privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் மின் நூல் வெளியீடு

மருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் மின் நூல் வெளியீடு

-

யிர்காக்கும் மருத்துவம் இன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் சென்றதன் விளைவுகளை விவரிக்கும் நூல்.
இடம்பெற்றுள்ள கட்டுரைகள்.

  1. ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !
  2. இந்தியக் குழந்தைகளைக் கொல்லும் தனியார்மயக் கிருமி !
  3. இப்படி ஒரு மருத்துவரை சந்தித்திருக்கிறீர்களா ?
  4. இங்கிலாந்து கிளாக்ஸோ மருந்து கம்பெனியின் சீன ஊழல் !
  5. ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?
  6. மருத்துவர் – தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய் !
  7. பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி !
  8. ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி PRPC சாதனை
  9. சிப்ரோபிளாக்சசின்
  10. அப்பல்லோ என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன ?
  11. SICKO மைக்கேல் மூரின் ஆவணப்படம் !
  12. இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள்
  13. உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு !

பதிமூன்று – கட்டுரைகள்,  80 – பக்கங்கள்,  அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

 Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.
________________________

முப்பது வருடங்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனைகள்தான் முதலமைச்சர்களே சிகிச்சை பெறும் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன. இன்றோ தினக்கூலியில் வாழும் தொழிலாளிகளே தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. சிசு மரணமும் சிகிச்சையின்றி மரணமும் அரசு சுகாதார மையங்களின் யோக்கியதையைக் காட்டுகின்றன.

இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இக்கல்லூரிகளின் மருத்துவமனைகளில் சோதனைச்சாலை எலிகளாகும் பாக்கியம் மட்டும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. அமெரிக்காவின் பில்கேட்ஸ் மெலிந்தா அறக்கட்டளையும் கேட்பாரின்றி இந்திய மக்களை எலிகளாக சோதித்து வருகிறது.

இந்திய மருத்துவ நிறுவனங்கள் தயாரிக்கும் மலிவு விலை புற்று நோய் மருந்துகளை செத்து மடியும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்ப இயலாது. ஏனெனில் உலக வர்த்தகக் கழகம் உருவாக்கியிருக்கும் வணிக காப்புரிமை ஏழை நாடுகளின் எமனாக நிலைபெற்றுவிட்டது.

அரசு நிதியை பெறுவதற்காக ஏழை மக்களின் கண்களை பறித்த ஜோசப் கண் மருத்துவமனை இருப்பது ஆப்பரிக்காவில் அல்ல, தமிழகத்தில். தரத்தின் சின்னமாக காட்டப்படும் அப்பல்லோ மருத்துவமனைதான் புதுதில்லியில் ஏழைகளின் சிறுநீரகங்களை பறிப்பதிலும் ஈடுபடுகிறது.

அமெரிக்காவிலோ உங்கள் காப்பீடு குறைவு என்றால், தொகைக்கேற்ப கையில் உள்ள ஐந்து விரல்களுக்கு பதில் இரண்டு விரல்களுக்கு மட்டும் சிகிச்சை கிடைக்கும். தமிழகத்திலோ அரசின் காப்பீடு அட்டை. தனியார் மருத்துவமனைகளும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் அள்ளும் இந்தப் பணம் மக்களிடமிருந்து அரசு வசூலிக்கும் வரிப்பணம்.

மராத்திய விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் மிக முக்கியமான காரணியாக கண்டறியப்பட்டிருக்கிறது தனியார் மருத்துவக் கொள்ளை தோற்றுவிக்கும் கடன். உயிர் காக்கும் மருத்துவம் உயிர் பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்பதுதான் மருத்துவம் தனியார்மயம் என்பதன் உண்மையான பொருள்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

_______________________

இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா!
மக்கள் ஊடகம் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க