privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க"மிக்சர்" பன்னீர் "மிஸ்டர்" பன்னீர் ஆனது எப்படி ?

“மிக்சர்” பன்னீர் “மிஸ்டர்” பன்னீர் ஆனது எப்படி ?

-

panneer selvam  (2)
பன்னீருக்கு எப்படி ‘தைரியம்’ வந்தது?

ன்னீருக்கு எப்படி ‘தைரியம்’ வந்தது?

பன்னீருக்கு எப்படி ‘சுயமரியாதை’ உணர்வு வந்தது?

கொஞ்ச நாளுக்கு முன்னர்தான் ”மிக்சர் பன்னீர்” என்று கடற்கரையே அவரைக் கழுவி ஊற்றியது.

அப்படிப்பட்ட பன்னீர் இன்றைக்கு தைரியமாகப் பேசுகிறார், கேள்வி கேட்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன?

ஏனென்றால், தமிழக மக்கள் கேள்வி கேட்பதை அவர் பார்த்துவிட்டார். காற்று வீசும் திசையைப் பார்த்து விட்டார்.

000

“குறுக்கு வழியிலே ஆட்சியைப் பிடிச்ச குலேபகாவலி சசிகலா” என்று மெரினாவில் கோவன் பாடத் தொடங்கியதும் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

போயஸ் தோட்ட வீதியிலேயே சசி கும்பலை எதிர்த்துப் பாடுகிறார் ஒரு பெண்.

சசிகலாவை தெருவில் போட்டுத் துவைக்கிறார்கள் தமிழ்நாட்டுப் பெண்கள்.

அந்தப் பெண்கள் ஜெ மீது வைத்திருக்கும் பக்தி முட்டாள்தனமாக இருக்கலாம். ஜெயாவை சதி செய்து கொன்று விட்டதாக அவர்கள் கூறும் குற்றச் சாட்டு ஆதாரமற்றதாகவும் இருக்கலாம்.

ஆனால், அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

“70 நாட்களாக என்ன நடந்தது? எனக்கு பதில் சொல்” என்று கேட்கிறார்கள். அது சசிகலாவைக் கேட்கும் கேள்வி மட்டுமல்ல, சசிகலாவுக்கு துணை நின்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம், கவர்னர், மோடி, அப்போலோ சென்று வந்து சசிகலாவுக்கு சான்றிதழ் கொடுத்த கட்சித் தலைவர்கள் – ஆகிய அத்தனை பேரையும் பார்த்து கேட்கும் கேள்வி.

000

panneer selvam  (3)
பன்னீருக்கு எப்படி ‘சுயமரியாதை’ உணர்வு வந்தது?

“ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் போட்டுவிட்டோம் கலைந்து போ” என்கிறது போலீசு. “முடியாது. சட்டத்தைக் காட்டு, படித்துப் பார்க்காமல் எப்படி போக முடியும்?” என்று கேட்கிறார்கள் மாணவர்கள்.

“போலீசையே கேள்வி கேட்கிறாயா?” என்று ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கிறது போலீசு. “ஏன் அடித்தாய் எங்கள் பிள்ளைகளை?” என்று மீனவர்கள் கேள்வி கேட்கிறார்கள். மீனவர்களும் தாக்கப்படுகிறார்கள். “ஏன் அடித்தாய் மீனவர்களை என்று தமிழகமே கேள்வி எழுப்புகிறது“

அகிலா என்ற ஒரு பெண் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் வானதி சீனிவாசனும், போலீசு அதிகாரியும், புதிய தலைமுறை நெறியாளரும் தடுமாறுகிறார்கள். உளறுகிறார்கள்.

ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் உலவும் ஆளும் வர்க்க எடுபிடிகளின் சாயம் வெளுக்கிறது. மைக்கை நீட்டிக் கேள்வி கேட்பவர்களைப் பார்த்து, மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஊடக மாமாத்தனத்தின் மானம் கப்பலேறுகிறது.

மாணவர்களையும் இளைஞர்களையும் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று நினைத்துக் கொண்டு அறிவுரை சொன்ன லாரன்சு, ஹிப்ஹாப் ஆதி முதல் ரஜனிகாந்த் வரை அத்தனை சினிமாக்காரர்கள் முகத்திலும் அச்சம் படர்கிறது. ரிலீஸ் ஆனால் அசிங்கமாகி விடுவோமோ என்று “சிங்கம்” பம்முகிறது.

000

து பன்னீருக்கு வந்த தைரியம் அல்ல நண்பர்களே, தமிழ் மக்களுக்கு வந்திருக்கும் தைரியத்தின் விளைவு. பன்னீருக்கு சுயமரியாதை உணர்வு வந்துவிட்டதாக நினைக்காதீர்கள். இது தமிழக மக்களிடம் பொங்கிய சுயமரியாதை உணர்வின் விளைவு.

