privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புவாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?

வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?

-

ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?

 

 

 

 

 

 

 

 

  1. ஊழல் அற்ற லஞ்ச லாவண்யம் அற்ற வெளிப்படை நிர்வாகம் தான், மனித
    புனிதர் ரஜினியோட ஆட்சிக்கொள்கை .

  2. வினவு தலித் மக்களுக்கு எதிரான நுண் அரசியலை தொடங்கிவிட்டது….கபாலி என்ன பிஜேபிக்கு வாலாகவா இருந்து? காலாவின் கதையே தெரியாத போது காலா பிஜேபிக்கு வாலா ? என்று கேள்வி எழுப்புவதில் உள்ள வினவின் குதர்க்கம் தெரியவில்லையா என்ன?

  3. செந்தில், அது என்ன நுண் அரசியல் ?.

    ரஜினி என்றொரு இந்து மத வெறியன் (எச்சை. ராஜாவைப் போல அல்லாமல், பொரி உருண்டையனைப் போல்). அவனுக்கு தலித் வேஷம் போட்டு இயக்குனர் ரஞ்சித் செய்வதற்குப் பெயர் தான் தலித் மக்களுக்கு எதிரான நுண் அரசியல்.

    பாஜகவின் எச்சை தான் ரஜினி என்பது உங்களுக்குக் கூடவா உரைக்கவில்லை?

    • கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் மதவெறியர்கள் என்றால் ஒட்டு மொத்த உலகமும் மதவெறியர்கள் தான்.

      சும்மா ஏதாச்சும் உளறி கொண்டு இருக்காதீர்கள்

      • திரு.மணி,

        கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் மதவெறியன் என்று நான் எப்போது சொன்னேன்?.

        ரஜினி ஒரு இந்து மதவெறியன் என்பதை மீண்டும் சொல்கிறேன். அது தங்களின் தலையில் உரைக்கும் படி சொல்லவேண்டும் என்பதால் தான் பக்கத்தில் பிராக்கெட்டில் எச்சை.ராஜாவைப் போல அல்ல , பொரி உருண்டையனைப் போல என்று கூறியிருக்கிறேன்.

        ஆர்.எஸ்.எஸ். , மோடி யை நண்பன் என அறிவித்தவன் பக்கா இந்துமத வெறியனாக மட்டுமே இருக்க முடியும். இன்னும் புரியும் ப்டி சொல்லனும்னா ,,, டர்ருன்னு உட்டாத் தான் கு*ன்னு நம்புவேண்ணு சொல்லக் கூடாது. சில கு*வெல்லாம் சத்தமில்லாம ரிலீஸ் ஆகும். ஆனா நாத்தம் குடலப் புடுங்கிடும்.

        ரஜினி, பொரி உருண்டையனெல்லாம் இதுல ரெண்டாவது ரகம். எச்சை ராஜா, முதல் ரகம்

        • ரஜினி கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், வைகோ என்று பலரையும் நண்பர்கள் என்று சொல்லியிருக்கிறார், கருணாநிதி ஸ்டாலின் என் நண்பர்கள் என்று சொன்னதால் ரஜினி கடவுள் நம்பிக்கை இல்லாதவர் ஹிந்து மத எதிரி என்று சொல்விர்களா ? உங்கள் கருத்து சுத்த லூசுத்தனமா இருக்கு.

          சரி மோடி உங்களை போன்றவர்களுக்கு எதிரியாக இருக்கலாம் ஆனால் மற்றவர்களும் மோடியை எதிரியாக தான் பார்க்க வேண்டும், மோடியை வெறுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது என்ன நியாயம்.

  4. ஐயா A அவர்களே உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் அளிகின்றேன்… அதற்கு முன்பு எனது கேள்விகளை படித்துவிட்டு பதில் அளிக்கவும்…காலாவின் கதையே தெரியாத போது காலா பிஜேபிக்கு வாலா ? என்று எப்படி கேள்வி எழுபுகிண்றீகள்? இந்த கேள்வியில் வினவின் குதர்க்கம் தெரியவில்லையா என்ன?

    • நண்பர் செந்தில்,

      வினவு எந்த அடிப்படையில் இப்படிப்பட்ட தலைப்பு வைத்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் நான் இதனை ஆதரிக்கக் காரணம் ஒன்று தான்.

