privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமனிதகுல வரலாற்றின் அடிப்படையே விவசாயம்தான் - தோழர் மருதையன் உரை

மனிதகுல வரலாற்றின் அடிப்படையே விவசாயம்தான் – தோழர் மருதையன் உரை

-

ஞ்சையில் ஆகஸ்டு 5 2017 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் “விவசாயியை வாழவிடு” மாநாட்டின் கருத்தரங்கில் தோழர் மருதையன் ஆற்றிய தலைமை உரையின் சுருக்கம்:

க்கள் அதிகாரம் அமைப்பின் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி.

உணவை உற்பத்தி செய்து நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் விவசாயி இன்று நெஞ்சு வெடித்துச் சாகிறான். விளையும் இடம், விளையாத இடம் என்று எந்த விதிவிலக்குமின்றி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை அதிகரித்துள்ளது.

ஆகையால் நம்மை வாழவைத்து மடிந்து போன விவசாயிகளுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோம்.

நிவாரணம் கொடு, கடன்களைத் தள்ளுபடி செய், உதவி செய் என்று விவசாயிகள் அரசை நோக்கி கொடு கொடு என்கின்றனர். ஆனால் நாம் ஏன் வாழவிடு என்கிறோம்?

விவசாயி ஒன்றும் மாத சம்பளம் வாங்கும் அரசுப் பணியாளர் அல்ல; ஆனால் மனித குல வரலாற்றின் அடிப்படையே விவசாயம் தான்; மனிதன் மனிதனானதும் விவசாயத்தினால் தான். இந்தியா உருவாவதற்கு முன்னரே வேளாண் தொழில் உருவாகிவிட்டது. விளைச்சல் இல்லையென்றால் இங்கிருக்கும் பெருவுடையார் கோவிலே இருந்திருக்காது.

ஆனால் இப்போது கீழத்தஞ்சை விவசாயிகள் மாநில, மத்திய அரசுகளிடம் கெஞ்சுகிறார்கள்; எப்படியென்றால் வழிப்பறி கொள்ளையனிடம் மாட்டிக்கொண்ட பயணியைப் போல, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் பெண், ஆண் மிருகங்களிடம் சிக்கிக் கதறுவதைப் போல விவசாயிகளும் அரசுகளை நோக்கிக் கெஞ்சுகின்றனர். எனவே தான் நாம் இப்போது விவசாயிகளை வாழவிடு என்று கோரிக்கை வைக்கிறோம்.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று முழங்கிய மோடி அதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கினார். அதன் தலைவர் யார் தெரியுமா? துப்பாக்கிச் சூடு புகழ் மாநிலத்தின் முதல்வரான சிவாரஜ் சிங் சவுகான். இவர்களால் எப்படி விவசாயியை வாழவைக்க முடியும்; எனவே தான் நாங்கள் விவசாயியை வாழவிடு என்று இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

  1. அருமையான பேச்சு. சிரிய காணொளி பதிவுகளை பதிவிட்டால் உரைவீச்சின் உணர்சிகளை புரிந்து கொள்ள முடியும்.

    நன்றி!

  2. விவசாயத்தை வேரறுப்பதே மோடியின் கொள்கை. சந்தை பொருளாதாரத்தில் விலையில்லா விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் இவர்களை ஒன்று சாவின் விளிம்பிற்கு தள்ள வேண்டும் அல்லது விவசாயத்தை விட்டு விரட்டவேண்டும். மேற்கத்திய நாடுகளை போல உணவு பழக்கத்தை மாற்றுவதும்,ராட்சச விவசாய உற்பத்தியை பெரு முதலாளிகளின் கைகளில் கொடுத்து மக்களிடமிருந்து விவசாயத்தை பறிப்பதும் பன்னாட்டு கழகங்களின் இப்போதைய அஜெண்டாவாகும். இந்த மாநாடு இப்போது அவசியமான ஒன்றாக இருந்தது. யாரும் செய்யாத முயற்சி.வாழ்த்துக்கள்.

