privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.ககீழடி : புதைக்கப்படும் பழந்தமிழர் நாகரீகம் ! மதுரை அரங்கக் கூட்டம்

கீழடி : புதைக்கப்படும் பழந்தமிழர் நாகரீகம் ! மதுரை அரங்கக் கூட்டம்

-

கீழடி அகழாய்வு முடமாக்கப்பட்டுவிட்டது ! கண்டெடுக்கப்பட்ட பழந்தமிழர்நாகரிகம் புதைக்கப்படுகிறது என்ன செய்யப்போகிறோம்?

அரங்கக் கூட்டம்

நாள் : 28.05.17 ஞாயிறு, மாலை 5.00 மணி
இடம் : செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை.

  • தலைமை :
    தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.
  • சிறப்புரை :
    முனைவர் சாந்தலிங்கம், தொல்லியல் அறிஞர்
  • தோழர் காளியப்பன், ம.க.இ.க. மாநில இணைச் செயலாளர்

துரைக்கு அருகில் கீழடியில் நடந்துள்ள அகழாய்வு மூலம், சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர அமைப்பு தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளது. மொத்தமுள்ள 110 ஏக்கரில் வெறும் 50 செண்ட் பரப்பளவில் நடந்துள்ள அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு.1000-ல் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

வரிசை வரிசையாகக் கால்வாய்கள், பெரிய தொட்டிகள், தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள், உலைகள், வட்டக்கிணறுகள், மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களால் ஆன வடிகால்கள் என முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் தான் கிடைத்திருக்கிறது.

சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மண்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டிருந்தன. ஆனால் கீழடியில் கிடைத்த மண்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. தொழில் பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டவை நாமெல்லாம் பெருமைப்படத்தக்க மிக அரிய பொக்கிஷமாகும்.

ஆகவேதான் கடந்த டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் தலைமை வகித்துப் பேசிய வரலாற்று அறிஞர் ரொமிலாதாப்பர் கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய கீழடி அகழாய்வைப் புதைத்து சமாதி கட்டப் பார்க்கிறது மோடியின் பாஜக அரசு. ஏன்? ஆரியர்களுக்கு முன்பே, அவர்களைவிடச் சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக, திராவிட சமூகம் விளங்கியது என்பது கால்டுவெல் போன்றவர்களின் மொழி ஆய்வுகள் மூலமாகவும், சங்க இலக்கிய ஆய்வுகள் மூலமாகவும், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் மூலமாகவும் ஏற்கனவே நிருபிக்கப்பட்டுள்ளது. தற்போது கீழடி அதை மேலும் நிறுவும் விதமாக இருக்கிறது. சமஸ்கிருத ஆரிய கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவ விரும்பும் பாஜக காவிக் கும்பலின் வரலாற்று மோசடியின் மீது விழுந்த சம்மட்டி அடியாக கீழடி அகழாய்வு அமைந்திருக்கிறது.

இந்து-இந்தி-இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கேற்ப வரலாற்றைக் கட்டமைக்க விரும்பும் பார்ப்பன இந்து மதவெறிக்கும்பல், புராண கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் அறிவியல் பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை அனுமதிப்பார்களா?

அதனால்தான் இல்லாத சரஸ்வதி நதியை கண்டறிய பல கோடி, இராமாயண அருங்காட்சியகத்திற்கு ரூ.151 கோடி ஒதுக்கிவிட்டு, கீழடியில் கண்டறிந்த பொருட்களின் காலப் பகுப்பாய்விற்கு ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

கார்பன்-14 பகுப்பாய்வுக்கு இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில் 28 பொருட்களையும், குஜராத்தின் தொலவிராவிலிருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியவர்கள், கீழடியில் கண்டறியப்பட்ட 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் குறைந்தது 10 மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து, இரண்டிற்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது மத்திய தொல்லியல் துறை.

இந்தியாவில் நடந்துள்ள பல அகழாய்வுகள், பல ஆண்டுகள் பல கட்டங்களாக தொடர ஊக்குவித்த மத்திய அரசு, கீழடி அகழாய்வை இரண்டே ஆண்டுகளில் முடிவு கட்ட முயற்சித்தது. இதற்கெதிராக எழுந்த எதிர்ப்பால் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி என அறிவித்து விட்டு, கீழடி அகழாய்வில் முக்கியப் பங்கு வகித்த, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா தலைமையில் செயல்பட்ட குழுவை கூண்டோடு அசாமுக்கும், வேறு இடங்களுக்கும் தூக்கியடித்துவிட்டது. துணை கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள ஒருவரை இங்கு நியமித்துள்ளது. இந்த மாறுதல் வேண்டாம் என்கிற மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பரிந்துரையையும் குப்பையில் வீசிவிட்டனர்.