      காலா படத்தின் கதை என்ன என்ற அடிப்படையில் இவ்விசயத்தைப் பார்க்காமல், இப்படம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள சூழல், அதற்கு முன்னால் ரஜினியின் நடவடிக்கைகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

      ஒரு மக்கள் விரோத விளம்பரத்தில் ஒரு பிரபல நடிகர் நடிக்கும் போது அதனை ஒரு விளம்பரம், அதில் நடிக்கும் ஒரு நடிகன் என அவ்விசயத்தை சுருக்கிப் பார்க்க முடியாது. அந்நடிகனுக்கு மக்களிடம் உள்ள அபிமானம், அது மக்கள் மீது செலுத்தும் தாக்கம் ஆகியவற்றிலிருந்து தான் அவ்விசயத்தைப் பார்க்க முடியும்., இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

      அதைப் போலவே, இங்கு ரஞ்சித் என்ற ஒரு தலித்திய சீர்திருத்தவாத கருத்துகளைக் கொண்ட இளைஞர் உருவாக்க இருக்கும், தலித்திய சாயல் கொண்ட படம் (பி.ஆர். 1956 கதைகள் எல்லாம் படித்திருப்பீர்கள், சாதாரண உழைக்கும் மக்களைப் போன்ற கெட்டப்போடு ரஜ்னியையும் பார்த்திருப்பிர்கள் என நினைக்கிறேன்). இப்படி ஒடுக்கப்பட்ட, உழைக்கும் வர்க்க தோற்றத்தில் பல இடங்களில் அம்பேத்கரை நினைவு படுத்தும் வகையிலான ஒரு அறிமுகத்தை இரஜினிக்குக் கொடுத்திருக்கிறார் இரஞ்சித்.

      இத்னை கடந்த கால எம்.ஜி.ஆர். படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்., ஏழைகளை வேப்பங்காயாய்ப் பார்க்கும் அந்த பாசிஸ்ட்டை, பெரும் ஏழைகளின் காப்பாளனாகக் காட்டி பாடகர்களும் , இயக்குனர்களும் படம் எடுத்து அதன் மூலம் அந்தக் கிரிமினல் மக்களின் மனதில் இடம்பிடித்ததை வைத்து யோசித்துப் பாருங்கள்.

      பாஜகவுடன் கள்ளக் கூட்டு வைத்திருக்கும் நஜினி, இவ்வளவு நாளாக பெரும் பணக்காரணாகவும், பெரும் பண்ணையின் மகனாகவும் நடித்து வந்த இரஜினி, தற்போது இவ்வாறு நடிப்பதன் காரணம் என்ன ? இரஜினியின் அரசிய பிரவேசத்திற்கு முன்னர் அவரை பாட்டாளிகளின் நண்பராக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இப்படம் அமைந்துள்ளது. இது இரஜினிக்கு மிகவும் அவசியமானது. ரஜினியின் இயல்பான கூட்டாளியாக விளங்கும் பாஜகவின் தலித் விரோத அரசியல் அம்பலப்பட்டு வரும் சூழலில் காலா ரஜினியின் மூலமாக பாஜகவின் தேவைகளுக்கு சேவை ச்ய்குறது ?.

      அந்த அடிப்படையில் காலா பாஜகவிற்கு வாலாகத் தான் இருக்கிறது என்பது எனது கருத்து.

      • ரஜினி ரஞ்சித் படத்தில் நடித்து தானா புகழ் பெற வேண்டும் ????? ஹி ஹி ஹி நீங்க எந்த கிரகத்துல இருக்கீங்க என்று தெரியவில்லை. ரஜினி எப்போதோ பெரும் புகழ் பெற்றுவிட்டார் ரஞ்சித் படங்கள் மூலம் தான் ரஜினி புகழ் பெற வேண்டும் என்ற அவசியமே கிடையாது. முன்பு ஜெயலலிதா காலத்திலேயே ரஜினி நினைத்து இருந்தால் தமிழக முதல்வராக வந்து இருக்கலாம், இனியும் ரஜினி நினைத்தால் தமிழக முதல்வராக வரலாம், அதற்கு ரஞ்சித் மூலம் தான் புகழ் பெற வேண்டும் என்ற அவசியமே கிடையாது.

        என் கணிப்பு சரியாக இருந்தால் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்றே நினைக்கிறேன், இது எல்லாம் பத்திரிகைகள் மற்றும் சிலர் ரஜினியின் வார்த்தைகளை வைத்து ரசிகர்களை உசுப்பேற்றி கொண்டு இருக்கிறார்கள்.

        ரஜினி போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், ரஜினி வந்தால் நிச்சயம் என் வாக்கு ரஜினிக்கு தான், தற்போது அரசியல் சேவையாக இல்லாமல் தொழிலாக இருக்கிறது, இதை மாற்ற ரஜினி போன்றவர்கள் வர வேண்டும்.