  3. அனைவருக்கும் வணக்கம் தோழர்களே. சரியான தலைப்பு விவசாயிகளை வாழவிடு கோரிக்கை முன்வைப்பது சரியானது போராட்டவடிவம் சரியானது தான் ஆனால். தலைப்பில் தலைப்பு சரியானது தான் ஆனால் விவசாயிகளை வாழ விடாமல் செய்தது யார் என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது. முதலில் கொள்ளை இலாபத்திற்காக இராசயண உரங்களை பயிர்களுக்குஇட்டு நிலங்களை மலடாக்கியது யார்? நாட்டுவிதைகளுக்குப் பதிலாக வீரிய ஒட்டுரக விதைகளை பயிரிட்டது யார்? அமெரிக்க நிறுவனமா? இல்லை இந்த விவசாயி தான். இலவச மின்சாரம், பயிர்கடன், விவசாயக்கடன் தள்ளுபடி, கொள்முதல் நிலையங்கள், கொடுத்தும் இவர்களால் விவசாயத்தை ஏன் வளர்க்கமுடியவில்லை. சொர்ப பணத்திற்காக விவசாய நிலங்களை மனைபிரிவுளாக போட்டது யார்? பஞ்சாயத்துகளில் ஒதுக்கப்படும் நிதிகளை கிராம நலனுக்காக பயன்படுத்தாமல் விழுங்கியது யார்? நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறியது யார்? சாதிஆதிக்கதிமிரில் கூலி விவசாயிகளை விரட்டியது யார்? கூலி விவசாயிகளை விரட்டி விட்டு கதிர் அடிக்கும் இயந்திரம், நாற்றுநடவு இயந்திரம், இப்படி எல்லாவற்றையும் விவசாயத்தில் புகுத்தியாது விவசாயி தானே. இயற்கை சார்ந்த விவசாயத்தை ஒழித்தது யார் விவசாயிதான். அற்ப இலாபத்திற்காக பண்பாட்டை சிதைத்தது யார்? அமெரிக்கா விரிக்கும் வலையில் தானே சென்றது யார்? இந்த விவசாயிகள் தான். இப்படி பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் ஆனால் விவசாயத்தை அழித்தது விவசாயிதான். அதன் விளைவு விவசாயி நடுரோட்டில். இது முன்னெச்சரிக்கை தான் அனைவருக்கும் விவசாயின் நிலைமை நமக்கு முன்முதாரணமாக எடுத்துக்கொண்டு அதை தடுக்க வேண்டுமே தவிர மற்ற காரணங்களை காட்டி நாம் செய்கின்ற தவற்றை மறைப்பது முட்டாள் தனம்.
    விவசாயிடமிருந்து சுற்றுவட்டார மக்கள் பால்கொள்முதல் செய்வது கிடையாது. தேனீர் கடைகளில் பயன்படுத்துவம் கிடையாது. காரணம் இலாபம் ஜெர்சி, திருமலா போன்ற இலாபம் தரும் பால்களை கடைகளில் பயன்படுத்துவது. விவாசாயிடம் இருந்து நாட்டுகோழிகளை இறைச்சிக்காக வாங்குவதும் கிடையாது. நாட்டு கோழி முட்டைகளை வாங்குவதும் கிடையாது. விவசாயி உற்பத்தி செய்யும் பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி, நாட்டு சர்கரை பயன்படுத்துவதும் கிடையாது. நோய்களை உண்டாக்கும் வெள்ளை சர்கரையை பயன்படுத்துகிறார்கள். விவசாயம் சார்ந்த தொழில் வளர முதலில் ஒவ்வொரு தனி மனிதனும் மாற வேண்டும் அப்போது தான் சாத்தியம். விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறை நமக்கு வர வேண்டும். விவசாயி பார்க்கும் சின்ன இலாபம் தான் பன்னாட்டு விதை நிறுவனங்கள் பேரளவு இலாபம் பார்க்க துடிக்கின்றனர். பெர்டிலைசர் உரங்களை பயன்படுத்தி விவசாய நிலங்களை நஞ்சாக்கியது விவசாயி தான். நிலங்களை நஞ்சாக்கி விவசாயத்தை அழித்தது விவசாயிதான். அதன் விளைவு தான் இந்த நிலைமை வணக்கம்

  4. தோழர்களே எனக்கு தெரிந்த சில செய்திகளை மட்டும் தான் ஒப்பிட்டு கூறியுள்ளேன். ஆனால் பல்லாயிரக்கணக்கான சின்ன சின்ன காரணங்கள் உண்டு அதை இங்கு விவரிக்கமுடியாது. விவசாயத்தை அழித்தது விவசாயிதான்.

Leave a Reply to zen பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க