் உச்சிக்குடுமி மன்றமாக செயல் பட்டு தமிழினத்துக்கு எதிராக தீர்ப்பினை வழங்கிவருகிறது. RSS, BJB, மற்றும் நீதிமன்றம் ஆகியவை இணைந்து தமிழகத்தின் தன்மானத்துக்கும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் சவால் விடுகின்றனர். ஆகையால் நாம் மோத வேண்டியது ஜல்லிகட்டு அல்ல டெல்லியோடு மல்லுக்கட்டு (மோத வேண்டும்).
என்ற அடிப்படையில் விழுப்புரம், மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் எதிரில் மஞ்சு விரட்டு 17.1.2017 காலை 11.00 மணிக்கு நடத்த திட்டமிட்டு ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தோம். இந்த செய்தியை கேள்விப்பட்ட போலீஸ் இருநூறுக்கும் மேற்பட்டோர் குவிந்து நான்கு பக்கமும் பாதுகாப்பு என்ற பெயரில் பதட்டத்தை ஏற்படுத்தினர். இதை பார்த்த மக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில் போலீசுக்கு தெரியாமல் திடிரென்று புதிய பேருந்து நிலையத்திலிருந்து முழக்கமிட்டவாறு காளை மாடுகளுடன் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றோம்.

மஞ்சு விரட்டு நடக்கவிருந்த இடத்திற்கு காவல்துறையினர் உடனடியாக வந்து நம்மை மறித்து வலுகட்டாயமாக வேனில் ஏற்றினார்கள். அப்போது மாடுகளை அவிழ்த்துவிட்டு மஞ்சு விரட்டு செய்தோம். அதனை தடுக்க நினைத்த போலிசார் அவர்களும் மாட்டை பிடிப்பபதாக நினைத்து அவர்களே மஞ்சுவிரட்டை நடத்தி விட்டனர். அந்த இடமே போர்க்கோலம் போல் காட்சியளித்தது. கிட்டத்தட்ட 1- மணி நேரம் போராட்டம் நடைப்பெற்றது. அந்த இடத்தில் 5௦௦ க்கும் மேற்பட்ட மக்கள் கூடிநின்று போராட்டத்தை பார்த்து ஆதரவு தெரிவித்தனர். போலீஸ் தோழர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை 6 மணிக்கு விடுதலை செய்தனர். இரண்டு மாடுகளை பறிமுதல் செய்து பின்னர் அதையும் விடுதலை செய்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.