privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிருத்தாசலம் : MLA அலுவலக ஜெயா படம் உடைப்பு ! மக்கள் அதிகாரம்

விருத்தாசலம் : MLA அலுவலக ஜெயா படம் உடைப்பு ! மக்கள் அதிகாரம்

-

குற்றவாளி ஜெயாவின் படங்கள் மற்றும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயாவின் சமாதியை அகற்று ! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளனர்.

விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் (கோப்புப் படம்)

அதன் அடிப்படையில் இன்று 20.02.2017 விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள குற்றவாளி ஜெயா படத்தை அகற்றக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த அ.தி.மு.க குண்டர்கள் ரவுடிக் கூட்டத்துடன் தனக்கு பக்கபலமாக போலீசையும் சேர்த்துக் கொண்டு ‘அம்மா’ படத்துக்கு காவல் காத்தனர். இருப்பினும் பொதுமக்களும் தோழர்களும் தடையை மீறி உள்ளே நுழைந்து குற்றவாளி ஜெயாவின் படத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த படம் வீதியில் போட்டு நொறுக்கப்பட்டது. தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ உட்பட பல தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும் இப்போராட்டம் தமிழகம் முழுக்க தொடரும் என மக்கள் அதிகாரம் தோழர்கள் அறிவித்துள்ளனர் !

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பத்திரிக்கை, ஊடகம் மற்றும் சமூகவலைதளங்களில் செயல்படும் நண்பர்கள் இந்த செய்தியை பகிருங்கள் மக்களிடம் கொண்டு சேருங்கள்.

 

  1. மக்கள் அதிகாரம் செய்தது மிகவும் அராஜகமான செயல். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஜெயாவின் படங்களை எங்கும் வைக்க கூடாது, இதற்க்கு எதிராக போராட வாருங்கள் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு மட்டும் தான் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. அத்துமீறி ஒரு கட்சியின் அலுவலகத்திற்குள் சென்று போட்டோவை உடைத்தது மிகவும் வன்மையாக கண்டிக்க படவேண்டிய ஒன்று.

    • அது ஒன்றும் அ இ அ தி மு க வின் சொந்த அலுவலகம் அல்ல…. மக்கள் பணத்தில் கட்டபட்ட ஒரு தொகுதி MLAவின் அலுவலகம் தான் அது… அங்கு ஒரு ஊழல் குற்றவாளியின் படத்தை அதாங்க ஜெயாவின் படத்தை வைக்க என்ன உரிமை இருக்கிறது அந்த தொகுதி சட்ட மன்ற உறுப்பினருக்கு?

      கட்டுரையை படிக்காமல் தலைப்பை மட்டும் படித்துவிட்டு பின்னுட்டம் போடாதீர்கள் என்று பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்…

      • மணிகண்டன், இந்த வன்முறை அராஜகத்துக்கு விதிவிலக்குகளாக நீங்கள் கீழ் கண்ட நிகழ்வுகளை பட்டியல் இட்டால் பொருத்தமாக இருக்கும் அல்லவா?

        குஜராத் படுகொலைகள்

        பாபர் மசூதி தகர்ப்பும் அதன் பின் ஏற்பட்ட மதவெறிபடுகொலைகளும்

        • குஜராத்தில் பல முறை கலவரம் நடந்து இருக்கிறது (காங்கிரஸ் ஆட்சியிலும்) அதேபோல் குஜராத் கலவரத்தை பற்றி பேசும் போது அதை தூண்டிய கோதரா ரயில் எரிப்பு பற்றி மிக சுலபமாக உங்களை போன்ற ஆட்கள் மறந்து விடுகிறீர்கள் (அல்லது மறைத்து விடுகிறீர்கள்)

          பாபர் மசூதி இடிப்பு ஒரு exception என்றே நான் பார்க்கிறேன், இந்தியாவில் ஒரே ஒரு பாபர் மசூதி தான் இடிக்கப்பட்டு இருக்கிறது ************

          • ஒப்புதலுக்கு நன்றி மணிகண்டன்….. கலவரங்களில் இந்திய மக்கள் கொல்லப்படுவது எல்லாம் வன்முறையாக தெரியாத உங்கள் கண்களுக்கு ஒரு கிரிமினலின் படம் உடைத்து எறியப்டுவது மட்டும் வன்முறை அராஜகமாக தெரிகின்றதே அது எப்படி மணிகண்டன்?

