privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்ஜல்லிக்கட்டு போராட்டம் : துரோகிகளுக்கு செருப்படி - வீடியோ

ஜல்லிக்கட்டு போராட்டம் : துரோகிகளுக்கு செருப்படி – வீடியோ

-

கட்டபொம்மனின் வீரத்தையும் தியாகத்தையும் நினைக்கும் போதெல்லாம் தவிர்க்க முடியாமல் துரோகிகள் எட்டப்பனும், தொண்டைமானும் சேர்ந்தே நினைவுக்கு வருகின்றனர். அதே போலத்தான் நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப் பெரும் மக்கள் எழுச்சியை நினைக்கும் போது கூடவே துரோகிகள் ஆர்.ஜே. பாலாஜி, ஆதியும் வருகிறார்கள். எப்படி வரலாறு தொண்டைமானை காறி உமிழ்கிறதோ அதே போல இவர்களையும் வரலாறு காறி உமிழும். போராட்டக்காரர்கள் துரோகிகளுக்கு தந்த செருப்படியைப் பாருங்கள் பகிருங்கள்.

 

  1. சினிமாகாரனால் சீரழிந்த தமிழன் ஏதோ ஒரு பொறியில் மலையாய் எழுந்தான்.எழுந்த கணமே அதே சினிமாகாரனால் சிதறிப்போனானே…நினைக்க நினைக்க நெஞ்சு பொறுக்கவே இல்லை.இன்னும் வட்டமடிக்கிற கழுகாய் சில சினிமாகாரன் நீலிக்கண்ணீர் வடித்து சுற்றி வருகிறான்.இனியாவது தமிழன் இவனை நெறுங்க விடாமல் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

  2. சீர்கெட்ட சினிமாகாரனுக்கு தமிழனின் தேவை தெரியுமா?தமிழனின் பிரச்சினை தெரியுமா?தமிழனுக்கு இருக்க வேண்டிய சிந்தனை புரியுமா?சினிமாவில் புகுந்து கோடிகளில் புரளும் முன்னணி நடிகனின் வாழ்க்கை தளமே வேறு.வறுமைக்கு அடிபட்டு முன்னுக்கு வந்தவனே அனைத்தையும் மறந்து வேறுவடிவம் எடுத்து விடுகிறான்.ஜல்லிகட்டுக்கு வந்தவனின் முகரைகட்டையை பாருங்கள் பாலாஜியும் ஆதியும் சிம்புவும் தமிழ் இளைஞ்சனின் வடிவமாகவா தெரிகிறான்?காலையில் எழுந்ததும் வெளிநாட்டு மதுவில் வாய் கொப்பளிக்கிற கூட்டம் எந்த லச்சணத்தில் இருக்கும்?சென்னை முழுக்க காலையிலிருந்தே காவல் வெறிநாய்கள் பைத்தியம் பிடித்ததைப்போல கண்ணில் கண்ட அனைவரையும் பொளந்து கட்டுதுகள்.மதியவாக்கில் ஒரு தொலைகாட்சி விடாமல் எல்லா கேவலப்பட்ட நாய்களும் “ஆஜெ பாலாஜி மணவர்களை போராட்டத்தை விடச்சொன்னார்.லாரன்ஸ் மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வந்து கொண்டிருக்கிறார்”என்று ப்ரேக்கிங் நியூசாம்.ஒட்டு மொத்தமாய் பத்திக்கொண்டு வருகிறது. வெக்கங்கெட்ட நாய்களா கூடிய மாணவர்களில் பலருக்கு இருக்கும் பொது அறிவும் அரசியல் சமூக விழிப்புணர்வும் இந்த ஆதிக்கும் பாலாஜிக்கும் லாரன்ஸுக்கும் உண்டா?எவ்வளவு பொறுப்பற்று இதை ஒரு செய்தி என்று போடுகிறான்?

  3. அவசர சட்டம் கொண்டு வந்த பிறகு , போராட்டம் முடிந்தது என்று கூறியவர்கள் எப்படி துரோகி ஆவார்கள் ?

    “அவசர சட்டம் கொண்டு வருவேன் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார் அதனால் முடித்து கொள்வோம் ”
    “டில்லிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் அதனால் முடித்து கொள்வோம் ”

    என்றா கூறி விட்டார்கள் ?