        • மோடி ரசிகனெல்லாம் ரஜினி ரசிகனா மாறிப்போகிறானே ஏன் ?மோடியின் வலக்கரம் அமித்ஷாவிலிருந்துல்ல இந்த கோமாளி கூத்து தொடங்குகிறது.மக்களின் வெறுப்பும் அதிருப்த்தியும் அதிகரிக்க அதிகரிக்க ஏதாவது கிளுகிளுப்பை காட்டி மக்களை ஈர்க்கும் பைத்தியக்காரத்தனம்தான் ரஜினியை தூக்கி த்லையில் வைத்து ஆடவைக்கிறது. “அரசியல் சேவையாக மாறுவதற்க்கு ரஜினி வரவேண்டுமாம்”.நடிகர்களில் ரஜினி மாதிரி ஒரு தந்திரமிக்க வியாபாரி யாரும் கிடையாது.தான் நடிக்கிற படங்களுக்கு உச்சபச்ச சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு பாதுகாப்பான பகுதிகளின் வினியோக உரிமையையும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து அதிக வருமானம் ஈட்டும் நடிகராகவே முதிய வயதிலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறார்.சரி அது அவரின் சாமர்த்தியம்..திறமை.முழுக்க வணிக ரீதியான ஒரு நடிகரை இதுவரை மக்களின் அதிமுக்கிய எந்த பிரச்சினைக்கும் வெளியில் இறங்காத ஒருவரை அவர் ரிஷிகேஷ் போகிறார் ஆன்மீக கதை பேசுகிறார் என்ற புண்ணாக்கு தகுதியை வைத்துக்கொண்டு அவர் சேவையாற்றுவார் என்றால் இது என்ன வகை? ஸ்டாலினும் நல்ல நிர்வாகியாம் அர்த்தமில்லாமல் அவரை கழுவி குடிக்கும் சீமானும் திறமையானவராம் அரசியலில் அவரை வரவேற்க்கும் திருமாவள்வனும் ஆற்றல் மிக்கவராம்.எல்லா அரசியல் தலைவருகளுக்கும் நற்ச்சான்றிதழ் கொடுத்துவிட்டு பிறகு சிஸ்ட்டம் சரியில்லை என்பதையும் கண்டுபிடித்துவிட்டு அரசியல் குளத்தில் முதலைகள் கிடப்பதாகவும் சொல்லி “காலை பின்னெடுத்துத்தான் ஆக வேண்டும்”என்று பயந்தும் செத்துக்கொண்டு என்ன ஆள் இவர்?ஒரு அரசியல் தலைவனுக்கு இருக்கிற தகுதிகளா இவைகள்?அதிலும் சிஸ்டத்தையே மாற்றும் அரசியல் தலைவர்! விளங்கிடும்…

          • ரஜினியை உங்கள் வெறுப்பு பார்வையிலேயே பார்க்கிறீர்கள். அன்புமணி, சீமான், திருமா போன்றவர்களை பாராட்டியதற்கு காரணம் இருக்கிறது. அன்புமணி, சீமான், திருமா போன்றவர்கள் எல்லாம் ரஜினியை கண்டபடி திட்டியவர்கள் ஆனாலும் ரஜினி அவர்களை தனது அன்பால் மாற்ற பார்க்கிறார், நீங்கள் என் மனம் நோகும்படி திட்டினாலும் நான் உங்களை அவ்வாறு திட்டமாட்டேன் உங்கள் மீது எனக்கு மதிப்பு இருக்கிறது என்பதை காட்ட தான் அவர்களை பாராட்டினார், அவர்களின் வெறுப்பை தனது அன்பால் மாற்ற பார்த்து இருக்கிறார்.

            உடனே இது ரஜினியின் வேஷம் என்று ஆரம்பிக்காதீர், முன்பு மனோரமா கூட ரஜினியை அதிமுக பிரச்சாரங்களில் கண்டபடி திட்டினார், அப்போதும் ரஜினி பொது மேடையையில் நீங்கள் என்னை திட்டினாலும் நான் உங்களுக்கு என்றும் தீமை செய்ய மாட்டேன் என்று அவரின் படத்தில் மனோரமாவை மீண்டும் நடிக்க வைத்தார்.

            ரஜினியின் இந்த குணம், மனபக்குவம் சாதாரண விஷயம் கிடையாது உண்மையிலேயே ஒரு மனிதன் மனதளவில் உயர்ந்து இருந்தால் தான் அவன் மற்ற மனிதர்கள் மீது வெறுப்பில்லாமல் அவர்கள் தனக்கு இழைத்த தவறுகளை புறம்தள்ளி அவர்களை மன்னித்து ஏற்கும் பக்குவம் வரும். சாக்கடையை போல் ஒருவருக்கு ஒருவர் சேற்றைவாரி இறைக்கும் தமிழக அரசியலில் ரஜினி போன்ற ஒருவர், அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும், சேற்றில் ஒரு தாமரையை போல் இருப்பார்.