எல்லா எம்.எல்.ஏக்களும் மன்னார்குடி மாபியாவை ஆதரித்தாலும், தமிழகமே அவர்களை எதிர்க்கிறது என்பது பன்னீருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. இனி குனிந்தால் லாபமா, நிமிர்ந்தால் லாபமா என்று கூட்டிக் கழித்துப் பார்த்தார் அமாவாசை – நிமிர்ந்து விட்டார்.

000

panneer selvam  (1)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிக்சர் பன்னீரை விட அதிகமாகக் கழுவி ஊற்றப்பட்டவர் மோடி.

ல்லிக்கட்டு போராட்டத்தில் மிக்சர் பன்னீரை விட அதிகமாகக் கழுவி ஊற்றப்பட்டவர் மோடி. பன்னீரோடு சேர்ந்து கரையேறிவிடலாம் என்று பார்க்கிறது சங்க பரிவாரம். மன்னார்குடி மாபியாவிடமிருந்து தாங்கள்தான் தமிழகத்தைக் காப்பாற்றியது போலக் காட்டுவதன் மூலம், காவிரி உள்ளிட்ட எல்லா துரோகங்களையும் மறைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யும்.

அம்மா ஆன்மாவுடன் பன்னீர் பேசிய காட்சி என்பது ஏ, பி, சி – மூன்று ஏரியாக்களிலும் நூறு நாள் ஓடும். இனிமேல்தான் இருக்கிறது படத்தின் காமெடி டிராக். சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்றும், அந்தக் கட்சியின் ஜனநாயக உரிமை என்றும் வக்கணை பேசிய யோக்கியர்களெல்லாம் “அது போன மாசம்” என்று சமாளிப்பார்கள். “உஸ்ஸ்… யப்பா…. எப்டியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியிருக்கு” என்று தெனாய்ஞ்சு போவார்கள்.

அல்லது முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு “மாநில உரிமை” என்று காமெடி பண்ணுவார்கள். உடனே “ஊழல் என்ன மாநில உரிமையா” என்று பாஜக நாராயணனும், வானதி சீனிவாசனும் தகரத்தில் ஆணியால் கீறியது போலக் கத்துவார்கள்.

000

ன்னீர் பேசியிருக்கும் எதுவும், யாருக்கும் புதிய விசயமல்ல. பன்னீர் பேசி விட்டார் என்பது மட்டும்தான் புதிய விசயம்.

இரவு முழுவதும் வெள்ளை வேளேரென்ற சொகுசு கார்கள் வரிசை வரிசையாக போயஸ் தோட்டத்தை மொய்க்கின்றன. காருக்குள்ளேயிருந்து மடிப்பு கலையாத மினிஸ்டர் ஒயிட்டில் பன்றிகள் பரபரப்பாக இறங்குகின்றன. இது “வந்தனோபசார கடைசி ஆட்டம்”, இந்த நான்கு ஆண்டுகளுடன் கதை முடிந்தது என்று எம்.எல்.ஏ க்கள் எல்லோருக்கும் தெரியும்.

மிச்சமிருக்கும் நான்கு வருசம் சசிகலாவுடன் இருப்பதா, அதற்குப் பிந்தைய எதிர்காலத்தை யோசித்து இப்போதே தாவுவதா என்பதுதான் அவர்கள் எல்லோருடைய கவலையும்.

சசிகலாவா, ஸ்டாலினா, பாரதிய ஜனதாவா – யாருக்கு “பொக்கே” கொடுத்து கும்பிடலாம். என்பது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடைய கவலை.

இனி, இவர்களெல்லாம் தங்களுடைய கவலையை மக்களுடைய கவலையாக மாற்றுவார்கள். அதாவது திருடர்கள் தங்களுடைய கவலையை, பறிகொடுத்தவர்களான நம்முடைய கவலையாக மாற்றுவார்கள்.

அந்த  *$#*#$*  வேலையை ஊடகங்கள் செய்யும்.

000

“கவர்னர் என்ன செய்வார்? மோடி என்ன செய்வார்? ஸ்டாலின் என்ன செய்வார்” என்று விவாதங்கள் நடக்கும்.

“பன்னீர் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக சொல்லி விட்டாரே, இதை கவர்னர் ஒப்புக்கொள்வாரா?” “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீருக்கு டயம் கொடுப்பாரா அல்லது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பாரா?” “ஜனாதிபதி ஆட்சி வருமா? தேர்தல் வருமா?”

“அரசியல் சட்டத்தின் 9999(அ) பிரிவு என்ன சொல்கிறது (ஓ) பிரிவு என்ன சொல்கிறது?” “இதற்கு முன் இதே போன்ற சூழ்நிலையில் அரியானாவில் கவர்னர் என்ன செய்தார், கர்நாடகாவில் என்ன செய்தார், வெங்காயத்தில் என்ன செய்தார்?”

