privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காதொடரும் ஆப்கன் அவலம் – அப்பாவிகளை படுகொலை செய்யும் அமெரிக்கா

தொடரும் ஆப்கன் அவலம் – அப்பாவிகளை படுகொலை செய்யும் அமெரிக்கா

-

.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கிறேன் பேர்வழி என்று பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 8 அப்பாவி ஆப்கானியப் பொதுமக்களை அமெரிக்க இராணுவம் படுகொலை செய்திருக்கிறது.

மேயஜி பாபா மாவட்டத்தைச் சேர்ந்த ஹப்கிநானா கிராமத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரானத் தாக்குதல்களில் ஆப்கன் படையினரும் அமெரிக்கப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். அமெரிக்கப் படையின் இந்தத் தாக்குதலில் 40 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் 8 அப்பாவி மக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நங்கார்ஹார் மாநில பத்திரிக்கைச் செயலாலர் நூர் அகமது ஹபிபி கூறியுள்ளார். தாக்குதலில் காயமுற்ற மேலும் 8 பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மக்கள் குடியிருப்புகளில் மறைந்திருந்து ஆப்கன் இராணுவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர் தாக்கியதாக நங்கார்ஹார் மாநில நிர்வாகம் கூறியிருக்கிறது. அதே நேரத்தில் மக்கள் மீதான குண்டு வீச்சில் ஈடுபட்டது ஆப்கன் படையா, இல்லை; அமெரிக்க படையா என்பது குறித்து கருத்து எதுவும் அந்நிர்வாகம் தெரிவிக்கவில்லை என ஆப்கனின் செய்தி நிறுவனம் பஜ்ஹோக் கூறியிருக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு ஈமச்சடங்கில் ட்ரோன் மூலம் இந்த படுகொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கிராம மக்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சியின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தாக்குதலில் உயிர் தப்பிய ஒருவர் கூறினார். “இந்த கொடுமைக்கு அமெரிக்கர்கள் கண்டிப்பாக பதில் கூற வேண்டும். அமெரிக்கர்கள் செய்தது எங்களுக்கும், எங்கள் மக்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று காயமடைந்த ஒருவர் கூறினார்.

ஆனால் கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஆப்கனில் உள்ள அமெரிக்க படையினரின் செய்தி தொடர்பாளரான பில்-சால்வின் மறுத்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பொதுமக்கள் இருப்பதாக எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனாலும் இதைப் பற்றி ஆய்வு நடத்தப்படும் என்று கூறினார்.

இது போன்றத் தாக்குதல்களை மறுப்பது அமெரிக்காவிற்கு ஒன்றும் புதிதல்ல. தாலிபனுக்கு எதிராக 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கப் படையினர் நடத்தியத் தாக்குதலில் கிட்டத்தட்ட 33 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட போது முதலில் அமெரிக்கா மறுத்தது. ஆனால் பின்னர் அதை ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிவரத்தின்படி 2017 –ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே 232 ஆப்கன் பொதுமக்கள் பலியாகி இருக்கின்றனர். அதுவே 2016 -ம் ஆண்டில் முதல் பாதியில் 162 பொதுமக்கள் படுகொலைச் செய்யப்பட்டது பழைய செய்தியாகிவிட்டது. அமெரிக்க விமானப்படை வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி 2017 -ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் அமெரிக்க-ஆப்கன் போர் விமானங்கள் 1634 குண்டுகளை வீசியிருக்கின்றன.

2012 -ம் ஆண்டில் கிட்டத்தட்ட 50,000 அமெரிக்க படைவீரர்கள் இருந்ததை ஒப்பிடுகையில் தற்போது வெறும் 9,800 வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் வான்வெளித் தாக்குதல்களை அதிக அளவில் நடத்துவதன் மூலம் முன்பு இருந்ததை விட மோசமான அழிவுகள் ஏற்படுத்துவதை அமெரிக்கா உறுதி செய்கிறது.

“இந்த விபத்து எண்ணிக்கை ஒவ்வொன்றும் ஒரு நொறுங்கிய குடும்பத்தையும், நம்ப முடியாத அதிர்ச்சியையும் துன்பத்தையும் மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்களையும் எதிரொலிக்கிறது” என்று ஐ.நா மனித உரிமை ஆணையரான ஜீத் ராத் அல் ஹுசைன் கூறியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று ஆப்கனில் அமெரிக்கா கால் வைத்ததில் இருந்து இன்று வரை மாண்டு போன அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் ஆப்கானிய மக்களுக்கும் இடையேயான முரண்பாட்டை தீர்ப்பதற்கு முதல் நிபந்தனை அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான முரண்பாட்டைத் தீர்ப்பதுதான். இதுவே ஆப்கானிஸ்தானின் விடுதலைக்கும் நிம்மதிக்கும் முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும்.