தற்போது முக்கியமான அகழாய்வுப் பணிகள் நடைபெறும் இந்தியாவின் நான்கு இடங்களில், கீழடி தவிர மற்ற மூன்று இடங்களிலும் கண்காணிப்பாளர்கள் மாற்றப்படவில்லை. ஏனென்றால் அகழாய்வு, ஆராய்ச்சியில் அதே குழுவினர் தொடர்ந்தால்தான் சிறப்பாகவும், தொடர்ச்சி கொடுத்தும் நிறைவேற்ற முடியும். மூன்றாண்டுக்கு ஒருமுறை பணி மாறுதல் என்ற விதி இந்த ஆராய்ச்சிக்கு பொருந்தாது. அப்படியிருக்கும்போது அமர்நாத் இராமகிருஷ்ணாவை மாற்றியதன் மூலம் கீழடி அகழாய்வை முடமாக்கிவிட்டனர். ஆனால் இது வழக்கமானது தான் என பச்சையாகப் புளுகுகின்றனர். அலட்சியமாகவும் திமிராகவும் பதிலளிக்கின்றனர் மத்திய அமைச்சர்கள்.

சமஸ்கிருத ஆரிய கலாச்சார மேலாதிக்கத்திற்கெதிராக வரலாறு நெடுகிலும் எதிர்ப்பின் அடையாளமாக இருந்து வந்துள்ளது தமிழகம். அதன் சமீபத்திய வெளிப்பாடு தான் ஜல்லிகட்டு தடையை எதிர்த்த தமிழக மக்களின் தை எழுச்சிப் போராட்டம். அதன்பிறகும் இந்தித் திணிப்பு, விவசாயிகளுக்கான நிவாரணம், நீட் தேர்வு என தமிழகம் ஒடுக்கப்பட்டு வரும் நிலையில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழந்தமிழர் நாகரிகத்தை, நமது பாரம்பரியத்தை மதிப்புமிக்க பொக்கிஷத்தை புதைத்து அழித்துவிட முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ், பாஜக காவிக்கும்பல்.

கீழடியில் கண்டறியப்பட்டது நமது பெருமைமிக்க பாரம்பரியம், அரிய பொக்கிஷம் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்வோம்! கீழடி அகழாய்வை பாதுகாக்கவும், கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா குழுவே கீழடி ஆய்வில் தொடரவும், அகழாய்வில் கண்ட பொருட்களைக் கொண்டு அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கவும் எழுச்சி மிக்க போராட்டத்தை உருவாக்குவோம்! வாரீர்!!

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை, தொடர்புக்கு – 97916 53200.

  1. ஆனா ஒன்னு……தமிழனுக்கு எவ்வளவு முடியுமோ,,,,அவ்வளவு அநீதியை நேரடியாகவும்,,,மறைமுகமாகவும் திட்டமிட்டு நடத்துகிறது இந்த பா.ஜ.க. கண்முன்னே பல பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பல்வேறு வழிகளில் போராடிக்கொண்டு இருக்கையில் மத்திய அரசு செவி சாய்க்காமல் நாதி அற்றவர்களாக நிற்கிரோம்….இதுல கீழடி அகழாய்வுக்கு செய்கின்ற துரோகதனம் மறைக்க படும் செய்தி கூட பலரும் அறிய வாய்ப்பில்லை…..பலருக்கும் கொண்டு செல்வோம்….அரங்க கூட்டத்தின் வாயிலாக மேலும் தெரிந்து கொண்டு,,,,,,,தமிழ் நாட்டுக்கு தொடர்ச்சியாகா துரோகம் இழைக்கின்ற பா.ஜ.கா-வுக்கு அடுத்த கட்டமாக இங்கு இருக்கின்ற அந்த பொன்னாரு,,,,,டாக்டர் எலவுஇசை,,,auntiindian எச்ச ராஜா,,கேடி ராகவன் (4-பேர்)-நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்டாலும் வடிவேலு பாணியில் பல்லிலிக்கிராங்க…அதனால நாம் செய்ய வேண்டியது இவனுகள முதல்ல தமிழ்நாட்டை விட்டு குஜராத்துக்கு போங்கடான்னு விரட்டணும்…பா.ஜ.கா-ன்னு தமிழ்நாட்டுல இருக்கிற அடையாளத்தை நாம் அப்புறபடுத்த வேண்டும்….

  2. //இராமாயண அருங்காட்சியகத்திற்கு ரூ.151 கோடி ஒதுக்கிவிட்டு, கீழடியில் கண்டறிந்த பொருட்களின் காலப் பகுப்பாய்விற்கு ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.//

    மிக சரியான கேள்வி. வாக்கு எண்ணிக்கை ஜனநாயகத்தில் , வாக்கு கிடைக்காத தமிழகத்தை ஒதுக்கிவிட்டார்கள்.

    அதே சமயம் 400 கோடி ரூபாய் செந்தமிழ் திருவிழா நடத்திய தமிழக அரசு ஏன் சில கோடிகள் இதற்கு ஒதுக்கி முக்கியத்துவம் தர முடியவில்லை ?

    • நீங்களே சொல்லுங்க இராமன். ஏன் தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை?

Leave a Reply to செல்வம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க