“குதிரை பேரம் நடக்குமா? பன்னீரை ஸ்டாலின் ஆதரிப்பாரா? அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவார்களா? எம்.எல்.ஏ க்களை கடத்துவார்களா? ஒரு எம்.எல்.ஏ வின் விலை என்ன? எந்த சாதி எம்.எல்.ஏ எந்தப் பக்கம் போவான்?” – இப்படி விவாதங்கள் நடக்கும்.

இதற்கு அன்றாடம் பத்து வல்லுநர்கள், ஆர்வலர்கள், நிலைய வித்வான்கள் பவுடர் போட்டுக் கொண்டு, நாக்கைத் தீட்டிக்கொண்டு தயாராக இருப்பார்கள். திருவிழா சீசன் கரகாட்ட செட் போல, இந்த சானலுக்கும் அந்த சானலுக்கும் பறந்து கொண்டிருப்பார்கள்.

000

panneer selvam  (1)_1
பன்னீருடைய கவலையோ, சசிகலாவின் கவலையோ, ஸ்டாலினுடைய கவலையோ, மோடியின் கவலையோ நம் கவலை அல்ல

ன்னீருடைய கவலையோ, சசிகலாவின் கவலையோ, ஸ்டாலினுடைய கவலையோ, மோடியின் கவலையோ நம் கவலை அல்ல.

அம்மா சமாதியில் உருக்கமாகப் பேசும் பரிதாப பன்னீரைப் பார்க்கும்போது, மணல் மாஃபியா சேகர் ரெட்டியுடன் பன்னீர் நிற்கும் திருப்பதி மொட்டை படத்தையும், பன்னீரின் சகோதரர்தான் தமிழக மணல் கொள்ளைக்கு மன்னார்குடி மாபியாவால் நியமிக்கப்பட்ட இன்சார்ஜ் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று சசிகலாவுக்கும் அதிமுகவின் ஜனநாயக உரிமைக்கும் பரிந்து பேசும் முன்னாள் மக்கள் நலக்கூட்டணியினர்தான், “அதிமுகவின் வெற்றி பணம் கொடுத்து, தில்லுமுல்லு செய்து பெறப்பட்ட முறைகேடான வெற்றி” என்று பேசியவர்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று மன்னார்குடி மாபியாவிடமிருந்து தமிழகத்தை காக்க வந்த தேவதூதர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள முனைகின்ற பாஜகவினர்தான், சசிகலாவையும் ஜெயாவையும் ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற அரும்பாடு பட்டவர்கள், காவிரியைத் தடுத்து தமிழக விவசாயிகளின் குடி கெடுத்தவர்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

000

“மிக்சர்” பன்னீர்செல்வம், “மிஸ்டர்” பன்னீர்செல்வம் ஆகிவிட்டார் நாம் “மிக்சர் தமிழ்மக்கள்” ஆகிவிடக் கூடாது. எச்சரிக்கை !

லை முதல் கால் வரை கிரிமினல் மயமாகிவிட்ட இந்த அரசமைப்புக்குள் யாராவது ஒருவரை அதிகாரத்தில் அமர்த்திவிட்டு பிறகு ஏமாந்து விட்டதாகப் புலம்பியது போதும்.

மெரினா மாணவர்களும் இப்படி யோசித்து போராட்டத்தை ஏதாவது ஒரு கட்சியிடம் ஒப்படைத்திருந்தால், நிச்சயமாக ஏமாற்றப்பட்டிருப்பார்கள். வாடிவாசல் திறந்திருக்காது.

“உன் கட்சி, சட்டம், கோர்ட்” பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. “வாடிவாசலைத் திறக்காமல் வீடுவாசல் போவதில்லை” என்று தமிழகமே தெருவில் நின்றதன் விளைவாகத்தான் வாடிவாசல் திறந்தது. பொறுப்பை கட்சிகளிடம் ஒப்படைத்து விட்டு நாம் வீட்டுக்குப் போயிருந்தால், வாடிவாசல் திறந்திருக்காது.

“அதிகாரத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்வதுதான் ஜனநாயகம்” என்று புரிந்து கொண்டோமானால், புதிய புதிய வாயில்கள் திறக்கும்.

“மிக்சர்” பன்னீர்செல்வம், “மிஸ்டர்” பன்னீர்செல்வம் ஆகிவிட்டார்

நாம் “மிக்சர் தமிழ்மக்கள்” ஆகிவிடக் கூடாது. எச்சரிக்கை !