            • நான் ஏன் ரஜினியை வெறுப்பு பார்வை பார்க்கிறேன்.மணிகண்டா எதையாவது சொல்ல வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்க கூடாது.ரஜினி புத்திசாலித்தனமான் பிழைக்கத் தெரிந்த ஒரு நடிகன்.மாநிலம் விட்டு மாநிலம் வந்து தான் நினைத்தும் பார்த்திடாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்.நடிப்பு என்பதையும் தாண்டி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து பணத்தை குவித்துக்கொண்டிருப்பவர்.அனைத்தையும் பணமாக்கத் தெரிந்த வியாபாரியின் தந்திர மிக்கவர்.பொதுவாக எல்லா மாநிலத்திலேயும் சீமானைப்போன்ற் “எங்க ஏரியா உள்ளே வராதே” கோஸ்டிகள் இருக்கத்தான் செய்கின்றன.அதிலும் கர்நாடகத்தில் கேட் க்கவே வேண்டாம் எப்படிப்பட்ட வெறிபிடித்த கூட்டம் இருக்கிறதென்று.ஆகவே தலைவர் அமுக்கி வாசிக்கிறார்.அவர் நிலையில் எவன் இருந்தாலும் இந்த பெருந்தனமை வேசம் போட்டுத்தான் ஆகவேண்டும்.போடத்தெரியாதவன் முட்டாள்.ரஜினி முட்டாள் அல்ல.பிழைக்கத்தெரிந்த பார்ட்டி.ரஜினியை நான் வெறுப்பாயும் பார்க்க வேண்டியதில்லை அணைப்பாயும் பார்க்க வேண்டியதில்லை.ஒரு நடிகனாக புத்திசாலி வியாபாரியாக மிகச்சரியாகவே பார்க்கிறேன்.சிலரைப்போல முட்டாள்த்தனமாக் மகாத்மாவாக பார்க்க வேண்டியத் தேவை எனக்கு இல்லை.எந்த தலைப்பில் விவாதம் நடந்தாலும் எதையாவது உளறிக்கொண்டு முட்டாள்த் தனமாக் பேசுவதை மாற்றிக்கொள் மணிகண்டா தாங்க முடியவில்லை.

