privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்தியார் பயங்கரவாதி ? சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்

யார் பயங்கரவாதி ? சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்

-

மாஸ் அமைப்பை பயங்கரவாத இயக்கம் என்று குற்றம் சாட்டிய சவுதி அரேபியாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறது அரபு உலகம். ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பததாக குற்றம் சுமத்தி கதாருடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் கடந்த ஜூன் 5 அன்று துண்டித்தன.

“ஹமாஸ் எதிர்ப்பு இயக்கமேயொழிய பயங்கரவாதமல்ல” என்ற தலைப்பில் டுவீட்டர், பேஸ்புக் விவாதங்கள்

அதனைத் தொடர்ந்து “ஹமாஸ் எதிர்ப்பு இயக்கமேயொழிய பயங்கரவாதமல்ல” என்ற தலைப்பில் டுவீட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியது. டுவீட்டுகளின் மையமாக பாலஸ்தீனம் இருந்தபோதிலும் கதார், ஜோர்டான், எகிப்து, அல்ஜீரியா, ஓமன், மற்றும் லிபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி விடுதலை பெறுவது பாலஸ்தீன மக்களின் உரிமை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹமாஸை பயங்கரவாத இயக்கம் என்று கூறுவது ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இசுரேலுக்கு மறைமுகமாக உதவுவது போலாகிவிடும் என்றும் சவுதிக் கூட்டணியின் நிலைபாடுகளை கடுமையாக சாடியும் வருகின்றனர்.

அரபு உலகத்தின் இந்த எதிர்வினைகள் ஹமாஸ் எதிர்ப்பியக்கத்தின் நியாயமான செயல்பாடுகள் அரபு உலகத்தில் சர்ச்சைக்குரிய ஒன்றாக இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

பாலஸ்தீன ஆய்வாளரான சரி ஓராபி (Sari Orabi) பேஸ்புக்கில் எழுதியது:

பிரச்சினைக்குரியதாக இல்லாத ஒன்றை விவாதிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கவில்லை. குற்றவாளிகளும் தரங்கெட்டவர்களுமே எங்களுடன் முரண்படுகின்றனர். அது அவர்களுக்கும் தெரியும்.

சலீம் அல்-மென்ஹாலி (Salim al-Menhali), ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சர்வதேச உறவுகள் துறைப் பேராசிரியர்:

ஹமாஸ் எதிர்ப்பு இயக்கமேயொழிய பயங்கரவாதமல்ல. அது யாரையும் தாக்குவதில்லை; ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாலஸ்தீனத்தை பாதுகாக்க போராடுகிறது என்பது தான் யதார்த்தம்… எது எதார்த்தம் இல்லையென்றால்… எதிரியைத் திருப்திபடுத்துவதற்காக ஹமாஸ் தாக்கப்படுவது தான்.

பாலஸ்தீனைச் சேர்ந்த முன்னாள் சிறைவாசியான மஹ்முத் மெர்டேவே (Mahmoud Merdawe) டுவீட்டரில் எழுதியது:

ஹமாஸை பயங்கரவாத இயக்கம் என்று சவுதி அரேபிய அதிகார வர்க்கத்தினர் சிலர் கூறியதைக் கேட்டு [இசுரேலிய] ஆக்கிரமிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

டுவீட்டர் பயனர் ஆதம் ஷார்கிவி Adham Sharkawi):

ஹமாஸ் இசுரேலிடம் மட்டுமே சண்டையிடுகிறது. டெல் அவீவ் (Tel Aviv) மீது மட்டுமே குண்டு வீசுகிறது. பயங்கரவாதத்துடன் அதனை தொடர்புபடுத்தி பேசுவது என்பது இசுரேலுக்கு செய்யும் ஒரு இலவச சேவையாகும் மற்றும் நெத்தென்யாகுவின் (இஸ்ரேல் பிரதமர்) வார்த்தைகளை மூடத்தனமாக எதிரொலிப்பதற்கு ஒப்பாகும்.

பாலஸ்தீனிய ஆர்வலர் மற்றும் பதிவரான அகமது பைகாவி (Ahmed Biqawi):

ஒவ்வொருமுறையும், எல்லா இடங்களிலும் ஏற்கனவே தெரிந்த ஒரு விடயத்தை அது உண்மைதானா, உண்மைதானா என்று மீண்டும் உங்களிடம் கொடியவர்கள் எழுப்புகிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்கது.

எகிப்திய அரசியல்வாதியான அய்யன் நூர் (Ayman Nour) தன்னுடைய அதிர்ச்சியை பதிவு செய்கிறார்:

சவுதி நிதியமைச்சரின் பாரிஸ் அறிக்கைகள் குழப்பம் நிலவிக் கொண்டிருப்பதற்கான சான்றாதாரங்கள்.

பேஸ்புக் பயனர் ஒருவர்:

சவுதி மக்களை பொருத்தவரை தீவிரவாதம் என்பது பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் ஆக்கிரமிப்பு, ஈராக் மற்றும் அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளே ஆகும். தீவிரவாதம் என்பது முதல் கட்டமாக பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கிவிட்டு அதற்கடுத்து உங்களுடைய கதவுகளை இசுலாமிற்கு எதிரானவரான ட்ரம்பிற்கு திறந்து விடுகிறது……

செய்தி ஆதாரம்:

Arab world tweets: Hamas is resistance, not terrorism