  • சூரியன்
  1. கட்டுரையின் ஆரம்பம் முதல் அடி வரை உண்மை.மன்னார்குடி மா பியா வெறுக்கத்தக்கதாகத்தான் இருந்தது.பார்ப்பதற்க்கே பத்திக்கொண்டு வந்தது.ஆனால் பன்னீரின் கழுத்தை பாம்பல்லவா(பிஜேபி)வளைத்தது போல் தெரிகிறது.சும்மா கிடக்கிற திமுகவை மன்னார்குடியும் அடிமைகளும் சம்மந்தமில்லாமல் கைகாட்டுகின்றன.ஆக இவஙளின் அச்சத்தைப் பார்த்தால் தமிழ்நாடே காவிகளால் வளைக்கப்பட்டு விட்டதோ என்ற அச்சமும் வருகிறது.மாற்றப்படாத கவர்னர்.இவ்வளவு பரப்ரப்பிற்க்கும் இன்னும் வந்து சென்னையில் இறங்கவில்லை.ஜெயலலிதா இறந்ததிலிருந்து பஜக காரன் களின் அத்துமீறிய மாநில தலையீடு (தலைமை செயலக ரெய்டு உட்பட)இன்றைக்கு “அமைதிப்படை அமாவாசையின்” திடீர் எழுச்சி அனைத்தும் தில்லியின் பின்புலம் கண்டிப்பாய் இருக்கும் என்பதைத்தான் காட்டுகிறது.ஆனாலும் போயஸ்கார்டனை களவாடியதுகள் ஏன் தேவையில்லாமல் திமுகவை போய் குதறுகிறது.உண்மை தெரிந்தும் கூட அதை சொல்லமுடியாத அச்சமா?இது எவ்வளவு பெரிய ஆபத்து?…குழப்புகிறது

  2. யாருப்பா அது..
    .கார் டயர், டூயூப் வழிபடுவோர் நலச் சங்க
    தலைவனை நக்கலடிக்கறது?

  3. கூன் விழந்த பன்னீரின் முதுகுக்கு யார் முட்டுகுடுத்து நிமிர்த்தியது?
    சசிகலா திமுக-வை குற்றம்சாட்டினாலும் நடப்பதை பார்த்தால் அப்படி தெரியவில்லையே

    • கூன்பாண்டியன் – மிக்சர் பண்ணீருக்கு முட்டுக் கொடுத்து நிமிர்த்தியது பாஜக தான் ..

      திருடனுக்கு தேள் கொட்டிய சசிகலா, பாஜகவைக் கைகாட்ட முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதியும் பாஜக சொடக்குக்கு ஆடுவதும் தெரிகிறதே..

  4. பன்னீர் செல்வத்தினால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே. பன்னீரின் மூலமாக சசிக்கு ஒரு நெருக்கடியை கொடுக்கப் பார்க்கிறது பாஜக. சசியின் முடிவை வைத்துதான் பன்னீரின் அரசியல் எதிர்காலம்.

  5. மைத்திரேயன் துணையிருப்பு,தீபாவுக்கு அழைப்பு வேற என்ன சொல்ல.பக்கபலம் பார்ப்பன பாசிஸ்டுகளின்,ஆர்.எஸ்.எஸ்.பாஜக காவிப்பரிவாரம் கட்டி அணைக்கின்றதோ. இது என்ன ஆலிங்கனமோ?

  6. பன்னீரை நிமிர்த்தும் எந்த கோலும் திமுகவிடம் இல்லை என்பது தெரிய எந்த பெரிய அரசியல் அறிவும் தேவையில்லை.வகையாக தமிழகம் காவிகளிடம் சிக்குவதைப்போலவே இருக்கிறது.இன்றைக்கு எல்லா கட்சிகளும் பன்னீரை ஆதரிப்பது போலவே ஸ்டாலினின் கருத்தும் இருக்கிறது.அதிமுக அடிமைகள் அடிவாங்கி கொண்டே அடிப்பவனை விட்டுவிட்டு அடிப்பவனுக்கு பயந்துகொண்டு சும்மா கிடப்பவனின் மேல் பாயவதில்தான் நம் மூளைக்குள் தந்தி அடிக்கிறது.கருணாநிதி தெம்போடு இருந்திருந்தால் திமுகவின் அணுகுமுறை இப்படி இருந்திருக்காதோ?

  7. சசிகலா தவறு செய்துவிட்டார், பன்னிர் செல்வதை அருகில் வைத்து கொண்டு காரியத்தை சாதித்து இருக்க வேண்டும், பன்னிருக்கு இப்போது இருக்கும் கட்சி பதவியையும், ஆட்சியிலும் முக்கிய பங்கையும் தொடர்ந்து கொடுத்து இருக்க வேண்டும், பிறகு படிபடியாக பதவிகளை பறித்து அவரை வெளியேற்றி இருந்தால் சசிகலாவிற்கு பிரச்னை இருந்து இருக்காது… அரசியல் சாணக்கியம் தெரியாதவராக தவறான அரசியல் செய்து இருக்கிறார்கள் சசிகலாவும் நடராஜனும். நம் கருணாநிதி இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் ரொம்ப தெளிவாக செய்வார்.