            • ///சேற்றில் ஒரு தாமரையை போல் இருப்பார்.///

              அட நாங்களும் அத்த தாம்பா சொல்றோம்.. அவரு தாமரையா இருப்பாருன்னு…

            • இந்த ரஜினிக்கு புனிதபோர்வை போர்த்த ரஜினியை பூத கண்ணாடி போட்டு துலாவி எதைவைத்தடா தூக்கி நிறுத்தலாம் என்று காவி கூட்டம் தேடி கண்டுபிடித்தவைகளில் ஒன்று அவர் தேசியபார்வை கொண்டவர் என்பது. இந்த தேசியத்தை எவன் அதிகப்படியாய் கூவுகிறானோ ஒன்று அவன் அரசிலுக்காக கூவுகிறான்.அல்லது தன்னை காப்பாற்றிக்கொள்ள கூவுகிறான்.ரஜினி ரெண்டாவது வகை. ரஜினிக்கு இணையாக அவரின் சமகால நடிகராக கமல் பார்க்கப்படுகிறார்.கமல் ஒன்றும் தேசியத்திற்க்கு எதிரானவராகவோ தமிழ் தேசிய தீவிரவாதியோ அல்ல.ஆனால் கமலிடம் உள்ள தேசிய உணர்வை விட ரஜினியின் தேசியம் தான் காவிகளால் பெரிதாக பேசப்படுகிறது.காரணம் என்ன?ரஜினி தேசியத்தைத்தான் பேசி ஆக வேண்டும்.பிராந்தியம் பேசமுடியாது.இன்னொரு மாநிலத்தில் வந்து கோலோச்சிக்கொண்டிருப்பவர் எங்கிருந்து பிராந்தியம் பேசுவார்? “எல்லாரும் ஒன்னு எல்லாரும் ஒன்னு “என்று தேசிய மந்திரம்தான் முழங்குவார்.காவிகள் தேவைக்கு “எல்லாரும் இந்து எல்லாரும் இந்து ” என்று முழங்குவதைப்போல. கன்னடதுக்காரன் தண்ணீரை மறுக்கும்போதோ தமிழனை வெறுப்பதாக எண்ணி தமிழர் சிலைகளை தமிழ்நாட்டு பேரூந்துகளை நொறுக்கும்பொழுதோ இவருடைய தேசியம் ஊமையாகி விடுகிறது. இது எனக்கு எம்ஜியார் சிவாஜி காலத்தைத்தான் நினைவுறுத்துகிறது.எம்ஜியார் பிராந்தியத்தை பிரதானமாய் பேசும் திராவிட இயக்கத்தில் சேர்ந்து வளரும்போது அவருக்கு இணையான் சிவாஜி தேசியகட்சியான காங்கிரசில் சேர்ந்து ஜெய்கிந்த் கோசம் போட்டார்.எம்ஜியார் காலமானவுடன் எம்ஜியாருக்கு இருந்த ஆரவாரத்தையும் பரபரப்பையும் பார்த்து தேசியகட்சியிலிருந்து விலகி ” தமிழக முன்னேற்ற முன்னணி ” என்று கட்சி ஆரம்பித்தார்.தேசியம் சுத்தமாய் காணாமல் போனது.பேரளவிற்க்கு கூட கட்சியில் தேசியம் இல்லை.இதுதான் எதார்த்தம்.மொழி உணர்வால் மக்கள் ஒனறிணைவர்.தேசியம் என்பது அரசியல் ஒட்டு.அரசியல் பலம்.மொகலாயனும் வெள்ளையனும் இல்லையென்றால் ஏது பாரதம் ?ஏது தேசியம்?நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பல தேசிய இனங்கள் இணைந்து ஒரு நாடாக ஆகியிருக்கிறோம்.ஆகவே இந்தியன் என்று இருப்பது பலமே.முதலில் இந்தியனா முதலில் தமிழ்னா என்று கேட்பது சும்மா வெறுப்பேற்றுவது சீண்டிவிடுவதுதான்.ஏன் ஒரே நேரத்தில் தமிழ்னாகவும் இந்தியனாகவும் இருக்கமுடியாதா?அது என்ன முதலாவது இரண்டாவது!

              • உங்கள் கவனிப்பு சக்தி ரொம்ப மொக்கையா இருக்கு. ரஜினி தமிழ் உணர்வாளர்களின் வார்த்தைகளை தான் பெருமளவில் பேசி கொண்டு இருக்கிறார், சில மாதங்கள் முன்பு நடிகர் சங்க தேர்தல் நடந்த போது தென் இந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று சீமான் போன்றவர்கள் சொன்னார்கள்.

                ரஜினி தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் போது தமிழ் நாடு நடிகர் சங்கம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னார்.

                கமல் அனைத்து இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் வைக்க வேண்டும் என்றார்.

                ரஜினி போன்ற மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் என்ன சொன்னாலும் அதில் குறை கண்டுபிடிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.

                எங்களை போன்ற சாதாரண மனிதர்களுக்கு ரஜினி நல்லவர்… thats it

                அவர் பிஜேபியில் சேர்ந்தாலும் சரி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும் சரி அல்லது அவர் தனி துவங்கினாலும் சரி ரஜினிக்கு கண்ணை மூடி கொண்டு வாக்கு அளிப்போம்.

  5. வினவு எனக்கு நிறைய நேரத்தில் வழிகாட்டியாக இருந்து உள்ளது. ஆனால் இந்த இடத்தில் ஒரு பதிவை தெரியபடுத்த முற்படுகிறேன். 1.ரஜினி என்பது வெகுஜனம் அறிந்த ஒரு ஊடகப்பொருள், வினவு போன்ற அமைப்பாலோ, எத்தனையோ தலைசிறந்த எழுத்தாளர்களாலோ மற்றும் வினவு போன்ற அமைப்பினாலோ ஏற்படுத்த முடியாத விளைவை இதன் மூலம் வெளிப்படுத்த முடியும்.
    2. வழக்கு எண் படத்துக்கு நன்றாக விமர்சனம் அளித்திருந்தீர்கள்.. அது எத்தனை பேரை சென்றடைந்தது, இல்லை விவாதப்பொருளாக அமைந்தது? ஆனால் கபாலியில் சில குறைகள் இருந்தாலும் ஆண்டைகளும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளும் அப்படத்தை காரி உமிழ்ந்ததிலிருந்து தெரிய வேண்டாமா அவர்களின் எதிர்பொருளாக தான் சென்று கொண்டிருக்கிறது என்று.
    3. இயக்குனர் ரஞ்சித்தை சாதி ரீதியாக எத்தனையோ பேர் தீண்டி ஒதுக்குகிறார்கள், இந்நிலையில் நீங்களும் ஒதுக்கும் போது அது குற்ற உணர்வாகவோ அல்லது துரோகமாகவோ தெரியவில்லையா…? குறைகளை சொல்லுங்கள்… ஆனால் முழுமையாக வெறுத்து ஒதுக்குவது என்பது…..ஒரு ஆற்றலை முழுமையாக எந்த ஒரு வேலைக்கும் பயன்படுத்த முடியாது.

