privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகோவையில் போலீசு தடையை மீறி மோடி - ஜக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !

கோவையில் போலீசு தடையை மீறி மோடி – ஜக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !

-

தமிழகத்திற்கு தேவை தண்ணீர் தான்.! ஆதியோகி அல்ல..!! என்ற முழக்கத்தின் கீழ் நாட்டை விற்கும் மோடி கழனியை அழிக்கும் கேடி ஜக்கியின் ஆதி யோகி சிலை திறப்புக்கு வந்த போது கருப்புக்கொடி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

24-02-1017 கோவை நகரெங்கும் ஆதியோகி சுவரொட்டி ஒட்டப்பட்ட இடங்களுக்கு அருகே பதில் சொல்லும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. மதியம்  கோவை அவினாசி சாலையின் முக்கிய சந்திப்பான ஹோப் காலேஜ் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்தது.

மோடியைக் கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.

அதன்படி கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  மூர்த்தி தலைமையில் குறிப்பிட்ட இடத்திற்கு 100 மீட்டர் முன்பாக பதாகைகள், கறுப்புக்கொடிகள் ஆகியவற்றுடன் தோழர்கள்  முழக்கமிட ஆரம்பித்தது அப்பகுதியையே திரும்பி பார்க்க வைத்தது.

மாலை நேரம் என்பதாலும், மோடி பயணிக்கும் வழி என்பதாலும் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு போலீசு கெடுபிடிகள் அங்கே ஆக்கிரமித்தருந்தது. அந்த நேரத்தில் மாலை 5 மணிக்கு தோழர்களோடு சிக்னலுக்கு முன்பிருந்தே ஊர்வலம் புறப்பட்டது.

உடனே உளவுப்பிரிவு மற்றும் போலீசு ஓடிவந்து நெருக்கமாக நின்று கொண்டிருந்த வாகனங்களை விலக்கி நாம் முன்னேறி செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தது. இதை எதிபார்க்காது அங்கு கூடி இருந்த மாணவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள், பயணிகள் என அனைவரும் என்ன நடக்கிறது என நின்று பார்த்தனர். நாம் அறிந்த வரையில் அந்த இடத்தில் யாரும் இது நாள் வரை போராட்டம் நடத்தியதில்லை.

மோடிக்கு எதிராக சம்பிரதாயமான இடங்களில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்த போலிசு இதை எதிர்பார்க்கவில்லை.

மக்கள் அதிகாரத்தின் இந்த போராட்டத்தை ஏற்க முடியாத போலிசு திக்கு முக்காடியது. அத்தனை வாகனங்களுக்கு நடுவேயும் சற்று தூரத்தில் இருந்து சிக்னல் வரை சாலை நடுவே தோழர்கள் முன்னேறி சென்றது போலிசுக்கு சவாலாக அமைந்தது. வடநாட்டு மோடியையும், தென்னாட்டு கேடியையும், குறிப்பிட்டு முழங்கிய முழக்கங்கள் மக்கள் மத்தியில் வியப்புடன் பார்க்கப்பட்டது. இதனால் பயந்து போன போலிசு, தனது வாகனத்தை கொண்டு வந்து அவசர அவரசமாக கட்டாயப்படுத்தி ஏற்ற முயற்சித்தது. 17 தோழர்கள் தொடர்ந்து முழக்கமிட்டவாறே முன்னேறினர். பிறகு போலீசு கட்டாயமாக அவர்களை கைது செய்தது. எதிரே இருந்த பள்ளியிலிருந்து வெளியே வந்த மாணவர்கள் ஆர்வமுடன் போராட்டத்தை கவனித்தனர்.

அதுவரையில் மோடி-ஜக்கியின் உண்மை முகத்தை அறியாதவர்கள் பலரையும் இந்தப் போராட்டம் அறிய வைத்தது. சிலர் பஸ்ஸில் இருந்தவாறு “நல்லா போராடுங்க” என்று உற்சாகப்படுத்தினர்.. போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை விட சுற்றிலும் ஓடி வந்து கைது செய்ய முற்பட்ட போலிசுகளே அதிகம். பின்னர் அருகிலிருந்த மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மோடி கோவையிருந்து புறப்பட்ட   9 மணிக்கு பின்னரே விடுதலை செய்தனர்.

அங்கே போலீசு தோழர்களை பற்றிய விவரங்கள் கேட்டபோது கைரேகை முதலியவற்றை தர மறுத்துவிட்டனர். அரங்கில் இரவு 9 மணி வரை தோழர்கள் அரசியல் கலந்துரையாடல்களை நடத்தினர்.

இதற்கு மேலும் விடுவிக்க தாமதித்தால் அதற்கான விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை எங்களது அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென்று போலீசுக்கு நெருக்கடி கொடுத்ததால் அவர்கள் மேலும் கீழும் பேசுகிறேன் என்று பேசி இறுதியில் விடுவித்தனர்.

இந்த போராட்டம் இதுவரை கோவையில் போலிசு தீர்மானிக்கும், ஆள்அரவம் அற்ற இடத்திலேயே போரட்டம் நடத்தும் சம்பிரதாயத்தை முறியடிக்கும் விதத்தில் அமைந்தது. போக்குவரத்து நிறைந்த, போலிசு மறுக்கும் புதிய இடத்தில் போராட்டம் நடத்திக் காட்டியதன் மூலம் பல இயக்கங்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் இப்போராட்டம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கோவை.