    ஜெயலலிதா இருந்த போதே சசிகலா தான் அதிமுக கட்சியின் அனைத்து மட்டங்களிலும் அதிகாரம் செலுத்தினார், இப்போது இருக்கும் MLAகளில் பெரும்பாலானவர்கள் சசிகலாவால் வந்தவர்களே அதேபோல் பணபலமும் சசிகலாவிடம் தான் இருக்கிறது, என்ன தான் பன்னிர் செல்வம் முட்டி மோதினாலும் அவரால் மீண்டும் முதல்வராக வர முடியாது, அம்மா திமுக என்று ஒரு கட்சியை வேண்டுமானால் அவரும் தீபாவும் உருவாக்கி சில காலம் அரசியலில் இருக்கலாம்

    முன்பு சசிகலா செய்ததை இப்போது நடராஜன் செயல்படுவார் என்று நினைக்கிறேன், extra consititutional ஆதாரிடியாக, அதுவும் நடராஜன் இந்திய விரோத சக்திகளோடு நட்பில் இருப்பவர், அது நிச்சயம் தமிழக நலனுக்கு நல்லது இல்லை.

  8. இது மாதிரி ஒரு (முன்பே திட்டமிடப்பட்ட) நிகழ்வு நடக்கும், அதில் ஆளுநருக்கும் ஒரு பெரும் பங்கு இருக்கும், குட்டையை குழப்பிவிட்டு, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம், என்று எண்ணியே, தமிழகத்திற்கு என்று தனியே ஒரு ஆளுநரை நியமிக்காமல், உடம்பு நிறைய மூளையுடன் (என்னது, அதுக்கு பேரு கொழுப்பா?) ஒரு மூடர் கூட்டம் முட்டித்திரிகிறது. ஆளுநர் இருந்தால் தானே உடனுக்குடன் முடிவெடுக்க முடியும், இல்லாவிட்டால் கிடைக்கும் இடைவெளியில் குழப்பங்களை ஏற்படுத்தி குளிர்காய அந்த குள்ள நரிக்கூட்டம் குழி பறிக்கிறது.

    இதுல, ஒரு நார(வாயி) காலைல தொ.கா விவாதத்தில ஆளுங்கட்சிய பாத்து கேட்குது, நீங்க தமிழ்நாட்டுக்கு தனி ஆளுநர் வேணும்னு இதுவரைக்கும் கேட்டிங்களா, ஏன் கேக்கல? ஏல நார(வாயி), கேட்டா மட்டும் நீ செஞ்சுற போறியா? காவிரல தண்ணி கேட்டோம், குடுத்தியா? வார்தா புயல் நிவாரணம் கேட்டோம், குடுத்தியா? தமிழ்நாட்டுக்கு வறட்சி நிவாரணம் கேட்டோம், குடுத்தியா? சரி அத விடு, ஆளுநரை கூட கேட்டா தான் குடுப்பியா? ஆளுநருன்றவரு யாரு, இந்திய மத்திய அரசோட பிரதிநிதி, அவரையே கேட்டாத்தான் குடுப்பேன்னா, அப்ப பாக்கி விசயத்துல தமிழ்நாட்ட பத்தி என்ன நீ என்ன நெனச்சுக்கிட்டு இருக்கே, தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதின்னு நெனக்கிரியா, இல்ல (நீ இங்க எடுபடாதால) வேற எதுவுமா?

    அப்புறம், அந்த அடிமைகளை பற்றி ஒரே ஒரு கருத்து, நல்லா பம்முறீங்கடா…. இப்பவே இந்த பம்மு பம்முனா, இனிமே நீங்கல்லாம், ஆட்சிக்கு வந்து தமிழர் விரோத இந்த மத்திய அரசுக்கு மண்டையாட்டும் கூட்டமா மாற போறீங்கன்னு நல்லா தெளிவா தெரியுது. இன்னும் நாலு வருஷம் தான், ஞாபகம் இருக்கட்டும்.

  9. // “அதிகாரத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்வதுதான் ஜனநாயகம்” //

    தவறு . அதன் பெயர் அராஜகம் . வாக்களிக்கும் போது ஜாதி மதம் பணம் பார்க்காமல் நல்லவர்களாக தேர்ந்தெடுத்தால் போதும் .

    கட்சி தலைவருக்கும் சின்னத்திற்கும் வாக்கு அளிக்காமல் , தன தொகுதியில் நிற்பவரின் தகுதியை பார்த்து வாக்களிக்க வேண்டும்

      • 7 கோடி மக்களில் 234 யோக்கியர்களை கூட உங்களால் அடையாளம் காண முடியவில்லை என்றால் தவறு யாரிடம் இருக்கிறது ? 120 கோடி மக்களில் வெறும் 543 நல்லவர்களை உங்களால் அடையாளம் காணமுடியவில்லை என்றால் என்ன அர்த்தம் ? விட்டால் 120 கோடி இந்தியர்களையும் அயோக்கியர்கள் என்று சொன்னாலும் சொல்விர்கள் போல.