  6. கபாலி – காலா ஆதரவாளர்கள் பதில் சொல்லுங்கள்.

    பெரியாரையும் தலித் விரோதியாக சித்தரித்துள்ளார் (சித்தரிக்கிறார்) விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார். இதில் யார் தலித் விரோதி – பெரியாரா ? ரவிக்குமாரா?

    எச்சை ராஜா, அர.நீலகண்டன், ஜெயமோகன் போன்ற இந்துத்துவ வானரங்கள் பெரியார் மீது புழுதிவாறி தூற்றுகின்றனர், தலித் விரோதி என்கின்றனர்.

    யாருமே விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று சொல்லும் கம்யூனிஸ்டுகளும் பெரியாரை விமரிசிக்கின்றனர்.

    பெரியாருக்கு (பெரியாரிஸ்டுகளுக்கும்) இவர்களில் யார் விரோதி? ரவிக்குமாரா? வானரங்களா? கம்யூனிஸ்டுகளா?

  7. ரவிக்குமாரின் குரல் வெகுநாட் களாகவே தொணிமாறித்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

  8. ஒருவர் அரசியலுக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.

    தனது கட்சியின் பெயர்,கொள்கை,நோக்கம் இவை பற்றி எதையும் ரஜினி சொல்லாத நிலையில் தாமாகவே கற்பனைக் குதிரையில் பயணிப்பது ,கண்டிப்பது, தமிழர் ,தமிழர் அல்லாதவர் என சிலர் குதிப்பது அறியாமையின் உச்சம்.அவரது செல்வாக்கினை பயன்படுத்திக்கொண்டு தமது வாக்கு வங்கியை வளர்த்துக் கொண்டவர்களுக்கு ரஜினியை விமர்சிக்கும் தகுதி இல்லை என கருதுகிறேன்.தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்று மூச்சு முட்ட குரல் கொடுக்கிறவர்கள் சாதிய அரசியலை கையில் பிடித்திருக்கிறவர்கள்தான்!

    http://devimanian.blogspot.sg/2017/05/blog-post_24.html

    • உண்மை. தீவிர தமிழ்தேசியம் பேசுகிற அனைவருமே சாதிய அடக்குமுறைகளை ஆணவப்படுகொலைகளை கண்டுகொள்ளாமல் கடப்பவர்களாக இருக்கிறார்கள்.”தமிழந்தான் ஆளனும், நாங்கதான் ஆளப்பிறந்தவர்கள் மற்றவர்களெல்லாம் பேள பிறந்தவர்கள் தமிழ் கலாச்சாரம்” என்றெல்லாம் ஆரம்பித்து வைத்தவர், தமிழகத்தின் பால்தாக்கரேவாக தன்னை காட்டிக்கொண்ட திருவாளர் மருத்துவர் ராமதாசுதான்.அதற்க்கு முன்பும் தமிழ்தேசியவாதிகள் இருந்திருக்கலாம்.அது வெறும் முனுமுனுப்பாக பெரும்பாலோர் காதில் விழாததாகத்தான் இருந்தது.மருத்துவர்தான் தமிழ்கலாச்சாரத்தின் தீவிர காவலராக ஓங்கி ஒலித்தார். இன்றைக்கு மருத்துவரின் குரலே மங்கி போகும் அளவிற்க்கு வெவ்வேறு பெயர்களில் தமிழ்கலாச்சாரத்தை காது கிழியும் அளவிற்க்கு கத்திக்கொண்டு திரிகிறார்கள்.ஆனால் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை அந்த தமிழ் கலாச்சார வட்டத்திற்க்குள் தலித்துகளையும் முஸ்லிம்களையும் உள்ளிழுப்பதில் ஒரு தயக்கம். ராமதாசு பகிரங்கமாகவே தலித் மக்களை வெளியில் விட்டு மற்ற அனைவரையும் மடியில் வைத்துக்கொள்கிறார். மற்ற தமிழ் தேசியர்கள் இலங்கை புலிகளை கூட தூக்கி கக்க்த்தில் வைத்துக்கொண்டாலும் தலித் மக்கள் மேல் பெரிய கவனம் காட்டுவதே இல்லை. ” அனைவரும் இந்து அனைவரும் இந்து ” என்று கூவிக்கொண்டு தலித் இந்துக்களை அம்போவென்று விட்டுச்செல்லும் காவிகளுக்கும், ” தமிழனே ஆளனும் தமிழனே பிரதான்ம் தமிழினத்திற்க்கே தமிழ்நாடு ” என்று கூவிக்கொண்டு தமிழராகிய தலித்துகளுக்கு எதிராக தமிழர்களான் மற்ற சாதி இந்துக்களே இருப்பதை கண்டுகொள்ளாமல் போகும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு? ஆக காவிகள் இந்திய தேசியம் என்ற போர்வையில் ஒடுக்கப்பட்ட மக்களை புறக்கணிக்கிறார்கள் இவர்கள் தமிழ்தேசியம் என்ற போர்வையில் அதே மக்களை தனியே விட்டுவிட்டு ஓடுகிறார்கள். அதனால்தான் அதில் பலர் பெரியாரையே, மொழியை வைத்து ஓரங்கட்டும் வேலையை ஆரம்பித்திருப்பது. பெரியாரை புறக்கணித்து இனக்காவலன் வேடம் போடும் எவனும் அயோக்கியனே. பெரியார் தமிழரில்லையென்றால் நாங்கள் யாரும் தமிழரில்லை. எங்களுக்கு அப்படிப்பட்ட தமிழர் அடையாளம் தேவையில்லை என்ற விழிப்போடு ஒவ்வொரு தமிழனும் இருக்க வேண்டும்.