            • வினவு கூட்டங்கள் செய்வது பாசிஸ்ட் வன்முறைகள்… ஒரு MLA அலுவலகத்தில் என்ன படம் வைக்கலாம் அல்லது வைக்க கூடாது என்று முடிவு செய்ய கூடியவர்கள் வன்முறைவாதிகள் அல்ல, நிச்சயம் இந்த மாதிரியான வன்முறை அராஜகங்கள் நாளைய தமிழக நலனுக்கு நல்லது இல்லை.

              என்னை பொறுத்தவரையில் ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை ************
              உலகில் எந்த ஒரு அமைப்பும் 100 சதவீதம் perfect இல்லை, அது கம்யூனிஸ்ட் ஆட்சியாகட்டும் அல்லது ஜனநாயக ஆட்சியாகட்டும் 100 சதவீதம் அனைத்தும் சரியாக நடக்கும் என்று சொல்ல முடியாது,

              இதில் ஜனநாயக அமைப்பில் தான் உண்மையில் மக்களின் குரலை கேட்க முடியும் நம் நாட்டு ஜனநாயகத்தில் சில குறைகள் இருந்தாலும் அதை சரி செய்து செம்மைப்படுத்தும் வேலையை தான் நாம் செய்ய வேண்டும் ஆனால் இந்த ஜனநாயக அமைப்பை குலைத்து வன்முறையை கொண்டு வரும் செயல் நிச்சயம் தவறு (ஹிந்து அமைப்புகளின் வன்முறையையும் நான் ஏற்கவில்லை) என்னை பொறுத்தவரையில் வினவு கூட்டங்களின் வன்முறை நாளைய தமிழகத்திற்கு (இந்தியாவுக்கே) நிச்சயம் ஆபத்தானது.

  2. ” அதிகாரம் ..? ” என்கிற ஒற்றை சொல்லுக்கு எத்தனை பலம் …! இந்த ஒன்றை கையில் வைத்துக்கொண்டு தானே அத்தனை “சொத்துகுவிப்பு — ஊழல்கள் — பழி வாங்குதல் — வேண்டப்பட்ட ஊழல்வாதிகள் வழக்குகளில் இருந்து விடுவிப்பு ” இன்னும்எவ்வளவோ நடக்கின்றன …. அந்த ” அதிகாரம் ” என்கிற சொல் — வார்த்தை உங்களுக்கு தேவைதானா — என்பதை எப்போதாவது நினைத்து பார்த்து இருப்பீர்களா … நண்பர்களே … ?

    ” செத்த பாம்பு ” ஜெயாவின் படத்தை உடைப்பதும் — புத்தகங்களில் உள்ள படங்களையும் — மற்ற இடங்களில் உள்ளதையும் நீக்கினால் எல்லாம் சரியாகி விடுமா … ? இதில் கலந்து கொள்கிற எவர்களிடத்தும் – ஜெயாவின் ஆட்சியின் போது அவரது படம் போட்டு வழங்கப்பட்ட இலவச ” மிக்சி – கிரைண்டர் – பேன் – சைக்கிள் – மடிக்கணனி போன்ற கருவிகள் — பொருள்கள் ” படத்தை உடைப்பது போலவே உடைத்து விட்டு தான் — தற்போது காரியமாற்றுகிறீர்களா … ?

    உயிரோடு திரியும் எண்ணிலடங்கா ஊழல் பெருச்சாளிகள் — பதவியில் கோலோச்சுவதை எப்போ போராடி நீக்க போகிறீர்கள் … ? அதற்கும் ஏதாவது ஒரு ரெடிமேட் பதிலாக அவர்களின் காலம் – நேரம் வரும்போது போராடுவோம் என்று சப்பைக்கட்டு கட்ட முனைவதும் வேடிக்கை தானே … அவர்களின் இறப்புக்கு பின்னும் — தீர்ப்புக்கு பின்னும் தான் செய்வோம் என்று கூறுவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம் ….

    பல்லாயிர கணக்கான இளைஞர் — இளைஞிகளை போதைக்கு அடிமையாக்கி — வீட்டு ஞாபகமே இல்லாமல் செய்து ” பஜனைப்பாட ” வைத்தும் — அந்த காவி வேடதாரிகள் பற்றி செய்திகள் — வீடியோக்கள் வெளிவந்ததும் அவர்களை ஒன்றுமே செய்யாமல் — அவர்களுக்கு அடிபணிந்து பத்ம விருதுகளை கொடுத்தும் — அவர்கள் நடத்தும் பஜனை விழாக்களில் கலந்துகொண்டும் திரிகிற ” உயர்ந்த பதவிகளில் ” உட்கார்ந்துகொண்டு கும்மாளம் இடுகின்றவர்களிடம் ” உங்களின் மக்கள் அதிகாரம் ” செய்யும் மறுப்பு நடவடிக்கை என்ன … எப்போது … ?