செய்தி ஆதாரம் :

_______________________

இந்த  உலகச் செய்தி உங்களுக்கு பயணளிக்கும் வகையில் உள்ளதா!
அமெரிக்க ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை தொடர்ந்து எதிர்க்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

  1. Not just people killed in afghan are civilians…people being killed around the globe by some anonymous bull shit blagard bloid sucking terrorists are also civilians…

    • அதனால் என்ன சொல்ல வருகின்றீர்கள்?

      தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதும் இராணுவத்தினால் அப்பாவிகள் கொல்லப்படுவதும் ஒன்று என்கின்றீர்களா? அப்படி என்றால் தீவிரவாதிகள் செய்வதும் இராணுவம் செய்வதும் ஒன்று என்பது உண்மைதானே.

      தீவிரவாதம் என்பது வானத்தில் இருந்து காய்த்து தொன்குவதல்ல.மாறாக அல்கொய்தா ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை வளர்த்து விட்டதே அமெரிக்க என்றானப் பிறகு தீவிரவாதிகளால் இறக்கும் பொதுமக்களுக்கும் அமெரிக்கா தானே பொறுப்பேற்க வேண்டும் .

      • ஒரு கேள்வி ராணுவம் தீவிரவாதிகளை கொல்ல வருகிறது அப்போது தீவிரவாதிகள் பொது மக்கள் (பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்) பின்னால் நின்று கொண்டு ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுடுகிறார்கள், ராணுவமும் திருப்பி சுடுகிறது அதனால் பொது மக்கள் (பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்) இறக்கிறார்கள். இந்த மரணத்திற்கு தீவிரவாதிகள் காரணமா அல்லது ராணுவம் காரணமா ? உங்களிடமிருந்து விளக்கமான பதிலை எதிர் பார்க்கிறேன்.

  2. மணிகண்டா மிகவும் குழந்தைத்தனமான உங்கள் கேள்வி அறிவு முதிர்ச்சியை வெளிப்படுத்தி காட்டிவிடுகிறது.
    ஒரு தீவிரவாதியாக பயங்கரவாதியாக இருப்பவனுக்கு என்ன நோக்கம் இருக்கும்?
    அவனுக்கு மாண்பு மனிதம் இரக்கம் பண்பு ஏதாவது இருக்குமா?
    இதெல்லாம் இல்லாது போனதால்தான் அவன் தீவிரவாதியாக பயங்கரவாதியாக உருவெடுக்கிறான்.
    (நான் மெய்யாகவே ஒரு தீவிரவாதியை பயங்கரவாதியை பற்றி மட்டுமே பேசுகிறேன்.அரசியலுக்காக ஜோடிக்கப்பட்ட “தீவிரவாதி “தனி)
    ஒரு நாட்டின் ராணுவம் என்பது தீவிரவாதியின் மனநிலையில் செயல்படுவதா?
    ராணுவத்தின் வேலை நாட்டை காப்பது.நாட்டை காப்பது என்றால் என்ன மக்களை காப்பதுதான்.
    “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கப்படலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்படலாகாது ” என்று நீதித்துறையில் ஒரு பிரபலமான சொலவடையை கேள்விப்பட்டிருப்போம்.இதுதான் நீதியின் மாண்பு இதுதான் அறத்தின் மாண்பு.
    இந்த ஒரு காரணத்தில்தான் காந்தகார் விமான கடத்தலின் போது (வாஜ்பேய் ஆட்சியில்) தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டு பயணிகள் விடுவிக்கப்பட ஒத்துக்கொள்ளப்பட்டது.
    ஒரு தீவிரவாத கும்பல் அப்பாவி மக்களை கேடயமாய் பயன்படுத்தி தப்பமுயன்றால் அந்த அப்பாவிகளையும் சேர்த்து சுட்டுத்தள்ளு என்பதை சரிதான் என்று உங்கள் மனசாட்சி சொல்கிறதா?
    உங்களையோ உங்கள் குடும்பத்தையோ அவ்வாறு கற்பனை செய்ய உங்களால் ஒன்னுமா?
    ஒருவேளை “தேசபக்தியை”மொத்த குத்தகைக்கு எடுத்த கூட்டத்தை சேர்ந்தவர் நீங்கள் என்பதால் அந்த நேரத்தில் ராணுவத்தை நோக்கி ” தீவிரவாதிகளோடு சேர்த்து என்னையும் சுடுங்கள்” என்று கதறலாம். அந்த நேரத்தில் கூட ஒரு அப்பாவி குடிமகனாகிய உங்களுக்கு எந்த சேதாரமும் வந்துவிடக்கூடாதே என்றுதான் ஒரு நல்ல ராணுவ தலைமை நடந்து கொள்ளும்.
    அந்த இடத்தில் அந்த நேரத்தில் ஒரு தீவிரவாதி கொல்லப்படுதலை விட ஒரு அப்பாவி குடிமகன் உயிர்பிழைத்தாக வேண்டும் என்பதே ராணுவத்தின் தவிப்பாக இருந்தாக வேண்டும்.இதுதான் ராணுவம்…இதற்க்காகத்தான் ராணுவம்..

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க