Wednesday, January 26, 2022
முகப்பு பார்வை இணையக் கணிப்பு கருத்துக் கணிப்பு : மோடியின் ஏமாற்றுப் பேச்சை ஊடகங்கள் வெளியிடுவது ஏன் ?

கருத்துக் கணிப்பு : மோடியின் ஏமாற்றுப் பேச்சை ஊடகங்கள் வெளியிடுவது ஏன் ?

-

டந்த வாரம் 22.06.2017 அன்று ஹரியாணாவில் ஜூனைத் கான் என்ற சிறுவனையும் அவனுடன் வந்த சகோதரர்களையும், “மாட்டுக்கறி திண்ணும் தேசவிரோதிகள்” என்று கூறி ஓடும் இரயிலிலேயே கத்தியால் குத்தியது ஒரு கும்பல். இதில் ஜூனைத் கான் மரணமடைந்தார், அவரது இரண்டு சகோதரர்கள் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் பசுவின் பெயரால், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இக்கொலைகளைக் கண்டித்துச் சமூக செயற்பாட்டாளர் ‘சபனம் ஹாஸ்மி’ தனக்கு வழங்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர் உரிமைக்கான விருதை திருப்பியளித்தார். அதோடு, இந்தியா முழுவதும் இத்தகைய இந்துத்துவக் கிரிமினல்களின் கொலை வெறியாட்டத்திற்கு எதிரான குரல்கள் வலுக்க ஆரம்பித்தன. “எனது பெயரில் அல்ல” என்ற முழக்கத்தின் கீழ், பல்வேறு தரப்பினரும், ஹிந்துத்துவக் கும்பலின் கொலை வெறியாட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட ஆரம்பித்தனர்.

நாட்டையே உலுக்கிய ஜுனைத் கான் படுகொலை குறித்து வழக்கம் போல அமைதி காத்து வந்த மோடி, பிரச்சினை வலுப்பெறத் தொடங்கிய பின்னர், இனியும் மவுனித்திருக்க முடியாது என்பதை உணர்ந்தார்.  இன்று (29.06.2017) குஜராத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, “பசுக்களின் பெயரால் மனிதர்களைக் கொல்வதை அனுமதிக்க முடியாது. நாம் அஹிம்சையின் நிலத்தைச் சேர்ந்தவர்கள்; வன்முறையைக் கையில் எடுக்கக் கூடாது; தேசப்பிதா காந்தி, இத்தகைய சம்பவங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்” என்று கூறியுள்ளார். இறுதியாக நாம் அனைவரும் சேர்ந்து போராடுவோம் என்று முடித்துள்ளார்.

இந்த உரையின் பொருள் என்ன? அவர் யாரைக் கண்டிக்கிறார்? யாருக்கு ஆதரவாக பேசுகிறார்?

2002-ம் ஆண்டு குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை குறித்து இன்று வரை வாய் திறவாத மோடி அது குறித்து கரண் தாப்பர் வருந்துகிறீர்க்ளா என்று கேட்ட போது வெளிநடப்பு செய்தார். பிறகு அக்லக், உனா என்று தொடரும் மாட்டுக்கறி வெறுப்பு சங்க பரிவார படுகொலைகள் நடந்த போதும் இது போன்ற கண் துடைப்பு பேச்சுக்களை பேசியுள்ளார்.

இன்றும் அவர் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறவில்லை. மறைமுகமாக பசுவின் புனிதத்தை உறுதிப்படுத்தியதோடு, வன்முறையை நீங்கள் கையில் எடுக்காதீர்கள் (சட்டமே தண்டிக்கும்) என்று கூறியுள்ளார். இருப்பினும் மோடியின் பேச்சை மாபெரும் கண்டிப்பு போன்று ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. காரணம் என்ன?

மோடியின் வழக்கமான ஏமாற்றுப் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்ன?

மோடியை அம்பலப்படுத்துவதற்கு பயம்
மோடியை ஆர்.எஸ்.எஸ்-க்கு அப்பாற்பட்ட நியாயவானாக காட்டுவது
மோடியின் பேச்சு மீது உண்மையிலேயே நம்பிக்கை

வாக்களியுங்கள்!