    பதவி ஆசையிலும் — ஊழல் வழக்குளில் இருந்தும் தப்பிக்க மத்தியில் ஆட்சியிலிருப்பவர்களின் ” காலை நக்கி ” தப்பித்து — பல முறை ஆட்சியில் இருந்த — இருக்கிற உயிரோடு இருக்கிற ஜென்மங்கள் படத்தை என்ன செய்யப்போகிறீர்கள் … ? நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் நாங்கள் போராடுவோம் என்று நீங்கள் கூறினால் — என்ன செய்யமுடியும் …. !!!

    • ஐயா, நீங்கள் அதிமுக காரர் என்றால் நேரடியாகவே குச்சி சுழற்றலாமே? ஏன் இந்த அட்வைசு அபத்தங்கள் எல்லாம்?
      //ஜெயாவின் ஆட்சியின் போது அவரது படம் போட்டு வழங்கப்பட்ட இலவச ” மிக்சி – கிரைண்டர் – பேன் – சைக்கிள் – மடிக்கணனி போன்ற கருவிகள் — பொருள்கள் ” படத்தை உடைப்பது போலவே உடைத்து விட்டு தான் — தற்போது காரியமாற்றுகிறீர்களா … ? // இந்த வரியில் நீங்கள் சொல்வது என்ன? இந்த இலவசப் பொருட்கள் எல்லாம் ஜெயாவின் பாக்கெட் மணியின் பரிசுப் பொருட்கள் இவற்றை பயன்படுத்தக் கூடாது என்பதுதான். அதன்படி மக்கள் பணத்தில் இருந்து வழங்கப்பட்ட மக்களுக்கு உரிய பொருட்களை ஏதோ அதிமுக கட்சி பொருள் என்று உங்களைப் போன்ற அம்மா அடிமைகள் வேண்டுமானால் கருதலாம்! மக்கள் கருத முடியாது. இருப்பினும் ஒரு அம்மா அடிமை கூட ஜெயா குற்றத்தை மறைப்பதற்கு விவாதிப்பதை நினைத்தால் உடைக்க வேண்டிய போரட்டம் நிறைய நடத்த வேண்டியிருக்கிறது போல!

      • குச்சியும் சுழற்றவில்லை — கோலும் தூக்கவில்லை — ” செத்த பாம்பு ஜெயா ” என்று கூறிய பின்னும் — அ தி.மு. க . என்று முத்திரை குத்த நீங்கள் எத்தனிப்பதும் — // ஒரு அம்மா அடிமை கூட ஜெயா குற்றத்தை மறைப்பதற்கு விவாதிப்பதை நினைத்தால் உடைக்க வேண்டிய போரட்டம் நிறைய நடத்த வேண்டியிருக்கிறது போல! // … ஜெயாவின் குற்றத்தை மறைத்தேனா … ? நானா … ? நல்ல தமாஷ் …. ! நடத்தத்தான் வேண்டும் — உடைக்க தான் வேண்டும் — உடைத்து விட்டு தான் — தற்போது காரியமாற்றுகிறீர்களா … ? என்று கேட்டு இருப்பதே நான்தான் –!! { தற்போது அதையும் செய்வதாக உங்கள் தளத்தில் செய்தி வந்துள்ளது } அதிகாரம் உள்ளவர்களிடம் — மற்றவர்கள் அடிமைகளாக தெரிவதில் ஒன்றும் வியப்பு இல்லை —
        எதார்த்தமா கேட்டு இருந்த பல வற்றிற்கு கூறாமல் — உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு — ஒரு கொள்ளைக்கூட்ட கட்சியின் முத்திரையை எனக்கு குத்தியிருப்பது — உங்களின் விருப்பம் என்றால் யார் என்ன செய்ய முடியும் !!
        காவி வேடதாரிகள் — கால் நக்கிகள் — போன்றவர்களும் ஊழலில் திளைத்து உயிரோடு உலாவி — மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு ஆலாய் அலைபவர்களும் — பலரின் கண்களுக்கு தெரியாத போது — ஓட்டரசியலை பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பவர்களும் நிறைந்த நாட்டில் — இனி விவாதிப்பதில் பயனில்லை — தங்களுக்கு ஏற்காத கருத்துக்களை பதிவிட்டதற்கு — தாங்கள் குத்திய வலிமையான முத்திரையுடன் விடை பெறுகிறேன் … !!!