  9. நான் ரஜினகாந்த் அரசியலுக்கு வருவதைப்பற்றிய என் கருத்தை தெளிவு படுத்தி விடுகிறேன். அவர் தமிழ்ரா தமிழரில்லையா என்பதல்ல பிரச்சினை. தமிழரின் நாகரிகத்தை அறிந்தவரா தமிழின் தொன்மம் புரிந்தவரா என்பதும் முக்கியமல்ல.அவர் நாற்பதாண்டு காலம் தமிழரோடும் தமிழ் நாட்டோடும்தான் இருக்கிறார். இந்தியா முழுக்க தமிழ் ந்டிகராகத்தான் அறியப்படுகிறார்.ஒரு தமிழச்சியைத்தான் மணந்திருக்கிறார். தன் பிள்ளைகள் இருவருக்கும் தமிழ் குடும்பத்தில்தான் மாப்பிள்ளை எடுத்திருக்கிறார்.தன் மூதாதையர்கள் கிரிஷ்னகிரியை சேர்ந்தவர்கள் என்றும் சொல்கிறார்.இதற்க்கு மேல் அவர் அரசியலுக்கு வந்து தமிழகத்தை ஆளும் தகுதி உள்ளவரா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். “நீ கட்சியே ஆரம்பிக்க கூடாது ” என்று கூப்பாடு போட எவனுக்கும் அதிகாரமில்லை. ஆனால் ஒரு குடிமகனாக எனக்கு இருக்கும் கேள்வியெல்லாம் இதுதான்.. அவரின் முதல் படம் 1975ல் வெளிவந்து வெற்றியடைகிறது. சாதாரண பாத்திரம்தான் என்றாலும் கவனிக்கப் படுகிற நடிகராக அடையாளப்படுத்தி விடுகிறார். அதன் பிறகும் சின்ன சின்ன பாத்திரங்கள் வில்லன் என்று கிடைக்கும் அனைத்து வேடங்களிலும் நடித்து த்ன்னை வித்தியாசப்படுத்தி காட்டி நிலைநிறுத்திக்கொண்டு இரண்டு மூன்று வருடங்களிலேயே தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக தயாரிப்பாளர் வினியோகஸ்த்தர்களின் பொன்முட்டையாக மாறிவிடுகிறார். ஐந்து வருடத்திலேயே போட்டியே இல்லாத உச்சநடிகராக கோலோச்சிவிட்டார். அவருடைய முதல் இருபது வருடத்தை விட்டு விடுவோம்.தொழில்ரீதியாக தன்னை நிலைநிறுத்தவும் த்ன்னை சுற்றியுள்ளதை கவனிக்கும் பக்குவமடையவும் அது போதும்.இன்று அரசாளும் ஆர்வமுள்ளவர், அதன் பிறகு வந்த இருபத்தி இரண்டு வருடங்கள் என்ன செய்தார் ?எப்படி இருந்தார்?ஜெயலலிதாவின் ஆரம்பகால் அடாவடித்தனத்தால் ஒட்டு மொத்த தமிழகமும் பாதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வெறுப்புற்றிருந்த காலகட்டத்தில் முதல்வரின் பகுதியில் வசித்த இவருக்கு, வீட்டிற்க்கு சுதந்திரமாக சென்று வரமுடியவில்லை என்ற வெறுப்பில்தான் ஜெயலலிதாவை பகிரங்கமாக எதிர்த்தார் என்று பேசப்பட்டது.பிறகு கொஞ்ச காலத்திற்க்கு பிறகு தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டதாக குண்டு போட்டார் அத்தோடு சரி.