        • கோவனம் கட்டாத ஊரில் கோவனம் கட்டியவன் பைத்திய்க்காரன் என்பது போல என்னதான் யோக்கியவான்களஒ தேர்ந்தெடுத்து அனுப்பினாலும் சாக்கடையான இந்திய அரசியல் அமைப்பில் அவனும் சாக்கடையாக பரிணமித்தே வெளிவருவான். முதலில் இந்திய அரசியல் அமைப்பு முறைமையையே மாற்றியமைக்க வேண்டும். சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். சாதிகளை ஒழிக்கவேண்டும். பார்ப்பனியத்தை ஒழித்துக் கட்டவேண்டும்.

          • அம்பேத்கர், நேரு போன்ற பெரியவர்கள் உண்டாக்கிய இந்திய அரசியல் அமைப்பு கங்கை போலவும், காவேரி போலவும் எனக்கு தெரிகிறது, அதில் சில அசுத்தங்கள் கலந்து இருக்கலாம் அதை நல்லவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் தான் சுத்தம் செய்ய முடியும்.

        • யோக்கியர்கள் தேர்தலில் நிற்பதில்லை மணி மாமா அவர்களே ..

          ஏனெனில் அவர்களுக்குத் தெரியும், இங்கு நிலவுவது இரட்டை ஆட்சி முறை. இங்கு தேர்தலில் நிற்பதனால் தீர்வு கிடையாது என்று.

          மக்களை அயோக்கியர்களாகவும், முட்டாள்களாகவும் சித்தரிப்பது உங்களது பார்ப்பன பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வேலை. மக்களின் கையில் தான் அதிகாரம் இருக்க வேண்டும். அது ஒரு முறைப்படுத்தப்பட்ட மக்கள் எழுச்சியில் இருந்து தான் வரும் என்பதே யதார்த்தம்.

          இதெல்லாம் புரிந்தாலும் புரியாதது போலத் தான் மீண்டும் வந்து புலம்பப் போகிறீர் மணி மாமா அவர்களே.. பரவாயில்லை.. நீங்கள் நேரடியாக இந்தப் பார்ப்பன பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலில் இல்லாதவராக இருந்தால் உங்கள் சுற்று வரும் போது உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்.

          ஒரு கட்டுரையோ… கவிதையோ … யாரோ ஒரு புரட்சியாளர் சொன்னதைச் சொல்கிறேன், கேளுங்கள்..

          அவர்கள் யூதர்களைக் கொன்றார்கள்..
          நான் கண்டுகொள்ளவில்லை – ஏனெனில் நான் யூதன் அல்ல..
          அவர்கள் கம்யூனிஸ்டுகளைக் கொன்றார்கள்..
          நான் கண்டுகொள்ளவில்லை – ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல..
          அவர்கள் தொழிலாளர்களைக் கொன்றார்கள்..
          நான் கண்டுகொள்ளவில்லை – ஏனெனில் நான் தொழிலாளி அல்ல..
          இப்போது அவர்கள் என்னைக் கொல்ல வருகிறார்கள்
          எனக்கு அடைக்கலம் கொடுக்க யூதர்களும் இல்லை.
          எனக்காக போராட கம்யூனிஸ்டுகளும் இல்லை.
          என்னைக் காக்க தொழிலாளர்களும் இல்லை.

          ஒரு வேளை நீங்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங்க்பரிவார் உள்ளிட்ட மக்கள் விரோத அமைப்புகளில் இல்லை என்றால் மேலே குறிப்பிட்டது உங்களுக்குத் தான் என்பதை நினைவூட்டுகிறேன். இல்லை பாஜக , ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் இருக்கின்றீர்கள் என வைத்துக் கொண்டால், உங்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள் மணிகண்டன்.

          • யோக்கியர்கள் தேர்தலில் நிற்க தான் செய்கிறார்கள் ஆனால் நாம் தான் சரியான நபர்களை தேர்ந்தெடுப்பது இல்லை, நல்லவர்கள் தான் எங்கள் பிரதிநிதியாக வர வேண்டும் என்று மக்கள் ஆராய்ந்து வாக்கு அளிக்க ஆரம்பித்தால் நிச்சயம் அரசியல் கட்சிகளும் நல்லவர்களை தேடி நிறுத்தும், அப்படி நல்லவர்கள் வரும் போது அது அதிகார மட்டத்திலும் பிரதிபலிக்கும்.

            ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நல்லவர்களாக இருந்தாலும் சில கூட்டங்கள் வேண்டும் என்றே அவர்கள் மீது அவதூறுகளை பரப்பி, நாட்டில் பிரச்சனைகளை உருவாக்கி பிறகு ஆட்சி சரியில்லை, சட்டம் சரியில்லை என்று சொல்வார்கள்.

            ********************

          • \\பாஜக , ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் இருக்கின்றீர்கள் என வைத்துக் கொண்டால், உங்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள் மணிகண்டன்../..
            சமயங்களில் அவர்களே அதாவது சங் கும்பலே கூட போடுவார்கள் ,மத்திய பிரதேசத்தின் சுனில் ஜோசியை குஜராத்தின் ஹரன் பாண்ட்யாவை போட்டா மாதிரி ..