        • ஐயா, விடைபெறுவதற்கு முன் தாங்கள் கூறியதற்கு பொருள் கூறுமாறு மெத்தப் பணிவுடன் கோருகிறோம்!
          //ஜெயாவின் ஆட்சியின் போது அவரது படம் போட்டு வழங்கப்பட்ட இலவச ” மிக்சி – கிரைண்டர் – பேன் – சைக்கிள் – மடிக்கணனி போன்ற கருவிகள் — பொருள்கள் ” படத்தை உடைப்பது போலவே உடைத்து விட்டு தான் — தற்போது காரியமாற்றுகிறீர்களா … ? // இந்த வரியில் நீங்கள் சொல்வது என்ன?

          • அய்யா … ! அந்த வரிகளுக்கான விளக்கம் உங்களுக்கு இன்னுமா புரியவில்லை … ! அதன் வீச்சும் — வீரியமும் மிகவும் அதிமானது … விளக்கித்தான் தீரவேண்டிய கட்டாயத்தில் என்னை ஆழ்த்தி இருப்பதால் ….

            ஏன் ” இன்னும் உடைக்கவில்லை ” என்பது அதில் தொக்கியிருக்கிறது — என்னை பொறுத்தவரை அந்த படம் போட்ட பொருள்களை இவ்வளவு காலம் உபயோகப்படுத்தி இருக்கிறேனே — என்ற ” குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு ஏற்பட்டு ” என் பணம் தான் அது என்கிற எண்ணத்தையும் ” மீறி — படத்தை மட்டும் நீக்குவதை விட உடைத்தாலும் தகும் என்கிற நிலைக்கு வந்ததால் — நீங்களும் அதை செய்தீர்களா — என்று வினவியது புரியாமல் பல முத்திரைகளை விரைந்து குத்தி விட்டீர்கள் ….

            பரவாயில்லை … சேது திட்டத்திற்கு கடலில் கொட்டியதும் என் பணம் — அலைக்கற்றை — நிலக்கரி — பஞ்ச பூத ஊழல் — அனைத்திலும் சுருட்டியது என் பணம் — சாலை வரி கட்டிய பின்னும் டோல் கேட்களை வைத்து பிடுங்குவது என்பதும் என் பணம் …

            ” வங்கி ஏய்ப்பாளன் ” என்று ஒரு பட்டத்தை கொடுத்து மீண்டும் அவனுக்கு ஏழாயிரம் கோடிக்கும் மேல் தள்ளுபடி செய்ததும் என் பணம் — பல கோடிகளை ” கண்ணாடி இழை ஒயர்களை மண்ணில் புதைத்து பயன் படுத்தி லாபம் அடைந்தார்களே அதுவும் என் பணம் — கோதுமை பேரம் — பூச்சி மருந்து — பழைய வீராணம் — செம்மொழி மாநாடு — சங்கமம் — சொத்து குவிப்பு — நிறுவனங்களை சொந்தமாக்கி கொண்டது எல்லாவற்றிலும் என் பணம் ….

            இலவசங்கள் என்பதை உருவாக்கி அதில் படத்தையும் போடும் பழக்கத்தை உண்டாக்கி — எவன் ஆட்சிக்கு வந்தாலும் அதையே பழக்கமாக்கி வழங்கும் அனைத்திலும் என் பணம் … மணல் — கனிம வளங்களை கூறு போட்டு கொள்ளையடிக்கிறார்களே அதுவும் என் பணம் தான் ….

            சிறுக – சிறுக சேமித்த பணத்தை எடுக்க கால மற்றும் தொகை கட்டுப்பாடு விதித்தார்களே அதிலும் என் பணம் தான் திண்டாடியது — நண்பரே — என்று ” தங்களை அழைக்கலாமா ” என்று எனக்கு தெரியவில்லை … .