அதன் பிறகு இந்த தமிழ்நாட்டு பிரச்சினையில் இவரின் பார்வை என்ன? பங்களிப்பு என்ன? காங்கிரஸ் திமுக கூட்டணியில் 2ஜி ஊழல் இந்தியா முழுக்க பேசப்பட்டதே இவரின் கருத்து என்ன? குஜராத்தில் ரயில் எறிக்கப்பட்டது பிறகு அதன் பெயரால் சிறுபான்மையினர் கொளுத்தப்பட்டார்கள் அப்போதெல்லாம் எங்கே போனார்? இலங்கையில் புலிகளும் புலிகளோடு சேர்ந்து அப்பாவிகளும் மூன்று நாடுகளின் துணையோடு கொன்று குவிக்கப்பட்டார்களே அப்போது குமுறினாரா அல்லது ” போர் என்றால் அப்பாவிகளும் கொல்லப்படத்தான் செய்வார்கள்” என்ற ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிலாவது இருந்தாரா?ச்ரி…சமீபத்தில் பணமதிப்பு குறைக்கப்பட்டவுடன் உணர்ச்சி வசப்பட்டு முதல் அறிக்கையாக ” சூப்பர் சூப்பர்” என்று சப்பு கொட்டினாரே பிறகு நாடு முழுக்க அதன் சாதக பாதகங்களை விரித்து பெரும் விவாதம் நடந்ததே மக்கள் எல்லாம் ஏடிஎம் வாசலில் பிச்சை எடுத்து கிடந்தார்களே இது நல்லதுதான் என்றோ பொறுத்துக்கொள்ளுங்கள் என்றோ அலலது தவறான முடிவு நான் ஆதரித்தது தவறு ,அரசு இவ்வளவு அவசரமாக இந்த முடிவை எடுத்திருக்க வேண்டாம் என்றோ சொன்னாரா? மாட்டுக்கறியை வைத்து கேவலமான் அரசியலை இந்த பிஜேபி அரசு செய்து கொண்டிருக்கிறதே இது சரி அல்லது சரியில்லை ஏதாவது சொன்னாரா? தமிழ்நாட்டில் ஒரு அரசாங்கம் இயங்குகிறதா அது இறையான்மையோடு இருக்கிறதா என்ற சந்தேகம் ரஜினிக்கு உண்டா இல்லையா? இப்படி எந்த ஒன்றிலும் அவரின் பார்வை? என்ன கொள்கை என்ன ?சித்தாந்தம் என்ன ?ஒன்றும் தெரியாத நான் அவரை அரசியலுக்கு அழைத்து வந்து என்னத்தை கிழிக்கப்போகிறேன்.? இன்னும் சில மாதங்களில் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிக்கப்போகிறவர் எந்த அரசியல் பிரச்சினையிலும் என்ன கருத்துடையவர் என்றே புரியாமல் அவர் எதை மாற்றுவார் ?யாரோடு மாற்றுவார்? மேடையில் துள்ளி ஏறவும் குட்டிகதைகள் சொல்லி தூங்கவைக்கவுமா அவரை நான் முதலைச்சர் ஆக்க வேண்டும்? செயல்படாத ஒருவன் தமிழனா இருந்தால் என்ன ?தெலுங்கனா இருந்தால் என்ன? அவன் எனக்கு தேவையில்லை. தெளிவோடும் மக்கள் நலம்நாடும் குணத்தோடும் உள்ள ஒருவன் கன்னட த்தானாக இருந்தால் என்ன மலையாளியாக இருந்தால் என்ன ?அவன் ஆளட்டும்

  10. இன்னா மணிகண்டா இப்பூடி கோவப்படுறே…நீ இம்மாம்பெரிய அறிவாளி. எங்களுக்கெல்லாம் இன்னா இன்னா கதல்லாம் சொல்லிதந்துனுகீரே…கோவப்பட்லாமா நீயி…கூல் ஆவு வாத்யாரே…

  11. நைனா..மணீ நைனா.. ரஜினி உனக்கு மட்டுமா நைனா ரஜினி என் கும் தானே நைனா ரஜினி.நான் பேசுனா ஏன் நைனா அப்பாடக்கரு அம்மாடக்கருன்றியே …

Leave a Reply to அக்காகி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க