 1. ஊடகங்கள் நடு நிலையானவை சுதந்திரமானவை என்ற
  ஆழ்மன எண்ணத்தின் வெளிப்பாடே கட்டுரையின் தலைப்பு.
  ஆளும் வர்க்கங்கள் பல கட்சிகளாக பிரிந்து இயங்குவதே புதிய முதலாளித்துவ அரசியல் நடைமுறை.
  அதற்டகேற்ப ஊடக முதலாளிகளும் பல பிரிவுகளாகவே இயங்குவர்.அதனால்.
  ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே பெரும்பாலான ஊடக முதலாளிகள் நடப்பார்கள்.ஆளுகின்ற கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை மாறிவிட்டது என்பது தெளிவாக தெரிந்து விட்டால் மட்டுமே தங்கள் இலாபத்துக்காகவும் நலன்க ளுக்காகவும் உண்மைகளையும் வெளியிடுவார்கள்.
  பயம், நியாயம் உண்மை நம்பிக்கை போன்றவற்றைப் பார்த்தால் ஊடக முதலாளிகளால் இலாபம் சம்பாதிக்க முடியுமா?. என்ன தலைப்பு என்ன கருத்துக் கணிப்பு?. முதலில் ஊடகங்களை மக்களின் ஊடகங்கள் முதலாளிகளின் ஊடகங்கள் என்று பிரித்துப் பாருங்கள்.

 2. /தேசப்பிதா காந்தி, இத்தகைய சம்பவங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்./

  உண்மைதான். அதுனாலதான் அவரையே போட்டு தள்ளியாச்சு.

 3. இதற்கு முன் ஒரு முறை கண்ணீர் வீட்டீர்கள் ஞாபகம் இருக்கா மோடி அவர்கள் வெறும் வார்த்தை மட்டும் தான் செயலுக்கு யதும் இல்லை

 4. மோடிய அம்பலப்படுத்த பயம் என்ற வாக்கியத்தில் ஏதோ இந்த ஊடகங்களுக்கு மோடிக்கு எதிரான நிலைபாடு இருப்பதான ஒரு பொய் உள்ளது.

  உண்மையில் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் சங்கிகளின் கொள்கைகளை துரிதகதியில் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் மோடியை அதையும் தாண்டி புனிதமானவர் என நிறுவுவதன்மூமாக பாதுகாப்பதும், இந்த செயல்திட்டத்தை முழுமைப்படுத்தும் கடமை உணர்ச்சியும்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

  இந்த ஊடக தரகர்களில் பெரும்பகுதி பார்பன,பனியா மேலாண்மையிலும் இன்னபிற அவர்களின் அடிமைகளிடமும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  மோடிய அம்பலப்படுத்த பயம் – என்ற கருத்தை பதிவுசெய்தவர்கள் இதை பரிசீலிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

 5. ஊடகங்கள் அத்தனையையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதும், ஏதோ குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்து அவை பயணிப்பதாகவும் நினைத்தால் அது தவறாக படுகிறது.இன்றைய இந்திய ஊடகங்களின் குணம் “”பரபரப்பான பிரேக் நியூஸ்””. அதை தாண்டி மோடி ஒன்றும் பேசுபடு பொருள் அல்ல. இதற்கு முன் மன்மோகன் சிங்கை எப்படி பார்த்தார்களோ அப்படியே மோடியும். இன்றைய செய்தி என்பது மாறி இப்போதைய செய்தி என்றாகவும் அளவிற்கு செய்தி பைத்தியங்களாக சுற்றி திரிகின்றன இவைகள்.
  இன்று ஊடகங்கள் யாரிடம் உள்ளன. ரிலையன்ஸ், ஸ்டார் மற்றும் டைம்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், வைகுண்டராஜன் மற்றும் பச்சமுத்து போன்ற முதலைகள், சசி, கருணா போன்ற கழிசடை அரசியல்வாதிகள் மற்றும் உதிரி பார்ப்பன குடும்பங்கள்தான். பணம் மற்றும் சுயநலம்தான் இவைகளின் நோக்கம். மோடி பற்றிய ஆராய்ச்சிகள், ஆர்.எஸ்.எஸ் பங்கு, அரசு பற்றிய அக்கறை எதுவும் இல்லை. இவர்கள் நேற்று இருந்தாரகள், இன்று இருக்கிறார்கள், நாளையும் இருப்பார்கள் இதுபோலவே.இவர்களுக்கு தேவை இன்றைய பரபரப்பு செய்தி அது பற்றி பேச நாலு பேர்கள் நடுவில் புகுந்து களமாட அர்னாப் மற்றும் பாண்டே போன்றவர்கள். இவர்களுக்கு ஒருவன் இருந்தாலும் செய்தி அவன் செத்தாலும் செய்தியே.மோடி உரையின் பொருள் என்ன? அவர் யாரைக் கண்டிக்கிறார்? யாருக்கு ஆதரவாக பேசுகிறார்? என்றெல்லாம் பேச அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஏனென்றால் அவைகள் அவர்களுக்கு ஆபத்து. நாம் இப்போது தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டிய செய்தி மோடி பேசியதற்கு பின் ஒரே நாளில் மாட்டுக்கறி பெயரில் ஜார்கண்டில் நடந்த மற்றொரு இஸ்லாமிய மனிதனின் கொலை. இதுவும் இவர்களுக்கு ஒரு மற்றுமொரு செய்தியே.

Leave a Reply to saran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க