            நான் பதிவிட்ட பின்னூட்டத்தை தாங்களும் — மற்ற நண்பர்களும் பொறுமையாக — ஆழ்ந்து உற்று நோக்காமல் — ஏதோ ஒரு வேகத்திலும் — ஒரே எண்ணத்திலும் மறு மொழிகளை இட்டது கூட ஒரு வகையில் நல்லது தான் — ஏனென்றால் ” பல நண்பர்களுக்கு மக்கள் பணம் ” என்கிற விழிப்பு ஏற்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது . ஏதோ ஒரு வெளிச்சத்தை நோக்கி பயணிப்பது தெரிகிறது ….

            என்ன ” நான் தனியொருவன் — மார் தட்டி என் பணம் என்று உரக்க கூறுகிறேன் ” — மற்றவர்கள் மக்கள் பணம் என்று கூறுகிறார்கள் … மீண்டும் என்னுடைய பின்னூட்ட பதிவை படியுங்கள் — அதில் பல அநியாய செயல்களை கோடி காட்டியிருக்கேன் …. விடை எப்போது என்பது தான் மாபெரும் வினா … தற்போது ” நான் விடை பெற்று கொள்ளலாம் ” அல்லவா ….?

          • நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வது ஜெயா உங்களால் பலமுறை நசுக்கப்பட்டுவிட்டார்.தொடர்ந்து நசுக்கப்படுகிறார்.பிழையில்லை.ஜெயா பாணி அரசியல் அசிங்கம் நசுக்கி எறியப்பட வேண்டியதே.ஆனால் ஜெயா மட்டுமே திடீரென்று சுயம்புவாய் உருவாகி தமிழ்நாட்டு அரசியலை அசிங்கம் செய்துவிட்ட மாதிரியும் ஜெயாவின் எதிரணி மகா யோக்கிய அல்லது ஜெயாவுக்கு பல மடங்கு தங்கம் என்பதுபோல ஒரு கருத்து, ஜெயாவை கடுமையாய் தாக்கி வரும் கட்டுரைகளில் தொணிப்பது போலத்தான் தெரிகிறது.இதை சுட்டிக்காட்டுபவர்கள் அதிமுக ஆதரவாளர்களாக உங்களுக்கு தெரிகிறார்களோ?செல்வராஜன் அதிமுக காரரா?உறுதியாக தெரியவில்லை.ஜெயலலிதாவை மட்டும் வச்சி தொடர்ந்து கஞ்சி காய்ச்சிவதை தொட்டு காட்டுகிறாரோ என்னவோ!?

          • வினவு…..

            //ஐயா, விடைபெறுவதற்கு முன் தாங்கள் கூறியதற்கு பொருள் கூறுமாறு மெத்தப் பணிவுடன் கோருகிறோம்!
            //ஜெயாவின் ஆட்சியின் போது அவரது படம் போட்டு வழங்கப்பட்ட இலவச ” மிக்சி – கிரைண்டர் – பேன் – சைக்கிள் – மடிக்கணனி போன்ற கருவிகள் — பொருள்கள் ” படத்தை உடைப்பது போலவே உடைத்து விட்டு தான் — தற்போது காரியமாற்றுகிறீர்களா … ? // இந்த வரியில் நீங்கள் சொல்வது என்ன?…….. .//

            எதற்க்காக டாஸ்மாக்கை எதிர்த்து மது பாட்டில்களை போட்டு உடைத்த்தீர்கள்? குடியினால் சமூகம் சீரழிகிறது என்பதால் தானே. அதே போன்று தான், இலவசங்கள் கொடுப்பதால் தமிழ் சமூகம் சீரழிகின்றது, மக்களை இலவசத்திற்கு கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்கள் ஆக்குகின்றார் என இலவசங்களுக்கு எதிராக ஜெயலலிதாவை திட்டி தீர்த்து கட்டுரை எழுதி அங்கலாய்த்தவர்கள் தானே நீங்கள். அப்புறம் என்ன, மக்களுக்கு புத்தி வருவதை போன்று, இலவச பொருட்கள் அனைத்தையும் ரோட்டில் போட்டு உடைக்க வேண்டியது தானே. டாஸ்மாக்கில் விற்கப்படும் மது மட்டும் என்னவாம்? அனைத்து வகையான மதுபானங்களும் மக்கள் பணத்தின் மூலமாகத் தானே மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஜெயாவின் பாக்கெட் மணியில் இருந்தா கொள்முதல் செய்கிறார்கள். ஆக , குடிகெடுக்கும் டாஸ்மாக்கிற்கு ஒரு நீதி, சுயமரியாதையை அழிக்கும் இலவச பொருட்களுக்கு ஒரு நீதி என்று இருக்க முடியாது நேர்மையான பதிலை அளியுங்கள்.