    கம்ம்யூனிச கட்சிக்கு பிடிக்காதவர்கள் எல்லோருமே துரோகிகள் தான் என்னும் கோட்பாட்டின்படி துரோகிகளா?

    • இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அட்டவணை 9ல் இந்த சட்டம் சேர்க்கப்படாத வரையில் இந்த சட்டத்துக்கு எப்போதுமே பிரச்சனைகள் உள்ளது, நீதிமன்றத்தில் இந்த சட்டத்துக்கு எதிராக இராமன் வழக்கு தொடுத்தல் கூட இந்த சட்டம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படலாம் என்ற உண்மையை திரு ராமன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்… அத்தகைய நிலையில் அவரச சட்டத்துக்காக தான் நாம் போராடினோமா அல்லது நீதிமன்றத்தால் நிராகரிக்கமுடியாத வலுவான அட்டவணை ஒன்பதில் இடம் பெரும் நிரந்தர சட்டத்துக்காக போராடினோமா என்று இரமன் அவர்கள் முடிவு செய்துக்கொள்ளலாம் ! இப்ப சொல்லுங்க ராமன் போராட்டத்தை நடுவில் கைவிட குறுக்கே சால் ஓட்டியவர்கள் துரோகிகள் தானே?

    • இந்த இராமன் எப்பவுமே இப்படித்தான்….

      தான் யாரை ஆதரிக்கின்றாரோ அவர்களுடைய கருத்தை மட்டுமே படிப்பார்; பதிவும் செய்வார்.நாளையே அவர் ஒரு கம்யூனிஸ்டானாலும் இதையே செய்யநினைப்பார். ஆனால் கம்யூனிசம் அவரை சரியாக வார்த்தெடுக்கும் என்பது தான் உண்மை….

      ஆதியையோ, இலாரன்ஸையோ கம்யூனிஸ்டுகள் மட்டுமா துரோகி என்றனர்….ஒட்டு மொத்த மாணவர்களும் தான் காறி உமிழ்ந்தனர். அவர்கள் சார்ந்த திரைத்துறையினரே(கரு.பழனியப்பன், இராம், சமுத்திரக்கனி, யுகபாரதி போன்றோர் உள்பட) காறி உமிழ்ந்தனர்.

      இராமன் இதையெல்லாம் படித்திருக்கமாட்டார் என்பது தான் என் கருத்து….

  4. “அவசரசட்டம் ஏற்றப்பட்டது அதனால் போராட்டம் முடிந்தது “என்று அந்த விலைபோனவர்கள் கூறவில்லை.தேசவிரோத சக்தி சமூகவிரோத சக்தி புகுந்து விட்டது என்று காவி பாம்புகளின் விஷத்தை தங்கள் வாய்களில் வாங்கி பத்திரிகையாளர்கள் முன் கக்கினார்கள்.மக்களின் பிரச்சினை என்று மக்களோடு மக்களாக இருந்து விட்டு முடியும் தருவாயில் ஆளும் வர்கத்தின் பக்கம் நின்று போராடிய மக்களை தேசவிரோதிகள் சமூகவிரோதிகள் என்றால் அவர்கள் யார்?இவர்கள் துரோகிகள் இல்லையென்றால் உலகில் துரோகிகள் என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லை.

  5. தோழர்களே!
    நம்முடைய போராட்டம் மிகப்பெரிய வெற்றிதான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
    அடுத்து நாம் செய்ய வேண்டியது இதே மனநிலையை தொடர்வதுதான். மறதிக்கு ஆட்பட்ட தமிழர்களாக இருந்தோம் என்றால் வீழ்வது நிச்சயம். சினிமாவை மற. அன்னிய பொருள்களை துற. பண்பாட்டை நினை. தமிழைப்படி.தலை நிமிர். நம்மை நாம் மறந்தால் நாம் ………..நீ என்னதான் ஆங்கிலத்தை நுணி நாக்கில் பேசினாலும் உன்னை ஆங்கிலேயன் என யாரும் ஏற்றுக்கொள்ள மாற்றார்கள். அதே நிலை தான் இந்தியாவிலும். நீ இந்தி படித்தாலும் நீ தமிழந்தான்.

Leave a Reply to meeran sahib பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க