    • பீச்சாங்கை விரலை நீட்டி அஞசு வருசத்துக்கு ஒரு ஆளக் காட்டு அதுதான் சனநாயகம்-ன்னு சொன்னா எத்தனை கழுவி நீட்டினாலும் சீச்சீ அதுல அந்த வாடதான் அடிக்கிது.

      ஆனா நெஞச நிமித்தி முஷ்டிய உயர்த்தினா, முதுகுல சவாரி செய்தவன் மல்லாக்க விழுந்து அய்யோ அராஜகம் அய்யோ அராஜகமுன்னு கூச்சல் போடுறான்.

  10. கட்டுரையாளர் பன்னீர் தமிழக மக்களின் எழுச்சியின் மீதான நம்பிக்கையின் பேரில் தலை நிமிர்த்தியிருக்கிறார் எனக் கூறுகிறார்.
    பன்னீருக்கு அவ்வளவு அறிவு இருக்குமா என்பது ஒரு கேள்வி, பன்னீருக்கு தனியாக அவ்வளவு துணிவு வந்திருக்குமா என்பது மற்றொரு கேள்வி.

    ஆளுநர் மும்பைக்கு திடீர் விஜயம் போனது, கோவை விழாவைப் புறக்கணித்தது, திடீரென்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு ஜெயா சொத்துக்குவிப்பு வழக்குக்கு தீர்ப்பு சொல்ல வேண்டும் எனத் தோன்றியது, முதல்வரின் ஆலோசகர்களாக இருந்த அரசு அதிகாரிகள் திடீரென்று பதவி விலகிக் கொண்டது,இப்போது பன்னீர் இவை அனைத்தும் பாஜகவுக்கு சசிகலா கும்பலுக்கு இடையே ஆட்சியையும் கட்சியையும் கட்டுப்படுத்த நடக்கும் போட்டியில் பாஜகவின் காய் நகர்த்தல்கள்.

    பன்னீரைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்குத் தான் சேகர் ரெட்டி வீட்டிற்கு விடப்பட்ட ரைடு என்பதையும், இப்போது பன்னீருக்கு ஆதரவு கொடுத்த நத்தம் வீட்டில் ஏற்கனவே நடத்தப்பட்ட ரைடு என்பதையும் இணைத்துப் பார்க்கும் போது, இது திட்டமிட்ட பாஜக கும்பலின் லீலைகளே..

    பன்னீருக்கு சுட்டுப் போட்டாலும் அவ்வளவு அறிவும் , துணிவும் வராது .

    • எல்லாம் சரி தான் பெரும்பான்மை நிரூபிக்க 234/2+1 எண்னிக்கையில் எம் எல் ஏஸ் ஓட்டு போடனுமே எப்படி இவ்வளவு உருதியாக இருக்கார் பன்னீர் பீச்சபீ ட ஒரு எம் எல் ஏ கூட இல்லயே, வேற ஏதாவது சாகசம் பன்னுவாளா அவா இல்ல கவர்னர் ஆட்சியா ஒரு எழவும் புரியல இப்ப யாரு அதிகாரத்துல இருக்குறா நீதி மன்றமா ,கவ்ர்னரா ,பன்னீரா

      பாஜாக கும்பல் லீலைனா நம்பிக்கை வாக்கெடுப்பு பத்தி கவர்னர் என்ன சொல்லுறாருனு பார்த்தாதான் தெரியும் கோட்டைக்குள் குத்து வெட்டு நடக்கும்னு சொன்னது சரியா போச்சு

  11. திமுக மிக விழிப்போடும் தொலைநோக்கோடும் சிந்திக்க வேண்டிய நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது.மிகப்பெரிய சூழ்ச்சி பின்னப்பட்டுக்கொண்டிருக்கலாம். அற்ப அரசியல் ஆதாயத்திற்க்காக உடனடி பலனை எதிபார்த்து முடிவை எடுத்தால் மிகப்பெரிய கைசேதத்தை தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும்.திமுகவிற்க்கான எதிர்காலம் வெளிச்சமாய் இருக்கும் பொழுது மிக கவனமாக அடி எடுத்து வைக்க வேண்டும்.பன்னீருக்கும் நல்ல பிம்பம் ஒன்று உருவாகி இருக்கிறது.மன்னார்குடி மேல் உள்ள வெறுப்பும் அச்சமும், பன்னீர் உய்விக்க வந்த நாயகனாக உருவெடுத்திருக்கிறார்.இதையே வாய்ப்பாக கருதி எள்மையின் உருவாக தன்னை உருவகப்படுத்தும் பன்னீர் நிஜமாகவே அப்படி நடந்து காவிகளின் சூழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு வந்தால் தாராளமாய் தமிழர்கள் ஏறுக்கொள்வார்களே சண்டிராணி அரசிலால் வெறுப்புற்று இருக்கிற மக்களுக்கு மிகப்பெரிய மாறுதலை ஆறுதலை நல்குவதாக இருக்கும்…எதிர்பார்க்கலாமா பன்னீரிடம்?