            டாஸ்மாக்கை எப்படி இலவசங்களோடு ஒப்பிடுகிறீர்கள், இது உயிரை பறிப்பது அது அப்படி அல்ல இலவசம் என்பது வேறு, பின்னதை விட முன்னது மிக ஆபத்தானது என்கிற மொன்னையான பதிலை கூறாமல், மனசாட்சியுடன் பதில் கூறவும்.

    • செல்வராஜன் , மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள கிரிமினல் ஜெயாவின் படத்தை அப்புற படுத்துவதற்கும், பாடபுத்தகங்களில் உள்ள அதே ஜெயாவின் படத்தை நீக்கி திருவள்ளுவர் படத்தை ஓட்டுவதற்கும் கூட உங்களின் , மணிகண்டன் மற்றும் ரெபெக்க போன்றவர்களின் அனுமதியை வாங்கித்தான் தீரனும் என்ற பரிதாப நிலையில் ஒன்றும் தமிழகம் இல்லை!

  3. நல்லது நண்பரே … ! என்னுடைய அனுமதி பெற வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை … ” என்னுடைய பணமும் அதில் அடக்கம் ” என்பதை உணர்ந்தவன் நான் … பத்தோடு – பதினொன்றாக மக்கள் பணம் என்று கூற எனக்கு விருப்பமில்லை — ஏனென்றால் என் வலி எனக்கு … !!!

    • செல்வராஜன் மற்றும் ரெபெக்கா,
      உங்களுடைய வரிபணமும் அதில் அடக்கம் என்றால் விலையில்லா அரசு முழு மானிய பொருட்களை (மிக்சி,fan etc) உடைதெறிய நீங்கள் கோருவது எப்படி பொருத்தமானதாக இருக்கும் செல்வராஜன்? இங்கே உங்களுக்கான கேள்வியில் ரெபெக்கா போன்றவர்கள் சமையல் வாயு என்று பலவற்றுக்கும் மானியம் பெற்றுகொண்டு அதே நேரத்தில் அரசு முழு மானிய பொருட்களை எள்ளி நகையாடுகின்றார்கள்… அவைகள் அனைத்துமே மக்களின் வரி பணம் தானே? அதே நேரத்தில் டாஸ்மாக் சரக்குகள் மானிய பொருட்களாக வருகின்றனவா? அல்லது அரசு கடைகளில் விற்பனையாகி மக்களின் கை பணத்தை கொள்ளை அடிகின்றனவா? டாஸ்மாக் சரக்குகளை போராட்டத்தில் உடைத்து எறிவது போன்று முழு மானிய பொருட்களை உடைதெரிய கோருவதும் எப்படி சரியானதாக இருக்கும் ?

  4. ஏச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா எண்னி பாருங்க அய்யா எண்னி பாருங்க நாச்சியப்பா (ஜெயா) சங்கிலிகருப்பா (சசி)பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா(இளவரசி) மூட்டை அடிச்சா உனையே விடுவானா நினைச்சு பாருங்க அய்யா நினைச்சு பாருங்க இதுவும் எம்ஜியார் கோன வாய அசச்சு பாடுன பாட்டுதான் என்னமோ நியாபகம் வந்தது மக்கள் அதிகாரம் செய்தது சரியே அழகர் மலை கள்ளனுக்கு என்ன மரியாதை குடுக்கனுமோ அதைத்தான் மக்கள் அதிகாரம் செய்து இருக்கு இதுல என்ன தப்புனு தெரியல ஏன் இந்த அக்கா ரெபாக்கா மேரி புலம்புராகனு தெரியல முடிஞ்சா ஜெயா படத்தை செருப்பால் அடிக்கலாம் கமிசன் அடிக்கிறது பெஞ்ச தட்டுறதுனு ஜெயா அடிமைகள் வேணுமானால் அடிச்ச கொள்ளக்கு கூவலாம் அக்கா ரெபேக்கா மேரி ஏன் கூவுறாகனு தெரியலை

  5. //அக்கா ரெபேக்கா மேரி ஏன் கூவுறாகனு தெரியலை……//

    மக்கள் மத்தியில் அநாகரீகமான வன்முறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்கிற அக்கரையில் தான் கூறுகிறேன்.

Leave a Reply to selvarajan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க