    • திமுக மிக விழிப்போடும் தொலை நோக்கோடும் சிந்திக்க வேண்டிய-நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது. மிகப்பெரிய சூழ்ச்சி பின்னப்பட்டு கொண்டிருக்கலாம்.அற்ப அரசியல் ஆதாயத்திற்க்காக உடனடி பலனை எதிர்பார்த்து முடிவை எடுத்தால் மிகப்பெரிய கைசேதத்தை தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும்.திமுகவிற்க்கான எதிர்காலம் வெளிச்சமாய் தெரியும் இந்நேரத்தில் பொறுமையாய் அமைதிகாத்து எடுத்துவைக்கும் அடியில்தான் திமுக தமிழகம் இரண்டின் நலனும் அடங்கி இருக்கிறது.பன்னீருக்கும் நல்ல பிம்பம் ஒன்று உருவாகி வருகிறது.மன்னார்குடிகளின் மேல் உள்ள வெறுப்பும் அச்சமும் பன்னீரை உய்விக்க நாயகனாய் வெகுஜன மக்களை நம்பவைத்திருக்கிறது.இதையே வாய்ப்பாக கருதி எளிமையின் உருவாக தன்னை உருவகப்படுத்தும் பன்னீர் காவிகளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்து மக்களை நம்பி நிற்ப்பாராயானால் நிச்சயம் அதுவும் நன்மையே..பந்தா பகட்டு ஆணவம் வாய்ஜாலம் போன்றவற்றால் சலித்து போயிருக்கும் மக்களுக்கு இது மாறுதலையும் ஆறுதலையும் தரலாம்.எதிர்பார்க்கலாமா பன்னீரிடம்?

  12. நடப்பது நல்ல நாடகம் என்பது நன்றாகத் தெரிகிறது.ஆனால் அத்தனையும் உண்மையென்று மக்களுக்குத் தெரிந்து விட்டது. நடிப்பவர்கள் ஒரு பிரிவாகவும் மக்கள் ஒரு பிரிவாகவும் துல்லியமாகப் பிரிந்துவிட்டனர்.மீண்டும் மீண்டும் அரங்கேறும் நாடகங்கள் மக்களை மேலும் மேலும் எதார்த்தத்திற்குள் தள்ளுகிறது. நடிப்பையும் எதார்த்தத்தையும் இணைக்க முடியவில்லை.அப்படியானால் பிரச்சினை தீர ஒரே வழி நடிகர்களை, நாடகச் சூழலை ஒழித்துக்கட்ட வேண்டும்.மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்துச் சுவைத்துப் பார்த்துவிட்டார்கள் மெரினா எழுச்சியில்.ஆடிப்போன அதிகாரம் ஒப்பனையைக் கலைத்துவிட்டு அம்மணமாக கொலைக் கருவிகளோடு வந்துவிட்டது.காட்சி முடிந்து உண்மை பதிவாகிவிட்டது.மீண்டும் புதிய நாடகம்…மக்களே அதிகாரம் என்பது நாடகம் அல்ல.உண்மை.உணர்ந்துவிட்டோம் அல்லவா? வெற்றி வரை விடவேகூடாது என்பதுதான் எப்போதும் தேவை !

  13. காவி கூடாரத்திலிருந்து ஒரு குரல் வித்தியாசமாக கூவி குழப்புகிறதா?அதுதான் மூளைச்சூம்பிய சுப்பிரமணி குரல்.என்ன இருந்தாலும் பணத்திற்க்கும் பதவிக்கும் வாலாட்டி நிற்க்கிற அமைச்சர்களும் எம் எல் ஏக்களும் சசிகலா இதுவரை சசிகலா பக்கம்தான்.பிறகு ஏன் ரிஸ்க் எடுத்து பன்னீரை கொண்டு உட் கார வைத்து தம்முடைய குட்டு வெளிப்பட வேண்டும்?சசிகலாவே எச்சி எலும்புகளுக்கு ஆசைபட்டு சுற்றி வருபவைகளை வைத்து ஆட்சி செய்யட்டும்.அது நிலைக்காது.வழக்கும் வருகிறது.நீதிபதிகளைம் தங்கள் கைகளில் மக்களின் சசிகலா எதிர்ப்பும் தங்களுக்கு சாதகமாக இருக்கிறது.வேறு ஏன் அவசரப்பட்டு கொண்டை வெளியில் தெரியும்படியாய் பன்னீரை தூக்கி உட் கார வைக்க வேண்டும்?இந்த பாப்பார மூளையின் குதர்க்க மூளைதான் வித்தியாச குரலாய் கூவுகிறது.

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க